Advertisement

அதுவரையில் அம்மாவை தேடாத தர்ஷன் அம்மாவை கேட்டு அழ… பிரமிளாவும், மஞ்சுளாவும் அவனைத் தூக்கிக் கொண்டு சென்று வேடிக்கை காட்டினர்.

இருட்டிய பிறகு தான் விஜயனும் வர்ஷாவும் வந்தனர்.

தர்ஷனை சமாளிக்க முடியாமல் தவித்ததில் கடுப்பாக இருந்த மஞ்சுளா…“யம்மா நீ என்ன ஹனிமூனுக்கா வந்த… நாங்க உன் பையனை பார்த்துகிட்டாலும், உன் பையன் என்ன பண்றான்னு கூடவா நினைப்பு இருக்காது.” எனச் சொல்லியே விட்டாள்.

அப்புறம் நீங்க எதுக்குக் கூட வந்தீங்க.” என வர்ஷா துடுக்காகக் கேட்டு விட… தேவை இல்லாத பேச்சுக்கள் கூடாது என்று நினைத்து வைத்தது எல்லாம் மஞ்சுளாவுக்கு மறந்து விட….

ஓ… உனக்கு அப்படி வேற நினைப்பா… நாங்களும் நாத்தனார் போல இருந்திருக்கணும். நம்ம தம்பி, தம்பி பொண்டாட்டின்னு விட்டுக் கொடுத்து போறதுனால உனக்கு அப்படித்தான் இருக்கும்.” என்றவள், “இந்தா உன் பையனை நீயே பாரு.” என தர்ஷனை தூக்கி வர்ஷாவிடம் கொடுத்து விட்டாள்.

கண்ணுல மண்ணு விழுந்துடுச்சு…. மண்ணை எடுத்தாச்சு. ஆனா அவங்க அம்மாவை கேட்டு ஒரே அழுகை. அதுதான் மஞ்சு சொல்றா.” பிரமிளா தம்பியிடம் சொல்ல…

பீச்சுக்கு போறோம்னு செல்லை வேற ரூம்ல வச்சிட்டு வந்திட்டேன். உங்களை ரொம்பப் படுத்திடானோ…” என்றான் விஜயன்.

அது பரவாயில்லை… உன் பொண்டாட்டி பேச்சு தான் சரி இல்லை.” என்றாள் மஞ்சுளா பட்டென்று. பிறகு எல்லோரும் எழுந்து எடுத்து வைக்க ஆரம்பிக்க…

பாருங்க உங்க அக்கா எப்படிப் பேசுறாங்கன்னு.” என வர்ஷா விஜயனின் காதை கடிக்க…

நீ பேசினது மட்டும் சரியா? அவ என்ன உன் பிள்ளையைப் பார்த்துக்க வந்தாளா? நானும் அப்பவே போகலாம்னு சொன்னேன் கேட்டியா… வந்தவ தர்ஷனையாவது தூக்கிட்டு வந்திருக்கணும்.”

நீ வந்ததுக்கு நல்லா கடல்ல ஆடின… ஷாப்பிங் பண்ண… பிடிச்சது வாங்கிச் சாப்பிட்ட… அவங்க மட்டும் உன் பிள்ளையைப் பார்த்திட்டு உட்கார்ந்து இருக்கணுமா?” என விஜயன் வைத்து வாங்க…

எனக்குத் தலை வலிக்குது. நான் ரூமுக்கு போகணும்.” என்றாள்.

உன் வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு… அப்புறம் போகாம.” என்றவன்,

நான் இப்போ வரலை… நீ போறதுனா போ…” என்று விட்டான்.

அங்கிருந்து அவர்கள் ஹோட்டல் பக்கத்தில் தான். வர்ஷா ஹோட்டலுக்கு நடக்க…

வர்ஷா ரூமுக்கா போற… பசங்களையும் கூட்டிடு போ… நாங்க கொஞ்ச நேரம் நடத்திட்டு வரோம்.” என்ற பிரமிளா…

போய்க் குளிச்சு ரெடி ஆகுங்க. நைட் இங்க பீச் ஹோட்டல்ல கடலை பார்த்திட்டு சாப்பிடலாம்.” என்றதும், பிள்ளைகள் நால்வரும் குஷியாகச் செல்ல…

இவனைக் கொடுங்க அண்ணி. நான் வச்சுக்கிறேன்.” என விஜயன் ஆருஷியிடம் இருத்த யஸ்வந்தைக் கேட்க…

