Advertisement

அத்தியாயம் 3
“ஐயோ அம்மா வலிக்குது. துகிலா என்ன விட சொல்லு டா… என்ன கொல்ல பாக்குறாங்கடா.. அடிக்க வேணாம்னு சொல்லு டா” காலில் கட்டி இருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டு அந்த மனநல மருத்துமனையின் வார்டுக்குள் சுசிலா கத்திக்கொண்டிருக்க யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
“நேத்துல இருந்து இந்த அம்மா கத்திக்கிட்டு இருக்கு” ஒரு தாதி சொல்ல
“அவங்க பையன் ரெண்டு நாளா வரல. அதான் கத்துது. டாக்டர் கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு போன் பண்ணி சொல்லி இருப்பாரு இந்நேரத்துக்கு வந்துடுவாரு” என்று இரண்டு தாதிகளும் பேசிக்கொண்டு இருக்கும் வேளை வாணனின் வண்டி புயல் போல் அந்த மனநல மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தது. 
“அம்மாக்கு என்ன ஆச்சு…” பதறியவாறே வேக எட்டுக்களை எடுத்து வைத்தவன் கத்தியவாறே வர
“நீங்க அவங்க கிட்ட பேசுங்க சார்” என்ற டாக்டர் சுசிலா இருந்த அறைக்குள் வாணனை அனுப்பி வைத்தார்.
உள்ளே சென்ற வாணன் கண்களில் நீர் நிறைத்து “அம்மா” என்று அழைத்தவாறு சுசீலாவை கட்டிக்கொள்ள
“துகிலா.. வந்துட்டியா? வந்துட்டியா? துகிலா.. சாப்பிட்டியா? எனக்கு ரொம்ப பசிக்குது டா.. என்ன அடிக்கிறாங்க டா.. அடிக்க வேணாம்னு சொல்லு. ரொம்ப வலிக்குது” உளறியவாறு அவனிடம் கெஞ்ச உடைந்து அழலானான் வாணன்.
“என்ன மன்னிச்சிடுமா.. என்ன மன்னிச்சுடு. நேத்து உன்ன பார்க்க வர முடியல. நீ இப்படி ஆகுறதுக்கு யார் காரணமோ! அவளை பார்த்துட்டேன். அவ வாழ்க்கையை என் கையாள நாசமாகி அவளுக்கும் இதே! நிலைமையை கொடுக்கணும்” கையை மடக்கி கண்கள் சிவக்க கோபமாக பேச
“அழகா இருக்க டா துகிலா” சுசிலா மகனின் கன்னம் தடவி “சாப்டியா? நான் ஊட்டி விடட்டுமா?” என்று கேக்க கதறி அழலானான் வாணன்.
“ஏன் மா நீ இப்படி இருக்க? குணமாகி வாம்மா… வந்து பாருமா.. உன் பையன் இப்போ பெரிய பணக்காரன் ஆகிட்டேன்மா.. பெரிய வீடு. காரு. எல்லாம் இருக்குமா…. நீ ராணி மாதிரி இருக்கலாம்மா.. இங்க இருக்க வேணாம்மா… என் கூட வந்துடு மா… ப்ளீஸ் மா. அவ வந்துட்டாம்மா… எங்க வாழ்க்கைக்குள்ள திரும்ப வந்துட்டா… நான் தேடிப்போகாமலையே! என்ன தேடி வந்துட்டா. நீ கும்பிட்ட கடவுள் நம்மள கைவிடலை. அன்னக்கி நீ வேண்டிகிட்டது பலிக்க போகுது. அவளை அணுஅணுவா சித்தரவதை செய்யணும். அப்போதான் என் மனசு ஆறும்”
கண்களை துடைத்துக் கொண்டவன் அன்னையை குளிப்பாட்டி தலை துவட்டி தாதி துணிகளை அணிவித்த பின் சோறூட்டி அன்னை அவனுக்காக பாடும் தாலாட்டை பாடிய பின்தான் தூங்கலானாள் சுசிலா. 
டாக்டரை சந்தித்த வாணன் “ஏன் டாக்டர் நான் என் அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு போய் பார்த்துக்க முடியாதா?”
