Advertisement

தூறல் 8:

அடுத்த நாள் கண்ணன் பிறந்த நாளைக்கு நேரில் தான் போக முடியவில்லை, கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வரலாம் என்று காலை நேரத்திலே கிளம்பிவிட்டாள்.

சித்து காலையில் விழிக்கும் போதே அவளை காணவில்லை. எங்க போனா! இப்போது  எல்லாம் காலையில் எழுந்தவுடன்  கண்மணி முகத்தில் விழிக்கனும் போல இருக்கே! இது என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு என்று சிரித்துக் கொண்டான் .

மேடம் வரட்டும், என்று மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தான் .

கண்மணி கோவிலில் சாமி கும்பிட்டு வந்தவுடன் இயற்கையை ரசித்து ஓரமாக அமர்ந்து  கொண்டாள்.

நாலு தடியனுங்க அவள் அருகில் வந்தார்கள்.ஒருத்தன் ஹிந்தியில் கத்த தொடங்கினான் .

நமக்கு தமிழே  தொடர்ந்து பேச வராது !இதில் ஹிந்தி என்றால் ?என்னமோ திட்டறான் மட்டும் புரியுது ! என்னனு புரியலையே !ஹிந்தி படம் கூட சப் டைட்டில் கொண்டு தான பார்ப்பேன் !

இவள் பேச இடம் கொடுக்காமலே கோபத்தில் கத்தினான் . காலை நேரம் என்பதால் கூட்டமும் அதிகம் இல்லை .

இன்னொருவன் “நீ தான் அந்த சித்தார்த் பெண்டாட்டியா? பார்க்க நல்லா தான் இருக்க . அவனிடம் சொல்லி வை . என்ன தைரியம்  இருந்தால் என் தங்கையை மேல் அனுப்பிட்டு நிம்மதியா வேற கல்யாணம் கட்டிக் கொள்வான்? ஒழுங்கு மரியாதையா உன் ஊரை பார்த்து ஓடிப்போய்டு !அவனை சும்மா விட மாட்டேன் .என் தங்கச்சி போய் சேர்ந்த இடத்துக்கே அவனையும்  அனுப்ப காத்துக் கொண்டு இருக்கேன் !பார்த்துகிட்டே இரு , அவன் சாவு என் கையில் தான் .அவன் பொருள் எங்களிடம் உள்ளது என்று மறந்துவிட்டானா ? கொஞ்சம் நியாபக படுத்தி  பார்க்க சொல்லு .சேதாரம் அதிகமாகும்.

எங்க அப்பா கிழம் இவன் அங்க  வரல என்று என் உசிரை வாங்கறான் . நீ தான் விடமாடீங்கிறையா?” சற்று முன்பு கத்தின நபரை காட்டி  “அவன் யாரு பார்க்கிறியா?என் தங்கையை கட்டிக்கணும் இருந்தவன்! சித்தார்த்  மீது கொலைவெறியில் இருக்கான். நான் போட்டா ஒரே போடு !இவன் கையில் கிடைத்தான் பீஸ் ,பீசா வெட்டி போட்டிடுவான்”என்றதை கேட்ட கண்மணிக்கு நா உலர்ந்தது.

“அவர், அப்படி,நீங்க நினைப்பது போல எல்லாம் இல்லை. அவரை ஒன்றும் செய்திடாதீங்க” என்று பயத்தால்  அவளால் பேசகூட முடியவில்லை .கண்மணிக்கு வியர்த்து உடல் நனைந்தது.

சித்தார்த்துக்கு அவசரமா  போன் செய்தாள்.

மெத்தையில் படுத்த  படி கண்மணி எண்ணை பார்த்த சித்தார்த் என் கண் முன்னால்  வராமல் வீட்டில் இருந்தே போன் செய்யறையா? போன் எடுக்கவில்லை என்றால் வந்து தான ஆகணும்! நேரில் வா பட்டிக்காடு”  என்று கொஞ்சி  அவள் போடோக்கு முத்தம் கொடுத்தான் .

கண்மணி பல தடவை அழைத்தும் எடுக்கவில்லை.

கண்மணி கண் மூடி அப்படியே அமர்ந்துவிட்டாள். என்ன செய்ய என்று யோசிக்க முடியாமல் திணறினாள்.

