Advertisement

அத்தியாயம் 15
சுசிலா அனுமதித்தருந்த அறைக்குள் பரபரப்போடு நுழைந்தான் வாணன். அவன் பின்னாலையே! லேகாவும், நிலாவும் நுழைந்திருக்க, உள்ளே நுழைந்தவர்களை பார்த்து திடுக்கிட்ட சுசிலா எழுந்து நின்று விட்டாள்.
“அண்ணி…” என்றவாறு லேகா சுசீலாவைக் கட்டிக்கொண்டு நலம் விசாரிக்க
“சந்த்ராமா…” என்று லேகாவைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கலானாள் சுசிலா.
“இவங்கதான் வாணனோட அம்மாவா?” என்று நிலா பாத்திருக்க, வாணனோ! தன்னை அடையாளம் தெரியாத அன்னைக்கு தன்னை எவ்வாறு புரிய வைப்பதென்ற கவலையில் இருந்தான்.
எட்டு மாதங்களுக்கு முன்பாக சுசீலாவுக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் பொழுதே! மருத்துவர் கூறியதுதான். சுசிலா முற்றாக குணமடைந்தால் அவள் அன்றைய காலத்தில் இருப்பாள். அதாவது என்று படியிலிருந்து விழுந்தாளோ! அன்றைய காலகட்டத்தில் தான் அவள் மனம் இருக்கும். வளர்ந்த வாணனை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. வாணன்தான் சுசிலாவின் மகன் இப்பொழுது வளர்ந்து விட்டான். பலவருடங்கள் கடந்து விட்டது என்று பக்குவமாக எடுத்துக் கூற வேண்டும் என்று வாணனிடம் தெளிவாக கூறியுமிருந்தார்.
வாணனை அழைத்து சுசீலாவுக்கு முற்றாக நினைவு திரும்பி குணமடைந்து விட்டதாகவும், கணவனையும், மகனையும் தேடுவதாகவும் கூறி புறப்பட்டு வரும்படி கேட்டுக்கொள்ள வாணனுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது.
“என்ன வாணா என்ன பிரச்சினை?” கலவரமடைந்த வாணனின் முகத்தைப் பார்த்து லேகா கேட்க
“அம்மாக்கு… அம்மாக்கு… நினைவு திரும்பிருச்சாம். பழையபடி அம்மா என் கூட பேசுவாங்க. என் கூட இருப்பாங்க” கூறியவன் கண்களின் ஓரம் ஈரமாகின.
வாணனைக் கட்டிக்கொண்ட லேகா “ரொம்ப சந்தோசம் வாணா… நீ பட்ட கஷ்டத்துக்கு இனி விடிவுகாலம் பிறந்திருக்கு. நாம நிம்மதியா… சந்தோஷமா ஒண்ணா வாழலாம்” கண்ணீரோடு புன்னகைத்தாள் லேகா.
“இல்ல. அத்த எனக்கு பயமா இருக்கு. அம்மாக்கு என்ன அடையாளம் தெரியல. நான்தான் வாணன்னு எப்படி நிரூபிக்க போறேன். எப்படி புரியவைக்க போறேன்னு நினைக்கும் போது தலையே! வெடிக்கிற மாதிரி இருக்கு. அப்பா… அப்பா.. இல்லனு நா எப்படி அவங்க கிட்ட சொல்லுவேன். என்னால சொல்ல முடியாது அத்த. சத்தியமா என்னால முடியாது. தாங்க மாட்டாங்க. அப்பா இறந்துட்டாருனு கேள்விப்பட்டா அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு” குழந்தை போல் கதறி அழலானான் வாணன்.
அழும் வாணனை பார்த்து பெருமூச்சு விட்ட லேகா “அழாத வாணா.. அண்ணி முழுசா குணமடைஞ்சிட்டாங்க. அவங்களுக்கு பக்குவமா சொல்லி நான் புரிய வைக்கிறேன்” என்று வாணனின் தலையை கோதி விட
அவளின் கையை பிடித்துக் கொண்ட வாணன் “ஆ… ஆமாம் அத்த உங்கள அம்மாக்கு அடையாளம் தெரியுமே! நீங்க பேசினா புரிஞ்சிப்பாங்க. கிளம்புங்க போலாம்” வாணன் அவசரப்படுத்தலானான்.  
