Advertisement

நிலவு 25

 
சென்னை வந்து சேர்ந்த தயாளன் மற்றும் ஈகை குடும்பத்தாரோடு வீட்டுக்கு செல்ல, கதவு திறந்தே! இருந்தது.
 
“கதவை திறந்து போட்டுட்டு அம்மா எங்க போனாங்க? தயாளன் அன்னையை வீடு முழுக்கத் தேட ஈகை தொப்பென்று சோபாவில் அமர்ந்து போனை நோண்டலானான்.
 
“எதுக்கு டென்ஷனாக்குறீங்க, பக்கத்துல கோவிலுக்கு போய் இருப்பாங்க, வந்துடுவாங்க” பூவிழியை அறிந்து வைத்திருந்த காயத்திரி சொல்ல
 
“அம்மாக்கு மறதி வேற அதிகம். ரொம்ப தூரம் பயணம் செய்ய முடியாதுன்னுதான் அவங்கள வீட்டுல விட்டுட்டு பாத்துக்க ஆளையும் வச்சிட்டு போனோம், ரெண்டு பேரையும் காணோம். அப்படியே கோவிலுக்கு போறதா இருந்தாலும் கேயா டேக்கர் கதவை பூட்டி இருக்கணுமா இல்லையா?” சொல்லியவாறே கேயா டெக்கரின் அலைபேசிக்கு பலமுறை அழைக்க அது அனைத்து வைக்கப்பட்டுள்ளதென்றே வந்தது.
 
காயத்திரி அனைவருக்கும் குடிக்க ஜூஸ் கலந்தவாறே! கணவனின் புலம்பலை கேட்டுக்கொண்டிருக்க,
 
“என்னங்க, உங்க அண்ணன் கத்திக்கிட்டு இருக்காரு, என்ன எதுன்னு பாருங்க” பார்கவி ஈகையின் கையை தட்ட
 
“ஏகப்பட்ட மிஸ் கால் வந்திருக்கு இது யார் நம்பர்னு தெரியல. பிளைட்டுல வந்ததால போன ஆப் பண்ணது தப்பா போச்சு” ஈகை தன் பாட்டுக்கு பேச
 
“நான் என்ன சொல்லிண்டு இருக்கேன். நீங்க என்ன சொல்லுறேல்?”
 
“தயாண்ணா உன் போன் ஆன் பண்ணியா?” ஈகை சத்தமாக கேக்க
 
சம்யலறையிலிருந்தவாறே “சார்ஜ் போச்சு டா போட்டிருக்கேன்”
 
“சின்ன பசங்க மாதிரி போன்ல கேம் விளையாடினா போன் ஆப் ஆகத்தான் செய்யும்” முணுமுணுத்தவன் தயாளனின்  பையை திறந்து பவர் சாஜரோடு பொருந்தியிருந்த போனை ஆன் செய்ய
 
“என்னங்க?” பார்கவி பொரும
 
“இங்க பாரு பட்டு ரோஜா… புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுல நாம மூக்கை நுழைக்கக் கூடாது. அப்படி நுழைச்சா… உடையது நம்ம மூக்கு. புரியுதா” சிரிக்காமல் சொல்ல
 
“இப்போ இவங்க சண்ட போட்டாங்களா?” மலைப்பாக இருந்தது பார்கவிக்கு.
 
“சரியாதான் சொல்லுறான்” என்றவாறு வந்த தயாளன் “என்ன டா… போன்ல என்ன தேடுற?”
 
“யாரோ எனக்கு போன் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க, அதே! நம்பர்ல இருந்து உனக்கும் போன் வந்திருக்கு” என்ற ஈகை தயாளனுக்கு அலைபேசியை காட்ட,
 
“ஆமா யாரா இருக்கும்” என்றவன் அந்த எண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்த ரிங் போய்க்கொண்டிருந்ததே! தவிர யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.
 
“எதோ லேண்ட் லைன் நம்பர் ஒபிஷியல் காலா இருக்கும். ஆபிஸ மூடிட்டு போய் இருப்பாங்க” என்றான் தயாளன்.
 
