Advertisement

அத்தியாயம் 22
அறைக்குள் வந்து கதவை சாத்திய நிலா ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள். தான் வாணனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் இல்லாத இடம் வெறுமையாக தோன்றுகிறது. அவனை மனம் ரொம்பவும் எதிர்பார்க்கின்றது.
சுசிலாவின் மீதான பாசமும், தன் கூடப்பிறந்தவளின் மீதான அவனது கோபமும் கூட அவளுக்கு புரிகிறது. ஆனாலும் அவன் அவளுக்கு செய்தவைகளை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுசீலாவிடம் மனமுருகி அவன் மன்னிப்பு கேட்டது கூட நிலாவின் மனதை அசைத்துத்தான் இருந்தது. கலங்கும் கண்களை யாரும் அறியாமல் துடைத்தவள் அவனை காயப்படுத்த வேண்டியே! “நடிச்சது போதும்” என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். அவனை வெறுக்கவும் முடியவில்லை. ஒதுக்கவும் முடியவில்லை. ஏற்றுக்கொண்டு வாழவும் முடியவில்லை.
இப்படியே! வாழ்க்கையை கொண்டு செல்லவும் முடியாதே! ஒரு முடிவுக்கு வர வேண்டிய சூழ்நிலையில் இருந்தாள் நிலா. ஒன்று வாணனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மறந்த்து அவனோடு வாழ்க்கையை தொடர வேண்டும்.
வாணனை விட்டு விலகி வந்து விட வேண்டும் என்ற முடிவோடுதான் அவனை விட்டு அரண்மனைக்கு வந்தாள். ஆனால் அவளின் காதல் கொண்ட மனமோ! அவனை நொடி நேரமும் மறக்க விடாது சதா அவன் நினைப்பாகவே! இருக்க, அவன் வரவை கூட உணர்ந்துகொண்டாள்.
அவளால் வணனை மறக்க முடியாமல் திண்டாட அவனை கண்ட நொடி தனக்கானவன் பொய்த்து போன மொத்த கோபத்தையும் அவன் மீது காட்டலானாள். அதனால்தான் பெல்கனியிலிருந்து குதிக்கவும் சொன்னாள். வாணன் சுசீலாவிடம் உண்மையை கூறி மனமுருகி மன்னிப்பு கேட்டதை நடிப்பு என்று கூறியும் இருந்தாள். 
கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தவள் அறைக்குள் வந்து அழுது கரைய அவளை அழக் கூட விடாது அவள் பெற்றேடுத்த செல்வங்களில் ஒன்று அழ ஆரம்பித்திருக்க, வாணனின் நினைவுகளை ஒதுக்கி விட்டு குழந்தையின் பசியை போக்க ஆரம்பித்தாள் நிலா.  
இந்த பக்கம் லேகாவிடம் சுசிலா புலம்பிக்கொண்டிருந்தாள். “கோபத்துல இவன் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டானே! நிலா சின்ன வயசுல தெரியாம பண்ண தப்புனு மன்னிச்சி மறந்திருந்திருந்தா இந்த மாதிரியெல்லாம் நடந்திருக்காது இல்ல சந்த்ராமா?”
“அவன் கோபத்தை மட்டும் பார்க்காத சுசி உன் மேல வச்சிருந்த பாசத்தையும் பாரு. வழி கட்ட அண்ணனும் இல்ல. உனக்கும் இப்படி ஆகிருச்சு என்கிற கோபம் எல்லாம் அவனை இப்படி ஒரு முடிவெடுக்க தூண்டியிருக்கு. ஆனாலும் அவன் கெட்டவனில்லை. உன் வளர்ப்பு ஒன்னும் தப்பில்ல சுசி” என்று லேகா வாணன் செய்தவைகளை சுசீலாவுக்கு புரியவைக்க முயன்றாள்.
