Advertisement

அத்தியாயம் 28

“பாக்யா இறந்து ஒருவருஷமாகப்போகுதுல்ல சம்பந்தி திதி கொடுக்கணும். மாப்பிளையை பார்த்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். அவர் என்ன யோசிச்சு வச்சிருக்காரு தெரியலையே” என்றார் சதாசிவம்.

“அது வந்துங்க சம்பந்தி நம்ம சந்திரமதி பொண்ணு சுபி கட்டிக்கப்போற பையன் இத்தனை நாளா ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா கெடந்தானே அவன் கண்ணு முழிச்சிட்டான்னு எல்லாரும் கிளம்பி அவனை பார்க்க போய் இருக்காங்க. வர நேரமாகும். எனக்கு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்குனு நான் போகல.

இந்த கொரோனா வந்த பிறகு ஜுரம் வந்தாலே பயமா இருக்கு. நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க. எனக்கு வந்த ஜுரம் உங்களுக்கு வந்தா முகிலன் என்ன திட்டுவான்”

எதோ தனக்கு தீராத தொற்று நோய் போல் பேசி சதாசிவத்தை வீட்டை விட்டு அனுப்ப முயன்றாள்.

“இவர் ஒருத்தர். இப்போ தான் என் பையன் இவர் பொண்ண மறந்து நிலஞ்சனா கூட வாழ ஆரம்பிச்சிருக்கான். இந்த நேரத்துல இங்க வந்து பாக்யாவை பத்தி பேசினா பழைய குருடி கதவை திறடி என்ற கதையா முகிலன் பாக்யா புராணம் பாட ஆரம்பிச்சிடுவானே. முகிலன் வர முன்னாடி எப்படியாவது பேசி இவரை அனுப்பிடனும்” என்ற சிந்தனையிலையே பேசலானாள் காஞ்சனாதேவி.

ஒரு அன்னையாக காஞ்சனாதேவி மகனின் வாழ்க்கை சிறக்க வேண்டி சுயநலமாகத்தான் சிந்தித்தாள்.

ஆம் ஆதிரியன் கண் விழித்து விட்டான். அருகில் தன்னையே பார்த்து பரவசத்தில் இருந்த சுபலக்ஷ்மியை பார்த்து புன்னகைக்கவும் அவள் அழுதே விட்டாள். உள்ளே வந்த கனகவள்ளி மகன் கண் விழித்திருப்பதை பார்த்து கத்திக் கூச்சலிட்ட பின் தான் சுபலக்ஷ்மி மருத்துவரை அழைக்க ஓடியிருந்தாள். அதன் பின் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவனை பார்க்கத்தான் வான்முகிலன் நிலஞ்சனாவோடு சென்றிருக்கின்றான்.

சற்று முன் தான் காஞ்சனாதேவி வான்முகிலனின் அலைபேசி வழியாக ஆதிரியனிடம் பேசியிருந்தாள். வான்முகிலன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்பி வீட்டுக்கு வந்து விடுவான் அதற்குள் சதாசிவத்தை கிளப்ப வேண்டும் என்று தான் இவ்வாறு கூறினாள்.

வழமையாக வந்தால் இரண்டு, மூன்று நாட்களாவது தங்கி விட்டு செல்லுமாறு கூறும் சம்பந்தியம்மா இவ்வாறு பேசுவது ஜுரத்தால் தானென்று நம்பியே விட்டார் சதாசிவம்.

“மூத்தவ போன பிறகு அந்த கவலையிலையே என் பொண்டாட்டி போய் சேர்ந்தா. எனக்கிருந்தது பாக்யாதான். அவளும் போன பிறகு நான் மட்டும் உசுரோட இருந்து என்ன செய்ய?” சோகமாக சொன்னார் சதாசிவம்.

“ஐயோ இவரு புரிஞ்சிக்க மாட்டேங்குறாரே” என்ன செய்வது என்று மனதுக்குள்ளேயே புலம்பினாள் காஞ்சனாதேவி.

