Advertisement

தூறல் 3.2:

பரவாயில்லை. நல்ல வேலை, நான் பயந்த அளவு இல்லை .இந்த பட்டிக்காடு பைங்கிளிக்கு  மேக் அப் பொருத்தமா தான் இருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

கண்மணி, இவன் என்ன செய்ய போறானோ? எப்ப ,என்ன நடக்குமோ? என்று  ஓரக்கண்ணால் அப்பப்ப சித்துவை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். சித்து  விறைப்பாக  ஐயர் சொல்வதை  திரும்ப சொல்வதை பார்த்து, மனதில் மிலிடரி ஆபிசர்  நினைப்பு . துணிக்கு வெச்சு இருந்த கஞ்சியை எடுத்து குடிசுட்டானோ! அப்படி தான் இருக்கும்.

போடோ எடுப்பவர் “சார், கொஞ்சம் சிரிங்க! இப்படி பாருங்க. லைட்டா திரும்புங்க. தலை சாயித்து மேடம் பார்த்து கொஞ்சம் லுக் விடுங்க!  ரொமண்டிக் லுக் ! ஒரே ஒரு  ஷாட்! ப்ளீஸ்” என்று நேற்று  மாலையில் இருந்து சித்துவிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்.

சித்து முறைத்த முறைப்பில் அவன் அதற்கு  பிறகு சித்துவிடம் கேட்க  அவனுக்கு என்ன பைத்தியமா?

புகைப்படம் எடுப்பவர்கள், நேற்றில் இருந்து  சித்து கொஞ்சமாவது சிரிப்பானா, ஒரு புகை படம் பிடித்துக் கொள்ளலாம் என்று அவன் பின்னாலே போராடி அலைந்து  கொண்டு தான் இருக்கிறார்கள் .எங்கே!

கண்மணி மனதில் உள்ள கலக்கம் எல்லாம் மறைத்து போடோகிராபர் சொல் படி அழகா சிரித்து போஸ் கொடுத்தாள் . எது எப்படி இருந்தாலும் இது எனக்கான நாள் என்று சந்தோஷமாக இருந்தாள்.

அவள் சிரித்து போஸ் கொடுப்பது, மேலும் சித்து கோபத்தீக்கு எண்ணெய் ஊற்றியது . சிரிப்பை  பாரு. இவனுங்க செய்யற அலம்பலில் கமேராக்கு மட்டும்  கண் இருந்தா கண்டிப்பா அழுதிடும் . என்னை மதிக்காமல் இத்தனை தூரம் வந்து இருக்கிறாள் என்றால் இவளுக்கு என்ன தைரியம் என்று அவளை முறைத்துக் கொண்டு இருந்தான். இவளுக்கு  இந்த சித்து யார் என்று காட்டறேன்!

தேவ், ஆனந்தனும் அவன் அருகில் வந்து “டேய், ஜின்ஜெர் சாப்பிட்ட குரங்கு போல இல்லாமல் கொஞ்சம்  சிரியேன். கீழே இருந்து உன் முகத்தை பார்க்க சகிக்கள. பயமா இருக்கு..பக்கத்தில் சிஸ்டர் எப்படி இருக்காங்க பாரு. அதை பார்த்தாவது எப்படி சிரிக்கணும் கத்துக்கோ” என்ற போது

 “மரியாதையா, ஒழுங்கா ஓடி போய்டுங்க! இருக்கும் கோபத்தில் எதாவது செய்திட போறேன்” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் .

“டேய் ! இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம். அம்மா தான் சொல்லி அனுப்பினாங்க” என்ற போது “சே! போங்க டா! மனுஷன் நிலைமை தெரியாம படுத்தாதீங்க!”

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கண்மணி இவனை சிரிக்க  வைக்கவே தனியா கிளாசுக்கு அனுப்பனும் போல இருக்கே என்று நொந்து கொண்டாள்.

மணமேடையில் பொறுமை இல்லாமல் அமர்ந்து இருந்த சித்து நண்பனிடம் “எல்லா வேலையும்  கொஞ்சம் சீக்கிரம் முடிக்க சொல்லுங்க டா. எத்தனை நேரம்” என்ற போது ஐயர் “தம்பி, காலம் முழுக்க  நீங்க ரெண்டு பேரும் ஒன்றா, நல்லா ச்ஷேமமா, சந்தோஷமா, குழந்தை  குட்டியோட  வாழனும். இதிலேயும் அவசரபட்டா எப்படி” என்று மேலும் அவன் கோபத்துக்கு தூபம் போட்டார் .

