Advertisement

அத்தியாயம் 4

அந்த பாடசாலை வசதியான வீட்டு குழந்தைகள் படிக்கும் பாடசாலை. நூறு குழந்தைகளுக்கு மூன்று குழந்தைகளை ஸ்கொலசிப் என்ற பெயரில் நன்றாக படிக்கும் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வார்கள். அதற்கு ஒரே காரணம் அரசாங்கத்தின் வரி சலுகைதான்.

“துகிலா…  என்னமோ உன் பேர்ல இங்கிலீசுல கடுதாசி வந்திருக்குடா…” பாடசாலை விட்டு வந்த மகனிடம் ஆசையாக கொடுத்தாள் சுசிலா.

மகன் ஆங்கிலம் பேசுவதை கேட்பதில் அவளுக்கு அவ்வளவு ஆர்வம்.

பன்னிரண்டு வயதான வாணனும் பெருமிதமாக கடித்தை சத்தமாக வாசிக்க ஆரம்பித்தான்.

சுசிலா ஆசையாக மகனை பாத்திருக்க, வாசித்துக்கொண்டிருந்தவனின் சுருதி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து “அம்மா எனக்கு ஸ்கூல்ல சீட் கிடைச்சிருச்சு” என்று குதுகளித்தவாறு அன்னையை கட்டிக்கொள்ள

“நிஜமாவாடா..  துகிலா… உனக்கு ஸ்கூல்ல சீட் கிடைச்சிருச்சா…” சுசிலா சந்தோசமாக மகனை கட்டிக்கொண்டாள்.

வாணனின் தந்தை விரோசனன் {சூரியன்} சாதாரண ஓட்டுனர்தான். அன்னை சுசிலா இல்லத்தரசி. அப்பாவி. கணவன் மகனை தவிர உலகமறியாதவள். கணவன் சம்பாத்திக்கொண்டு வருவதை எப்படி சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்பதை மட்டும்தான் யோசிப்பாள்.

“வாணா அப்பாவால் உன்ன நல்ல ஸ்கூல்ல சேர்க்க முடியலைன்னு அப்பா மேல உனக்கு கோபமில்லையே!” விரோசனன் கவலையாக கேக்க

“கண்ணடிப்பா நான் நம்ம ஊருல இருக்குற பெரிய ஸ்கூலுக்கு போவேன் ப்பா..” இதோ சொன்னது போல் அதிக புள்ளிகள் பெற்று தேர்வாகி உள்ளே நுழைந்திருந்தான்.

அவர்கள் இருக்கும் வாடகை வீடோ! பலகையிலானது. இரெண்டே அறைகளை கொண்டது. சமையலறை பின்னாடி இருக்க மழை வந்தால் நனைந்து விடும் நிலைமையில்தான் இருக்கிறது. பொதுக்கழிவறையும், பொதுவான ஒரு கிணறும்தான் அவர்களுக்கு சொந்தம்.

இதெல்லாம் நினைத்து வாணன் சிறிதும் கவலை பட்டது கிடையாது. அன்னை தந்தையின் பாசம் மற்றும் கஷ்ட நஷ்டங்களை நன்றாகவே! உணர்ந்திருந்தான் வாணன். 

தந்தை வீட்டுக்கு வந்ததும் ஓடிச்சென்று தனக்கு பெரிய ஸ்கூலில் சீட் கிடைத்ததை சொல்லி மகிழ, விரோசனனும் மகனின் புத்தி கூர்மையை நினைத்து வாஞ்சையாக அவனின் தலை கோதி விட்டவர் நன்றாக படிக்கும்படி சொல்ல தலையசைத்தான் வாணன்.

சுசிலா சமைத்திருந்த உணவை மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்ட பின் அன்னை தாலாட்டு பாட அதை செவி சாய்த்தவாறே வாணன் அன்னையின் மடியில் தலை வைத்தவாறே உறங்கி இருக்க, தூங்க வராமல் கணவன் என்ன செய்கிறார் என்று வெளியே சென்று பார்த்தாள் சுசிலா. 