தொலைபேசி சிணுங்கியது. அழைத்தது வாயிலில் நின்ற காவலாளிதான் “அம்மா… வக்கீலம்மாவை தேடி அவங்க அண்ணி வந்திருக்காங்க. உள்ள அனுப்பவா?” அனுமதி கேட்டார்.

“அப்பா, அம்மா இல்லனு சொன்னா. அண்ணி எங்க இருந்து வந்தா?” முணுமுணுத்தவாறே உள்ளே அனுப்பும்படி உத்தரவிட்டாள்.

உள்ளே வந்த பெண்ணோ கோட், சூட்டில் போனிடையில் கொண்டையில் வடநாட்டு பெண் போல் இருந்தாள்.

நிலஞ்சனாவுக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லை என்று பார்த்த உடனே தெரிந்தது.

காஞ்சனாதேவியை பார்த்து வணக்கம் வைத்தவள், சதாசிவத்தை பார்த்தும் வணக்கம் வைத்தாள்.

 “இருக்கட்டும், இருக்கட்டும்” அவளை சந்தேகமாகவே பார்த்த காஞ்சனாதேவி உள்ளே விட்டது தப்போ என்று யோசித்தாள்.  

“என் பேர் மான்சி டாகூர். நிலஞ்சனாவுக்கு நான் அண்ணியாக இருந்தேன். அவ அண்ணனை டைவோர்ஸ் பண்ணதால. அதான் அவளை அவன் தங்கை இல்லனு சொல்லிட்டானே. அவன் என் புருஷனா இருந்தாலும் நான் அவளுக்கு அண்ணியாக இருக்க முடியாது. சரி பழசை பேசி என்ன பயன். நான் வந்தது நிலஞ்சனாவுக்கு சொந்தமான பொருளை கொடுத்துட்டு போக” என்றவளோ நிலஞ்சனாவை அழைக்குமாறு கூறினாள்.  

“ஏம்மா நீ பாட்டுக்கு அண்ணி என்று சொல்லிக்கிட்டு உள்ள வந்த. வந்த பிறகு என்னென்னமோ சொல்லுற”

காஞ்சனாதேவி தன்னை சந்தேகமாக பார்ப்பதை வைத்தே நிலஞ்சனா தங்களை பற்றி எதுவுமே கூறவில்லை என்று புரிய, “லாயரா இருந்தும், சட்டம் தெரிஞ்சும், சொத்துக்காக அண்ணன் சண்டை போட்டப்போ தன்னை வளர்த்த அப்பாவோட எந்த சொத்தும் வேண்டாமென்று கிளம்பி வந்த ரோசக்காரியாச்சே. சொல்லியிருக்க மாட்டா. அநாதை என்று சொன்னாளா? அப்பா இருந்தார் என்றாவது சொன்னாளா?”

“அப்பா, அம்மா இருந்ததாக சொன்னா. அண்ணனை பத்தி சொல்லல”

“எப்படி சொல்லுவா? என் மாமனார் எங்க இருந்து அவளை கூட்டிட்டு வந்தார் என்று எனக்குத் தெரியாது. என் புருஷனுக்கு சின்ன வயசுல இருந்தே அவளை பிடிக்காது. ஆனா என் மாமனாரோட கடைசி நேரத்துல அவ தான் பாத்துக்கிட்டா.

ரெண்டு பசங்களுக்கும் என் மாமனார் சொத்தை சரிசமமாகத்தான் எழுதி வச்சிருந்தார். என் அம்மா செத்த பிறகு நீ என் அப்பாக்கு பொறந்தியா? இல்லையே உன்ன தத்து தானே எடுத்தாரு. இத்தனை வருஷமா சோறு போட்டு வளர்த்தத்துக்கு சொத்தும் வேணுமான்னு கண்டபடி பேசிட்டாரு.

அப்பாவே போன பிறகு அவர் சொத்து எனக்கெதுக்கு என்று எல்லா சொத்தையும் என் புருஷன் பேர்லயே எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டா. அவ இங்க இருக்கான்னு டிவில பார்த்து தான் நான் வந்தேன்” மான்சி கூறிக் கொண்டிருக்கும் பொழுது வான்முகிலனோடு நிலஞ்சனா உள்ளே வந்தாள்.

