Advertisement

தூறல் 4:

கண்மணி வீட்டு வாசலில் சித்தார்த்திற்கு பேண்ட் வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பு உபசாரம் நடந்தது . “உங்க ஆடி வண்டி, ஆடி அசைந்து கொண்டு செம ஸ்பீட் வந்துவிட்டது போல”  என்று ஷ்யாம் முன்னே வந்தான் .

சித்து மனதில் ‘இவன் எங்க வந்தான். மனசில பெரிய புன்னகை மன்னன் நினைப்பு’  என்று திட்டினான் .

இவனும் இவங்களுடன் சேர்ந்து படுத்தறானே! இவங்களுடன் சேர்ந்து  இப்படி அவதி படறேன் என்று  கொஞ்சமாவது என் மீது பிரியம்   இருக்கா?

ஷ்யாம் கண்மணியுடன்  சிரித்து பேசுவதை பார்த்து சித்து காதில் புகை. என்னிடம் வண்டியில் அப்படி ஏட்டிக்கு போட்டியா  சண்டை போட்டு இங்க இவனுடன் இப்படி  சிரித்து பேசுவதை பாரு.

”என்ன கண்மணி, வழியிலே, வண்டியிலே ரொமான்சா, வண்டியை மெதுவா உருடிக்கிட்டு வந்தீங்க போல! உங்கள்  முதல்  பயணம்  எப்படி. சித்து சார் எதிலும்  கொஞ்சம் வேகம்  தான்? அப்படித்தான?” என்று  இருவருக்கு மட்டும்  கேட்கும் படி கிண்டலாக கிசுகிசுத்தான் .

சித்தார்த் மனதில் காமடி செய்து  கலாய்ச்சிட்டாரா? கொடுமை திட்டிக் கொண்டான்…

கண்மணி சிரித்து மழுப்பினாள். அவள் அப்பா முன்பு இப்படி கேட்டால் என்ன செய்வா?

கண்மணி சிரிப்பை பார்த்து ஷ்யாம்  “அம்மா தாயே, தயவு செய்து சிரிக்காத … இந்த பெண்ணே வேண்டாம் என்று மாப்பிள்ளை பயந்து ஊரை பார்த்து ஓடிட போறாரு?”

ஷ்யாம் இப்படி பேசினதை  சிவம் கேட்டால் அவன்  தொலைந்தான். அவர் தான் சித்துவை பார்த்து பயந்து கொண்டு இருக்காரே.

காலையில்  இருந்து வீட்டில் உள்ள அனைவரிடமும்  மாப்பிளை வந்தால் நல்லா  பார்த்துக்கணும். பேச்சுக்கு கூட எதுவும் விளையாட்டா சொல்லிடாதீங்க ! கேட்டுடாதீங்க! என்ன வேண்டுமோ கூட இருந்து  செய்யணும்  என்று காதில் ஓட்டை விழும் அளவிற்கு சொல்லி இருந்தாரே?

முதல் இரவு அறையில் சித்து, இவள் படிப்பை காரணம் காட்டி இப்படியே விட்டிட்டு கிளம்பிட வேண்டியது தான் . கல்யாணம், குடும்பம் ,வாழ்க்கை  எல்லாம் ஒத்து வரவே வராது. கண்மணியிடம் தெளிவா சொல்லிவிட வேண்டும், இவ சின்ன பெண்ணா இருக்காளே! நான் சொல்வதை புரிந்து கொள்வாளா? எப்படியாவது புரிய வைக்கணும் என்று அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் .

அறையை பார்த்தவுடன் மனதில் பரவாயில்லை நல்லா தான் வைத்து இருக்கா. அறையை வெகு நேர்த்தியாக அலங்கரித்து இருந்தனர். அதைக் கண்டு இப்போதைக்கு  இது ஒன்று தான் குறைச்சல்  என்று திரும்பும் போது, வயல் நடுவில்  கண்மணி  அழகாக சிரித்துக் கொண்டு இருந்த புகைப்படம் அவனை கவர்ந்தது . ஒரு நிமிடம் அதையே பார்த்துக் கொண்டு இருந்தான் .

