Advertisement

அத்தியாயம் 14
வாணனுக்கு உள்ளமெல்லாம் எரிந்துக்கொண்டிருந்தது. “அவளுக்கு வளைகாப்பு பண்ணுறதே! ஒரு கேடு இதுல வைர வளையல்கள் வேறயா?” கோபமாக அத்தையை தேடி சென்றால் லேகா சாவுகாசமாக காரியாலய அறையில் ஏதோ ஒரு கோப்பை புரட்டிக்கொண்டிருந்தாள்.
“என்ன அத்த பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” வாணன் கோபமாக கேட்டவாறே உள்ளே நுழைந்தான்.
“பார்த்தா தெரியலையா? நம்ம தொழிலத்தான் பாக்குறேன் ப்பா… நீயும் உன் வேலைதான் முக்கியம்னு இருக்க, நீ பார்க்க வேண்டியததான் நான் பாக்குறேன். நாளைக்கு உன் பசங்க பொறந்தா இந்த சொத்தை அவங்களுக்காவது காப்பாத்தி கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கில்ல. இல்லனா நம்ம சொந்தபந்தங்க எங்க டா நான் மண்டைய போடுவேன். எப்போ சொத்தை ஆட்டைய போடலாம்னு நரியா காத்துகிட்டு நிக்குதுக்குங்க” தலையை தூக்காமலே! லேகா சொல்ல வேண்டியதை நச்சென்று சொல்லி விட்டாள்.
அதெல்லாம் வாணனின் மரமண்டைக்குள் ஏறினால் தானே! பல்லைக் கடித்தவன் “நான் என்ன கேக்குறேன்? நீங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” என்றவன் லேகா பார்த்துக்கொண்டிருந்த கோப்பை பறித்து மூடி விட்டு ஒரு இருக்கையை இழுத்துப்போட்டு அவள் அருகில் அமர்ந்துகொண்டான்.
“இப்போ எதுக்கு அவள இங்க கொண்டு வந்து வச்சிருக்கீங்க? ராஜ மரியாதையோடு வளைகாப்பு வேற? வைர வளையல் போடணும்னு ஏதாவது பரம்பரை வேண்டுதலா? என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது. ஒவ்வொரு வளையலும் அந்த கணம் கணக்குத்து எத்தனை பவுன் தங்கம்? நெருக்கி சின்ன சின்ன வைர கற்களை பதுக்கி இருக்குறத பார்த்தா ஒரு வளையளுக்கு நாப்பது, ஐம்பது வரும் போலயே! உண்மையிலயே! வைரம்தானா? இல்ல சும்மா வெள்ள கல்லா?”
“அன்னக்காவடிக்கு வந்த வாழ்வப்பாறேன்” என்று பொருமிக்கொண்டிருந்தவனுக்கு பொறாமை தாங்க முடியாமல் அத்தை இதெல்லாம் நாடகம் என்று சொல்லி விடக் கூடாதா? என்ற ஆதங்கத்தில் பேசினான் வாணன்.
“இப்போ என்னதான் டா உனக்கு பிரச்சினை?” லேகா வாணனை தீர்க்கமாக பார்க்க
“அவளுக்கு வளைகாப்பு பண்ணதே! எனக்கு பிடிக்கல, இதுல வைர வளையல் வேற போட்டிருக்கீங்க, அதுவும் என் கையாள வேற போட்டு விட்டிருக்கீங்க அது எனக்கு சுத்தமா பிடிக்கல” வாணன் முகத்தை திருப்பிக் கொண்டு தனது விருப்பமின்மையை வார்த்தைகளால் வெறுப்பாக கக்கலானான்.   
கண்ணாடியில் தெரிந்த அவனது பக்கவாட்டு விம்பத்தை பார்த்திருந்த லேகா “நிலா சொன்னது உண்மைதான்” என்று புன்னகைக்க
“என்ன சொன்னா?” கண்கள் மின்ன அத்தையின் புறம் திரும்பியவன் ஆர்வமானான்.
