Advertisement

தூறல் 3.1:

அலுவலகத்தில் சித்தார்த் தேவிடம் புலம்பி தள்ளினாள். கல்யாணத்தை நிறுத்த என்ன வேலை செய்தாலும் நன்மையிலே முடிந்தது. பந்து அவனை நோக்கியே திரும்பி வந்தது .

சிவமிடம் அவன் புகழ் வளர்ந்து கொண்டே சென்றது. கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் ஜானகிக்கு ஆபரேஷன் என்று முடிவு செய்தார்கள். எல்லாரும் சேர்ந்து சதி செய்யறாங்க என்று திட்டினான் .

பல போராட்டங்களுக்கு பின் சித்து விரும்பாத  கல்யாண நாளும் வந்தது. கண்மணி ஊரிலே கல்யாணத்தை  சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவன் நண்பர்கள் தேவ், ஆனந்த ,கிருஷ்ணன் அவனுடனே ஊருக்கு வந்து இருந்தார்கள்.

“சித்து! உங்க மாமனார் வீட்டில்  ராஜ உபசாரம் செய்யறாங்க டா . இந்த காலத்தில் யாரு இப்படி மரியாதை  கொடுப்பாங்க சொல்லு .நீ ரொம்ப லக்கி” என்ற கிருஷ்ணனிடம்

“டேய்!  நான் அவளோட இன்று கண்டிப்பா பேசணும் டா! என்ன ஆனாலும் சரி. இதற்கு மேல் என்னால பொறுத்துக் கொள்ளவே  முடியாது”

“யாருடன் பேசணும் சித்து. என் மருமக கூடவா? இன்று ஒரு நாள் பொறுத்துக்கோ ராஜா! நாளை இரவு விடிய விடிய பேசு. யார் வேண்டாம் சொல்லறது .எக்கு  தப்பா எதாவது செய்து ஊர்காரங்க எல்லாம் தப்பா பேச போறாங்க!” என்று ஜானகி சிரித்தவுடன்,

அவன் அம்மாவிடம் முகத்தை திருப்ப முடியாமல் மனதில், ஒன்று முதல் பத்து எண்ணி கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டான். 

“டேய் கிருஷ்ணா! இங்க வா. கொஞ்சம் வேலை இருக்கு. தேவ்  உன்னை அங்கிள் கூப்பிட்டாரு பா .என்ன கொஞ்சம் பாரு” என்று ஜானகி அவன் நண்பர்களை நகர்த்தினாள்.

கோபத்தில் கையில் இருக்கும் செல் போனில் கண்மணியை அழைத்தான். அந்த புறம் சித்து நம்பரை பார்த்தவுடன் “என்ன மாப்பிளை சார், எங்க பெண்ணோட பேசாம இருக்க முடியலையா? இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சியம் நடக்கும். அப்ப தான் தரிசனம் கிடைக்கும். அது வரை கொஞ்சம் பொறுமையாக இருங்க. அப்பவும் தரிசனம் மட்டும் தான்” என்று அவள் தோழி சிந்து கிண்டல் செய்தாள்.

கண்மணி வெட்கத்துடன் “கொஞ்சம்  சும்மா  இருங்க டீ! எதோ அவசர தேவையா இருக்க போகுது” என்று அவள் குரல் அவன் காதில் தெளிவா விழுந்தது .

”அது எல்லாம் ஒன்றும் இல்லை கண்மணி. எல்லாத்துக்கும் ஆள் இருக்கு! உன்னிடம் பேச சாக்கு!” ஜானகி போலவே சிந்து “ நாளை இரவு  முழுதும் விடிய விடிய பேசுங்க! யார் வேண்டாம் சொல்லறது”

இவர்கள் இப்படி பேச,பேச கண்மணி கன்னங்கள், காது மடல் சூடாவதை அவளால் தடுக்க முடியவில்லை . கன்னங்கள்  ரூச் இல்லாமல் அந்தி வானத்தை போல அழகா சிவந்தது.

“எங்க கண்மணிக்கு வெட்கத்தை பாருங்க டா ” என்று கிண்டலில் ஈடுபட்டனர் .

“ மாப்பிள்ளை சார், கதிர் அண்ணனை அனுப்பறோம்” என்று அவள் செல் போனை ஒழித்து வைத்தனர் .