“எனக்கு என் மகனை பற்றி தெரியாதா? தப்பை உணர்ந்திராவிட்டால் கண்டிப்பாக அவனே! என்னிடம் கூறி இருக்க மாட்டான் சந்த்ராமா?” என்று வாணனை புரிந்துதான் வைத்திருப்பதாக அடுத்த கணம் சுசிலா கூற  
“ஓஹ்.. ஒஹ்… அப்போ மகனுக்கு செக் வைத்திருக்கியா?” என்று லேகா சிரிக்க
“நடந்தது நடந்து போச்சு… சந்த்ராமா.. எங்க நிலவும், துகிலனும் நிரந்தரமா பிரிஞ்சிடுவாங்களோனு எனக்கு பயம் வந்திருச்சு. அதனாலதான் நான் நிலா மன்னிக்கலானா நானும் மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்படி சொன்னாலாவது துகிலா நிலாவை சமாதானப்படுத்த முயற்சி செய்வானில்ல” கவலையாக மொழிந்தாள் சுசிலா.
“உன் பயம் வீணானது சுசி… நாங்க அவன் வீட்டை விட்டு வரும் போது கூட அவன் நிலா என்ன முடிவெடுக்குறாளோ! அதுக்கு கட்டுப்படுறேன்னுதான் சொன்னான். ஆனா அவளை பிரிஞ்சிருந்த இந்த கொஞ்ச நாள்லயே! அவ இல்லாம இருக்க முடியாதுனு புரிஞ்சிகிட்டான் போல, அவன் வந்தது. இங்க தங்கியே! வேல பாக்குறேன்னு சொன்னது. உன் கிட்ட உண்மையெல்லாம் சொன்னது எல்லாத்தையும் வச்சி பார்த்தா ஒரு முடிவோடுதான் வந்திருக்கான். கண்டிப்பா நிலா மனச மாத்தி அவனை புரிய வைப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு. நாம ப்ரெஷர் கொடுக்க வேண்டியது வாணனுக்கு இல்ல என் பொண்ணு நிலாக்குத்தான்” மெலிதாக புன்னகைத்தாள் லேகா.
இங்கே! வாணன் நிலாவை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியாமல் அமர்ந்திருந்தான். அவன் சுசிலாவின் மீது வைத்திருக்கும் பாசம் அவளுக்கு நன்றாகவே! தெரியும் அதையே! நடிப்பு என்று விட்டு சென்று விட்டாள். தன்னை பிரிந்து செல்ல முடிவெடுத்து விடுவாளோ! என்ற அச்சம் கூட வாணனுக்கு வந்தது.
எட்டு மாதங்கள் அவளை பிரிந்திருந்தான். அப்பொழுதும் அவளை காணாது தேடத்தான் செய்தான். அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ! என்று தேடினானே! ஒழிய அவள் மீது காதல் கொண்டு அவளை தேடவில்லை. காரணம் மேகம் மறைத்த நிலவாய் அவன் காதலை கோபம் மறைத்திருந்தபடியால் அவள் நன்றாக இருந்தாள் போதும் என்று தேடினான்.
அவள் தன்னுடைய இடத்தில், தன் குழந்தையை சுமந்துகொண்டு சொகுசாக வாழ்கிறாள் என்று அறிந்த பொழுது கோபம்தான் பன்மடங்காக பெருகியது. அப்போ அப்போ காதல் கண் எட்டினாலும், கோபம் அதை உணர விடவில்லை.
அர்த்தமற்ற கோபம், சம்பந்தமே இல்லாத ஒருத்தியின் மீது என்றதும் கோபம் காணாமல் போய் விட காதல் மட்டும் எஞ்சி விட்டிருக்க, பிரிந்திருந்த இரண்டு வாரமும் காதலை உணர்ந்துகொள்ள தாராளமாக போதுமானதாக இருக்கவே! இனியும் அவளை பிரிந்திருக்க முடியவே! முடியாது என்று ஓடோடி வந்து விட்டான்.
ஆனால் அவன் செய்தவைகள் அனைத்தும் மன்னிப்பு கேட்ட உடன் மறந்தும் விடாது, மறைந்தும் விடாது காலமும், அவன் காதலும்தான் அவளுக்கு மருந்தாகும். அதை அவன் உணர்த்த அவள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதை கொடுக்க அவளுக்கு மனம் வேண்டும் கொடுப்பாளா? நிலா? 