இவர் ஏன் உண்மையை சொல்ல மாடீன்கிறார். இவங்க சொல்வதை பார்த்தால் அவர் முதல் மனைவி  இறந்து விட்டார்களா ? எப்படி ,எதனால் ?

அப்ப அவர் முதல் கல்யாணம் உண்மை ….. ஏனோ அதை நினைக்க நெஞ்சில் ஒரு வலி.

அத்தை பிடிவாதமா எங்க  கல்யாணத்தை செய்து  வைத்ததாக கேள்வி பட்டேனே! அவங்களை மறக்கவும் முடியாமல் ,என்னை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தான் அப்படி கோபப்படறாரோ?

இந்த விஷயத்தில் ஏனோ சித்துவை நினைத்தால் அவளுக்கு கோபம் வருவதிற்கு பதிலா இறக்கம் தோன்றியது .

அவள் ஷ்யாமை அழைத்து அத்தனையும் கூறினாள். அவன் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தான் . உடனே செய்ய வேண்டிய வேலைகளை முடித்து கண்மணிக்கு தெரிவித்தான்.

மனம் லேசானது போல் இருந்தது . அதே சந்தோஷத்துடன் வீட்டிற்கு கிளம்பினாள்.

சித்துவிடம் இன்று  கண்டிப்பா பேசிவிட வேண்டும் என்று  அறைக்குள் நுழைந்தாள்.

சித்து மெத்தையில் படுத்து இருப்பதை பார்த்து மணி 8 ஆச்சு . இன்னும் இவர்  ஏன் எழுந்து கொள்ளவில்லை . உடம்புக்கு எதாவது என்று பதற்றமாக அவன் அருகில்  சென்றாள்.

“ஏங்க! ஏங்க! மணி ஆச்சு” என்று அருகில் நின்று குரல் கொடுத்தாள். அவன் கொஞ்சம் கூட அசைந்த பாடு இல்லை. “தூங்க வேண்டியது தான். கத்துவது கூட கேட்காமல் கும்பர்கர்ணனுக்கு கொள்ளு பேரன் போல் தூங்கினா?”

அங்கு இருக்கும் அவன் போட்டோ பார்த்து , கன்னத்தை கில்லி, உதட்டை வருடி  ” சிரிப்பை பாரு ! உன்னை எல்லாம் கட்டி வைத்து உதைக்கணும்” .

அந்த போடோவிற்கு அழகா மீசை வரைந்தாள். இப்ப தான் அழகா இருக்க என்று நச்சுனு  முத்தம் பதித்தாள்.

“எத்தனை தடவை கூப்பிடுவது! எழுந்தால் தான ஆகும். எத்தனை முக்கியமான விஷயம் பேசணும் வந்தேன்.”

பக்கத்தில் தண்ணீர்  ஜக்கை பார்த்தாள்.

அவள் உள்ளே நுழைந்தது முதல் அவள் செய்வது  எல்லாம் ஸ்க்ரீன் பின்னால் ஒளிந்து கொண்டு பார்க்கும் சித்துக்கு சிரிப்பு  வந்தது .

கண்மணி சிரித்துக் கொண்டே தண்ணீரை  எடுத்து திரும்பும் போது அவள் அருகில்  சித்து ஒற்றை புருவம் ஏற்றி ‘என்ன’என்றான்.

ஹா இது எப்படி?

தலையை வேகமாக ஆட்டி  “ஒன்னும் இல்லை. தாகமா இருக்கு அது தான்”என்று தண்ணீரை  வேகமாக தொண்டையில்  கவிழ்த்துக் கொண்டாள்.

சித்துவை பார்த்து “படுத்துக் கொண்டு தான இருந்தீங்க !அப்ப எப்படி” என்று அப்பாவியாக வினவிய போது “நான் அங்க தான இருந்தேன்” .

நான் செய்வதை எல்லாம் பார்த்து விட்டாரா ? மானம் போச்சு என்று அங்கிருந்து வேகமாக நழுவினாள்.

அவள் கைகளை பற்றி அருகில் இழுத்தான்.

“ஹே என்ன செய்யறீங்க!”

“கையை தான பிடித்தேன் தேனு ! இதுக்கே ஊரை கூட்டினா!” கீழே குனிந்த படி வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்து  “விடுங்க !”