விரோசனன்  வானத்தை பார்த்தவாறு இருக்க “என்னங்க யோசிக்கிறீங்க?”  கணவனின் அருகில் வந்தமர

“புது ஸ்கூல் போறோம்னு வாணா ரொம்ப சந்தோசமா இருக்கான் இல்லையா சுசி..” விரோசனன் காதல் மனைவியின் கையை பற்றிக்கொள்ள

“ஆமாங்க அவனுக்கு அப்படியே! உங்க அறிவு” சுசிலா பூரித்து போய் சொல்ல

“உன்ன மாதிரியே! கள்ளம் கபடமில்லாத மனசு சுசி. அன்பு மட்டும்தான் காட்ட தெரியும்” விரோசனன் ஆத்மார்த்தமாக சொல்ல

விசும்பியவாறே “என்ன மன்னிச்சிடுங்க என்னாலதான் நீங்க இப்படி கஷ்டப்படுறீங்க. எப்படி வாழ வேண்டியவரு நீங்க. என்ன மட்டும் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா…”

அவள் வாயில் விரலை வைத்து தடுத்த விரோசனன் “நான் சந்தோசமா இருந்திருக்கவும் மாட்டேன். வாணன் நமக்கு கிடைச்சிருக்கவும் மாட்டான் சுசி. நீ இல்லாத வாழ்க்கையை என்னால யோசிச்சு பார்க்க முடியாது சுசி. காசு பணம் மட்டும் வாழ்க இல்ல. நீ அத பத்தி யோசிக்க கூடாது புரியுதா? கண்ண தொட. நீ அழுகிறத பார்க்க சகிக்கல” என்று கிண்டல் செய்ய

புன்னகைத்த சுசிலா “சொல்லுங்க இப்போ என்னத்த மனசுல போட்டு உருட்டிக்கிட்டு இருக்கீங்க?”

“எப்படி சுசி? சான்ஸே இல்ல. என் மனச படிக்க உன்னால மட்டும்தான் முடியும்” விரோசனன் சிரிக்க

“மழுப்ப பாக்குறீங்களா? ஒழுங்கா சொல்லுங்க” கணவனை முறைக்க

“அது ஒண்ணுமில்ல சுசி. ஸ்கூல் சேக்குறது ப்ரீனாலும் கொறஞ்சது ரெண்டு செட்டாவது யூனிபார்ம் வேணும். புக்ஸ் வாங்கணும். அதுக்கு கொஞ்சம் காசு வேணும். ஒரு வாரத்துல எல்லாம் ஏற்பாடு செய்ய முடியுமான்னு தெரியல. வண்டிக்கு வேற டியூ கட்டணும் இல்லானா வண்டிய தூக்கிடுவாங்க. அப்பொறம் ஒன்னும் பண்ண முடியாது. அதான் யோசிக்கிறேன்”

“இதுக்குதான் இவ்வளவு யோசிக்கிறீர்களா?” என்றவள் காதிலிருந்த கம்மலை கழட்டிக் கொடுக்க

“ஏய் என்ன பண்ணுற? தங்கம்னு காதுல இருக்குறது மட்டும்தான் இருக்கு. தாலியையும் மஞ்சளை வச்சிதானே! கட்டி இருக்க. அதுவும் இது உங்க அப்பா உனக்கு சின்ன வயசுல வாங்கி போட்டது. அவர் நியாபகார்த்தமா என்னைக்கும் கழட்டமாட்டேனு சொன்னியே!” கவலையாக கணவன் சொல்ல

“ஆமா சொன்னேன். என் பையனுக்காக என்னவேனா பண்ணலாங்க. முதல்ல வந்து தூங்குங்க. ரொம்ப யோசிச்சு உடம்ப கெடுத்துகாதீங்க” அக்கறையாக சொல்லியவள் கையேடு இழுத்து சென்று தூங்க வைத்திருந்தாள். 

 விரோசனன் தனது குடும்பத்தையே! எதிர்த்து சுசீலாவை காதல் திருமணம் செய்தது மாத்திரமின்றி ஊரையும் விட்டு வந்து விட்டார்.

வந்தவர் கூலித்தொழில்களை பார்த்து ஒருவாறு டேக்சி ஓட்டுவதற்காக சேர்ந்து இன்று சொந்தமாக ஒரு டேக்சியை மாதாந்த தவணையில் பணம் கட்டுவதற்காக வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

சுசீலாவை வீட்டு வேலைகளுக்கு அனுப்புவதற்கு விரோசனனுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. சுசிலா படிப்பறிவில்லாதவள். தனக்கு என்ன தெரியும் என்பதே! சுசீலாவுக்கு தெரியாது.