“நோ நோ… ஒபிசியல்னா நம்ம கம்பெனி நம்பருக்கு கால் பண்ணியிருப்பாங்க. இது நம்ம ஊரு நம்பர் மாதிரி இருக்கு”
 
“திரும்ப கால் பண்ணுவான்ல பார்க்கலாம்” என்ற தயாளன் அதை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டான்.
 
  இரண்டு மணித்தியாலங்கள் கடந்தும் பூவிழி வீடு வந்து சேரவில்லை என்றதும் காயத்திரிக்கு பதட்டம் கூடியிருந்தது. அவள் அழுதவாறே இருக்க பார்கவி அவளை சமாதனப் படுத்திக்கொண்டிருந்தாள்.
 
“தயாண்ணா அந்த கேயார் டேக்கர் நம்பரும் வேல செய்யல. நாம வெயிட் பண்ணுற ஒவ்வொரு நிமிடமும் அம்மாக்கு ஆபத்தாக முடியலாம் வா போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம்”
 
தயாளனுக்கும் அதுதான் சரியென தோன்ற இருவரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் செல்ல வாசல் படியை தாண்டும் பொழுது அதே! நம்பரிலிருந்து ஈகைக்கு கால் வரவும் இயக்கி காதில் வைக்க
 
“என்ன அம்மாவ காணோம்னு போல்ஸ் ஸ்டேஷன் போக போறியா?”
 
“ஹலோ யாரு?” என்ற ஈகை தயாளனை தடுத்து இருவரும் வீட்டுக்குள் வர காயுவும், பாருவும் என்னவென்று பாத்திருந்தனர்.
 
“நீ போட்டியே! கோட்ல கேஸ் சொத்தெல்லாம் வேணும்னு, சொத்து வேணுமா? இல்ல நீ அம்மானு கூப்டுற இந்த பொம்பள வேணுமான்னு நீயே! முடிவு பண்ணிக்க” என்றுவிட்டு அலைபேசியை அனைத்திருந்தான் அந்த கட்டைக்குரலுக்கு சொந்தக்காரன்.
  
 “டேய் யார்டா இவன்” தயாளன் பதட்டமடைய
 
“கொஞ்சம் அமைதியா இரு” என்ற ஈகை குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே யோசிக்க, பெண்கள் இருவரும் வேறு கேள்வி கேக்கலாயினர்.
 
“கொஞ்சம் அமைதியா இருங்களேன்” கத்தினான் ஈகை. ஈகையின் கோபமுகத்தைக் கண்டு நடுநடுங்கிப் போனாள் பார்கவி.
 
ஒரேயடியாக சத்தம் மொத்தமாக நிற்க, தூங்கி எழுந்து வந்த ஐஷு “சித்து…” என்று ஈகையின் காலைக் கட்டிக்கொள்ள தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் இன்முகமாக ஐஷுவை தூக்கி முத்தமிட
 
“சித்து டோன்ட் பி எ பேட் பாய். ஓகே” என்று அவன் கத்தியது பெரும் குத்தமென்று சுட்டிக்காட்டி அவன் கன்னத்தை எச்சில் படுத்தி அவனை சமாதானப்ப படுத்தி விட்டதாக கருதி  இறங்கி சென்று விளையாட ஆரம்பித்தாள் ஐஷு.
 
காயத்திரியின் கையை பிடித்து இறுக்கிக் கொண்டிருந்த பார்கவியை பார்த்து “கத்தினத்துக்கே! நடுங்குற உன்ன திட்டினா அழுது கரைவ போல் இருக்கே! ஐஷுவ பாரு அவளுக்கு அவனை நல்லா புரியுது. நீயும் புரிஞ்சிக்க” என்ற காயத்திரி கையை விடுவித்துக்கொண்டாள். 
 
“சொத்தை கேட்டு நாமதான் கோட்ல கேஸ் போட்டானு தெரிஞ்சிதான் அம்மாவ தூக்கி இருக்கானுங்க. என் சொத்தை மீட்க நான் கேஸ் போட்டா எவனுக்கோ வலிக்கணும்னு அவசியம் இல்லையே!” பேசியவாறு தனக்கு வந்த அழைப்பு யாருடைய அலைபேசி எண் என்று கண்டுபிடிக்குமாறு யாரையோ அழைத்துப்பேசினான்.
 