“மான்சி நீ இங்க?” உறவு முறை கூறி அழைக்க நிலஞ்சனாவுக்கு இஷ்டமில்லை என்று பெயரை கூறி அழைத்தாளென்று மான்சிக்கும் நன்றாகவே புரிந்தது.

“நீ என் பெயரையே சொல்லலாம். நான் தான் உன் அண்ணனை டைவோர்ஸ் பண்ணிட்டேனே” என்றாள் மான்சி.

“அண்ணனா?” என்று வான்முகிலன் நிலஞ்சனாவை ஏறிட, காஞ்சனாதேவி அவன் கையை பிடித்து இழுத்து மான்சி கூறியதை மெதுவாக மகனின் காதில் ஏத்தி வைத்தாள்.

தனக்கு நிலஞ்சனாவை பற்றி எதுவுமே தெரியவில்லை. இதுநாள் வரை கூடவே இருந்தும் தான் அறிந்துகொள்ளவும் முயற்சி செய்யவில்லை என்று நொந்து கொண்டான் வான்முகிலன்.

“நான் வந்தது இந்த செயினை கொடுத்துட்டு போக. இது மட்டும் தானே உன் சொத்து” என்று கையிலிருந்த கவரை பிரித்து முருகன் டாலர் பதித்த பதக்கத்தோடு கூடிய தங்க மாலையை எடுத்துக் கொடுத்தாள் மான்சி.

நிலஞ்சனா எதுவும் பேசவில்லை அமைதியாக அதை வாங்கிக் கொண்டாள்.

“அடடே மயில்ல அமர்ந்திருக்குற கந்தனை பாக்குறப்போ கூடிய சீக்கிரம் குட்டி பையன் வீட்டுக்கு வருவான்னு தோணுது” பதக்கத்தை கையில் எடுத்துக் பார்த்தாள் காஞ்சனாதேவி.

பதக்கத்தை பார்த்து ஓடி வந்த சதாசிவம் பறிக்காத குறையாக அதை கையில் வாங்கிப் பார்த்து “இது எப்படி உன் கிட்ட?” நிலஞ்சனாவை எதிர்பார்ப்போடு பார்த்தார்.

“என்ன இங்க தான் சௌத்ல ஏதோ ஒரு கோவில்ல கண்டெடுத்ததாக அப்பா சொன்னாரு அப்போ என் கழுத்துல இந்த டாலர் இருந்ததா சொன்னாரு. அப்போ எனக்கு ஒரு வயசு…” நிலஞ்சனா கூறி முடிக்கவில்லை

“அம்மா பாக்யா… நீயாம்மா…” நிலஞ்சனாவை கட்டிக் கொண்டு அழுதார் சதாசிவம்.

மதுரை மீனாச்சி கோவிலுக்கு சதாசிவம் குடும்பத்தோடு சென்றிருந்த பொழுது தான் ஒரு வயதான நிலஞ்சனா காணாமல் போனாள். அவளை மனைவியை இழந்து மனஅமைதிக்காக வந்த ராஜகோபால் கண்டெடுத்து டில்லி அழைத்து சென்றிருந்தார். நிலஞ்சனா தன்னுடைய சொந்த தங்கை இல்லையென்பதனாலும், தந்தை தன்னை விட நிலஞ்சனாவின் மேல் அதிகம் பாசம் வைத்திருப்பதனாலும் தான் ராஜகோபாலின் மகன் ப்ரவீனுக்கு நிலஞ்சனாவை பிடிக்கவில்லை.

“அவளா நீ….” அதிர்ந்து நின்றான் வான்முகிலன்.

“என்னங்க உங்க கிட்ட ஒன்னு சொல்லணுமே”

“என்ன ஸ்ரீ… சொல்லு” பாக்யஸ்ரீ யோசிப்பதும், திணறுவதுமாக நிற்பதை பார்த்து அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான் வான்முகிலன்.

