Advertisement

அத்தியாயம் 3
திருமணமாகி ஆறுவருடங்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வடிவேல் கோகிலவாணி தவமிருந்து பெற்ற மகள் அனுபமா. அவள் பிறந்த பிறகுதான் வடிவேலின் தொழிலில் விருத்தி, லாபம், வீட்டை பெரிதாக கட்டினார் என்று ஏகப்பட்டதை சொல்வார்.
மூத்தமகள் வரம் கொடுத்த தேவதை. அவள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்க சொத்து முழுவதையும் கூட வடிவேல் அனுபமா ஒருத்திக்கே கொடுத்து விடுவார்.
அவள் சொன்னால் எதையும் செய்யக் கூடிய தந்தையாகத்தான் இருக்கிறார் வடிவேல். வரதராஜன் சம்பந்தம் பேசி வந்த உடனே மகளை அழைத்து கேட்டது “நீ யாரையாவது விரும்புகிறாயா?” என்றுதான்.
“என்னங்க நீங்க?” என்று கடிந்த மனைவியை அதட்டி வடிவேல்
“சென்னைல இருந்து வரன் வந்திருக்கு. எனக்கு என் பொண்ணு சந்தோசம் முக்கியம். ஜாதி, மதம் பார்த்து அவ சந்தோசத்தை குழி தோண்டி புதச்சிட மாட்டேன். நீ சொல்லுமா” மீசையை முறுக்கி விட்டவாறே மகளை ஏறிட்டார்.
ஹரியும் அங்குதான் சற்று தள்ளி அமர்ந்து ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான். அவன் காதில் வடிவேல் கேட்டது விழத்தான் செய்தது. அவனுக்கு தேநீர் கொண்டு வந்த அவன் மனைவி நித்யகல்யாணியின் காதிலும் விழத்தான் செய்தது.
அவள் சங்கடமாக கணவனை ஏறிட, கண்களாளேயே ஆறுதல் சொன்னவன் குழந்தையை பார்க்குமாறு கூறி உள்ளே அனுப்பி வைத்தான்.
“நான் உங்க பொண்ணுப்பா. சின்ன வயசுல நான் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் நீங்க வாங்கி கொடுத்திருக்கிறீங்க. அதுக்காக பட்டாசு வாங்கி கேட்டப்போ வாங்கிக் கொடுத்தீங்களா? இல்லையே. பெரியவங்க இல்லாம தனியா வெடிக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுத்தவங்க நீங்க. எனக்கு நல்லது எது? கெட்டது எது? என்று உங்களுக்கு தெரியாதா? நீங்க பாக்குற மாப்பிளையத்தான் நான் கட்டிக்குவேன். ஆனா எம்.எட் படிக்கணும் என்கிறது என் கனவு” என்றாள்.
அனுபமா Bsc , Msc முடித்து பி.எட் மற்றும் எம்.எட் சென்னையில் படிக்கலாம் என்றிருந்தாள். சென்னைக்கு சென்று படிக்க அப்பா சம்மதிப்பாரா? எவ்வாறு கேட்பது என்ற குழப்பத்தில் இருந்தாள். காலேஜிலிருந்து வர கொஞ்சம் லேட்டானாலும் காலேஜ் வாசலுக்கே வந்து விடுபவர் சென்னை சென்று படிக்க அனுமதிப்பது சந்தேகம்தான். கேட்கலாமா? வேண்டாமா? என்று அனுபமா மனதுக்குள் பட்டிமன்றம் நடாத்த வடிவேல் அவள் திருமணத்தை பற்றி பேசியிருந்தார்.
மகள் காலேஜ் படிப்பை முடித்து விட்டாள். அவள் ஆசைப்படி ஊரிலையே ஏதாவது ஒரு வேலையை பார்க்கட்டும். சம்பளம் என்று என்ன பெரிதாக கொடுத்து விடப் போகிறார்கள்? ஆரம்பத்தில் ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுப்பார்கள். அதெல்லாம் வடிவேலுக்கு பெரிய காசே கிடையாது. அனுபமாவின் சந்தோசம் முக்கியம் முட்டுக்கட்டையாகவும் இருக்க விரும்பவில்லை. அவளது பாதுகாப்பு அதை விட முக்கியம். அதனால் வேலைக்காக வெளியூர் எங்கும் அனுப்ப வடிவேலுக்கு இஷ்டமில்லை. ஆனால் அவளோ மேற்கொண்டு படிக்க வேண்டும் என்கின்றாளே என்று அவளை யோசனையாக பார்த்தார்.
