Advertisement

 நெஞ்சுகுள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 8.

 காலங்கள் யாருக்கும் எதற்காகவும் காத்திருக்காமல் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்றபடி சென்று ஒரு வாரம் கடந்துவிட்டது..

மீரா இன்னும் மருத்துவ மனையில் தான் இருந்தாள்..

அவளுக்கு தலையில் பலமாக அடிப்பட்டதால் கண் முழிக்கவே 2 நாட்கள் ஆகிவிட்டது. துளசிக்கு இருந்த ஒரே சொத்தும் சொந்தமும் அவள்தான். அதனால் மீராவை இவ்வாறு பார்த்ததும் அவளால் அதை ஏற்று தாங்கி கொள்ள முடிய வில்லை.

ரிஷியின் வற்புறுத்தலால் அங்கு விசாரணைக்கு வந்த போலீஸ் இடம். கம்ப்ளைன்ட் கொடுத்தாள்..

அதன் பின் அவளால் இயங்கவே முடியவில்லை ஊன் உறக்கம் எதுவும் இல்லாமல் ஒரு வித பித்து நிலையில் இருந்தாள் துளசி.

ரிஷி காலை மாலை என வந்து பார்த்து தேவையான உதவிகள் செய்துவிட்டு செல்வான்.

துளசி வேலைக்கு போனால் தான் அவளின் கையில் பணம் இருக்கும். உணவுக்கே கஷ்டமான நிலையில் இந்த மருத்துவமனைக்கு கட்டும் பணம் மூன்று லட்சம் என்று டாக்டர் கூறியதும். அவளுக்கு மயக்கம் வராமல் இருந்தது ஆச்சர்யமான ஒன்று தான்.

 ரிஷியும் ஒரு பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்வதால் அவனுக்கு பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அவனும் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்தவன் தான். ஒருவரின் உதவி மூலம் தான் அவனுக்கு இந்த பெயரும் புகழும் பணமும் கிடைத்தது. அதை என்றும் மறக்காமல் அவனால் முடிந்த உதவியை அவனும் மற்றவர்களுக்கு செய்வான்.

 அதேபோன்றுதான் அவனிடம் இருக்கும் பணத்தில் சிறு தொகையான மூன்று லட்சத்தை மருத்துவமனையில் மீராவிற்கு தலையில் ஆஃப்ரேஷன் பண்ணுவதற்கும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்கும் பணம் கொடுத்தான்..

 அவனுக்கு துளசியை பார்த்த வரையில் இவ்வளவு பெரிய தொகை பணத்தை பெற்றுக் கொள்வாள் என்று தோன்றாத படியால் அவனே முன்வந்து பணத்தை மருத்துவமனையில் கட்டிவிட்டு டாக்டரிடமும் ஏனைய தாதியரிடமும் மருத்துவமனை டிரஸ்ட் மூலம் பணம் பெற்றுக் கொண்டதாக கூறும்படி சொன்னான் ரிஷி.

 நிஷாவை வைத்துத்தான் துளசியை ஓரளவுக்கு சமாதானப்படுத்தி இடையிடையே ஜூஸ் காபி போன்ற பானங்களை அருந்த வைக்க முடிந்தது..

 துளசியின் வீட்டுக்கு சென்று வீட்டின் அருகே உள்ள பெண்ணிடம் துளசி மற்றும் மீராவின் உடையை எடுத்து தருமாறு கூறி வாங்கி எடுத்துவந்து நிஷாவிடம் கொடுத்து துளசியிடம் கொடுக்க வைத்தான்..

 அவன் இல்லாத நேரங்களில் அவனுக்கு நம்பகமான ஒருவரை மருத்துவமனையில் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் அவசர உதவிக்கும் வைத்திருந்தான்..

 இதுவரையிலும் கடத்தல்காரர்கள் கடத்திய குழந்தைகள் மற்றும் பெண்களில் அவர்களிடம் இருந்து முதன்முதலில் தப்பிப்பது மீரா மட்டுமே..

 அதனால் மீராவின் உயிருக்கு இன்னும் ஆபத்து இருப்பதை தெரிந்து கொண்ட விக்ரம் போலீசாரை மருத்துவமனையில் பாதுகாப்பிற்கு வைத்தான்..

 மீரா கடத்தியவர்களிடம் இருந்து தப்பியதிலிருந்து ஜெகனிற்கும் அவனது ஆட்களுக்கும் பயம் பிடித்துக் கொண்டது..