“இல்ல மிஸ்டர் வாணன். உங்க அம்மா எப்போ வலயன்ட்டா பிகேவ் பண்ணுவாங்கனு தெரியாது அப்போ அவங்க ஹாஸ்பிடல்லதான் இருக்கணும். சில நேரம் இன்ஜெக்சன் போட்டா அமைதியா தூங்கிடுறாங்க. சில நேரம் ஷாக் கொடுக்க வேண்டி இருக்கு. “
கண்கள் கலங்கியவாறே “நான் அவங்க கூடவே! இருந்தா அவங்க குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம்தானே!”
“வாய்ப்பிருக்கு. ஆனாலும் உங்களால இருபத்தி நாலு மணித்தியாலமும் உங்க அம்மா கூட இருக்க முடியுமா? அதுவும் அவங்க இந்த நிலைமைக்கு ஆளானவங்கள சந்திச்சா அவங்க நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பிருக்கு. சில பேஷன்ட் வீட்டு சூழ்நிலைல இருந்தா குணமாவங்க. உங்க அம்மா வீட்டுக்கு போனாதான் அதிகமா வயலண்ட் ஆகுறாங்க அந்த காரணம் எனக்கு இன்னும் புரியல. அதனாலதான் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போக வேணாம்னு சொல்லுறேன். அது தெரியாம அவங்களுக்கு முறையான ட்ரீட்மெண்ட் கொடுக்கவும் முடியல. அவங்களோட ப்ளஸ்ஸே நீங்கதான் மிஸ்டர் வாணன். அவங்களுக்கு உங்கள மட்டும்தான் நியாபகம் இருக்கு. உங்கள ஒருநாள் பார்கலைனாலும் உங்களுக்கு ஏதாவது ஆகிருச்சோன்னு தான் தனக்கு ஆனதா கத்தி கூப்பாடு போடுறாங்க. நீங்க தினமும் வந்து பாருங்க” டாக்டர் தெளிவாக எடுத்து கூற
“பார்த்துட்டு தானே! இருக்கேன் பதினாலு வருஷமா பார்த்துகிட்டு மட்டும்தானே! இருக்கேன்” வாணன் கவலையாக அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
மெதுவாக கண்விழித்தாள் நிலா. சூரியன் தன் கதிர்களை நன்றாக பரப்பி ஜன்னலினூடாக அறைக்குள் எட்டிப்பார்த்திருக்க, கட்டிலை விட்டு எழுந்துகொள்ளவே! போரடித்தது. எத்தனை வருடங்களுக்குப்பின் இவ்வாறு எந்த பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கி இருக்கிறாள். எல்லாம் வாணன் அவள் வாழ்க்கையில் வந்த மாறுதலால் தான்.
நேற்று நகைக்கடையிலிருந்து நேராக வந்தது இந்த குடிலுக்கு. ஆம் வாணனுக்கும், அவளுக்கும் திருமணம் நடந்த வீட்டுக்கு வாணன் வண்டியை செலுத்த சொல்லவில்லை. வேறு எங்கோதான் செலுத்த சொன்னான்.
சென்னையில் இப்படி ஒரு இடமா? என்று வியக்க வைக்கும் அளவுக்கு நகரத்தை விட்டு கொஞ்சம் தள்ளி மேட்டில் வண்டி ஏறி சென்று நின்றதும் சுற்றிலும் இடுப்பளவு பூச்செடிகளோடு பாதை சென்று முடிவடைய வட்ட வடிவிலான மூன்று குடில். சுற்றியும் தோட்டம். வேறு வீடுகளுமில்லை.
மூன்று குடிலுக்கு நடுவே! கல்லாலான ஒரு மேசையும் நான்கு மரக்கட்டைகளை போட்டு இருக்கைகளாக அமைக்கப்பட்டிருந்த அழகு கண்ணை கவர்ந்தது.
“என்ன இது ஹனிமூன் ரிசார்ட் மாதிரி இருக்கு” என்று நிலா யோசிக்கும்வேளை 
“ஜெகன் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் எல்லாம் வந்தாச்சுதானே!” என்று வாணன் கேக்க
“எஸ் சார்” என்றான் ஜெகன்.
“என்னது வீடா? நாம இங்கதான் தங்க போறோமா?” ஆச்சரியமாக கேட்டாள் நிலா.