“பார்க்க நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தாலும் நமக்குள்ள நிறைய வித்தியாசம் இருக்கு. ஆனாலும் இன்னக்கி வளைகாப்பின் போது நம்மள ஒண்ணா பார்த்துட்டு பக்கவாட்டுல பார்த்தா எந்த வித்தியாசமும் பெருசா தெரியாதுன்னு சொல்லுறா. சரியான சேட்ட புடிச்சவ. எந்த நேரத்துல என்ன வேல பாக்குறா பாரேன்” என்று லேகா சிரிக்க
நிலாவை லேகா புகழ்ந்து பேசியது வாணனுக்கு பிடிக்கவில்லை. “இப்போ எதுக்கு கண்டதையும் பேசுறீங்க? முதல்ல அவள இங்க இருந்து அனுப்புற வழிய பாருங்க. நான் உங்களுக்கு உறவா? இல்ல அவளா?” “நானா? அவளா? என்று முடிவு பண்ணிக்கோங்க” மறைமுக மிரட்டல்தான் விடுத்திருந்தான் மருமகன்.
அண்ணன் மகனின் பேச்சு செல்லும் திசையை கணித்தவள் தக்க பதிலாக “நீ கல்யாணம் பண்ணதாலதான் அவ உறவானா நான் இல்லனு சொல்லலையே! ஆனாலும் நான் அவளை தத்தெடுத்துகிட்டேன். சோ நீ டிவோர்ஸ் பண்ணாலும் அவ என் பொண்ணுதான் அவளை அனுப்ப முடியாது” லேகா முடிவாக சொல்ல
“அப்போ உங்களுக்கு நான் முக்கியமில்லை. அவதான் முக்கியம். அப்படித்தானே!” கண்களை கூர்மையாக்கி கேட்டான் வாணன்.
“அண்ணன் பையன்னு சொல்லிக்கத்தான் நீ இருக்க, அவ பொண்ணா கூடவே! இருக்கா. சொல்லிக்கிறது முக்கியமா? கூடவே! இருக்குறது முக்கியமானு நீயே! முடிவு பண்ணிக்க” என்று லேகா பதில் கொடுக்க, அவளிடம் பேசி பிரயோஜனமில்லை. நிலாவிடம் பேசி அவளை துரத்த வேண்டும் என்று அவளை தேடித் சென்றான் வாணன். 
அவளது படுக்கையறையில் தடாலடியாக நுழைந்தவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. நிலா அங்கு இல்லை. எங்கு சென்றிருப்பாள் என்று ஒவ்வொரு அறையாக பார்த்தவாறு வர அப்பக்கமாக வந்த வேலைக்கார பெண்மணியிடம் நிலா எங்கே எனக்கேட்க
“இந்த நேரத்துல அம்மா நூலகத்துலதான் இருப்பாங்க ஐயா. தினமும் இதுதானேங்க ஐயா வழக்கம்” விசித்திரமாக அவனை பார்த்து விட்டு சென்றாள் அப்பெண்.
கணவன் மனைவி பிரிந்திருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் அறியாததால் தினமும் நடப்பவைகளையும், செய்பவைகளையும் நிலா ஒப்பிவிக்க கூடும் அதனால் வாணனுக்கு நிலா இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று அறிந்திக்க கூடும் என்றுதான் அந்த பார்வை.
அதை சரியாக படித்தவன் “அவ என்ன செய்யிறா? எங்க போறா? வரன்னு பாக்குறதுதான் என் வேலையா?” என்று தன் மனதோடு பேசிக்கொள்ள
“ஆமா எட்டு மாசமா அவளை காணவில்லைனு கழுத்துல போட்டு மாட்டிக்காத குறைமட்டும்தான்” என்று தூற்றியது அவன் மனம்
“அதான் ஒன்னும் ஆகளையே! இங்க வந்து நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு சொகுசா வாழ்ந்துகிட்டுதானே! இருக்கா” மனதை அடக்கியவன் “இவ எப்படி என் இடத்துல வந்து உக்காந்து அனுபவிக்கலாம் என்று கோபம் தலைக்கேறி நூலகத்தின் கதவை திறந்தவன் நிலா வயிற்றில் கையை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை வாசிப்பதைக் கண்டு மேலும் கொதித்தான்.
வாணன் அவளோடு பேச வேண்டும் என்று சொன்ன பிறகும் அதை கண்டு கொள்ளாம, இவள் என்ன டா என்றால் சாவுகாசமாக இங்கு வந்து புத்தகம் படிக்கிறாள். போதாததற்கு இவளை தேடி நான் வர வேண்டுமா? என்ற கோபமும் சேர்ந்த்துக்கொள்ள கத்தலானான் வாணன்.