 ஜெகன் மிகவும் பயந்த படியால் அவனுக்கு இவ்வளவு காலமும் உற்ற துணையாக உதவியாக இருந்த அமைச்சர் சாரங்கபாணியிடம் தஞ்சம் புகுந்தான்..

 இதுவரை காலமும் அவர் செய்த குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் சாட்சிகளும் இருந்ததில்லை. ஜெகன் அவரிடம் தஞ்சம் புகுந்த படியால் அவருக்கும் இந்த கடத்தல் மற்றும் அவர் செய்த குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது நேரடியாக போலீசாருக்கும் மீடியாக்களுக்கும் தெரிய வந்து விடும் என்று பயந்துவிட்டார்..

அதனால் அவரே இவனுக்கு தகாத வார்த்தைகளால் திட்டி அவனை மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டார்.

மீராவை மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து இந்த கடத்தல் பற்றிய தகவல்கள் செய்திகளாக அனைத்து நியூஸ் பேப்பர்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விவாதங்கள் நடத்தி அவர்களின் சேனலுக்கான டிஆர்பியை எகிற வைத்துக் கொண்டிருந்தார்கள்..

 இங்கு மாமா பையா வின் கோட்டைக்குள். ஜெகனின் முட்டாள் செயலால் பையா தலை சூடாகி அவனின் மேல் கடுமையான கோபத்தில் இருந்தான்..

” சந்தோஷ் இப்போதைக்கு நாம கொஞ்சம் நம்ம வேலையை நிறுத்தி வைப்போம்.” என்றான் பையா.

” என்ன மாமா பையா சொல்றீங்க?.. உங்களுக்கு பயமா?.. ” என்றான் ஆச்சரியமாக.

 சந்தோஷை எரித்து விடுவது போல் முறைத்து பார்த்து விட்டு தொடர்ந்தான்பையா ” என்ன பயமா எனக்கா?.. . பயமே என்னை கண்டால் பயந்து ஓடி விடும். சாதாரண மனிதனைவிட அதுக்கும் மேல நான். எனக்கு பயமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த நேரத்தில அவசரத்தை விட நிதானம் ரொம்ப முக்கியம். அவங்க போலீஸ் மூளையாக மட்டும் தான் யோசிப்பாங்க. நாம கிரிமினல் மற்றும் போலீஸ் மூளையாகவும் சேர்த்து யோசிக்கனும்.. வரும் காலத்தில் எனக்கு பிறகு இந்த இடத்துக்கு நீ வரணும்.. என்ற நினைப்பு கொஞ்சம்கூட இல்லையா சந்தோஷ் உனக்கு.. இந்த இடத்துக்கு வருவது இலேசான விஷயம் இல்ல. அதுக்கு ஏற்ற மாதிரி மூளையை நல்லா பயன்படுத்தி யோசிக்கவும் புத்திசாலித்தனமா நடந்துக்கவும் தெரிஞ்சிருக்கணும்.. சீக்கிரமா நீ நிறைய கற்றுக்கொள்ளனும் சந்தோஷ்.. ” என்றான் பையா. சந்தோஷின் முட்டாள்தனமான கேள்வியில் கோவம் மேலும் அதிகரித்து சத்தமாக கத்தி விட்டான்..

 ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணினான் பையா அனைவரும் வந்ததும்.

” நான் யாரு உங்களுக்கு?.. ” என்றான் பையா.

 அங்கு கூடியிருந்த அனைவரும் சத்தமாக ” மாமாஆஆஆஆ பையாஆஆஆஆ” என்றனர். இந்த முறை நடுக்கம் எதுவும் இல்லாமல் ஆனந்தமாக சிரித்த படி அதைக் கேட்டுக்கொண்டு இருந்தான். இனி நடக்க இருக்கும் ஆட்டத்தை யார் ஆரம்பித்து யார் முடித்து வைப்பார்கள் என்று பார்க்கும் ஆர்வத்தில்…

 அடுத்து ” நாம என்ன வேலை பண்ணுறோம். ” என்றான்.

” மாமாஆஆஆஆ வேலை பண்ணுறோம்.” என்றனர் மீண்டும் சத்தமாக.

அதான் பின் அங்கிருந்த டீவி ஆன் பண்ணி அவர்களை அதில் போகும் செய்திகளை பார்க்க வைத்தான்..

வெளியே நடந்த நடப்புகளையும் அந்த மீராவின் கடத்தளையும் பற்றி கூறி இந்த சிறிது காலத்தில் ஓய்வாக மகிழ்ச்சியோடு இருக்கும்படி கூறினான் பையா.

