Advertisement

அத்தியாயம் 5
லேட்டாக வரும் மாணவர்களை பிடித்து வைப்பது போல் நீட்டாக டிரஸ் பண்ணாமல் வந்தாலும் பிடித்து வைத்து விடுவார்கள் அதில் ஸ்கொலசிப் மாணவர்கள் அதிகம் காரணம் அவர்களின் உடையில் இருக்கும் நீங்கா கறைதான்.
பாவம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சீருடையை வாங்கி இருப்பார்கள் என்று இந்த திமிரு பிடித்த பணக்கார பசங்களுக்கு தெரியவில்லையே!
அவர்களின் சேட்டைகளை பொறுத்துக்கொண்டு அமைதியாக படிப்பில் கவனமாக இருப்பவர்கள் பதிலடி கொடுக்க மாட்டார்கள். அது வீண் வம்பை விலைகொடுத்து வாங்குவதற்கு சமன் என்று அர்ச்சனா வலியுறுத்தி இருக்க, ஸ்கொலசிப்பில் உள்ளே வந்தவர்கள் புரிந்துகொண்டுதான் இருந்தனர்.
அந்த பதினைந்து பேர்களையும் தாண்டி இருக்கும் மற்ற மாணவர்களும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். பத்துக்குள் இல்லா விட்டாலும் ஐம்பதுக்குலாவது இருக்கும் பணக்கார்கள் அவர்கள். இவர்களை போல் அன்றாடம் காட்ச்சிகளல்ல.
யாரவது அறியாமையால் இவர்களிடம் பேச்சு வார்த்தை வைத்துக்கொண்டாலோ! எந்த உதவி செய்தாலோ! அவர்களுக்கு தண்டனை உண்டு.
அப்படித்தான் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் ஸ்கொலசிப்பில் வந்த மாணவனுக்கு தனது பிறந்த நாளின் போது அனைவருக்கும் வழங்குவது போல் வெளிநாட்டு பேனாவை கொடுக்க, யாதவ் குரூப்பால் இருவரும் தூக்கிக் கொண்டு வரப்பட்டு இருவருக்கிடையில் சண்டை போட வைத்து இரத்த காயங்களோடு இருவரையும் வீட்டுக்கு அனுப்பி இருந்தனர்.
வீட்டில் விளையாடும் பொழுது விழுந்து விட்டதாகத்தான் கூறப்பட்டது. இதையறிந்த வாணன் அதிபரிடம் சென்று இதற்கு காரணம் யாதவ் என்று புகார் கொடுக்க விசாரித்ததில் அவன் யாரையும் அடிக்கவில்லை என்று அவனை அனுப்பிய அதிபர் அடிபட்டவர்களை விசாரிக்க அவர்கள் விளையாடும் பொழுது விழுந்ததாக கூறி பிரச்சினையை முடித்துக்கொண்டனர்.
வாணனுக்கு நடப்பதும் புரியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று அவர்களை கையும் களவுமாக பிடித்து அதிபரிடம் கொடுத்தால் அவர்களை ஜஸ்ட் வார்ன் பண்ணி மட்டும் அனுப்பி விட வாணனின் இரத்தம் கொதித்தது.
“என்ன அவன் ரொம்ப துள்ளுறான்” வாணனின் வகுப்பில் படிக்கும் சதீஷ் சொல்ல
“அவனை சும்மா விடக் கூடாது. என்ன பத்தி ப்ரின்ஸிபல் கிட்ட கம்பிளைன் கொடுக்குறானா?” சத்தமாக சிரித்த யாதவ் “மாப்பிளைக்கு ஒரு முட்டை குளியலை போட வேண்டியதுதான்” என்றான்.
அன்று புதன் கிழமை. புதன் அன்றுதான் பாடசாலையின் எஸ்ஸம்ப்ளி நடக்கும் நாள். அன்று மாணவர்களின் சீருடைகள் ஒழுங்காக இருக்கின்றனவா? முடி ஒழுங்காக வெட்டி நேர்த்தியாக இருக்கிறதா? நகம் வெட்டப்பட்டிருக்கிறதா? என்று பார்ப்பார்கள். அதனாலயே! மாணவர்கள் அன்றைய நாள் மற்ற நாட்களை விட ஒழுங்காக பாடசாலைக்கு சீருடையை போட்டுக்கொண்டு வருவார்கள்.