இத்தனை நாளா பேசல! இன்றைக்கு மட்டும் இந்த திமிர் பிடித்தவ  பேசிடவா போறா? என்று சித்தார்த் அவன் விதியை எண்ணி நொந்துக் கொண்டான். ஆறு மாதம் முன்பு இப்படி  மாட்டிக்  கொள்வான் என்று சொல்லி இருந்தால் அவனே  நம்பி இருக்க மாட்டான் .

 அவன் தங்கை அதிதிக்கு கண்மணியை பார்த்தவுடன் பிடித்து விட்டது . “அண்ணா! அண்ணி ரொம்ப அழகு. ரொம்ப கியூட்.  பயங்கர இன்னொசென்ட, அதிர்ந்து கூட பேசுவது இல்லை. . உன்னோட கோபத்தை  எல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வை. அவங்க தாங்க மாட்டாங்க”  என்றவுடன் அட கொடுமையே! இதை நான் எங்க போய்  சொல்ல, என்னை அதிர வைப்பதே வேலையா வைத்து இருக்காளே!

கண்மணி உன்னிடம் மட்டும் தான்  இப்படி என்று உனக்கு தெரியாது போல….

வாழ்க்கையில் எல்லாத்துக்கும் எளிதா தீர்வு கண்டு பிடிக்கும் எனக்கு, இதற்கு வழியே தெரியலையே என்று வருந்தினான்.

கல்யாணத்தை நிறுத்த எதாவது ஒரு வழி கிட்டுமா என்று மண்டையை பிடித்துக் கொண்டான் .

சித்துக்கு வழி கிடைக்குமா? இல்லை அவர்கள் கல்யாணம் நடக்குமா என்று பார்க்கலாம்?

கண்மணி என்ன தான் தைரியமா  சித்துவை எதிர்த்து பேசினாலும்,  எப்ப, என்ன செய்து கல்யாணத்தை நிறுத்துவானோ  என்று எந்நேரமும் உள்ளுக்குளே பயந்து கொண்டே தான் இருந்தாள் .

அவள் மூலம் கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை  என்று சித்துவும் பல வழிகளில்  முயற்சிகளை செய்து கொண்டு இருந்தான் என்று இவள்  அறிந்ததே!

கண்மணி  தோழிகள்  கிண்டல்  செய்து  கொண்டு இருக்கும் போது அவள் அத்தை மல்லி உள்ளே நுழைந்தாள் . “என்னங்கடீ! என் மருமகளை இப்படி கிண்டல் செய்யறீங்க. பாவம்  பெண். எப்படி  வெட்கப்படறா பாருங்க. நீ ரெடியா தேனு” .

கண்மணி மல்லியிடம் கலக்கமாக   “ என்னால் ஏன் இயல்பா இருக்க முடியல அத்தை. கொஞ்சம் பயமாவே இருக்கு .கை கால் எல்லாம் உதறுது. இந்த கல்யாணம் நல்ல படியா நடக்குமா அத்தை!”

“இது என்ன டா  கண்ணா கேள்வி! உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீ ஒன்னும் குழப்பிக்காத”

அவள் மனதில் தேவை இல்லாம எதிலோ சிக்கிக் கொண்டேனோ ?எப்படியாவது போராடி  இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாமோ?இனி என் படிப்பு ?

தோழிகள் சொல்வது போல இனி  படிப்பை தொடர முடியாதோ? மனதில் எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டாள்.

மண்டபத்தில், காலையில் இருந்து மணபெண்ணை பார்க்க என்று வந்த மாப்பிள்ளை வீட்டு கும்பலை பார்த்து கொஞ்சம் அரண்டு விட்டாள்.

ஊரில் கண்மணி குடும்பமும் செல்வாக்கான குடும்பம் தான் . அவர்கள் எந்த  இடத்திற்கு சென்றாலும்  சிறப்பு முதல்  மரியாதை கிடைக்கும். கிராமம் என்பதால் பல தட்டு மக்கள் இருப்பார்கள் . விசேஷத்துக்கு தகுந்தது போல அலங்காரம் செய்து கொண்டு போவார்கள். கண்மணி  அறிந்தவரை  ஊரில் இதுவரை இவர்கள் தான் பெரிய மனிதர்கள், மேல் தட்டு மக்கள் என்று எண்ணி வளர்ந்தவள், வந்தவர்களை பார்த்து மிரண்டாள். ஏதோ தனித்து நிற்பது போல உணர்ந்தாள்.