“படிக்கிறதுல என்னமா இருக்கு. உனக்கு என்ன வேணுமோ படி” என்று அவர் ஆரம்பிக்க,
“அவ சென்னைல போய் படிக்கணும் என்று சொல்லுறா. கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு அனுப்பத்தானே போறீங்க? வெளியூர் அனுப்ப மாட்டீங்களா? ஒன்னு அவளை கல்யாணம் பண்ணி அனுப்புங்க. இல்ல அவ ஆசைப்படி படிக்க வைங்க. கல்யாணம் பண்ணிக் கொடுத்தா பொண்ண ஒரேயடியா பிரியனும். படிக்க அனுப்பி இப்போவே மகளை பிரிஞ்சி இருந்து பழகிக்கோங்க” என்றாள் கோகிலவாணி.
வடிவேலுக்கு உண்மை சுட்டாலும், மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்பவரல்லவே. அவ்வளவு தூரம் மகளை தனியாக அனுப்ப வேண்டுமா? என்று வடிவேல் யோசிக்கும் நேரம்தான் இனியனின் சம்பந்தமும் வந்தது. மகளை சென்னையிலையே கட்டிக் கொடுத்தால் அவள் விருப்பப்பட்டது போல் பாதுகாப்போடு அவள் விரும்பிய படிப்பையும் படித்து விட்டு வேலையையும் பார்ப்பாள் என்ற நப்பாசையில் வரதராஜனின் சம்பந்தத்தைதை ஏற்றுக்கொண்டார் வடிவேல்.
ஆகா மொத்தத்தில் வடிவேல் வரதராஜன் சொந்தக்காரன், ஜாதிக்காரன் என்று மட்டும் பார்க்கவில்லை. அந்த குடும்பத்தில் வாக்கப்பட்டால் தன் மகளின் கனவும் நிறைவேறும் என்று கருதித்தான் திருமணத்தை முடிவு செய்தார். அவருக்கு அனுபமாவின் சந்தோசம் முக்கியம். அதை அனுபமாவும் நன்கு உணர்ந்த்துத்தானிருந்தாள்.  
இனியனை பற்றி விசாரித்ததில் சொந்தபந்தங்கள் “எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத நல்ல பையன். கைநிறைய சம்பாதிக்கிறான்” என்று ஒரே மாதிரிதான் கூறியிருந்தனர். அவனுடைய காதல் விவகாரம் அவன் குடும்பத்தாருக்கே இப்பொழுதுதான் தெரியும். சொந்தபந்தங்களுக்கு எங்கே தெரிய போகிறது?  
“பார்த்தியா என் மகள” வடிவேல் பெருமையாக மனைவியை பார்த்துக் கூற,
“நான் தான் வளர்த்தேன்” கழுத்தை நொடித்தாள் கோகிலவாணி.
“அப்பா அப்போ நான் யாரையாச்சும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்ல” நிலுபமா சிரிக்க,
“கால ஒடிச்சிடுவேன்” என்று அன்னை எகிற,
“அக்காவுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?” நிலுபமா முறைக்க,
“அம்மா முதல்ல அவ யாரை லவ் பண்ணுறான்னு கேளுங்க” சத்தமாக சிரித்தாள் அனுபமா.
புரியாத கோகிலவாணியோ முறைத்தவாறே “யாரடி அவன்” என்று கேட்க
“இப்போதைக்கு நீரஜ் சோப்ரா. இதுலயே பிக்ஸ் ஆகிடுவேனா தெரியல. ஒருவேளை மாறினாலும் மாறுவேன்” என்று நிலுபமா சொல்லி முடிக்கவில்லை.  
“அடி செருப்பால, வடநாட்டுக்காரன் கேக்குதா உனக்கு” கோகிலவாணி கையிலிருந்த தும்புத்தடியை சின்னமகளின் புறம் வீச சத்தமாக சிரித்தவாறே வடிவேல் சின்ன மகளை இழுத்து தன் பக்கம் நிறுத்தியிருந்தார்.