“ஈகா நீ என்ன சொல்ல வர? மருதநாயகம்தான் அம்மாவ தூக்கி இருந்தா எதுக்கு யாரோ! மாதிரி பேசணும். தான்தான் செஞ்சேன்னு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு சொல்வானே!” தயாளன் கேட்க
 
“கரெக்ட் பாயிண்ட். இந்த நம்பர் ஒரு பூத் நம்பறா கூட இருக்கலாம். அப்படினா அந்த ஏரியாவுக்கு போய் சேர்ச் பண்ணலாமே!” ஈகை சொல்ல
 
“முதல்ல அந்த நம்பர் யாருடையது? இல்ல எந்த பூத்னு தெரிய வரட்டும். போலீஸ் கம்பளைண்ட் கொடுக்குறமா?” தயாளன் கேக்க
 
“ஒரு அரைமணித்தியாலம் வெயிட் பண்ணி பார்க்கலாம். திரும்ப கால் பண்ணுவானா? மாட்டானான்னு. வீடு புகுந்து அம்மாவ தூக்கி இருக்கான்னா? வீட்டுல யாரும் இல்லனு தெரிஞ்சிதான் தூக்கி இருக்கான். காயுவும், ஐஷுவும் இங்க இருக்க வேணாம்” ஈகை யோசனையாக சொல்ல
 
“ஆமா ஊருக்கு கூட்டிட்டு போய்டலாம். அங்க நம்ம பார்வைல இருக்கிறதுதான் நல்லது” தயாளன் கூற காயத்திரி ஊருக்கு செல்ல தயாரானாள்.
 
அதற்கிடையில் அந்த அலைபேசி என் மருதநாயகத்தின் ஆலைகளில் ஒன்றின் நம்பர் என்று தெரியவர
 
“ஈகா இவனுங்களுக்கு நாம யார்னு தெரிஞ்சிருச்சு. எப்படி? அம்மாவ ஏதாவது பண்ணிடுவாங்களா?” தயாளனின் குரலில் அச்சம் இழையோடியது. 
 
“பயப்படாதே! முதல்ல ஊருக்கு போலாம். அம்மாவ அங்கதான் வச்சிருப்பான்னு தெரியுது. முதல்ல ஜெய்க்கு போன் பண்ணி அலர்ட் பண்ணு” ஈகை சொல்ல
 
“ஐயோ ஈகா அவன் கைல இருக்கிறது டம்மி கன். அத வச்சி குருவியை கூட சுட முடியாது” மிரண்டவனாக தயாளன் சொல்ல
 
“யாரடா இவன். அவன் உண்மையிலயே! உன் பிரென்ட் தானே!” ஈகை சந்தேகமாக கேக்க
 
“அதுவந்து…” என்று தயாளன் சில உண்மைகளை சொல்ல
 
சத்தமாக சிரித்த ஈகை “அவன் கைல இருக்கிறது Pistol Auto 9mm 1A துப்பாக்கி. அவன் ஆளுங்க கைல இருக்கிறது Glock 17 ரக துப்பாக்கி. கண்டிப்பா அவன் போலீஸ்” என்று கூற தயாளன் அதிர்ச்சியடைந்தான்.
 
“டேய் ஈகா என்ன டா சொல்லுற?” “என்ன டா பண்ணி வச்சிருக்க? என்று தயாளனின் மைண்ட் வாய்ஸ் அவனை குடைந்துக்கொண்டிருந்தது”
 
“நீ விளையாட்டுக்கு ஸ்டாண்ட் மாஸ்டர்னு சொன்னான்னு நினைச்சி நானும் கண்டுக்கல. உன் பிரெண்டுனு சொன்னதால நானும் பெரிசா விசாரிக்கல”
 
“எல்லாத்தையும் சொன்னா நீ பாதுகாப்பு ஏற்பாடு வேணாம்னு சொல்லுவியோன்னு நினச்சேன். ஆமா ஒரு போலீஸ் டீமையே! உள்ள கூட்டிட்டு போய் இருக்கோம். நம்மள பத்தி அவங்களுக்கு எல்லாம் தெரியுமே டா” தயாளன் இன்னும் அதிர்ச்சி மாறாமல் கூற
 
“ஹ்ம்ம்… கண்டிப்பா விசாரிச்சு இருப்பாங்க. இப்போ யோசிக்க நேரமில்லை ஜெய்க்கு போன் போடு”
 
 “ஹெலோ” கம்பீரமான குரல் மறுமுனையில் ஒலிக்க
 
“ஜெய் ஹியர்” நகைத்தான் சகோதரன்.
 
