Advertisement

அத்தியாயம் 8
“ஏன் இப்படி பண்ணீங்க? ஏன் இப்படி பண்ணீங்க?” நிலா வாணனின் சட்டையை பிடித்து உலுக்கலானாள்.
“விடு நிலா உனக்கு சொன்னாலும் புரியாது. உனக்குத்தான் எதுவும் நியாபகம் இல்லையே!” என்றவாறே அவள் கைகளை எடுத்து விட்டான் வாணன்.
“எனக்கு நியாபகம் இல்லையா? என்ன நியாபகம் இல்லை?” நிலா குழப்பமாக கேக்க
“போ நிலா போ.. போய் டின்னர் சாமை. ரொம்ப பசிக்குது” என்ற வாணன் தனதறைக்கு செல்ல முட்பட
அவன் பேச்சில் கோபமடைந்த நிலா “ஓஹ்… உங்களுக்கு ஆயா வேல பார்க்கவும், தாசி வேல பார்க்கவும்தான் நான் இங்க இருக்கேனா? நான் உங்கள கல்யாணம் பண்ணாதே! என் அம்மாக்காக. இப்போதான் என் அம்மா உயிரோட இல்லையே! நான் எதுக்காக உங்க கூட இருக்கணும்” என்றவள் நிற்காமல் அந்த இடத்தை விட்டு நடக்கலானாள்.
கோபம். கோபம். கோபம். நெஞ்சம் முழுவதும் தீயாய் பற்றி எரிந்தது கண்மண் தெரியாத கோபம். நிலா அமைதியான சுபாவமுடைய பெண். மென்மையானவள். யாரையும் அதட்டி பேசியிராதவள். கோபத்தை கட்டுப்படுத்தும் வழியும் தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை. கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்.
கேட்டை தாண்டி அவள் நாலு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். அடுத்த கணம் இடையியோடு தூக்கப்பட்டு அவள் திமிர திமிர வாணனின் அறையினுள் கொண்டு செல்லப்பட்டாள். அவள் சத்தமிட்டாலும் சரி, கத்தி கூப்பாடு போட்டாலும் சரி அந்த இடத்தில் யாரும் வந்து எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். அவள் எவ்வளவுதான் கத்தினாலும் வாணன் அவள் வாயை பொத்த எண்ணவே! இல்லை. அங்குதான் மனித நடமாட்டமே! இல்லையே!   
“என்ன விடுங்க வாணன்” என்றவள் திமிறிக்கொண்டு அவனிடமிருந்து விலகியவள் அவனது அறையைக் கண்டு திகைத்து நின்றாள்.
காரியாலய அறை என்றல்லவா கூறினான். இது.. இது.. எல்லா வசதிகளையும் கொண்ட படுக்கையறை. போதாததற்கு அவளை கண்காணிக்க சமயலறையிலும், அவளது படுக்கையறையிலும் கேமரா பொருத்தப்பட்டு அவனது அறையில் பெரிய திரை இருப்பது கண்ணில் பட அதிர்ந்தாள். அவள் சமயலறையில் வேலையை முடித்து விட்டு வெளியே வரும் பொழுதும் சரி, அறையை விட்டு வெளியே வரும் பொழுதும் சரி வாணன் சரியாக வெளியே வந்து விடுவான். தான் அவனைக் காண வரும் நேரமெல்லாம் அவனும் தன்னைக் காண சரியாக வருவது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதால், அந்த காதலின் சக்தியால் ஒருவர் மனதில் நினைப்பதை  மற்றவர் உணர்கிறார் என்று எவ்வளவு முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டிருந்தேன். இவன் என்னவென்றால் கேமரா வைத்து பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றான். என்ன ஒரு ஈன புத்தி. மீண்டும் அவன் சட்டையை பற்றி உலுக்கலானாள்.