அவளை  அருகில் இழுத்து சுவாரசியமா மேலும் கீழும் பார்த்து

“ காலையிலே எங்கயோ நேரத்திலே வெளியே போயிடு வந்தாச்சு போல! இன்று பூத்த ரோஜா போல கும்முன்னு இருக்க !”

சித்து அப்படி பேச  கண்மணி மேலும்  சிவந்தாள்.

அவள் நெற்றி மீது இவன் நெற்றியை பதித்தவுடன் குங்குமம் ,விபூதி  அவன் நெற்றியிலும் ஓட்டிக் கொண்டது .

“எப்படி?” என்று கண்ணடித்தான்.

அச்சோ காலையிலே இவர் ஏன் படுதராறு….

அவளை விலக்க மனம் இல்லாமல், அவன் கைவளைவிலே  அப்படியே வைத்துக் கொண்டான். அவன் செய்கையால் அவள் பேசணும் என்று நினைத்து வந்தது எல்லாம் மறந்து போனது.

“உங்களுக்கு என்ன ஆச்சு . எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க, செய்யறீங்க” என்று மெல்லிய குரலில் பேசினவுடன் “எனக்கு என் பெண்டாட்டி மீது காதல் வந்திடுச்சு போல, அது தான் இந்த  உளறல். இனி தினமும் இப்படி தான்” என்று கண் சிமிட்டினவுடன்  கண்மணி  நாலு கால் பாய்ச்சலில் அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் இதயம் தாறு மாறா துடித்தது. நடப்பதெல்லாம் உண்மை தான ?கனவு இல்லையே என்று அவள் கையை கிள்ளிக் கொண்டாள்.

நேற்று நான் திட்டினதால் இந்த ஞானோதயமோ ?

கீழே ஹாலில் சத்தம் கேட்டு எட்டி பார்த்த போது கண்ணன் வந்து இருந்தான் .

சந்தோஷமாக “ஹே கண்ணா! நீ இங்க எப்படி?ஹாப்பி பர்த்டே” என்று தம்பியை கட்டிக் கொண்டாள். அவள் அம்மாவும் ,அப்பாவும் வந்து இருந்தனர் .கண்மணிக்கு சர்பரைசாக இருக்கட்டும் என்று சித்து  நேற்று இரவே அவர்களை அழைத்து  பிளைட்டில் வர சொல்லி, டிக்கெட் ஏற்பாடு  செய்து இருந்தான் . அவர்களை கண்டவுடன் கண்மணிக்கு தலை கால் புரியவில்லை .சித்துவிடம் கண்களாலே நன்றி தெரிவித்தாள்.

அவள் குடும்பத்தினரை பார்த்ததில்  இருந்து சித்துவை கண்டு கொள்ளவே இல்லை.

சித்து மனதில் வரட்டும் என்னிடம் சிக்காமலா போவா ?அப்ப பேசிக்கிறேன் ..

கேக் வெட்டி கொண்டாடினர். கண்ணன் மிகவும் சந்தோஷபட்டான். 

ஹோட்டலுக்கு போகலாம்  என்று கிளம்ப அவர்கள் அறைக்கு வந்த போது சித்து அலமாரியில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தான் .

என்ன தேடுகிறார். இவருக்கு எதாவது வேண்டுமா?

கண்மணி “thanks .நான் எதிரே பார்க்கவில்லை”.

நேற்றில்  இருந்து கண்மணி மனதில்  அவனை தாளித்துக் கொண்டு இருந்தாள்.

 “முதலிலே சொல்லி இருந்தால் உங்களுக்கு திட்டு மிச்சம் ஆகி இருக்கும்” .

சித்து சத்தமாக “என்னை திட்டினதை என்னிடமே சொல்லறியா? ரொம்ப தான் டி” .

“டீ யா !”

“ஆமாம் டீ! தேங்க்ஸ் சொல்லும் அழகை பாரு” என்று முணுமுணுத்தான்.

கண்மணி “நான் வேண்டும் என்றால் உங்களுக்கு உதவட்டுமா ? என்ன சொல்லுங்க? உதவி செய்யறேன் “

சித்து கள்ள சிரிப்பு சிரித்து ,இரண்டு அர்த்தமாக “நிறையா வேண்டும் ! நீ தரீயா? இல்லை நானே எடுத்துக் கொள்ளட்டுமா?”

கப்போர்டில் இருந்து தான் ஏதோ கேட்கிறான் போல ! ஒரு வேலை இவருக்கு வாங்கின கை கடிகாரத்தை பார்த்து விட்டாரோ?