இது வேலைக்கு ஆகாது. பொறுமை இல்லாமல் எத்தனை நேரம். வராளா பாரு . இவ எப்ப வந்து……..என்று செல் போனை ஆராயத் தொடங்கினான். சிக்னல் கூட ஒழுங்கா கிடைக்க  மாட்டீங்குது. பட்டிக்காடு சொன்னா மட்டும் அப்படி கோபம் .

காலையில் நேரத்திலே ஊரை பார்த்து ஜூட் விட வேண்டியது  தான் . அவளுக்காக காத்து இருந்த போது அசதியில் அப்படியே தூங்கி விட்டான் .

திடீர் என்று அலாரம் அடித்ததில் அடித்து பிடித்து எழுந்தான் . அவன் மீது அழகிய ரஜாய் போர்த்தி இருக்க, வெளியே நன்கு விடிந்து இருந்தது .

மணியை பார்த்தால் காலை ஏழு . அட ராமா, நன்றாக தூங்கிவிட்டேனா? என்ன பற்றி என்ன நினைப்பா? இவளுடன் பேசவே இல்லை. இன்று எதோ பிளான் வைத்து கழுத்தறுக்க போறார் இந்த சிவம். முதலில் எஸ்கேப் ஆகிவிட வேண்டும் . பக்கத்தில் பார்த்தால் கண்மணியை காணவில்லை . இவ எங்க போனா? ஒரு வேலை வரவே இல்லையா என்று என்னும் போது, கதவை தள்ளிக் கொண்டு கண்மணி சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“குட் மோர்னிங்”

“ம்ம்ம்ம்ம்” .

போர்வையை மடித்த படி “நல்ல உறக்கம் போல” …

இவ  கிண்டல், நக்கல் செய்யறாளா? இல்லை உண்மையாக கேட்கிறாளா புரியலையே!

“ஹார்லிக்ஸ், பூஸ்ட், பௌர்ன்விட்டா,பால் ,காபி, டீ எல்லாம் இருக்கு .உங்களுக்கு எது வேண்டுமோ அப்பா அதை எடுத்துக்க சொன்னார் . இனிமேல் எது வேண்டும்  என்று தெளிவா சொல்லிடுங்க” பாவமாக “இத்தனையும் என்னால தூக்கிட்டு வர முடியல. கையே போச்சு”

“நான் எழுந்தவுடன் பீர், விஸ்கி தான் குடிப்பேன். கல்லா இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துக்கலாம்” என்றவுடன் கண்மணி முழித்தாள்.

அவன் கண்களில் குறும்பைக் கண்டு கொண்டு   “அப்பாவிடம் கண்டிப்பாக சொல்லிடறேன் .தோட்டத்தில் இருந்து புதுசா இறக்கின கல்லு கிடைக்கும். ஏற்பாடு செய்திடலாம் “

அவள் முகத்தை பார்க்காமல் “நான் ஊருக்கு கிளம்பறேன்.”

“நானும் ரெடி. என் பெட்டி எல்லாம் உங்க, இல்லை, நம்ம காரில் ஏற்றியாச்சு. நீங்க குளித்து கிளம்பினா சரி.”

அதிர்ச்சியாக “என்னது நீயுமா? நீ எங்க வர “

உடனே கண்மணி கதவை அடைத்து விட்டு வந்தாள்.

நிதானமாக “இப்ப சொல்லுங்க?”

“கதையா சொல்லறேன்! நீ எங்க வர. உன் படிப்பு !”

ஆஹா, நல்ல கரிசனம் தான் என்று முணுமுணுத்ததை கேட்டு

“என்ன சொல்லறையோ சத்தமா சொல்லு?”

கண்மணி மனதில் இவன் தான் செவிடு போல!

“அப்பா சொன்னதை செய்து இருக்கேன். எதா இருந்தாலும் நீங்களே அப்பாவிடம் சொல்லிடுங்க. எனக்கு ஒன்றும் இல்லை” என்ற போது அச்சோ அந்த ஆளிடம் சொல்லனுமா? இது வேளைக்கு ஆகாது . சும்மாவே மீசை காட்டி  மிரட்டுறவர்,  இவர் பெண்ணை விட்டிட்டு போறேன் சொன்னால் அருவாளை  தூக்கிட்டு வந்திடுவார். அப்படி ஒரு காட்சி அவன் மனக்கண்ணில் தோன்றியவுடன் நா உலர்ந்து ஒட்டிக் கொண்டது.