என்னதான் நிலா வாணனை முறைத்தாலும் எட்டு மாதங்கள் கடந்து அவனை பார்த்த நொடி அவள் இதயம் எகிறி குத்தித்து ஓடத்தான் செய்தது. அது சிசுவுக்கு கேட்டிருக்கும். வாணனின் அக்கறையான பேச்சில் ஒரு உதை விட்டிருக்க அந்த தருணம் அதை உணரும் நிலையில் நிலா இருக்கவில்லை.
சாவுகாசமாக அமர்ந்து மகவுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தவளின் மனதில் வாணனோடு சுமூகமான உறவு இருந்தால் அவனும் அவர்களோடு ஐக்கியமாகி இருப்பான். அப்படி இருந்திருந்தால் எவ்வாறெல்லாம் அந்த பொழுது கழியும் என்று அவளையறியாமையே! கற்பனை மனதில் விரிந்தவாறுதான் மகவுக்கு கதையும் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதுதான் வாணன் கத்தியவாறு உள்ளே வர திடுக்கிட்டு நிலா எழுந்து நிற்கும் பொழுதே! தந்தையின் குரலைக் கேட்டு சிசு சந்தோசத்தில் துள்ளிக் குதிக்க நிலா இருந்த மனநிலையில் அவளையும் மீறி வாணனின் கையை இழுத்து அவள் மணி வயிற்றில் வைத்திருக்க, குழந்தையின் அசைவை நன்கு உணர்ந்தவனோ! தேகம் சிலிர்த்து நின்று விட்டான்.
காலையில் பட்டுப்புடவையில் இருந்தவள் அவ்வளவு கனமான புடவையில் இருந்ததால் மூச்சு முட்டுகிறது என்று ஒரு மெல்லிய நைட்டியை வேறு அணிந்திருக்க, வாணன் கை வைத்திருந்த இடத்தில் அசைவோடு தடங்கலும் தெரிய அதிசயமாக பார்த்திருக்கலானான்.
“பாத்தீங்களா.. பாத்தீங்களா? உங்க குரலை கேட்டதும் எப்படி அசையிறான்னு. சரியான அப்பா கொண்டானா இருப்பான் போல” தான் கற்பனையில் கண்ட காட்ச்சி போலவே! நடப்பதைக் கண்டு நிலா சிரிக்க 
“பையனா இருந்தா அம்மா பிள்ளையா இருப்பான். பொண்ணா இருந்தாதான் அப்பா செல்லமா இருப்ப இல்ல” என்று வாணன் சுசிலாவின் நியாபகத்தில் பேச
“ஆமா பொண்ணுகளுக்கு அப்பான்னு ஹீரோ. எனக்கும் என் அப்பாவை ரொம்ப பிடிக்கும்” என்று நிலா யதார்த்தமாக சொல்ல, அவள் யார் மகள் என்று உணரவும் முகம் இறுகிய வாணன் அவள் வயிற்றிலிருந்த கையை எடுத்துக் கொண்டு
“அப்போ பொண்ண பெத்துக் கொடுத்துட்டு இங்கிருந்து நடையை கட்டுற வழிய பாரு” என்று கடுமையாக பேசலானான்.
நெஞ்சம் முழுவதும் நிலாவின் மீது வஞ்சம் கொட்டிக் கிடந்தாலும் “நிலா” என்ற பெயர் வாணனுக்கு மந்திரச் சொல் என்று அவன் மனம் மட்டும் அறிந்த ரகசியம். அந்த சொல்லை அவன் மூளையை அடைய அவனது கோபம் விடுவதில்லை. அதையும் தாண்டி காதல் எட்டிப் பார்க்கும் நேரம் நிலாவே! அவனது கோபத்தை தூண்டி விடுகிறாள்.
திடுக்கிட்ட நிலா “என்னாச்சு இவனுக்கு நல்லாதானே! பேசிக்கிட்டு இருந்தான்” என்று பார்த்தவள், அவன் முகம் இறுகி இருப்பதைக் கண்டு “இப்போ நான் உங்களுக்கு என்ன பண்ணிட்டேன்னு என்ன இப்படி துரத்துறதுலையே! குறியா இருக்கீங்க?” அவனை நன்றாக முறைக்க ஆரம்பித்தாள்.