அப்படியா தான்  இருக்கும் முடிவு செய்து, “தாரளாமா? எது வேண்டும் என்றாலும் எடுத்துக்கோங்க ! எனக்கு என்ன? சொன்னா தர போறேன் . இல்லை  உங்க இஷ்டம்” என்று பழிப்பு காட்டினாள்.

அப்போது சித்து சரியா பார்த்து விட்டான் .

அதில் மயங்கி சிரித்து கப்போர்டில் தலை விட்ட படியே “உன்னிடம் தான் வர போறேன் !  நீ இல்லை சொல்ல கூடாது.”

என்ன வேண்டும் இவருக்கு என்று யோசித்துக் கொண்டே” நான் ஏன் இல்லை சொல்ல போறேன்!”

ஒரு வழியாக பிங்க், ஓரஞ்சும் கலந்த பனராஸ் ஜுட் நெட் சாரியை கண்டு பிடித்து எடுத்தான்.

கண்மணி, அதை கட்டினாலே  அவள் அழகில் மயங்கி , அவன் மனம் அவள் பின்னால் செல்வதை தடுக்க முடியாமல் திண்டாடுவான் .

அவனை தடுமாற செய்யும் அந்த புடவையை, அவனா சொல்லும் வரை அவள்  கட்ட கூடாது என்று அவன் கப்போர்டில் ஒளித்து வைத்து இருந்தான். இந்த மாதிரி மேலும் பல புடவைகள் அவன் கப்போர்டில் இருந்தது .

அதை எல்லாம் பார்த்து  ஆச்சரியமடைந்த  கண்மணி, இது எல்லாம் எப்படி இங்க ! மாற்றி வைத்து விட்டேனா ? என்று குழம்பினாள்.

“சரி நான் எடுத்துகிட்டா? இல்லை நீ தரியா?”

“என்ன சொல்லறீங்க !”

விஷமாமாக உதட்டை குவித்து காட்டியவுடன் ,”சி” என்று தலையில் அடித்து அழகாக வெட்கப்பட்டாள்.

அவள் அழகில் தலை குப்பற விழுந்து காற்று கூட புக முடியாத படி  ஆசையாக இறுக்கி அனைத்துக்  கொண்டான். அந்த தருணம் கண்மணிக்கும் பிடித்து இருந்தது .

“என்ன சத்தமே காணோம் ! தூங்கிடீன்களா மேடம் !”

ம்ம்ம்ம்ம்ம்ம்……..

“அடி பாவி! வாழ்க்கையிலே முதல் முதலா இப்ப தான்  ஒரு பெண்ணை ஆசையா  கட்டி பிடிக்கிறேன் . ஏதேதோ எதிர் பார்த்தா இப்படி தூக்கம் வருது சொல்லறியே! சரியான ராட்ஷசி டீ! ஒரு வேலை இன்னும் ரொமாண்டிக்கா கட்டி பிடிக்கனுமோ” என்று அவள் வெற்றிடையில் கை வைத்து அழுத்தினான் .

“கூச்சமா இருக்கு பா ! கொஞ்சம்  சும்மா இருங்க !ப்ளீஸ்” என்று மேலும் ஒன்றினாள்.

அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை அவன் இதழ் ஒற்றி எடுத்தான் .மேலும் சிவந்தாள்.

“தேனு, உனக்கு என்னை பிடித்து இருக்கா ?”

அவனை முறைத்து “ரொம்ப சீக்கிரம் கேட்டீங்க!”

முத்த ஊர்வலத்தை  தொடர்ந்த படியே “உன்னிடம் நிறையா பேசணும்! இப்ப போயிடு வந்து நைட் பேசலாம்!”

கண்மணி உடனே “நானும் கண்டிப்பா பேசணும்! அதுவும் இன்று ஒரு விஷயம் சுவாரசியமா நடந்தது. அச்சோ ! அம்மா ,கண்ணன் ,அப்பா எல்லாரும் காத்துக் கொண்டு இருப்பாங்க” என்று அவனை தள்ளிவிட்டாள்.