“சொல்லுடி…”

“அது வந்துங்க. எனக்கும் என் அக்காக்கும் ஒரே பெயர்”

“என்னடி சொல்லுற? உனக்கு அக்கா இருக்காளா? சொல்லவே இல்ல. பொதுவா தங்கச்சிய தான் கண்ணுல காட்ட மாட்டாங்க நீ என்ன அக்காவ மறச்சி வச்சிருக்க” அவளை வம்பிழுத்தவன் அவள் முறைக்கவும் “ஊரு உலகத்துல எங்கயாவது அக்கா தங்கச்சிக்கு ஒரே பெயரை வைப்பாங்களா?”

வான்முகிலனின் உதடுகளை விரலை வைத்து தடுத்த பாக்யஸ்ரீ “நீங்க பேசினா நான் பேச மாட்டேன். அப்பொறம் சொல்ல வந்ததையே சொல்ல முடியாம போகும்”

“சரி, சரி முறைக்காத சொல்லு” இவன் சிரிக்க

“என் அக்கா பெயர் பாக்யஸ்ரீ ஒரு வயசுலயே காணாம போய்ட்டா அப்பொறம் தான் நான் பொறந்தேனாம். அதனால அவ ஞாபகமா அவ பெயரையே எனக்கு வச்சதா அப்பா சொல்வாரு”

“அதனாலென்ன?”

“அக்கா இருந்திருந்தா அப்பா உங்களுக்கு அக்காவைத்தான் பேசியிருப்பாரு. நான் பொறந்திருப்பேனோ என்னவோ”

சத்தமாக சிரித்த வான்முகிலன் “அது சரி உன் அக்கா உன்ன விட அழகா, அறிவாளியா இருப்பா. அதான் எஸ் ஆகிட்டா”

“எங்கக்காவை கண்டு பிடிக்க முடியாதா?”

“கண்டு பிடிச்சா…. அவ வாழ்க்கையை கேட்பாளே கொடுப்பியா? எனக்கு ஓகே தான். நீ என்ன சொல்லுற?” கிண்டல் செய்தவனை பாக்யஸ்ரீ மொத்தியெடுத்தாள்.

தான் நிலஞ்சனாவை அடிக்கடி பாக்யஸ்ரீ என்று ஏன் நினைக்கிறேன் என்ற கேள்விக்கு வான்முகிலனுக்கு இன்று விடை கிடைத்து விட்டது.

நிலஞ்சனா பாக்யஸ்ரீயின் சகோதரி. அதே சாயல், அதே முகபாவனைகள். அதே உடல்மொழி என்று பாக்யஸ்ரீயை பலவகையில் ஒத்திருக்கின்றாள்.

அன்று பாக்யஸ்ரீயிடம் விளையாட்டாக சொன்னது இன்று நிஜமாகிவிட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்தான் வான்முகிலன். 

“அப்பா…” சதாசிவத்தை கட்டிக் கொண்டு நிலஞ்சனா அழ, நிலஞ்சனா சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டாள் என்ற நிம்மதியோடு மான்சி சொல்லாமலே அங்கிருந்து சென்று விட்டாள்.

பாக்யஸ்ரீயை இழந்து தவித்த சதாசிவத்துக்கு மூத்தமகள் நிலஞ்சனா கிடைக்கவே வந்த காரியம் கூட மறந்து போக, அவளை வீட்டுக்கு அழைத்து செல்ல ஆசைப்பட்டார்.

நிலஞ்சனா யாரிடமும் அனுமதி கேட்டு நிற்கவில்லை. காஞ்சனாதேவியிடம் சொல்லிக் கொண்டு சதாசிவத்தோடு கிளம்பி விட்டாள்.

மூன்று மாதங்கள் கடந்திருந்தது. ஊருக்கு சென்ற நிலஞ்சனா வான்முகிலனுக்கு அலைபேசி அழைப்பு கூட விடுக்கவில்லை. இவனும் முறிக்கொண்டு திரியலானான்.

காஞ்சனாதேவி பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா?