“கொஞ்சம் பொறு வாணா நான் நிலாவ எழுப்பி பயணத்துக்கு தயாராகும்படி சொல்லுறேன். எப்படியும் அங்க தங்க வேண்டி இருக்கும். அவளுக்கு பிரவச தேதி வேற நெருங்குது. அங்க பிரவசம் ஆகிருச்சுனா… அதற்குண்டான சாமான், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் தேவைப்படும். எல்லாம் எடுத்து வைக்க சொல்லணும்” என்றவாறு லேகா நகர
அவள் கையை பிடித்து தடுத்த வாணன் “இப்போ எதுக்கு அவள அங்க கூட்டிட்டு போகணும்னு துடிக்கிறீங்க? ஒன்னும் தேவ இல்ல. அவ இங்கயே! இருக்கட்டும்” முகத்தை “உர்ர்” என்று வைத்தவாறு பேச 
“நிலா என்றதும் ஏன் தான் இவன் இவ்வளவு வெறுப்பை கக்குகின்றானோ!” என்று அவனை ஆயாசமாக பார்த்த லேகா  “புரிஞ்சிதான் பேசுறியா? இப்போதானே! தெளிவா சொன்னேன். அவளுக்கு பிரவச தேதி நெருங்குது. தலை பிரசவம் வேறு. நான் பக்கத்துல இல்லனா எப்படி? அதுவும் அவளுக்கு பிபி வேற இருக்கு. கட்டின புருஷனும் வெறுப்பை கக்கிக்கிட்டு இருக்கான். கூட இருக்கேனு சொன்ன அம்மாவும் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்களேன்னு டென்ஷனாகி, பிபி எகிறி பிரசவத்துல சிக்கலாகி குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா?” மூச்சு வாங்கியபடி லேகா பேச்சை நிறுத்த வெலவெலத்துப் போனான் வாணன்.
“அத்த…” என்றவன் கலவரமாக முகபாவனையோடு “அப்படி ஒன்னும் ஆகாது அவளை வரச்சொல்லுங்க” என்று விட்டு பயணத்துக்கு தயாராகச் சென்றான்.
“நிலாவுக்கு ஏதாவது ஆகும்னு சொன்னா உன் ரெத்தம் துடிக்காது என்றுதான் உன் குழந்தைக்கு ஏதாவது ஆகும்னு சொன்னேன். அது ஒர்கோட் ஆகிருச்சு” தலையை உலுக்கியவாறு சென்ற லேகாவுக்கு தான் புரியவில்லை. நிலாவுக்கு ஏதாவது ஆகிடும் என்று கூறி இருந்தாலும் வாணன் நிலாவையும் அழைத்து செல்ல ஒத்துக்கொண்டிருப்பான் என்று.
குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று லேகா கூறும் பொழுதே! வாணனின் மனக்கண்ணில் யாருமில்லாத அரண்மனையில் தனியாக நிலா மயங்கி விழுந்து பிரசவமாகி துடிப்பது போல் காட்ச்சி தோன்றி மறையவும்தான் நிலா சென்னை வருவதை தடுக்கவில்லை.
எட்டு மாத காலமாக அவளுக்கு என்னவாகிற்றோ! என்று அச்சம் கொண்ட அவன் மனம் இன்னும் அவளுக்கு ஆபத்து எனும் பொழுது துடிக்கத்தான் செய்கிறது. அது காதலாலா? என்று என்று கேட்டால் அவனுக்கே! தெரியாது. நிலாவின் மீது காதலை உணர்ந்த பிறகுதான் நிலாவின் மீது என்று? எப்பொழுது? காதல் தோன்றி இருக்கும் என்ற ஆராய்ச்சிக்கே! வர வேண்டி இருக்கிறது.  
குழந்தைக்கு ஒன்றும் ஆக கூடாதென்றால் நிலா ஆரோக்கியமாக இருப்பது அவசியம் என்று வாணனின் கோபமான மனது அவனுக்கு கூறும் சப்பைக் காரணம் என்று அவன் புரிந்துகொள்ளும் காலம் என்றுதான் வருமோ!
லேகா நிலாவின் அறைக்குள் நுழையும் பொழுது நிலா தூங்கி எந்திரித்து முகம் கழுவி விட்டு வந்து கொண்டிருந்தாள்.
