Advertisement

அத்தியாயம் 6
நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்த வாணன் ஸ்ட்யரிங் வீலில் ஓங்கி ஒரு குத்து விட்டவன் “அன்னக்கி நடந்த சம்பவத்துல நீ கோமாவுக்கு போய்ட்டானு கேள்விப்பட்டேன். போன உனக்கு எல்லாம் மறந்து போய் இருக்கலாம் ஆனா நான் எதுவும் மறக்கவுமில்லை. உன்ன மன்னிக்கவும் மாட்டேன். நீ சொன்ன பொய்யால அந்த ஸ்கூல்ல படிக்கணும் என்கிற என் கனவு பறிபோச்சு. அம்மாவும் இன்னக்கிவரைக்கும் இப்படி இருக்காங்க. உன்ன விட மாட்டேன் நிலா…” என்று கத்தியவன் வண்டியை காரியாலயத்துக்கு செலுத்தி இருந்தான். 
வாணனின் வாழ்க்கையில் அடுத்தடுத்த நடந்தவைகளால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அந்த சிறுவனால் சிந்திக்க கூட இயலவில்லை.
ஈஸ்வரின் பணபலத்தால் நடந்ததை மறைத்து நிலாவை தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்துக்காக வாணனை கைது செய்து போலீஸ் காவற் கூடத்தில் வைத்திருந்தனர். சிறுவனென்றும் பாராமல் அந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனிடம் கை நீட்டி காசு வாங்கும் ஒரே காரணுத்துக்காக வாணனை அறைந்தும் இருந்தார்.
அன்னை மருத்துவமனையில் படுத்துக்கிடப்பது மட்டும்தான் அவன் கண்களுக்குள் இருந்தது. எப்பொழுதும் “துகிலா…” என்று அழைத்தவாறு புன்னகை முகமாக சதா ஓடியாடி வேலை செய்துகொண்டிருக்கும் அன்னையை அவனால் இவ்வாறு பார்க்கவே! இயலவில்லை. இதற்கு காரணம் நிலா மட்டும்தான் என்று அவன் பிஞ்சு மனதில் நன்றாக பதிந்து போனது. கண்கள் சிவந்து கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தாலும் நெஞ்சம் எரிந்துகொண்டிருக்க தந்தையையும் மறந்துதான் போய் இருந்தான்.
தந்தையை கண்டபின்தான் அவனுக்கு நம்பிக்கையே! வந்தது. ஈஸ்வரன் வாணனை போலீஸிடம் ஒப்படைத்ததோடு எந்த கம்ப்பிளைண்ட்டும் கொடுத்திருக்கவில்லை. அதனால் விரோசனன் வாணனை அங்கிருந்து நேராக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அங்கிருந்து சுசீலாவை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்துவிட்டார்.
பயணம் முழுக்க மயக்கத்தில் இருந்த சுசிலா கண்விழித்த பின்தான் சுசீலாவுக்கு மனநலம் பாதித்திருப்பது தெரியவந்தது. அன்னையின் நிலையைக் கண்டு தாங்க முடியாமல் எல்லாரையும் பழிவாங்கியே! தீருவுவேன் என்று கோபமாக வாணன் கத்த தந்தைதான் அவனுக்கு “முதல்ல படிச்சு நல்ல நிலைமைக்கு வா… அப்பொழுதும் உன் மனசுல கோவம் இருந்தா… உன் ஆறாத காயத்துக்கு நீ என்ன வேணாம் பண்ணிக்க” காலம் பல காயங்களை ஆற்றும் என்று அறிந்திருந்த விரோசனன் அந்த நேரத்தில் அவனை திசைதிருப்ப வேறு வழியில்லாது கூற வாணனும் படிப்பில் கவனத்தை செலுத்தி இருந்தான்.  
ஆனால் கூடவே! இருப்பேன் என்ற தந்தை இரண்டு வருடங்களில் காலமாக, தனிமையை வெகுவாக உணர்ந்தவனுக்கு பழி உணர்வை கட்டு படுத்த முடியவில்லை. விரோசனனன் கூட இருந்திருந்தால் வாணனின் எண்ணங்கள் மாறுபட்டு இருந்திருக்குமோ! என்னவோ!
விரோசனன் காலமான போது அவனது கவனம் படிப்பில் இருந்து சிதறியது மட்டுமல்லாது சுசீலாவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் தலை தூக்கியது. கடவுள் அனுப்பியது போல் அவன் வீட்டு  வாசலில் வந்து நின்றது “உதயம்” ட்ரஸ்ட் உறுப்பினர் ஒருவரின் வண்டி.