“யார் நீ? என் வாழ்க்கைல எதற்காக வந்த? என்ன காரணம்?” தலையை பிடித்து அமர்ந்துகொண்டவள் தந்தையின் தொழில் முடங்கியது திட்டமிட்டு செய்த செயலோ! யாரோ தன் குடும்பத்தை குறி வைத்தார்களோ! இன்னும் விடாமல் அது தொடருதோ! எல்லாம் ஒரு புள்ளியில் சந்திப்பது போல் தோன்ற வாய் விட்டே கேட்டாள் நிலா.
“உங்க தொழிலை முடக்கி. உன்ன ஒண்ணுமில்லாதவளாகி நடுத்தெருவுள நிக்க வைக்கணும்னுதான் நினச்சேன். நீயும் உன் அப்பனும் பண்ண பாவம் கொஞ்சமா? நஞ்சமா? அதான் எவனோ! முந்திட்டான். அப்போ நான் எப்படி உன்ன பழி வாங்குறது? அதான் ஒரு அருமையான வழிய கண்டு பிடிச்சேன்” அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே தான் செய்தவைகளை ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல திகைத்து நின்று விட்டாள் நிலா.
“ஒரு பெண்ணை பழிவாங்க ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வானா? இப்படியும் கூட திட்டமிட முடியுமா? காதலிக்கிறேன் என்று கூறி இருந்தால் நிச்சயமாக நிலா சம்மதித்திருக்க மாட்டாள். சந்தேகமாக பார்த்திருப்பாள். வாணன் ஆயிரம் சமாதானங்கள் கூறி இருந்தாலும் நிலாவின் மனம் சமன் பட்டிருக்காது. அப்படியே அவன் காதலிப்பதாக ஏற்றுக்கொண்டிருந்தாலும் இவள் யோசிச்சு சொல்கிறேன் என்று அங்கிருந்து சென்றிருப்பாள். பணத்துக்காக என் கூட வா என்று அழைத்திருந்தால் கன்னம் பழுக்க அறைந்து விட்டு காரி உமிழ்ந்து விட்டு வந்திருப்பாள்.
அவள் அன்னை மருத்துவமனையில் இருப்பதை அந்த அலைப்பேசி உரையாடலின் மூலம் அறிந்து கொண்டு எப்படி பேசினால் நிலா மடிவால் என்று திருமண பேச்சை எடுத்திருக்கின்றான்.
தான் அவன் மீது சந்தேகம்கொள்ள கூடாதென்று உடை, நகை என்று வாங்கிக் கொடுத்து தன் மீது அக்கறை இருப்பது போலவும், காதலிப்பது போலவும் என்னை நம்ப வைத்திருக்கின்றான். எல்லாம் கேவலம் சதைக்காக. இவன் சைக்கோ தனமான வில்லன்.
அப்படி நான் என்ன இவனுக்கு செய்து விட்டேன்? இவனின் காரியாலையத்துக்கு வரும் பொழுதெல்லாம் சிலர் என்னை கண்டதும் முகத்தை திரும்புவதும், சிலர் இரகசியமாக பேசிக்கொள்வதும் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. வாணனிடம் மயங்கி இருந்த மனம் எதையும் சிந்திக்க இடமளித்திருக்கவில்லை. இவனை பார்த்த நொடியே! விரும்பியகற்கு இதுதான் தண்டனையா? இந்த அவப்பெயர்தான் பரிசா?” மனதுக்குள் புழுங்கியவள் வெடிக்கலானாள்.
“ஏன் வாணன் இப்படி பண்ணீங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்” கண்களில் கண்ணீர் நிற்காமல் பெருக
“என்ன டி ரொம்ப உத்தமி மாதிரி பேசுற? என்னமோ! பல வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவ மாதிரி ஸீன போடுற?” நிலாவின் கையை பிடித்து முறுக்கியவன் “பணம் வாங்கினல்ல. அதுவும் டெபிட் கார்ட்” என்று சத்தமாக சிரிக்க
தான் காண்பது கனவா என்று கூட நிலாவுக்கு தோன்றியது. இல்லை என்று கடிகாரம் அடித்துக் கூற “ஏன் வாணன். எதுக்கு என்ன ஏமாத்துனீங்க?” கண்ணீர்மல்க கேட்டாள் நிலா.  