“இத பாரு பட்டிக்காடு, நீ தான எனக்கு பெண்டாட்டி. அதனால் உன்னிடம் தான் சொல்லுவேன் .நீ உங்க அப்பாவிடம் பேசிக்கோ!”

‘பட்டிக்காடு’ சொல்லாத என்றால் அதையே சொல்லறாரு . என்னை விட்டு போறேனா சொல்லறீங்க! உங்களுக்கு இருக்கு கச்சேரி .

“சரி நானே எங்க அப்பாவிடம் சொல்லிக்கிறேன். நீங்க கிளம்புங்க”

அவனை வம்பு இழுக்கும் பொருட்டு “சீக்கிரமா கிளம்புங்க! மணி ஆச்சு. அப்புறம் ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். உங்களுக்கு தான் சங்கடமா இருக்கும்.”

“எங்க? எங்க கிளம்ப சொல்லற? நான் எங்கேயும் வரல .. ஊருக்கு கிளம்ப போறேன். நீயும்,உங்க அப்பாவும் போய்க்கோங்க”.

“என்னை பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது ..”

அவள் சொன்னவுடன் அவளை மேலும் கீழும் பார்த்தான் .

தலைக்கு குளித்து, கூந்தலை  தளர்வா பின்னி மல்லி பூ வைத்து அழகா புடவை கட்டி இருந்தாள்.

அவன் பார்வையை கண்டு சூடான  காது மடல்களை ,சிவந்த கன்னங்களை  எங்கயோ பார்வையை திருப்பி மறைத்தாள்.

“சொல்லுங்க! எப்படி இருக்கேன். ஒரு அளவிற்காவது இருக்கேனா ? பாஸ் தான ..”

இவளுக்கு என்ன நல்லா தான இருக்கா, நூறு மார்கே தாராளமா கொடுக்கலாம் என்றதை மறைத்து “2 மார்க் கூட வாங்கவில்லை. பெயில் தான். நீ எல்லாம் தேறமாட்ட!”

“நிஜமாவா” என்று அவள் முகம் கூம்பியது ..

“நிஜம் தான் ..” இவர் பொய் சொல்லறாரு என்று இவர் கண்களே காட்டிக் கொடுத்திடுச்சு . இதை அப்புறமா தனியா கவனிக்கிறேன்.

“எப்படியோ போங்க! கிளம்பலாமா ?”

பிசாசு! எங்க சொல்லாம படுத்துவதை பாரு ? பட்டிக் காடு. பட்டிக் காடு.

“நீங்க நம்ம தோட்டதுக்கோ, இல்லை ஆத்தங்கரைகோ தான் குளிக்க போகணும். எங்க வீட்டில் அந்த வசதி இல்லை. நான் காலை நாலு மணிக்கே எழுந்து தோட்டத்தில் குளித்து வந்துவிட்டேன். அப்பவே போய் இருந்தா ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்து இருக்கும் . இப்ப கொஞ்சம் கூட்டம் இருக்கும். தோட்ட வேலைக்கு ஆள் வந்து இருப்பாங்க. பரவாயில்லை. நீங்க சிடியில் பிறந்தவர். அட்ஜஸ்ட் செய்துப்பீங்க தான. அதுனால தான் நாலு மணிக்கு எழுப்பல!”

“நாலு மணிக்கா?”

அவன் தூங்கினதை எண்ணி “ நாலு மணிக்கு இல்லை. அதற்கு அப்புறமும் தான். இந்த வீட்டையே சென்னைக்கு  நகர்த்தி இருந்தாலும் உங்களுக்கு   தெரிந்து இருக்காது. அப்படித்தான. ப்ரஷ் இருக்கா? இல்லை வேப்பங்குச்சியா! செங்கல் தட்டி தரேன்.”

“என்னது? என்னது செங்கல்லா? பெரிதா எடுத்து வந்து அதை என் தலையில் கொண்டு வந்து போடு! ஓபன் பாத்ரூமா? விளையாடறீங்களா? நான் எங்க வீட்டுக்கே போய் குளித்துக் கொள்கிறேன்.”