 அவர்களும் கடந்த வருடங்களில் அயராது உழைத்தவர்கள். அவர்களுக்கும் உடல் சோர்வு நோவுகள் இருக்கும். ஆனாலும் அதை இந்தத் தொழிலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாடுபட்டு உழைத்தார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் அதை பயன்படுத்தி அவர்களும் ஓய்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இந்த போலீஸ் தேடுதல் வேட்டைகள் சற்று அடங்கியதும். மீண்டும் இதை விட கடுமையாக இந்த ஓய்வின் பின் சேர்த்து அவர்கள் உழைக்க வேண்டும்.. அதற்காகவே இந்த சிறிது காலம் ஓய்வை அவர்களுக்கு கொடுத்தான்..

 அவர்களும் மன அழுத்தம் தீரும்வரை ஆனந்தமாக இருக்க முடிவெடுத்தார்கள்..

 மருத்துவமனையில் மீராவின் அருகில் அமர்ந்து துளசி மகள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

மீராவின் சேட்டைக்கள் துடினங்கள் மட்டுமே கவலைகளை மறந்து துளசியை உயிர்போடு வைத்திருக்கும்..

மீரா ஸ்கூலில் நடக்கும் சக மாணவர்களின் மனதை கிழிக்கும் பேச்சுக்களை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவாள். இதுவரை காலமும். வேலை விட்டு வீட்டிற்கு வரும் தாயின் முகத்தை பார்த்ததும் ஓடிவந்து கட்டி அணைத்து முத்தமழை பொழிந்து இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்..

ஒருக்காலமும் மீரா முன்பு துளசி அழுதோ கவலை அப்பிய முகத்தோடும் இருக்க மாட்டாள்.. அது மகளை பாதிக்கும். தன் கஷ்டம் தன்னோடு போகட்டும். மகள் மகிழ்ந்து வாழட்டும் என்கிற எண்ணம் மட்டுமே தாய்க்கு.

மகளோ தாய்க்கு மிஞ்சியவள். ஸ்கூலில் நடக்கும் கொடுமையை தாய்க்கு தெரியப்படுத்தியதே இல்லை. அம்மா மிகுந்த கஷ்டப்பட்டு வேலை செய்து தன்னை படிக்க வைக்கிறாள்.. தானும் அதை சொல்லி இன்னும் தாயை கஷ்ட்ட படுத்த விரும்பவில்லை மகள்..

ஸ்கூலில் அவளின் கிளாசில் அவள்தான் முதல் ராங் எடுப்பாள்.. எந்த வித சேட்டைகள் எதும் இல்லாமல் தானும் தன் படிப்பும் என்று இருப்பதால் துளசி அதிகம் மீராவுக்காக ஸ்கூல் வரும் வாய்ப்பு குறைவு.. அதனால் துளசிக்கும் மகளின் இந்த அவநிலை தெரியாமல் போய்விட்டது தான் துரதிஷ்டம்..

அவளை படிக்க வைக்கும் டிரஸ்ட் அவளுக்கான சகல படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டது.. மாதம் மாதம் அவளுக்கான பணம் கட்டப்பட்டு விடும்.. அவர்களும் மாணவர்களின் மனநிலை கவனிக்க தவறிவிட்டார்கள்..

துளசியும் மீராவோடு மட்டும் கலகலப்பாக இருப்பாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் என வாழ ஆரம்பித்து விட்டார்கள்..

மீரா தூங்கி விட்டாள் என நினைத்து சில நேரங்களில் கவலை தாங்காமல் துளசி அழுத்துவிடுவாள். அதை மீரா பார்த்தாள் சிறிது வருத்தம் அடைவாள்..

அந்த குழந்தையால் தாய்காக வருந்தவும் இறைவனிடம் வணங்கவும் மட்டுமே முடிந்தது..

இந்த முறை அவளால் துன்பத்தை தாங்க முடியாமல் அணை உடைத்து வெள்ளம் பாய்ந்து ஓடியது போல தாயிடம் மனம் திறந்து தந்தை யாரென்று கேட்டுவிட்டாள் மீரா..

அந்த கொடியவர்கள் அவளை கடத்தும் போதும். தந்தை இல்லாமல் தாய் படும் துன்பத்தை பார்த்தவள். தற்போது இந்த கயவர்கள் தன்னை ஏதேனும் செய்து விடுவார்களோ என பயந்து தானும் இல்லாவிட்டால் தாய் தனித்து விடுவார். என புரிந்ததும் வேகம் அனைத்தையும் ஒன்று கூட்டி அவளை பிடித்து வைத்திருந்தவனின் கையில் பலம் கொண்டவரை அழுத்தி கடித்து விட்டு கண்ணிமைக்கும் நொடியில் வாகன கதவை திறந்து பாய்ந்து உருண்டு வந்து ஒரு பெரிய மரத்தின் வேருக்கு அருகே கிளைகள் அடர்ந்து இருந்த இடத்தில் உடலை குறுக்கி ஒளிந்து விட்டாள் மீரா..