“உன்ன பெத்த அப்பன் பண்ணத விடவா? என் அம்மாகே! இந்த நிலமைனா? எத்தனை பெண்களோட வாழ்க்கைல விளையாடி இருப்பான். அவன் பொண்ணு நிம்மதியா வாழ்ந்துடுவாளா?”
தனது தந்தையை பற்றி பேசவும் நிலாவுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது. கண்டிப்பாக வாணன் தவறாக புரிந்து வைத்திருப்பான் என்று எண்ணினாள். “எங்க அப்பா என்ன பண்ணார்னு என்ன நீங்க இப்படி டாச்சர் பண்ணுறீங்க? நீங்க சொல்லுற மாதிரி. நிச்சயமாக எங்க அப்பா அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்டார். யாரோ உங்க கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க” நிலா அழுதவாறே சொல்ல
நிலாவுக்குத்தான் நடந்தவைகள் எதுவும் நியாபகத்தில் இல்லையே! என்று நினைத்த வாணன் “உன் கிட்ட விளக்கம் சொல்லணும் என்கிற அவசியம் எனக்கில்லை. நான் கொடுக்குற தண்டனையை வாங்கிக்க. உனக்கு எப்போ நியாபகம் வருதோ! அப்போ ஏன் டா… வாணனன பகைச்சி கிட்டோம்னு உக்காந்து அழு” என்றவன் குளியலறைக்கு செல்ல நிலா கதவின் பக்கம் சென்றாள்.
“அது பாஸ்வார்டு கேக்கும் மா… திறக்காது எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம ஒரு இடத்துல உக்காரு” குளியலறை கதவை சாத்த அவன் குளிப்பது கூட நிலாவால் பார்க்க முடிந்தது. குளியலறைதான் கண்ணாடியில் அமைக்கப்பட்டிருந்ததே! முகத்தை திருப்பிக் கொண்டவள் தன் நிலையை நினைத்து அழுது கரையலானாள்.
ஏமாறுவதற்கென்றே! பிறவி எடுத்தது போல் அவளும், அவள் நிலையும் இருக்க வாணனை குற்றம் சொல்லி என்ன பயன்.
கற்பனை கதைகளைக் கேட்டு கேட்டு வளர்ந்தவள். கதைகளில் வருவது போல் தன் வாழ்க்கையிலும் ஏதாவது மாயாஜாலம் நடக்காதா? என்று பேராவலோடு காத்திருந்தது முதல் தப்பு. 
முதல் சந்திப்பிலையே! வாணனிடம் மனதை பறிகொடுத்ததுமில்லாமல் அவன் யார் என்ன என்று விசாரிக்காமல், தானாக அப்படி இருக்குமோ! ஒருவேளை இப்படி இருக்கோமோ! என்றெண்ணி திருமணத்துக்கு சம்மதித்திருக்கக் கூடாது. அது அவள் செய்த அடுத்தடுத்த தப்புக்கள்.
அதில் தனது சுயநலம் இருந்தததை மறுக்க முடியாது. “ஆனாலும் அவனிடம் காரணத்தை தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ஒப்பந்தமாவது போட்டிருக்க வேண்டும்” உள்மனம் சொல்ல
“அவன் காட்டிய அக்கறையிலும், எடுத்துக்கொண்ட உரிமையிலும் காதல் என்று ஏமாந்து போனது என் தப்பு. அதுவும் பணத்துக்காக என்றாலும் திருமணம் ஒருதடவைதான் செய்வார்கள் அது மனதுக்கு பிடித்த வணனாக இருந்து விட்டு போகட்டும் என்று எண்ணியே! வேறு எதுவும் பேச வில்லை”
கதையில் வரும் இளவரசனிடம் மனதை பறிகொடுத்து போல் உன் வாழ்க்கை ஒன்றும் கதை புத்தகமல்லவே! கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா?
அவனுக்கு எப்படி மனசு வந்தது தாலியை கட்டி விட்டு, இப்படி ஒரு அவப்பெயரை என் மீது சூட்ட அவனுக்கு எப்படி மனசு வந்தது?” நிலா அழுது கரைய அன்று காரியாலயத்தில் நடந்த சம்பவம் கண்முன் வந்தது.