வாணனும் அவ்வாறு தான். அயன் செய்த துணியை போட்டுக்கொண்டு பஸ்ஸில் கசங்கி விடாதவாறு பத்திரமாக இறங்கியவன் புத்தகப் பையையும் சுமந்துகொண்டு ஓடி வரும் பொழுது அவன் மேல் ஒரு முட்டை வந்து விழுந்தது.
அதிர்ச்சியில் உறைத்தவன் நிமிர நிலா வண்டியிலிருந்து தலையை நீட்டி பலிப்புக் காட்டிக்கொண்டே செல்ல அவளை திட்டித் தீர்த்தவாறே! வாணன் நடக்க அவனை கடக்கும் வண்டிகள் அனைத்திலுமிருந்தும் முட்டைகள் வீசப்பட்டு அவனுக்கு அடி விழ ஆரம்பித்தது. 
அன்று அவன் எஸ்ஸாம்ப்ளியில் பேச்சாற்ற வேறு வேண்டி இருக்க செய்வதறியாது திகைத்தான். கோபம் கணக்க ஒரு முடிவோடு அப்படியே போய் எஸ்ஸாம்ப்ளியில் நின்றவனை மாணவர்கள் அதிர்ச்சியாகவும், கேலியாகவும் பார்க்க அடுத்து நடக்க போவதை அவர்களால் உணர முடியவில்லை.
வாணனின் பேச்சு ஆரம்பிக்க அவனை மேடைக்கு அழைக்க அவன் வந்து நின்ற கோலம் கண்டு ஆசிரியர்கள் உட்பட அதிபரும் அதிர்ந்து நின்றனர்.
“இன்சைன். அவன் பேசக் கூடாதுனு தான் இப்படி பண்ணோம். என்ன திமிர் இருந்தா அப்படியே! போய் நிற்பான்” ஷீலா சொல்ல
“என்ன கூத்து நடக்குதுன்னு நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்” என்றான் யாதவ்.
“வாட் ஈஸ் திஸ் வாணன். இப்படியா ஸ்கூலுக்கு வருவ? அதுவும் இன்னக்கி. எங்களை அவமானப் படுத்தவென்றே வந்திருக்க?” என்று அதிபர் கத்த
பெயர் சொல்லும் அளவுக்கு வாணனை அவ்வளவு மாணவர்கள் படிக்கும் பாடசாலையிலும் அதிபர் நன்றாகவே அறிந்து வைத்திருப்பதற்கு காரணம் இவன் தினமும் அவரை சந்திப்பதுதான்.
“நான் எதுக்கு சார் உங்கள அவமானப்படுத்த போறேன். எனக்கு மட்டும் ஆசையா என்ன காலங்காத்தால முட்ட குளியல் பண்ண” என்றதும் மாணவர்கள் “கொல்” என சிரிக்க அதிபர் கோபமாக
“எந்த சாக்கடைல விழுந்து எந்திரிச்சு அப்படியே! ஸ்கூல் வந்த?” என்று கேக்க
“நான் எந்த சாக்கடைல விழவுமில்ல. யாரும் என்ன தள்ளி விடவுமில்ல. எனக்கு இப்படி நடந்தது நம்ம ஸ்கூல் வாசல்லதான். ஆனா பாருங்க இங்க இருக்குறவங்க யாரும் சாட்ச்சி சொல்ல மாட்டாங்க. ஆனாலும் ஸ்கூல் வாசல்ல இருக்குற சீசீடிவி பொய் சொல்லாதே!  அது உண்மைய புட்டு புட்டு வைக்கும். எனக்கு இப்படியாக காரணம் யாரு? என் யூனிபோர்மை யாரு நாசம் பண்ணாங்க எல்லா உண்மையும் தெரியவரும். நீங்களே! செக் பண்ணி எக்ஸன் எடுங்க” என்று சொல்ல அதிபர் கப்சிப் என்றானார்.
அங்கு அத்தனை ஆசிரியர்களும் இருந்ததில் எல்லாரும் இவரை போல் பணத்தின் பின்னால் அலைபவர்களுமல்ல. சாதாரண குடும்பத்திலிருந்து படித்து முன்னேறிய மனிதாபிமானமுள்ளவர்களும் இருந்ததால் டிசிப்பிளீனுக்கு பொறுப்பான ஆசிரியர் செக்ஸ்வியர் உடனே! என்னவென்று பார்ப்பதாக கூறி செல்ல முட்டை குளியலோடு வாணன் தனது உரையை முடித்திருந்தான்.
