Advertisement

சித்து “நாலு மணியா” அலறி  “இன்னும் அரை மணி  நேரத்தில்  நம்ம அறைக்குள் இருக்கணும்” என்று அவனும் வேகமாக  உதவினான் . அவன் வேகத்தை கண்டு கண்மணி கண்ணில் நீர் வர சிரித்தாள்.

அவளை முறைத்து “இப்படி சிரிக்காத ! சாப்பாடு வேண்டாம் , ஒன்றும் வேண்டாம்  தூக்கிட்டு  போய்டுவேன் !மணி ஆச்சு” என்று அவளையும் அவசரபடுத்தினான். சொன்ன படி இருவரும் சேர்ந்து  வேகமாக சமையல்  செய்து முடித்தனர்.

உணவு மிகவும் ருசியா இருந்தது .வேகமாக  சாபிட்டான் .”பசியினால் ருசி தெரியவில்லையா?அப்படி  தான் இருக்கும்”  என்று கிண்டல் செய்தான் .

கண்மணி, “பச்சை மிளகாய்  தரேன்! பசியில் ருசிக்காமல் போய்டுமா பார்க்கலாம்” .

“என் ஜில்லுக்கு எதுக்கு கோபம்! சமையலில் இப்படி அசத்தற பட்டு குட்டி!” என்று அவளுக்கு முத்தத்தை வாரி  வழங்கினான் . “சமையல் செய்தது என்  கை! கைக்கு பரிசு”

“கை வலிக்கு மருந்து வாய் வழியா தான சாப்பிடறோம் !அது போல தான் !”

“தத்துவம், உங்களை”  என்று பல்லை கடித்தாள்.

ஹால் சோபாவில் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு “ஷ்ரவனுக்கு கிடைத்த தண்டனை பெரிய தண்டனைங்க!”

உனக்கு எப்படி தெரியும் ! நான் சொல்லவே இல்லையே! தேவ், கிருஷ்ணன் சொன்னாங்களா ?

“இல்லையே நான் நேரிலே  பார்த்தேனே?”

“என்னது! நீ மும்பை வந்து இருந்தியா ? நான் உன்னை பார்க்கவில்லையே!”

“கடிவாளம் போட்ட குதிரை போல கண்ணை மூடிக் கொண்டு போனால்? நான் காலை ஆறு மணி பிளைட்டிலே அண்ணனுடன் கிளம்பிவிட்டேன்!”

“எதுக்கு இத்தனை ரிஸ்க் எடுத்த தேனு ! ஷ்ரவனுக்கு கிடைத்த தண்டனை சரி தான் ! அவனால் தீப்தி எத்தனை துன்பம் அனுபவித்தால் என்று எனக்கு தான் தெரியும். ஒழுங்கா சாப்பிடாமல்,தூங்காமல் எந்நேரமும் புலம்பிக் கொண்டு …….

அவ அப்பாவும், அண்ணனும் ரவுடி தான்.  ஆனால் அவள் மீது உயிரையே வைத்து இருந்தார்கள் . அவளை ஏமாற்றினதுக்கு இந்த தண்டனை கம்மி தான்! இவனுக்காக உதவிய எனக்கு துரோகம் செய்ய பார்த்தானே !

கண்மணி என்னை பொருத்தவரை எங்க அப்பா சொல்லி கொடுத்தது போல, பணம் சம்பாதிப்பது எளிது, மனிதர்களை சம்பாதிப்பது கடினம்! அதனால் தான் நட்புக்கு அத்தனை மரியாதை தருவேன்! ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சை போடு பழமொழி உண்மை தான்!”

அன்று முழுதும் கண்மணியை  எங்கேயும் நகர விடாமல் அவன் கைவளைவிலே வைத்துக் கொண்டான் .

மாலை தேவ்,கிருஷ்ணன் வந்தவுடன் இரவு உணவுக்கு வெளியே சென்றார்கள். கண்மணியை புகழ்ந்து தள்ளினார்கள். அவர்கள் கிளம்பும் போது தேவ் ”  சீக்கிரம் திரும்பி வா டா ! ஒரு மாதம் மேல்  செய்திடாத?”

