Advertisement

அத்தியாயம் 21
வாணனை விட்டு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகி இருந்தத நிலையில் நிலாவுக்கு அது என்னமோ! இரண்டு மாதங்களை போன்ற நீண்ட நெடிய நாட்களாக மாறி இருந்தன.
என்னதான் சமாதானங்கள் சொன்னாலும் வாணன் செய்தவைகளை அவளால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. அனுபவித்தவள் அவளல்லவா?
லேகா எவ்வளவோ! எடுத்துக் கூறி இருந்தாள். “சுசிலாவின் மீதான பாசம், விரோசனின் இழப்பு என்று வாணன் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றான். அவன் மனநிலையை புரிந்துக்கொள். அவன் உன்னை பழிவாங்க நினைத்தாலும், அடித்து தும்புரத்தவில்லையே! கொன்று விட நினைக்கவில்லையே!
இதை விட கொடூரமாக அவனால் செய்திருக்க முடியாதா? அவன் நினைத்திருந்தால் உன்னை யாரிடமாவது விற்றிருக்க முடியும். அவ்வாறெல்லாம் செய்யவில்லையே! அவனுக்குள்ளும் நல்ல உள்ளம் இருக்கு” 
“போதும் நிறுத்துமா… அண்ணன் மகன் மீது கண்மூடித்தனமான பாசம் வைத்து இருக்கிறாய் அதனால்தான் அவன் செய்தவைகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறாய். அவன் செய்தவைகளை நீ சரி செய்து விட்டாய். சரி செய்ய முடியாத தவறை இழைத்திருந்தால் என்ன செய்வாய்?
அவன் பழிவாங்கும் வெறி என்னை அருகில் வைத்துக்கொண்டு என் மனதோடும், என் உணர்வுகளோடும் விளையாடுவதுதான். நீ செய்வது போல் யாரிடமாவது விற்றால் அதையெல்லாம் அவன் கண்கொண்டு பார்க்க முடியாதே!” என்று லேகா என்ன பேசினாலும் அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் நிலா.
ஆனாலும் லேகா விடவில்லை. “பார்க்கவும் ஒரே மாதிரி இருக்க, பெயரும் ஒரே மாதிரி இருந்தா அவனும்தான் என்ன செய்வான்? அவன் கோபத்தை புரிஞ்சிக்க நிலாம்மா…”
“எனக்கு புரியாம இல்ல. புரியுது. ஆனாலும் என் மனசு கேக்க மாட்டேங்குது. நான் பட்ட வலியும், வேதனையும் ஆருமானு தெரியல. இனிமேலும் நீங்க இந்த பேச்சு எடுத்தீங்கன்னா… நான் அத்தைகிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிடுவேன்” என்று மிரட்ட அதன்பின் லேகாவால் நிலாவிடம் எதையும் பேச முடியவில்லை.
“ஆள் மாறிப்போச்சாம் அதனால் மன்னிச்சு அவனை ஏத்துக்கணுமாம். எதோ! சின்ன வயசுல தெரியாம பண்ண தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுப்பானா? இவன் என்ன பெரிய இவனா?” பொருமினாள் நிலா.
குழந்தைகள் இருவரும் தூங்குவதால் நிலா அன்று காலையிலையே! குளித்து விட்டு வந்திருக்க, வாணனின் வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்கவே! திடுக்கிட்டவள் தலையை துவட்டுவதையும் விட்டு விட்டு “அவர் எங்க இங்க வரப்போறாரு அதுவும் காலைல” என்று முணுமுணுக்க வண்டி சர்ரென்று உள்ளே நுழையும் சத்தம் கேட்டது.
அது வாணனின் வண்டிச் சத்தம் என்று மனம் அடித்துக் கூற “நிலா வரவர உனக்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பிச்சிரு வாணனோட காலடி சத்தம் தான் துல்லியமா தெரியும்னு பார்த்தா வண்டிச் சத்தம் கூடவா தெரியுது? எல்லாம் பிரம்ம” என்று தலையை துவட்டும் பொழுதே! வாணனின் காலடி ஓசையும் கேக்கலானது.