செக்ஸ்வியர் வந்து வாணனின் இந்த நிலைமைக்கு காரணமான அத்தனை மாணவர்களையும் ஒரு வாரம் சஸ்பென்ஸ் செய்ய அதிபரால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. பாடசாலைக்கென்றான நீதி அனைவருக்கும் பொதுவானது. அதனால் ஒன் ஒப்பி தி டைரக்டரான நரேனின் தந்தையால் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை.
ஒரு வாரம் பாடசாலை ரொம்ப அமைதியாக, நிம்மதியாக ஸ்கொலசிப் மாணவர்களுக்கு சுதந்திரமாக செல்ல, சில மாணவர்கள் அவர்களிடம் இரகசியமாக நட்புக்கு கரங்களும் நீட்டி இருந்தனர்.
ஆனால் இந்த பதினைந்து பேர் கொண்ட படையில் சிலர் தினமும் சந்தித்துக்கொண்டதோடு, சந்தித்துக் கொள்ள முடியாதவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துக்கொண்டு, தங்கள் பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து தங்களை பற்றி சாட்ச்சியோடு புகார் கொடுத்து சஸ்பென்ஸ் செய்ததில் வெறிகொண்டிருந்தனர். போதாததற்கு வாணனுக்கு இவர்களின் பாக்கெட் மணியால் புது யூனிபார்ம் வேறு வாங்கி இவர்கள் கையாலையே! கொடுத்து “சாரி” சொல்ல வைத்ததை நினைத்து கடுப்பின் உச்சியில் இருந்தனர்.
சில பெற்றோர்கள் “ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்று கூறி கடந்து சென்றிருந்தாலும். சிலர் மானம் போனதாக பெல்ட்டால் பிள்ளைகளை விளாசி இருக்க, சிலர் “முட்டாள் தப்பு செஞ்சாலும் இப்படி சாட்ச்சியோடையா செய்த?” என்று திட்டி இருக்க, தங்களிடம் பணம் இருந்தாலும் தாங்கள் சொல்வதை எல்லாரும், எல்லா நேரமும் கேக்க மாட்டார்கள் என்று உணர்ந்து கொண்டார்கள் சிறுவர்கள்.
ஆனாலும் வாணனின் மீதான கோபம் தீரவே! இல்லை. வாணனை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறி எல்லோருக்குள்ளும் கனன்றுக்கொண்டிருக்க சிறப்பான திட்டத்தோடு ஒரு வாரம் கழித்து பாடசாலைக்குள் நுழைந்திருந்தனர் யாதவ் குரூப். 
இரண்டு நாட்களாக அவர்கள் ரொம்பவும் அமைதியாகத்தான் இருந்தார்கள். அதற்கு காரணம் நரேன் தந்தையை வற்புறுத்தி பீ.டி உடையையின் நிறத்தை மாற்றி இருந்தான்.
திடிரென்று மாற்றியதில் ஸ்கொலசிப் மாணவர்களால் வாங்க முடியவில்லை. சீருடையை அணிந்துகொண்டு விளையாட்டு மைதானத்துக்கு செல்லவும் முடியாமல் வகுப்பில் அமர்ந்திருந்தனர்.
அன்று வாணனின் வகுப்புக்கான பீ.டி நாள். வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் சென்றிருக்க, வாணன் மட்டும் வகுப்பில் அமர்ந்திருந்தான். விளையாட்டு மைதானத்தில் இருந்து வந்த சதீஷ் தனது விலை உயர்ந்த பேனா திருடு போய் விட்டதாகவும் வாணன் மட்டும்தான் வகுப்பறையில் இருந்ததாகவும் புகார் கொடுக்க வாணன் அதிபரின் அறையில் விசாரணைக்காக நின்றிருந்தான்.
செல்லும் பொழுது வாணன் உசாராக புத்தகப்பையை எடுத்துக்கொண்டு சென்றதில் சதீஷின் திட்டம் நிறைவேறவில்லை. வாணனின் புத்தகப் பையில்  பேனா இல்லாததால் வாணன் அதை வேறு எங்காவது வைத்திருக்க வேண்டும் என்று கூற, வாணன் வகுப்பறையை விட்டு எங்கும் செல்லாததால் வகுப்பறை சல்லடை போட்டு தேடப்பட்டத்தில் அது வேறொரு மாணவனின் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
அந்த மாணவனும் பணக்கார வீட்டுப் பிள்ளை அவன் “நான் எதுக்கு உன் பேனாவை திருடப் போகிறேன்” என்று சண்டைக்கு வந்தான்.