வாணன் அவர்களுக்கு ஒரே மகன். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவனை நல்ல முறையில் படிக்க வைத்து சமூகத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பது மாத்திரம்தான் விரோசனன் மற்றும் சுசிலாவின் ஆசை.

பாடசாலையின் மொட்டை மாடியில் யாதவனின் தலைமையில் பதினைந்து பேர்கொண்ட கூட்டம் கூடி இருந்தது. பன்னிரண்டாவது வகுப்பில் படிக்கும் யாதவன்தான் அந்த கூட்டத்துக்கு தலைவன் என்றால் கடைசி உறுப்பினர் நிலா ஈஸ்வரன்.

பதினைந்து பேரும் தமிழ்நாட்டிலுள்ள பத்து கோடீஸ்வரர்களின் மக்கள். வகுப்பு வாரியா, வயது வித்தியாசத்தில் இருந்தனர் அனைவரும்.  யாதவன் என்றால் அங்கிருக்கும் அனைவரும் பிடிக்கும். அவன் சொல்லே! வேதவாக்கு.

“இந்த ஒண்ணுமில்லாத பசங்கள எதுக்கு ஸ்கொலசிப் என்கிற பெயர்ல உள்ள கொண்டு வரங்கனு தெரியல. அவனுங்க கூட எல்லாம் நாம ஒண்ணா உக்காந்து படிக்கணுமா? போதாததுக்கு கேன்டீன்ல அவனுங்க கூட போய் உக்காந்து வேற சாப்பிடணும். அவனுங்க பேரன்ட்ஸ் நம்ம வீட்டுல வேலைய செய்யுற ஆயா, டைவர், தோட்டக்காரன். அவங்க பசங்க நமக்கு சரிசமமாக உக்காருவதா?” யாதவ் கத்த ஆரம்பிக்க

“என்ன பண்ண சொல்லுற யாதவ்? மேனேஜ்மண்ட் எடுக்குற முடிவுல நாம தலையிட முடியாதே!” பத்தாம் வகுப்பில் படிக்கும் ஷீலா சொல்ல

“இதோ இவனோட அப்பா இந்த ஸ்கூல் டைரக்டர் தானே! இவன் போய் பேசமாட்டானா?” என்று யாதவ் நரேன் மேல பாய

“என்ன என்ன பண்ண சொல்லுற? டெக்ஸ், அது, இதுனு பேசுறாரு” என்றான் நரேன்.

நிலா இரண்டு கன்னத்திலும் கையை வைத்தவாறு யாதவையே! பாத்திருக்க, “நிலா… நாம எல்லாரும் எர்லியா இந்த ஸ்கூலை விட்டு போயிடுவோம் நீ தான் கடைசியா போகப் போறவ. அதனால நீதான் இதுல ரொம்ப இன்வோல் ஆகி எல்லாம் கத்துக்கணும்” யாதவ் கர்ஜிக்க நிலா விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

அரசாங்க வரியிலிருந்து தப்பிக்க மாத்திரமன்றி இந்த பாடசாலைக்கு நல்ல பெறுபேர்களையும் பெற்றுத் தரக்கூடிய மாணவர்கள் வேண்டும் என்பதால் ஒவ்வொரு அரசாங்க பாடசாலைக்கும் சென்று நன்றாக படிக்கும் மாணவர்களை தேடியெடுத்து அவர்களுக்கு ஒரு பரீட்ச்சை வைத்து அதன் மூலம் வருடம் பத்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்பவர்கள் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்படுவதால் இந்த குரூப்பில் யாராவது ஒருவரின் வகுப்பில் வந்து விடுவார்கள்.

அதை பொறுத்துக்கொள்ள முடியாத யாதவ் போன்ற திமிர் பிடித்தவர்கள் அவர்களை எவ்வாறு துரத்துவது என்பதை மட்டும்தான் சிந்திக்கலாயினர். படிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவோடு வரும் ஏழை மாணவர்கள் இவர்களின் கையில் சிக்குண்டு சிலர் தற்கொலை முயற்சியும் செய்திருக்க, ஸ்கூல் மேனேஜ்மண்ட் அதை பணத்தால் மூடி மறைத்தும் இருந்தனர்.