நன்றாக படிக்கும் வாணனுக்கு தாங்கள் உதவுதாகவும், சுசிலாவின் மருத்துவ செலவையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கூறி அவனை ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்து மட்டுமல்லாது சுசீலாவை அவனது பாடசாலையின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையிலும் சேர்த்திருக்க, வாணனால் தினமும் அன்னையையும் பார்த்துக்கொண்டு கற்கவும் முடிந்தது.
காலேஜ் முடித்த கையேடு யாதவ் குரூப்பைப் பற்றித்தான் விசாரித்தான் அதிலும் குறிப்பாக, யாதவ், ஷீலா, சதீஷ், நரேன், நிலா.
சதீஷ் இரத்த புற்று நோயால் இறந்திருக்க, நரேன் மற்றும் நிலா எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. யாதவ் ஒரு கார் விபத்தில் இறந்திருந்தான். ஷீலா ஒரு பணக்காரனை திருமணம் செய்திருக்க, அவனிடம் தினமும் அடி உதை என்று வாங்கியவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் பாராமல் அடித்ததில் எட்டு மாத கரு கலைந்து விட்ட மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்.
அடுத்தவரை கஷ்டப்படுத்திய யாரும் நன்றாக வாழவில்லை என்று வாணனுக்கு புரிந்து போக பழிவாங்குவதை கைவிட எண்ணினான். மற்றவர்களை மன்னித்தாலும் நிலாவை மன்னிக்க அவனால் முடியவில்லை. நம்ப வைத்து ஏமாற்றியது மட்டுமல்லாது. அவள் மட்டும் அன்று அவனை கட்டிப் பிடிக்கா விட்டால் சுசிலா விழாமல் வாணன் பிடித்திருப்பான். இருவரும் விழுந்திருந்தால் தனக்கு அடிபட்டிருக்கும் அன்னைக்கு ஒன்றும் ஆகி இருக்காது. நிலாவால்தான் இன்று சுசிலா இவ்வாறு இருக்கக் காரணமும் தந்தை அன்னையை பற்றிய கவலையில் சரியாக தூக்கமில்லாது வண்டியோட்டி விபத்துக்குள்ளாகி இறந்ததும் என்று எண்ணினான். குழந்தையாக மாறி இருக்கும் அன்னையை பார்க்க பார்க்க உள்ளம் கனன்று அவனுள் பகை அணையாது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே! இருந்தது.
யாரை விட்டாலும் நிலாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் விடவே! கூடாது என்று எண்ணி இருந்தான் வாணன்.
தன்னை நேருக்கு நேர் சந்தித்தால் அவளுடைய முக மாறுதல்களை படிக்க ஆவலாக காத்திருந்தவனுக்கு பெருத்த ஏமாற்றம். அவளுக்கு வாணனை சுத்தமாக நியாபகம் இல்லை.
அதற்காக அவளுடைய பழைய நியாபகங்களை மீட்டுக்கொடுத்தா? பழிவாங்க முடியும்?
அவள் சொத்தை பறித்து ஆணவத்தை அழிக்கத்தான் நினைத்தான். அதுதான் ஏற்கனவே! பறிபோயாச்சே!
“நீ செய்த எல்லாவற்றுக்கு இந்த ஜென்மத்துலயே! அனுபவிச்சிட்டு போ..”  என்றுதான் இந்த வழியை தேர்வு செய்தான். இது சாதாரண வழியல்ல. பாவக்கணக்கு ஏறும் வழி. அதனால்தான் அவள் அன்னைக்கு உதவ எண்ணினான்.
நிலாவை தேடும் முயற்சியில் இறங்கிய வேளைதான் அவளே! அவள் கம்பனியில் வேலை தேடி வந்திருந்தாள். நிலாவுக்கு தன்னை நியாபகமில்லாததும் ஒருவகையில் வாணனுக்கு வெற்றி என்று எண்ணினாலும் நிலா திருமணத்தை மறுத்தால் என்ன செய்வது? என்று எண்ணயவன் அவளை கடத்திக் கொண்டுபோய் யாருமில்லாத ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் இந்த குடில்களை வாங்கி இருந்தான்.