அவனின் நினைவால்தான் இவ்வாறெல்லாம் தனக்கு தோன்றுவதாக எண்ணியவள் மனதிலிருக்கும் அவன் நினைவுகளை துரத்துவதற்காக வேண்டி கண்களை இறுக மூடியவாறு தலையை துவட்ட பின்னாலிருந்து இரண்டு வலிய கரங்கள் அவளை அணைத்துக்கொள்ள கத்தியவள் அடுத்த கணம் அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்று உணரவும் அவனிடமிருந்து திமிறி விலக முயற்சி செய்ய அவளை அணைத்திருந்த வாணனின் கைகளோ! அவளை விடாது மேலும் இறுக்கியதோடு உதடுகள் கழுத்து வளைவில் கோலம் போட்டுக்கொண்டிருந்தன.
“டேய் விடு டா.. என்ன.. தடிமாடு… விடு விடு” என்று நிலா அவன் கைகளை விலக்க அவன் முத்தமிட்டதில் அதிர்ந்தவள் கண்முன் இருந்த கண்ணாடி மேசையின் மீதிருந்த பொருட்களை கையால் துளாவ கையில் கிடைத்தது என்னவோ! சீப்புதான் அதை வைத்து வாணனின் தலையில் அடிக்க அது அவனுக்கு வலிக்கவே! இல்லை.
சீப்பை தூக்கிப் போட்டவள் அவன் முடியை பிடித்து இழுக்க கத்தியவாறே வாணன் அவளை விட்டு விலகி நிற்க மூச்சு வாங்கியவாறே நிலா அவனை முறைக்கலானாள்.
“ராட்சசி ஏன் டி… என்ன கொடும படுத்துற? வலிக்குது டி” வாணன் வலியில் முகம் சுருங்க
“எனக்கு வலிச்சது விடவா? எதுக்கு வந்திருக்கீங்க? பழிவாங்கினதுல மிச்சம் மீதி விட்டுப்போச்சா? அத வாங்கிட்டு போலாம்னு வந்தீங்களா?” என்று நக்கலாகவே! கேக்க வாணன் மனம் சுருங்கினாலும் முகம் சுருங்கவில்லை.
புன்னகை முகமாக நிலாவை ஏறிட்டவன் “அதான் ஆள் மாறிப்போச்சுனு உனக்கே! தெரியுமே! திரும்ப எதுக்கு பழிவாங்க என்று இங்க வரப்போறேன். நான் வந்தது என் வைப்ப பார்க்க” என்றவன் அவளை தீர்க்கமாக பார்க்க வாயடைத்துப் போனாள் நிலா. 
“அடப்பாவி என்னமோ! காதலிச்சு கட்டிகிட்ட மனைவியை ரொம்ப நாளா பிரிஞ்சிருந்து இன்னக்கி பார்க்க வந்தது போல சொல்லுறான்”
சுதாரித்தவள் “என்ன கல்யாணம் பண்ணது பழிவாங்கதானே! அதான் உங்க வேல முடிஞ்சிருச்சே! அப்பொறம் என்ன உறவு கொண்டாடிகிட்டு இங்க வந்து நிக்கிறீங்க?” என்று முறைக்க,
“ம்ம்… பழிவாங்கணும்னு நினைச்சிருந்தா எப்படிவேனா வாங்கி இருக்கலாம் தாலி கட்டிதான் உன்ன அடையணும்னு இல்லையே!” நாடியை தடவி யோசிப்பது போல் பாவனை செய்தவன் “உனக்கும் பணம் தேவ பட்டிருந்துச்சு… நான் கூப்பிட்டா நீ வந்திருக்க மாட்டியா என்ன?” என்று கேக்க
கோபத்தில் சிவந்த நிலா வாணனை அடிக்க கையை ஓங்கியவாறு “என்ன பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க?” என்று கத்த
அவள் கையை பிடித்து தடுத்தவன் அவளை அணைத்துக்கொண்டு “கூல் பேபி. கண்டிப்பா நானும் அப்படி கூப்ட்டிருக்க மாட்டேன். நீயும் வந்திருக்க மாட்டாய். நம்ம உடம்புல ஓடுற ரெத்தம் அப்படி செய்ய விடாது. பழிவாங்கவேணும் உன்ன கல்யாணம் பண்ணாலும் நீ மட்டும்தான் எனக்கு மனைவியாக இருக்க முடியும் என்ற முடிவோடுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது இங்க அம்மா மேல சத்தியம். போதுமா?” தன்னை புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினான் வாணன். 