இது யாதவ் ஆரம்பித்து வைத்ததல்ல. இந்த வரிக்காக என்று இந்த நீதியை  பாடசாலை மேனேஜ்மண்ட் எடுத்ததோ அன்றிலிருந்து உருவானதுதான். நிலாவிடம் முற்றுப்பெற போவதுமில்லை. நிலா முதலாமாண்டு சேர்ந்த பொழுதே! அவளை தூக்கிக்கொண்டு வந்த யாதவ் குரூப் அவளுக்கு நடப்பவைகளை சொல்லி இருக்க, ஸ்கூல் அரசியல் புரியாவிடினும். வீட்டு வேலையாளோடு தான் என்றும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ண போவதில்லை. அப்படி நடக்கக் கூடாது. அது தவறு என்று யாதவ் சொல்ல நிலாவுக்கு அந்த உதாரணம் நன்றாகவே! புரிந்தது.

காரணம் நிலாவின் தந்தை ஈஸ்வரன் ஸ்டேட்டஸ் பார்ப்பவர். வேலையாட்கள் நிலாவை கொஞ்சுவது கூட அனுமதிக்காதவர். ஜாதி, மதம் என்று பெரிதாக பார்க்காவிட்டாலும், பணம்தான் அவரின் அளவுகோல். பணமிருப்பவரிடம் ஒருமுகம். இல்லாதவரிடம் ஒருமுகம் காட்டுபவர். தன் மகளுக்கு சோறூட்டினாரோ இல்லையோ! இந்த ஏற்றத்தாழ்வின் வித்தியாசத்தையும். யாரோடு பழக வேண்டும், யாரை ஒதுக்க வேண்டும் என்பதை சரியாக சொல்லி கொடுத்திருந்தார்.

அந்த காலத்தில் ஐந்து வயதிலையே! ஆண் குழந்தைகளுக்கு போர் பயிற்சி வழங்கப்பட்டதாம். ஆன்மீக நூல்களை கற்றுவிக்க ஆரம்பித்தார்களாம். ஏனினில் அந்த வயதில் கற்பதுதான் மனதில் பதியும் என்று நம்பினார்கள். அதை விஞ்ஞானமும் இன்று உறுதிப்படுத்துகிறது. நல்ல பழக்க வழக்கங்களும் அவ்வாறே! சிறு வயதில் கற்றுக்கொடுப்பதுதான் காலத்தும் கடைபிடிப்பார்கள். அதனால்தான் என்னமோ! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்று கேட்டு விட்ட சென்றாரோ! திருவள்ளுவர்.

நிலாவுக்கு ஈஸ்வர் கற்றுக்கொடுத்தது போக யாதவ் குரூப் கற்றுக்கொடுத்தது அந்த எட்டு வயதிலும் திமிரும், ஆணவமும் ஒன்று சேர்ந்த சிறுமியாகத்தான் திகழ்ந்தாள்.

“அம்மா இந்த குட்டி பார்பி பொம்மை ரொம்ப அழகா இருக்கு” என்றவாறு வந்த தனது ஐந்து வயதான குழந்தையை திரும்பிப் பார்த்த பாண்டியம்மா

“எங்க இருந்து அத எடுத்துட்டு வந்த?” கையில் வேலை இருந்தாலும் கண்களில் கலவரம்தான் மிஞ்சி இருந்தது.

“ஸ்டோர் ரூம்ல கெடந்ததுமா?”

நிலா தூக்கிப்போட்டது என்றதும் “அப்படியா செல்லம் அப்போ வெளிய போய் விளையாடு”

பாண்டியம்மா நிலாவின் வீட்டின் சமையல்கார அம்மாதான். கணவன் தோட்டக்காரனாக இருப்பதால் செர்வண்ட் கொட்டேஜ் கொடுத்து தங்கவைத்திருந்தார் ஈஸ்வரன். பாவம் பாண்டியம்மா அறியவில்லை. தனது மகள் சொன்ன சிறிய பொய்யால் தனது வேலையும் போய் ரணகளம்! ஆகப்போவதை.

ஸ்விமிங் பிரெக்டிக்ஸ் ரத்து ஆனதால் நேரங்காலத்தோடு வீடு வந்தாள் நிலா. தந்தை இந்நேரத்தில் கம்பனியில் இருக்க, அன்னை லேடிஸ் கிளப்பில் இருப்பாள் என்று தெரியும்.