துண்டை எடுத்து அவளிடம் கொடுத்தவாறே “நிலா நாம உடனே! சென்னை செல்லணும். அநேகமா அங்குதான் உனக்கு பிரசவம் பார்க்க வேண்டி இருக்கும்”
சென்னை என்றதும் வாணனோடு வாழ்ந்த இனிமையான நாட்களையும் தாண்டி கொடுமையான அந்த பதினெட்டு நாட்களும் நியாபகத்தில் வர சந்திரமுகி ஜோதிகா போல் “நான் வர மாட்டேன்” என்றாள் மொட்டையாக
அதிர்ந்த லேகா “என்னம்மா.. என்ன பிரச்சினை? அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ண கஷ்டமாக இருக்கும்னு புரியுது. டாக்டர் கிட்ட பேசிட்டேன். பெரிய வண்டி வச்சி கம்படப்பளா போகலாம்னு சொல்லிட்டாரு. உன்ன பத்திரமா கூட்டிட்டு போறது என் பொறுப்பு” லேகாவும் பிரச்சினை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துப் பேச 
“எதுக்கு போகணும். நான் இங்கயே! இருக்கேன்” நிலா அதை கூறும் பொழுதே! “லேட் ஆகுது போலாம்” என்று கூற வந்த வாணனின் காதில் இது விழ,
சுறுசுறுவென கோபம் ஏற “இதுக்குதான் அத்த நான் முதல்லயே! சொன்னேன். இவள வச்சிட்டு போலாம்னு. நீங்கதான் பிரசவ சமயம் தனியா இருக்க பயப்படுவா.. அது இதுனு பேசி என் மைண்ட டைவர்ட் பண்ணிடீங்க” கடுப்பாகினான் வாணன்.
“ஓஹ்.. இவன் கூடத்தான் சென்னை போகணுமா? அப்போ சந்த்ரமா வேலையா போகலையா?” என்று நினைத்த நிலா “சந்த்ரமா இவர் கூட எல்லாம் என்னால ட்ராவல் பண்ண முடியாது. நீங்க வேணா போயிட்டு வாங்க நான் பத்திரமா இங்க இருக்கேன்” என்ற நிலா அமர்ந்துக்கொள்ள
“வாழ்க முழுக்க தண்டவாளம் போல ஒண்ணா ட்ராவல் பண்ண வேண்டியவங்க இப்படி எதிரும் புதிருமான இருந்த எப்படி?” மனசுக்குள் புலம்பிய லேகா
“நான் போனா ஒரு மாசத்துக்கு வர மாட்டேன் நிலா. உன்னால தனியா பிரசவத்துக்கு கிளம்பி போக முடியும்னா சொல்லு உன்ன இங்கயே! வச்சிட்டு போறேன்” கொஞ்சம் கடுமையாக லேகா சொல்ல
திடுக்கிட்ட நிலா “என்ன ஒரு மாசத்துக்கா? அப்படி என்ன அங்க வேல? என்ன விட்டுட்டு உங்களால இருக்க முடியுமா? குழந்தை பொறந்தா கூட பார்க்க வர மாட்டீங்களா?” கேற்கும் பொழுதே! நிலாவின் கண்கள் கலங்கி விட்டன.  
“எங்களுக்கு ஆயிரம் வேல அங்க இருக்கும். எல்லாம் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. வரதா இருந்தா வா. இல்லையா இங்கயே! இரு. பயணம் போகும் பொழுது சும்மா அழுது ஸீன் போடாத” வாணன் கோபத்தில் பொரிய
வாணன் பேசியதில் வந்த கண்ணீரும் காற்றில் கரைந்து மறைந்திருக்க “நான் உங்க கிட்ட கேட்டேனா? நான் சந்த்ராம்மாகிட்ட பேசிகிட்டு இருக்கேன். எதுக்கு குறுக்க பேசுறீங்க?” நிலா எகிறினாள்
“இவளெல்லாம் ஒரு ஆளு” என்ற பார்வையோடு “எனக்கு லேட் ஆகுது. உனக்காக எல்லாம் வெயிட் பண்ண முடியாது” வாணன் கையை கட்டிக்கொள்ள
“இப்போ யாரு உங்கள வெயிட் பண்ண சொன்னா? ஏன் சந்த்ரம்மா கிட்ட வண்டி இல்லையா? சென்னைக்கு வழிதான் தெரியலையா? நீங்க போங்க அவங்க வருவாங்க” நிலாவும் வாணனின் மூக்கை அறுப்பது போ பதிலடி கொடுக்க,
“அரண்மனை வாசம்… வாய்கொழுப்பும், எகத்தாளம் சும்மாவே வந்து ஒட்டிக்கொண்டது போல… ஏன்னா பேச்சு பேசுறா” ஒரு நொடி வியந்தவன் மறுநொடி “யாருகிட்ட?”  “உனக்காதான் வெயிட் பண்ண முடியாதுனு சொன்னேன். என் அத்தைக்காக வெயிட் பண்ணுவேன்” என்றவன் முறைக்க, நிலாவும் பதிலுக்கு முறைத்தாள்.
“ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா? இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா? பொறக்குற குழந்தையும் உங்கள மாதிரி யார் கிட்டயாவது வம்பு வளர்த்துக்கிட்டுதான் இருப்பான். அப்பொறம் டேலி ஒரு பஞ்சாயத்து வைக்க வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்” என்று லேகா மிரட்ட நிலா வயிற்றை தடவியவாறு அமைதியானாள்.
நிலாவின் வயிற்றை ஒரு நொடி ஏக்கமாக பார்த்தவன் “அத்த முடிவா என்ன சொல்லுறீங்க? எனக்கு லேட் ஆகுது. அம்மா காத்துகிட்டு இருப்பாங்க?” நிலா அவனை பார்க்கவும் அவளை முறைத்தவாறு வாணன் சொல்ல
“ஏன் டா வாணா இது உனக்கே! ஓவரா தெரியலையா? நாம இப்போ கிளம்பினாலும், இன்னும் ஒன் ஹவர் லேட்டா கிளம்பினாலும் போய் சேர நைட்டாகும். எப்படியும் காலைலதான் ஹாஸ்பிடல் போகணும்” என்று மருமகனை லேகா முறைக்க,
“நைட்டானாலும் என் அம்மாவ போய் நான் பார்க்கணும்” என்றான் வாணன்.
“அம்மாவா?” என்று நிலா லேகாவை ஏறிட
“ஆமா நிலாம்மா அண்ணிக்கு குணமாகிருச்சாம். டாக்டர் போன் பண்ணி சொல்லிட்டாரு. அதான் சென்னைக்கு கிளம்புறோம்” என்ற லேகாவின் முகத்தில் அப்பட்டமான சந்தோஷத்தைக் கண்டு 
“இத முதல்லயே! சொல்ல வேணாமா?” என்ற நிலா துணிகளை எடுத்து வைக்க சென்றாள்.
“அப்போ இவளுக்கு அம்மா குணமடைஞ்ச விஷயம் தெரியலையா? தெரியாமத்தான் வரமாட்டேன்னு அடம்பிடிச்சாளா? சுத்தம். எப்போ பார்த்தாலும் சண்ட கோழி மாதிரி சிலிர்த்துக்கிட்டே திரியிறா” என்று நினைத்தவாறே வாணன் வெளியேற லேகாவும் தனது பொருட்களை எடுத்து வைக்க சென்றாள். 
இப்படியொரு சண்டையை போட்டு பல மைல்களை கடந்து, பல மணித்தியாலங்களை செலவழித்துத்தான் சுசிலாவை பார்க்க வந்தார்கள் இவர்கள்.
பயணம் முழுவதும் நிலா தூங்கியவாறு வர பல அசௌகிரியங்களிலிருந்து தப்பித்திருக்க, லேகா பயந்த மாதிரி எதுவும் ஆகாததால் நிம்மதி அடைந்தாள்.
இரவென்பதால் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் நேராக வீட்டுக்கு சென்று தூங்கி இருக்க, சூரியன் விழிக்கும் முன்னே! வாணன் விழித்து மருத்துமனைக்கு செல்ல தயாராகி நின்றிருந்தான்.
லேகா இல்லாமல் செல்ல முடியாததால் அவளை எழுப்ப “அடேய்… எட்டு மணிக்கு போலாம் டா… இப்போ போனா உள்ள விடமாட்டாங்க” என்று பொரும
“ட்ராபிக்ல மாட்டிக்குவோம் அத்த சீக்கிரம் ரெடியாகி வாங்க” என்று அவசரப்படுத்த
“இவன் பண்ணுற அலப்பறை தாங்க முடியல டா சாமி” என்றவாறு லேகா தயாராகி வர
நெடுந்தூரம் பயணம் செய்ததால் ரெஸ்ட் எடுக்கும்படி லேகா கூறியும் சுசீலாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து நிலாவும் தயாராகி வந்திருந்தாள்.
