Advertisement

Epilogue
“டேடி… இங்க பாருங்க என் குதிரைதான் வேகமாக போகுது” என்று கதிரவன் குதிரையில் வேகமாக வர, அவனை தாண்டி வந்திருந்தான் ஆதவன்.
“என்ன ராஜபரம்பரை நாம ஒரு குதிரைல கூட சவாரி செய்ய தெரியல” என்று நிலா கிண்டல் செய்திருக்க, வாணன் மானம் போச்சு… மரியாதை போச்சு என்று லேகாவிடம் புலம்பாத குறையாக குதிரை பண்ணை வைத்தது மட்டுமல்லாது அங்கு ஒரு வீட்டை கட்டி அவனது மகன்களுக்கு குதிரை ஓட்ட சின்ன வயதில்லையே! பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
கதிரவனுக்கு கருப்பு நிறம்தான் பிடிக்கும்  அவனிடம் ப்ளை எனும் மார்வாரிக் குதிரையும், ஆதவனிடம் அபீல் எனும் அராபிய வெள்ளைக் குதிரையும் உண்டு. பாடசாலை விடுமுறை நாட்களில் பண்ணை வீட்டுக்கு அனைவரும் வந்து விட குதிரையோடு நேரம் செலவிடுவதுதான் இருவரினதும் பொழுது போக்கு, யாருடைய குதிரை வேகம் அதிகம் என்று பரிசோதிப்பது தான் இருவருக்கிடையிலான போட்டியே!
“நான்தான் பர்ஸ்ட். என் அபீல் தான் என்றைக்குமே! வேகம் அதிகம்” என்று ஆதவன் பலிப்புக்காட்ட
“பாத்தீங்களா டேட் இவன் சீட் பண்ணுறான்” என்று கதிரவன் முறைக்க
“அவன் சீட் பண்ணல வெற்றி உனக்குன்னு கண் முன்னால் தெரியும் பொழுது உன் கவனம் சிதறுது. நீ அத என் கிட்ட பகிர்ந்துக்கணும்னு நினைத்து கத்தும் பொழுது ப்ளை பயந்துடுது. அதனோட வேகம் குறையுது. அப்படித்தானே!” என்று வாணன் பயிற்சியாளரை ஏறிட 
தலையசைத்து அவரும் வாணன் சொல்வதை ஒத்துக்கொள்ள தான் செய்யும் தவறு புரிந்தாலும் கதிரவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ப்ளை என்னோட குதிரை தானே! அது எதுக்கு என் குரலுக்கு பயப்படணும். அப்போ… கூட இன்னும் நாலஞ்சு குதிரைங்க ஓடினா அதுங்களோட சத்தத்துக்கு பயந்துடுமே! நீங்க சொல்லுறது ஒத்துக்குற மாதிரி இல்ல” தந்தை சொல்வதை ஒத்துக்கொள்ளாது அடம்பிடிக்க ஆரம்பித்தான் கதிரவன்.
“டேய் அது குட்டிக் குதிரை டா… நீயும் வீகெண்ட்ல இல்லனா ஸ்கூல் ஹாலிடேலதான் வர. அதுக்கு உன்னையே! இன்னும் பரிச்சயமில்ல. உன் குரலை எப்படித் தெரியும்” என்று வாணன் கடிய
கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டவன் “ஆமா உங்களுக்கு ஆதிஷ்த்தானே! பிடிக்கும் இந்த ஆதித் பிடிக்காதே! அதான் என்னென்னமோ! சொல்லுறீங்க, நான் கோபமா போறேன்” என்றவன் விறுவிறுவென கிளம்ப
எதுக்கு எதை முடிச்சு போட்டு பேசி கோபம் கொண்டு அடுத்து என்ன செய்ய விழைகிறான் என்று புரிய “டேய் டேய் நில்லு டா… போய் உங்க அம்மா கிட்ட பத்த வச்சிடாத அப்பொறம் அவ வேற வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்துடுவா” என்று வாணன் கத்த
விழுந்து விழுந்து சிரித்த ஆதவன் “இன்னைக்கி ஒரு சம்பவம் இருக்கு டேட் கெட் ரெடி” என்று விட்டு குதிரையில் பறக்க, வாணன் தலையில் கைவைத்து அமர்ந்துகொண்டான்.  