“ஏண்டா சுபிக்கு பார்த்த பையனுக்கு தான் இப்போ உடம்பு குணமாகிருச்சே. எப்போ கல்யாணத்த வச்சிக்கலாமென்று சம்பந்தியம்மா தினமும் போன் போட்டு கேட்டுகிட்டே இருக்காங்க. உன் பொண்டாட்டி என்ன அப்பா வீட்டுல போய் உக்காந்துகிட்டு இருக்கா? நீயும் கண்டுக்காம இருக்க. போ… போய் அவளை கூட்டிட்டு வா” என்றாள்.

“ஏன் போனவளுக்கு வர பாதை மறந்து போச்சாமா?” அன்னையை முறைத்து விட்டு சென்றான் வான்முகிலன்.

“இவன் ஒருத்தன். விளங்காத பய” வான்முகிலனை திட்டியவாறே நிலஞ்சனாவுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தால் மாமியாரை நன்றாகத்தான் நலம் விசாரிப்பாள். “வீட்டுக்கு எப்போ வர?” என்று கேட்டால் மட்டும் அவளிடம் எந்த பதிலும் வராது.

“இதுங்க ரெண்டும் என் உசுர வாங்குதுங்க” காஞ்சனாதேவியால் புலம்ப மட்டும் தான் முடிந்தது.

“ஏம்மா பவானி உன் பிரெண்டு உனக்கு போன் பண்ணாளா?

பவானி குணமடையும் வரையில் காத்திருக்காமல் ராம் அவளை திருமணம் செய்து கொண்டு அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளலானான்.

உடல் தேறி வந்த பவானியும் வளமை போல் ராமோடு வி.எம் நிறுவனத்தில் வேலை பார்கலானாள்.

“கல்யாணமாகி ஹனிமூனுக்கு கூட போகல. லீவ் கேட்டா வேல இருக்கு என்று சொல்லுறாரு. லன்ச் பிரேக்ல கூட தனியா இருக்க விடுறாரா பாரு” வான்முகிலன் காதுபடவே முணுமுணுத்தான் ராம்.

“உனக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாக்கிருச்சு. நானே இன்னும் ஹனிமூன் போகல. உனக்கு என்ன அவசரம்?” ராமை முறைத்தாலும் பவானியின் பதிலுக்காக அவளை ஏறிட்டான் வான்முகிலன்.

“ஆ… டைலி போன் பண்ணுறாளே”

பவானிக்கு உடம்பு முடியாததால் நலம் விசாரிக்க நிலஞ்சனா அழைப்பாள். அதை தான் பவானி கூறினாள்.

“ஓஹ்… என் கிட்ட பேசத்தான் மேடத்துக்கு நேரம் பத்தலையோ” கோபமாக வெளியேறினான் வான்முகிலன்.  

நிலஞ்சனாவிடமிருந்து வான்முகிலனுக்கு விவாகரத்து அறிக்கை வந்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு வான்முகிலன் நிலஞ்சனாவை காண கிளம்பி வந்திருந்தான். 

வான்முகிலனின் வண்டி சதாசிவத்தின் வீட்டு வாசலில் வந்து நிற்க, முற்றத்தில் வேலையாட்களோடு மிளகாய், மிளகு, சீரகம், மல்லி என்று மசாலா பொருட்களை காயபோட்டுக் கொண்டிருந்த நிலஞ்சனா திரும்பிப் பார்த்தாள்.

புடவையை தூக்கிச் சொருகி, கொண்டையிட்டு ஊருக்கு சென்ற நிலஞ்சனா கிராமத்து பெண்ணாகவே மாறியிருந்தாள்.

அவளை பார்த்தவாறே வான்முகிலன் இறங்க அவனை எதிர்பார்காத முகபாவனையோடு “வாங்க” என்றாள்.

“வேண்டாத விருந்தாளி வந்தது போலவே வரவேர்க்குறா பாரு” அவளை முறைத்தவன் சதாசிவம் அங்கு வரவும் நலம் விசாரித்தவாறே “என்ன மாமா உங்க பொண்ண என் கூட அனுப்புவீங்களா? இல்ல நானும் இங்கயே தங்கிடணுமா?” நிலஞ்சனாவை பார்த்தவாறு தான் கேட்டான்.