“தெரியும், தெரியம் ஜெய்பிரகாஷ் தானே! என்ன டா… ஒவ்வொரு மிஷனுக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கிற. போன வேல என்னாச்சு? ஒரு மாசத்துக்கு மேலாகுது. ஏதாவது கண்டு பிடிச்சியா இல்லையா? உன் பொண்டாட்டி வேற என் தலைய உருட்டுறா. அவதான் உன்ன பீல்டு ஒர்க் பார்க்க வேணாம்னு சொல்லுறாளே! பேசாம கம்பியூட்டரை கட்டிக்கிட்டு அழு. நான் நிம்மதியா இருப்பேன்.”
 
“வீட்டுல இருந்தா சாப்பாடு போட்டு கொல்லுறா. ஒரே இடத்துல உக்காந்து உடம்பு ஏறினதுதான் மிச்சம். எழுபத்தி அஞ்சி கிலோல அம்சமா இருந்தேன். பத்து கிலோ ஏறினதுக்கே! என்னமோ! நூறு கிலோ தாண்டின மாதிரி ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க, நொந்து நூட்லஸ் ஆகுறது நான்தானே! அவ கெடக்குறா விடு. சொல்லி புரிய வைக்க முடியாது. அப்போ அப்போ லூசுத்தனமா பேசுவா. நான் வீட்டுக்கு வந்த சமாதானமாகிடுவா. ஓகே கம் டு தி பாயிண்ட் தீரா.  ஊமையன் எங்குற பேர்ல இங்க வந்து ஒளிஞ்சிகிட்டு இருந்த ட்ராக் மாபியா கோவிந்தனை அரெஸ்ட் பண்ணிட்டேன். ரகசிய இடத்துல விசாரணை நடந்துக்கிட்டுதான் இருக்கு”
 
“குட். நானும் உன்ன என்னமோன்னு நினச்சேன் தீரா. அண்டர் கவர் ஏஜென்ட்டா போகணும்னு சொன்னதும் என்ன பண்ண போறியோனு டென்ஷன்ல இருந்தேன். கோவிந்தனை புடிக்கத்தானா?”
 
“அது மட்டும் இல்ல. மருதநாயகம் ஜாதி பெயர்ல ஆணவக்கொலைகள் செய்யிறதா நிறைய காம்ப்ளண்ட்ஸ் வந்திருக்கு. ஐ.ஜியே பெர்சனலா என்ன இந்த கேஸ இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லி கேட்டுக்கிட்டாரு. அதோட ஒரு முக்கியமான வேலையும் இருந்தது” என்றவன் அமைதியாக 
 
மறுமுனையில் சத்தம் வராது போகவே “என்னடா தீரா…”
 
ஒரு பெருமூச்சு விட்டவன் “அந்த வீட்டுக்குள்ள போறதுக்குத்தான் வேஷம் போட்டேன். தயாளனோட ப்ரெண்ட புடிச்சி உதவி கேட்டதுல. அவனும் என்ன தயாளனுக்கு அறிமுகப்படுத்தி எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பேர்தான் அதனால இவனை பிரிச்சி பார்க்காதேன்னு சொன்னதால என்னால என் டீமை கூட்டிகிட்டு அந்த வீட்டுக்குள்ள போக முடிஞ்சது”
 
“ஆமா அந்த ஜெய் எப்படி ஒத்துக்கிட்டான்”
 