ரெண்டு பேரை எல்லாம் சமாளிக்கிறது கஷ்ட்டம். நான் இவனை வச்சுக்கிறேன்.” என ஆருஷி மறுக்க… பிள்ளைகள் சென்றதால் விஜயனும் அவர்களுடன் அறைக்குச் செல்ல…

போங்க போய்க் குளிங்க. வர்ஷா அத்தையை டிரஸ் எடுத்து தர சொல்லுங்க. தலையைக் காய வச்சு தலை வாரி விடச் சொல்லுங்க.” என மஞ்சுளா மகள்களை அனுப்பி வைக்க…கேட்ட வர்ஷாவுக்குக் கொதித்துக் கொண்டு வந்தது.

பிள்ளைகள் முன்னால் சென்று விட… கணவனுடன் வந்த வர்ஷா… “உங்க அக்காவுக்குத் திமிரை பார்த்தீங்களா?” என்று கேட்க…

நீ உன் திமிரை காட்டின… பதிலுக்கு அவங்க காட்டுறாங்க. உங்க வீட்ல வேணா உன் ஜம்பம் செல்லும், இங்க இல்ல… இங்க ஏமாத்த முடியாது. நீ ஒழுங்கா நடந்துக்கோ… அவங்களும் ஒழுங்கா நடந்துப்பாங்க.”

அண்ணிகிட்ட நல்லாத்தானே தானே நடந்துக்கிறாங்க.”

உங்க அண்ணியும் நானும் ஒண்ணா…. நான் கொண்டு வந்ததுல கால் வாசி சீர்வரிசையாவது உங்க அண்ணி கொண்டு வந்தாங்களா?”

இப்படிச் சொல்லி காட்டுறதுன்னா… நீ கொண்டு வந்ததை வேணா திருப்பிக் கொடுக்கச் சொல்லிடுறேன். நீ பேசுனது ஆதவனுக்குத் தெரிஞ்சா உன் வாயை கிழிச்சு விட்டுடுவான். ஒழுங்கா பார்த்து பேசு.” என விஜயன் மனைவியை எச்சரிக்க… வர்ஷா முறைத்துக் கொண்டு நடந்தாள்.

இரண்டு பெரிய அறைகளை எடுத்திருந்தனர். ஒவ்வொரு அறையிலும் முன்பக்கம் சின்ன ஹால்… அதை அடுத்து இருந்த பெரிய அறையில் ஆறு பேர் படுப்பது போல வரிசையாகக் கட்டில்கள் இருக்க… ஓவ்வொரு அறையிலும் இரண்டு குளியல் அறைகள் இருந்தது. பால்கனியில் நின்று கடலைப் பார்க்கலாம்.

அறைக்கு வந்ததும் மகனை கணவனிடம் கொடுத்து விட்டு வர்ஷா குளிக்கச் சென்று விட்டாள்.

பிள்ளைகள் அவர்களாகவே தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு… இருந்த இன்னொரு குளியல் அறையில் சென்று ஒவ்வொருவராக குளித்து விட்டு வந்தனர்.

வர்ஷா குளித்து விட்டு வந்து கட்டிலில் படுத்து விட… பிரத்யுஷா அவள் அத்தையின் முகத்தில் இருந்த கடுப்பை பார்த்து விட்டு, அவளாகவே தலை துவட்டி… தலை வாரிக்கொள்ள…

எங்க அம்மா உங்களைத்தானே தலை துவட்டி விடச் சொன்னாங்க. நீங்களே பண்ணி விடுங்க.” என தீபிகா வர்ஷாவிடம் சென்று சட்டமாக கேட்க…..

அப்படியே அம்மா போல…” என சொல்லியபடி வர்ஷா துண்டை வாங்கித் துவட்ட…..

இல்ல நான் எங்க பெரியம்மா போலன்னு எங்க அம்மா சொல்வாங்க.” என்றாள் தீபிகா.

இவள் கண்டிப்பாகச் சென்று இதை அவள் அம்மாவிடம் சொல்வாள் என்று நினைத்த வர்ஷா… “நீ உங்க அம்மா போல ஜாடை அதுதான் சொன்னேன்.” எனப் பேச்சை மாற்ற… உனக்கு இது தேவையா என்பது போல விஜயன் மனைவியைப் பார்த்தான்.