“பாக்யா போம்மா… மாப்புளைக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வாம்மா” சதாசிவம் நிலஞ்சனாவை பாக்யா என்று அழைத்ததும் நிலஞ்சனா சட்டென்று வான்முகிலனை தான் பார்த்தாள்.

“என்ன?” வான்முகிலன் நிலஞ்சனாவை மீண்டும் முறைக்கவே “ஒன்றுமில்லையென்று” உள்ளே சென்றாள். 

வெயில் அதிகமானதால் சோற்றுக்கற்றாழையை ஜூஸ் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தாள். அதை குவளையில் ஊற்றி எடுத்து வர வான்முகிலன் வாசலில் இல்லை.

“மாப்புள உன் ரூமுக்கு போய்ட்டாரு” தந்தை சொல்ல

“தன்னுடைய அறையென்று தங்கையின் அறைக்கு சென்றிருப்பானோ” என்று பாக்யஸ்ரீயின் அறைக்கு சென்றாள்.

அங்கே அவன் இல்லையென்றதும் தனதறைக்கு வந்தவளை பார்த்து “என்ன அங்கேயே வச்சிட்டு போகலாமென்று பாத்தியா? கைல கொடு” “சமைச்சி கொண்டுவருவங்களாம். வாசல்ல வச்சிட்டு போவாங்கலாம். வாசனையை வச்சி நாங்க இவங்கள கண்டு பிடிக்கணுமாம்” சத்தமாக முணுமுணுத்தான்.

“என்ன ஒரு தினுஸாவே பேசுறாரு” என்றெண்ணியவாறே நிலஞ்சனா ஜூஸை கையில் கொடுத்தாள்.

“எப்போ ஊருக்கு கிளம்பலாம்?” ஜூஸை அருந்தியவாறே இவன் கேட்க,

“நான் வரல” பட்டென்று கூறினாள் இவள்.

“பெரிய சந்திரமுகி கங்கா இவங்க. கூப்பிட்ட உடனே வரமாட்டேன்னு சொல்லுறா. வரலைனா தூக்கிட்டு போவேன்” சிரித்தவாறே தான் மிரட்டினான்.

“நாம அனுப்பின டைவோர்ஸ் நோட்டீஸ் இவர் கைல கிடைக்கலையா?” என்ற பார்வையோடு “நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம். அது தானே உங்களுக்கு வேணும். அப்படித்தானே சொன்னீங்க?” வான்முகிலனை ஏறெடுத்தும் பாராமல் கூறினாள் நிலஞ்சனா.

“ஆமா சொன்னேன். ஆனா என்ன லவ் பண்ணுற பொண்ண எப்படி விட்டுடுறது?”

நிலஞ்சனா அலைபேசி அழைப்பு விடுத்தாளா? என்று கேட்டு கோபமாக போகப்போனவனை தடுத்து நிறுத்திய பவானி “பாஸ் நீங்க நிலஞ்சனாவ எந்த சூழ்நிலையில கல்யாணம் பண்ணீங்க என்று ராம் சொன்னான். ஆனா நிலஞ்சனா உங்கள லவ் பண்ணுறா” என்று தோழிகளுக்கிடையிலான சம்பாஷணைகளையும், நிலஞ்சனா டில்லியில் வைத்து வான்முகிலனை சந்தித்தாள் என்பதையும், அவளது வாழ்க்கையில் நடந்ததையும் கூறினாள்.

நிலஞ்சனா யார்? அவளை பற்றி முற்றாக அறிந்துகொள்ளவில்லையென்று மனம்வெம்பிக் கொண்டிருந்தவனுக்கு அவள் தன்னை காதலிக்கிறாள் என்பது மேலும் அவன் மனதை இறுக்கியது.