“நான் மட்டும் தான் கொடுத்தேன் ! நீயும் ஒன்று கொடு ! இல்லை என்றால் உன்னை விட போறது இல்லை” என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

“முடியாது”

“ஒரு சாம்பிள் தேனு, ப்ளீஸ் ஒன்னே ஒன்னு”  என்று கெஞ்சியவுடன் “கண்ணை மூடுங்க ! எனக்கு வெட்கமா இருக்கு !ப்ளீஸ் …”

“உனக்கு வெட்கமா இருந்தா நீ மூடிக்கோ !”

“அலம்பல் செய்யறீங்க” .

அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க வரும் போது அவன் இதழ்களால் கண்மணி  இதழ்களில் கவிதை எழுத தொடங்கினான்.  எத்தனை நேரம் நீண்டதோ அவர்களுக்கே தெரியாது !இருவரும் மாய உலகிற்கு சென்றனர் .

கண்ணன் குரல் கேட்டவுடன் அவசரமாக  சித்துவை தள்ளி விட்டு அவன் ஆசையா எடுத்து வைத்து இருந்த புடவையை அள்ளிக்  கொண்டு ஓடினாள்.

இருவரும் ஏனோ மிகவும்  சந்தோஷமாக இருந்தனர் . அதிதி ,கண்ணன் ,பிரவீன், ஜானகி ,வெற்றி ,சிவம் ,செல்லமா அனைவரும் கண்ணன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் .

ஊரில் போட்டது போட்டபடியே வந்துள்ளதால் அவள் குடும்பத்தினர் அடுத்த நாள் கிளம்புவதாக இருந்தது .

கண்மணி அவர்கள் அறைக்குள்ளே செல்ல வெட்கப்பட்டு வெகு நேரம் அதிதி, பிரவீன் ,கண்ணனுடன் பேசிக் கொண்டு இருந்தாள் . அவள் நிலையை அறிந்து சித்து சிரித்துக் கொண்டான் .ஏனோ அவனுக்கும் உள்ளமும், உடலும் பரபரத்துக் கொண்டு இருந்தது .அவர்கள் நகர்ந்தாலும் விடாமல்  பேசுவதை கேட்டு  சித்து  அவர்கள் அறையில் இருந்து குரல் கொடுத்தான்  .

கண்மணி வெட்கப்பட்டு வருவதை ரசித்து “எத்தனை நேரம் டா குரல் கொடுக்க ? எல்லாம் சரி  .ஒன்னே ஒன்னு மட்டும் மிஸ்ஸிங் …”

என்ன ?

“உன் கையில் பால் சொம்பு!”

“அந்த கவலை மட்டும் எதற்கு . ஓடி போய் எங்க அம்மாவிடம் சொல்லி வாங்கிட்டு வந்திடட்டா?”

“ஹே பட்டிக்காடு! மானத்த வாங்காத ?ஒழுங்கா உள்ளே வந்திடு!”

“என்னை அப்படி கூப்பிடாதீங்க என்று எத்தனை தடவை சொல்வது!”

“என் செல்ல பட்டிகாடே ,எனக்கு அப்படி கூப்பிட தான் பிடித்து இருக்கு ..”

அவளை பார்த்து விசில் அடித்து “பெண்கள் புடவை கட்டினாலே தனி அழகு தான் !”

“என்ன……”

“இல்லை . இல்லை. என் பெண்டாட்டி, என் செல்ல  தேனு குட்டி  கட்டினா தனி அழகு சொல்ல வந்தேன். அதுவும் எனக்கு பிடித்த புடவையில் அசத்தறீங்க! இடுப்பு எங்க இருக்கு என்று தேடனும் போல இருக்கே !”

“இருக்கும், இருக்கும்”

என் பெண்டாட்டி என்று  சொன்னதை  கேட்டு சந்தோஷ வானில் பறந்தாள்.

“லொள்ளு செய்யாதீங்க! இத்தனை நாளா உங்க பெண்டாட்டி, உங்க கண் முன்னாலே தான நடமாடினாள். அப்ப தெரியவில்லையாக்கும்” .

“தெரிந்தது பட்டிக்காடு. இருந்தாலும் உன்னிடம் எப்படி சொல்ல “ என்று தயங்கும் போது

அதிதி அவர்கள் அறை வாசில் இருந்து ‘பாபி ,பாபி ‘ குரல் கொடுத்தாள்.

இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம இம்சை செய்யறா? என்று சித்து கடுப்பானான்.