“அம்மாடி உனக்கு எதுல விளையாடுறது என்று தெரியல. பாரு உன் அம்மா பத்ரகாளியாகிட்டா. நாட்டு நடப்புக் கூட தெரியாத பட்டிக்காட இல்ல நான் கட்டியிருக்கேன்” என்று மனைவியை சீண்டியவாறே மீண்டும் சிரிக்க,
அனுபமா நீரஜ் சோப்ரா யார் என்று கூறவும், கோகிலவாணி நிலுபமாவை முறைத்தவாறே “இவ விளையாட்டுக்கு சொல்லுறான்னு கண்டுக்காம இருந்தீங்க ஒருநாள் இல்ல ஒருநாள் எவனயாச்சும் இழுத்துக்கிட்டு ஓடிடுவா பாத்துக்கோங்க” கணவனை பிள்ளைகளின் முன் திட்ட முடியாமல் தன்னிடம் விளையாடுவதே பிள்ளைகளின் வேலையென்று திட்டியவாறே உள்ளே சென்று விட்டாள்.
வரதராஜனும் தங்கள் பிள்ளைகளை பாசத்தையூட்டிதான் வளர்த்தார், வடிவேலும் தங்கள் பிள்ளைகளை பாசத்தையூட்டிதான் வளர்த்தார். இருவரின் வளர்ப்பிலும் வித்தியாசங்கள் இருந்தன.
இது நெருப்பு இது சுடும். என்பதை மேலோட்டமாக கூறி விட்டு விட்டுவிடுபவர் வரதராஜன். அவர் பெத்ததோ ஆண் மக்கள் ஆராய்ச்சியில் இறங்காமல் இருப்பார்களா? எல்லா பக்கமும் கையை சுட்டுக் கொண்டுதான் பாடம் கற்றுக் கொண்டனர்.
வடிவேலோ வரதராஜனுக்கு நேரெதிர். இது நெருப்பு சுடும் என்பதோடு நெருப்பின் பலன், சாதக, பாதகங்கள் உட்பட, தீக் காயம் எவ்வாறு இருக்கும் என்பதுவரை எடுத்துக் கூறுபவர். அதனால் அனுபமாவும், நிலுபமாவும் எந்த ஒரு காரியத்தை செய்ய முன்பும் தீர்க்கமாக யோசித்து அலசியாராய்ந்தே முடிவு செய்வார்கள்.
அனுபமா மாப்பிள்ளை பார்க்கும் முடிவை தந்தையிடம் கொடுத்து விட்டாள் தான். வரதராஜன் பேசியதை வைத்து இனியனுக்கும் இந்த திருமணத்தில் சம்மதம், வேலையின் காரணமாக அவனால் ஊருக்கு பயணம் செய்து வர முடியவில்லை என்று நினைத்தாலே ஒழிய அவனுக்குத் திருமணத்தில் சம்மதமில்லை என்று எண்ணவில்லை.
நிலுபமாவும் “என்னக்கா மாமா போன்ல கூட பேச மாட்டாரா? அதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சே” என்று கேட்டிருக்க,
“அவர் போன் நம்பரையே மாமா கொடுக்கல, அப்போ நம்ம நம்பரை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறியா?” என்று தங்கையை கேட்க,
“அவனவன் விண்வெளிக்கு ராக்கெட் விட்டுகிட்டு இருக்கான். உன் மாமனார் இன்னும் பத்தாம் பசலித்தனமாகவே யோசிக்கிறார் போல. உன் ஆளு பாவம் தான் உன் போட்டோ பார்த்து ஏங்கிக்கிட்டு இருக்குறாராய்க்கும்” தங்கை அக்காவை கிண்டல் செய்ய அங்கே இனியனுக்கு அனுபமாவின் புகைப்படம் கூட பகிரப்படவில்லையென்பதுதான் உண்மை. விஷயத்தை கூறிய உடனே அவன்தான் ஜான்சியை காதலிப்பதாக கூறி பிரச்சினை செய்ய ஆரம்பித்து விட்டானே.