“உன்னை பார்த்தால் என் அம்மாவுக்கு மீண்டும் ஏதாவது ஆகி விடும்” என்று வாணன் கத்த
“உன்னையே! உங்கம்மாவுக்கு நியாபகம் இல்ல. இதுல நிலாவையா நியாபகம் இருக்க போகிறது? நிலா என் பொண்ணுன்னு சொல்லிக்கிறேன். அமைதியா வா. என்று சொல்லித்தான் லேகா அழைத்து வந்தாள். 
அதே மாதிரி சுசீலாவுக்கு லேகாவை தவிர மற்ற இருவரையும் தெரியவில்லை.
“இவங்க யாரு” என்று லேகாவிடம் கேட்க நிலாவை அருகில் அழைத்தவள்
“இது என் பொண்ணு பேரு இளைய நிலா. நல்லா இருக்கா…”
“ஆமா.. உங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா?” என்று சுசிலா ஒரு நொடி யோசித்து விட்டு “நான் நான் எவ்வளவு நாளா இப்படி இருக்கேன்” என்று கேட்க
“நாள் கணக்கா எல்லாம் இல்ல. வருஷக்கணக்கா இருந்தீங்க. உங்க மகன்தான் உங்கள பாத்துக்கிட்டான்” என்றதும்
“துகிலா…துகிலா.. வளந்திருப்பான் இல்ல. எங்க அவன்” என்று சுசிலா சுற்றிலும் பார்க்க வாணன் கதறி துடித்தான்.
“அம்மா.. என்ன அடையாளம் தெரியலையா. உனக்கு என்ன தெரியலையா?” என்று சுசீலாவை கட்டிக்கொண்டு அழ
“இல்லப்பா.. இல்லப்பா.. நீ இந்த நிலா பொண்ணோட புருஷன் என்று நினைச்சிட்டேன். தாடியெல்லாம் வச்சிருக்கியே  அதான்…” என்று மகனை உச்சி முகர்ந்துகொள்ள
“முகத்தை மறச்சி இவ்வளவு பெரிய கருப்பு கண்ணாடியை போட்டிருந்தா எப்படி அடையாளம் தெரியும்” என்று நிலா முணுமுணுக்க அது வாணனின் காதில் விழ அவள் புறம் திரும்பி முறைக்க அவளும் “என்ன?’ என்று முறைக்கலானாள்.
இதுதான் சமயம் என்று லேகா “என்ன அண்ணி விளையாடுறீங்க? உங்க பையன் என் பொண்ண கட்ட மாட்டானா என்ன? என் பொண்ண உங்க பையனுக்குத்தான் கொடுத்திருக்கேன்” என்று சொல்ல பல்லைக் கடித்தான் வாணன்.
“இப்போ இந்த பேச்சு தேவையா அத்த…” வாணன் லேகாவை முறைக்க,
“பின்ன அண்ணி பையனோடு சேர்த்து மருமகளை பார்த்துட்டாங்க, பேரக்குழந்தையையும் பார்க்க போறாங்க சந்தோசமான விசயத்த இப்போதே! சொல்லணும் வாணா” என்றவாறு “நிலாம்மா வந்து அத்த பக்கத்துல உக்காருமா” என்று நிலாவையும் அழைக்க
“ஏன் சந்த்ராம்மா இப்படி பண்ணுறீங்க?” என்று அன்னையை பார்வையாலையே! ஏறிட்டுக் கேட்டாள் நிலா.
“துகிலா.. அப்பா எங்க டா.. எங்க போய் இருக்காரு? ஏன் என்ன பார்க்க வரல?” சுசிலா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக வாணனால் அடக்க முடியாமல் மீண்டும் கதறி அழலானான்.
“என்னாச்சு டா துகிலா…. ஏன் டா அழுகுற? சொல்லு டா?” சுசிலா பதற
“வாணா நீயே இப்படி அழுதா சரியா? அம்மா கேக்குறாங்க இல்ல சொல்லு வாணா” என்று லேகாவும் கண்ணீர் மல்க சொல்ல அவர்களை பார்த்திருந்த நிலாவும் அழ ஆரம்பிக்க, எதோ ஒன்று தவறாகபட சுசிலா வாணனை போட்டு உலுக்க
“அப்பா நம்மள விட்டு போய்ட்டாருமா” என்று கதற அதிர்ச்சியில் உறைந்து நின்ற சுசிலா “இல்ல… இல்ல…  பொய் சொல்லாத பொய் சொல்லாத” என்றவாறு வாணன் கன்னத்தில் மாறிமாறி அடிக்க ஆரம்பித்தருக்க, லேகா சுசிலாவை தடுக்கும் முயற்சியில் இருந்தாள்.