அதை பார்த்து சிரித்து ‘வந்திடறேன்! நோ கோபம்’ என்று  அவன் கன்னத்தில் இதழ் பதித்த போது

“உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே  உன்னை பார்த்ததால

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா”

என்று பாடினவுடன்,  “வந்து கவனித்துக் கொள்கிறேன்” என்று பத்திரம் காட்டி நகர்ந்தாள் .

“உங்களை தொந்தரவு செய்ததிற்கு சாரி  பாபி! இதற்கு மட்டும் ஐடியா கொடுங்க .நாளைக்கு கிளைன்ட்  கிட்ட டெமோ காட்டனும். என்ன மண்டை உடைத்தும் உருப்படியா ஒரு ஐடியா கூட  தோன மாடீங்குது” என்றவுடன் கண்மணி அவளை உத்து, உத்து  பார்த்தாள் .

“என்ன பாபி?”

 “மண்டை உடைத்து யோசிதீங்க சொன்னீங்க! எந்த டேமேஜ்  இல்லாமல் இருக்கீங்களே, அது தான், எப்படி” என்றவுடன் அழும் குரலில் “பாபி ,ப்ளீஸ்! வேண்டாம் என்னை விட்டிடுங்க. மீ பாவம் .நான் அழுதிடுவேன்” என்று கெஞ்சினாள்.

கண்மணி அதிதியுடன்  வேளையில் மும்மரமாக இறங்கி, உதவி செய்து முடிக்கும்  போது ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.

“சூப்பர் பாபி! நினைத்ததை விட மிகவும் அருமையா வந்து இருக்கு” என்று கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள். வெட்கத்தால் “ச, என்ன இது அதி!”

“அண்ணா  கொடுத்தா தான் பிடிக்குமோ?” என்றவுடன்  அவள் முதுகில் செல்லமா அடி கொடுத்து “கொஞ்சம் சும்மா இரேன்” என்று வெட்கப்பட்டு கெஞ்சினாள்.

கண்மணி அழகில் மயங்கி “பாபி, ரூச் போடாமலே இப்படி அழகா சிவக்கறீங்க !”

அண்ணனும் தங்கையும் சொல்லி வைத்த மாதிரி படுத்தறாங்களே!

“அண்ணா பார்த்தாரு நான் தொலைந்தேன்! எப்படி என் ப்ராபெர்டியை நீ கட்டி படித்து முத்தம் கொடுக்கலாம் சண்டை போட போறாரு!”

சித்து அறை  நோக்கி “அண்ணா,  உன் நிலைமை திண்டாட்டம் தான் போங்க” என்று சத்தமாக கத்தினாள். அதிதி அலறுவதை கேட்டு எங்கே சித்து வந்துவிடுவானோ பயந்து “ஹே அதி, எதுக்கு ஊரை கூட்டற…நான் கிளம்பறேன், ஆளை விடு தாயே !”

கண்மணி வெளியேறும் போது

“காதல் கிரிகெட் விழுந்திடுச்சு விக்கட்

உன்னை  நானும்  பார்த்ததாலே

ஆனேனே  டக்  அவுட்டு

பரம்  பரம்பம்  பார  ரம்பம்

பரம்  பரம்பம்  பார  ரம்பம்

இருந்தாலும்  உன்னை  மட்டும் 

காதல்  செய்வேனே

நீ  தான்  என்  பூமி  உன்ன  சுத்தி  வருவேனே !”

என்ற பாடல்  அதிதி  செல் போனில் இசைத்தது.

அதிதி சந்தோஷமாக “ஹாய் ஹாப்பி ! இப்போ தான் வேலை முடித்தேன் .சொல்லுங்க” என்ற போது கண்மணி அப்படியே பிரேக் அடித்து திரும்பினாள்.

கண்மணி நின்றதை பார்த்து தலையில் அடித்து, கண்களில் கலவரமாக “அச்சோ! பாபி !”

கைகளை கட்டிக் கொண்டு, புருவத்தை ஏற்றி இறக்கி “பாபி தான்! சொல்லுங்க”

போனில் யார் என்று அறிந்து கொண்டு “உங்க ஹாப்பி என்ன சொல்லறாரு !எங்க அண்ணனை உங்க அண்ணன்கிட்ட இருந்து தர்மடி வாங்கமா தப்பிக்க  சொல்லு” .