“நீ பண்ணது எல்லாம் போதும். நான் பட்ட மனவேதனையும் போதும். ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத. இங்க இருந்துகிட்டு இன்னும் என்ன பண்ண காத்துகிட்டு இருக்க? உன் வேஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. உனக்கு இதுதான் கடைசி வார்னிங். குழந்தையை பெத்து கொடுத்துட்டு போய்டு” என்றவனின் முகம் கடுகடுவென இருந்தது.
வாணனின் வார்த்தைகளால் காயப்பட்ட நிலாவின் இதயம் அவள் கோபத்தையும் ஏற்றி விட்டிருக்க “என் குழந்தை. பத்து மாசம் நான் கஷ்டப்பட்டு சுமக்கிறேன். நான் எதுக்கு உங்க கிட்ட கொடுக்கணும். எட்டு மாசமா எங்க போய் இருந்தீங்க? நீங்க கேட்ட உடனே! நான் கொடுத்துடுவேனா? கொடுத்துட்டுதான் மறுவேலை பார்ப்பேன்” நிலா கத்த ஆராம்பித்தாள்.
அவள் கண்களை உற்றுப் பார்த்து “நான் இல்லாமதான் உனக்கு குழந்தை வந்துச்சா?” கேலியாய வாணன் கேக்க
“பழிவாங்க துடிச்சவரு குழந்தையை பத்தி யோசிக்கல இல்ல. இப்போ மட்டும் என்னவாம்? பேசாம போய்டுங்க. இது என் குழந்தை நான் தரமாட்டேன்” தனது வயிற்றில் இருகைகளையும் வைத்துக்கொண்டு மறைத்தவாறு நிலாவும் கடுமையாக எதிர்களானாள்.
அவள் கழுத்தை பிடித்தவன் “ரொம்ப பேசாத. குழந்தையே வேணாம்னு நெனச்சி இருந்தா.. அதுக்குண்டான வேலைய பார்க்க எனக்கு தெரியாதா என்ன? தற்கொலை பண்ணிக்கிறேன்னு சொன்னதாலதான் போக விட்டேன். அன்னக்கி ப்ரெக்னட்டா இருக்குற விஷயம் மட்டும் எனக்கு தெரிஞ்சிருந்தா அப்போவே உன்ன உள்ள இழுத்து அடச்சீ வச்சிருந்திருப்பேன்” என்று கர்ஜிக்க,
அவன் பேச்சின் முதல் பாகம் மனதுக்கு இதமாக இருந்தாலும் கடைசியாக சொன்னது நரசமாக ஒலிக்க, அவன் கையை உதறி விட்டவள் “இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்த நிலா என்னைக்கோ! செத்துட்டா. போங்க சார் போய் ஊருக்கு போற வழிய பாருங்க” என்று கிண்டல் செய்ய
“ஏய்..” என்று வாணன் கத்த குழந்தை மீண்டும் உதைத்திருக்கும் போலும் நிலா வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட
“என்னாச்சு? என்னாச்சு?” வியர்த்திருக்கும் நிலாவின் முகம் பார்த்து வாணன் பதறி துடித்தான்.
தன் மகவின் அன்னை என்ற அக்கறையா? தன் மனைவி என்ற அக்கறையா? அல்லது நிலா என்ற பெண் மீது தனியான அக்கறையா? அக்கறையையும் தாண்டிய காதலா? அந்த நொடி அச்சம் மட்டும் உருவாக்கி வாணனின் உள்ளம் முழுவதும் ஊடுருவி இருந்தது என்பது மட்டுமே! உண்மை.     
“தண்ணி தண்ணி” என்றவள் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை காட்ட அதை எடுத்து அவளுக்கு புகட்டியவன் மீண்டும் என்ன ஆச்சு என்று விசாரிக்க, படபவென்று வருது என்று நிலா சொன்னதும் அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்து போர்வையையும் போர்த்தி விட
“தேங்க்ஸ்” என்ற நிலா கண்களை மூடிக்கொள்ள, நெற்றியில் விழுந்திருந்த அவள் கூந்தலை ஒதுக்கி விட்டு லேகாவை தேடிச் சென்றான் வாணன்.