அனைவரின் கழுத்திலும் பல லட்சம் மதிப்புள்ள வைரங்கள் மின்னியது. அவர்கள் பேச்சும், தோரணையும், makeup எல்லாம் பார்த்து  இவர்களுடன் ஒத்து போக முடியுமா? அவர்களுக்கு ஈடா என்னால்  பேச முடியுமா? பழக முடியுமா? இந்த சித்தார்த் வேற எப்ப கொதற என்று தான்  காத்துக் கொண்டு இருக்கானே? தப்பான முடிவு எடுதிட்டமோ என்று பயந்தாள்.

அவள் முகத்தை கண்டு மல்லி “இப்ப அப்படி தான் இருக்கும் கண்மணி. போக போக எல்லாம் சரியா போகும் .எல்லா பெண்களுக்கும் இதே நிலை தான். புது இடம், புது மனிதர்கள் .கொஞ்சம் பழகினவுடன் சரியா போய்டும்” என்று அவளை அனைத்து சமாதனபடுத்தினாள்.

“வெளியே பாரு, அத்தனை கூட்டம். வந்து  இருக்கும் கூட்டத்தை பார்த்தால் அசந்து போய்டுவ. சுத்து வட்டாரத்தில் ஒரு ஜனம் பாக்கி இல்லை. உங்க மாமனாருக்கு  பெருமை  தாளால.. ஒருத்தருக்கும் ஒரு குறையும் வைக்க கூடாது என்று உங்க அப்பா பம்பரமா சுழன்று வேலை செய்வதை பார்க்கணுமே. உங்க அப்பா அசத்தீடாறு போ!  பந்தி போட்டு மாள முடியல. சாப்பாடு ருசி பற்றி சொல்லாத ஆள் இல்லை. உங்க மாமா பெருமையா பேசிக் கொண்டே போனாரு .

யோகக்காரி கண்ணு .என் கண்ணே பட்டிடும். அத்தனை அழகா இருக்க” என்று அவளிடம் பேசி மெதுவா  இயல்பாக்கினாள்.

நிச்சயம் போது சித்து கண்மணிக்கு  வேண்டா வெறுப்பாக  வைர மோதிரம் அணிவித்தான்.

சித்தார்த் கோபம் கண்மணியை வாட்டியது . சிரித்தால் எப்படி இருப்பாரு? என்ன முயன்றும் கற்பனையில் கூட சிரித்த முகம் தோன்றவில்லையே! எப்படியாவது அவர்  கோபத்தை குறைக்க முடியுமா யோசித்தாள்.

கல்யாணம் நின்றால் தான் சிரிப்பான். என்ன, அவனை சிரிக்க வைக்கலாமா? என்று அவள் மனசாட்சி குட்டியது ..

“அக்கா” என்று கண்ணன் அவள் மாமா மகன் ஷ்யாம் சுந்தருடன் , உள்ளே நுழைந்தான்.

சந்தோஷமாக “வா, இத்தனை நேரம் எங்க போன?”

“ஹே! யாரு டா இது? இத்தனை அழகா இருக்காங்க! எதோ ஹாலிவுட் ஸ்டுடியோ உள்ளே நுழைந்துவிட்டோமா?  தலை கிர்ருனு சுத்துதுடா கண்ணா! என்னை கொஞ்சம்  பிடி” என்று ஷ்யாம் போலியாக  அலறினான்.

“என்னை சும்மா கிண்டல் செய்யாத. எனக்கு ஷையா இருக்கு ஷ்யாம்” .

“அட, எங்க வீட்டு தேனுக்கு  வெட்கம் எல்லாம் பட தெரியுமா? இது எப்போதில் இருந்து டா” என்று ஷ்யாம் விசில் அடித்தான் .

” சே, நானே உன்னை கல்யாணம் செய்து இருக்கலாம் போல !” என்று போலியாக வருத்தப்பட்டான்.