வாணனுக்காக சாப்பாடு எடுத்து சென்றிருக்க வாணன் அறையில் இல்லை. எதோ மீட்டிங் என்று வெளியே சென்றிருப்பதாக தகவல். அறையில் இருக்க போரடிக்கவே! வெளியே இருந்த மீன் தொட்டியின் அருகில் வந்து நின்றவள் நீந்தும் கலர்கலரான மீன்களை பார்த்து ரசிக்கலானாள்.
தொட்டி அவளின் மாரளவுக்குத்தான் உயரம் ஆதலால் குனிந்துதான் நிலா மீன்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் குனிந்திருந்ததால் அவள் பின்னால் யார் வந்து நின்றாலும் அவளுக்கு தெரியாது. அவளோ! தன் பாட்டில் உதடுகளை மீன் போல் குவித்தவாறு அழகு கட்டிக்கொண்டு மீன்களோடு பேச பின்னால் யாரோ “ஆ…” என்று கத்தும் சத்தம் கேட்டது.
என்ன எது என்று திரும்பிப் பார்த்தவள் அங்கே மேனேஜர் பிரபாகரன் பின்னால் கையை வைத்துக்கொண்டு வலியில் துடித்துக் கொண்டிருப்பதும் அவர் பின்னால் வாணன் நின்றிருப்பதும் தெரிந்தது. வாணன் எதற்கு அவர் கையை முறுக்குகிறான் என்ன நடந்தது என்று சுத்தமாக அவளுக்கு புரியவில்லை.
“என் ப்ரோபட்டி மேலையே! கைவைக்க பாக்குறியா? என்ன எகத்தாளம்யா உனக்கு” என்று வாணன் அடிக்குரலில் சீற அந்த பிரபாகரன் தான் குனிந்திருக்கும் பொழுது பின்னால் தட்ட போனான் என்று புரிந்துகொண்டவள் அவரை முறைக்க, “நீ உள்ள போ நிலா” என்று வாணன் கூறியதும் நிலா உள்ளே! சென்று விட்டாள்.
அப்பொழுது கூட “என் மனைவின் மீதா கைவைக்க பார்த்தாய் என்று வாணன் கேட்கவில்லை. எதோ.. சொத்து போல் ப்ரோபட்டி என்றுதான் சொன்னான்” அன்று அவள் அதை கேலியாக கூறி சிரித்ததோடு வணனனை கிண்டலும் செய்து ஓட்டியெடுத்து விட்டாள். இன்று அவன் பேச்சுக்கான அர்த்தம் நன்றாகவே! நிலாவுக்கு புரிந்தது.
அவளை உயிருள்ள மனுஷியாக வாணன் கருத்தில்கொள்ளவே! இல்லை. பணம் கொடுத்து வாங்கிய பொருளாகத்தான் பார்த்திருக்கின்றான். நடாத்தியும் இருக்கின்றான். அதற்கு சிறந்த உதாரணம் அவளின் அன்னையின் மறைவு நாளன்று இரவு நடந்த சம்பவம்.
கொஞ்சமாவது அவளை உயிருள்ள ஜீவனாக மதித்திருந்தால் அவள் என்ன சொல்ல விளைகிறாள் என்று காது கொடுத்து கேட்டிருப்பான். குடித்திருந்தான் தான் அதற்காக அவள் மறுக்க மறுக்க மிருகமாக நடந்துகொள்வானா?
அடுத்த நாள் அன்னை இறந்த சேதி அறிந்தும் கொஞ்சம் கூட அனுதாபப்படாமல் அவன் வேலைகளை பார்த்து விட்டு வருகிறான். அவனுக்கு சமைத்து போட்டு நான் ஆயா வேலை பார்க்க வேண்டும்.
நெஞ்சமெல்லாம் எரிய வேதனை மட்டும் உள்ளம் நிறைந்தது இருக்க, நெஞ்சை பிடித்தவாறு கட்டிலில் அமர்ந்து கதறலானாள்.