“எங்க ஊரை, உங்க ஊர் காஸ்மோபாலிடன் சிட்டி மாதிரி  நினைத்தீர்களா? பட்டிக்காடு தான ..ஓபன் பாத்ரூம் தான் “

“அச்சோ! அம்மா வயிர் வேற முட்டுதே! இப்ப சொம்பை தூக்கிக் கொண்டு எந்த பக்கம் ஓட !”

அவன் அவஸ்தையை கண்டு சிரித்த கண்மணி “சரி, நான் கிளம்பறேன். ஊருக்கு கிளம்ப ஏற்பாடு செய்யணும்” என்ற நகர்ந்த போது “ஹே! போகாத! நில்லு! ப்ளீஸ் !எனக்கு” என்று சொல்ல முடியாமல் நெளிந்தான் .

“I want to use rest room. very urgent …”

மனதில் சிரித்துக் கொண்டு, வேண்டும் என்றே “நீங்க இங்கயே ரெஸ்ட் எடுக்கலாம். யாரும் வரமாட்டாங்க” .

“ஹே பட்டிக்காடு, நான் பாத்ரூம்  போகணும். ப்ளீஸ் !”

அப்படி வாங்க வழிக்கு..

“எனக்கு அங்க எல்லாம் போக வெட்கமா இருக்கு. ஆத்தங்கரை ,கம்மாய் …என்னால முடியாது .நீ ரொம்ப நல்லவ. இங்கயே எதாவது” என்று கெஞ்ச தொடங்கினான் …

“ப்ளீஸ் பட்டிக்காடு!”

அவள் முறைப்பை கண்டு “ஓகே ! ஓகே  சாரி! இனி அப்படி கூப்பிட மாட்டேன்” என்றவுடன்

அவள் அறையை ஒட்டி  இருக்கும் அட்டாச்ட் பாத்ரூமிற்கு அழைத்து சென்றாள். சிவம் ஒரு அறையையே அடக்கி பெரிதா காட்டி இருந்தார் .

அறையை பார்த்தவுடன் தான் இயல்பா மூச்சு விட்டான். உள்ளே சென்று  வாய் பிளந்து நின்றான் .




மேலே பெரிய குழாயில் இருந்து தண்ணீர் விழுவது போல இருந்தது . தென்னை மரத்தை இயற்கையாக அப்படியே வளர  விட்டு இருந்தார். தோட்டத்தில் பம்ப் செட்டில் குளித்து, வீட்டில்  அதே எபெக்டில்  குளிக்கணும் என்று  குளியல் அறைக்குள்  கொண்டு வந்து இருக்காரா? கிராமத்தான் புத்தி சரியா தான் இருக்கு .

ஒரு  பக்க சுவர் பதிலா, தோட்டம் தெரியும் படி கண்ணாடி அமைத்து இருந்தார் .

கண்ணாடி அருகே சென்று  வெளியே உத்து பார்த்து கண்மணியிடம்  “சுற்றியும் கண்ணாடி இருந்தா எப்படி உபயோகிக்க ?அங்கு இருந்து என்னை பார்த்தா …”

இவர் பெரிய ஆணழகன். இவரை தான் எல்லாரும் சைட் அடிக்க லைனில் நின்று கொண்டு இருக்காங்க திட்டி  …

“நாம தான் வெளியே பார்க்க முடியும். அங்க இருந்து நம்மளை பார்க்க முடியாது .உங்களுக்காக  எங்க அப்பா  சிறந்த architect  கூப்பிட்டு  பார்த்து பார்த்து கட்டினார்.”

ஏதோ நினைவு வந்தவனாக “அடிபாவி, என்னை ஓட்ட தான் ஆத்தங்கரை, தோட்டம், வாய்க்கால், கிணறு  கிண்டல் செய்தாயா ?உன்னை எல்லாம் …” வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று அவளை வெளியே தள்ளி  கதவை அடைத்தான் .

குளித்து வெளியே வந்தவுடன் கண்மணி அறையை நோட்டம் விட்டான் .மிகவும் விசாலமான அறை. சகல வசதியும் உள்ளடக்கி இருந்தது. அவன் அறை எப்படி இருக்கோ, அந்த வசதிகள் அனைத்தும் இருந்தது .