 “அப்பா… பாரு… அப்பா… பாரு…” லேகா குழந்தைகள் இருவரையும் வாணன் புறம் நகர்த்தி வைத்து செல்லம் கொஞ்ச
“அத்த என் கைல கொடுங்க? நான் கொஞ்ச நேரம் கைல வச்சிக்கிறேன்” வாணன் ஆசையாக கேக்க 
“கை சூட்டுக்கு பழகிட்டா அப்பொறம் கைலயே! வச்சிருக்க வேண்டியதுதான்” மகனை முறைத்தவாறு அங்கே! வந்த சுசிலா நிலா ஒரு ஓரமாக நின்றிருப்பதை பார்த்து விட்டு லேகாவிடம் கண்களாலே! வினவியவாறு அமர்ந்தாள்.
வாணன் வந்ததிலிருந்து குழந்தைகளை காணவில்லை. வந்த உடன் நிலாவை கொஞ்சி இருக்க, அவள் குதிக்கும்படி கட்டளையிட்டிருந்தாள்.
காலை உணவுக்குப்பின் அன்னையிடம் உண்மையை கூறினால் சுசிலா புரிந்துக்கொள்வாள் என்று எதிர்பாத்திருக்க, சுசீலாவும் நிலாவுக்கு சாதகமாக பேசி விட்டாள்.
வாணன் வரும் பொழுது குழந்தைகள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்ததால் அறையில் குழந்தைகள் இருந்ததையே! வாணனுக்கு தெரியவில்லை. அவர்கள் விழித்திருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்தேறி இருக்காதோ! என்னவோ!
வாணனுக்கு குழந்தைகளை பார்க்கும் ஆவல் ஏற்பட நிலாவிடம் சென்று கேட்கவே! பயமாக இருந்தது. சுசிலா வேறு கோபமாக இருப்பதால் லேகாவிடம் தான் போய் நின்றான்.
“என்ன டா வாணா…  உன் புள்ளைங்கள பார்க்க அனுமதி கேட்டுகிட்டு… வா டா…” என்று நிலாவின் அறைக்கே! அழைத்து செல்ல நிலா குழந்தைகளின் துணிகளை மடித்துக்கொண்டிருந்தாள்.
வாணனைக் கண்டு “இவன் எதற்கு இங்கு வந்தான்” என்ற பார்வையோடு எழுந்துகொள்ள வாணனுக்கு அந்த நேரத்தில் நிலா கண்களுக்கு தெரியவில்லை. கட்டிலில் துணியால் நன்கு சுற்றப்பட்டு கையையும் காலையும் அசைக்க, போராடும் அவனது இரண்டு செல்வப் புதல்வர்களையும்தான் பார்த்தான்.
வேக எட்டுக்களோடு அவர்களை நெருங்கி பேச நிலா கடுகடுத்தாள்.
வாணன் நிலாவை பார்த்தால் தானே! அவளது கோப முகம் தெரியும். ஆனால் லேகா அவளை பார்த்து விட்டு, வேண்டுமென்றே தான் குழந்தைகளுக்கு அப்பாவை அடையாளம் காட்டும் விதமாக பேசலானாள்.
அதற்குள் அங்கு வந்த சுசிலா குழந்தைகளை கையில் வைத்திருக்கக் கூடாதென்று பேச “என்ன நீ.. இடுப்புலையே! வச்சி வளர்த்துட்டு இப்படி பேசக் கூடாது ம்மா…” என்று வாணன் கிண்டலடிக்க,
“அதனாலதான் சொல்லுறேன். அப்பொறம் பழகிட்டா… ரொம்ப கஷ்டம். நீ என் இடுப்புலையே! இருந்து என்ன பாடு படுத்தின. ஒரு வேல செய்ய விட்டியா? ” என்று சுசிலா மகனை பார்த்து கூற
சுசிலா பேசியதை புறம் தள்ளியவன் “யாரோ! என் கிட்ட அவங்க மருமக மன்னிச்சாத்தான் மன்னிப்பேனு சொன்னாங்க? இப்போ பேசுறாங்க? கோபம் போச்சா?” கொஞ்சம் ஏக்கம் கண்ணில் எட்டிப்பார்த்தாலும், எதோ! பதில் சொல்ல வேண்டிதான் அன்னை தன்னிடம் பேசி இருப்பாள் என்று எண்ணினான் வாணன்.