நிலா வாணனுக்கு கோபத்தை தூண்டுபவளாகிறாள். நிலா வாணனுக்கு காதலும் ஆகிறாள். கோபம் வளர்பிறையாகி முழுநிலவாக உருமாறி காதலை தேய்பிறையாக்கி விடுமா? அல்லது காதல் பௌர்ணமியாகி கோபத்தை வென்று விடுமா?  
“வா வாணா…. காபி சாப்பிடுறியா? அண்ணி எப்படி இருக்காங்க? இப்போ முன்ன விட நல்ல முன்னேற்றம் இருக்குனு டாக்டர் சொன்னாரு” தனது அருகில் இருந்த இருக்கையை காட்டியவாறே! லேகா வரவேற்க
“நிலாவுக்கு என்ன பிரச்சினை?” லேகா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது கேள்வியையே! பதிலாக கொடுத்தான் வாணன்.
“நிலாவுக்கு என்ன பிரச்சினை? ஒன்னும் இல்லையே!” புரியாமல் லேகாவும் வாணனிடம் கேள்வியாக ஏறிட்டாள்.
லேகாவின் பதிலில் வாணன் நிலா நடித்திருப்பாள் என்று சந்தேகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளும், சில்லிட்ட அவளது கைகளும், நடுங்கும் அவளது தேகமும் அவள் நடிக்கவில்லை என்று அவனுக்கு உறுதியளித்திருந்தன. அவளுக்கு எதோ ஒரு பிரச்சினை இருக்கு அது தன்னால் தானா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று வாணனுக்கு தெரிய வேண்டிய அவசியம் இருந்தது. 
“பேசிக்கிட்டு இருக்கும் போதே! படபடன்னு வருதுன்னு சொல்லுறா?” என்று கேள்வியாகவே! நிறுத்தி லேகாவின் முகம் பார்த்தான் வாணன்.
“பேசி கிட்டு இருந்தியா? இல்ல அவளை டென்ஷன் பண்ணுற மாதிரி பேசினியா? ப்ரெக்னங்சியால ஏற்கனவே! அவளுக்கு பிபி இருக்கு. அவளை டென்ஷன் படுத்துற மாதிரி பேசி ஏதாவது பண்ணி வைக்காத” மருமகனை ஏறிட்டாள் லேகா.
“இங்க பாருங்க அத்த அவளை என்ன நோக்கத்துக்காக நீங்க இங்க வச்சிருக்கீங்கனு எனக்கு தெரியாது. குழந்தை பொறந்த பின்னாடி அவளை இங்க இருந்து அனுப்பிடுங்க” முகம் இறுகியவனாக வாணன் சொல்ல 
“ஒஹ்.. புள்ள தாச்சி என்றதும் கருணை காட்டுறியாக்கும். குழந்தையையும் அம்மாவையும் எங்க அனுப்பணும்னு சொன்னா அங்கேயே! அனுப்பிடுறேன். நேரா சொர்க்கத்துக்கு அனுப்பவா?” லேகா கிண்டல் தொனியில் கேக்க
“அத்த..” என்று கத்தியவன் “என்ன பேசுறீங்க? நம்ம வீட்டு வாரிசு நமக்கு வேணும். அவ இந்த வீட்டுக்கு வேணாம். அவள எங்கயாவது அனுப்புங்க. அவ இருந்த ஆசிரமத்துக்கு அனுப்பிடுங்க அதுதான் அவளுக்கு சேப்” 
ஏற்கனவே! ஒரு முடிவோடு இருப்பவனை பார்த்து “ஓஹ்.. குழந்தை மட்டும் வேணும் அம்மா வேணாமா? அப்போ எதுக்கு அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டின? தாலி கட்டாமலையே! புள்ளைய கொடுத்துட்டு போய் இருக்கலாம்ல. நீயும் உனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல. என்ன? அப்படி செய்ய உன் ரெத்தம் தடுத்திருச்சோ!” வரலாறு திரும்புகிறதோ! என்று லேகா கோபமாக பேச
என்றுமே! கோபப்படாத அத்தை கோபமாக பேசியதை வாணனும் கொஞ்சம் அதிர்ந்தான். “இங்க பாருங்க அத்த. அவளால நான் பட்ட வலியும் வேதனையும் அளவில்லாதது. அவளுக்கு தண்டனை கொடுக்கணும்னுதான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன். என் பக்க நியாயத்தை கேக்கக் கூட இல்ல. பொண்ணு என்கிறதால அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க. நீங்க அவளை கூட்டிட்டு வந்ததுளையும் ஒரு நல்லது நடந்திருக்கு என் வாரிசு பத்திரமா இருக்கு. இல்லனா அத அவ அழிச்சிருப்பா. நீங்க பண்ணுனவரைக்கும் போதும். எனக்கும் அவளுக்கும் நடுவுல வராதீங்க. என் குழந்தையை என்னால தனியா வளர்க்க முடியும். ஏன் நீங்க பாத்துக்க மாட்டீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல அம்மா முழுசா குணமாகி வந்துடுவாங்க அவங்க பாத்துப்பாங்க” வீம்பாக வாணன் பேச