“என்ன சொன்னான் கண்மணி !”

“தெரியும் போது தெரிந்தால் போதும்.”

காரில் வீடு திரும்பும் போது சித்து சந்தோஷமாக “என்னை உனக்கு இவ்வளவு பிடிக்குமா தேனு !”

“பிடித்து என்ன செய்ய ? என்னால் உங்களை கண்டிப்பா  பிரிந்து இருக்க முடியாது உணர்ந்து, என்  வாழ்கையை காப்பாற்ற இத்தனை வேலையை செய்ய  வேண்டியதா போச்சு ! இப்ப காப்பாற்றியும் பிரஜோயனம் இல்லை போல இருக்கே ! அந்த கரீனா தான் உங்க கண்ணிற்கு தெரியறா?”

“பாவம் டீ அவ ! அவள் மீது உனக்கு எதுக்கு இத்தனை பொறாமை” என்றவுடன் கண்மணி விட்டால் பார்வையாலே எரித்து இருப்பாள் .

வீட்டுக்கு போனதும்  “நான் எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பறேன்” என்று பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தாள்.

“அப்ப நான்!”

“நீங்க உங்க அம்மா வீட்டில் தான இருக்கீங்க !”

“கண்மணி ,தேனு ! ப்ளீஸ் இது அநியாயம்! ஒரு நாள், வெளிச்சத்தை , இல்லை, ஒரு நாள் இல்லை ஒரே ஒரு  இரவு மட்டும்  கொடுத்து கண்ணை பிடிங்கிக் கொள்வது  போல செய்யற ? உனக்கே நியாயமா? நாளைக்கு நாம ரெண்டு பேரும் போகலாம் . நானே அழைத்து கொண்டு போறேன்!”

“இல்லை, எனக்கு இப்பவே  கிளம்பனும் !”

“இப்பவே வா !”

“கடைசி பிளைட் 10.30 மணிக்கு !”

சித்து பாவமாக “இன்று இருந்து கொண்டு நாளை கிளம்பலாமா?”

“முடியவே முடியாது ! உங்களுக்கு வேண்டும் என்றால் கரீனாவை  வர சொல்லுங்க!”

“ச அவ முகம் கூட நியாபகம் இல்லை . உனக்கு அது தான் கோபமா ! அன்று அவளை பார்த்து வாந்தி தான் எடுத்தேன் ! உன்னை வெறுப்பேற்ற தான் அப்படி சொல்லி சீண்டினேன்!”

“இல்லை நம்ப மாட்டேன் !”

“சத்தியமா கண்மணி!”

“சரி கிளம்புங்க மணி ஆச்சு !”

“நல்லா பழி வாங்கற  தேனு! அங்க  போய் தோட்டம், ஆத்தா ,தாத்தா சொல்லி கொண்டு திரிந்தால் எனக்கு கெட்ட கோபம் வரும் ! வேண்டும் என்றால் அப்படியே ஊட்டி போய்டலாமா? எனக்கு உன்னுடன் தனியா இருக்கணும். நம்ம ரிசார்ட் இருக்கு! ப்ளீஸ் இதுக்காகவாது சரி சொல்லு! அலம்பல் செய்யாத ஜில்லு ! எனக்காக சரி சொல்லு செல்லமா?”

 கண்மணி சரித்து பேசாமல் கிளம்பினாள்.

“ஹே, இண்டர்நஷனல் ஏர்போர்ட் எதுக்கு போறோம் ! அப்போது பார்த்து செல்லில் மெசேஜ் வந்தது. சிரித்துக் கொண்டு “உங்க வீட்டை அமெரிக்காவில் உள்ள ஹவாய்க்கு மாற்றிவிடீர்களா?”

கண்மணி அதிர்ச்சியா “உங்களுக்கு எப்படி ?”

“எப்போது மாற்றுனீங்க! MR. சிவம் கூட சொல்லவில்லை. மாப்பிள்ளையை கண்டு கொள்ளவே மாடீங்கிராறு!”