நிலா மறுத்திருந்தால் நன்றாக வேதனையை காட்டி இருப்பான். இப்பொழுது அவள் பார்ப்பதெல்லாம் காதல் மயக்கத்தால் வந்த மாய உலகம் மட்டுமே! இன்னும் வாணன் என்ன செய்ய காத்திருக்கானோ! 
கணவன் வைத்து சென்ற காகிதத்தை படித்த நிலா சந்தோசமாக கணவனுக்கு உணவு தயாரித்து ஆசையாசையாக எடுத்துக்கொண்டு அவனது காரியாலையத்துக்கு வந்தாள்.
அங்கிருந்த ரிஷப்சனிஸ்ட் அவளை அடையாளம் கண்டுகொண்டாள் ஆனாலும் குழப்பமாக நிலாவை ஏறிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அவளது தொலைபேசி அடிக்கவே! இயக்கி காதில் வைத்தாள்.
“மிஸ் ரூபா. நிலா எப்ப ஆபிஸ் வந்தாலும் நேரா என் கேபின்க்கு வர சொல்லுங்க” என்றவன் நிலாவுக்காக காத்திருக்க ரூபாவும் ஆச்சரியமாக நிலாவை உள்ளே! செல்லுமாறு கூறி விட்டு தன் இடத்தில் அமர்ந்துக்கொண்டாள்.
“யாரு அந்த பொண்ணு நேரா பாஸோட ரூமுக்கு போகுது” ரூபாவிடம் வழிந்தவாறு மேனேஜர் பிராபகாரன் கேக்க
குழப்பத்திலிருந்த ரூபாவும் “இண்டவியுக்கு  வந்த பொண்ணுதான். அன்னக்கி பார்த்த போ ரொம்ப எளிமையா தெரிஞ்சா… இன்னக்கி போட்டிருக்கிற ட்ரெஸ்ஸ பார்த்தா..” என்று யோசிக்கலானாள்
மேனேஜர் பிரபாகரன் பெண்களிடம் வழிவது மட்டுமல்லாது, தொட்டு, தொட்டுத்தான் பேசுவார். வேலை செய்யும் இடத்தில் இந்த மாதிரி நாய்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று சில பெண்கள் பொறுத்து போனாலும், சில பெண்களிடம் தர்ம அடியும் வாங்கி இருக்கிறார். தன்னை போல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்ற சாக்கடை எண்ணம் நிறைந்தவர்.
“என்ன அவ நம்ம பாஸ கைக்குள்ள போட்டுக்கிட்டாளா?” என்று சத்தமாக சிரிக்க நமக்கு எதுக்குடா வம்பு என்று ரூபா வாயை இறுக மூடிக்கொண்டாள்.
வாணனின் பழிதீர்க்கும் எண்ணமும் பிரபாகரனின் கெட்ட சிந்தனையும் ஒன்று சேர்வதால் நிலா என்ன மாதிரியான பேச்சுக்கள் கேட்க வேண்டி இருக்கும் என்று அறிந்திருந்தால் நிலா வணனின் காரியாலத்தின் பக்கம் தலைவைத்தும் படுத்திருக்க மாட்டாள்.
“ஹேய் வா வா நிலா… நல்லா தூங்கினியா…” நிலாவின் கையிலிருந்த பையை வாங்கிய வாணன் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறே வரவேற்க
வாணனின் குரலைக் கேட்டதும் நேற்று இரவு நடந்தவைகள் எல்லாம் சட்டென்று நியாபகத்தில் வர வெக்கப் புன்னகையை சிந்தியவள் கணவனின் முகம் பார்க்க மறுத்து பார்வையை அங்கும் இங்கும் ஓடவிட்டவாறு தலையை மட்டும் ஆட்டுவித்தாள். 
சிவந்த அவள் கன்னங்களை ரசனையாக பார்க்க வேண்டிய வாணனின் கண்களோ! குரூரமாக ஒரு நொடி பார்த்து விட்டு “காலைல சாப்பிட்டியா? இல்ல. எனக்கு சமச்சிட்டு வரணும்னு சாப்டாமகொள்ளாம வந்தியா?” என்றவாறு அறைக்கு இரண்டு ஜூஸ் கொண்டுவருமாறு கூற கணவனின் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் நிலா.