“அவன் தம்பியும் ட்ரக்ஸால பாதிக்க பட்டு உயிரையே! விட்டிருக்கான். அதனால ஜெய்க்கு இந்த விசயத்துல கொஞ்சம் கடுப்புதான். உண்மையிலயே! ஜெய் ஸ்டண்ட் மாஸ்டர்தான். தயாளன் ஜெய்ய சந்திச்சபோ தன்னோட பாஸுக்கு பாதுகாப்பு தேவைப்படுதுன்னு நடிகருக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்குற ஏஜென்சி நம்பகத்தன்மை வாய்ந்ததா? என்று விசாரிச்சு கொஞ்சம் அரேஞ் பண்ணிகொடுக்கும்படி கூறியும் இருக்கான். நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட் சேர்ந்த ஒருத்தர் இவங்க பேச்ச கேக்க நேர்ந்தது. ஹரிஹரனோட ஊர் பேர் அடிப்படவும் கவனமானவர் உடனே எனக்கு போன் பண்ணி விசயத்த சொல்லவும், நானே ஜெய்ய நேர்ல போய் பார்த்துப் பேசினேன். ஜெய்ய வச்சி தயாளன் புடிச்சேன். பய புள்ள ஒரு நேரம் பிரென்ட் மாதிரி பேசுறான். ஒரு நேரம் சார்னு ஒதுக்கி வைக்கிறான்”
 
“நீ யாரு? நீயும் உன் டீமுன் அங்க வந்த காரணம் தயாளன் மற்றும் ஈகைக்கு தெரியாதில்ல”
 
“இல்ல. இவனுகள பத்தி கொல்கத்தால விசாரிக்க சொன்னேனே!”
 
“ஆமா நீ ஈகையையும், தயாவையும் அரெஸ்ட் பண்ண வேண்டி இருக்கும்னு சொன்னப்பவே! விசாரிச்சேன். எந்த ப்ளேக் மார்க்கும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கானுங்க. ஏன் அரெஸ்ட் பண்ண வேண்டி இருக்கும்னு சொன்ன”
 
“மருதநாயகத்தை பலி வாங்குறேன்னு அவர் பேத்தி மேல கை வைக்க பார்த்தான் ஈகை அதான். அப்படி ஏதாவது நடந்தா ஒன்த ஸ்போர்ட் அரெஸ்ட் பண்ணி இருப்பேன். அந்த பொண்ணு மருதநாயகத்தோட பேத்தி இல்லனு கண்டு பிடிச்சான். ஆனா என்ன நினைச்சானோ தெரியல அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். பழிவாங்குறேன்னு ஏதும் தப்பா பண்ணுறதும் இல்ல. அவருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டிகிட்டு இருக்கான். அதனால விட்டு வச்சிருக்கேன்”
 
“ம்ம்.. ஆனா தன்னோட அத்தை குடும்பத்தை கொன்னத விசாரிக்க சொல்லி ஈகை கேஸ் கொடுத்திருக்கான்”
 
“கண்டிப்பா அந்த படுகொலைகளை பண்ணது இந்த மருதநாயகமும் மகன்களும்தான். ஊருக்குள்ள நிறைய வேல பாத்து இருக்கானுங்க, ஆதாரம் திரட்டிக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் அரெஸ்ட் பண்ணிடலாம்”
 
“எல்லாம் சரி நீ அந்த வீட்டுக்குள்ள போன வேல இன்னும் நடக்கலைனு தெரியுது. போனஸ்ஸாதான் கோவிந்தன் பிடிபட்டிருக்க இல்லையா”
 
“தீரா, தீரா… இப்படி எல்லாத்தையும் கெஸ் பண்ணா நான் எப்படி கேஸ முடிக்கிறது. கோவிந்தன் தலைமறைவான பிறகு இந்த ஊர்ல அவனை மாதிரி ஒருத்தன பார்த்தா தகவல். தாடி, மீசை எல்லாம் எடுத்து பய மொட்டை அடிச்சிக்கிட்டு திரியிறான். மாறு வேசத்துல இருக்காராம்”
 
“மாறுவேஷத்துக்கு உண்டான மரியாதை போச்சேடா” சிரித்தவன் தொடர்ந்தான் “நீ எதுக்கு போனானு இன்னும் சொல்லவே! இல்லையே! தீரா”
 
“எல்லாம் நம்ம மிதுன்காகத்தான். அவன் தங்கச்சி அணு அவளோட பாய் பிரென்ட் ஏமாத்தினதுல ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சூசைட் பண்ணிகிட்டாளே! அவ பாய் பிரென்ட் தான் இவள கர்ப்பமாக்கி ஏமாத்திட்டதா போலீஸ் விசாரிச்சு கேஸ மூடிட்டாங்க. அந்த பையனும் ஜெயில்ல இருந்தானே!”
 