லேகாவுக்கு கோபம் தலைக்கேறியது. “உனக்கு குழந்தைதான் வேணும்னா ஒரு வாடகை தாய் மூலம் பெத்துக்க வேண்டியது தானே! எதுக்கு இந்த பொண்ண கஷ்டப்படுத்துற? ஒரு ஆண் தனியா வளக்குற குழந்தைக்கும், ஒரு பெண் தனியா வளக்குற குழந்தைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு வாணா. பாவத்துலையும் மகா பாவம் பெத்த தாய்க்கு குழந்தைக்கு தாய்பால்  கொடுக்க விடாம பண்ணுறதுதான் அந்த பாவத்தை பண்ணிடாத” என்ற லேகா குலுங்கிக் குலுங்கி அழ,
லேகாவின் வார்த்தைகள் வாணனை நன்றாகவே பதம் பாத்திருக்க லேகா எதற்காக அழுகிறாள் என்று புரியாமல் குழம்பினான்.
“என்னாச்சு அத்த? என்ன பிரச்சினை?” என்றவாறு வாணன் லேகாவின் தோளில் கைவைக்க கண்ணை துடைத்துக் கொண்டு தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாள் லேகா.
“நீ நிலாவை சரியா புரிஞ்சிக்கல வாணா.. பழிவாங்கற மனசாலையே! அவள பாக்குற. அவளா உன் குழந்தையை அழிக்க நினைப்பா” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றவள் நிலா அறியாமல் எடுத்து பத்திரப்படுத்திய அத்தனை வீடியோக்களையும் கொடுத்து “பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வா” என்று கூறி விட்டு செல்ல வாணனும் பொறுமையாக ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.
நிலா அங்கு வந்து சேர்ந்ததிலிருந்து எடுக்கப்பட்டிருந்ததால் வரிசை கிரமமாக, அவளது வயிற்றின் வளர்ச்சியும் தெளிவாக இருக்க, வாணனுக்கு புல்லரித்தது.
பொறுமையாக, நிலா குழந்தையுடன் பேசும் அழகு, கதை சொல்லும் அழகு, ஒவ்வொன்றையும் விளக்கும் அழகு என்று பல பரிமாணங்கள் அங்கிருக்க, கண்ணை அகற்றது அந்த காணொளியை பாத்திருந்தான் வாணன்.
லேகா சொன்னது போல் நிலாவிடமிருந்து குழந்தையை பிரிப்பது மகா பாவம் என்பதை மட்டும் உணர்ந்துகொண்ட வாணனுக்கு நிலாவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் மனம் இன்னும் முரண்டியது.
“அவள் செய்ததற்கு தண்டனை கொடுத்தாயிற்று. நீ யாரோ!  நான் யாரோ! என்று அன்றே பிரிந்து சென்றவர்களை குழந்தையின் வடிவில் விதி மீண்டும் இணைக்கப் பார்க்கிறது. நிலா செய்த அனைத்தையும் மன்னிக்கலாம். மறக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அவள் செய்தவைகளை சுமந்துகொண்டு அவளோடு சுமூகமான வாழ்க்கையை கண்டிப்பாக வாழ முடியாது. நிலா ஈஸ்வரனின் மகளாக இருக்கும் வரைக்கும் இந்த ஜென்மத்தில் அவளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
யாருக்கும் தெரியக் கூடாது என்றுதான் நான்கு சுவத்துக்குள் நான்கு பேர் மட்டும் இருக்க தாலி கட்டினேன். ஆனால் அவள்தான் என் மனைவி என்று ஊர் அறிந்துகொண்டு விட்டது. இருந்துட்டு போகட்டும். என் மனைவியாக, என் குழந்தைக்கு தாயாக, இந்த சமஸ்தானத்துக்கு சொந்தக்காரியாக, என் அத்தையின் மகளாக கூட இருக்கட்டுமே! ஆம்… ஆம்… எல்லாமாகி இருந்துட்டு போகட்டும். ஆனால் என்னோடு சேர்ந்து அவளால் வாழ மட்டும் முடியாது இதுதான் நம் இருவரினதும் விதி” ஒரு முடிவோடு வாணன் லேகாவை காண சென்றான்.