“நீங்க எனக்காக பண்ணி வச்சிட்டு வந்த பிரெட் சென்விச்ச ரசிச்சி ருசிச்சு சாப்பிட்டுத்தான் வந்தேன்” என்றவள் அவன் முகம் பார்க்க
அவள் முக மாற்றமெல்லாம் வாணனின் கண்களுக்கு நடிப்பது போல்தான் தெரிந்தது. “ஏமாத்துக்காரி. என்னம்மா நடிக்கிறா? உன்ன கிட்ட ஏமாற ஒன்னும் நான் துகிலன் இல்ல டி..  துகிலவாணன் மௌரி.
தலையை உலுக்கின் கொண்டவன் நிலாவை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
“என்ன பண்ணுறீங்க?”
“என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணுறேன் டி” என்று கூறும் பொழுதே! கதவு தட்டுப்பட வாணனும் “எஸ் கமிங்” என்றான்.
ஜூஸ் கொண்டு வந்த பியூன் இருவருவரும் இருந்த நிலையைக் கண்டு ஒருகணம் அதிர்ந்து அங்கேயே நின்று விட நிலாதான் திமிறி வாணனிடமிருந்து விலக முயன்றாள்.  
“என்ன நீ என்ன பார்க்க வந்துட்டு இப்படி தடுமாறுற” என்றவன் அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டு இடையில் கைபோட்டு இறுக்கியவாறே “ஜூசை இங்க கொண்டு வந்து வச்சிட்டு போ பா…” என்றான் வாணன்.
வாணன் என் மனைவி என்று கூறாமல் “என்னை பார்க்க வந்தாய்” என்றதை பியூன் தப்பார்த்தம் கொண்டிருந்தான். அதற்குள் பிரபாகரன் தன் கைவரிசையை காட்டி இருந்தமையே! அதற்க்கு எதுவாக அமைத்திருந்தது.
“நம்ம முதலாளியா? இப்படி நம்ப முடியல. எந்த புத்துல எந்த பாம்பிருக்குனு யாருக்கும்.தெரியும்” மனதுக்குள் எண்ணியவன் நிலாவை கேவலமாக பார்த்து விட்டு சென்றான்.
“என்னங்க நீங்க? மூணாவது மனிசன் முன்னாடி இப்படியா? நடந்துபீங்க?” நிலா முறைக்க,
“நான் என்ன டி தப்பு பண்ணேன்” ஜூசை அவளிடம் கொடுத்தவாறே கேட்டான் வாணன்.
“நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்க? போறப்ப என்னமா பார்த்துட்டு போனாரு” நிலா முகம் வாட
“யாரு என்ன சொல்லுறாங்கனு பார்த்துகிட்டு, யோசிச்சுகிட்டும் இருந்தா.. நாம நம்ம வாழ்க்கையை வாழ முடியாது நிலா. அவன் எனக்கு கீழ வேல பாக்குறவன். என்ன நினச்சா எனக்கென்ன? ஏதாச்சும் எதிர்த்து பேசினா.. வேலைய விட்டு தூக்கிடுவேன்” மிரட்டும் குரலில் கூறியவாறு தனக்கான ஜூசை அருந்தலானான் வாணன்.
“சாப்பிடுற நேரத்துல ஜூஸ் கொண்டுவந்ததே! தப்பு. இதுல வியாக்கியானம் வேற” நிலா நொடிக்க,
“ஏன் டி ஒன் ஹவர் ட்ராவல் பண்ணி வந்திருக்க தாகமா இருக்கும்னு ஜூஸ் கொடுத்தா.. இப்படித்தான் பேசுவியா.. உனக்கு ஜூஸ் கொடுத்தது தப்பு டி ரொம்ப பேசுற? பேசுற உன் உதட்டுக்கு தான் தண்டனை கொடுக்கணும்” என்று இழுத்து முத்தமிடலானான்.
கதவை தட்டி விட்டு சத்தம் வராததால் உள்ளே நுழைந்த ஜெகன் இந்த காட்ச்சியை பார்த்து விட்டு கதவை சாத்தியவன் நிலா வந்து விட்டு செல்லும்வரை யாரும் வாணனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட அது வாணனின் ஊழியர்களுக்கு வேறு அர்த்தத்தை கொடுக்க நிலாதான் அன்றைய ஹாட் டாப்பிக்காக காரியாலயத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள்.
இது எதையும் அறியாமல் வாணனுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டவாறு இருந்தாள் நிலா.