“ஆமா. மிதுன் சொன்னான்”
 
“அவன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சூசைட் பண்ணிகிட்டான். சூசைட் நோட்ல மிதுனோட தங்கச்சி அணுவ அவன் உயிருக்குயிரா காதலிச்சதாகவும். கல்யாணத்துக்கு முன்னால இப்படி ஒரு ஈனச்செயல தான் செய்யல என்றும். அவ தனக்கு துரோகம் செய்ததாலதான் சண்டை போட்டு பிரிஞ்சிட்டதாகவும் சொன்னவன். அவளுக்குத் தெரியாமலே! இது நடந்திருந்தா? அவ என்ன சந்தேகப்பட்டதுல எந்த தவறும் இல்ல. நான்தான் அவளை புரிஞ்சிக்கல. அவ இல்லாத உலகத்துல இருக்க பிடிகளனு எழுதி இருக்கான். அந்த பொண்ணோட கர்ப்பத்துக்கு இந்த பையன் காரணமான்னு விசாரிச்சு இருந்தா இன்னைக்கி இந்த பையன் உயிரோட இருந்திருப்பான் ”
 
“போலீஸ்ல சில பேர் இப்படி அஜாக்ரதையா? அவங்க இஷ்டத்துக்கு கேஸ முடிக்கணும்னு அப்பாவிங்கள உள்ள புடிச்சி போட்டுடுறாங்க. ம்ம்.. நீ என்ன நினைக்கிற?” தீரா.
 
“மிதுன் கூட அந்த நோட்ட பார்த்துட்டு அப்படியும் நடந்திருக்குமோ? அவ படிச்ச காலேஜ்ல ஏதும் தப்பு நடக்குதோன்னு சந்தேகப்பட்டான். காலேஜ் போய் விசாரிச்சதுல அவங்க கூடவே இருந்தது ஹரிஹரன்னு கேள்விப்பட்டு அவனை விசாரிக்க ஆள் அனுப்பினா… அவங்க ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்னு இவன் சொல்லுறான். காலேஜுக்கு பிறகு ஒரு போன் கால் பேசினது இல்ல. அதனால அவனை மேற்கொண்டு விசாரிக்காம விட்டுட்டேன். எங்க சுத்தி விசாரிச்சாலும் முட்டுச்சந்து மாதிரி ஹரிஹரன் வந்து நிக்கிறான். மருதநாயகத்தை வேற லோக் பண்ண வேண்டி இருந்தது. அதான் என்ன ஏதுன்னு ஒரு கை பார்த்துடலாம்னு உள்ள நுழைஞ்சிட்டேன். இவனுங்க வேற பலி வாங்குறேன்னு கிளம்பிட்டானுகளா? அத்தனை பேரையும் ஒண்ணா அரெஸ்ட் பண்ணலாம்னு நினச்சேன். மிஸ் ஆகிட்டாங்க. இல்லனா இந்திய வரலாற்றில் முதல் முறையாகனு நியூஸ் வந்திருக்கும்” சிரிக்காமல் சொன்னான் தீரன்.
 
தன் சகோவின் குறும்பு புரிய “நல்லா என்ஜோய் பண்ணுறான்னு மட்டும் தெரியுது. ஹரிஹரன்தான் கல்ப்ரிட்டா?” விஷயத்தில் கவனமானான் தீரன்.
 