“அவனை விடுங்க அண்ணி அவனை விடுங்க. அவனே! ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்கான். நீங்களும் அவனை கஷ்டப்படுத்தாதீங்க. முதல்ல அவனை விடுங்க” என்று இருவரையும் பிரித்து விட
“ஐயோ துகிலா அப்பா நம்மள விட்டுட்டு போய்ட்டாரே! டா” விரோசனன் இன்றுதான் இறந்தது போல் சுசிலா கத்தி அழ வாணன் அன்னையை சமாதானப்படுத்தலானான்.
அவர்களை பார்த்து நிலா அழ “புள்ளத்தாச்சி பொண்ணு இப்படி ஏங்கி ஏங்கி அழ கூடாது. முதல்ல வெளிய போய் இரு நிலாம்மா” என்று அவளை வலுக்கட்டாயமாக வெளியே! அனுப்பி கதவை சாத்தினாள் லேகா.  
“நிலாவுக்கு தங்களது சொத்து பறிபோன அன்று தந்தையும் அன்னையும் கதறிய கதறல் கண்ணுக்குள் வந்து நிற்க, அதன் பின் அன்னை படுத்த படுக்கையாகி தந்தை பட்ட மனவேதனையும், இறப்பும் எல்லாம் வாணனின் வாழ்க்கையோடு ஒப்பிடும் பொழுது தனது வாழ்க்கையும் அவனது வாழ்க்கையும் ஒரே! மாதிரிதான் என்று நினைத்து அவளுக்காகவும், அவனுக்காகவும் சேர்த்து அழ ஆரம்பித்தாள்.
ஓரளவுக்கு சுசீலாவை சமாதானப்படுத்தி விட்டு வாணன் அவளது மடியில் தலைவைத்து படுத்தவாறு அன்னையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, லேகாவும் அவர்களை அன்பாக பாத்திருந்தாள்.
“சந்த்ராமா எங்க என் மருமக?” சுசிலா நிலா எங்கே எனக் கேக்க
“இப்போ எதுக்கு அவளை கேக்குறீங்க?” பழக்க தோஷத்தில் கேட்டு விட்டு மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான் வாணன்.
லேகா அவனை முறைக்க சுசீலாவோ! “இவன் சரியான பொறாமை புடிச்சவன் சந்த்ராமா? நீங்க சொல்லலைனா கல்யாணம் கூட பண்ணி இருக்க மாட்டான் போல”
“என்ன சொல்லுறீங்க அண்ணி?” லேகாவும் புரியாது கேக்க
“இவன் சின்ன வயசுல நம்ம இருந்த வீடு ரொம்ப சின்னது. இவன் வேற என்ன கட்டிக்கிட்டுதான் தூங்குவான். உங்க அண்ணனுக்கு கடுப்பாகும். என் கிட்ட “என்ன டி இவன் எப்போ பார்த்தாலும் ஆக்டொபஸ் மாதிரி உன்ன கட்டுபிடிச்சி கிட்டு தூங்குறான்” என்று கத்துவார்
“புள்ளய வையாதீங்க” என்று நான் அவரை சமாதானப்படுத்துவேன். என் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லனு
இவன் கிட்ட போய் “டேய் நீ இப்போ வளர்ந்துட்ட. தனியாத்தான் தூங்கணும், அம்மா கூட எல்லாம் தூங்கக் கூடாது. நீ தனியா தூங்கினாதான் டா என்னால உனக்கு தம்பியோ! தங்கச்சியோ! கொண்டு வாரத பத்தி யோசிக்க முடியும்” சுசிலா அன்று விரோசனன் சொன்னதை சொல்ல, வாணனுக்கும் அது நன்றாக நியாபகம் இருக்கவே! அவன் சொன்ன பதிலில் அன்னையின் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
“என்ன அண்ணி சொன்னான் இவன்” லேகாவும் ஆர்வமாக.