அவன் விரல்களை அவன் முகம்  முன் நீட்டி ‘உன் சான்ஸ் மிஸ் செய்துட்ட ஷ்யாம். சித்துக்கு தான் லக் .யோகக்காரன். மச்சக்காரன். அவருக்கு ஜாக்பாட் அடிச்சு இருக்கு. பம்பர் பரிசா என் மாமா பெண்ணை அள்ளிக் கொண்டு போயிட்டாரு. அவரும் சும்மா ஹீரோ போல தான இருக்காரு”.

 அவளுக்கு தெரியும் ஷ்யாம் சும்மா விளையாடுறான் என்று . சிரித்துக் கொண்டு அவன் செய்யும் சேஷ்டைகளை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

அமைதியா சிரித்த முகமா இருக்கும் கண்மணியை பார்த்து எப்போதும் போல வியந்து ” உன் முகத்தில் எப்போதும் புன்னகை நிலைத்து இருக்கணும் கண்மணி. எந்த வேளையிலும் உனக்காக  நான் இருக்கேன் மறந்திடாத!”  என்றவுடன் தலை ஆட்டி சரி என்றாள்.

ஷ்யாம், அந்த ஊரில் உள்ள சிறந்த  கல்லூரியில் விரிவுரையாளரா இருக்கிறான். கண்மணியும், ஷ்யாமும் சிறந்த நண்பர்கள் போல தான் பழகிக் கொள்வார்கள். ஷ்யாமும் அழகன் தான். அவன் பேச்சாலே எல்லாரையும் கவர்ந்துவிடுவான்.

நிச்சயம் முடிந்து சித்தார்த் மணமகன் அறையில் , “டேய், என் நிலைமை தெரிந்தும் கொஞ்சமாவது உதவறீங்களா? கல்யாணத்துக்கு சாப்பிடவா வந்தீங்க?” என்று கிருஷ்ணனை நோக்கி தலையணை பறந்தது.

“கேட்ச் !”

“எதாவது உருப்படியா ஐடியா கொடுக்கறீங்களா? இப்ப நிச்சயமே முடிந்த விட்டது . என்னால இதற்கு மேல் பொறுமையா இருக்கவே முடியாது. அம்மாக்காக கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?”

“வரேவா, நாளைக்கு கல்யாணம் வைத்துக் கொண்டு கேட்கும் மில்லியன் டாலர் கேள்வி” என்று அவன் நண்பன் தேவ் நக்கல் செய்தான்.

முகத்தில் வேதனையுடன் “மறுபடியும் என்னால முடியாது டா !எத்தனை அவமானம். எத்தனை கேலி ,கிண்டல்.உங்களுக்கு எல்லாம் தெரியும் தான டா. இவ எப்படி இருப்பா என்று  எனக்கு எப்படி தெரியும் டா! இவள் புரிந்து கொள்வாளா?”

ஆனந்த், “இதற்கு தான் அன்றே பேசி பாரு சொன்னேன். ஆனா நீ, கல்யாணத்தை  நிறுத்துவதிலே குறியா இருந்த!”

சித்தார்த்  முறைப்பதை பார்த்து ” அவனை ஏன் டா முறைக்கிற !அவன் சொல்வது சரி தான. அன்று நடந்ததில் உன் தப்பு ஒன்றுமே இல்லை. டேய், சிஸ்டர் ரொம்ப நல்லவங்க. எனக்கு தெரியும். அந்த மாதிரி இனி ஒரு போதும்  நடக்காது டா. நான் உறுதியா சொல்லறேன்” என்று கிருஷ்ணன் கூறினான்.

“ஏற்கனவே நான் தப்பு செய்தது போல உருதிகிட்டே இருக்கு டா . இப்ப தான் எல்லாம் என் கண் முன்னே  நடந்தது போல இருக்கு . இந்த நிலைமையில்  நான் கல்யாணம் செய்து கொண்டால் என் மனமே என்னை கொன்று விடும் டா! என்னை கட்டிக்க போரவளுக்கும் இந்த தண்டனை அவசியமா? அவங்க சும்மா விட மாட்டாங்க . நான் போய் அவளை பார்த்து பேசிக்கிட்டு வரேன்! இனி உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை.”