இவன் உண்மை தெரிந்து பேசறானா? இல்லை போட்டு வாங்கறானா? இது வரைக்கும் தைரியமா வந்தாச்சு! இனி என்ன செய்ய !முதல் தடாவை விமான  பயணம் என்று ஏற்கனவே பயந்துக்  கொண்டு இருந்தாள். இந்த லட்சணத்தில் இவனுக்கு சர்பரைசா இருக்கட்டும் என்று இந்த ஏற்பாடு வேற ! இனி என்னால் முடியாது .

சித்துவை பாவமா பார்த்து கையில் இருக்கும் பாஸ்போர்ட் கொடுத்த போது அவன் கிண்டலாக “இப்ப எல்லாம் ஈரோட் போக கூட பாஸ்போர்ட் தேவை என்று  தெரியாமல் போச்சே !”

அவள் முகத்தை கண்டு, தோளை சுற்றி கை போட்டு அனைத்து , தைரியம் கொடுத்து  உள்ளே சென்றான் . பிளைட் ஏறும்  வரை எல்லாம் வேகமாக நடந்தது.

சீட் பெல்ட் போடும் சாக்கில் அவளை சீண்டி “என்ன போகலாமா ?”

“உங்களுக்கு எப்படி ! நான் சொல்லவே இல்லையே?”

“பட்டிகாடே ! என் பாஸ்போர்ட் எடுத்த போதே சந்தேகம் கொண்டேன்! நீ ஏர்போர்ட் வாசலில்  முழித்துக் கொண்டு இருக்கும் போது  டிராவெல்  ஏஜென்ட்டிடம் இருந்து travel  details, மெசேஜ் வந்தது! என்ன  பார்க்கிறியா?”

May this be

the most romantic trip ever…

May you both enjoy it

to the fullest,

and come back with

loved memories in your heart!

Happy honeymoon!

உங்க அண்ணனும் மெசேஜ் அனுப்பி இருக்கான்”

“இந்த கதிர் அண்ணாக்கு என் மீது எத்தனை நம்பிக்கை பாருங்க!”

“உங்க அண்ணன் ஒன்று அப்படி அடிக்கிறான், இல்லை பாச மழையால் இப்படி அடிக்கிறான் !ரெண்டுமே தாங்க மாடீங்குது!”

கதிர் தான் சித்து -கண்மணி ஒரு மாத பயணமாக  ஹவாய்க்கு ஹனிமூன் செல்ல ஏற்பாடு செய்து இருந்தான் . சர்பரைசா இருக்க வேண்டும் என்று பார்த்து செய்தான் .

சித்துக்கு  ஏற்கனவே விசா இருந்ததால் கண்மணிக்கு மட்டும் எடுத்தனர் . கேஸ் முடிந்தவுடன் தான் கண்மணி கிளம்புவேன் என்று கூறி விட்டாள்.

“அண்ணா! நீ அவரை பேசினதுக்காக  இந்த  பயணத்தை ஏற்பாடு செய்யறையா? செலவு தான ?”

“இல்லை தேனு! முன்பே இதற்காக சித்தப்பாவிடம் பணம் கொடுத்து விட்டேன். நடுவில் தான் பல பிரச்சினை. மாப்பிளையை  அப்படி பேசினது  எனக்கே சங்கடமா தான் இருக்கு . நான் மன்னிப்பு கேட்டேன் சொல்லு. பயணம் முடித்து மாப்பிளையுடன் கண்டிப்பா ஊருக்கு வந்து நாலு நாள் தங்கணும்” என்று கேட்டுக் கொண்டான் .

பிளைட்  மேலே பறக்கும்  போது அவன் கைகளை அழுந்த பற்றிக் கொண்டு ஷஷ்டி கவசம் கூறினாள்.

அவள் காதோரமா “என்ன பட்டிகாடே, பயமா இருந்தா இந்த அத்தானை கட்டி பிடிதுக்கோ !”என்று  கிசுகிசுத்தான் .