திருமண அழைப்பிதழில் கூட வரதராஜனின் அலைபேசி எண் மட்டும்தான் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தமையால் அனுபமாவால் இனியனோடு பேச முடியவில்லை.
தலையில் அடித்துக் கொண்ட நிலுபமாவோ “அதான் நம்ம வீட்டு அலைபேசி எண்ண கொடுத்திருக்கோமே மாமாவுக்கு பேசத் தெரியாதோ? எங்கயோ இடிக்குதே. என்று சந்தேகம் எழுப்ப” 
தந்தையிடம் இதை பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்று அனுபமா யோசித்துக் கொண்டிருந்த வேளைதான் இனியனின் குடும்பம் திருமணத்துக்காக ஊருக்குள் வந்தனர்.
அதான் கல்யாணமே ஆகா போகுதே போன்ல பேச வேணாம். நேர்லயே பேசிக்கலாம் என்று அவர் நினைக்கிறார் போலும் என்று தன் மனதை சமாதானப்படுத்தி வைத்திருந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இனியன் அலைபேசி அழைப்பு விடுத்திருக்க, அவன் பேசியதை கேட்க முடியாமல் போனது விதியின் சதிதான்.   
இனியன் என்ன சொன்னானென்று திரும்ப அலைபேசி அழைப்பு விடுத்து கேட்க அவனது அலைபேசி எண்ணும் தெரியாதே. வரதராஜனின் எண்ணுக்கு அழைத்து பேசிடத்தான் முடியுமா?
“ஏதோ முக்கியமான விஷயமென்று சொன்னாருடி. என்னானு தெரியலையே” இரவு பகல் பாராது புலம்பிய அனுபமாவை திட்டித்தான் நிலுபமா தூங்கவே வைப்பாள்.
திருமண மேடையில் கூட “அந்த முக்கியமான விஷயம் என்னவாக இருக்கும். அதை இப்பொழுது கேட்க முடியாதே” என்று மண்டையை குடைந்துக் கொண்டிருந்தாள்.
“அதான் கல்யாணமாகி முதலிரவு அறையில் மாமாவை தனியா சந்திக்க போறியே நீயே போய் என்னனு கேட்டு தெரிஞ்சிக்க” புலம்பும் அக்காளை கிண்டல் செய்து அனுப்பி வைத்தாள் நிலுபமா.
இனியன் சொன்னதை திரும்பக் கேட்டால் முறைப்பானோ என்று பதைபதைப்போடுதான் உள்ளே வந்தாள் அனுபமா. கதவை தாளிட்டவள் அவனை நெருங்க அவனோ இவளை நெருங்கி இவள் அணிந்திருந்த புடவையை உருவியிருந்தான்.
அவள் உடுத்தியிருந்ததோ ஓகாந்தி துணியாலான புடவை. லேசான எடையுடைய இளம் சிவப்பு நிறத்திலான புடவையில் அவளது எலுமிச்சை நிற இடை தனியாக நன்றாகவே தெரிந்தது. அவளை ரசிக்கும் மனநிலையிலையா இனியன் இருந்தான்?  
எந்த வேலைப்பாடுமில்லாத இந்த புடவையை அன்னம்தான் தேர்வு செய்திருந்தாள். அனுபமாவை சாந்திமுகூர்த்தத்துக்கு அலங்கரிக்கும் பொழுதே அதிகம் நகை வேண்டாம். எந்த பின்னையும் புடவையில் குத்தி புடவையை கிழிக்க வேண்டாம் என்று கூறியிருந்தாள். அவள் எந்த அர்த்தத்தில் கூறியிருந்தாளோ தெரியவில்லை. இனியனின் கண்ணை மறைத்த கோபத்துக்கு புடவையும் உதவியிருந்தது.     
உள்ளே வந்தவள் கணவனைக் கண்டு காலில் விழப் போக, கையிலிருந்த பாற்செம்பையும் தட்டி விட்டு, கட்டியிருந்த புடவையும் உருவி அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது பாய்ந்தால் அனுபமா என்னவென்று நினைப்பாள்?
இனியனின் கோபம் கண்களை மறைக்க, அனுபமாவின் கைகளை இறுக்கிப் பிடித்தவன் அவள் இதழ்களை முற்றுகையிட்டிருந்தான்.