சுதாரித்த சுசிலா “மன்னிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன். பேச மாட்டேன் என்று சொல்லல. அதற்காக ஓவரா செல்லம் கொஞ்ச நினைக்காத” என்று முறைத்தவாறு அங்கிருந்து சென்று விட்டாள்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லையென்று பேசிக் செல்லும் அன்னையை பார்க்கையில் வாணனுக்கு சிரிப்பாக இருந்தது. அவளுக்கு தன் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது.
அதை வைத்தே! அன்னையை சரி கட்டிடலாம் என்று விரிந்த புன்னகையோடு நிலாவை பார்க்க அவளோ! கைகளைக் கட்டிக்கொண்டு இவனை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டிருந்தாள்.
“ஆகா அம்மாவை சமாளிக்கிறதெல்லாம் ஒரு விஷயமே! இல்ல. உன் பொண்டாட்டிய எப்படி சமாளிக்கிறதுனு பாரு” மனசாட்ச்சி கூவ முறைக்கும் மனைவிக்கு கண்சிமிட்டி உதடு குவித்து முத்தம் வைக்க, தீப்பார்வை பார்க்கலானாள் நிலா.
அவளும்தான் அவனை காதலித்தாள். ஆம் காதலித்தாள் அதனால்தான் அவளுக்கு இவன் மீது இவ்வளவு கோபம் வருகிறது. அதை உணர்ந்த நொடி மெலிதாக அவளை பார்த்து வாணன் புன்னகைக்க,
“இவனை பார்பதினாலதான் வம்பு” என்று நினைத்தாளோ! முகத்தை திருப்பிக்கொண்டாள் மனையாள்.
முகம் திருப்பும் மனைவியை பார்த்து “லைப்ப முதல்ல இருந்து இருந்து ஆரம்பிச்சிட்ட வேண்டியதுதான்” தனக்குள் கூறிக்கொண்டான் வாணன்.
ஒரு போன் கால் வரவும் லேகா எழுந்து சென்றிருக்க, “நிலா எனக்கு ஒரு டவுட்டு?” என்ற வாணன் நிலாவிடம் கேட்கலாமா? வேண்டாமா என்று கீழுதட்டை உதடு கடித்தவாறு அவளையே! பாத்திருக்க,
அவனது அந்த தோற்றம் கூட மனதைக் கொள்ளைக்கொள்ள தலையை உலுக்கிக் கொண்டவள் “என்னத்த கேட்டு தொலைக்க போறானோ!” என்ற பார்வையோடு “நான் வேணான்னு சொன்னா கேக்காம இருக்கவா போறீங்க? கேட்டு தொலைங்க” என்றவள் அவனையே! பார்க்க
உதட்டில் மலர்ந்த குறும்புப் புன்னகையோடு “இல்ல ஒரு குழந்தையை கைல ஒழுங்கா புடிச்சி கிட்டு பால் கொடுக்குறதே! கஷ்டம் இதுல ரெண்டு பசங்களும் ஒரே நேரத்துல பசீல அழுதா.. எப்படி பால் கொடுப்ப?” கேள்வியை கேட்டதோடு மனைவியின் முகத்தையே! பார்த்திருக்க,
“என்ன மாதிரியாம கேள்வி இது? இதுக்கு பதில் சொல்லியே!! ஆகணுமா?” என்றும் விதமாக நிலா முறைக்க,
அவள் முகபாவனையை படித்த வாணன் “இல்ல நான் இந்த கேள்வியை வேறு யார் கிட்டயும் போய் கேக்க முடியாதில்ல. உன் கிட்டாதான் கேட்டு தெரிஞ்சிக்க முடியும்” படு சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான். 
அவன் சொல்வதும் உண்மைதானே! இந்த மாதிரி கேள்வியை பெத்த தாயிடம் கூட கேட்க முடியாதே!  கணவனின் கேள்விக்கு பதில் சொல்லியே! ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாள் நிலா.