ஒ, அதனால் தான் படுத்தவுடன் எந்த  வித்தியாசமும் தெரியாம தூங்கிவிட்டேன் போல. இதற்காக எல்லாம் மனதை மாற்றிக்க முடியுமா? இவளை , இப்பவே இங்கயே விட்டு கிளம்ப  வேண்டியது தான். உங்க அப்பா, அம்மா  என்ற  மனசாட்சியிடம் சொன்னதை கேட்காமல் நடந்து கொண்டதிற்கு இப்படி தான் செய்யணும் . அவன் வாழ்க்கையில் கண்மணி வேண்டாம், இவளை விட்டு போறது தவிர வேற வழியே இல்லை  என்று உறுதியான முடிவுடன் சிவமை நோக்கி சென்றான் .

சித்தார்த் செல் போன் அலற, “சொல்லுங்க அப்பா !” ஜானகிக்கு  உடம்பு முடியவில்லை என்றவுடன்  ‘இன்னும்  அரை மணி நேரத்தில் கிளம்பறேன். வேற வழி , அவளுடன் தான்’ என்று வேகமாக கிளம்பினான் .

மகன் மனதை  அறிந்த ஜானகி, அவளுக்கு முடியவில்லை ,உடனே மருமகளுடன் கிளம்பி வா என்று கட்டளையிட்டாள்.

கண்மணி அத்தனை சீக்கிரம் கிளம்பிடுவாளா? ஊரில் உள்ள எல்லாரிடமும் போயிடு வரேன் சொல்லி கிளம்ப மேலும் ரெண்டு மணி நேரம் ஆனது. நிலைமை புரியாம இம்சை செய்யறாளே!

சிவம், சித்து கை பிடித்து “மாப்பிள்ளை என் பெண் எதாவது தவறு செய்தாலும்  கொஞ்சம் பொறுமையா எடுத்து சொன்னா புரிந்து கொள்வாள். இதுவரை யாரும்  அவளை எதற்காகவும்  அதட்டினது கூட  இல்லை. கொஞ்சம் செல்லமா வளர்ந்த பெண்! அவள் இனிமேல் உங்க பொறுப்பு. நான் மாலைக்குள் வண்டியில்  சீரை அனுப்பிடறேன்!”

வேண்டாம் மறுத்தும் கேட்காமல்  பிடிவாதம்  பிடிப்பவரிடம் “நான் சொன்னா சொன்னது தான். அது எல்லாம் வேண்டாம் .நீங்க கொடுத்து தான் எங்க வீட்டில்  நம்பனும் இல்லை. அங்க உங்க பெண்ணிற்கு தேவையான எல்லா வசதியும் இருக்கு” என்று கோபமாக பேசி வண்டிக்கு சென்றான் .

சிவம் அப்பா நாச்சியப்பன் ”வேண்டாம் என்றால் விடு டா! மாப்பிளை எத்தனை பெருந்தன்மையா  பேசறாரு பாரு. அதை நினைத்து சந்தோஷபடு. எத்தனை பேருக்கு இந்த மாதிரி அமையும்.என் பேத்தி தேனு கொடுத்து வெச்சவ.”

செல்லமா மகளிடம் “ கொஞ்சம் தொலைவா போக போற கண்ணு ! இனி நாம தினமும் பார்த்துக்க முடியாது. உன் தேவைகளை நீ தான் பார்த்துக்கணும். மாப்பிளையும் கவனிக்க வேண்டும் . கூட்டு குடும்பத்திற்குள் போற! விளையாட்டு தனத்தை எல்லாம் விட்டு பொறுப்பா நடந்துக்கோ கண்ணு ..படிப்பு முக்கியம் தான் .ஆனா அவங்க எப்படி சொல்லறாங்கோ அப்படி செய்! யார் மனமும்  கோணாம நடந்துக்கோ ! சும்மா கோபிச்சுக்கிட்டு வர கூடாது .உங்களுக்குள் எது நடந்தாலும் நாலு சுவரை  தாண்டி வெளியே வர கூடாது.

உன்னுடைய உணர்வுகளுக்கு பிறர்  எப்படி மதிப்பு கொடுக்கணும் நினைக்கிறியோ அதே போல அவங்க உணர்வுகளுக்கும் மதிப்பு கொடு. அப்படி செய்தாலே எந்த பிரச்சினையும் வராது” என்று வாழ்க்கையின் தத்துவத்தை அழகா எடுத்துக் கூறினார் .