“டேடி தனியா இங்க என்ன பண்ணுறீங்க? அம்மா உங்கள வரவாம்” என்றவாறு வாணனின் ஒரே மகளான ஆறு வயதான வெண்ணிலா வர
“வாடா வாடா என் பட்டு குட்டி. உள்ள அம்மா கூட என்ன பண்ணுனீங்க?” என்று மகளை தூக்கி மடியில் வைத்துக்கொள்ள
“நானும் அம்மாவும் கேக் பேக் பண்ணிக்கிட்டு இருந்தோமே!” என்றவள் தந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு “எனக்கு எப்போ குதிரை ஓட்ட சொல்லி கொடுக்க போறீங்க?” என்று கிசுகிசுப்பாக கேக்க
“ஓஹ்.. லஞ்சம் கொடுத்துட்டுதான் மேடம் எதையும் கேப்பீங்களா?” என்று சிரித்தவன் “எட்டு வயசான உடனே! ஆரம்பிச்சிடலாம். உன் சைசுக்கு குதிரை கிடைக்கலையே!” என்று வருத்தமாக சொல்ல
“அதுனால என்ன டேட் என்னையும் கூட வச்சிக்கிட்டு நீங்க ஓட்டுங்க டேட்” என்று மகள் அழகாக ஐடியா கொடுக்க
“யாருமா.. உனக்கு வந்த ஐடியாவை கொடுத்தது” மகன்களோடுதான் வாணனும் குதிரை ஓட்ட பயிற்சி எடுக்க ஆரம்பித்திருந்தான். ஆறு வயதில் ஆரம்பித்து பத்து வயதாகும் பொழுதே! அவர்கள் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்க, வாணனுக்கு இன்னும் குதிரையின் மீது ஏறுவதற்கே! சற்று பயம் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவனது குதிரை நோய் வாய்ப்பட்டு இறந்து விட அவனது பயிற்சி தடை பட்டது. அடுத்து அவனுக்கு கிடைத்த அராபியன் கருப்புக் குதிரையோ! முரட்டுக்குதிரை பலதடவைகள் வாணனை கீழே தள்ளி இருக்க, பயிற்சியே! வேண்டாம் என்று இருக்கலானான்.
“அம்மா தான் டேட்” அரிசி பற்களை காட்டி தந்தையின் முகம் பார்த்து அழகாக சிரித்தாள் வெண்ணிலா.
“அதானே! பார்த்தேன் அந்த பாபுல் கிட்ட என்ன கோர்த்து விட்டு அது என்ன கீழ தள்ளி விடுறத பார்க்க உன் அம்மாக்கு அப்படி என்ன சந்தோஷமோ!” அலுத்துக்கொள்ள
“வெண்ணிலா…” என்று நிலா குரல் கொடுக்க
“ஐயோ டேட் வாங்க… அம்மா உங்கள கூட்டிட்டுதான் வர சொன்னாங்க” தந்தையின் கையை இழுத்துக்கொண்டு உள்ளே! நடந்தாள் மகள்.
சுசிலா பூஜையறையில் பகவத் கீதையோடு ஐக்கியமாகி இருக்க, லேகா எதோ ஒரு கோப்பை கையில் வைத்துக்கொண்டு அலைபேசியில் மூழ்கி இருந்தாள்.
“வாங்க சார் வாங்க? என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” வாணன் உள்ளே! வரும் பொழுதே! நிலா கைகளைக் கட்டிக்கொண்டு ஆரம்பிக்க
மனைவியை முறைத்தவன் கதிரவனின் தலையை தட்டி விட்டு விட்டு “ஏன் டா… உன் நல்லதுக்கு சொன்னதெல்லாம் இங்க வந்து உன் அம்மா கிட்ட பத்த வச்சிட்டியா?”