யாரும் சொல்லாமல் வேலையாட்களின் உதவியோடு தன்வேலைகளை செய்துகொள்ள பழகி இருந்த நிலா வீட்டுக்கு வரும் பொழுதே! பாண்டியம்மாவின் மகள் சீதா அவளுடைய பேவரிட் பார்பி பொம்மையை விளையாடியவாறு தோட்டத்தில் அமர்ந்திருப்பது கண்ணில் பட சுறுசுறு என கோபம் ஏற புத்தகப்பையை தூக்கி எறிந்தவள் வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக தந்தையை அழைத்தாள். 

“டேட் இப்போ நீங்க வீட்டுக்கு வரலைனா மாடில இருந்து குதிச்சிடுவேன்” என்று மிரட்ட அடுத்த கணம் ஈஸ்வரன் அவள் முன்னாடி இருந்தார்.

“வாட் ஹப்பண்ட நிலா” மகளின் கோப முகம் கண்டு தந்தை கேக்க

“இந்த வீட்டுல என்னென்னமோ! நடக்குது. நாம இல்லனா… வீட்டு வேலைக்காரங்களுக்கு குளிர்விட்டு போகுது. வீட்டு சொந்தகாரங்க போலவே! நடந்துக்கிறாங்க. நா இல்லாத நேரம் என் ரூமுக்கு போய் அந்த வேலைக்கார அம்மாவோட பொண்ணு என் பேவரிட் பொம்மையை எடுத்துக்கொண்டு போய் விளையாடுறா? அவ்வளவு காஸ்டலியான பொம்மய நீங்க வாங்கி கொடுத்தது நான் மட்டும் விளையாடவா? இல்ல அந்த வேலைக்கார அம்மாவோட பொண்ணும் சேர்ந்து விளையாடவா?” என்று கத்த அத்தனை வேலைக்காரர்களும் அங்கு கூடி நின்றிருந்தனர்.

“என்ன நடக்குது இந்த வீட்டுல? என் பொண்ணு சொல்லுறது உண்மையா?” ஈஸ்வரனின் குரல் ஓங்கி ஒலிக்க தோட்டக்காரன் சிவம் அஞ்சியவாறே “ஐயா” என்று அவர் முன் வந்து நின்றிருந்தான்.

“இல்ல ஐயா..  அது வந்து ஸ்டோர் ரூம்ல இருந்துதான் எடுத்துட்டு வந்தா…” விளையாட்டு பொருளின் மீதிருந்த ஆசையால் மகள் பொய் சொல்லி இருப்பாள் என்று அறியாத பாண்டியம்மா மகளுக்காக பேச சீதா அன்னையை பயப்பார்வை பார்கலானாள்.  

“ஆமாங்க ஐயா… நானும் கேட்டேன் ஸ்டோர் ரூம்ல இருந்துதான் எடுத்ததாக சொன்னா” சிவமும் தனது செல்ல மகளை நம்பி சொல்ல   

“அவ கைல இருக்குற புத்தம் புதிய பொம்மை உனக்கு ஸ்டோர் ரூம்ல இருக்குற பழைய பொம்மை போல இருக்கா?” பாண்டியம்மாவை ஒருமையில் பேசிய நிலா “பொண்ணு மட்டும் பொய் சொல்லுதா? இல்ல பேரண்ட்சும் பொய் சொல்லுறாங்களானு தெரியல டேட். பொய் மட்டுமா? அடிக்கடி திருட்டும் நடக்குது போல” என்றாள்.

“ஐயோ… ஐயா… திருடுறதெல்லாம் எங்க பரம்பரைக்கே! பழக்கமில்லைங்க” சிவம் கதற 

ஒரு சின்ன பெண்ணிடம் இவ்வாறு தாழ்ந்து போக வேண்டிய தன் நிலையை நினைத்தது கண்களில் நீர் நிறைத்தவாறு “சொல்லு சீதாமா? ஸ்டோர் ரூம்ல இருந்து தானே! எடுத்த” என்று மகளிடம் தன்மையாக கேக்க

பார்பி பொம்மையை இறுக கட்டிக்கொண்டு அழுதவாறே சீதா நிலாவின் அறையிலிருந்து எடுத்தாள் என்றதும் பாண்டியம்மா சீதாவை வெளுத்து வாங்கலானாள்.