“ஆமா வா உள்ள போய் பார்க்கலாம்” என்றவன் ஒரு குடிலுக்கு அழைத்து செல்ல அது சமையலறையும் சாப்பாட்டறையுமாக இருந்தது. சமைக்கும் அடுப்பு முதல் பண்ட பாத்திரங்கள் அனைத்தும் எல்லாம் மட்பாண்டக்களாக இருக்க தட்டுகளும், குவளைகளும் கூட மண்ணால் செய்யப்பட்டதாகவே! இருந்ததன. மேசை கூட எந்த வேலைப்பாடும் இல்லாது பழையது போல்தான் இருந்தது. ரொம்பவும் நேர்த்தியாக எல்லாம் அடுக்கப்பட்டிருந்ததோடு. சுவரில் வெள்ளை ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. குளிர்சாதனப் பெட்டியுமில்லை. எந்தவித அதிநவீன உபகாரனனங்களுமில்லை. கூரை கூட ஓட்டு கூரைதான்.       
“ரொம்பவே! அழகாக இருக்கு. சுத்தமாக” நிலா உணர்ந்து சொல்ல
“இன்னைல இருந்து இது உன் டிபார்ட்மென்ட் நிலா. எல்லாரும் வேல செஞ்சி ரெஸ்ட் எடுக்க இந்த மாதிரி இடத்துக்கு வருவாங்க நான் உன் கூட வாழ இந்த இடத்தை வாங்கி இருக்கேன். எப்படி இருக்கு?”
“என் கூட வாழவா?” ஆச்சரியமாக நிலா இமைகளை விரிக்க  
அவள் கையை தன் கையேடு கோர்த்துக்கொண்டவன் “வா என்று அழைத்துக்கொண்டு “அது என் ஆபீஸ் ரூம்” என்று அந்த குடிலுக்குள் அவளை அழைத்து செல்லாது மூன்றாவதாக இருந்த குடிலுக்கு அழைத்து சென்றான்.
“இது நம்ம பெட் ரூம். எப்படி இருக்கு?” என்றவன் அவள் முகத்தை பார்த்திருக்க
இருவர் தூங்கக் கூடிய சாதாரண ஒரு கட்டில், கண்ணாடி பொருத்திய மரஅலுமாரி, இரண்டு இருக்கைகள், ஒரு துணி ஏந்தும் ரேக் தவிர வேற எந்த பொருட்களும் அந்த அறையில் இல்லை.
“ரொம்ப நல்லா இருக்கு” என்றவளுக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
“வெளியேதான் குளியலறை, கழிவறை எல்லாம் இருக்கு” என்றவன் “நிலா உன்னால டின்னர் ஏற்பாடு செய்ய முடியுமா? இல்ல வெளிய ஆடர் பண்ணிக்கலாமா? ஜெகன் போய் வாங்கிட்டு வர லேட் ஆகும். ரொம்ப தூரம் வேற போகனுமில்லையா. வந்துட்டு வண்டிய விட்டுட்டு அவன் வீட்டுக்கு வேற போகணும். காலைல ஆபீஸ் வேற வரணும். பாவம் அவன இன்னக்கி ரொம்ப வேல வாங்கிட்டேன்” என்றவன் அவள் பதிலை ஆர்வமாக எதிர்பார்க்க
“நானே! சமைச்சிடுறேன்” என்றவள் துணி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வாணன் குடிலை விட்டு வெளியேறி அவனுடைய அறைக்கு வந்தான்.
வாணனின் காரியாலய அறையில் எல்லா வசதிகளும் இருந்தன. டீவி, நெட் வசதி. கட்டில், இருக்கையோடு ஒரு மேசை கூடவே! ஒரு மினி குளியலறை அதுவும் கண்ணாடியிலான தடுப்பாலான அறை. அது காரியாலய அறையே! இல்லை. எல்லா வசதிகளையும் கொண்ட படுக்கையறை.
அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவனுக்கு நிலா தான் சமையல் செய்கிறேன் என்று சொன்னது கொஞ்சம் ஆச்சரியம்தான். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. காலையிலிருந்து ஜவுளி வாங்கியது நகைக் கடைக்கு சென்றது இங்கு வருவதற்காக ஒரு மணித்தியாலம் பயணம் செய்தது என்று அலுப்பாக இருக்க, முடியாது என்று சொல்வாள் என்றுதான் எதிர் பார்த்தான். ஆனால் அவள் கொஞ்சமும் சோர்வாகாமல் “சரி” என்று சொன்னது வாணனின் முதல் வெற்றி என்று எண்ணினான்.