“எஸ். அவனே!தான். ஊருளையும் நிறைய பொண்ணுக வாழ்கையோட விளையாடி இருக்கான். அவன் பண்ணதுக்கு கோவிந்தன் வாக்குமூலம் கொடுத்திருக்கான். ஆள தூக்கிடுவேன். ரெண்டு தட்டு தட்டினா.. எல்லாம் கக்கிடுவான்”
 
“சரி, சரி சீக்கிரம் வீடு வந்து சேரு. நாங்க உன்ன மிஸ் பண்ணுறது விட ஸ்கூப் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறான்”
 
“விசாலாட்சி அம்மா உன் பொறுப்புலையே! இருக்கட்டும்” அலைபேசியை அனைத்த ஜெய்யாக இருக்கும் தீரன் அடுத்து என்ன செய்வதென்று யோசனையில் விழ அவன் அலைபேசி மீண்டும் அடிக்கவே! இயக்கி காதில் வைக்க மறுமுனையில் ஈகை பூவிழியை மருதநாயகம் கடத்திவிட்டதாக கூறி ஊருக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறினான்.
 
ஈகை மற்றும் தயாளன் தன் குடும்பத்தோடு ஊருக்குள் வர தீரன் அழைத்து வீட்டுக்கே! வருமாறு கூறி இருக்க, வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
 
வீட்டில் வேதநாயகியும், உமையாலும் வேலையாட்களும் மாத்திரம் இருக்க, அனைவரும் நடு ஹாலில் அமர்த்தப்பட்டு தீரன் மற்றும் டீம் அவர்களை சுற்றி நின்றிருந்தனர்.
 
 
“வாங்க ஈகை”
 
“என்ன பண்ணுறீங்க ஜெய்? எதுக்கு இவங்கள பிடிச்சி வச்சிருக்கிறீங்க?” மருதநாயகம் செய்யும் அனைத்துக்கும் வேதநாயகி சம்பந்தமில்லை என்று அறிந்ததனால் ஈகை கடிய
 
“சில உண்மைகள் கசப்பாக இருக்கும் ஈகை. அத இவங்களும் தெரிஞ்சிக்கணும்” என்று வேதநாயகியையும், உமையாளையும் ஒரு பார்வை பார்த்தவன் “வேலையாட்களை விசாரிக்கத்தான் உக்கார வச்சிருக்கோம். விசுவாசம்னு மருதநாயகத்துக்கு யாரும் இங்க நடக்கிறத தகவல் கூறக்கூடாதில்லையா”
 
ஜெய் கூறுவதில் உண்மையும் இருக்க, மருதநாயகம் இங்கு இல்லாததினாலையே! பூவிழி இங்கு இல்லை. இங்க வைக்க அவர் முட்டாளும் இல்லை என்று புரிய அமைதியானான் ஈகை.
 
“ஈகை இங்க என்னப்பா நடக்குது” ஈகையை கண்ட மாத்திரத்தில் வேதநாயகி கேட்க, அவள் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் பார்கவி.
 
 
அதே நொடி “முதல்ல அம்மாவ காப்பாத்தணும் ஜெய். ஆமா உங்க பேர் உண்மையிலயே! ஜெய் தானா?” தயாளன் கேக்க
 
“டோன்ட் ஒர்ரி. மருதநாயகம் அண்ட் சான்ஸ் எந்த ஆலைல இருக்காங்க, உங்களுக்கு போன் வந்தது எந்த ஆலையோட நம்பர்னு கண்டு பிடிச்சாச்சு. நீங்க வந்ததும் கிளம்பலாம்னுதான் இருந்தோம்” முதல் கேள்விக்கு மாத்திரம் பதில் கூறினான் தீரன்.
 
பார்கவி வேதநாயகியிடம் செல்லவும் காயத்திரியும் புன்னகைத்தவாறே சென்று அமர்ந்துகொள்ள
 
“பாட்டி உங்களுக்கு என்ன ஈகையாதான் தெரியும். நான் முத்துராஜ் பையன் தமிழ்” ஈகை கூற
 
“தெரியும் பா” என்ற வேதநாயகி அவனுக்கு ஷாக் கொடுத்தார்.
 
“உங்களுக்கு எப்படி தெரியும்” என்று ஈகை கேட்கவில்லை. தெரிந்தும் ஏன் அமைதியாக இருந்தீங்க என்று கேட்டான்.
 