“உனக்கு இவ்வளவு நல்லா சமைக்க தெரியும்னு எனக்கு தெரியாம போச்சே!” ஆச்சரியமாக  வாணன் கூறியவாறு சாப்பிட
“பேசாம சாப்பிடுங்க. சாப்பிடும் போது பேசக்கூடாது. செரிக்காது” என்றவாறு நிலா ஊட்டி விட
“ஏன் டி என் பொண்டாட்டிய புகழ் கூடாது. சரியான பொறாமை புடிச்சவளா இருக்கியே!” என்றவன் நிலாவுக்கு ஊட்டி விட
“யாரு நானு? அதுசரி… நீங்க புகழுங்க சார். உங்க பொண்டாட்டி. உங்க வாய்” என்று நிலா சிரிக்க
“நீ இப்படியும் பேசுவியா? உன்ன மொத தடவ பாக்குறப்போ! டென்ஷனா இருந்த, பயந்த சுபாவம்னு நெனச்சேன்”
“உங்க கிட்ட எனக்கென்ங்க பயம்?” நிலா யதார்த்தமாக சொல்ல
“அந்த வெக்கத்தையும் கொஞ்சம் மூட்ட கட்டி வச்சினா. எனக்கு கொஞ்சம் வசதியா போகும்” என்று அவள் காதோரம் சொல்ல சட்டென்று முகம் சிவந்தாள் நிலா.
சத்தமாக சிரித்த வாணன் புரையேறி தண்ணீர் கேக்க அவன் தலையை தட்டிய நிலா தண்ணீர் கொடுத்தவாறே! “இதுக்குதான் பேசாம சாப்பிட சொன்னேன்” என்று முறைக்க
“நீ முறைச்சாலும் சிவக்குற என்றவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு கைகழுவ எழுந்து சென்று விட்டான்.
உண்டு முடித்த நிலா விடைபெற அவள் கையை பிடித்து அமர்த்தியவன் ஒரு டெபிட் கார்டை கொடுத்து “இத உன் தேவைக்கு யூஸ் பண்ண வச்சிக்க” என்று சொல்ல நிலாவின் கண்கள் கலங்கின.
“ஹேய் என்ன ஆச்சு” ஆதரவாக அவளை அனைத்துக்கொள்ளாமல் சிலையாக அமர்ந்தவாறே கேட்டவன் கன்னங்களில் வழியும் அவள் கண்ணீரை ரசிக்கலானான்.
“தேங்க்ஸ்” என்று நிலா ஒற்றை வார்த்தை சொன்னதும்
உதடு வளைத்தவன் “இருக்கட்டும். இப்போ போ.. எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு” என்று சொல்ல
“என்ன இவன் இப்படி பேசுறான்” என்று நிலா அதிர்ச்சியாகி கணவனை பார்க்க
“நீ இங்கயே! இருந்தா.. என் மைண்ட் உன்ன கொஞ்ச சொல்லி கட்டளை இட்டுக்கிட்டே இருக்கும். அப்பொறம். நீ உன் அம்மாவ பார்க்கவும் முடியாது. நான் என் வேலைய பார்க்கவும் முடியாது. பரவால்லையா?” என்று புன்னகைக்க
“தன்னை திசைதிருப்பத்தான் இவ்வாறு பேசினானா? இவனை புரிந்துகொள்ளவே! முடியவில்லை” புன்னகைத்தவள் வாணனிடமிருந்து விடைபெற்று அன்னையை பார்க்க சென்றாள்.
ஆபீஸ் விட்டு வெளியேறும் பொழுது அவளை கடக்கும் ஒவ்வொருவரினதும் பார்வையின் அர்த்தம் நிலாவுக்கு புரியவில்லை. அன்னையை பார்க்க செல்கின்றோம் என்ற ஆவலில் ஆராயத் தோன்றவுமில்லை. யோசித்திருக்க வேண்டுமோ! காலம் கடந்து சிந்திப்பாள் நிலா.   
பிறைநிலா கண்மூடி அசையாது கட்டிலில் படுத்திருந்தாள். வாணனை போல் நிலாவால் அன்னையை தினமும் பார்க்க வர முடியாது. வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள்தான் வருவாள்.
“அம்மா…” என்றவாறு அன்னையின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் மகள்.
நிலாவின் குரல் கேட்டு கண்விழித்த பிறைநிலா “வந்துட்டியா…” என்று மென்குரலில் கேக்க நிலாவின் கண்கள் கலங்கியது.
“சாப்பிட்டியம்மா? உனக்காக சூப் எடுத்துட்டு வந்திருக்கேன்” என்று சொல்ல பிறை நிலாவின் கண்கள் கலங்கின.