“அம்மா, ரொம்ப அழகா சொல்லிட்ட” என்று அவள் அன்னையை அணைத்து முத்தம் கொடுத்தாள்.

“என்ன தேனு !இப்ப தான சொன்னேன்!”

புது வித உணர்வு கண்மணியை  ஆட்டி  படைத்தது . நேற்று வரை பள்ளி, கல்லூரி  ,தோட்டம், வயல் என்று சந்தோஷமாக  இருந்தவள் இப்போது கல்யாணம் என்னும் பந்தத்தால் இணைந்த நபருடன் வாழ்க்கை முழுதும்  தனியா பயணம் செய்ய போகிறாள். வாழ்க்கையில் இனி எல்லாமே புதிது. இதுவரை அவளுடையது என்று இருந்த எதுவும் அவளுது இல்லை என்பதை போல உணர்ந்தாள் .

நினைத்த நேரத்தில் என் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா,தம்பி யாரையும் பார்க்க முடியாதோ! இரவானால்  ஊஞ்சல் ஆடிய படி தலை வைத்து தூங்கும் அம்மா மடி எனக்கு சொந்தம் இல்லையோ !

புது வீடு, சூழல், இடம். அவள் ஆசையா வளர்ந்த இடத்தை விட்டு இனி வேறு இடத்திற்கு போக போகிறாள் என்று நினைத்ததுமே   துக்க பந்து தொண்டையை அடைத்தது .

வண்டியில் அமர்ந்து கொண்டு சித்து  பொறுமை இல்லாமல்

 “கிளம்ப போறியா இல்லை விட்டு கிளம்பட்டுமா?”

கண்மணி அமர்ந்தவுடன் வண்டியை வேகமாக கிளப்பினான் .

கண்மணியுடன் அவள் செல்வி அத்தை, மல்லி அத்தை துணைக்கு வருவதாக இருந்தது. அது எல்லாம் சரி வராது என்று வண்டி சென்னை நோக்கி பறந்தது .

கண்மணி, கண்ணை மூடிக் கொண்டு  அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவள் கண்களில்  கண்ணீர் முத்துக்கள் திரண்டு நின்று கொண்டு இருந்தது .

சித்து பார்த்தும் பார்க்காது போல அமைதியாக வண்டி ஓட்டினான்.

கண்மணி காலையிலும் ஒன்றும் சாப்பிடவில்லை என்று அறிவான் . எங்கயாவது மயங்கி தொலைந்தா எனக்கு தான் பிரச்சினை என்று  வழியிலே காபி சாப்பிட நிறுத்தினான் .’எனக்கு  ஒன்றும் வேண்டாம்’ என்றுவிட்டாள். இரவு சாப்பிட நிறுத்தினான்.  ஒன்றும் வேண்டாம் என்று கூறினவுடன்  “ஓகே! எனக்கு ஒன்றும் இல்லை. இப்படி சாப்பிட்டால் தான சின்ன பெண்ணா வளைய வர முடியும்” என்று கோபத்தில் பல்லைக் கடித்தான்.

வண்டியில் இருந்து  இறங்காமலே உணவை வரவழைத்து சாப்பிட்டான். அவளுக்காக ரெண்டு இட்லி வாங்கினான் .அவள் சாப்பிட்டால் தான் வண்டி நகரும் என்று அவன் செல் போனில் வேலையை தொடர்ந்தான் .

ஏனோ அவள் சாப்பிடாதது அவனை வருத்தியது. மனசாட்சி கேள்விக்கு, அதிதி சாப்பிடாமல்  இருந்தால் எப்படி பொறுப்புள்ள அண்ணனா பார்த்துக் கொள்வேனோ அதே போல இவளுக்கும். வேற ஒன்றும் இல்லை என்று சமாதனம் செய்தவுடன் மனசாட்சி அவளுக்கு பொறுப்புள்ள அண்ணன். கண்மணிக்கு? பொறுப்புள்ள கணவனோ!