அவனை  ஆசையாக அனைத்துக் கொண்டு காதல் பார்வை பார்த்தாள். “இப்ப இப்படி செய்தால் என்ன செய்வது ஜில்லு!”

“அது உங்க சாமர்த்தியம்” என்று வம்பு செய்ததைக் கண்டு கன்னத்தை பிடித்து அழுந்த முத்தம் பதித்தான் . சுற்றி முற்றியும் பார்த்து  பிசினஸ் கிளாசில் ஆள்  இல்லாதததால் அவள்  இதழையும்  சேர்த்து சிறை செய்தான் .

விமான பணிப்பெண் இவர்களை கண்டு வாழ்த்தி சிரித்து விட்டு நகர்ந்தாள்.

“சித்து, நிஜமா அன்று, அறையில்  ஒன்றும் நடக்கவில்லை தான?”

“நேற்று நடந்தது எல்லாம் உனக்கு மறந்து போச்சா! பரவாயில்லை. ஒரு மாதம் இருக்கே ! நான் சலிக்காமல் சொல்லி தரேன் . குருவை மிஞ்சும் சிஷ்யையாக போற”

“நான் அது கேட்கல !”

“கண்மணி, என் வாழ்க்கையில் வந்த ஒரே பெண் நீ தான் .. என் நிழல் கூட அடுத்த பெண் மீது பட அனுமதித்தது இல்லை . என் கனவில் வந்த பெண்ணை தான் வர்ணித்தேன் .அது நீ தான் ஜில்லு ..சத்தியம்! அந்த பெண் பெயர் கூட தெரியாது !நானா எதோ பெயரை சொன்னேன்”

அவள் கூலாக “அது தான் எனக்கே தெரியுமே! உங்க வாயால கேட்கணும் தான் இத்தனை போராட்டம் . என் மனதுக்கு அப்ப தான் புரியும்”

“என்ன? தெரிந்துமா கேள்வி! எப்படி தெரியும் !”

“அன்றே உங்க நண்பன், அந்த கரீனா திட்டிவிட்டு, கறாராக பணம்  வாங்கி விட்டு  போனதை சொல்லிவிட்டார்” என்று அவனை கலாய்த்து சிரித்தாள்.

சித்து முகம் போன போக்கை பார்க்கணுமே !

“உன்னை! இதற்கு எல்லாம் சேர்த்து தண்டனை தர போறேன் ! இனி வரும் பிறவி எல்லாம் நீ தான் எனக்கு பெண்டாட்டி !”

“அச்சோ ,போர் அடிக்குமே !”

“போர் அடிக்காமல் பார்த்துக்க  வேண்டியது என் பொறுப்பு” என்று கன்னடித்தவுடன் ” ச, மோசமானவன் டா நீ! சரியான திருடன் ”  என்று அவன் கையில் சரண் புகுந்தாள். அவனை இறுக்கி  அனைத்து ஐ  லவ் யு சித்து” 

“ஒவ்வொன்றாய்  திருடுகிறாய்  திருடுகிறாய்

யாருக்கும்  தெரியாமல்  திருடுகிறாய்

முதலில்  என்ன  கண்களை .. கண்களை ..

இரண்டாவது  என்ன  இதயத்தை .. இதயத்தை

மூன்றாவது .. முத்தத்தை

“என்று சித்து பாடியவுடன்

“ச்சே!போதும் ! எதாவது மாற்றி பாடி மானத்த வாங்காத டா” என்று அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். “இங்க யாருக்கு வேண்டும் .எனக்கு இங்க” என்று உதட்டை குவித்து காண்பித்தான் .உங்களை ……..

“ஐ லவ் யு  ஜில்லு ! தேனு ,குட்டிமா ,கண்ணமா ,கண்மணி ..என் செல்ல குட்டி ,சக்கர கட்டி …”

இவர்கள் இது போல் என்றும்  சந்தோஷமாக இருக்க வாழ்த்தி விடைபெறுவோம் ..

முற்றும் .

Advertisement