ஆனாலும் அவனுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்ற கோபம் தலை தூக்க, “உங்க புத்தி இப்படி கண்டத்தையும்தான் யோசிக்குமா? போங்க வேல வெட்டி இருந்தா பாருங்க” என்று முகத்தை திருப்ப
“இதோடா… தெரியலைன்னுதானே! கேட்டேன். சொன்னாதான் என்னவாம்” என்றவன் அவளை நெருங்கி இருக்க,
“என்ன?” எனும் விதமாக நிலா வாணனை பார்க்க
“கொஞ்சம் வளர்ந்துட்டா அவனுன்களே குரங்கு குட்டி மாதிரி தொங்கிகிட்டு குடிப்பானுக, இப்போ…” வாணன் இன்னும் என்ன சொல்லி இருப்பானோ! அவன் வாயை பொய்த்தியவள்
“முதல்ல வெளிய போங்க” என்று அவனை பிடித்து தள்ளி விட முன்னாடி சென்று அவளை சுற்றி வந்து கட்டிக்கொண்டவன் அவள் திமிரத்திமிர கன்னத்தில் முத்தமிட்டு விட்டு “நீ சொல்லலைனா என்ன இங்கயே! இருந்து என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு போறேன்” என்றவன் குழந்தைகளோடு ஐக்கியமாகி விட நிலாவும் தலையை உலுக்கிக் கொண்டு தனது வேலையில் கவனமானாள்.
அலைப்பேசி உரையாடலை முடித்துக்கொண்டு லேகா உள்ளே! வரவும் இருவரும் இருபுறம் இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டவள் “வாணன், நிலா இன்னும் மூணு நாள்ல குழந்தைகள் பிறந்து இருபத்தி இரண்டாம் நாள் வருது அன்னைக்கி எல்லா ஏற்பாட்டையும் செய்ய நமக்கு நேரம் பத்தாது. அதனால முப்பதாம் நாள் பெயரிடும் விழாவ வச்சிக்கலாமா? பெயர் ஏதும் ரெண்டு பேரும் செலெக்ட் பண்ணிடீங்களா?” என்று இருவரையும் மாறி மாறி ஏறிட்டு கேட்டாள்.
வாணன் சொல்லும் முன் “அம்மா… உங்க ஆசைப்படி ஆதவன்னு வைக்கலாமா?” என்று நிலா கேட்டிருக்க,
வாணனும் “ஆமாம் அத்த உங்க ஆசைப்படியே! வைக்கலாம் எனும் பொழுது
அதைக் கேட்டவாறு நிலாவுக்கு பருக எதையோ! எடுத்து வந்த சுசிலா “அப்போ மத்த பேரனுக்கு கதிரவன்னு வைச்சிடலாம் சந்த்ரம்மா…” என்று சொல்ல
“இதோ… அத்த ஆசைப்படி ஆதவன். அம்மா ஆசைப்படி கதிரவன். அப்படியே! வச்சிடலாம். நீ என்ன சொல்லுற நிலா?” மனைவியின் விருப்பம்தான் ரொம்பவே! முக்கியம் என்பது போல் வாணன் கேட்டிருக்க, நிலாவுக்கு அந்த பெயர்கள் பிடித்திருந்தது.
ஆனால் தனது கணவனின் பெயர் போல் இல்லை என்ற குறை இருக்க,  “ஆதவன் ஆதிஷ் மௌரி. கதிரவன் ஆதித் மௌரி” என்ற நிலா அனைவரின் முகங்களையும் ஏறிட அனைவருக்கும் அந்த பெயர்கள் ரொம்பவே! பிடித்திருக்க, லேகா பெயரிடும் விழாவுக்கான ஆயத்தங்களை செய்யவென ஆயத்தமானாள்.
“பெயரிடும் விழாவும் நடக்க போகுது இன்னும் பொண்டாட்டி கூட ராசியாகலனா எப்படி? சீக்கிரம் ஒன்னு சேர பாரு” என்றவாறு சுசிலா வெளியேறி இருக்க,
நிலாவை பார்த்த வாணன் புன்னகைக்க, நிலா மீண்டும் அவளது வேலையில் கவனமானாள்.