பிள்ளைகள் குளித்து முடித்து முன்புறம் இருந்த ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். விஜயன் மகனை குளிக்க வைத்து, அவனும் குளித்து விட்டு வந்தான்.

மற்றவர்கள் எல்லாம் கடற்கரையில் இருந்த கடைகளில் ஷாப்பிங் சென்று விட்டு, இருந்த இன்னொரு அறையில் குளித்துத் தயாராகி… இரவு உணவு உண்ண கிளம்ப… வர்ஷா தான் வரவில்லை என்றாள்.

அவள் முறுக்கை காட்டுகிறாளாம். இப்போது இவளிடம் வேறு உணவு உண்ண கெஞ்ச வேண்டுமா என நினைத்த மஞ்சுளா…

வாங்க பசங்களா நாம போகலாம்.” எனப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்று விட… வர்ஷாவின் திட்டம் அதுதான். ஆனால் அவளை விட நாத்தனார்கள் விவரம்.

நீ கூட்டிட்டு வா டா…” எனத் தம்பியிடம் சொல்லிவிட்டு பிரமிளாவும் கணவனுடன் சென்று விட்டாள்.

துர்காவும் ஈஸ்வரும் காத்திருக்க… “நாங்க அவங்களைக் கூட்டிட்டு வரோம். நீங்க போங்க.” என ஆதவன் அவர்களை அனுப்பி வைத்தான்.

ஏன் வர்ஷா? உடம்பு எதுவும் சரி இல்லையா என்ன? வந்து கொஞ்சமாவாவது சாப்பிடு.” என அருஷி அழைக்க….

பப்பே சாப்பாடு… நிறைய ஐட்டம் இருக்கு. நீதான் மிஸ் பண்ணுவ.” என விஜயனும் ஆசைக் காட்டி பார்க்க…

பரவாயில்லை எனக்கு வேண்டாம்.” என்றாள் வர்ஷா.

வர்ஷா நீ இப்போ வரலைனா… ரொம்பத் தப்பாயிடும். இனிமே எங்க வெளிய கூப்பிட்டாலும் மச்சாங்க வரமாட்டாங்க. அக்காள்களையும் அனுப்ப மாட்டாங்க. நீ எதையும் காட்டிக்காம வந்து சாப்பிட்டு வந்திடு.” என ஆதவன் எடுத்து சொல்ல…

ஆமாம் நாம கூப்பிட்டு தானே அவங்க வந்தாங்க. எதுக்குப் பிரச்சனை பண்ணிட்டு, வா வந்து சாப்பிடு.” என ஆருஷியும் சொல்ல…

நீங்களும் தானக்கா யார் பேச்சையும் கேட்காம உங்க வீட்ல போய் இருந்தீங்க. அப்போ நான் எதாவது சொன்னேனே… இப்போ நீங்க மட்டும் ஏன் நான் என்ன பண்ணனும்னு சொல்றீங்க?” என வர்ஷா ஆருஷியிடம் பாய….

நீ என்ன எப்ப பாரு இதையே சொல்ற… நான் யார்கிட்டயும் சண்டை போட்டுட்டு போகலை… நீ மட்டும் என்ன உன் புருஷன் இருக்கும் போது தானே இங்க வர… அது போல நானும் என் புருஷன் வந்ததும் வந்தேன். நீயா எதாவது கற்பனை பண்ணிகிட்டா… அதுக்கு நான் பொறுப்பு இல்லை.” என்ற ஆருஷி அங்கிருந்து சென்று விட…. ஆதவனும் அவள் பின்னே சென்று விட்டான்.

வர்ஷா நீ எல்லார் கூடவும் பிரச்சனை பண்ணிட்டே இருக்க… உன்னைக் கேவலமா நினைப்பாங்க. நானும் போயிடுவேன், அப்புறம் உனக்குத்தான் அசிங்கம் ஆகிடும். ஒழுங்கா வந்திடு.” என விஜயன் சொல்ல அதன் பிறகே வர்ஷா கிளம்பி வந்தாள். அவளை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர்கள் குடும்பதிற்காகக் கடலை பார்த்தபடி பெரிய உணவு மேஜை முன்பதிவு செய்திருக்க… அதில் கடல் உணவுகளில் இல்லாத வகைகளே இல்லை என்னும் அளவுக்கு, விதவிதமான மீன்கள், நண்டு, ஈரால் என வரிசை படுத்தி இருக்க… அதோடு பிரியாணி வகைகள்… பிள்ளைகளுக்குப் பிடித்த சிக்கென் வகைகள் என அந்த மேஜை நிரம்பி வழிய… எல்லோரும் தட்டில் தங்களுக்கு வேண்டியதை பரிமாறிக் கொண்டு உண்டனர்.