அவனை விட்டு விலகி நின்றவள் “இந்த கத விடுற வேலையெல்லாம் என்கிட்டே வேணாம் நீங்க யாரு? என்னனு எனக்கு நல்லா தெரியும். இடத்தை காலி பண்ணுங்க காத்து வரட்டும்” என்றவள் வாணனை கண்டுகொள்ளாது தலையை துவட்ட ஆரம்பித்தாள்.
வாணனும் விடாது அவளை மீண்டும் பின்னாலிருந்து கட்டிக்கொண்டு “குழந்தை பிறந்த பிறகு சும்மா கும்முனு ஆகிட்ட டி பொண்டாட்டி… உன் வாசமெல்லாம் வேற மாதிரி இருக்கு” என்றவாறே கன்னம் கடிக்க, மின்னலென ஒரு சிலிர்ப்பு அவள் உடலில் பாய அடுத்த கணம் அவனை தள்ளி விட்டிருந்தாள் நிலா.  
வந்ததிலிருந்து அவன் அணைத்தது, முத்தம் வைத்த என்று எதுவும் அவளை அசைத்திருக்காத போது அவன் இந்த பேச்சு அவள் குளிரான தேகத்தை நொடியில் சூடேற்றி இருந்தது. இதயம் தடதடக்க மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்
“முதல்ல இடத்தை காலி பண்ணுறீங்களா? எனக்கு நிறைய வேல இருக்கு. பசங்க எந்திரிப்பாங்க” முயன்ற மட்டும் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யலானாள்.
“ஆமா ஆமா உனக்கு நிறைய வேல இருக்கும். அதுல முக்கியமான வேல டிரஸ் போடுறது” என்றவன் சிரிக்க “என்ன சொல்கிறான் இவன்?”  என்று நிலா தன்னையே! பார்க்க குளித்து விட்டு ஒரு மெல்லிய நைட்டியை உடுத்திக்கொண்டு வந்திருந்தவள் அறைக்குள் அனுமதி இல்லாமல் யாரும் வரமாட்டார்கள் இரு தலையை துவட்டியவாறு இருக்க, இவன் வருவான் என்று எதிர்பாத்திருக்கவில்லை. வந்தாலும் வந்தான் அவன் செய்தவைகளில் அவள் தன்னையே! மறந்து பேசிக்கொண்டிருக்க, அவள் அணிந்திருந்த உடையையும் தாண்டி அவள் அங்கங்கள் அவனுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தன. 
தன்னையே! நொந்துகொண்டவள் தலையை துடைத்துக்கொண்டிருந்த துண்டை தோளில் போட்டுக்கொண்டு “முதல்ல வெளிய போங்க” என்று சொல்ல வாணன் அவள் கால்களை பாத்திருந்தான்.
தொடைக்கு மேலிருந்த அவள் ஆடை என்னதான் நீ மறைத்தாலும் இங்கே! மறைக்க ஒன்றுமில்லை என்று கூவ.