“பாபி! அது ! அவர்….“உங்களுக்கு எப்படி!” என்று திக்கினாள்.

 “ ஊரில் இருந்து ஆனந்த் அண்ணன் வந்த போதே கண்டு கொண்டேன். நானே கேட்கணும் இருந்தேன் .என்னை விட நீங்க பெரியவங்க. உங்க அண்ணனை பொறுத்த வரைக்கும் நீங்க செய்வது சரியா, தப்பா எனக்கு தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் ஹாப்பி அண்ணன் உங்களுக்கு சரியான பொருத்தம்.”

“தேங்க்ஸ் பாபி! அண்ணா கண்டிப்பா சரி சொல்வாரு! மறுக்க காரணம் இல்லை. நீங்க தான் அண்ணனிடம் சொல்லணும்” .

கண்மணி அதிர்ச்சியாக “நானா! அவரிடமா?”

“பாபி ப்ளீஸ்” என்று கன்னத்தை  பிடித்து கெஞ்சினவுடன் “நேரம் பார்த்து சொல்லறேன். அத்தை ஏற்கனவே உங்க ஜாதகத்தை எடுத்து மாப்பிளை தேட ஆரம்பித்தாச்சு. சீனு மாமா பையன் வெளிநாட்டில் இருப்பதனால் யோசிக்கிறாங்க! ஹாப்பி அண்ணனுக்கு சரியான சந்தர்ப்பம். கண்டிப்பா பேசி பார்க்கிறேன்.” 

சித்து, இன்று இவளிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடனும். இனி பொறுக்க முடியாது. எல்லாத்தையும் சொல்ல முடியுமா? சரி வருமா ?

ராட்ஷசி அவ அழகாலே கொள்ளறா? எத்தனை நாள் போலியாக கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியும். வேளைக்கு ஆகாது. அவ சிரிப்பிலே மயக்கிடறா! குட்டி பிசாசு.

இப்போது எல்லாம் கொஞ்ச நாளா கண்மணிக்கு தெரியாமலே அவளை சைட் அடிக்க ஆரம்பித்து இருக்கான். இரவு மணி பத்தானாலும் அலுவலகத்தில் இருந்து கிளம்பாமல் வேளையில் மூழ்குபவன், ஏழு மணிக்கே பரபரப்பா கிளம்பிவிடுகிறான்.

வீட்டிற்கு வந்தாலும் அவன் அறைக்குள் சென்று முடங்காமல் கண்மணி இருக்கும் இடத்தில், அவள் பிரவீன், அதிதியுடன் அடிக்கும் லூட்டியை ரசித்து அங்கேயே கணினியை பிரித்து அமர்ந்து கொள்வான். அந்த நேரத்தில் என்ன வேலை செய்தாய் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.

அவனா இப்படி என்று அவனுக்கே சந்தேகம்.

இவளை எங்க இன்னும் காணோம். பேச விட்டா கதாகலட்சேபமே நடத்துவாள். ஒருவேளை, மேடம் அப்போது மாதிரி வெட்கப்பட்டு வெளியவே நிற்கிறாங்களோ?

அவன் கனவை கலைப்பது போல போன் மணி அலறியது .           

“என் தங்கச்சி இருந்த இடத்தில் இன்னொருத்தியா? உனக்கு எல்லாம் மனசாட்சி என்பதே கிடையாதா?”

மறுபடியுமா? இவனை எல்லாம்… என்று சித்து கடுப்பானான்.

“உன் மகன் நந்து எங்களிடம் தான இருக்கான். அவனை பார்க்க கூட வர விடாம உன் புது பெண்டாட்டி தடுக்கறாலா? சொல்லி வை .என் தங்கச்சி போன இடத்துக்கே அவளையும் அனுப்பிடுவேன்” என்றவுடன் சித்து கோபத்தில்

“டேய்  !மரியாதையா ஒழுங்கா பேசு! என் கண்மணிக்கு எதாவது ஆச்சு ..அப்புறம் … உன் மீது இருக்கும் கேஸ் அப்படியே தான் இருக்கு என்று  நியாபகம் இருந்தால் சரி! உன்னிடம் எப்போதும் சொல்வதை தான் இப்போதும் சொல்லறேன்!”