எதையும் யோசிக்கும் மனநிலையில் சித்து இல்லை. சித்தார்த் பிடிவாதம் கண்டு வேற வழி இல்லாமல் இட்லியை சாப்பிட்டாள்.

ஊருக்கு சென்றவுடன், திட்டம் போட்டு , இப்படி செய்து கண்மணியுடன் கிளம்பி வர சொல்லி இருக்காங்க என்று கோபமானான். கோபம் அத்தனையும் கண்மணி மீது திரும்பியது ..

ஏற்கனவே புது சூழல். இதில் இவன் வேறு இப்படி காயிந்தால் ?

எப்படியாவது இவர் முதல் கல்யாணம் பற்றி தெரிந்து ஆகணும் . அவங்க முதல் மனைவி மீதுள்ள வெறுப்பா? இல்லை அவங்களை மறக்க முடியாம கோபத்தில்  என் மீது கயறாரா என்று தெரிந்து ஆகணும் . இவர் கல்யாண விஷயம் அப்பாக்கு தெரியாமலா இருக்கும். பல கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பினாள்.. இப்போதைக்கு சித்தார்த் ஒன்றும் சொல்லபோவது இல்லை . இவர்களில் யாராவது பதில் சொன்னால் தான் முடியும் . 

அதிதி, கண்மணியிடம்  நெருக்கமாக பழகினாள். ‘அண்ணி’ என்ற போது “அண்ணி என்று கூப்பிட வேண்டாமே. உங்களை விட சின்ன பெண் ப்ளீஸ்! என் பெயரை சொல்லியே கூப்பிடுங்க”  என்றதை கேட்டு “அச்சோ! அண்ணா, அம்மா மட்டும் இதை கேட்டாங்க  நான் தொலைந்தேன்” .

பரவாயில்லையே! இவங்க  மனிதர்களுக்கு, அவங்க உணர்வுகளுக்கு எல்லாம்  மதிப்பு கொடுக்கறாங்களே! நான் நினைத்த அளவு,பயந்த அளவு இவர்கள்  ரொம்ப மோசம்  இல்லை .

எங்க கல்யாணம் அன்று வந்த  அத்தை லேடீஸ் கிளப் நண்பர்கள்  கூட்டம் தான் அப்படி போல!

அத்தை , அதிதி ,மாமா நன்றாகவே பழகறாங்க . இவர்கள் பேசினாலும் ,பேச வேண்டியவங்க பேசினா தான ஆகும் என்று அந்த சின்ன பெண்ணால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

“என்ன யோசனை அண்ணி !”

கண்மணி சிரித்து மழுப்பினாள் .

“ அண்ணி வேண்டாம் என்றால் ‘பாபி”

“இது ஓகே. எங்க, உங்க கூட பிறந்தவர். அவரை கல்யாணத்திலே பார்க்க முடியல ..”

“அவனா! அவன் லண்டனில் இருக்கான். அடுத்த வாரம் அம்மா ஆபரேஷன் போது வருவான்.”

சித்துவிடம் பேசவே கண்மணி பயந்தாள். எதற்கு எடுத்தாலும் திட்டினான் .

கண்மணி  இயற்கையிலே பொறுமையானவள், அனுசரித்து போகும் குணம்  கொண்டவள்  என்பதால் அனைவரிடமும் எளிதாக ஒட்டிக் கொண்டாள். தேவை இல்லாத சித்து கோபம் அவளை வாட்டியது.

என்னை கல்யாணம் செய்து கொண்டதிற்கு இவனுக்கு இத்தனை வெறுப்பா ?அப்படி என்ன தவறை செய்தேன் . தவறு இருந்தால் பொறுத்து போகலாம். தவறே செய்யாத போது? நியாயப்படி இவங்க மீது நான் தான் கோபப்படனும்.

சித்து அறைக்கு பக்கத்து அறையிலே தங்கிக் கொண்டாள் . கண்மணிக்கு எப்போதும்  தனியா தூங்கவே பயம். இதை போய் யாரிடம் சொல்ல. விடிய  விடிய விளக்கை  போட்டு  தான்  தூங்குவாள் .