இதற்கெல்லாம் அச்சப்பட்டாலோ! வெக்கப்பட்டலோ! ஒன்றும் ஆகாது என்று நினைத்தவள், ஒற்றை விரலால் வாணனின் நாடியை பிடித்து தூக்கி “அங்க என்ன பார்வ? வெளிய போகத்தானே! சொன்னேன்” என்று மீண்டும் முறைக்க
அவள் தைரியத்தை உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவன் “நான் பாக்கவென்றே இப்படி டிரஸ் போட்டுக்கிட்டு நிக்குற பாக்கார்காம போனா உன் மனசு தாங்காது இல்ல” என்று வெறுப்பேத்த
“இது என்ன டா புதுக்கத? இவன் வர்ரததே! தெரியாது. தெரிஞ்சா? கதவையே! லாக் பண்ணி இருப்பேன். இவன் என்ன இப்படி சொல்லுறான்?” என்று யோசித்தவள் அன்று அவன் அவள் ஆடை அணிவதே! அவன் பார்க்கத்தான் என்பது போல் பேசியது நியாபகத்தில் வர “நான் எனக்கு பிடிச்சா மாதிரிதான் துணி போடுவேன். யாரும் பார்க்குறதுக்காக வேண்டி இல்ல. நீங்க இப்போ கிளம்பினா எனக்கு பிடிச்சா மாதிரி போட்டுக்குவேன்” என்றவள் கதவின் பக்கம் கைகாட்ட வாணனுக்கு சிரிப்பாக இருந்தது.
அங்கிருந்த ஒற்றை சோபாவில் காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்துக்கொண்டவன் “என்ன பொண்டாட்டி ரொம்ப நாளா நமக்குள்ள ஒண்ணுமே! நடக்கலானதும் வெக்கம் வந்திருச்சோ! நமக்குள்ள எதுக்கு வெக்கம். நீ தாராளமா என் முன்னாடி துணி மாத்தலாம். நான் பார்க்காததா?” என்று சொல்ல என்னதான் மறைக்க முயன்றாலும் நிலா முகம் சிவந்தாள்.
அது வாணனின் கண்களுக்கும் தப்பவில்லை. “ஆகா… இவ கோபத்துல சிவக்குறாளா? வெக்கத்துல சிவக்குளானு தெரியலையே!” வாணன் மனம் பதறியவாறு நிலாவை பார்க்க
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வர போராடியவள் அந்த கோபத்தையும் அவனுக்கே!! காட்ட “இப்போ என்னதான் உங்களுக்கு வேணும்? என்னதான் பிரச்சினை?” என்று கத்தலானாள் நிலா.
“ம்ம்… கோபமாத்தான் இருக்கா… என்ன பேசினாலும் இறங்கி வர மாட்டேங்குறாளே!” நொந்தவனாக சோபாவிலிருந்து எழுந்தவன் நிலாவின் கைகளை பற்றிக்கொண்டு “நிலா நான் உனக்கு பண்ணது எல்லாத்துக்கும் மன்னிச்சுடுனு கேக்குறது சாதாரண வார்த்த. நீ பண்ணாத தப்புக்கு தான் நான் உன்ன கொடும படுத்தி இருக்கேன். நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனா உன்ன விட்டுட்டு போய்ட மட்டும் சொல்லாத கண்டிப்பா அத மட்டும் பண்ண மாட்டேன். என்னால உன்ன விட்டுடு இருக்க முடியாது”
“ஒஹ்… அப்படியா? என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துப்பீங்களா?” கிண்டலாகவே! கேக்க வாணனும் ஆமாம் எனும் விதமாக தலையசைத்தான்.
“சரி. அப்போ அதோ! அந்த பெல்கனில இருந்து குதிச்சிடுங்க” என்றவள் அலுமாரியில் பக்கம் செல்ல வாணன் அங்கேயே நிற்பதைக் கண்டு “என்ன முடியாதில்ல” என்று கிண்டலடிக்க
“அட கொஞ்சம் இருமா… கைல இருக்குற வாட்ச கழட்டிடுறேன். இது என் அத்த கொடுத்தது விழுறப்போ… ஒடஞ்சிட போகுது” என்றவன் வாட்ச்சையும், அலைபேசியையும் வைத்து விட்டு பெல்கனிக்கு சென்றிருக்க குதிச்சசிடுவானோ! என்று நிலா யோசிக்கும் முன் வாணன் குதித்திருந்தான்.
