Advertisement

தூறல் 9:

கண்மணி மனதில் யாரு இந்த நந்தன்? என்ன டெஸ்ட்! எதுக்கு?

“நந்து கண்ணா. குட்டி. அப்பா டா .. நீங்க தாத்தா , பாட்டி சொன்னதை ஏன் கேட்க மாடீங்கிறீங்க! மருந்து குடிச்சா தான சரியாகும். சீக்கிரம் அப்பாவை போய் பார்க்கலாம் . விளையாடலாம். உனக்கு புது மம்மி வந்து இருக்காங்க. சீக்கிரமா உன்னை பார்க்க வருவாங்க.”

அவர்கள் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த கண்மணிக்கு மயக்கம் வராத குறை தான்.

அப்பா சொல்லறான்! நிஜமா இவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. அதுவே உண்மை இல்லை என்று தான நினைத்து இருந்தேன். இப்ப இவன் பேசுவதை பார்த்தால் கல்யாணம்  ஆனதும் இல்லாமல் குழந்தையும் இருக்கு போல.. ஸ்பீக்கர் வழியா அந்த குழந்தை அப்பா சொல்வது தெளிவா கேட்குதே! உண்மையா இருக்காது என்று பல முறை சொல்லிக் கொண்டாள். மறுபடியும் அந்த பிஞ்சு, “டாடி. டாலி அப்பா நீங்க டூஉர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பேபி ”  என்றதை கேட்டவுடன் கண்மணி கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது .

“சீக்கிரம் பேபி சிஸ்டர் வரணும் சாமிகிட்ட பிரே பண்ணிகோங்க! நீங்க குட் பாயா இருந்தால் தான் சீக்கிரம் வருவேன்.”

குழந்தை என்பதால் கோர்வையாக பேச வரவில்லை போல! கண்மணி மனதில் கோபமாக எனக்கு தெரியாமல் போய் வேற பார்க்கிறானா?

அவள் குடும்பம் மொத்தமும் இவர்கள் நாடகத்தில் ஏமாந்து இருப்பது புரிந்தது . ஒரு முட்டையை சோற்றில் மறைக்கலாம். இவர்கள் முழு பூசணிக்காயையே மறைத்து இருக்கிறார்களே !

அவள்  மனம் எரிமலையா குமுறிக் கொண்டு  இருந்தது.

என்ன தான் நடக்குது. அவங்களை பற்றி  ஏன் யாரும் எதையும் சொல்லாமல் இருக்கிறார்கள். பாபி என்று பாசமா பேசும் அதிதி கூட  எனக்கு எதுவும் தெரியாது. ப்ளீஸ், அண்ணனிடமே கேட்டுகோங்க, அது தான் சரி என்று  சொல்லிட்டாலே!

ஷ்யாமும் நான் பேசிக்கிறேன் என்பதோட சரி. எனக்கு மண்டையே வெடித்து விடும் போல இருக்கே! யாராவது உண்மையை சொன்னால் தான ஆகும் .. மாமாவிடம் கேட்கலாமா?

கண்மணி அறைக்குள் நுழைந்ததை அறியாமல் சித்து அந்த சிறு குழந்தை நந்தனை கொஞ்சிக் கொண்டு இருந்தான் .

கண்மணி கால்கள் அந்த இடத்திலே வேரோடிவிட்டது. கொஞ்ச நேரம் முன்பு சந்தோஷத்தில் மயக்கம் வருவது போல இருந்தது . இப்ப நிலைமை அதுக்கு எதிர் மறையா தலை கீழ்.

எத்தனை தடவை  இல்லை, அப்படி இருக்காது என்று ஜபம் செய்தாலும்  இவர்கள் பேசுவதை பார்த்தால் உண்மை போல தான இருக்கு. எங்கே நின்றால் கீழே விழுந்து விடுவாளோ பயந்து, பக்கத்தில் இருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

எதேர்ச்சியாக திரும்பிய சித்து, கண்மணியை பார்த்து ,போனை மியுட்டில் போட்டு கனிவாக  “கண்மணி, ஏன் அங்கேயே இருக்க. இங்க வா டா!”

அவன் அருகில் வருமாறு செய்கை செய்தான்.

அவள்  கண்ணில் கண்ணீரை கண்டு , “ஹே அழுகறையா? எதுக்கு டா அழுகை? என்னாச்சு” என்று பதறி அவள் அருகில் சென்றான் .

அவன் கைகளை  அவள்  கன்னம்  அருகே எடுத்து வந்ததை பார்த்து பின்னால் நகர்ந்து “என்னை தொடாதீங்க !”

“என்ன விளையாட்டு டா!”

அங்கு இருந்து அழுத படியே வேகமாக அவள் முன்பு தங்கி இருந்த  அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். கண்மணி எதற்கு இப்படி அழுது கொண்டு போறா? ஒரு வேலை நான் போனில் பேசினதை கேட்டு ! ஒ காட் ! என்னத்த புரிந்து கொண்டாலோ!