ஐயர்  மந்திரத்தை மட்டும் சொல்லாமல்,   அந்த வேதத்தை  எதற்கு சொல்கிறோம், அதனால் என்ன பலன் என்று  இருவருக்கும்  விளக்கினார். முதலில்  கோபமாக,  வேண்டா  வெறுப்பாக   சொல்லிக்  கொண்டு வந்த சித்து  அவர்   சொல்வதை  கேட்டு முழு ஈடுபாடுடன் ஆர்வமா கூறினான்.

“கெட்டி மேளம் ,கெட்டி மேளம்” என்றவுடன்  முதலில் தயங்கிய சித்து, கண்மணி கண்களை சந்தித்தவுடன் அவள்  சங்கு  கழுத்தில் தாலி கட்டினான் . சித்து அறியாமல் அவன் மனதில் ‘இந்த  கண்மணி ,என் வாழ்க்கை முழுதும்  எனக்கு துணையா வரணும், வருவாளா?’ என்று கேள்வியாக  மூன்று முடிச்சு போட்டான்.

கண்மணி இறைவனிடம் இந்த தாலி என் கழுத்தில் என்றும்  நிலைத்து இருக்கணும் என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் அப்பா, அம்மா தாரை வார்த்துக் கொடுக்கும் போது கண்மணி கண்ணில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது .அவள் தந்தை சிவம் கூட  கலங்கிவிட்டார்.

அதை பார்த்த சித்தார்த், பிடிக்காத கல்யாணம் செய்ய  நான் தான அழுகனும். இங்க உல்டாவா இருக்கே ! இவளை அடித்து கொடுமை செய்தது போல எதுக்கு இப்படி அழுகறா? இந்த ஆளும் சேர்ந்து இப்படி அழுகிறாறு…என்ன கொடுமை சித்து என்று புலம்பிக்கொண்டான்.

இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்து, விட்டா அப்பவே எங்கயாவது ஓடி போய்  இருப்பான்.

தேவ் பக்கத்தில் இருந்து “அழுகாத சொல்லு டா! சிஸ்டர் பாவம்” என்ற போது அவனை முறைத்து  அவள் அழுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் .

இதற்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்கு மகனே !

அவள்  பாட்டி  வந்து  அதட்டினவுடன் தான் கண்மணி அமைதியானாள். கண்மணி மனதில் இப்படி அழுகிறேன்! ஒரு ஆறுதல் வார்த்தை வாயில் இருந்து வந்துதா பாரு! நான் என்னமோ கிளிசரின் ஊற்றிக் கொண்டு அழுவது போல வேடிக்கை பார்க்கிறார் . அப்புறம் பார்த்துக்கிறேன் என்று கருவினாள்.

ஐயர் சொல்வதை சித்து அட்சரம் பிசகாமல் அப்படியே செய்தான் “வகிட்டில் குங்குமம் வெச்சு விடுங்க!”

 குங்குமம் வைத்து, அவள் சிவந்த கலங்கின  கண்களை சந்தித்தவுடன்  அவனை அறியாமல் அவள் கன்னம் அருகில்  கை சென்றவுடன் இழுத்துக் கொண்டான். எதற்கு என்று யோசிக்க முடியாமல் தடுமாறினான் .

“குழந்தை கையை பிடிச்சு, மணவறையை மூன்று சுத்து சுத்தி வாங்கோ !”

அவன் அருகில் எந்த குழந்தையும் காணவில்லை. எந்த குழந்தை கை பிடிக்க என்று அவன் யோசிப்பதை பார்த்த ஆனந்த்  “டேய் !எதுக்கு டா இப்படி ஆடு திருடின கள்ளன் போல முழிக்கிற? குழந்தை என்று  உன்  வைப் கண்மணியை தான் சொல்கிறார். அவருக்கே  உன்னை  பற்றி  தெரிந்து  இருக்கு  பாரு  .விட்டா  ஓடி  போய்டுவ, கையை பிடித்து போக சொல்லறாரு!”

“என்னை இப்படி டார்ச்சர் செய்யவே அந்த ஜானகி இப்படி உங்களை  பாடி கார்ட் வேலை செய்ய சொன்னாங்களா? ஏன் டா படுத்தறீங்க !என்னை படுத்துவதினால் உனக்கு பிடிக்காத பெண், அதுவும் இதை விட குக்கிராமத்தில்  இருந்து  தான் உனக்கு பெண்டாட்டியா  வர போறா! அதுவும் கூடிய சீக்கிரம்” என்று சித்தார்த் சாபமிட்டான் .