நிலா அதிர்ச்சியில் கத்தியவாறே! வர தண்ணீரில் விழுந்த சத்தம்தான் கேட்டது. எட்டிப்பார்த்தவள் வாணன் எங்கே! எனப்பார்க்க நீச்சல் குளத்துக்குள் இருந்து மேலே வந்து தண்ணீரில் நீச்சலடிக்க ஆரம்பித்தான்.
நிலா பார்ப்பதைக் கண்டு “ஹேய் பொண்டாட்டி… நீ சொன்ன மாதிரியே! குதிச்சிட்டேன். இப்போ ஓகேவா… என்ன மன்னிச்சிட்டியா?” என்று கத்திக் கேட்க நிலா அவனை நன்றாக முறைக்கலானாள்.
முதலாம் மாடியில்தான் நிலாவின் அறை இருப்பதோடு குளிரான காற்று வீசட்டும் என்று நீச்சல் குளம் இருக்கும் பக்கமாக அவள் அந்த அறையை தேர்ந்தெடுத்திருக்க, அதை மறந்து கோபத்தில் வாணனை குதிக்கும்படி கூறி இருந்தாள் நிலா.
வாணன் குதிப்பான் என்று நிலா எண்ணி இருக்கவில்லை. ஆனால் குதித்து விட்டான். தரை இருந்தால் கண்டிப்பாக கையோ! காலோ! பிசகி இருக்கும். உயிர் போகும் அளவுக்கு குதிக்க வாணன் ஒன்றும் முட்டாளில்லை. அது நிலாவுக்கு தெரியும்.
வாணனை முறைத்துக் கொண்டிருந்தவள் இவனை என்ன செய்வது என்று அவனையே! பார்க்க வாணன் அவள் உடலமைப்பை கையால் காட்டி “சூப்பர்” என்று கூற தானிருக்கும் கோலம் கண்டு உள்ளே! ஓடி இருந்தாள்.
  
  நிலா துணி மாத்திக் கொண்டு கீழே வர வாணன் நடு வாசலில் ஈரம் சொட்ட சொட்ட தலையை துவட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? முதல்ல போய் துணி மாத்துங்க” கத்தியவாறே நிலா வர
“பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கா தலையை துவட்டி விடுறாளா? தண்ணிக்குள்ள தள்ளி விட்டதுமில்லாம, சளி பிடிச்சா யாரிருக்கா பாத்துக்க?” என்றவன் வேண்டுமென்றே தும்மி விட்டு “சொல்லி முடிக்க இல்ல. சிம்டம்ஸ் காட்டிருச்சு… குடிக்க ஏதாச்சும் சூடா கொடுமா? இல்லனா சளி முத்தி நிவ்மோனியா வந்து செத்துட போறேன்” நிறுத்தாது வாணன் பேச கைகளைக் கட்டிக்கொண்டு அசையாது நின்றிருந்தாள் நிலா.
“புருஷன் செத்தாலும் பரவால்லன்னு நிக்கிறத பாரு? கொஞ்சமாலும் பாசம் இருக்கா?” வாணனும் அவளை விடாது பார்க்க வெளியே இருந்த அரண்மனைக்கு கோவிலில் பூஜையை முடித்துக்கொண்டு உள்ளே! வந்தாள் சுசிலா.
 “டேய்… துகிலா… எப்போடா வந்த? என்ன டா சொல்லாம கொள்ளாம திடிரென்று வந்திருக்க?” மகனைக் கண்ட சந்தோசத்தில் சுசிலா பேச ஆரம்பித்திருந்தாலும் மகன் இருக்கும் கோலம் கண்டு பதறி தனது சேலை முந்தியாளையே! தலையை துவட்டி விட, குனிந்து அன்னைக்கு தலையை கொடுத்திருந்தாலும் பார்வை முழுவதும் நிலாவின் மீது வைத்திருந்தவன் “நீ செய்யலைன்னா என்ன அம்மா இருக்காங்க, சரிதான் போ டி…” என்றும் விதமாக பார்க்க நிலாவும் முறைத்தவாறே உள்ளே! சென்றாள்.