“நீ உயிரோட இருக்குற விஷயம் எனக்குத் தெரியாது. ஆனா நீ என் அண்ணன் பேரனா இருப்பான்னு என் உள்மனசு சொல்லிச்சு. அண்ணன் இறந்து கொஞ்சம் நாளையே! முத்துராஜ் குடும்பத்தோடு இறந்துட்டான் என்ற செய்தி கேள்விப்பட்டு என்னால தாங்க முடியல. நம்ம குடும்பத்துல மட்டும் இப்படி நடந்துருச்சேன்னு. கவலைல இருந்தேன். காசிக்கு போய் வரலாம். மனநிம்மதியாவது கிட்டும்னு போனேன். அங்க செல்வம் அண்ணாவை பார்த்தேன். அவர் என் கூட பேசவே! இல்ல. முகத்தை திருப்பிகிட்டு போனாரு.
 
ஒரே மகளையும் இழந்து. மருமகன், பேரன்னு மொத்த குடும்பத்தையும் இழந்து கவலைல இருப்பாரு அதான் போய் இருப்பார்னு ஓடிப்போய் அவரை வழி மறிச்சு. எங்க கூட ஊருக்கு வரும்படி கேட்டுக்கொண்டேன். அப்போ அவர் சொன்னது “கண்டிப்பா வருவான். அவன் வந்தா… உங்க குடும்பம் இருக்காது” என்று சொல்லிட்டு அவர் போய்ட்டாரு. 
 
அப்போ எனக்கு ஒன்னும் புரியல. அவர் சொன்னது மனச உருத்திக்கிட்டே இருந்துச்சு. அவர் சொன்ன அர்த்தம் புரியவே! இல்ல. காசிக்கு போனா மோட்சம் கிடைக்கும்னு சொல்வாங்க, எனக்கு குழப்பம் மட்டும்தான் மிஞ்சியது. அவர் சொன்னதை நினைச்சிகிட்டே! தூங்கியதால் என்னமோ! கெட்ட கனவு வேற வந்து திடுக்கிட்டு முழிச்சிட்டேன். ஒன்னும் புரியல. அடுத்த நாள் காசில் ஒரு குறி சொல்பவரை சந்திச்சேன். அவரே என்ன கூப்பிட்டு பேசினார்.
 
“இங்க வாம்மா. ரொம்ப மனக்குழப்பத்துல இருக்க, இப்போ நீ செய்ய வேண்டியதெல்லாம். உன் அண்ணன் சொத்தை பாதுகாக்குறதுதான். அதுக்கு உரிமையானவன் உன்ன தேடி வருவான். வரும் போது அவன் கிட்ட சேர்த்துடு”
 
“அப்போ என் அண்ணன் பேரன் உயிரோட இருக்கிறானா?” கண்கள் கலங்கியவாறே வேதநாயகி கேட்க
 
“அவன் வரும் முன்னாடி அவனுக்கு சொந்தமானவ வந்து சேருவா. அவளை நீ பத்திரமா பாத்துக்க, அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும் அப்போ அவன் யார்னு உனக்கு புரியும். அதுக்கு பிறகு சில கசப்பான உண்மைகள் உனக்கு தெரிய வரும். மனதைரியம் உனக்கு ரொம்ப முக்கியம்” என்றவர் எழுந்து சென்று விட்டார்.
 
பார்கவிக்கும் உனக்கும் கல்யாணம் நடந்த பிறகுதான் அவர் சொன்னது எனக்கு நியாபகத்துக்கு வந்தது. நீ என் அண்ணன் பேரன் என்கிறதும் எனக்கு புரிஞ்சது. என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன் தமிழ்” என்றார் வேதநாயகி.
 
“தேங்க்ஸ் பாட்டி. சில உண்மைகளை உங்களுக்கு சொல்லணும். ஆனா முதல்ல பூவிழி அம்மாவ காப்பாத்தணும்” என்றவன் தயாளன் யாரு பூவிழி யார் என்பதை கூறியவன், தயாளன் மற்றும் தீரன் டீமோடு குறிப்பிட்ட ஆலையை நோக்கி செல்ல வண்டியை கிளப்பி இருந்தான்.
        

Advertisement