“டேய், இது அநியாயம். சாபத்தை வாபஸ் வாங்கு டா! உனக்கு ஏன் டா இத்தனை நல்ல எண்ணம்” என்று ஆனந்த் கெஞ்சுவதை பார்த்து சித்தார்த் சிரித்துவிட்டான்.

அம்மி மிதித்து ,மெட்டி அணிவிக்கும் போது சித்தார்த், கண்மணி கால்  விரல்களை வேண்டும் என்றே திருகி  கிள்ளினான். கண்மணி வலியால் அலறிய போது ஜானகி “டைட்டா இருக்கா கண்மணி .கொஞ்சம் பொறுத்துக்கோ. டேய் பார்த்து கண்ணா! அவ கண்கள் எப்படி கலங்கிடுச்சு பாரு” .

“அண்ணா! இந்த கிரீம் போட்டு மெட்டி மாட்டிவிடு” என்று அதிதி வந்த போது கண்மணி சிநேக பார்வை பார்த்து சிரித்தாள்.

கண்மணி சந்தோஷமாக குடத்தில் கை விட்டு மோதிரத்தை தேடும் போது இவ மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் ‘இப்ப  எடு பார்ப்போம்’ என்று  அவ கைவிரல்களை பற்றிக் கொண்டான் . அவனை முறைத்து, அவன் கைகளை அழுந்த கில்லி மோதிரத்தை எடுத்து அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

மாலை மாற்றும் போதும்  கண்மணி அவனுக்கு தலை காட்டாமல் போக்கு காட்டினாள். இந்த சின்ன பிசாசு என் உயிரை வாங்குதே . நண்டு போல இருந்து கொண்டு செய்யும் வேலையை பாரு! இது எல்லாம் செய்யணும் யார் அழுதா? என்ன சடங்கோ!

‘கண்மணி குனியாத? இப்பவே குனிந்தா அப்புறம் காலம் முழுதும்  மாப்பிள்ளை குட்டிக் கொண்டே இருப்பார்’ என்று அவள் தோழிகள் கிண்டல் செய்தனர் .

கிருஷ்ணன் “என்ன டா மச்சி, எல்லாத்திலேயும் சிச்டரிடம் தோற்று போகுற! இப்பவே  இப்படி கவுந்துட்டாயே?” என்று  சொன்ன கோபத்தில்

கண்மணிக்கு  மட்டும் கேட்கும் படியா “ஒழுங்கா குனிந்து மாலை வாங்கிக்கோ! இல்லை, மண்டபம் என்று பார்க்காமல் என் மடியில் அமர வைத்து மாலை போடுவேன் .எப்படி வசதி” என்று மிரட்டினவுடன் கண்மணி அசையாமல் அவன் மாலையை வாங்கி கொண்டாள்.

இவளை கெஞ்சினா வேலை ஆகாது போல !

தடபுடல் விருந்து நடந்து கொண்டு இருந்தது .

சித்தார்த், ஜானகி, வெற்றியிடம் “கிளம்பலாமா ?என்னால இதுக்கு மேல் பொறுமையா இருக்க முடியாது. உங்க உடம்பும் ஒத்துக்காது.போகலாம்”.

“இப்படி அவசரபட்டால் எப்படி சித்தார்த்!” என்ற ஜானகியிடம் “இதுவரைக்கும் நீங்க சொன்னதை கேட்டாச்சு .இனி நான் சொல்வதை தான் கேட்கணும். எதவும் பேசாதீங்க. எதாவது  பேசினா இப்படியே கிளம்பிடுவேன்” என்று மிரட்டினான் .

வெற்றியும், ஜானகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்த போது  “மாப்பிளை, விருந்து முடித்து சீக்கிரம் கிளம்பலாம் .மணி ஆச்சு ..குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போன சரியா இருக்கும்”  என்று சிவம் வந்தார் .

இந்த மனிதன் வேற என்  நிலைமை புரியாம மாப்பிள்ளை ,மாப்பிளை  உயிரை வாங்கிறானே. இப்பவே இதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன் .நாலு கொடுத்தா தான் பேசாம இருப்பான்.

சித்து மனநிலையை அறிந்த வெற்றி , ‘கொஞ்சம் பொறுமையா ,அமைதியா இரு’ என்று கண்களால் வேண்டினார் .