“எதுக்கு என் பையன இப்போ அடிக்கிறீங்க? நீ வாடா செல்லம், அவரு கெடக்குறாரு” என்று மகனை அணைத்துக்கொண்டு கணவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்க ஆரம்பித்திருந்தாள் நிலா.
“இரு ஆதவன் கிட்ட சொல்லுறேன். இவன் மட்டும்தான் உன் பையன்னு சொன்னேன்னு” வாணன் மிரட்ட நிலா கண்களாளேயே! கெஞ்ச ஆரம்பித்தாள்.
“என்னையே! மிரட்டுறியா? இரு டி உன்ன வச்சுகிறேன்”
“டேடி உக்காருங்க கேக் சாப்பிடலாம்” என்ற வெண்ணிலா அப்பத்தா… பாட்டிமா வாங்க கேக் சாப்பிடலாம் என்று சுசீலாவியும் லேகாவையும் அழைக்க, சிறிது நேரத்தில் அவர்களும் வந்து சேர, வேலையாள் குடிக்க, டீயும் கொண்டு வந்து வைத்திக்கும் பொழுது ஆதவனும் வந்து சேர்ந்தான்.
“வெண்ணிலா குட்டி கை பட்டதால கேக் நல்ல டேஸ்ட்டா இருக்கே!” பாட்டிகள் இருவரும் அவளை புகழ குட்டிப்பெண்ணுக்கு முகம் சிவந்து போனது.
கேக் சாப்பிடும் ஆராவரத்தில் கதிரவன் தனது கோபத்தை மறந்திருக்க, ஆதவனும் அவனை சீண்டவில்லை.
தேநீருக்கு பின் வாணனை தனியாக அழைத்த லேகா “என்ன வாணா பண்ணிக்கிட்டு இருக்க?  பத்து வருஷமாச்சு இன்னுமா? பாலாம்பிகை சித்தி குடும்பத்தை விடாம துரத்திக்கிட்டு இருக்க? போதும் டா விட்டுடு”
“நான் என்ன பண்ணேன்? நான் எதுவுமே! பண்ணல அத்த, அவங்க பண்ணதுக்குத்தான் மாறி மாறி அனுபவிச்சி கிட்டு இருக்காங்க” கையை கட்டிக்கொண்டு இதற்கும் எனக்கும் சம்மந்தமே! இல்லை என்பது போல் வாணன் பேச
“அது சரி ஈஸ்வர என்ன பண்ண?”
“நான் என்ன பண்ணேன்” மாட்டிக்கொண்ட முகபாவனை இருந்தாலும் பதில் சொல்ல விரும்பாதவனாக அமைதியாக,
“எனக்கும் ஈஸ்வர் மேல கோபம் இருக்கு வாணா… கொல்லுற அளவுக்கு கோபம் இருக்கு” லேகாவின் முகம் ஒருநொடி கோபத்தைக் காட்ட வாணனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஆனாலும் எனக்கு என் குடும்ப நிம்மதி முக்கியம்னுதான் நான் ஒதுங்கி நின்னேன். நீ எதுக்கு அவன் கூட எல்லாம் மோதுற?” கோபமாக மருமகனை முறைக்க,
“அவனெல்லாம் ஒரு ஆளு சரிக்கு சமமா மோதணுமா? பவானி அம்மா கழட்டி விட்டதும் அவனை விட ஏழு வயசு பெரிய பொம்பளைய பணத்துக்காக கல்யாணம் பண்ணி இருக்கான். அவங்க காசுல அவங்களுக்கு குடிக்கவும் கத்துக் கொடுத்து, கம்பனியையும் ஆட்ச்சி பண்ண ஆரம்பிச்சி இருக்கான். பாவம் அவனுக்கு தெரியல அந்தம்மாவோட ரெண்டு பசங்க பேர்ல அந்த அம்மாவோடு அப்பா ஏற்கனவே! சொத்தெல்லாம் எழுதிட்டாங்க, அந்த பசங்க வெளிநாட்டுல படிக்கிறாங்கனு. சரியான வயசுல பசங்க வந்ததும் ஆடி போய்ட்டான். ஆனாலும் குள்ளநரி குள்ள நரிதானே! கூடவே! ஒட்டிக்கிட்டு இருந்தான். என் கூட பிஸ்னஸ் பண்ணனும்னா முதல்ல இவன கழட்டி விடணும்னு ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டேன்” என்றவன் அதன் பிறகு ஈஸ்வர் செல்லும் இடமெல்லாம் ஆப்பு சொருகுவதை கூறாவிட்டாலும் லேகா அறியாமலில்லை.