அவளை சந்தித்தது முதல் அவள் ஊருக்கு செல்லும் வரையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைத்துப் பார்த்தவனுக்கு பாக்யஸ்ரீயின்று அவளை அவன் மனம் அடிக்கடி தவறாக எண்ணினாலும், அவன் மனதில் நிலஞ்சனாவுக்கென்று தனியிடம் இருந்தது.

அது காதல் தான். அவள் ஊருக்கு சென்ற நாளிலிருந்து அவளை பிரிந்து தவியாய் தவிக்கும் அவன் மனம் அவளை தேடும் பொழுதே காதலை உணர்ந்து கொண்டிருந்தான். தன்னிடம் சொல்லாமல் சென்றாலே என்ற கோபம். சென்றவள் அலைபேசி அழைப்பு கூட விடுக்கவில்லையே என்ற கோபத்தில் இருந்தவனுக்கு அவள் தன்னை ஏற்கனவே காதலிக்கிறாள் என்று அறிந்துகொண்ட பின் அவளை இனிமேலும் பிரிந்திருக்க முடியாது என்று தான் கிளம்பி வந்திருந்தான்.

வந்தவன் ஊருக்கு செல்லலாமா என்று கேட்டால் இவள் விவாகரத்து கேட்கின்றாள்.

வான்முகிலன் தன்னை காதலிக்கும் பெண்ணை விட முடியாது என்றதும் அவனை சட்டென்று திரும்பிப் பார்த்த நிலஞ்சனா “பவானி சொன்னாளா? ஆனா நீங்க என்ன லவ் பண்ணலையே. நீங்க பாக்யாவை தானே லவ் பண்ணுறீங்க. நாம பிரிஞ்சிடலாம்” என்றாள்.

வான்முகிலனின் மனதில் பாக்யஸ்ரீக்கு மட்டும் தான் இடம். வேறு எந்த பெண்ணுக்கும் இடமில்லை என்று அவன் பல தடவைகள் கூறியும் நிலஞ்சனா அவன் மனதை மாற்ற முயன்றாள். அப்படி பட்டவள் அவனை பிரிய வேண்டும் என்று காரணமில்லாமல் முடிவெடுப்பாளா?

தன்னை பாக்யஸ்ரீயாக நினைத்து வாழ்வானோ என்று அஞ்சியவள் தானே. தன்னை அவன் பாக்கியாவாக ஏன் பார்க்கின்றான் என்று புரியாமல் குழம்பியவளுக்கு விடை கிடைத்து  விட்டது. பாக்யஸ்ரீ யாரோ? எவளோ? என்று நினைத்த பொழுதே வான்முகிலன் இன்னொரு பெண்ணாக தன்னை நினைத்து வாழக் கூடாது என்று எண்ணியவள், தன்னோடு தன் தங்கையோடு வாழ்வதாக எண்ணி வாழ ஆரம்பித்து விடுவானோ என்ற அச்சம் நிலஞ்சனாவின் மனதை ரணமாக அறுக்க வான்முகிலனை பிரிந்து செல்ல முடிவு செய்தாள். 

அவனுக்கும் தான் தன்னோடு வாழ இஷ்டமில்லை. அவனே விவாகரத்து பத்திரிக்கையை அனுப்பட்டும் என்று இவள் இருந்தால் அவன் அனுப்பவில்லை. இவள் அனுப்பினால் அதற்க்கு பதில் சொல்லாமல் அவள் அச்சப்பட்டது போல் தன்னோடு வாழுமாறு வான்முகிலன் வந்து நின்றாள் இவள் ஒத்துப்பாளா? 

“ஆமா பாக்யாவைத்தான் லவ் பண்ணுறேன். பாக்யஸ்ரீயைத்தான் லவ் பண்ணுறேன். இந்த பாக்யஸ்ரீயை” என்று அவளை அணைத்துக் கொண்டவன் “என்ன தாண்டி உன் பிரச்சினை? என்ன லவ் பண்ணுற. அத கூட சொல்லாம, இத்தனை நாளா மறச்சி வச்சிருந்த. இப்போ போறேன்னு சொன்னா விட்டுடுவேனா? அப்படியெல்லாம் விட முடியாது”

அவனிடமிருந்து விலக முயன்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெறுக, அவன் நெஞ்சில் சாய்ந்து துடைக்காளானாள்.