வெற்றி மெதுவாக “சித்து, நீ  இன்று, இங்க தான் தங்கணுமாம் .காப்பு கட்டினா ஊரை விட்டு அனுப்ப மாட்டாங்களாம். நாங்க இன்று கிளம்பறோம். நீ நாளை காலை கிளம்பி வா” .

அடக்கப்பட்ட கோபத்தில் “என்ன அப்பா சொல்லறீங்க ,நான் சொல்லும் போது எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டு இப்ப இப்படி செய்தால், பேசினா என்ன அர்த்தம். என்னால இதற்கு மேல் பொறுமையா இருக்க முடியாது. நீங்க வந்தா வாங்க! இல்லை என்றால் இங்கயே தங்கிக்கோங்க. நான் கிளம்பறேன்”.

அவன் பேசுவதை கேட்க சிவமிர்க்கு சங்கடமாக இருந்தது

ஊரில் பஞ்சாயத் தலைவரா, எல்லாத்தயும் மிரட்டி பழக்கபட்ட மனிதருக்கு சித்தார்த் கோபம் புதிதா இருந்தது. இந்த  இடத்தில் வேற யாரவது இருந்தால் நடப்பதே வேற!

பணிவாக   “இங்க மாப்பிள்ளைக்கு எதாவது அசௌரியமா இருக்கா? என்ன என்று சொல்லுங்க! எதா இருந்தாலும் உங்களுக்காக செய்திடலாம்! இன்னும் கொஞ்சம் நேரம். அப்புறம் வீட்டுக்கு போய்டலாம்.”

என்னை இப்ப, இங்க இருந்து  கிளம்ப  விட்டா போதும். அது தான் நீங்க செய்யும் பெரிய வசதி என்று மனதில் சிவமை திட்டிக் கொண்டு இருந்தான் .

“டேய் முனியா இளநீர் கொண்டு வா” என்று அங்கு சென்ற வேலை ஆளை நோக்கி குரல் கொடுத்தார்.

சித்து கோபபார்வையை கண்டு “சாப்பாடு சாப்பிடறீங்களா? விருந்து தயார்! அதற்கு தான் அழைக்க வந்தேன் “என்று ஏசியை அதிகம் செய்தார் .

எதற்கு? இவர் பெண், அந்த திமிர் பிடித்த உலக அழகி, இவர் வீட்டு  சாப்பாடு சாப்பிட  மட்டும் தான் அவளை  கல்யாணம் செய்து இருக்கேன் சொல்வதற்கா?

“மாப்பிள்ளை, இன்று இரவு உங்க  சடங்கிற்கு ஏற்பாடு செய்து இருக்கு. இன்று நீங்க  இங்க தான்  தங்க வேண்டும். ஒரு நாள்  மட்டும்  கொஞ்சம் பொறுத்துக்கோங்க  .. இது எங்க வீட்டு வழக்கம். நாளை நீங்க ஊருக்கு கிளம்பலாம். இன்றே நல்ல நாள் குறித்து கொடுத்து இருக்காங்க .தங்கச்சியிடம்  கேட்டு தான் முடிவு செய்தோம்.”

என்ன சடங்கு. ஒரு வேலை இந்த மோதிரம் எடுப்பது போல எதோ விளையாட்டோ! எதுக்கு நல்ல நாள்.

முதலில் எதுக்கு என்று குழம்பிய சித்து  எங்க பர்ஸ்ட்  நைட், முதல் இரவை பற்றி தான்  சொல்லறாரா? கிழிஞ்சுது போ! என்று தலையை பிடித்துக்கொண்டான் .

அவன் அம்மாவை தான் தங்கச்சி என்று சொல்லறாரு இவனுக்கு தெரியல …..

இவர்  தங்கச்சியிடம் கேட்டு எதுக்கு என் சடங்கை முடிவு செய்யணும் . என்னிடம் தான கேட்கணும். குடும்பமே இப்படி என்னை இம்சை செய்யுதே! என்னை பார்த்தா இவருக்கு எப்படி தெரியுது. என் விஷயத்தில் இவர் யாரு முடிவு செய்ய! இது ஒத்து வராது ..இவர் பெண்ணை இவரே வைத்துக்கொள்ளட்டும். நிம்மதி .