அதீ நவீன சமையலறை உபகாரணங்களோடு கூடிய சமையலறையை நிறுவக் கூடிய வசதி இருந்தும் எந்த ஒரு மின்சாதன பொருட்களும் இல்லாமல் ஒரு சமையலறையை நிலாவுக்காக வேண்டியே! இங்கு கட்டி வைத்தது போல் அமைந்தது வாணனின் முதல் வெற்றி.
என்ன அடுப்பு மட்டும் எரிவாயு அடுப்பு அதையும் விறகடுப்பாக வைத்திருக்க வேண்டும். சமையலறை புகையால் கருகி விடும் என்று வைக்கவில்லை. வைத்திருந்தாள் நிலா அவஸ்தை படுவதை பார்த்து இன்னும் கொஞ்சம் குளிர் காய்ந்திருக்கலாம்.
வேலையாட்களோடு வந்து தங்குபவர்களுக்காக கட்டப்பட்டதுதான் மூன்றாவது குடில். அவளுக்கு கொடுக்கப் பட்ட குடில் வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் குடில். சமையலறை அவ்வாறு இருக்க, அறை இவ்வாறு தானே! இருக்கும் என்று நிலா எண்ணியதால் பெரிதாக சிந்திக்கவில்லை. வாணன்தான் அடுத்த குடில் அவனது காரியாலய அறை என்று கூறினானே!
வாங்கிய துணிமணிகளை எல்லாம் ஜெகன் கொண்டு வந்து வைத்ததில், வெளியே இருந்த குளியலறையில் ஒரு குளியலை போட்டு விட்டு சுடிதாருக்கு மாறிக்கொண்ட நிலா சமயலறைக்குள் நுழைந்திருந்தாள்.
ஆசிரமத்தில் இருந்த நாட்களில் சமையலை கற்றுக்கொண்டது அவளுக்கு கைகொடுத்திருக்க, எந்த சிரமமுமில்லாது சமைக்க ஆரம்பித்தாள். என்ன ஒன்று எந்த பொருள் எங்கே! இருக்கிறது என்று தேடி எடுக்கத்தான் கொஞ்சம் நேரத்தை செலவு செய்ய வேண்டி இருந்தது. மத்தபடி சமையல் செய்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
தண்ணீர் கூட வெளியே இருந்தான் பிடித்து வர வேண்டி இருந்தது. அதுவும் மலையிலிருந்து வரும்  ஊற்றிலிருந்து குழாய் பொருத்தி இந்த குடிலுக்கு திருப்பி இருந்தனர். சுத்தமான நீர்.  
எத்தனை நாளைக்குத்தான் ஹோட்டலில் சாப்பிடுவது என்று தந்தையோடு இருக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சமையலை கற்றுக்கொண்டிருந்தவள்தான். ஆசிரமத்தில் அவ்வளவு பேருக்கும் சமைக்க காலையிலையே! ஒருவர் மிளகாயை அரைத்து வைப்பார். இன்னொருவர் மஞ்சளை இன்னொருவர் மல்லி, இன்னொருவர் சீரகம், அப்படி செய்யும் பொழுது நிலாவும் அம்மியில் அரைக்க கற்றுக்கொண்டிருக்கின்றாள். ஒரு நாளைக்கு தேவையானதை அரைத்து வைக்க வேண்டியதால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை செய்வார்கள். இருவர் அல்லது மூன்று பேர் தேங்காய் துருவ சிலர் காய்கறிகளை வெட்டிக் கொடுப்பார்கள்.
மின்சாதன பொருட்களுமில்லை. எரிவாயு அடுப்புமில்லை. விறகடுப்புதான் அண்டாவில்தான் சமைப்பார்கள். அதுவும் எல்லா மரக்கறிகளை போட்டு ஒரு சாம்பார் பண்ணுவதுதான் லேசான சாப்பாடு. சில நேரம்தான் கூட்டு பொரியல் என்று சமைப்பார்கள். சில நேரம் வெளியிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இங்கு இரண்டு பேருக்கு சமைக்க வேண்டும் அதுவும் ஏறி வாயு அடுப்பு மூன்று அடுப்பு இருக்கும் பொழுது என்ன கவலை. சந்தோசமாக கூட்டு பொரியல் என்று தடல் புடலாக விருந்தே! செய்திருந்தாள் நிலா. நிலாவுக்கு தண்டனை என்று வாணன் நினைக்க, அது அவளுக்கு பழக்கப்பட்ட வேலை என்று அவனுக்குத்தான் தெரியவில்லை.