நந்து லைனில் இருப்பதை எண்ணி “ நந்து , மணி ஆச்சு கண்ணா ! குட் பாயா தூங்கு. அப்பா உனக்கு சாக்கி வாங்க போறேன் . ஒழுங்கா சமத்து குட்டிய இருக்கணும் .அப்புறமா கூபிடட்டா ? பாய் கண்ணா !”என்று முத்தம் பதித்து  கண்மணி  அறைக்கு விரைந்தான் .

கதவு தாழ் போட்டு இருந்தது . இவ வேற எதாவது செய்திட போறா பயந்து கொண்டு கதவை தட்டினான். திறந்த பாடு இல்லை.

அவன் அறை வழியே உள்ளே நுழைந்தான்.

 நல்ல வேலை,கதவு திறந்து இருக்கு . இந்த தாழ்பாளை போடவில்லை.

அவனை அறைக்குள் பார்த்து கோபமாக  “வெளியே போங்க !”  கைக்கு கிடைத்ததை அவன் மீது வீசினாள்.

“யு சீட் ,ராஸ்கல், பிராட். என்னை எமாத்தீடீங்க! உங்களுக்கு எப்படி மனசு வந்தது.”

“நீ புரியாம பேசற டா”

அழுத படியே “காலையில் கோவிலில் ஒருவன் என் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கொலைவெறியில்  மிரட்டிக் கொண்டு போறான் . இப்ப என்னை கொலையே செய்து விட்டீர்கள். நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன். ஏன் இப்படி செய்தீங்க! என்னால் முடியலையே!”

அவன் சொல்வதை கேட்காமல் “எல்லாம் விளையாட்டு என்று நினைத்தது தப்போ! என் பொம்மை, பொருளை கூட என் தம்பியை தொட விட மாட்டேன். எப்போதும், எல்லாம் எனக்கு தான் முதல் என்று சண்டை போட்ட எனக்கு  ரெண்டாம் தாரம் பட்டமா. அது போக சித்தி பட்டம்.

அந்த குழந்தைக்கு தாயா? என்னை இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொல்வதை விட ஒரேடியா கொன்று போட்டிடுங்க. நிம்மதியா போய்டுவேன். என்னால முடியலையே” என்று அப்படியே தரையில் அமர்ந்து கதறினாள்.

சித்து அடக்கப்பட்ட கோபத்தில் “காலையில் கோவிலில் யார் மிரட்டினா? என்னிடம்  ஏன் சொல்லவில்லை! டிரைவர் ரவியுடன் தான போன! அவன் அப்ப எங்க போனான்.எத்தனை பெரிய விஷயம் நடந்து இருக்கு .என்னிடம் சொல்லாமல் விட்டு இருக்கான். இடியட்”

“இப்ப அது ரொம்ப முக்கியம்.”  அவன் கண்களில் கோபத்தைக் கண்டு “ரவி அண்ணா கோவிலுக்குள் வரல. என்னை மிரட்டினவன் அவங்க அண்ணன் நினைக்கிறேன். தங்கையின் பிரிவில் இது போல பேசுவது சகஜம் தான. அவங்களை பற்றி கேள்வி பட்டும், ஏற்கனவே உங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும்  அவங்க இனி உங்க வாழ்க்கையில் இல்லை, நீங்க எனக்கு மட்டும்  தான் என்று எத்தனை சந்தோஷமாக இருந்தேன்.”

அவங்க, அவங்க சொல்லறாளே!யாரு ..

ஒ ஒ  ஒ, தீப்தியை சொல்லறாலோ!

உங்கள் முதல் மனைவி சொல்ல முடியாமல் அவங்க என்று திணறுவதை பார்த்து சிரித்துக் கொண்டான் .

அவள் அழுவது பொறுக்க முடியாமல் சித்து, “கண்மணி நீ நினைப்பது போல எல்லாம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் அழுவதை நிறுத்து! ப்ளீஸ் எனக்காக” என்று பேசினவுடன்

 “இனி என்ன சொல்ல போறீங்க! எனக்கு கேட்க கூட தெம்பும், தைரியமும் இல்லை. வேறே என்ன சொல்வீங்களோ? என்ன பூதம் வெளியே வருமோ பயமா இருக்கு. என்னை விட்டிடுங்க.நான் போறேன்” .


இவளிடம் எப்படி புரியவைக்க! உண்மையை சொன்னால் ?

“எங்க டீ போற ? போய்கோ! விட்டுது தொல்லை, என்று இருப்பேன் நினைத்தாயா? நம் கல்யாணமான புதிதில் நானே உன்னை எப்படியாவது  அனுப்பனும் தான் நினைத்தேன்.