வாணன் துணி மாற்றிக்கொண்டு வரும் போது காலை உணவு தயாராக இருப்பதாக வேலையாள் வந்து கூற சுசீலாவும் வாணனும் சாப்பாட்டறையை நோக்கி செல்ல, லேகாவும் வந்து சேர்ந்தாள்.  
“டேய் வாணா நீ எப்போ டா… வந்த?” என்ற லேகா மருமகனை கட்டிக்கொள்ள வாணனும் அத்தையை கட்டிக்கொண்டான்.
முன்பு இவ்வாறெல்லாம் அணைக்க மாட்டான். அத்தையை நன்கு புரிந்துக் கொணடதால் தானாகவே! பாசம் மனதில் ஊர்றேடுத்திருந்தது.
“நான் காலையிலையே! வந்துட்டேன். ஆமா நீங்க எங்க காலங்காத்தால வெளிய போயிட்டு வரீங்க?” கதிரையை இழுத்து அமர்ந்தவாறே கேட்டான் வாணன்.
சுசிலா பரிமாற “நீங்களும் உக்காருங்க அண்ணி..” என்ற லேகா வாணனுக்கு பரிமாறியவாறே! “குழந்தைகளுக்கு வேண்டிக்கிட்டு தினமும் ஊர் கோவில்ல அன்னதானம் கொடுத்துட்டு வரேன். அது சம்பந்தமாதான் போனேன். அதோட அடுத்த வாரம் குலதெய்வ கோவில்ல பூஜைக்கு ஏற்பாடு செய்யணும் பூசாரியையும் அப்படியே! பார்த்துட்டு வரேன். வரும் போதுதான் பார்த்தேன். நம்ம பெரிய குளத்துல குப்பைகளை கொட்டி வச்சிருக்காங்க, அத தூர்வார ஏற்பாடு பண்ணிட்டேன். கையோட ஒரு போர்டையும் மாட்ட சொன்னேன். ஆ… வாணா நீ வந்ததும் நல்லதா போச்சு. குழந்தைங்க பொறந்து பதினாறாம்நாள் பெயர் வைக்கணும்னு இருந்தோம். அது முடியாம போச்சு. இருபத்தி ரெண்டாம் நாலாவது வச்சிக்கலாம். நீ அவசரமா போக போறியா?” எங்கே வந்தவன் சென்று விடுவானோ! என்று குழந்தையை காரணம் காட்டி நிறுத்தி வைக்க முயல
“இனிமேல் நான் இங்க இருந்தபடியே! என் வேலைகளை பார்க்கலாம்னு இருக்கேன் அத்த. அப்படியே! உங்க வேலைகளையும் பார்க்கலாம்னு இருக்கேன். தனியா பார்க்க முடியலைன்னா கூட இன்னும் ரெண்டு பேர சேர்த்துக்கலாம்” என்று வாணன் சொல்ல லேகாவுக்கு சந்தோசம் தாளவில்லை.
“நிஜமாவா சொல்லுற?” என்று லேகா கேட்கும் பொழுதே!
“டேய் துகிலா நிஜமா வா டா…” என்று சுசீலாவும் கேட்டிருக்க, “ஆமாம்” என்று தலையசைத்து விட்டு உண்ணலானான் வாணன்.
“நிலா எங்க? அவ இங்க வந்து சாப்பிடுராளாமா? இல்ல அறைக்கே! அனுப்ப சொன்னாளா?” என்று லேகா வேலையாளிடம் கேட்க, அறைக்கு அனுப்பி விட்டதாக அவர் கூற லேகாவும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
வாணனுக்கு தெரியும் தான் இருப்பதால்தான் நிலா இங்கு வரவில்லையென்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உண்டு முடித்தவன் சுசீலாவும் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கையேடு அழைத்து செல்ல லேகா பதறினாள்.