எல்லாம் தயார் செய்து சமயலறையையும் சுத்தம் செய்தவள் தனக்கே! தனக்கான சமையலறை நினைத்து, பூரித்து சந்தோசப்பட்டுக்கொண்டாள்.
வாணன் எத்தனை மணிக்கு சாப்பிடுவானோ! அழைத்துப் பார்க்கலாம் என்று அவனது குடிலின் பக்கம் செல்ல அவனே! கதவை திறந்துக்கொண்டு வெளியே! வந்தான்.
“ஏதாவது வேணுமா? நிலா” வாணன் நிலாவின் இடது கையை கோர்த்துக்கொள்ள
“சாப்பாடு ரெடி நீங்க இப்போ சாப்புடுறீங்களா? இல்ல லேட் ஆகுமா?” என்றவள் அவன் கையை இறுக பற்றிக்கொண்டாள்
கைக்கடிகாரத்தை பார்த்தவன் “மணி எட்டு தாண்டிருச்சு நிலா வா சாப்பிடலாம்” என்றவன் சமயலறைக்கு செல்ல நிலா அவனுக்கு பரிமாற வாணனும் நிலாவுக்கு பரிமாறினான்.
“நீங்க சாப்பிடுங்க நான் போட்டுக்கிறேன்”
“இவ்வளவு சிரமப்பட்டு சமைச்சிருக்க, இத கூட நான் செய்ய மாட்டேனா? எங்க ஆ காட்டு” முதல் வாயை அவளுக்கு ஊட்டி விட நிலாவும் இன்முகமாக பெற்றுக்கொண்டாள்.  
மாறி மாறி ஊட்டி விட்டுக்கொண்டு ஆதர்ச தம்பதியர்கள் போல் உணவை உண்டு முடித்து விட்டு இருவரும் சேர்ந்து எல்லாவற்றையும் அடுக்கி வைத்திருந்தனர்.
வெளியே வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு மரக்கட்டையிலான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு நிலாவையும் அவனருகில் அமர்த்திக் கொண்டான்.
வானத்தின் நிலாவும் மேகங்களின் நடுவே! தன்னை மறைத்தவாறு வாணனின் நிலாவை பார்த்து பரிதாபப் பட்டுக்கொண்டது. 
நிலா ரொம்பவே! சந்தோஷமான மனநிலையில் இருந்தாள். வாழ்வில் பட்ட துன்பமெல்லாம் கரைந்துப் போனதுபோல் உணரலானாள். வாணனிடம் “நீ என்னை காதலிக்கிறாயா?” என்று கேட்க எண்ணிய வேளை
“நிலா நீ வேலைல ஜோஇன் பண்ணுறியா? இல்ல இப்படியே! வீட்டை பாத்துகிட்டு இருக்கியா?”
திடிரென்று வாணன் கேட்டதில் என்ன பதில் சொல்வதென்று யோசித்தவள் அவன் ஆபீஸ் சென்றால் தான் இங்கு தனியாகத்தான் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அன்னையிடம் இருக்கலாமா? அல்லது வேலைக்கு செல்லலாமா? என்று யோசிக்க
“என்ன பிரச்சினை நிலா?” என்று அவள் கையை பிடித்துக்கொண்டான் வாணன்,
அந்த ஆறுதலான தீண்டலில் அவள் துன்பமெல்லாம் கரைந்தோடியிருக்க அவன் தோளில் சாய்ந்துகொண்டு அன்னை மருத்துவமனையில் இருப்பதாய் கூறியவள் என்ன செய்வது என்று அவனிடமே! கேட்கலானாள்.