வாணனுக்கு புரிந்து போனது. “தான் மட்டும் பையை எடுத்துக்கொண்டு செல்லா விட்டால் அந்த பேனா தனது பையில் விழுந்திருக்கும் என்று” அன்றிலிருந்து வாணன் மிகவும் உசாராக இருக்கலானான். மற்ற மாணவர்களையும் கவனமாக இருக்க சொன்னான்.
கராத்தே வகுப்பு, விளையாட்டு மைதானம், ஏன் கணணி லேப், விஞ்ஞான கூடம் சென்றாலும் மறக்காமல் புத்தகப்பையை கொண்டு செல்ல சொன்னான்.
ஸ்கொலசிப் மாணவர்கள் உசாரானதைக் கண்டு யாதவ் “இன்னும் மூணு மாசத்துல எனக்கு எக்ஸாம் வருது அப்பொறம் நான் இந்த ஸ்கூலை விட்டு போய்டுவேன். அதுக்குள்ள அந்த வாணன் இந்த ஸ்கூலை விட்டு போய்டணும்” என்று சொல்ல என்ன செய்வது என்று தீவிரமாக சிந்திக்கலாயினர் அவனுக்கு கீழுள்ளோர்.
மைதானத்திலிருந்த வாணன் நடந்து வந்துகொண்டிருக்க அவன் முன் சென்று நின்ற நிலா “நான் இனிமேல் யாதவ் குரூப்போடு சேர மாட்டேன். சாரி” என்று சாக்லட்டை நீட்ட வாணனுக்கு சிரிப்பாக இருந்தாலும் கண்டுகொள்ளவில்லை.
அடுத்த நாளும் வந்தவள் பூனைக்குட்டிபோல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்ச வாணன் புன்னகைத்தவாறே நிலா கொடுத்த சாக்லட்டை வாங்கிக் கொண்டான்.
இரண்டு நாட்கள் அவனோடு இன்முகமாக பேசியவள் யாதவ் குரூப் எதோ திட்டமிட்டிருப்பதாக கூறி ஒரு இடத்துக்கு அழைத்து செல்ல வாணனும் நிலாவை நம்பி சென்றான்.
அது பாடசாலையின் பழைய கட்டிடத்தின் பின் பகுதி அங்கு சீசீடிவி இல்லை. அங்கு இருவரும் செல்லவும் அங்கு நின்றிருந்த யாதவ் கீழே இருந்த உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து நிலாவின் கையில் குத்தி விட நிலா வலியில் கதறியவாறே ஓட வாணன் தன்னை விட பெரியவனான யாதவ்வை அடிக்க முடியாமல் நிலாவின் பின்னால் ஓடி இருந்தான்.
நிலா இரத்தம் சொட்ட ஓடி வருவதையும், வாணன் அவள் பின்னால் ஓடி வருவதையும் நிறைய பேர் பார்த்து விட அதிபரின் காதுக்கும் விஷயம் சென்றிருந்தது.
கட்டோடு படுத்திருந்த நிலாவை விசாரிக்க, வாணன்தான் கண்ணாடியால் குத்தியதாக நிலா கூற அதிர்ச்சியடைந்தான் வாணன்.
சீசீடிவி காட்கிகளை பார்க்க வாணன் அந்த இடத்துக்கு நிலாவை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு செல்வது போல்தான் இருந்தது.
“இல்ல சார் நிலா பயமாக இருக்கு வர மாட்டேன்னு சொன்னா. நான் இருக்கேன் பயப்படாதனு சொல்லி கைய புடிச்சு இழுத்துட்டு போனேன்” என்றான் வாணன்.