குளித்து விட்டு வந்த வாணன் “நிலா உனக்கு பசிக்கல? வா சாப்பிடலாம்” ஒன்றுமே! நடவாதது போல் பேச
“இவன் மனிசனே! இல்ல ராட்சசன். இவ்வளவும் செய்து விட்டு  எப்படி ஒன்றும் நடவாதது போல் பேசுகிறான். அவனால் முடிகிறது. அவனால் மட்டும்தான் முடிகிறது” பிரம்மை பிடித்தது போல் அவள் பேச்சிழந்து விழிப்பதை கண்டவன் எகத்தாளமாக சிரிக்கலானான்.
“ராட்சசன்” அவன் முகத்தில் பலன்கொண்ட மட்டும் ஓங்கி அறைய வேண்டும் என்று கையும் மனமும் பரபரக்க ஆவேசமாக அவனை அடிக்கலானாள் நிலா.
அவள் கைகளை பிடித்து தடுத்தவன் ஓங்கி ஒன்று அவள் கன்னத்தில் வைக்க கட்டிலில் விழுந்தாள் நிலா. “நம்ம கல்யாணமன்று என்ன சொன்னேன் நியாபகம் இருக்கா நிலா? நான் சொல்லுறத கேட்டுகிட்டு இருந்தா மட்டும் நல்ல பிள்ளையா என்னைக்கும் நீ இருக்கலாம்” என்றவன் கதவை சாத்தி விட்டு சென்றான்.
கன்னம் தீயாய் எரிய, நிலாவுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. அவன் தன்னிடம் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிதானமாக யோசித்து தன்னை வீழ்த்த மாட்டு பேசியிருக்கின்றான். தான்தான் மாய உலகத்தில் மயங்கி அவனிடம் மாட்டிக்கொண்டோம் என்று.
வெளியே சென்றவன் இரண்டு பான் துண்டுகளையும் ஒரு முட்டையையும் பொறித்து பானில் வைத்து கொண்டு வந்து கொடுக்க நிலா திரும்பியும் பார்க்கவில்லை.
அதை மூடி வைத்தவன் “எப்போ பசிக்குதோ! அப்போ சாப்பிடு” என்று விட்டு உறங்கலானான். நிலாவுக்கு தூக்கம் வரவில்லை. கண்ணீர் மட்டும்தான் வந்தது.
அவன் சமைத்து வைத்தவைகளை அவள் ரசித்து ருசித்து உண்ட நாட்களை நினைத்து விரக்தியாக புன்னகைத்தாள். காதலால் செய்கின்றான் என்று நினைத்தது எல்லாம் கானல்நீராகி விட்டது. அவன் ஒருதடவையாவது காதலிக்கிறேன் என்று கூறியதே! இல்லை என்பது அப்பொழுதுதான் அவளுக்கு நியாபகத்தில் வந்தது. இப்படியும் ஒருவனால் நடிக்க முடியுமா?  அன்னையை இழந்து விட்டோம் என்ற துக்கம் போய் தன்னிலையை எண்ணி அழுது கரையலானாள் நிலா.
ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் கண்களை துடைத்துக்கொண்டு நிதானத்து வந்திருந்தாள். தான் இவனுக்கு என்ன தீங்கை இளைத்து விட்டோம் என்று இப்படி சித்திரவதை செய்கின்றான். சுத்தமாக புரியவில்லை. சிவனிடமிருந்து தப்பி செல்ல வேண்டும். எவ்வாறு? என்று சிந்தித்தவளுக்கு யாருக்காவது அலைபேசி அழைப்பெடுத்து சொல்லலாம் என்று நினைக்க தனது அலைபேசியையும் அறையிலையே! விட்டு வந்தது நினைவில் வந்தது.
ஜன்னலை திறக்க முயற்சித்தால் அது சீல் வைக்கப்பட்டிருந்தது. என்ன மாதிரியான அறை இது ஒன்றும் புரியவில்லை. அவள் மறுத்தால் அவளை கொண்டு வந்து அடைப்பதற்காகவே! தயாரிக்கப்பட்ட அறையென்று அவளிடம் யார் சொல்வது?