அதிதி ஹாலில் இருந்தால்  சித்து அறை வழியே  அவள் அறைக்குள் நுழைந்துவிடுவாள். ஏதோ சித்து, பக்கத்து அறையில் இருக்கான் என்று தைரிய படுத்திக் கொள்வாள் . இரவு, சித்து வர லேட் ஆனால் அவன் வரும் வரை அவள் அறையிலே முழித்துக் கொண்டு இருப்பாள். அவன் அறைக்குள் நுழைந்த அரவம் கேட்டவுடன் தான் கண் மூடுவாள் .

ஒரு நாள் அதிதி ஹாலில் இருக்கும் போது சிறிது நேரம் பேசிவிட்டு படுக்க கிளம்பினாள். கண்மணி பக்கத்துக்கு அறைக்குள் நுழைவதை  பார்த்து “என்ன பாபி!”

“என்ன, என்ன?”

சித்து அறையை காட்டி “இது தான் உங்கள் அறை. அண்ணா அங்க தான இருக்கான். அந்த அறையில் என்ன வேலை!”

அச்சோ! இவள் இருப்பது தெரியாமல் மாற்றி நுழைந்துவிட்டேனா ?

“அது ஒன்றும் இல்லை அதிதி. என் புத்தகம் அங்கு வைத்து இருந்தேன் .அதை எடுக்க  போறேன்” என்று புத்தகத்துடன் வெளியே வந்தாள்.

மனதில் இந்த சித்தார்த் தூங்கி இருக்கணுமே! இல்லை என்றால் என்னை திட்டியே இம்சை செய்வானே என்று “குட் நைட்” சொல்லி அவன் அறைக்குள் நுழைந்தாள்.

சித்து அறையில் விளக்கு எரிவதை பார்த்த கண்மணி இவன் இன்னும் தூங்கலையா? இப்ப எதாவது சண்டை  போட்டால் அதிதிக்கு கேட்குமே ! ஹாலை திரும்பி பார்த்த படி உள்ளே நுழைந்தாள்.

அதிதி அவள் அறைக்குள் நுழைவதை பார்த்து தான்  இயல்பாக மூச்சு விட்டாள்.

எல்லாம் இவரால தான். இவருக்காக நான் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..

பாட்டு கேட்ட படி, கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்த சித்துவிடம் “நீங்க உங்க மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கீங்க …”

இவ, இப்ப எதுக்கு இங்க வந்தா?

“சொல்லட்டா …முதலில் இங்க இருந்து எப்ப கிளம்புவ என்று யோசித்துக்  கொண்டு இருக்கேன் .எப்ப என்று  பதில் சொல்லிவிடு ..”

“அப்படி எல்லாம் போறதா இல்லை! நான் என்ன தப்பு செய்தேன். எனக்கு ஒரு உண்மை தெரிந்து ஆகணும்”.

“என்ன உண்மை. உனக்கு சொல்லணும் என்ன அவசியம் இருக்கு”

 “இது நீங்க கட்டின தாலி. நான் உங்க பெண்டாட்டி . அதனால்!”

“அதற்காக எல்லாம் சொல்லானும் அவசியம் இல்லை .மஞ்சள் கயிறை எல்லாம் தாலி சொன்னா? இந்த கயிர் நம்மளை  இணைத்து விடுமா?”என்று நக்கல் அடித்தான்.

கண்மணி நிதானமாக “நாலு வேதம் முழங்க, அத்தனை பேர் முன்னிலையிலும், நீங்க எனக்கு கட்டினது தாலி தான். வெறும் நூலினால் ஆனா கயிர் என்று நினைத்தால் நீங்க தராளமா  இப்பவே கழட்டிடலாம். அதற்கு பிறகு ஒரு நொடி கூட உங்க கண்முன் நிற்க மாட்டேன் . உங்க வாழ்க்கையில் குறுக்கே வர மாட்டேன். இது உறுதி …”

இப்படி பேசினேன்  என்று என் வீட்டிற்கு தெரிந்தால் என்னை  வெட்டியே   போட்டிடுவாங்க! கண்மணி அப்படி சொல்லிவிட்டால் தவிர அவளுக்கு  உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஏற்கனவே என்னை, அவன் வாழ்க்கையில் இருந்து  கழட்டி விடனும் நினைப்பவனிடம் இப்படி சொன்னா சும்மாவா இருப்பான். நிம்மதி என்று  உடனே செய்திடுவானே.

***********

Advertisement