“அதான் பா.. அந்த நேரத்துல, அந்த இடத்துக்கு பயமா இருக்குனு சொன்னா பொண்ண எதுக்கு கூட்டிட்டு போன?” அதிபர் கேக்க
“நிலா தான் யாதவ் எதோ பிளான் பண்ணுறதா சொன்னா”
யாதவ்வை அழைத்து விசாரிக்க அவன் அந்த நேரத்தில் கணணி லேப்பில் இருந்ததாக சீசீடிவி காட்சிகள் கூறியதோடு அவன் கணணி லேப்பை விட்டு வெளியே வந்ததாக சீசீடிவி சொல்லவில்லை. அவன்தான் சீசீடிவியின் கண்ணை மறைத்து ஜன்னலினூடாக எகிறி குதித்து வந்தானே!
தன்னை சுற்றி நடப்பது எதுவும் வாணனுக்கு புரியவில்லை. நிலா அவனை கேலியாக பார்த்து சிரித்து கழுத்தை அறுப்பது போல் செய்கை செய்து விட்டு சென்று விட்டாள்.
யாதவ் குரூப் தீவிரமாக சிந்தித்ததில் அவர்களுக்கு ஷீலா கொடுத்த ஐடியாதான் இரத்த காயங்களோடு ஒருவர் அதிபரிடம் சென்று வாணன் தான் இதற்கு காரணம் என்று முறையிடுவது என்று சொல்ல
“கிரேட் ஐடியா. யாரு போறது?” என்று நரேன் கேக்க
நிலாவை பார்த்த யாதவ் “சும்மா கைய அறுத்துகிட்டு போய் புகார் கொடுத்தா அந்த நேரத்துல அவன் எங்க இருந்தான்னு சீசீடிவியை செக் பண்ணி கண்டு பிடிப்பாங்க. முதல்ல சீசீடிவி பிளைன்ட் ஸ்பாட் எங்கெங்க இருக்குனு பார்க்கணும். நிலா அங்க எல்லாம் நீ வணன மீட் பண்ணி சாரி சொல்லி சாக்லட் கொடுத்து ப்ரேன்ட்லியா பேசு. அப்பொறம் சீசீடிவி முன்னால நடந்து போய் பிளைன்ட் ஸ்பாட்ல கைய அறுத்துகிட்டு ப்ரின்ஸிபல் ஆபீஸ்ல போய் கம்பிளைன் கொடுக்கலாம் கண்டிப்பா அவனை டிஸ்மிஸ் பண்ணுவாங்க” என்று யாதவ் சொல்ல நிலா சமத்தாக தலையாட்டினாள்.
“ஏன் யாதவ் நிலாவை செலெக்ட் பண்ணுற?” வணனோடு இருக்கும் பிரச்சினையால் தான் தான் இதை செய்ய வேண்டும் என்று சதீஷ் கடுப்பாகி கேக்க
“சின்ன குழந்தைனாதான் வாணன் ஏமாத்தி கூட்டிட்டு போனதா சொன்னா நம்புவாங்க.
யாதவ் குரூப் சொல்லி கொடுத்தது போல் எந்த கேமராவிலும் சிக்காமல் வாணனை சந்தித்து நிலா மன்னிப்பு கேக்க ஏற்கனவே! அவள் மேல் இருந்த கரிசனத்தால் உடனே! மன்னித்து விட்டான் வாணன்.
ஆனால் நிலா சின்னப்ப பெண் அவளால் தனியாக கையை எல்லாம் அறுத்துக்கொள்ள முடியாது அதனால்தான் யாதவ் களத்தில் இறங்கி கண்ணாடியை சொருகி இருந்தான். இவர்களின் சூழ்ச்சி அறியாத வாணன் வசமாக சிக்கி இருந்தான்.
 நிலாவுக்கு இப்படி ஆகிவிட்டதை அறிந்த ஈஸ்வரன் அடித்துபிடித்து பாடசாலைக்கு வந்து சேர்ந்தது மட்டுமல்லாது வாணனை போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று கங்கணம் கட்டிக்க கொண்டு திமிர
“ஐயோ போலீஸ் கேஸ்ஸ்னு போனா பத்திரிக்கைல பேர் வந்து ஸ்கூல் ரெபிடேஷன் கெட்டு போய்டுமே!” கலங்கிய அதிபர் நரேனின் தந்தையை அழைத்துப் பேச
அவர் வந்து “இந்த ஒண்ணுமில்லாத பசங்கள்! இப்படித்தான். டிஸ்மிஸ் பண்ணலாம். வெளிய வச்சி ஏதாச்சும் பண்ணிடலாம்” ஈஸ்வரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.