“இந்த கதை எல்லாம் வேண்டாம் சித்தார்த். இதே கதையை எத்தனை காலம் சொல்லி ஏமாத்துவ! என் தங்கச்சி எழுந்து வந்து சொன்னா தான் நம்புவேன். அவ சொல்ல போறது இல்லை. பொய் திரும்ப திரும்ப  சொன்னா உண்மை ஆகிவிடுமா?”

“உனக்கு என்ன சொல்லி புரிய வைக்க! முட்டாள்” என்று பக்கத்தில்  கிடந்த புத்தகத்தை சித்தார்த் வீசி எறிந்தான் .

அப்போது உள்ளே நுழைந்த கண்மணி கால் மீது சரியாக விழுந்தது .சித்து அதை  கண்டு கொள்ளவே இல்லை.

சித்து யாருடனோ  போனில் காரசாரமாக பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து கொஞ்சம் நடுங்கி விட்டாள். யாரா இருக்கும்? எதற்கு இப்படி கோபம்?

ச்பீகரில் இருந்ததால் காலையில் அவளை  மிரட்டினவன்  தான் என்று உடனே கண்டு கொண்டாள்.

 “உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன். எங்களுக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும். நீ மிரட்டினா பயன்திடுவேனா? அந்த டெஸ்ட் ரிசல்ட் மட்டும்  வரட்டும், அப்புறம் பாரு நான் யாரு என்று காட்டறேன், அதற்கு ஏன் ஒத்துக் கொள்ள மாடீன்கிற? நல்லவனா இருந்தா ஒத்துக்கோ! நந்துக்கு நீ அப்பா இல்லை என்றால் வேற யாரு சொல்லு? உனக்கு தெரியாமலா இருக்கும்.” அந்த குரல் மிரட்ட,

சித்து அமைதியாக இருப்பதை தொடர்ந்து “நந்தனுக்கு  எவன் அப்பனா இருந்தாலும் தொலைந்தான். என் தங்கையை ஏமாத்தினவனை சும்மா விடுவேனா?  அவ பையனுக்கு அம்மா இல்லாதது போல அப்பனும் இல்லாமல் இருக்கட்டும். நான் என் மருமகனை  பார்த்துக் கொள்வேன்.”

சித்து, “நந்தனை என்னிடமே கொடுத்துவிடு ! நான் கேஸ் போட்டால் என் பக்கம் தான் சாதகமா தீர்ப்பு வரும்.”

ராம்கி திமிராக “அவன் இங்க இருப்பதால் தான் உன் குடுமி என் கையில்! நீ ஒத்துக்கோ, அந்த DNA  டெஸ்ட் எடுக்க  ஒத்துக்கோ ! நீ தான் அப்பா நிரூபித்து  அப்புறம் கூட்டிகிட்டு போ! வேண்டாம் சொல்லலையே! அதில் வரும் ரிசல்ட் பொறுத்து  உன் தலை எழுத்து மாறும், நீ மட்டும் அப்பாவா இருந்த அப்பவே போட்டு தள்ளிடுவேன்”

மனதில் இப்படியும் போக விட மாடீங்கிரன். அப்படியும் போக விட மாட்டேங்கிறானே!

அந்த டெஸ்ட் எடுத்தால் அதற்கு பிறகு வரும் பிரச்சினையை எப்படி சமாளிக்க? இத்தனை நாள் காத்த பொறுமை எல்லாம் வீணாகிவிடுமே! இப்போதைக்கு இவனை எப்படி அடக்க என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த புறம் போன் ஒரு பெரியவரிடம் கைமாறியதை அறிந்து

“இந்த நேரத்தில் என்ன விஷயம் அங்கிள்? பரவாயில்லை அங்கிள்.நந்தனுக்கு உடம்பு முடியலையா? என்ன ஆச்சு .எப்போதில் இருந்து . என்னால இப்ப வர முடியாது. அவனிடம் கொடுங்க ..”

பின்னால் ராம்கி தீப்தி அண்ணன், அவன்  அப்பாவிடம் கத்துவது தெளிவா கேட்டது. அவர் அவனை அடக்கினார். இவராவது என்னை புரிந்து கொண்டாரே!

கண்மணி மனதில் யாரு இந்த நந்தன்? என்ன டெஸ்ட்! எதுக்கு?……………………………

அவள் வாழ்வில் இனி  தூறல் மழையா?  இல்லை இடியுடன் கூடிய மழையா பொறுத்து இருந்து  பார்க்கலாம்………..

Advertisement