ஒரு குழந்தை சிணுங்க ஆரம்பித்திருக்க, “பசிக்குதா கண்ணா?” என்றவாறே குழந்தையை தூக்கிக்கொண்டு பால்கொடுக்க ஆயத்தமாக அவளையே! குறுகுறுவென பாத்திருந்த கணவனைக் கண்டு “வெளிய போறீங்களா?” என்று சொல்ல
“அப்போ அவனுக்கு பசிக்காதா? ஏன் அவன் சும்மா இருக்கான்” நம்ம டவுட்டு கிளியர் ஆகாதோ! என்ற கவலையில் வாணன் கேக்க
“ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல பசிச்சா எப்படி சமாளிக்கிறது? குறிப்பிட்ட மணித்தியாலத்துக்கு ஒரு தடவ பால் கொடுக்கணும். நிலாவோட ஹெல்த்தையும் பார்க்கணும். ஒருத்தன் வயிறு நிறைஞ்ச பின்னால அவனுக்கு பால் கொடுக்க வேண்டிய நேரம் வருமில்லையா அந்த இடைப்பட்ட நேரத்துல மத்தவன் வயித்த நிரப்பிடனும். இல்லனா ரெண்டு பேரும் பசில அழுவங்க, நிலாவும் டயாடாகிடுவா” என்றவாறே! லேகா மற்ற குழந்தையை தொட்டிலில் இட
“இதுதான் ரகசியமா? நம்ம மைண்ட் எங்கெங்கயோ! போயிட்டு வந்ததே!” தன்னையே! கேலி செய்து சிரித்துக்கொண்டவன் நிலாவை பார்த்து கண்ணடித்தவாறே வெளியேறி இருக்க,
வாணனின் முகத்தை பார்த்தே! அவன் ஏடா கூடமாக ஏதேதோ! நினைத்திருப்பான் என்று புரிய “சரியான லூசு…” செல்லும் அவனை மனதுக்குள் திட்டினாள் நிலா.
வாணனுக்கு பிடிக்கும் என சுடச்ச்சுட கேசரி அல்வாவை கிண்டிய சுசிலா வாணனை அரண்மனை முழுக்க தேட அவனை எங்கும் காணவில்லை.
“ஹாஸ்பிடல்ல இருந்து வந்த உடனே! இத பண்ணாதே! அத பண்ணாதே! என்று ரெஸ்ட் எடுக்க வச்சான். நிலாக்கு கொழந்தைங்க பொறந்ததும் இங்க வந்துட்டோம். வாய்க்கு ருசியா அவனுக்கு என் கையாள ஒண்ணுமே! பண்ணிக் கொடுக்கலையே!னு கவலைல நான் இத பண்ணி அவனை தேடினா? எங்கதான் போய் தொலைஞ்சான் இவன்? இந்த அரண்மனையின் முழுக்க அவனை தேடி கண்டுபுடிக்கிறதுக்குள்ள அல்வா ஆறிப்போயிடுமே!” புலம்பியவாறு வர வாணன் நூலத்தில் இருப்பதாக ஒரு வேலையாள் சொல்ல விரைந்தாள்.
“இங்க இவ்வளவு புக்ஸ் இருக்கு. மனைவியின் மனதை கவருவது எப்படி? கோபத்தை குறைப்பது எப்படி? மதி முகத்தை மயக்குவது எப்படி? நிலா பெண்ணே! சினம் ஏனடி? இந்த மாதிரி பொண்டாட்டிய பத்தி ஒரு புத்தகமாவது இருக்கா? வேஸ்ட்டு பெல்லோவ்ஸ். புக் எழுதுறவங்க பொண்டாட்டி கூட சண்டையே! போட்டதில்லையா? இல்ல புக் எழுதுறவங்க எல்லாரும் பொம்பளைங்களா? இருக்கும் இருக்கும். இல்லனா இந்நேரத்துக்கு ஆயிரம் புக்ஸ் ப்ரிண்ட்டாகி இருக்குமே!” புலம்பியவாறு வாணன் நூலகத்தை அலசிக் கொண்டிருக்க அவன் முதுகை சுரண்டினாள் சுசிலா.
“யாரானாலும் சரி என்ன டிஸ்டப் பண்ணாதீங்க… நான் ரொம்ப பிசி” என்றவன் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் கவனமாக
மீண்டும் முதுகை சுரண்டிய சுசிலா “என்ன டா துகிலா பண்ணிக்கிட்டு இருக்க? இந்தா… கேசரி அல்வா சாப்புடு” என்று ஊட்டி விட சாப்பிட்டவாறே வேலையில்தான் கவனமானான்.