அத்தனை அடிகளை வாங்கியும் சீதா பார்பி பொம்மையை விடவில்லை என்பதை குரூரமாக பார்த்திருந்த நிலா ஈஸ்வரிடம் திரும்பி “ரிடிக்கியுளஸ் டேட் ஸ்டோர் ரூம்ல இருந்தா எங்க கிட்ட கேக்காம எடுத்துக்கிட்டு போவாங்களா?” என்று ஈஸ்வரனை ஏற்றி விட ஈஸ்வரனின் கோபம் பன்மடங்காகியது.

“உங்கள நம்பி வீட்டை பொறுப்புல விட்டுட்டு போனா இதைத்தான் பண்ணுவீங்களா? இன்னைல இருந்து உனக்கும் உன் புருஷனுக்கும் இங்க வேல கிடையாது நீ போகலாம்” என்று சொல்ல பாண்டியம்மா கதறி அழ

“ஒன்னு மோர் திங் டேட். இந்த குட்டி பிசாசு என் ரூம்ல என்னோட எந்த டாயிஸ எல்லாம் விளையாடினானு தெரியல. அதையெல்லாம் இனிமேல் என்னால தொட முடியாது. அதெல்லாம் இவங்க ரெண்டு கையாலையும் எரிச்சிட்டு போக சொல்லுங்க” என்றதும் மகளின் வாக்கை நிறை வெற்றி இருந்தார் ஈஸ்வரன்.

பாண்டியம்மா இயலாமையால் கதற, தனக்கு சொந்தமே! இல்லாத விளையாட்டு பொருட்கள் எரிவதைக் கண்டு கதறி அழுதாள் சீதா. அவர்கள் அழுவதை அவர்களுக்கு முன்னால் ஒரு இருக்கையை போட்டு அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்திருந்தாள் நிலா.

புது யூனிபார்மில் முகத்தில் சந்தோசம் மட்டும் நிலைத்தவனாக வாணன் அந்த பாடசாலையினுள் காலடி எடுத்து வைக்க, வாகனங்கள் “சர், சர்..” என்று அவனை கடந்து போய்க் கொண்டே இருந்தது. வரிசையாக சென்று நிறுத்த வண்டிகளிலிருந்து மாணவர்கள் இறங்குவதும், பின் வண்டிகள் நகர்வதும் ட்ரைன் போல் தொடர பாடசாலை வளாகமே! வித்தியாசமான காட்ச்சியாக காணப்பட்டது.

உள்ளே! நடந்து வந்துகொண்டிருந்த வாணனை கடந்து சென்றது நிலாவின் வண்டி. நிலா இறங்கி புத்தகப்பையை சுமக்க முடியாமல் சிரமப் பட ஓடி வந்த வாணன்

“ஹேய் குட்டி பாப்பா கொண்டு வா நான் தூக்கிக் கொண்டு வாரேன்” என்றவன் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் முன்னாடி நடக்க தோளை குலுக்கியவள் அவனை தாண்டி நடந்தாள்.

அவள் வகுப்பறை வந்ததும் “திஸ் ஈஸ் மை க்ளாஸ் ரூம்” என்று சொல்ல வாணன் பைய அவள் மேசையின் மீது வைக்க நன்றி கூட சொல்லாது அமர்ந்து கொண்டாள் நிலா.

புன்னகைத்த வாணன் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இடைவேளையின் பொழுது நிலா யாதவ் குரூப்போடு அமர்ந்திருக்க வாணன் நிலாவைக் கண்டு வந்து பேச

“யாரு நிலா இந்த கோமாளி” என்று வேண்டுமென்றே வாணனின் வகுப்பில் படிக்கும் சதீஷ் கேக்க அனைவரும் சிரிக்க கோபத்தில் சிவந்தான் வாணன். வாணன் வகுப்பு வந்தது முதல் சதீஷ் வாணனிடம் வம்பு வளர்த்துக்கொண்டுதான் இருந்தான். 

“காலைல என் பைய தூக்கிட்டு வந்த செர்வாண்ட். காசு கொடுக்க மறந்துட்டேன். அதான் வந்திருப்பான். யாதவ் ஒரு பத்துரூபா இருந்தா கொடுக்குறியா? என் கிட்ட சில்லறை இல்ல” என்று நிலா பேச அதிர்ந்தான் வாணன்.