அவர்களும் இறங்கி தேடினர்கள்.. அவள் ஒளிந்து இருந்ததால் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனால்.

அவளை தேடவும் அந்த வழியாக போய்வந்தவர்கள் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களின் தோற்றம் சந்தேகப்படும் படி இருந்ததால் அவர்களும் விசாரிக்கவும் எங்கு மாட்டிவிடுவோமோ என பயந்து வந்த வாகனத்தில் ஏறி ஓடிவிட்டார்கள்..

ஆனால் மீரா விழுந்த மரத்தின் அடியில் இருந்த கல்லில் இவள் விழுந்த வேகத்திற்கும் தலை மோதி அடிபட்டுத்தான் இரத்தம் வந்தது…

இவ்வளவு துன்பத்திலும் இறைவன் சரியாக அந்த நேரத்தில் ரிஷியை அவ்வழியாக வரவைத்தர் போல..

கொடியவர்களில் வாகனம் சென்றதும் சிறிது சிறிதாக நகர்ந்து வலி உயிர் போனாலும் அந்த சிறு வயதிலும் திடம் அதிகம் இருந்ததால் தாயின் முகம் கண்முன் வந்து போக உயிர் பிழைக்கவேண்டும் என்கிற ஆசை அதிகமாக வலியை பெரிதாக எடுக்காமல் நகர்ந்து வந்து நிஷாவின் கார் வருவதை கண்டதும் மிகுதி இருந்த சக்தியை ஒன்று திரட்டி அருகே இருந்த சிறு கல்லை எரிந்து கார் கண்ணாடியை உடைத்து நிறுத்தினாள் குழந்தை மீரா..

குருதி அதிகம் போனதால் உடல் சக்தியை இழந்து சோர்ந்து மயக்க நிலையை அடைந்து விட்டாள் மீரா..

தினமும் நிஷாவை ஸ்கூலில் விடவும் ஏற்றவும் ரிஷி வருவான் ஆனால் மீரா அவனை பார்த்ததே இல்லை..

அந்த பிஞ்சு உடலில் ஆங்காங்கே சிறு சிறு காயங்களும் இருந்தது. அதிலும் இரத்தம் வந்தப்படி இருக்கவும் ஒரு கணம் கண்மூடி நிஷாவை மனதில் கொண்டுவந்து நினைத்து பார்த்துவிட்டு இந்த சிறு பெண்ணின் அவலநிலையை பார்த்து மிகுந்த வேதனை பட்டான் ரிஷி.. அவனை அறியாமலே கண்கலங்கி கண்ணீர் வந்து விட்டது..

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என நன்கு அறிந்துதான் என்ன வேலை இருந்தாலும் நிஷாவை ஏற்றும் இறக்கும் பொறுப்பை அவன் செய்வான்.. பிசினஸ் விஷயமாக முக்கிய மீட்டிங் என்றால் மட்டும் பிஏ சூர்யா வருவான்..

ஆனால் இந்த மீராவிற்கு அப்படி யாரும் இல்லை பாதுகாப்பிற்கு என்று அறியாமல் அந்த குழந்தையின் பெற்றோர்களை தான் அதிகம் திட்டி தீர்த்தன் ரிஷி..

இவ்வாறு தான் மீராவை மருத்துவமனையில் சேர்த்தான்..

மகளுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கவே மேலதிக விடுமுறை நாளில் வேலைக்கு வந்த தாய் துளசி இனி வரும் காலங்களில் மகளின் இந்த நிலையை போக்குவதற்கு என்ன செய்வாளோ..?

இரண்டு நாளில் கண்விழித்த மீராவிற்கு மருந்தின் வீரியத்தை தாங்குவதற்கும் காயத்தின் வலி தெரியாமல் இருக்கவும் சிறிய அளவில் ஸ்லிப்பிங் டோஷ் குடுத்து தூங்க வைத்தர்கள்..

தூங்கி விழித்த மீரா கேட்ட முதல் கேள்வியில் துளசி துடிதுடித்து விட்டாள்..

மீரா அப்படி என்ன கேள்வி கேட்டாள்..

Advertisement