“வீடியோ எல்லாம் பாத்தியா வாணா?” ஒரு எதிர்பார்ப்போடு லேகா கேக்க
“ஆ.. எல்லாம் பார்த்தேன் அத்த. நீங்க சொல்லுறது போல அம்மா கிட்ட இருந்து குழந்தையை பிரிக்கிறது மகா பாவம். சோ குழந்தை நிலா கிட்டயே! இருக்கட்டும். அது மட்டுமா? உங்க கூட இருந்தா உங்களுக்கும் உங்க செல்ல மகளை கொஞ்சினது போல இருக்கும். நானும் நிம்மதியா என் வேலைகளை செய்ய முடியும்”
நிலா இங்குதான் இருப்பாள். நான் அங்குதான் இருப்பேன் என்று தெளிவாக கூறினான் வாணன்.
அவனது பதிலில் அதிர்ந்த லேகா “என்ன சொல்லுற? ரெண்டு பேரும் ரெண்டு இடத்துல இருந்துகிட்டு எப்படி குடும்பம் நடத்த போறீங்க?”
“என்ன அத்த பேசுறீங்க? நம்ம வம்சம் என்ன சாதாரண வம்சமா? அரச வம்சம். எத்தனை போருக்கு போய் இருப்போம். மாசக் கணக்கா மனைவியையும், மக்களையும் போட்டுட்டு அவங்களுக்கு என்ன ஆச்சோன்னு தெரியாம யுத்தம் புரிஞ்சி இருப்போம். ஆனா பாருங்க இப்போ காலம் மாறி போச்சு. டெக்னோலஜி வளர்ந்ததால் டெய்லி வீடியோ கால்ல என் புள்ள கிட்ட பேசுறேன். மாசத்து ஒருக்கா வந்து பாத்துட்டு போறேன். இது போதாதா?” எதிர்காலத்தில் நடப்பவைகளை கணிப்பவன் போல் சொல்ல கடுப்பானாள் லேகா.
“ஏன் டா அப்படி என்ன டா உனக்கு அவ மேல கோபம்? எதோ சின்ன வயசுல தெரியாம பண்ண தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்ததே! தப்பு. இதுல அவள ஒதுக்கி வச்சி வாழுறேன்னு சொல்லுறா? இதெல்லாம் ஒரு வாழ்க்கையா டா?” வாணனை வழிக்கு கொண்டு வரும் வழி தெரியாமல் லேகா கோபத்தில் கத்த ஆரம்பித்திருந்தாள்.
“இங்க பாருங்க அத்த. நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் நீங்க உங்க முடிவை சொல்லிடீங்க, நானும் என் முடிவை சொல்லிட்டேன். ஏன் ஏத்துக்க மாட்டேன்னு சொல்லுறீங்க? ஒத்துக்கோங்க” லேகாவின் கன்னங்களை பிடித்து ஆட்டியவாறே கிண்டல் செய்வது போல் பேசினான் வாணன்.
அவனின் கைகளை தட்டி விட்ட லேகாவுக்கு ஆயாசமாக இருந்தது. இவர்களை ஒன்று சேர்க்கவே! முடியாதா? வாணனை சரி கட்டினால் நிலாவிடம் பேசி புரியவைக்கலாம் என்று எண்ணி இருக்க, “இவன் என்னடான்னா கழுவுற மீன்ல நழுவுற மீனா இல்ல இருக்கான். என்ன பண்ணுறது என்று தெரியலையே!” புலம்பியவாறு லேகா இருக்க வாணனின் அலைபேசி அடித்தது.
அதில் கூறிய செய்தியை கேட்டு உடனே! சென்னைக்கு புறப்பட்டான் துகிலவாணன் மௌரி. 

Advertisement