வணனால் நடந்தவைகளை ஜீரணிக்கவே! முடியவில்லை. ஒரு குட்டிப்பெண். இவ்வாறெல்லாம் செய்வாளா? அவளை ஏன் தான் நம்பினேன்.
“குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்வியேமா? என்ன ஏமாத்திட்டாங்கமா?” வாணன் கதறி அழ,
“அழாத டா துகிலா.. அப்பா சவாரி முடிச்சிட்டு வரட்டும். அவர் வந்த பிறகு நாம போய் பேசலாம். சரியா. வா வந்து சாப்பிடு. வெறும் வயித்தோட படுக்க கூடாது” அழும் மகனை அரவணைத்துக்கொண்டாள் சுசிலா.
விரோசனன் பெங்களூர்வரை சவாரி சென்றிருக்க, வர இரண்டு அல்லது மூன்று நாட்களானும் என்று விட்டுத்தான் சென்றிருந்தார். அதற்குள் எல்லாம் நடந்தேறி இருந்தது.
வாணன் சோகத்தில் முடங்கிக் கிடக்க சுசீலாவால் மகனை அவ்வாறு பார்க்கவே! முடியவில்லை. இந்த பிரச்சினையை கணவனிடம் கொண்டு செல்ல வேண்டுமா அடுத்த நாளே! பாடசாலைக்கு சென்றவள் அதிபரை சந்தித்து பேச 
“நிலாவோட பேரன்ட்ஸ் ரொம்ப பிடிவாதமா இருக்காங்க. நீங்க அவங்கள கன்வின்ஸ் பண்ணிடீங்கன்னா… ஒருவேளை டிஸ்மிஸ் ஆடர கேன்சல் பண்ண வாய்ப்பிருக்கு”  என்று ஈஸ்வரனின் விலாசத்தை கொடுக்க, மகனுக்காக அந்த தாய் ஈஸ்வரனின் வீட்டு கதவை தட்டி இருந்தாள்.
காவலாளி “வேலை தேடியா வந்த? இங்க வேலைக்கு ஆள் எடுக்குறதில்ல” என்று துரத்த
“நான் ஒன்னும் வேல தேடி வரல. இந்த வீட்டு எஜமானி அம்மாவை பார்க்கணும்” என்று சுசிலா கோபமாக சொல்ல
“அம்மா வீட்டுல இல்ல”
“ஐயா இல்லையா?” என்று சுசிலா கேக்கும் நேரம் ஈஸ்வரனின் வண்டி கேட்டின் அருகில் வந்து நின்றிருக்க, சுசீலாவை கண்டு யாரு? என்ன? என்று பி.ஏயிடம் விசாரிக்குமாறு கூறியவாறே ஓட்டுனருக்கு வண்டியை உள்ளே! விடச் சொன்னார்.
சுசிலா யார் என்ன என்று அறிந்துகொண்டபின் உள்ளே! வரச்சொன்ன ஈஸ்வர் பி. ஏ வை அனுப்பி விட்டு மாடியிலிருந்துகொண்டு பேச சுசீலாவும் படியேறி இருந்தாள்.
படிகள் முடிவடையும் இடத்தில் நின்றிருந்த சுசிலா வந்த உடனே! தன் மகன் அவ்வாறெல்லாம் செய்பவனல்ல ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று பேச
“அப்போ என் பொண்ணு பொய் சொல்லுறாளா?” கையில் விஸ்கியை ஏந்தியவாறு ஈஸ்வரன் கேக்க
பட்டப்பகலில் மதுபானத்தை அருந்தும் இவனிடம் பேசி புரியவைக்க முடியுமா? என்று யோசித்த சுசிலா.