அவன் செய்த உதவியை கொச்சை படுத்துவது போல் ஒரு குட்டிக் குழந்தை பேசுவதா? ஏன் பேசுகிறாள்? எதற்காக? யார் இவளுக்கு இவ்வாறெல்லாம் பேச கற்றுக்கொடுத்தார்கள்? வாணனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நிலாவின் மேல் கோபம் வரவில்லை. அறியாமையில் பேசுவதாக எண்ணினான்.

நரேன் பத்து ரூபாயை வாணனின் முகத்தில் விட்டெறிய அனைவரும் சிரிக்க கோபமும், அதிர்ச்சியும் ஒன்று சேர வாணன் அந்த இடத்தை விட்டு கிளம்ப, வணனனை சூழ்ந்துகொண்டு சில ஸ்கொலசிப் பசங்க.

“என்ன ஸ்கூலுக்கு புதுசா? அவனுங்க கிட்ட போய் பேசிகிட்டு இருக்க? செமயா நோஸ் கட் வாங்கிட்டியா?” ஆளாளுக்கு கிண்டலும், இயலாமையும் வெடிக்க கேள்விகளையும் தொடுத்து  நடப்பதை வாணனுக்கு புரிய வைக்கலாயினர். வணனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

“ஏன் இப்படி பண்ணுறாங்க?”

“எல்லாம் பணத்திமிர்த்தான் தம்பி.. நாம படிக்க வந்திருக்கோம். முடிஞ்ச அளவு விலகி இருந்து. வந்த வேலைய பார்த்துட்டு போவோம்” என்று யாதவின் வகுப்பில் படிக்கும் அர்ச்சனா சொல்ல வாணன் புரிந்துகொண்டதாக தலையை ஆட்டுவித்திருந்தான்.

ஆனால் விதி யாரை விட்டது. நிலா என்பவளாத்தான் வாணனுக்கு பிரச்சினைகள் காத்திருக்கும் எனும் பொழுது. யாரால் தடுக்க முடியும்.

“கிரேட் நிலா சொல்லி கொடுத்ததை அப்படியே! பேசிட்ட. ஆமா அவன் உன் பைய தூக்கிட்டு போனப்போ ஏன் நீ ஒண்ணுமே! சொல்லல” யாதவ் கேக்க

“நீதானே! யாதவ் புதுசா வந்த பசங்க எல்லார் போட்டோவையும் எல்லாருக்கும் காட்டின. அதான் நிலா நியாபகத்துல வச்சிருந்திருப்பா… இல்லையா நிலா” என்று ஷீலா சொல்ல

“எஸ். அந்த சிவர்{Sewer } பசங்க மூஞ்சியெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு” முங்கத்தை சுளித்தாள் குட்டி நிலா.

ஆனால் அத்தோடு முடியவில்லை. வாணன் போன்று ஸ்கொலசிப் மூலம் நடுவில் வந்த மாணவர்கள் எல்லாம் குறிவைக்கப்பட்டனர்.

அவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே! சென்றால் அவர்களின் புத்தகங்கள் கிழிக்கப்பட்டிருந்தனர். பீ.டி வகுப்புக்கு அல்லது, கராத்தே வகுப்பு சென்றால் யூனிபார்மில் இங்க ஊற்றப்பட்டிருந்தது.

இவ்வாறு யாதவ் குரூப்பின் சில்மிஷங்கள் தொடர்ந்துகொண்டே! இருக்க, பொறுமையை இழந்த வாணன் அதிபரிடம் முறையிடலானான். யார் செய்வது அவனுக்கு தெரியும் என்பதையும் வேறு கூறி யாதவ் குரூப்பை மாட்டியும் விட்டிருக்க, அவன் நிலாவின் பெயரை மட்டும் சொல்லவில்லை. பணக்கார வீட்டு பசங்களை வார்னிங்க்கோடு அனுப்பி வைத்திருந்தார் அதிபர்.

அது அவர்களை மேலும் தூண்டி விட அவர்களின் மொத்த பார்வையும் வாணன் என்றாகிக் போக வாணனின் மீது முட்டை தாக்குதலும் நடத்தப்பட்டது. முதல் அடியே! நிலாவிடமிருந்து வந்திருந்தது.

“எதோ குழந்தை என்று கண்டுகொள்ளாமல் இருந்தால் சரியான குட்டிப் பிசாசு” என்று முகம் சுளித்த வாணன் அன்பாக பார்த்த நிலாவை முதன் முறையாக வெறுப்பாக பார்கலானான்.   

Advertisement