“என்ன வாணா? என்ன விஷயம்?”
“நான் என் அம்மா கிட்ட பேசணும் அத்த இதற்கு எதற்கு இவ்வளவு பதறுறீங்க?” என்ற வாணன் சுசீலாவை அமர்த்திக் கொண்டு சுசிலா அன்று படியிலிருந்து கீழே விழுந்த பின் நிலாவுக்கு என்ன ஆனது. நிலா யார் என்ன? என்று கூறியவன். தான் நிலாவை பழிவாங்க துடித்ததாகவும். நிலா என்று நினைத்து இளையநிலாவை திருமணம் செய்த்து கொடுமைப்படுத்தியது என்று அனைத்தையும் சொல்லி முடிக்க சுசிலா அழுதவாறே மகனை அடிக்க ஆரம்பித்திருந்தாள்.
வாணன் பேச ஆரம்பிக்கும் பொழுதே! அவனை தடுக்க முடியாமல் லேகா நிலாவை அழைத்து வந்திருக்க, வாணன் சுசீலாவிடம் உண்மைகளை சொல்வான் என்று நிலாவும் எதிர்பாத்திருக்கவில்லை.
அவன் வாலாட்டினால் உன் அன்னையிடம் நீ செய்தவைகளை சொல்லிவிடுவேன் என்று அவனை மிரட்டலாம் என்று எண்ணி இருந்தாள். அவனே! எல்லா உண்மைகளையும் கூறி இருக்க, நிலாவுக்கு அதிர்ச்சி ஒரு புறம், ஆச்சரியம் ஒரு புறம் என்று அப்படியே நின்றிருந்தாள்.
  நிலா லேகா பெற்ற மகள் என்பதை லேகாவே! சுசீலாவிடம் கூறி இருக்க, இறந்து போன நிலாவை பற்றி எதுவும் கூறி இருக்கவில்லை.
வாணன் கூற கூற அதிர்ச்சியடைந்த சுசிலா… தன்னுடைய வளர்ப்பு இப்படி ஆகிவிட்டதே! என்ற ஆதங்கத்தில் வாணனை அடிக்க ஆரம்பித்திருக்க, லேகா பாய்ந்து சுசீலாவை தடுத்து நிறுத்தி
“என்ன பண்ணுற சுசி… அவன் பண்ணது தப்புதான் ஆனா உன் மேலையும். அண்ணன் மேலையும் இருக்குற பாசத்தாலதான் கோபத்துல எதோ இப்படியெல்லாம் பண்ணி இருக்கான். அவனை புரிஞ்சிக்க முயற்சி செய்”
“உங்க அண்ணனுக்கு ரொம்ப கோபம் வரும்னு அரண்மனைல இருக்கும் போது எல்லாரும் சொல்லுவாங்க. அரண்மனைல இருக்கும் போது நான் அவர் கோபப்படுறத பார்த்ததும் இல்ல. என்ன கல்யாணம் பண்ண பிறகு அவர் கோபப்பட்டு நான் பார்த்ததும் இல்ல. இவனையும் அப்படித்தான் வளர்த்தேன். ஏன் இவன் மட்டும் இப்படி ஆகிட்டான்” என்று சுசிலா அழ,
“என்ன மன்னிச்சிடுமா? உனக்கு இப்படி ஆகிருச்சுனு கோவத்துல என்ன பண்ணுறதுனு தெரியாம பண்ணிட்டேன்” என்று வாணன் சொல்லியவாறே சுசிலாவின் காலில் விழ,
“தெரியாம பண்ணல நல்லா திட்டம் போட்டுத்தான் பண்ணி இருக்க” என்று சுசிலா அவனின் முதுகிலையே! அடிக்க
“ஆ… அப்படித்தான் இன்னும் நல்லா போடுங்க அத்த” என்ற பார்வையோடு நின்றிருந்தாள் நிலா.