“ம்ம்.. நீ வீட்டுல இருந்தா எனக்கு மூணு வேலையும் வீட்டு சாப்பாடு கிடைக்கும். மதியத்துக்கு சமைச்சி எடுத்துக்கிட்டு ஆபீஸ் வந்துடு. ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம். அப்பொறம் நீ கிளம்பி போய் உங்க அம்மாவை பாரு. நானும் என் வேலையெல்லாம் முடிச்சிகிட்டு உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன். ரெண்டு பேரும் சேர்ந்து இங்க வந்துடலாம். சரியா”
நொடியில் தீர்வு சொன்னவனை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமும் வைத்திருந்தாள் நிலா. தன்னையறியாமல் செய்துவிட்டதை உணர்ந்தவள் வெக்கப்பட்டவாறே சட்டென்று விலகி அறைக்குள் ஓட, ஓடும் அவளை குரூரமாக பார்த்து புன்னகைத்தான் வாணன்.
“அட இவள மடக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்னு நினச்சேன். இப்படி டக்குனு மடங்கிட்டா” என்றெண்ணியவாறே நிலாவின் அறையை நோக்கி நடந்தான் வாணன்.
அறைக்குள் ஓடி வந்த நிலாவின் சிறு இதயம் பந்தய குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் கம்பிகளை இறுக பற்றியவாறே வாணனை நினைத்து சிரித்தவள் வாணனின் அருகாமையில் அவள் தன்னையே இழப்பதை உணர தன் மனதை உணர்ந்துகொண்டாள்.
பார்த்த நொடியில் ஒருவனை பிடித்துப் போகுமா? அவள் படித்த கதைகளில் பார்த்திருக்கிறாள். கண்டதும் காதல்  கொள்கிறார்கள். ஒரே ஒரு முத்தத்தால் உயிர்த்தெழுகிறாள் தூங்கும் பேரழகி.
தான் சிறு வயதில் படித்தது போல் தன்னை தேடி ஒருவன் வந்து விட்டான். தன் கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள. தன் துன்பத்தை துடைத்தெறிய. தன் மீது காதல் கொண்டு தன்னையும் காதல் செய்ய தூண்டி காதல் கடலில் மூழ்க வைக்க என்று தான் சிறு வயதில் படித்த கதைகளோடு தன் வாழ்க்கையையும் ஒப்பு நோக்கினாள்.
தனக்குள் உண்டான காதலை போல் வாணனும் எல்லாவற்றையும் தனக்கா செய்வது காதலாலன்றி வேறில்லை என்று அந்த பேதை பெண் எண்ணலானாள்.
கதவு திறக்கும் சத்தத்தில் வருவது வாணன் என்று புரிந்தாலும் நிலா திரும்பி பார்க்கவில்லை. ஜன்னல் கம்பிகளை மேலும் இறுக பற்றிக்கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள்.
கதவை சாத்திய வாணன் வேக எட்டுக்களை எடுத்து வைத்து பின்னாலிருந்து நிலாவை அணைத்துக்கொண்டவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தம் வைக்க நிலாவின் உயிர்வரை சிலிர்த்தது.
வாணனின் உதடுகளோடு கைகளும் மாயாஜாலம் செய்ய நிலா வாணனுள் தொலைந்துகொண்டிருந்தாள். அவளை தன் புறம் திருப்பி அவள் முகம் பார்க்க சொக்கி நின்றவளை ஏளனமாக பார்த்தவன் நொடியில் தள்ளி விடவும், கன்னத்தில் அறையவும் எண்ணங்கள் மனதில் தோன்ற மனதை அடக்கியவன் அவள் இதழ்களை சிறை எடுத்திருந்தான்.
வாணனின் மனதில் இருந்த ரணத்துக்கு புயலாக அவளை கையாள துவண்டு போனாள் நிலா.
அவன் வேகத்துக்கு நிலாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீரும் பெருக்கெடுக்க வாய் விட்டே கதறிவிட்டாள்.
“என்ன ஆச்சு நிலா?”
“வலிக்குது” என்ன நினைப்பானோ! என்று தயங்கியவாறுதான் சொன்னாள்
“ஓஹ்.. சாரி நிலா உன்ன பார்த்ததும் ஐ குடுண்ட் கண்ட்ரோல் மைசெல்ப்” புன்னகைத்தவன் கொஞ்சமும் தயங்காமல் விட்ட  வேலையை தொடரலானான்.
நிலாவால் அவனை அந்த கணம் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. வெறுக்கவும் முடியவில்லை.
அவளை ஆண்டு அனுபவித்தவன் அவளை கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, நிலாதான் தூக்கம் வராமல் தவித்தாள்.