“நீ பண்ணுறது உங்க அம்மாக்கும், என் பொண்ணுக்கும் தெரியாம இருக்கும்வரைக்கும்தான் தெரிஞ்சா என்னால உன்ன காப்பாத்த முடியாது” என்று வார்ன் பண்ண
“டோன்ட் ஒர்ரி அத்த. எங்கயும் எதுலயும் நான் நேரடியா இறங்கி செய்ய மாட்டேன். தேடினாலும் நான் சம்பந்த பட்டிருக்கிறது யாராலயும் கண்டுபிடிக்க முடியாது” என்ற வாணன் புன்னகை முகமாகவே! குழந்தைகளோடு ஐக்கியமானான்.
இரவின் தனிமையில் வாணன் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க, ‘என்ன புருஷா என்ன பலத்த யோசனையா இருக்கீங்க போல? அடுத்து வரும் நம்ம கல்யாண நாளுக்கு என்ன சப்ரைஸ் பண்ணலாம்னு திட்டம் தீட்டுறீங்களா?” என்றவாறே நிலா வந்தமர்ந்தாள்.
நிலாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு, அவர்களின் கல்யாண நாளுக்கும் வாணன் ஏதாவது புதிதாக செய்து அசத்த அதைத்தான் நிலா கேட்டிருந்தாள்.
“கல்யாணமாகி பதினோரு வருஷமாகப்போகுது இன்னமும் சப்ரைஸ் வேணும்னு எதிர் பாக்குற நீ என்ன குழந்தையா?” என்று கிண்டல் செய்தவாறே அவளை இழுத்து அணைத்துக்கொள்ள
“ஏன் குழந்தைகளுக்கு மட்டும்தான் ஆசையும்? எதிர்பார்ப்பும் இருக்குமா? எங்களுக்கும் இருக்கும். புருஷன் நமக்காக பண்ணுற ஒவ்வொண்ணையும் ரசிப்போம்” என்ற நிலா கன்னத்தில் முத்தம் வைக்க, வாணன் அவளை ரசிக்க ஆரம்பித்தான். 
“ஆமா எதுக்கு குழந்தைகளை கண்டிச்சா அவங்க பக்கம் பேசுற?” என்று மிரட்ட
“சின்ன பசங்க பா… வளர்ந்தா புரிஞ்சிப்பாங்க” என்று அவன் மீசையை பிடித்து இழுக்க  
வலித்தாலும் அவள் கையை எடுத்து விட்டவன் “தேங்க்ஸ் நிலா”
“எதுக்கு”
“எல்லாத்துக்கும்தான்.. என் லைப்ல வந்ததுக்கு.. நம்ம குழந்தைகளை தந்ததுக்கு அம்மாவையும் அத்தையையும் பாத்துகிறதுக்காக.. ஆ முக்கியமா என்ன பாத்துகிறதுக்கு” என்று விஷமமாகவே! சொல்ல
வாணன் சொல்வது புரிந்தாலும் பேச்சை மாற்றும் பொருட்டு “ஒன்னு சாரி சொல்லுறீங்க இல்லையா தேங்க்ஸ் சொல்லுறீங்க போங்க வாணன் எனக்கு தூக்கம் வருது” முகம் சிவந்தவள் அதை மறைக்க பெரும் பாடுபட்டவாறே அந்த இடத்திலிருந்து நழுவ பார்க்க, அவளை இழுத்தணைத்த வாணன் அவள் இதழில் கவி எழுத ஆரம்பித்திருந்தான்.

Advertisement