அவனின் கோபத்தை அறியாதவளோ அவன் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினாள், திடீர் தாக்குதலில் மூச்சு விட முடியாமல் திண்டாடினாள்.
முதல் முத்தம் முரட்டுத்தனமாக அனுபமாவை ஆட்கொண்டிருந்தாலும், இந்த அனுபவம் அவளுக்கு புதிது. நாடி, நரம்பெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் மேனியில் சிலிர்ப்பு ஓடி மறைய, அதை கூட உணரும் மனநிலையில் இனியன் இல்லை.
அவன் மனம் முழுவது பழிவாங்கும் வெறி மட்டுமே இழையோடியிருந்தது. இவள் மட்டும் திருமணத்தை நிறுத்தியிருந்தால் என் ஜான்சி தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருக்க மாட்டாள். ஜான்சியின் இன்றைய நிலைமைக்கு அனுபமா ஒருத்தியே காரணம், அவளை ஒரு வழி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்ன செய்கிறோம் என்று உணரும் மனநிலையில் இல்லாது அவள் பெண்மையை வேட்டையாடுவதில் களமிறங்கியிருந்தான்.
“அலைபேசி விடுப்பு விடுத்து இந்த புடவையைத்தான் முதலிரவுக்கு கட்டிக்கொண்டு வர சொன்னாரோ?” அக்கணம் அனுபமாவின் எண்ணத்தில் உதிக்க, அவளை மேலும் சிந்திக்க விடாமல் இனியன் மேலும் முன்னேறி இருந்தான்.
அடிவயிற்றில் உணரும் அந்த உணர்வு மெய் தீண்டி, உயிர் தீண்டி, இதழால் உருக வைத்து சுனாமிக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு. அவன் கரங்களை தடுக்கவா? இதழ்களை தடுக்கவா? அவன் தன் மீது ஆசைக் கொண்டு இழைவதாக எண்ணியவள் அவனை தடுக்க முயற்சி கூட செய்யாது என்னை எடுத்துக்கொள் என விட்டுக்கொடுத்து விட்டாள்.
இது அவள் தேகம்தான். தினம் அவள் தொடும் தேகம்தான். உணரும் தேகம் தான். அவன் தொடுகையில் மட்டும் இவ்வளவு குழைவது ஏன்? அதுவும் அவனை இன்றுதான் சந்தித்திருக்கின்றாள். என்ன விந்தை? என்ன மாயை?
மூளை சிந்திப்பதும், தேகம் சுகத்தில் குழைவதும், இதயம் தடதடப்பதுமாக மௌனத்தையே மொழியாக்கினாள் பெண்ணவள்.      
அனுபமாக்குள் அச்சமும், நாணமும் போட்டிப் போட, இனியனுக்குள் கோபமும், வெறியும் கண்ணை மறைக்க, என்றுமே சந்தித்திராத இருவரும் எந்த விதமான பேச்சு வார்த்தைகளுமின்றி உடல் மொழிகளினூடே பேசிக் கொண்டனர்.
அனுபமா இனியனை தடுக்க முயற்சி செய்திருந்தாலோ, விட்டு விலக முயற்சி செய்திருந்தாலோ அல்லது வாய் திறந்து பேசியிருந்தாலோ இனியனின் புத்தி விழித்துக் கொண்டிருக்கும். அவள் எதையோ நினைத்து அவனோடு இழைய, கோபத்தில் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தவனும் அவள் இசைந்து கொடுத்ததில் அவளை மென்மையாகத்தான் கையாண்டான்.
அவள் மேனியில் வீசிய மல்லிகையின் வாசத்தில் மயங்கினானா? மஞ்சளின் வாசத்தில் கிறங்கினானா? பள்ளியறை பாடத்தை பெண்ணவளுக்கு பொறுமையாக கற்றுக் கொடுத்தான்.
அவன் தொடுகையில் குழைந்த அவள் தேகமும், அவள் சிணுங்கல்களும் அவனது ஆசையை மெம்மேலும் தூண்டியிருக்க, எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்க, முடிவில் எல்லாம் சுகமே. புது அனுபவம் தந்த மயக்கம். இன்னும் இன்னும் தேடலை அதிகரிக்க செய்ததே அன்றி குறையவே இல்லை.