முதலிரவென்றால் எல்லா பெண்களுக்கும் ஒரு கனவிருக்கும் அது நிலாவுக்கும் இருந்தது. கதைகளில் வருவது போல் ஒருநாள் தன் வாழ்க்கை மாறும் தானும் ஒருநாள் நன்றாக வாழ்வேன் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். வாணன் அவள் வாழ்க்கையில் வந்ததும் அவனை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.
அவன் செய்கைகள் அனைத்தும் அவளை காதலிப்பதாக தோன்றினாலும் அவன் வாய் வாய்ர்த்தையாக அதை சொல்லவில்லை. அதற்குள் எல்லாம் நடந்தேறி விட்டிருந்தது.
“உன் அனுமதி இல்லாமல்தான் உன்னை அவன் தொட்டானா?” அவள் மனம் கேக்க
என் மனம் முழுக்க அவன் நிறைந்த பின் அனுமதி எதற்கு என்றாள் இவள்.  
“அவன் உன் அனுமதியை கேட்கவுமில்லை. உன் வலி கூட அவனுக்கு பொருட்டில்லை. சரியான சேடிஷ்” அவள் மனம் கூவ
“ஆசையாக வந்தவன் அப்படி நடந்து கொண்டதில் எந்த தவறுமில்லை. அவன் தவறானவனாக இருந்திருந்தால் என் பணத்தேவையை அறிந்த பின் திருமணம் செய்யாமல் விலைபேசி இருப்பான் அவன் அவ்வாறு செய்யவில்லை அவன் என்னை காதலிக்கிறான்” என்று மனதை அடக்கிய நிலா வாணனைக் கட்டிக்கொண்டு தூங்கியும் போனாள். ஆகா மொத்தத்தில் வாணனுக்கு சாதகமாகத்தான் சிந்திக்கலானாள் நிலா. கற்பனைக் கதைகளை படித்து வளர்ந்தவள் இலகுவாக வாணனின் வலையில் சிக்கி இருந்தாள்.
அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவனைக் காணாது அதற்குள் எழுந்து எங்கே சென்றான் என்று மணியை பார்க்க மணி பத்து எனக்காட்ட அடித்துப்பிடித்து எழுந்தாள்.
“ஆபீஸ் போய்ட்டானா? சாப்பிடாம போய்ட்டானா? ஐயோ.. மூணு வேலையும் என் கையாள சாப்பிடணும்னு சொன்னாரே!” கணவனுக்காக கவலையடைந்தவள் அவனை அழைக்க தன் அலைபோசியை தேட அது கையில் கிடைத்தால் தானே!
ஜன்னலினூடாக வந்த காற்றில் குவளைக்கு கீழிருந்த பேப்பர் சரசரக்க எடுத்து படிக்கலானாள்.
“குட் மோர்னிங் நிலா. நீ நல்லா தூங்கிட்டு இருந்ததால நான் அவசரமா கிளம்புறேன். சிம்பிளா பிரெட் சென்விச் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடு. முடிஞ்சா லன்ச் எடுத்துட்டு ஆபிஸ் வா. இல்லனா ஓகே” என்றிருக்க நிலாவுக்கு கணவனின் மேல் காதல் பெருகியது.  
வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த வாணனுக்கு மனம் எரிந்துக்கொண்டிருந்தது. அன்னையின் நிலையை காணும் பொழுதெல்லாம் நிலாவை தேட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் தோன்றும். நிலா இப்பொழுது கண்முன் நின்றிருந்தால் கழுத்தை நெரித்து கொன்றிருப்பானோ! அல்லது வெட்டி சாய்த்திருப்பானோ! அவ்வளவு கோபம் அவனுள் கனன்றது.
“எல்லாம் அவளால்தான். சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருந்த எங்க வாழ்க்கைல அவளாலதான் எல்லா பிரச்சினையும் வந்துச்சு” ஸ்டியரிங் வீலை ஓங்கி குத்தியவன் கோபத்தை வண்டியின் மீது காட்ட வீல் திசை மாறி எதிரே வந்த வண்டியின் மீது மோத பார்க்க வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் வாணன்.
“வீட்டுல சொல்லிட்டு வந்தியா?” என்று கத்தியவாறே அந்த வண்டிக்காரன் செல்ல
“ரோடு என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா” கோபத்தில் கத்தினான் துகிலவாணன் மௌரி.

Advertisement