அறையை சுற்றி சுற்றி வந்தவளுக்கு வாணனின் அலைபேசி கண்ணில் படவே! அதை இயக்க முயன்றால் அந்த அதீ நவீன அலைபேசி அது போக கடவுச்சொல் வேறு கேட்க அவளால் அதை கையாளவும் முடியவில்லை. அப்படியே தூக்கிப் போட்டவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“அதான் ஒன்னும் பண்ண முடியாதுனு தெரியுதில்ல. சாப்பிட்டுட்டு வந்து பேசாம தூங்கு நிலா” திடுமென கேட்ட வாணனின் குரலில் நிலா திகைத்து விழிக்க, வாணன் தலையை தூக்கி பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தான்.
“அப்போ இவன் இன்னும் தூங்கலையா? தூங்குற மாதிரி நடிச்சிகிட்டு இருந்தானா? சரியான சைக்கோ. நான் அவஸ்த்தை படுறத பார்த்து ரசித்துக் கொண்டே! தூங்குற மாதிரி நடிச்சிருக்கான்” நிலா முயன்ற மட்டும் அவனை முறைக்க
“இன்னக்கி நான் ரொம்ப டயடா இருக்கேன் நிலா. இல்லனா நீ இப்படி ஓடியாடி வெட்டி வேல பார்த்து கிட்டு இருப்பியா? என் கைல இல்ல இருப்ப” என்று கண்சிமிட்ட நிலாவின் உடல் வெளிப்படையாகவே! உதற ஆரம்பித்தது.
“வா.. வந்து தூங்கு” என்றவன் தலையணையை சரி செய்ய
“உனக்கு என்னதான் வேணும்” நிலா வெடிக்க
“இப்போதைக்கு ஒன்னும் வேணாம்” என்றவன் எழுந்து அமர்ந்து கொண்டான்.
“ப்ளீஸ் என்ன போக விடு. எனக்கு உன் கூட இருக்க பிடிக்கல” நிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் முணுக்கென்று பாய
“இரண்டு மாசத்து மேல இருந்தியே! அப்போ பிடிச்சிருந்த வணன இப்போ மட்டும் பிடிக்கலையா? ஏன் பேபி” நக்கல் வழியும் குரலில் கேட்டவன் “ம்ம்.. என்நாளைக்கும் உன்ன வச்சிக்கிற ஐடியாவும் எனக்கில்லை. உனக்கு வேற உண்மையெல்லாம் தெரிஞ்சி போச்சு. அதுவே போதும். ஆனாலும் உண்மை தெரிஞ்ச பிறகு ஒரே ஒரு தடவ என் கூட படு. அப்பொறம் கிளம்பி போய்கிட்டே இரு”
“சீ…” உறுத்து விழித்தாள் நிலா.
“என்ன சீ…னு சொல்லுற. இவ்வளவுநாள் கொஞ்சி குலவின இல்ல. இப்போ மட்டும் என்னவாம்” நக்கலாக சிரித்தான் வாணன்.
நிலா அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“ஒரே ஆப்ஷன்தான் நல்ல யோசிச்சு முடிவெடு. எனக்கு எப்போவெனாலும் ஓகே. ஒரே ஒரு தடவ நீயா வா. அப்பொறம் இந்த கதவு உனக்காக திறந்திடும்”
“ஏன் இப்படி பண்ணுற?”
“உண்மை தெரிஞ்ச பிறகு நீ வந்தா உன் மனசு குத்தும், வலிக்கும் அது போதும் எனக்கு குட் நைட் பேபி” என்றவன் தலையணையில் தலை வைத்து படுத்துக்கொள்ள நிலா தூக்கத்தை தொலைத்து விட்டு விட்டத்தை வெறிக்கலானாள்.
தூங்குவது போல் பாசாங்கு செய்தவாறு நிலாவையே! பாத்திருந்தான் துகிலவாணன் மௌரி.  

Advertisement