கணவன் என்ற புது உறவு எவ்வாறு இருக்கும்? எப்படிப்பட்டவனாக இருப்பான் திருமணத்துக்கு முன் இருந்த சிறு அச்சம் சட்டென்று நீங்கி தன்னவன், தனக்கானவன் என்ற உரிமை நொடியில் ஒட்டிக்கொள்ள, தனக்குள் ஆடையாகிப் போனவனை விலக அனுமதிக்காமல் அனுபமா கண்களை மூடியவாறே தன்னுள் இறுக்கிக் கொண்டாள்.
“ஜான்சி…. ஐ லவ் யு  ஜான்சி…..” புலம்பலினூடே அவள் கழுத்து, கன்னம் என்று அவன் முத்தம் வைக்க, விதிர் விதைத்துப் போன அனுபமா பட்டென்று கண்களை திறந்தாள்.
கண்களை திறக்கும் நொடியே அவனை உதறியவாறு விட்டு விலகவும் இவள் முனைய, “என்னடி?” சிடுசிடுத்தவாறே அவள் முகம் பார்த்த இனியனோ அதிர்ந்த முகபாவனையில் விலகி நின்றான்.
அறையில் எந்த மின்விளக்குகளும் எரியவில்லை. வாசனை மெழுகுவர்த்திகள் மாத்திரம் அங்கங்கே ஏற்றப்பட்டிருக்க, கட்டிலுக்கு அருகே இருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்த பின்னர்தான் அதிர்ந்து நின்றான் இனியன்.
காற்றில் சடசடக்கும் புத்தகத்தின் காகிதங்களை போன்று நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க,  கோபத்தில் தான் இப்படியொரு தவறை எவ்வாறு இழைத்தேன் என்று தலையில் கைவைத்திருந்தான்.
தன்னோடு இழைந்த கணவன் வேறொருத்தியின் பெயரைக் கூறினால் அப்பெண்னின் மனநிலை என்னவாக இருக்கும் என்று இனியன் சிந்தித்துப் பார்க்க அவன் ஜான்சியின் பெயரை கூறியதையே அவனது ஞாபக அடுக்கில் இல்லை. போதையில் உளறியவனதும், காதலால் பிதற்றியவனது நிலைதான் இனியனது. அனுபமா அவனை தள்ளி விட்டதில் இவன் அவள் முகம் பார்த்ததில் தான் என்ன செய்து விட்டோம் என்பதை புரிந்து கொண்டானே ஒழிய உளறியதை உணரவில்லை.
ஆனால் அனுபமாவின் காதில் தெளிவாகத்தானே விழுந்திருந்தது. அதிர்ந்து தானே அவனை உதற முயன்றாள். கையில் கிடைத்த துணியால் தன் மேனியை மறைத்துக் கொண்டு கணவனை வெற்றுப்பார்வை பார்த்தவளின் கண்கள் கரித்தன.
மனம் விம்ம, உதடு கடித்து கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றாள். கண்ணுக்குள் கணவனோடு சற்றுமுன் நடந்த சல்லாபம் வந்து போக அவளை மீறி விழிநீர் கன்னத்தில் கரைந்தோட ஆரம்பித்திருந்தது.
“ஜான்சி யார்?” நா நுனியில் எழுந்த கேள்வியை இனியனிடம் கேட்டிருக்க வேண்டுமோ? தடுத்தது அவளது உதடுகளோ குளறும் நாவோ அல்ல, விம்மும் இதயம் தான் கண்டதையும் கற்பனை செய்து அவளை பேச விடாமல் செய்தது.
“இவன் சம்மதத்தோடு தானே இந்த திருமணம் நிகழ்ந்தது. யாரும் இவனது கையை, காலை கட்டிப் போட்டு மணமேடையில் அமர்த்திருக்கவில்லையே. ஒருவேளை அந்த மாதிரியான பெண்களிடம் பழக்கமுள்ளவனோ? ஜான்சி என்பவள் இவனுக்கு ரொம்பவும் நெருக்கமானவளோ? அவளோடு இவ்வாறுதான் முரட்டுத்தனமாக இழைவானோ. அதனால் தான் அலைபேசியில் இந்த புடவையை கட்டிக் கொண்டு வருமாறு கூறியவன், வந்த உடனே…” யாரென்றே அறியாத ஜான்சியை பற்றி இனியன் நடந்து கொண்ட முறையை வைத்து தப்பாக கணித்தாள் அனுபமா. ஜான்சி யாரென்று அனுபமா வாய் திறந்து கேட்டிருந்தால் அவளுக்கு ஜான்சி யாரென்பதே தெரியாது என்பதை அறிந்துகொண்டிருப்பான் இனியன். அக்கனமும் விதிதான் சதி செய்தது.    
தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து போன பின்தான் அனுபமாவை பற்றியே சிந்தித்தான் இனியன்.
“தான் இந்த திருமணத்தை செய்துகொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது போல் இவளும் தள்ளப்பட்டிருந்தால்? அதனால் தான் இவள் திருமணத்தை நிறுத்தவில்லையோ.
அன்று அலைபேசி அழைப்பு விடுத்து திருமணத்தை நிறுத்துமாறு என் தரப்பு நியாயத்தை மாத்திரம் கூறி விட்டேன். இவள் பக்க நியாயத்தை நான் கேட்கவே இல்லையே. அன்று நான் கேட்கும் மனநிலையிலுமில்லை. சூழ்நிலையுமில்லை. இன்று பொறுமையாக கேட்டிருக்கலாம். கேளாமல் இவளிடம் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் தவறு” கோபம் வடிந்த பின் நிதானமாக யோசித்தவன் அனுபமாவிடம் மன்னிப்பு வேண்ட அவள் புறம் திரும்பினான். 
மணமேடைக்கு அனுபமா நடந்து வரும் பொழுது அவள் முகம் மிளிர்ந்ததும் இனியனின் நியாபக அடுக்கில் இல்லை. சற்றுமுன் தன் கைகளில் அவள் விருப்பத்தோடுதான் இழைந்தாள் என்ற எண்ணமும் வரவில்லை.
பிடிக்காத எந்த பெண்ணும் மணமேடைக்கு நாணிக்கோணி வரமாட்டாள் என்று தெரியாத அளவுக்கு இனியன் குழந்தையுமல்ல, விரும்பாதவனோடு இவ்வாறு இழைவாளென்று தெரியாத அளவுக்கு இனியன் முட்டாளுமல்ல.
அவன் செய்தது தவறு என்ற போது அனுபமாவின் பக்க நியாயத்தை கேட்காது இருந்தது தப்பு என்று நினைத்தவனுக்கு மற்றவை பின்னுக்கு தள்ளப்பட்டிருக்க, சிந்திக்க தவறினான். சற்று யோசித்திருந்தால் அனுபமா சம்மத்தோடுதான் இந்த திருமணத்தை செய்து கொண்டாள் என்று புரிந்திருக்கும்.
“சாரி” திக்கித் திணறி இனியன் கூற,
“எதுக்கு சாரி? பணம் கொண்டு வரலையா? மறந்துட்டீங்களா? இல்ல தாலி கட்டி இப்படி நடத்துகிறது இதுதான் முதல் தடவை எங்குறதுனால சாரி கேக்குறீங்களா?”
தான் கணவன் என்ற உரிமையில் இவனோடு இழைந்தால் தன்னை மனைவி என்றும் கருதாமல் நடந்ததை மறந்து விடும்படி மன்னிப்பு கோரியது அனுபமாவின் கோபத்தை தூண்டியிருக்க, ஜான்சியை பற்றி அவள் கணித்தைக் கொண்டு வார்த்தைகளும் தடித்துதான் வெளிப்பட்டன.
அனுபமாவின் கோபம் இனியனுக்கு புரிந்தாலும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை.
“என்ன என்ன சொல்லுற?” புரியாமல் அவளிடமே கேட்டான்.
“ஏன் அந்த ஜான்சியோடு படுத்த பிறகு பணமா கொடுக்காம நகையா கொடுப்பீங்களோ” சீற்றம் கொஞ்சமும் அடங்காமல் அனுபமா பாய, அவள் பேசியதன் அர்த்தம் அப்பொழுதுதான் இனியனுக்கு புரிந்தது.