ஜானகி ,சித்து முகத்தை கண்டு இவன் எதாவது பெரிய சண்டை தொடங்கும் முன் வெற்றியிடம் சிவமை வெளியே அழைத்து  செல்லுமாறு கண்ஜாடை காட்டினாள்.

அவன் அன்னையிடம் “ஏன் மா, நாம தான மாப்பிள்ளை வீடு. நம்ம சொல் படி தான் கேட்கணும், நம்ம வழக்க படி இன்றே ஊருக்கு போகணும், எதாவது சொல்ல வேண்டியது தான? அவர் சொல்வது எல்லாம் இப்ப ரொம்ப அவசியமா?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“என்ன கண்ணா பேச்சு. அவர்களுக்கு இது எல்லாம் தான் முக்கியம் . அவங்க வீட்டில் தான் இது எல்லாம் …”என்று சொல்ல வந்ததை சித்து கோப பார்வை பார்த்து நிறுத்தினாள்.

“என்ன அம்மா நீங்களும் இப்படி அபத்தமா பேசறீங்க .பெண்ணை கட்டி கொடுத்தாச்சுல..அப்புறம் என்ன! இனி எல்லாம் என் இஷ்டம் தான். என்னால இந்த கிராமத்தில்  கண்டிப்பா இருக்க முடியாது .ஒரு வசதியும் இருக்காது . இப்ப நீங்க பேசறீங்களா? இல்லை நான் பேசட்டா” என்றவுடன்

மகன் எதாவது எடக்காக செய்வான், பாவம் சிவம் அண்ணா! இவன் ரொம்ப தான் படுத்தறான்  என்று ஜானகி “நானே கேட்கிறேன்” என்று  நழுவினாள்.

அலுவலக வேலையை செல் போனிலே பார்த்துக் கொண்டு இருந்ததால் அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. எங்க  போனாங்க இவங்க. இந்த சிவமிடம் பேச இத்தனை நேரமா?அவன் நண்பர்களுக்கு அழைத்து “எங்க டா ஓடி ஒளிந்து கொண்டீங்க” என்றவுடன் “நீ அங்க சடங்கில் பிசியா இருந்த! அது தான் நாங்க  அப்பவே கிளம்பிட்டோம் டா!”

“என்னது கிளம்பீடீங்களா! துரோகிக டா! உங்களை ……. இப்படி தான் சொல்லாம கிளம்புவீங்களா? நீங்க எல்லாம் நண்பனுங்க !.. ரொம்ப நல்லா இருப்பீங்க. உங்களை எல்லாம் நேரில் கவனித்துக் கொள்கிறேன்”

முகத்தை உர் என்றே வைத்து, அலுவலகத்தில்  செய்ய வேண்டிய முக்கியமான  வேலைகளை பற்றி பேசிக் கொண்டு இருந்த போது உள்ளே  நுழைந்த சிவம் இவன் என்னை தலையால தண்ணீர் குடிக்க வைக்கிறானே! இப்ப என்ன சொல்லுவானோ பயந்து “மாப்பிளை ! சாப்பிட போகலாம் ”.

அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. இப்ப எது பேசினாலும் வேளைக்கு ஆகாது என்று பேசாமல் அவர் பின்னால் சென்றான்.

கண்மணி தோழிகளுடன் சிரித்து பேசி முடித்து சந்தோஷமாக சித்து அருகில்  வந்தாள். அதை பார்த்த சித்தார்த் அவளிடம்  ” என்ன ரொம்ப சந்தோஷமா  இருப்பது போல இருக்கு! உன்னை என்ன செய்யறேன் பாரு! எதுக்கு டா இவனை கல்யாணம் செய்தோம் என்று நீ வருந்துவதை பார்த்து சந்தோஷப்படணும்”

“ஆஹா !அப்படியா! அதை அப்புறம் பார்க்கலாம். காலையிலும் வெறும் பாலை  மட்டும் கண்ணில் காட்டி டிபனை கொடுக்காம  ஏமாத்திட்டாங்க! எல்லாம் எனக்கு பிடித்த ஐடமா போட சொல்லி இருந்தேன். இப்பவும் உங்களுடன் தான் சாப்பிடனும் கண்டிஷன் . வந்தா ராஜ மரியாதை கிடைக்கும். இல்லை என்றால் இப்பவும் பட்டினி தான். அங்கயும் அதே கதி தான் தெரியும்” .

நான் என்ன சொல்லறேன் இவ என்ன பேசறா? என்று சித்து குழம்பினான்.