“தம்பினா வேண்டவே! வேணாம். தங்கச்சி வந்தாலும் பக்கத்து வீட்டு பாப்பா மாதிரி எப்பவும் அம்மா இடுப்புலையே! உக்காந்து இருக்கும் அதுனால யாரும் வேணாம்னு சொல்லிட்டான். அதனால நாமளும் இன்னொரு குழந்தைய பத்தி யோசிக்கிறது விட்டுட்டோம்”
“ஹாஹாஹா… என்ன டா வாணா சத்தமில்லாம ஒரு ஜெனரேஷனையே! அழிச்சிருக்க, பலே! ஆளுதான் டா நீ” என்று லேக்கா கிண்டல் செய்ய
“நீ ஒரு குழந்தையோட நின்னுடாத வாணா… எனக்கு அஞ்சாறு பேரப்பசங்க வேணும்” என்று சுசிலா சிரிக்க லேகாவும் சிரித்தவாறு நிலாவை அழைக்க கதவை திறந்தாள்.
“நிலா கண்ணீர் மல்க நிப்பதைக் கண்டு “என்ன நிலாம்மா உன்ன அழக் கூடாது என்று தானே! வெளிய உக்கார வச்சேன். நீ என்னடான்னா… உன்ன அண்ணி கூப்பிடுறாங்க. முதல்ல வா உள்ள” எனறவாறு அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவளை உள்ளே அழைத்து சென்றாள் லேகா.
“வாம்மா மருமகளே!” என்று சுசிலா நிலாவை தன் அருகில் அமர்த்திக் கொண்டு நலம் விசாரித்தவாறு வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றியும் விசாரிக்க, வாணன் தாய் மடியை விடாது படுத்திருந்தான்.
“இவன் மட்டும் இவன் அம்மா மடிய விட்டுக் கொடுக்க மாட்டானாம். நான் மட்டும் என் குழந்தையை இவன் கிட்ட கொடுக்கணுமா? இரு டா உன்ன வச்சிக்கிறேன்” கருவியவள்
“ஏன் அத்த பொதுவா.. பசங்கனா அம்மா செல்லம், பொண்ணுதான் அப்பா செல்லம். உங்களுக்கு ஒரே பையன் உங்க வீட்டுல எப்படி?” வாணனை முறைத்தவாறே கேக்க
அவள் எதற்காக கேட்கிறாள் என்று வாணனுக்கு புரிந்தது. அவன் லேகாவிடம் கூறியதை நிலாவிடம் கூற மறந்த மடமையை எண்ணி நொந்துகொண்ட போது சற்று முன் நடந்த சம்பாஷணையை சொல்லி லேகா சிரிக்க நிலா இன்னும் வாணனை முறைக்கலானாள்.
“ஒத்த புள்ளையா இருந்தா அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் செல்லம் தான்மா… மொத கொழந்த பொறந்த ரொம்ப நாள் எடுத்துக்காம அடுத்த குழந்தைய சீக்கிரம் பெத்து கொடு. பேரபசங்களை பாத்துகிறத விட வேற என்ன வேல இருக்கப் போகுது எனக்கு” என்று சுசிலா பேச முகம் இறுகி நின்றாள் நிலா.
மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு சுசீலாவை அழைத்து செல்லாம் என்றதும் அனனைவரும் மகிழ்ச்சியாக வீடு நோக்கி புறப்பட்டனர்.
“அத்த நீங்க நிலாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்க நான் அம்மாவ கூட்டிகிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு வரேன்” என்ற வாணன் கேப்பை அழைக்க போக
“நாங்களும் உன் கூட வரோம் வாணா… அப்படியே! சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போலாம். நிலாம்மா உனக்கு டயடா இருக்கா?” என்று லேகா நிலாவை ஏறிட
“இல்ல சந்த்ராம்மா… ஹாஸ்பிடல்ல ரெஸ்ட்டா தானே! இருந்தேன். நான் வரேன்” என்றாள் நிலா.
“அதானே! பார்த்தேன் ஷாப்பிங் என்றதும் வராம இருப்பாளா?” வாணன் உதடு வளைக்க நிலா முறைக்கலானாள்   
முதலாவதாக ஒரு துணிக்கடைக்கு சென்றவன் சுசீலாவுக்கு பார்த்துப் பார்த்து வாங்க “எதுக்கு வாணா இம்புட்டு, நாலு புடவை இருந்தா போதாதா?” என்று சுசிலா கேட்க, நிலா சட்டென்று வாணனை பார்த்தாள்.