 “சொல்லு என்ன தான் உன் பிரச்சினை?” சொன்னால் தான் விடுவேன் என்று மேலும் அவளை தன்னுள் இறுக்கினான் வான்முகிலன்.

“இல்ல உங்க மனசுல பாக்யா தான் இருக்கா. என் தங்கச்சி தான் இருக்கா. அவளை நினைச்சி கிட்டு நீங்க என் கூட வாழுவீங்க. சத்தியமா என்னால அத தாங்க முடியாது. நாம் பிரிஞ்சிடலாம்” என்றாள்.

“சீ பைத்தியம். நீ உன் தங்கச்சி சாயல் இருக்க, தப்பு தப்பு உன் தங்கச்சி தான் உன் சாயல்ல இருந்தா. அதனால நான் கொஞ்சம் கன்பியூஸ் ஆனது உண்மைதான். கன்பியூஸான டைம்ல தவிர என்னைக்காவது உன்ன ஸ்ரீ என்று கூப்பிட்டு இருப்பேனா?

நான் கர்மாவை நம்புறேன். எனக்கும் உனக்கும் கடவுள் எப்பவோ முடிச்சு போட்டுட்டான். அத ஸ்ரீ வாயாலையே சொல்லவும் வச்சிட்டான்” என்றவன் பாக்யஸ்ரீ என்ன சொன்னாலோ அதை கூறினான்.

“உன்ன பார்த்த உடனே எனக்கு பிடிச்சது என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனா நீ ஊருக்கு வந்த இந்த மூணு மாசம் உன்ன ரொம்பவும் மிஸ் பண்ணேன். போன் கூட பண்ணாம இருந்த நீ” அவள் நெற்றியில் முட்டி மூக்கை வேறு கடித்து வைத்தான்.

கணவன் பேசப் பேச மனம் தெளிந்தவள் “நீங்க ஏன் போன் பண்ணல? என்ன வேண்டாமென்று தானே போன் பண்ணல?” அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

“போயிட்டு வரேன்னு கூட சொல்லாம போனது நீ.  உன் ப்ரெண்டுக்கு மட்டும் டைலி போன போட்டு கொஞ்சுரியாமே! கோபம் வராதா? அதான் போன் பண்ணல. இவனும் முறைத்தான்.

“நிஜமாலுமே உங்களுக்கு என்ன பிடிக்குமா?” வான்முகிலன் சொல்வது நிஜமா? நிலஞ்சனாவால் இன்னுமே நம்ப முடியவில்லை. 

“எனக்கு உன்ன பிடிகாலைலனா நீ அனுப்பின டைவர்ஸ் நோட்டீஸுல சைன் பண்ணி தான் அனுப்பியிருப்பேன். நானே நேர்ல வந்திருக்க மாட்டேன். இன்னுமும் உனக்கு நம்பிக்கை வரலைனா, என் கூட வந்து வாழு ப்ரூப் பண்ணுறேன்” என்றான்.

இது போதா? அவனை இறுக அணைத்துக் கொண்டவள் “அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடுங்க” அவனை பார்த்து குறும்பாக சிரித்தாள்.

“ஒன்னு போதுமா?” என்றவாறே நிலஞ்சனாவின் இதழ் நோக்கி குனிந்தான் வான்முகிலன்.

மலர்விழியால் தான் பாக்யஸ்ரீயை இழந்தேன்  என்று அறிந்தால் வான்முகிலேன் மலர்விழி தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுத்து அவளை பழிவாங்கக் கூட கிளம்பியிருப்பான். அவன் வாழ்வில் மருந்தாக மலர்ந்த செங்காந்தள் மலரானாள் நிலஞ்சனா.

அவன் அவளை புரிந்து கொண்டான். அவள் காதலையும் தான். இனி அவர்கள் வாழ்வில் ஆனந்தம்.

நன்றி

வணக்கம் 

Advertisement