ஆதவன், விஜயன், வினோத் மற்றும் ஸ்ரீதர் நால்வரும் சேர்ந்து உணவை ஒரு கட்டு கட்ட… பிரமிளாவும் மஞ்சுளாவும் பிள்ளைகளைக் கவனித்தபடி அவர்களும் உண்ண… வர்ஷா ஒரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு உண்ண… ஆருஷியும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தாள்.

அவ தான் வீணா பிரச்சனை பண்ணா… இவளுக்கு என்ன என துர்காவும் பெரிய மருமகளைப் பற்றி யோசனையில் தான் இருந்தார்.

ஈஸ்வரும் துர்காவும் உண்டதும் அறைக்குச் செல்ல… ஆதவனும் விஜயனும் சென்று உறங்கிய தங்கள் மகன்களைப் பெற்றோர் பொறுப்பில் விட்டு விட்டு வந்தனர்.

பெண்கள் எல்லோரும் திருத்தியாக உண்டு முடித்திருக்க…

நீங்க எல்லாம் பசங்களைக் கூட்டிட்டு ரூமுக்கு போங்க.” என ஸ்ரீதர் அவர்களைக் கிளப்புவதில் குறியாக இருக்க…

எங்களை அனுப்பிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க.” என மஞ்சுளா சந்தேகமாகக் கேட்க….

நாங்க தண்ணி அடிக்கப் போறோம் போதுமா… நீங்க எல்லாம் கிளம்புங்க.” என்றான் ஸ்ரீதர்.

என்னது குடிக்கக் போறீங்களா?” என பிரமிளா கேட்க…

சும்மா பீர் தான் அண்ணி. இவ்வளவு தூரம் வந்திட்டு இது கூட இல்லைனா எப்படி. நாங்க ரொம்ப நாள் கழிச்சு சேர்ந்திருக்கோம். சும்மா ஜாலிக்காக.” என்றான் ஸ்ரீதர்.

எங்களுக்கும் பீர் சொல்லுங்க… நாங்களும் ஜாலி பண்றோம்.” என மஞ்சுளா உட்கார்ந்து கொள்ள…

பிரமிளா, நான் அவங்க வேற எதுவும் குடிக்காம பார்த்துக்கிறேன். கொஞ்சம் நாங்க எல்லாம் மனசு விட்டு பேசணும். நீங்க எல்லாம் கிளம்புங்க.” என வினோத் சொல்ல…

வினோத் குடிக்க மாட்டான். அவன் மேல் நம்பிக்கை இருந்ததால் பிரமிளா தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்ப…

தள்ளி கடற்கரையில் ஆதவன் ஆருஷியுடனும், விஜயன் வர்ஷாவுடனும் பேசிக் கொண்டு இருந்தனர்.

நீங்க எனக்காகப் பேசவே இல்லை.” என அருஷி கணவனைக் குற்றம் சொல்ல…

அதுதான் நீ பேசிட்டியே டி… நான் பேசினா பிரச்சனை வேற விதமா போயிருக்கும்.” என்றான்.

நீ பேசினது கரெக்ட். இனி வர்ஷா உன்கிட்ட வச்சுக்க மாட்டா…” கணவன் பேச ஆருஷி அவனை முறைத்துக் கொண்டு இருக்க…

நீ போ… நான் கொஞ்ச நேரத்தில வரேன்.” என ஆதவன் அவளை அனுப்பி வைத்தான்.

எல்லார்கிட்டயும் வாயை கொடுத்து நீயா வம்பிழுக்க வேண்டியது. இப்போ அவங்க என்னை மதிக்கலை… இவங்க என்னை மதிக்கலைன்னு சொல்ல வேண்டியது.”

சரி சரி கிளம்பு, நான் அப்புறம் வரேன்.” என விஜயன் வர்ஷாவை அனுப்பி வைத்தான்.

இவளுங்க இம்சை தாங்க முடியலை….

இவளுங்க இல்லாமலும் இருக்க முடியலை….”

இதுதான் இன்றைய அனேகமான ஆண்களின் நிலை. அதற்கு ஆதவனும் விஜயனும் மட்டும் விதிவிலக்கா என்ன

Advertisement