“என்னம்மா நீ. உன் பையன் எவ்வளவு சம்பாதிக்கிறேன். உனக்கு வாங்கிக் கொடுக்க மாட்டேனா? வீட்டுல உனக்காக நிறைய வாங்கி வச்சிருக்கேன். ஆனாலும் உன் கூட வந்து வாங்குறது மாதிரி திருப்தியா இல்ல. ப்ளீஸ் ம்மா… எனக்காக” என்றவனின் கண்கள் கலங்கி இருக்க,
“அவன் ஆசைப்படுறான் இல்ல. அண்ணி வாங்கிக்கோகங்களேன்” என்றாள் லேகா.
இதே! மாதிரி தானே! நிலாவும் அவனிடம் சொன்னாள். “அம்மா என்றால் மட்டும் கருணையும், பாசமும் ஊரி வரும் போல” கழுத்தை நொடித்தவள் வாணனை முறைத்து விட்டு அமைதியானாள்.
“டேய் உன் பொண்டாட்டிக்கும் வாங்கு டா… அவளை கூட்டிட்டு வந்து எனக்கு மட்டும் வாங்குற?” என்று சுசிலா அதட்ட
“அவளுக்கு ஏற்கனவே! வாங்கிட்டேன் ம்மா.. இருக்குறத வைக்கவே! இடம் பத்தல” வாணன் நக்கலாக சொல்ல
“நாங்க கேட்டோமா?” லேகாவையும் கூட்டு சேர்களானாள் நிலா.  
அடுத்து நகைக் கடைக்கு செல்ல வாணன் சுசீலாவுக்கு வைர நகைகளாக பார்த்து வாங்க “எனக்கு எதுக்குப்பா வைரம்? மருமகளுக்கு வாங்கிக் கொடு” என்று சுசிலா அவன் மனதில் இருப்பதை அறியாமல் சொல்ல
“வைரம் எல்லாம் போட ஒரு முகராசி வேணும் ம்மா… அது உங்க கிட்ட மட்டும்தான் இருக்கு” என்று நிலாவை முறைக்க,
“இப்போ இவன் கிட்ட நான் வைரம் வாங்கிக் கொடு என்று கேட்டேனா? எதுக்கு என்ன முறைக்கிறான்” என்று மனதுக்குள் பொறுமியவள் அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு மறுபுறம் திரும்பி அமர்ந்துகொள்ள லேகாவுக்கு வாணனின் பேச்சின் சாராம்சம் புரிய பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
“நீ போட்டுக்கம்மா… யார் யாரோ எல்லாம் போடுறாங்க. நீ போட்ட என்னவாம்” என்று நிலாவை தாக்க அது அவளை சென்றடையவே! இல்லை. அவளுக்கு அன்று வாணன் போட்ட வளையல்கனின் பெறுமதி கூட தெரிந்திருக்கவில்லை.
“நீ எது வேணாலும் பேசிக்க நான் கண்டுக்க மாட்டேன்” என்பது போலவே! அமர்ந்திருந்தாள் நிலா.
அடுத்து ஒரு உணவகத்துக்கு சென்று உணவுண்டவர்கள் நேராக வீட்டுக்குத்தான் கிளம்பி சென்றிருந்தனர்.
வாணனின் வீட்டை பார்த்து பிரமித்த சுசிலா ஆனந்தக் கண்ணீர் வடிக்க,
“வாம்மா வாம்மா உன் ரூமை காட்டுறேன்” என்று வாணன் அன்னையின் அறையை கட்ட நெகிழ்ந்தாள் சுசிலா.
“ஆமா உன் ரூம் எது?” என்று சுசிலா மகனிடம் கேக்க
“என் ரூம் மேல இருக்கு. அத்தையும் நிலாவும் உங்க ரூமுக்கு பக்கத்து ரூம்லதான் தங்கி இருக்காங்க” என்று சுசிலா கேட்காததையும் சேர்த்து சொல்ல
“என்ன டா சொல்லுற? உன் பொண்டாட்டி எதுக்கு அவங்க அறைல இருக்க?” மகனை கேள்வியாக ஏறிட
அன்னையிடம் மாட்டிக்கொண்டு திருதிருவென முழிக்கலானான் துகிலவாணன் மௌரி.

Advertisement