“ஆ.. ஆ..” என்று முழுங்கினாலும் கவனம் பூரா புத்தகங்களில் இருக்க கடுப்பான சுசிலா வாணனின் முதுகில் ஒன்று வைக்க
“ஆ…” என்று கத்தியவன் “என்ன ம்மா… எதுக்கு இப்போ அடிக்கிற?” என்று அன்னையை முறைக்க
“ஏன் டா… உனக்காக ஆசையாசையா கேசரி அல்வா பண்ணிக் கொண்டு வந்தா… நீ எதையோ! முழுங்கற மாதிரி முழுங்குற. ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு. அம்மா நல்லா இருக்குமா… உன் கையாள ரொம்ப நாளைக்கு அப்பொறம் சாப்புடுறேன் ம்மா.. நீ சின்ன வயசுல பண்ணி கொடுத்தது போலயே! இருக்குமா… என்று சொல்லுவியான்னு பார்த்தா போட…” என்று மீண்டும் அடிக்க
“அடிக்காதமா… நான் முக்கியமான வேலைல இருக்கேன். அதான் உன்னையும், உன் அல்வாவையும் கண்டுக்க முடியல. சாரி..” என்று அன்னையின் கன்னம் கிள்ளி சமாதானப்படுத்த முத்தமும் வைக்க
“அப்படி என்ன டா முக்கியமான வேல? புருஷனும் பொண்டாட்டியும் எப்போ பார்த்தாலும் இந்த லைப்ரரிய கட்டிக்கிட்டு அழுறீங்க?” என்று சுசிலா கழுத்தை நொடிக்க
“கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசன” என்று வாணன் அன்னைக்கு எழுத படிக்க தெரியாது என்பதாக முணுமுணுக்க
மகனை முறைத்த சுசிலா “கழுதைக்கு கருவாட்டு வாசன தெரிஞ்சா மட்டும் போதும். நீ சொல்லு” என்றதும் நிலாவின் மனதை கவர புத்தகம் படிப்பதாக வாணன் சொல்ல விழுந்து விழுந்து சிரித்தாள் சுசிலா.
“ம்மா… ம்மா.. சிரிக்காதமா.. ம்மா… ம்மா.. சிரிக்காதமா..”
“அட லூசுப்பயலே! புத்தகம் படிக்கிற நேரத்துக்கு உன் பொண்டாட்டி கால்ல விழுந்திருந்தாலாவது அவ உன்ன மன்னிச்சிருந்திருப்பா” என்று சுசிலா மீண்டும் சிரிக்க,
“எதுக்கு கால்ல விழுந்து கிடக்குறப்போ! தலேல கல்ல போட்டு கொல்லுறதுக்கா? விட்டா நீயே! ஐடியா கொடுப்ப போலயே!”
“போடா.. போடா.. ஆம்பள சிங்கம் இல்ல… பொண்டாட்டி கால பிடிக்க தன்மானம் சீண்டாது. அத சொல்லு. இதே! உங்க அப்பாவா இருந்திருந்தா… நான் கொஞ்சம் முகம் சுருக்கினாலும் என்ன எப்படியெல்லாம் சமாதானப் படுத்தவாறு” என்ற சுசிலாவின் முகத்தில் கணவனை நினைத்து வெக்கம் தானாக வந்து ஒட்டிக்கொண்டிருக்க,
“அப்படி என்ன பண்ணாரு? சொல்லுமா? நானும் அதையே! பலோவ் பண்ணுறேன்” என்று வாணன் அன்னையே! உலுக்க
“சீ.. போடா..” என்று சுசிலா மகனை தள்ளி விட்டு சென்று விட்டாள். 
முன்ன பின்ன செத்தா தானே! சுடுகாடு தெரியும். கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தையும் பொறந்தாச்சு வாணா உனக்கு இன்னும் ரொமான்ஸ் பண்ண தெரியல சோகமாக கன்னத்தில் கைவைத்து அமர்ந்தது விட்டான் வாணன்.