நீர் ஆகாரம் மற்றும்தான். பெத்த மக்களுக்கு இவ்வளவு பாரமாக இருக்கின்றோமே! என்று தினமும் வருந்துபவள் நிலாவின் உடையில் உள்ள மாற்றமும் முத்தத்தில் இருந்த பொலிவும் கண்ணுக்கு பளிச்சென்று தெரிய “வேல கிடைச்சிருச்சா…” என்று மெதுவாக கேட்டாள். 
வேலை கிடைத்தால் என்னால் உன்னை அப்படி பாத்துக்க முடியும். இப்படி பாத்துக்க முடியும் என்று சொல்லும் மகளல்லவா?
அன்னையை ஆயாசமாக பார்த்தவள் “என் பிரின்ச கண்டு பிடிச்சிட்டேன்” என்று சிரிக்க பிறைநிலாவின் முகத்தில் கீற்றுப் புன்னகை.
“ம்மா… நான் தூங்கும் பொழுது தினமும் பிரின்சஸ் கதையெல்லாம் சொல்லி தூங்க வைப்பியே! இன்னக்கி என் பிரின்ச நான் கண்டு பிடிச்சிட்டேன். என் பிரின்ஸ் வந்தா என்ன உன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவானு கிண்டல் பண்ணுவியே! என் பிரின்ஸ் ரொம்ப நல்ல பிரின்ஸ் மா… உன்ன என் கிட்ட இருந்து பிரிக்க நினைக்கலாமா.. அவனால இப்போ. உன்ன தினமும் வந்து பார்க்க முடியும்” கண்கள் கலங்கியவாறு அன்னையிடம் பேசலானாள் நிலா.
மக்களின் முகத்தில் இருந்த அதீத சந்தோஷத்தைக் கண்டு “எங்க உன் பிரின்ஸ்” என்று அன்னை கேக்க
“ஆபீஸ்ல வேல பார்த்துகிட்டு இருக்காரு. வீக்கெண்ட்டுல உன்ன பார்க்க கூட்டிகிட்டு வரேன்” என்று அன்னையின் கன்னத்தில் முத்தம் வைக்க பாவம் நிலா அறியவில்லை அப்படி ஒருநாள் வரப்போவதில்லையென்று.
கண்களை மூடித்திறந்து சரியென்ற பிறைநிலா “போட்டோ…” கேட்க
“என் செல்லுல எங்கம்மா போட்டோ பிடிக்க என்று அவளுடைய போனைக் காட்டி சிரிக்க பிறைநிலாவுக்கும் சிரிப்பாக இருந்தது.
டெபிட்காடை அன்னையிடம் காட்டியவள் “இதோ பாத்தியா உன் மருமகன் கொடுத்தது என்ன வேணா வாங்கிக்கலாம். ஆனா ஒன்னும் வாங்க மாட்டேன்” என்று கண்சிமிட்ட அதற்கும் பிறைநிலா புன்னகைத்தாள்.
சூப்பையும் ஊட்டிவிட்டியவாறே நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமாக அன்னையோடு உரையாடியவள் மருத்துவமயிலிருந்து கிளம்பி இருக்க வாணன் அவளோடு வீடு சென்றான்.
சென்றவள் அவசர அவசரமாக இரவு உணவை தயாரித்து, வணனோடு சேர்ந்து உண்ட பிறகு வாணன் கொஞ்சம் வேலை இருக்கு என்று காரியாலய அறைக்கு செல்ல, சமையலறையை ஒதுங்க வைத்து விட்டு நிலா வெளியே வரும் பொழுது வாணன் அவனது குடிலிலிருந்து வெளியே வந்தான்.
இரவு முழுக்க நிலா வாணனின் கைகளில் தஞ்சமடைவதும், பகலில் இருவரும் காரியாலயத்தில் சந்தித்துக்கொள்வதும் அதன்பின் ஒன்றாக வீடு வருவதுமாக அவர்கள் வாழ்க்கை எந்த பிரச்சினையுமில்லாமல் சென்றுகொண்டிருக்க வாணனின் காதுக்கு வாணனுக்கும் நிலாவுக்கு தவறான தொடர்பு இருப்பதாக தனது ஊழியர்கள் பேசுவதாக சேதி வந்தது. அதுவும் நிலா ஒரு தப்பான தொழில் செய்யும் பெண் என்று.
   

Advertisement