ஆனா இப்ப நான் உன்னை விடுவதாக இல்லை தேனு! என்னுடன் தான் இருக்க போற! காலம் முழுதும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அப்புறம்  எல்லாம் சொல்லறேன், என்னை நம்பு”  என்றவுடன் வேகாமாக அவன் அருகில் சென்று அவன் சட்டையை பிடித்து

“ஒ ,ஒ  உன் குழந்தையை பார்த்துக் கொள்ள  ஆயா தேவையா ?அதற்கு நான் வேண்டுமா? இன்னும் கொஞ்ச நாள் எதற்கு பொறுத்துக்க. அந்த  குழந்தையை அழைத்து வந்து  என்னுடன் பழக்கவா?

இல்லை அவனிடம் சொன்னது போல குட்டி பாப்பா, தங்கைக்கு ஏற்பாடு செய்யவா? எல்லாரும் சேர்ந்து இப்படி செய்துட்டீங்களே ! நீங்க நினைப்பது ஒரு போதும் நடக்காது.”

அவள் கோபத்தை ரசித்து, சித்து விசில் அடித்து  “நீ சொல்வது கூட நல்லா இருக்கே! ஏற்பாடு செய்திடலாமா?” என்று கண்ணடித்தான் .

“சின்ன  பெண், எங்கே எல்லாத்தையும் விளக்கனுமோ  நினைத்து கவலை பட்டேன்! என் சமத்து சக்கர கட்டிக்கு கற்பூர புத்தி! அப்படி தான தேனு செல்லம்.”

அவசரமாக “நான் சின்ன பெண் தான் .. நான் எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்”

“அப்ப விளகிட்டா போச்சு”

கண்ணில் நீருடன் “ப்ளீஸ் இந்த பேச்சு வேண்டாமே! முதலில் நீங்க என்னை  வேண்டாம் சொன்னீங்க. இப்ப நான்  உங்களை வேண்டாம் சொல்லறேன்”

சித்து மிகவும் பொறுமையாக “புரிஞ்சுகோ தேனு! சொல்வதை கேளு !உன்னை ஒரு போதும் அப்படி என்னினது கிடையாது டா. தேவை இல்லாமல்  வருத்துக்கிற.”

அழுகையின் ஊடே “எது தேவை இல்லாதது. உங்க தங்கையை இப்படி கல்யாணம் செய்து கொடுப்பீங்களா? எங்கயோ பட்டி காட்டில் இருந்து வந்தா உங்க சொல்படி கேட்டு அமைதியா போய்டுவா என்று தான நினைத்தீர்கள். எங்க அப்பாக்கு எந்த அளவிற்கு விஷயம் தெரியும். இப்படி என்று தெரிந்தால் உங்களை சும்மா விட மாட்டார்கள்.

இதுவரை இந்த ஆறு மாதத்தில், ஒரு தடவையேனும்  என்னிடம் உங்க வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளனும், சொல்லணும் தோணுச்சா? முதலில் நம்ம  கல்யாணத்தை நிறுத்த சொன்னது எல்லாம் நாடகம் தான? நான் ஏட்டிக்கு போட்டியே செய்வேன் என்று தெரிந்து தான அப்படி செய்தீங்க? இது எனக்கு முன்பே தெரியாமல் போச்சே !”

சித்து என்ன சொல்லியும் கண்மணி புலம்பலை நிறுத்தவில்லை .கதறி அழுது மயக்கம் போட்டிடுவாளோ என்று பயந்தான். தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான் .

அவ அம்மா, அப்பா வந்து இருக்கும் சமயம் இப்படி செய்தால் என்ன நினைப்பாங்க என்று எண்ணியவுடன் சத்தம் கேட்டு கீழே இருந்து வெற்றி மேலே வந்தார் .

“என்ன சித்து? என்ன ஆச்சு. எதுக்கு அப்படி கதவை தட்டின . கண்மணி என்ன ஆச்சு”.

சித்து கண்களாலே ஒன்று இல்லை சொல்லு என்று கெஞ்சினான்.

கண்களை துடைத்து, தண்ணீர் குடித்து ஜன்னலை பார்த்து புத்தகத்தை பிரித்த படி “அது ஒன்றும் இல்லை மாமா, புக் படித்த படி   அப்படியே இந்த அறையிலே தூங்கிவிட்டேன் போல. கதவை வேகமாக மூடியதால் தானாக அடித்துக் கொண்டது. இவர் வேலையை முடித்து என்னை காணோம்  தேடி  கதவ தட்டினார்” என்று திணறி பேசி முடித்தாள்.

“நான் என்னமோ நினைத்து விட்டேன். உங்க அத்தை மேலே வந்து ஆகணும் சண்டை.”

“இல்லை நானே வரேன் மாமா” என்று  சித்துவை முறைத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அந்த இரவு  பக்கத்து அறைக்குளே முடங்கினாள்.

Advertisement