கிருஷ்ணன்  பதற்றமாக “சித்தார்த், கொஞ்சம் புரிந்து தான் பேசறியா? இப்ப போய் என்ன பேச போற? நீ சொல்வது போல உனக்கும் சிஸ்டருக்கு நிச்சயம் முடிந்து விட்டது. இப்ப வந்த கூட்டத்தை பார்த்த ல. உன் மாமனார் சுத்து வட்டாரத்தில் எத்தனை பெரிய மனுஷன் . 

நாளை  விடிந்தவுடன் கல்யாணம் வைத்துக் கொண்டு, முட்டாளா டா ! அம்மா நிலைமை தெரிந்தும் இப்படி பிடிவாதம் பிடித்தால் என்ன செய்ய? நிச்சயம்  வரை வந்த பெண்ணுடைய கல்யாணம் நின்று போனால் யாரு டா கல்யாணம் செய்துகொள்வாங்க? உனக்கும் தங்கச்சி இருக்கு என்று மறந்திடாத” என்று கோபமானான்.

“நீ என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக்கோ! நான் கண்டிப்பா பேசி ஆகணும்” தேவ் வேகமாக கதவு அருகே சென்று தாழ்  போட்டான். அதை கண்டு எரிச்சல் கொண்டு பால்கனி சென்று மறுபடியும் கண்மணிக்கு  செல் போனில் தொடர்பு கொண்டான் .

இந்த தடவை கண்மணியே எடுத்தாள்.

அவளே அவனை அழைக்க தான் கையில் செல் போனுடன் குளியல் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

செல் அடித்தவுடன் நம்பரை கண்டு விரக்தி புன்முறுவல் பூத்து மெதுவாக  போனிற்கு வலிக்குமோ என்று மெதுவாக “ப்ளீஸ்! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. உங்களிடம் நான் எதோ விளையாட்டு தனமா நடந்து கொண்டேன். எனக்கு வேற வழி தெரியல. இப்ப   கூட கல்யாணத்தை நிறுத்த சொல்ல தான் அழைத்து இருக்கீங்க என்று நல்லாவே தெரியும். இனி,  நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்தினால் எங்க அப்பா தாங்க மாட்டார். அவர் பேர் கெட்டால் ஊருக்குள்ளே நாங்க தலை காட்ட முடியாது. எங்க கௌரவமே இதில் தான் அடங்கி இருக்கு. என்னால எங்க அப்பாக்கு எந்த தலை குனிவும் வந்திட கூடாது, என்னை மன்னிச்சிடுங்க! ப்ளீஸ் !”

“அத்தனை சொல்லியும் இப்படி செய்தால் எப்படி?” என்று சித்து காட்டமாக கேட்டவுடன்

கண்மணி அழாத குறையாக “உங்களாலே முடியாத போது என்னால் மட்டும் எப்படி முடிந்து இருக்கும் சொல்லுங்க? ”

சித்து மனதில், அன்று அப்படி நக்கல் செய்து பேசினா? இன்று இப்படி கெஞ்சறா? அவளுடன் தான் பேசுறோமா? குரல் இத்தனை சாப்டா இருக்கு .

சத்தம் போடாமல் அழுத்தமாக “இப்ப பேசுவதை அன்று  பேசி இருக்கலாம் ல. அத்தனை திமிரா பேசிட்டு போன. என்னால முடிந்ததை செய் சொன்ன. செய்ய போறேன்? இப்ப நீயே நிறுத்தும் படி செய்யறேன்” .

கண்மணி, மணி ஆச்சு .வந்து படு வா ?காலையில் மணவறையில் தூங்கி வழிய போற?

“வந்துட்டேன் அத்தை” என்று குரல் கொடுத்த படி “ப்ளீஸ் !எனக்கு வேற வழி தெரியல? என் எல்லாம் முயற்சியும் வீண்!.”

“நான் சொல்லும் போது உனக்கு மூளை எங்கே போச்சு?அப்பவே கேட்டு இருக்கலாம் ..என்னால உன்னை கல்யாணம் செய்து கொள்ளவே முடியாது! புரிஞ்சுகோ? எனக்கு .. நான்…..” என்று திணறிய போது

“நீங்க யாரையோ காதலித்தீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும்” என்று அவசரமாக கூறினாள். கொஞ்சம் தயங்கிய படி தைரியமாக  “அது ,உங்க காதல் இறந்த காலமா  இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ..”