அவன் பார்வையை கண்டு உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே இயல்பாக இருப்பது போல “நானும் உங்க சண்டையில் கலந்து கொள்ளனும் முடிவோட இருக்கேன்! கொஞ்சம் கோஆபரேட் செய்யுங்க ப்ளீஸ்! தெம்பா சண்டை போடலாம் “

இவ என்னை வைத்து காமடி, கீமடி செய்யறாளா? அப்படி தான் இருக்கும் .

சாப்பிடும் போது வந்த அவள் அத்தை மகன் ஷ்யாமை பார்த்து “அத்தான் !அத்தான்!” குரல் கொடுத்தாள்.

அவனை கூப்பிடுவதாக எண்ணிய சித்தார்த்திற்கு, குடித்துக் கொண்டு இருந்த பாயசம் புரை ஏறியது.

பற்களை கடித்த படி “அத்தான் கூப்பிடாத!”

ஒ! இவரை கூப்பிடுவதாக நினைத்துக் கொண்டாரா? அவனை சீண்ட எண்ணி இவரை கூப்பிட்டதாகவே இருக்கட்டும். ஷ்யாமும் அந்த பக்கம் போயாச்சு .

“அத்தானை, அத்தான் கூப்பிடாமல் எப்படி கூப்பிடமுடியும் .நீங்களே சொல்லுங்க அத்தான். அப்ப என்ன சொல்லி அழைக்க !”

பல்லைக் கடித்து “டேய் சித்து கூட சொல்லு. அத்தான் வேண்டாம்.”

சிரித்துக் கொண்டே அவனிடம் “ சே சே, அது மரியாதை இல்லை . கல்லானாலும் கணவர் இல்லையா?”

இவ நம்மளை கல்லு என்றா  சொல்லறாரா?

ஷ்யாம் அருகில் வருவதை பார்த்த சித்தார்த் அட, இவன் எங்க இங்க . சித்து தொழிலில் எது ஆரம்பித்தாலும் குடைச்சல் கொடுக்கும் ஷ்யாம் இவள் மாமன் மகனா? இது கூட்டு சதி போல இருக்கே!

“ஒ சித்தார்த்! congrats. நீங்க தான் எங்க கண்மணியை கல்யாணம் செய்யும் அதிர்ஷ்டசாலி  என்று எனக்கு முன்பே தெரியாமல் போச்சே ! தீசிச்காக வெளியூர் சென்று ரெண்டு நாள் முன்பு தான் திரும்பினேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு” .

சித்து நக்கலாக “அதனால் என்ன? இப்ப தெரிந்துகோங்க!”

முதலில் இருந்தே ஷ்யாமிர்க்கும், சித்துவிர்க்கும் ஆகாது .இப்ப கண்மணி அவனிடம் சிரித்து பேசுவதை பார்த்து சுத்தமா பிடிக்காம போனது.

சாப்பாடு சாப்பிடும் போது போடோகிராபர்  “சார், கொஞ்சம் அந்த ச்வீட் எடுத்து மேடம்க்கு ஊட்டி விடுங்க!” என்று அழாத குறையாக கெஞ்சினார் .

அதை எல்லாம் சித்து கண்டு கொள்பவனா? என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக்கோ என்று சாப்பிடுவதில் மும்மரமாக இருந்தான்.

போடோ எடுப்பவர், எத்தனை கல்யாணம் பார்த்து இருக்கேன். இவர மாதிரி  ஒருத்தரையும் பார்த்தது இல்லை . சிரிக்க காசு கேட்டா கூட கொடுத்திடுவேன்! படுத்தறான்.

இந்த ஆளு மாமனார் வேற  போடோ மட்டும் ஒழுங்கா வரல, சல்லி பைசா கூட கொடுக்க மாட்டேன் என்று மிரட்டறாரு? என்ன டா செய்ய? எல்லாம் போடோ ஷாப் தான் செய்யணும் என்று துணைக்கு வந்த நண்பனிடம்  புலம்பி தள்ளினார்.

வீட்டிற்கு கிளம்பும் போது, சிவம் பெருமையாக “வண்டியில் ஏறுங்க மாப்பிள்ளை! நாம நம்ம வண்டியிலே கிளம்பலாம்”.

 புது கார், ரிபன் கட்டி ரோஸ் வைத்து அலங்காரம் செய்து இருந்தது.

ஹுண்டாய்  காரை பார்த்து ” இதிலேயா! என்னால் மாட்டு வண்டியில் வர முடியாது. என் வண்டியில் தான் வருவேன்” என்று அவன் வண்டியிலே ஏறினான்.