அன்று இவளிடம் நான் ஜான்சி யார் என்று கூறியும் என் ஜான்சியை தப்பாகவா பேசுகிறாய் என்று பாய்ந்து அனுபமாவின் கழுத்தை நெரித்தவன்
“யாரை பார்த்து தப்பா பேசுற? இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லி போன் பண்ணி சொன்னப்போ அமுக்கினி போல கேட்டுகிட்டு நின்னவதானே நீ. நான் ஜான்சியை காதலிக்கிறத தெரிஞ்சும் என்ன கல்யாணம் பண்ணிகிட்ட, அத தெரிஞ்சும் என் கூட உருண்டு புரண்ட, என் ஜான்சியை பத்தி தப்பா பேசுறியா?” தான் செய்தது தவறு என்று நினைத்தவனை அனுபமா சீண்டியதில் சிங்க கர்ஜனையோடு அவள் மேல் பாய்ந்திருந்தான் இனியன்.
“என்ன சொல்கிறான் இவன்? அலைபேசியில் இதைத்தான் கூறினானா? இப்படி ஒன்றை கனவிலும் சிந்தித்துப் பார்க்கவில்லையே” அவனை தடுக்கவும் தோன்றாமல் அதிர்ந்து நின்றாள் அனுபமா.
தன் இருகை கொண்டு இனியன் அனுபமாவின் கழுத்தை இறுக்க, மூச்சு விட முடியாமல் திணறும் தருவாயில் தான் அவள் அவளது கைகளைக் கொண்டு அவனை தடுக்க முனைந்தாள்.   
அவள் கையை எடுத்ததில் அவள் மீதிருந்த துணி விலகியிருக்க அவள் மார்பகங்கள் அறையிருளில் இனியனின் கண்களுக்கு விருந்தாக அவன் கைகள் தானாக தளர, பார்வையை அகற்றியவன், அவளை உதறி விட்டு குளியறைக்குள் புகுந்திருந்தான்.
திருமணமே நிகழ்ந்தால் தான் என்ன? திருமணத்தை நிறுத்தாத அனுபமாவை தண்டிக்கும் விதமாக அவளை விட்டு விட்டு வெளிநாடு செல்ல வேண்டும் அங்கிருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள வேண்டும், பெற முடியாவிட்டாலும், அங்கே ஜான்சியை திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கே வராமல் இருக்க வேண்டும் என்று அனுபமாவின் கழுத்தில் தாலி கட்டிய நொடியே திட்டமிட்டிருந்தான் இனியன்.
அவளிடம் எதுவுமே கேளாமல் நல்லமுறையில் நடந்து கொண்டு தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி இருந்தவனுக்கு ஜான்சியின் தற்கொலை முயற்சியும், அதற்கு காரணம் அனுபமா திருமணத்தை நிறுத்தாததும் தான் காரணம் என்று அறிந்துகொண்ட நொடி உண்டான கோபம் செய்யக் கூடாத தவறை செய்ய வைத்திருந்தது.
“ஜான்சியின் முகத்தில் எப்படி விழிப்பேன்? திருமணம் நிகழ்ந்து விட்டதை அறிந்ததற்கே தற்கொலை செய்துகொள்ளப் போனவளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதையறிந்தால் அவள் என்னை வெறுத்து விடுவாள். நடந்த உண்மையை கூறாமல் அவளோடு என்னால் வாழவும் முடியாது?”
அவனது கண்களிலிருந்து வழியும் கண்ணீர்தான் துாவாலைக்குழாய் நீரால் அவனுக்கே தெரியாமல் போனதே.
அவனுக்குள் கனன்ற நெருப்பு தான் செய்தது தவறு என்ற நொடியில் அடங்கினாலும், அனுபமாவின் பேச்சால் மீண்டும் கொழுந்து விட்டெறிய அனுபமாவை மன்னிக்க அவன் தயாராக இல்லை.
திட்டம் போட்டு திருமணத்தை நிறுத்தாமல், என்னையும் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் ஜான்சியின் நிலைமைக்கும் அவள் தான் காரணம், அவள் நோக்கம்தான் என்ன? தண்ணீரில் தேகம் நனைந்தாலும் உள்ளத்தில் பற்றிய தீ அணையாமல் எண்ணங்களில் வளம் வந்தாள் அனுபமா

Advertisement