சித்தார்த் “ what ? காதல் ? என்னுடைய காதல்? காதல் விஷயம் உனக்கு எப்படி”

“ப்ளீஸ், அதுக்கு எல்லாம் நேரம் இல்லை ..”

கதவு தட்டும் ஓசை கேட்டு “ஒரு நிமிஷம் அத்தை, வந்திடறேன்”

அவள் மாமா மகன் ஷ்யாம் சித்துக்கு காதல் தோல்வி  அதனால் கல்யாணத்தை வேண்டாம் சொல்கிறான் கூறி இருந்தான்.

சித்து பொறுமை இழந்து “இன்னும் ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கோ ? எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு” என்னும் போது “என்னது?” என்று அதிர்ச்சியில் செல் போனை பக்கெட் தண்ணீரில் தவறவிட்டாள்.

அவள் வேண்டும் என்றே தொடர்ப்பை துண்டித்தாள் என்று சித்து கோபமானான் .

எதாவது சேர்ந்து திட்டம் போட்டால் வேலை ஆகுமோ என்று பல  முறை முயற்சி செய்தான். கண்மணி இவன் அழைப்பை எடுக்காமல் ,வேண்டும் என்றே அவனை தவிர்க்கிறாள் என்று கோபத்தின் உச்சிக்கே சென்றான். நேரா அவள் அறைக்கு சென்று கன்னத்தில் ஓங்கி ஒன்று  கொடுக்கலாம் என்று கூட யோசித்தான் .

அவளை அதற்கு பிறகு யாரும் தனியாகவே விடவில்லை. இள வயதினருக்கு ஏற்ப கிண்டல் கேலியில் இறங்கினார்கள் . கண்மணி வேண்டிய தனிமை அவளுக்கு கிடைக்கவில்லை. யோசிக்க முடியாமல்  கோபத்தில் சிவந்தாள். அதை அவள் தோழியர் கூட்டம் வெட்கம் என்று எடுத்துக் கொண்டது .

காதல் என்று தெரியும். அதனால் தான் கல்யாணம் வேண்டாம் சொல்லறாரு நினைத்தது தப்போ!  இப்ப கல்யாணம் என்கிறாரே ?

ஒரு வேளை, இவர் கல்யாணத்தை நிறுத்த தான அப்படி சொல்லி இருப்பாரோ? அப்படி தான் இருக்கும் என்று அவளுக்குள் சொல்லிக் கொண்டாள். அவன் அப்படி சொன்னதில் இருந்து ஏனோ அவள் உற்சாகம் எல்லாம் தொலைந்தது. உள்ளுக்குள் அவள் மனம் ஆயிரம் தடவை உலகை சுற்றி வந்துவிட்டது. அவளால்  எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை .

இதை யாரிடம் கேட்க முடியும். அப்பாக்கு, இது எல்லாம் தெரியுமா? இன்று, இப்ப, இந்த நேரத்தில் இதை கேட்க போய் பெரிதா எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்தாள்.

ஷ்யாமை அழைத்தால் தொடர்பில் இல்லை என்று வந்தது.

ஒரு புத்தகம் கூட அடுத்தவரிடம் வாங்கி படிக்க பிடிக்காத எனக்கு, ஏற்கனவே திருமணம் ஆனவர் கணவரா? கல்யாணமானவன் என்ற எண்ணமே அவளை வருத்தியது. அப்ப அவங்க மனைவி …நான் ரெண்டாம் தாரமா ? இது சட்டப்படி குற்றம் தான…

சித்து சொன்னதை நினைத்தே அவள் எண்ணம் சுழன்றதால் கொஞ்சம் கூட கண்களின்  இமைகள் மூட மறுத்தது.

யாருக்கும் காத்திராமல்  அடுத்த நாள் காலை  அழகா விடிந்தது. கல்யாண மண்டபத்திற்கே உரிய பரபரப்பு அனைவரையும் தொத்திக் கொண்டது .

கண்மணி வாடின முகம், சிவந்த கண்கள்  அவளை காட்டிக் கொடுத்தது. சுற்றியும் உள்ள அனைவரும் என்ன ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு, உடம்பிற்கு முடியலையா? என்று கேள்வி கணைகளால்  துளைத்தனர். அப்படி  இருப்பது  அவளின் இயல்பு இல்லையே?