இந்த ஊரில் கார் வைத்து இருப்பவர்கள் வெகு சிலரே!  கண்மணி வீட்டில் எல்லாரும் ஒன்றாக போனால் தான் காரை எடுப்பார்கள். இல்லை என்றால் ஆளுக்கு ஒரு டூ  வீலர் மட்டும் தான். இவர்கள் கல்யாணத்தை முன்னிட்டு சிவம், மருமகனுக்கு  என்று ஸ்பெஷலா  பழைய மாருதி காரை கொடுத்து புத்தம் புதிய  ஹுண்டாய் காரை வாங்கி இருந்தார். இதுவும் ஒரு வகை பெரிய கார் தான்.

கிராமத்திலே இருப்பதால் அவர் எண்ணப்படி போக்குவரத்துக்கு, எல்லாம் ஒன்றாக பயணம் செய்ய  தான் கார், அதற்கு இதுவே பெரிது என்ற எண்ணம் அவர்களுக்கு. அதை போய் மாட்டு வண்டி சொல்லறான் என்று கண்மணிக்கு கோபம் .

சிவமிர்க்கும் மனதில் அதே எண்ணம் தான் .

ஷ்யாமிடம் “மருமகன் ஆடி கார் இதை விட கொஞ்சம் பெரிசு. அதனால் தான் அப்படி சொல்லறாரோ! இன்னும் ரெண்டு லட்சம் அதிகம் செலவு செய்து இருந்தால் அவர் காரை போலவே  வாங்கி இருக்கலாமோ ?” என்றார் பாவமாக.

ஷ்யாம் சிரித்தபடி, இதை உன் மருமகன் கேட்டான் நொந்து போய்டுவான் .. இந்த கார் எங்கே! அது எங்கே..

“அந்த மணி, அவன் கடையில இந்த காரை வாங்கணும் என்று, புது மாடல்! உங்க மாப்பிளைக்கு கண்டிப்பா பிடிக்கும் ஏமாத்திட்டான்” என்று கார் டீலரான மணியை திட்டிக் கொண்டு  இருந்தார்.

சிவம் எது சொன்னாலும் சித்து அதற்கு எதிரா எல்லாவற்றையும் செய்தான் .

அப்படியே சென்னை கிளம்பி போய்டலாம் என்று நினைத்தான் . கிளம்பும் முன் அவன் அம்மா கெஞ்சி கேட்டதை நினைத்து  கோபத்தை கட்டுபடுத்தி கண்மணி வீட்டுக்கு  கிளம்பினான் .

கண்மணி வண்டியில் அமைதியாக அமர்ந்து இருப்பதை பார்த்து  “வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்து இருக்க? உங்க வீட்டுக்கு போ சொன்னா என் கார் தானா உன் வீடு வாசலிலே போய் நின்றுவிடுமா? என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்க? நான் உனக்கு டிரைவரா?”

இப்ப எதுக்கு கோபம்,என்ன சொல்ல வரார்  என்று கண்மணி முழித்தாள். ஒரு வேலை  என்னை இவர் வண்டியை ஓட்ட சொல்லராரோ? பழைய கார் என்றால் சரி. வண்டி ஓட்ட தெரிந்தாலும் இந்த புது காரை எப்படி? என்று தீவிரமா  யோசிப்பதை பார்த்து “என்ன? நான் சொல்வது காதில் விழுகுதா? இல்லை உங்க அப்பா  சிவம், அவருடைய செவிட்டு பெண்ணை  கல்யாணம் கட்டி வைத்துவிட்டரா? என் உயிரை வாங்கவே எங்க அம்மா தேடி பிடித்து கட்டி வைத்து இருக்காங்க. அவங்களை சொல்லணும்”

“இங்க  பாருங்க சும்மா என்னை பேசுவதை விடுங்க. யாரு செவிடு !உங்க வீட்டில் இந்த செவிட்டு பெண்ணை தான் கல்யாணம் செய்யணும் சொன்ன போதே வேண்டாம் சொல்லி இருக்கலாம் ல . இப்ப வந்து செவிடு, ஊமை, நொண்டி என்று! நானா வந்து உங்களை கல்யாணம் கட்டிக்கிறேன் சொன்னேன்” .

அச்சோ! இவ  பழைய பல்லவியை  ஆரம்பித்து விடுவாளே!