ஒரு வேலையாள் வந்து சில புத்தகங்களை அடுக்கி விட்டு செல்வதைக் கண்டு என்ன? எது? என்று விசாரிக்க அது நிலா குழந்தைகளுக்கு வாசிக்க கொண்டு சென்ற புத்தங்கங்கள் என்று கூறப்பட்டதும் “ஐடியா…” என்று கத்திய வாணன் நேராக சென்று நின்றது லேகாவிடம்.
“அத்த நம்ம கிட்ட குதிரை இருக்கா?”
“குதிரையா? இல்லையே! வாணா.. எதுக்கு குதிரை? ஏன் கேக்குற?” லேகா புரியாது கேட்க
“என்ன அத்த நாம அரச வம்சம் தானே! குதிரையெல்லாம் வளர்க்க மாட்டோமா?” சோகமான குரலில் கேட்டான் வாணன்.
“தாத்தா காலம்வரைக்கும் இருந்திருக்கு வாணா அப்பா காலத்துல இருந்து தேவைப்படல அதான் கார் பாவிக்க ஆரம்பிச்சிட்டோமே!”
“இங்க எங்கயாச்சும் குதிரை கிடைக்குமா?” வாணன் யோசனையாக கேக்க
“இங்க இருக்கு ஏன் கேக்குற?” லேகா இன்னும் புரியாது கேக்க
புன்னகைத்த வாணன் “நான் பாத்துக்கிறேன் என்றான்.
நிலாவுக்கு பேண்டஸி கதைகள் ரொம்ப பிடிக்கும் என்று வாணனுக்கு ரொம்ப நன்றாகவே! தெரியும். அவளை சமாதானப்படுத்த குதிரையில் வந்து பூங்கொத்தை கொடுத்தால் ஈர்க்கப்படுவாள் என்று கணித்துதான் வாணன் லேகாவிடம் குதிரையை பற்றி கேட்டிருந்தான்.
அவன் திட்டப்படி ஒரு வெள்ளைக் குதிரையும் கிடைத்திருக்க, வெள்ளை உடையணிந்த இளவரசன் போல் குதிரையில் ஏறி வந்தான் வாணன். நிலா குழந்தைகளை குழந்தைகளின் தொட்டில் போன்ற வண்டியில் வைத்து தள்ளியவாறு பூந்தோட்டத்தை சுற்றி வந்தவள் ஒரு கல்பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
அந்த கால இளவரசன் போல் வாணன் ஒன்றும் குதிரையில் வேகமாக வரவில்லை. வாணன் ஏறி வர அந்த குதிரையை பார்த்துக்கொள்பவன் அதன் கயிற்றை பற்றியவாறு மெதுவாகத்தான் வந்துகொண்டிருந்தான். ஒரு கையில் பட்டி ஒரு கையில் பூங்கொத்து இதற்கு முன் வாணன் குதிரை சவாரி செய்தது கூட இல்லை. விழுந்து விடுவேனோ! என்ற அச்சம் வேறு.
வாணனைக் கண்டு மதிமயங்கி நிலா எழுந்து நின்று விட்டாள். அவள் மின்னும் கண்களைக் கண்டே! அவன் வெற்றி கையெட்டும் தூரத்தில் என்று வாணன் புன்னகைத்துக்கொள்ள, குதிரை சதி செய்தது.
நிலாவுக்கு அருகில் வரும் பொழுதே! முன்னங்கால்களை தூக்கி கனைக்க அச்சத்தில் நிலா பின் புறம் விழுந்தால் என்றால் குதிரையின் மீதிருந்த வாணனும் தொப்பென்று விழுந்து விட்டான்.
குதிரை அங்கிருந்து ஓட்டமெடுத்திருக்க, நிலாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாணன் அசடு வழிந்தவாறே வந்து பூங்கொத்தை நீட்டவும்
“அறிவிருக்கா? குதிரை வந்து கார்ட்ட உதைச்சிருந்தா? குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி இருந்தா? எதுக்கு இந்த வேண்டாத வேல?” அவன் நீட்டிக்கொண்டிருக்கும் பூங்கொத்தை வாங்காது குழந்தைகளின் வண்டியை தள்ளிக்கொண்டு நிலா செல்ல
“இப்படி சொதப்பிருச்சே! இனி நான் என்னதான் பண்ணுறது?” என்று கத்தினான் துகிலவாணன் மௌரி.

Advertisement