“இங்க பாருங்க அவன் சின்ன பையன். படிக்குற பையன். தப்பு பண்ணி இருந்தாலும் மன்னிக்கிறது பெரியவங்க நம்மளுக்கு அழகு” என்று தன்மையாக எடுத்துக்கூற
“ஆமா அழகுதான். இந்த காட்டன் புடவையிலும் சும்மா கும்முன்னுதான் இருக்க. எப்படித்தான் இந்த ஒண்ணுமில்லாதவளுங்க இவ்வளவு அழகா இருக்கீங்களோ! தெரியல. போதாததுக்கு என் கண்ணுல வேற பட்டு தொலைக்கிரீங்களே!” என்றவாறு ஈஸ்வர் சுசீலாவை ஒரு மாதிரி பார்க்க அருவறுத்துப்போன சுசிலா அங்கிருந்து நகர முயல
“பையன் டிஸ்மிஸ் கேன்சல் ஆகணும்னா. அதோ அந்த பக்கம்தான் என் பெட்ரூம் இருக்கு. கொஞ்சம் நேரம் உள்ள வந்துட்டு போலாம்” என்று சிரிக்க
ஈஸ்வரை கோபமாக முறைத்த சுசிலா “என் புருஷன் யார்னு தெரியுமா? நீ இப்படி பேசுனத்துக்கே! உன் தலையை வெட்டி எரிஞ்சிடுவாரு” என்று கர்ஜிக்க,
“அடடடா… ஒன்னும் இல்லைனாலும் இந்த வெட்டி வீராப்பெல்லாம் சும்மா தெறிக்க விடுறீங்க டி..” என்றவாறு சுசிலாவின் சேலையில் கைவைக்க,
“அம்மா..” என்று அழைத்தவாறு உள்ளே! வந்தான் வாணன்.
கண்விழித்த வாணன் அன்னையை காணாது தேட அன்னை பாடசாலைக்கு சென்றிருப்பதாக, பக்கத்து வீட்டு அத்தை சொல்ல விரைந்தான். வாணனுக்கு அன்னை நிலாவின் வீட்டுக்கு சென்றிருப்பதாக அர்ச்சனாதான் வாயிலில் வைத்து தகவல் கூறி இருந்தாள். அவள் அதிபரின் அறையை கடக்கும் பொழுது காதில் விழுந்ததால் நல்லதாக போயிற்று இல்லையென்றால் வாணன் அன்னையை எங்கு சென்று தேடுவான்.
நிலாவின் வீடு எங்கிருக்கிறது? அவனுக்குத்தான் அவள் வீடு இருக்குமிடம் தெரியவில்லையே! யோசிக்கும் நேரம் பாடசாலை விட்டு நிலா வண்டியில் செல்வது தெரிய அர்ச்சனாவின் சைக்கிளை பெற்றுக்கொண்டவன் நிலாவின் வண்டியை பின் தொடர்ந்தான். நிலாவின் வண்டிக்காக கேட்டை காவலாளி திறக்கும் நேரம் சைக்கிளை உள்ளே! விட்டவன் அதை கீழே விட்டு விட்டு அன்னையை தேடி வந்து விட்டான்.
வாணனின் பின்னால் வந்த நிலாவும் சரி. வாணனும் சரி இக்காட்ச்சியை பார்த்து விட பன்னிரண்டு வயதான வாணனுக்கு சினிமா பார்த்திருப்பதால் நடப்பது ஓரளவுக்கு புரிய “அம்மாவ விடு” என்று கத்தியவாறு படியேற
தன் தந்தை என்ன காரியம் செய்ய விழைந்தார் என்று அறியாத நிலா வாணனை கட்டிப் பிடித்து அவன் படியேறாதவாறு தடுத்தவாறே “விடாதீங்க டேட்” என்று கத்த
கேலியாக உதடு வளைத்த ஈஸ்வர் “பாத்தியா என் பொண்ணே சொல்லிட்டா. உன்ன விடக் கூடாதுனு. சும்மா அடம் பிடிக்காம உள்ள வா…” என்று சிரிக்க
நிலாவை பார்த்த சுசிலா “உன் மகளுக்கும் இதே! நிலைமைதான் வரும். சீரழிஞ்சி போவா.. இது என் சாபம்” என்றவள் ஈஸ்வரிடமிருந்து தன்னை மீட்க போராடலானாள்.
ஐந்தாம் படியில் இருந்த வாணனுக்கு எங்கருந்துதான் ஆவேசம் வந்ததோ நிலாவை பிடித்து தள்ளி விட ஈஸ்வர் “நிலா” என்று கத்தியவாறே சுசீலாவை தள்ளி விட்டு படிகளில் இறங்கலானார்.
வாணன் தள்ளியதில் நிலாவின் தலை படியின் உருண்டையான கைப்பிடியில் மோதி இரத்தப் பெருக்கோடு மயங்கிச்சரிய, ஈஸ்வரன் தள்ளியது கால் இடறி படியில் உருண்டை சுசிலா தலை மோதுண்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தாள். 

Advertisement