போதும் சுசி…. அவனே! பண்ண தப்ப உணர்ந்து மன்னிப்பு கேக்குறான். அவனை விடு” என்று லேகா சுசிலாவின் கையை இழுக்க,
“என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம். பாதிக்கப்பட்டது நிலா… அவ கிட்ட மன்னிப்பு கேட்டானா? பெத்த பொண்ண இழந்தது நீ… உன் கிட்ட மன்னிப்பு கேட்டானா?” என்று கேட்டாள் சுசிலா.
“என் பொண்ணு இறந்தது ஒரு விபத்து. அதற்கு வாணன் ஒருபோதும் காரணம் ஆகமாட்டான். செத்துப்போன பெண்ணுக்காக உசுரோட இருக்குறவங்கள காயப்படுத்துறதுனால செத்துப்போனவ உசுரோட வரப்போறதும் இல்ல. அப்படியே! நான் யாரையாவது பழிவாங்கணும்னா அந்த ஈஸ்வரத்தான் பழிவாங்கணும். நிலாவுக்கு பண்ணது தப்புனாலும் அதுவும் குழப்பத்துல நடந்தது. அத நிலா புரிஞ்சிக்கிட்டு அவனை மன்னிக்கணும். புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல நாம யாரு?” என்று லேகா அந்த பேச்சை முடிக்க, மகன் பாசத்தால் செய்தாலும் சுசீலாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்டது ஒரு அப்பாவிப் பெண். அதுவும் லேகாவின் மகள் எனும் பொழுது என்ன சொல்வது? என்ன செய்ய வேண்டும் என்று கூட புரியவில்லை.
சற்று நேரம் அமைதிக்கு பின் “நிலாம்மா பாதிக்கப்பட்டது நீ… நீதான் சொல்லணும். என்ன செய்யலாம்” என்று சுசிலா நிலாவை ஏறிட
“அவ கிட்ட எதுக்கு கேக்குற சுசி? அதான் புருஷன் பொண்டாட்டி பிரச்சினையை அவங்க பாத்துப்பாங்கனு சொல்லுறேனுள்ள” கறாரான குரலில் லேகா கூறவும் நிலாவின் முகத்தை பார்த்த சுசீலாவுக்கு புரிந்து போனது நிலா வாணனின் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறாள் என்று.
வாணனை ஏறிட்ட சுசிலா “பெத்த பாசத்துக்காகத்தானே! நீ இவ்வளவும் செஞ்ச? ஒரு பொண்ணோட மனச கஷ்டப்படுத்திட்ட அவ மன்னிக்கும்வரைக்கும் நான் உன்ன மன்னிக்க மாட்டேன்” என்ற சுசிலா அங்கிருந்து எழுந்து சென்று விட வாணன் அங்கேயே அமர்ந்து அழ ஆரம்பித்திருந்தான்.
லேகாவுக்கு அவனை பார்க்கவே! கஷ்டமாக இருந்தது. நிலாவின் அருகில் சென்று “உனக்கு இப்போ சந்தோசமா? இதைத்தானே! நீ எதிர்பார்த்த? ஒருத்தன் மனம் திருந்தி வந்தா அவனை மன்னிச்சிடனும். இப்படி படுத்தி எடுக்கக் கூடாது. அப்பொறம் அவன் செஞ்சதுக்கும் நீ செஞ்சதுக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்.
வலியும், வேதனையும் எல்லாம் மனிசனுகளுக்குத்தான் வரும் நம்ம கூட இருக்குறவங்கள கஷ்டப்படுத்திட்டு நாம சந்தோசமா வாழவும் முடியாது. நிம்மதியா வாழவும் முடியாது புரிஞ்சிக்க நிலாம்மா…” என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
நிலா வாணனின் அருகில் சென்று “போதும் நடிச்சது அதான் எல்லாரும் போய்ட்டாங்களே! கண்ண துடிச்சு கிட்டு போய் உங்க வேலைய பாருங்க” என்று சொல்ல  அவளை வெறித்து நோக்கினான் துகிலவாணன் மௌரி.

Advertisement