அனைவரின் கேள்விக்கே பயந்தே இயல்பா இருக்க முயற்சித்தாள். அதில் வெற்றியும் கண்டாள்.

காலையில் ஷ்யாமிடம் விஷயத்தை சொன்னவுடன்  “கண்மணி ,நடப்பது எல்லாம் நன்மைக்கே நினைச்சுக்கோ! உண்மை தெரியாமல்  இப்ப நாம  ஒன்றும் செய்ய முடியாது. உறுதியா சொல்லறேன்!  எனக்கு தெரிந்து வேற எதுவும் இல்லை. சித்தார்த்துக்கு எப்படியோ? உனக்கு இது தான் முதல் கல்யாணம்.”

ரொம்ப சாமர்த்தியமா பேசி  கண்மணியை குழப்பி இருக்கான், உன்னை விடுவதாக இல்லை சித்து  என்று சிரித்துக் கொண்டான்.

கண்மணி வருத்தமடைவது பார்த்து மனதில் சித்தார்த்திடம் நானாவது  பேசி இருக்கணுமோ என்று ஷ்யாம்  வருந்தினான்.

“எதையும் நினைக்காமல் சந்தோஷமாக இரு. ஒவ்வொரு தருணத்தையும் என்ஜாய் செய். இவை எல்லாம் வாழ்வில் திரும்பவும் கிடைக்காத பொக்கிஷங்கள் . எதா இருந்தாலும் உன் பொறுமையை கை விடாத. கண்டிப்பா மாமா தீர விசாரிக்காம எதையும் செய்ய மாட்டாரு ? நான் சீக்கிரம் கண்டு பிடித்து சொல்லறேன் தேனு”

மணப்பெண் கோலத்தில் இருக்கும் கண்மணி “எப்ப? எல்லாம் முடிந்தவுடனா ஷ்யாம்” என்றவுடன் ஷ்யாமுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .

கண்மணி மணப்பெண் கோலத்தில், அளவான ஒப்பனையில்  வானுலக  தேவதையாக , பேரழகியாக ஜொலித்தாள். கிளி பச்சை நிற புடவை, ஊதா நிற பார்டரில்  வானத்து தேவதை, வழி தவறி பூமிக் வந்ததோ என்று வியக்கும் வண்ணம் அன்ன  நடையிட்டு  மெதுவாக  மணமேடைக்கு   முன்னேறினாள்.

ஜானகிக்கு மருமகளை கண்டு பூரிப்பு .

தூரத்தில் கண்மணி வருவதைக் கண்ட  சித்து, நான் அத்தனை சொல்லியும் சந்தோஷமாக இருக்கிறா என்றா எத்தனை திமிர் . என்னை என்ன லூசு நினைத்துக் கொண்டாளா?

அவன் அன்னை முகத்தையும், அப்பா முகத்தையும் கண்டு கோபத்தை கட்டு படுத்திக் கொண்டான் .

அதிதி அவள் அண்ணா பக்கத்தில் அமர்ந்து கொண்டு “அண்ணா, கொஞ்சம் அண்ணிய திரும்பி பாரேன். பார்த்தவுடன் விழுந்திடாத! நிஜமா, இப்படி நான் எதிரே பார்க்கவில்லை. எனக்கே உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு. அத்தனை பேர் கண்ணும் அவங்க மேல் தான் “என்று கிசுகிசுத்தாள் .

பட்டிக் காடு, பட்டிக் காடு. மோகினி பேய் போல அலங்கார செய்து கொண்டு வந்து இருப்பா? அதை பார்த்து தான் அதிதி அலறாலோ !அப்படி தான்  இருக்கும். இவ இயற்கையிலே நல்லா தான இருந்தா . இப்ப இவளை யாரு மேக்கப் போட்டு வர சொன்னது .

அவளை பார்த்தவுடன் சித்து கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது என்றால் பொய்யில்லை. எப்ப ,என்ன நடக்குமோ என்று கண்மணி பயந்து கொண்டே தான் சித்து அருகில் அமர்ந்தாள்.

இனி அவள் வாழ்வில் தூறல் மழையா? இடி மழையா பொறுத்து தான் பார்க்கணும் .

Advertisement