அவளை செவிடு சொன்ன கோபத்தில் “நீங்க சென்னையில் உங்க வீட்டில் பேசினாலும் எனக்கு இங்க கேட்கும். “இப்ப கூட” அவன் நெஞ்சை தொட்டு காண்பித்து ” நீங்க ராட்ஷசி திட்டினது நல்லா, திவ்யமா  கேட்டது!”என்று சண்டை போட்டாள்.

அவள் பேசுவதைக் கேட்டு கொஞ்சம் அரண்டுவிட்டான் .நான் ராட்ஷசி இவளை மனதில் திட்டாமல்  வெளியே திட்டிவிட்டேனோ?

“எதையும், தெளிவா விளங்கும் படி கேட்டா தான புரியும். வண்டி ஓட்டறவங்களை எல்லாம்  டரைவர் சொன்னா சமையல் செய்பவர்களை குக்கர் என்றா சொல்ல முடியும்” என்று அதி முக்கியமான கேள்வியை அவனிடம் கேட்டாள்.

ஒரு நிமிடம் துணுகுற்றாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல்

“என்ன? என்னை கிண்டல் செய்வதா நினைப்பா? இந்த நக்கல் எல்லாம் என்னிடம் வேண்டாம். உன் வீட்டுக்கு வழி சொல்லு” என்று கண்மணியிடம் எரிந்து விழுந்தான்.

“ஒ ஒ ஒ .இதுக்கு தான் தலையை சுற்றி மூக்கை தொட்டீன்களா ?அப்பவே ஒழுங்கா எனக்கு புரியும் படி கேட்டு இருக்கலாம். ஓகே விடுங்க!” உதட்டை பிதுக்கி  “உங்களை போலவே எனக்கும் ரூட் தெரியாது.”

“What ??? ?என்னது? ரூட் தெரியாதா?”

“அது என்ன, ஆ வூ நா அதிர்ச்சியா what  கேள்வி? கண்  தெரியவில்லை, காது  கேட்கவில்லை, இல்லை, இப்ப கொஞ்ச நேரம் முன்பு எனக்கு தாலி கட்டின உங்களை தெரியாது என்றா சொன்னேன். ரூட் தெரியாது தான சொன்னேன்.உங்களுக்கும் தெரியாது தான?”

 இவளுக்கு அந்த  சிவமே தேவல? அவராவது கண்களால், மீசையால தான் மிரட்டிராறு? இவ பேசியே கொள்ளறாலே?

“என்ன விளையாடரீயா? இப்ப எப்படி போக?”

“எங்க ஊரை விட்டு இந்த மண்டபம் ரொம்ப தூரம். எனக்கும் இந்த இடம் புதுசு. அப்பா எல்லாம்  முன்பே கிளம்பியாச்சே! இதுக்கு தான் அவர் அத்தனை தடவை சொல்லி இருப்பார்” என்று குட்டு வைத்து

 “இவர் இருக்க பயம் ஏன்?” என்று செல் போனை ஆட்டி  அதன் மூலம்  வழியை கண்டு பிடித்தாள். சித்து மனதில்  அட சே, இவளுக்கு தெரிந்தது கூட எனக்கு தோணவில்லையே!

“நானும் யோசித்தேன்! ஆனா உங்க பட்டிக்காடு கிராமத்திற்கு எல்லாம் இதில்  ரூட்  இருக்கும் என்று தெரியாம போச்சே” என்று அவளுக்கு குட்டு வைத்தான் .

“இங்க பாருங்க, பட்டிக்காடு  சொல்வது  இதுவே கடைசி முறையா இருக்கட்டும்” என்று எச்சரித்தாள்.

“உன்னால  என்ன செய்ய முடியும். அப்படி தான் சொல்லுவேன்!” என்று பேச்சை முடித்துக் கொண்டான். அதற்கு  பிறகு கண்மணி அவனிடத்தில்  பேச முயலவே இல்லை.

அவள்  வீட்டுக்குள் வண்டி நுழைந்தவுடன்  ‘இந்த சித்தார்த் கடித்து கொதருவதற்கு முன்பு  தப்பித்து வந்துவிட்டோம்’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டு வண்டி நிற்கும்  முன்பு வேகமாக இறங்கினாள்.

பல நாள் கழித்து எல்லாரையும் பார்ப்பது போல முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அவள் நிலைமையை கண்டு ஷ்யாம் சிரித்து விட்டான் .

***************

Advertisement