Advertisement

21.2:

சித்துவை அவன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டு  இருந்த கண்மணி, பொறுமை இழந்து அவனுக்கு அழைத்தாள்.

கண்மணி நம்பரை  கண்டு துள்ளி குதிக்காத குறை தான். அவனை பேச விடாமல் “இன்னும் என்ன கோபம். நான் தான் கிளம்பிட்டேனே !மதியத்தில் இருந்து எத்தனை தடவை அழைக்க !”

அதிர்ச்சியா “என்னது ? நீ அழைத்தாயா? கோபமா?உன் மீதா? வரவே வராது ! நான் சைலென்ட் போட்டு இருந்ததை கவனிக்க வில்லை !”

பல்லை கடித்து “எதை தான் கவனித்தீர்கள்!”

“கண்மணி, உன்னை நான் உடனே பார்க்கணும். பேசணும் !”

“நீங்க மனது வைத்தால் முடியுமே!”

“அது எப்படி ?”

“அது அப்படி தான் ! நான் முக்கியமான பைலை நம்ம அறை பெட் மீது  மறந்து வைத்து  விட்டேன் ! அதை எடுத்து கொஞ்சம் படித்து சொல்லறீங்களா? ப்ளீஸ் சித்து !

நான் அப்புறமா கூப்பிடறேன் ! படித்து அந்த ப்ரஜெக்ட் பிடித்து இருக்கா சொல்லுங்க!  உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். உடனே  அமெரிக்கா போக சொல்லறாங்க! சீக்கிரம் கிளம்பிடுவேன்”.

அப்போது சரியா தொலைகாட்சியில்,

“எனக்கென யாரும்  இல்லையே

உனக்கது  தோன வில்லையே

எனக்கென யாரும்  இல்லையே

உனக்கது  தோன வில்லையே

கடல்  தண்டி  போகும்  காதலி

கை  மீறி  போகுதே  என்  விதி

நகராமல்  நின்று  போகுமே

என்  வாழ்கையின்  ரதி

பாதி  காதல்  தந்த  பெண்ணே

மீதியும்  வேண்டும்

நீ  போன  பின்பு  எந்தன்  மனமோ

இருண்டு  தான்  போகும்

காத்திரு  என்று  நீ  சொல்லி  போனால்

அதுவே  போதும்

மறந்திரு  என்று  நீ  சொல்லி  நேர்ந்தால்

உயிரே  போகும்”

கண்மணி “டைமிங் பாட்டு. உங்க நிலை என் அறை  தொலைகாட்சிக்கு கூட தெரியுது பாருங்க.”

சித்து ஆச்சிரியமாக “நான் உன் அறையில் இருப்பது உனக்கு எப்படி தெரியும் ! காமெரா எதோ வைத்து இருக்கியா என்ன?”

அச்சோ! சொதப்பிட்டையே  கண்மணி என்று தலையில் குட்டி “அது வந்து ,வந்து ஹா  ..அத்தையிடம் கேட்டேன் ! இப்ப தான் என் அறைக்குள் நுழைந்தீங்க  சொன்னாங்க !அது தான்” என்று இழுத்து பிடித்த மூச்சை வெளியே  விட்டாள்.

“நமக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இன்னும் நீ என் மனைவி தான் . யாரை கேட்டு முடிவு எடுக்கற? உங்க அப்பா அம்மாவிடம் நானே நியாயத்தை கேட்கிறேன்”  என்று பல்லைக் கடித்தான் .

“நல்லா கேளுங்க ! முதலில் விவாகரத்து செய்யலாம் சொன்னது யாரு! கதிரை கூப்பிடறேன் . அவன் தான் சரியான ஆளு !”

“யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடு ! நான் விவாகரத்து கேட்டு இருந்தாலும்  உனக்கு இஷ்டம் இல்லை என்று நீ பஞ்சாயத் கூட்டி இருக்க வேண்டியது தான? வீட்டில் பெரியவர்கள் எதற்கு இருக்கிறார்கள் !உன் இஷ்ட படி எல்லாம் செய்ய முடியாது ! முதலில் நான் கிளம்பி வரேன் நேரில் பேசலாம்! இன்று அப்படியே கிளம்பி  வந்து இருப்பேன் ! டிக்கெட் கிடைக்க வில்லை !”

மனதில் நல்ல வேளை  சொல்லி, வெளியே “வர வேண்டாம் !வேண்டாம் !”

“அப்ப ஒழுங்கா நீயே வந்துவிடு! உடனே டிக்கெட் போடறேன்! நாளை காலை இங்க இருக்கணும். அதுவரை  தான் உனக்கு டைம். இல்லை நான் வர வேண்டியதா இருக்கும் .உன் வசதி படி செய்.நான் சொன்னேனாம்! இவ பட்டிக்காடு மாதிரி அப்படியே செய்வாளாம்!”

கண்மணி மனதில், இனி வாழ்க்கையில்  தப்பி தவறி கூட நீ சொல்வதை செய்ய மாட்டேன் என்று கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

“பட்டிக்காடு! பட்டிக்காடு ! உன்னை எல்லாம் எதுக்கு படிக்க வெச்சாங்க! கொஞ்சம் கூட அறிவே இல்லை ! எங்க  மாமனார் காசு அத்தனையும் தண்டம் .உன்னை யாரு என்னிடம் சொல்லாமல் கிளம்ப சொன்னது. நான் வேண்டாம்! என் குழந்தை மட்டும் வேண்டுமா டீ! இது எந்த ஊர் நியாயம். மனுஷன் அசந்த நேரத்தில் கிளம்பியாச்சு” என்று அவள் கிளம்பின கோபத்தில் பொரிந்து தள்ளினான் .

“நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன், என்ன வேண்டும் என்றாலும் செய்துக்கோ , சண்டை போட்டு இருக்க வேண்டியது தான? உனக்கும் என்னை விட்டு  பிரியனும் தான ஆசை !”

” ஸ்டாப்! ஸ்டாப் ! கையில்  கிடைத்தால்  தொலைந்தீங்க சொல்லிட்டேன் ! யாரு பட்டிகாடு ! சொன்னது ,செய்தது அத்தனையும் இவர் . இப்ப இவர் நல்லவர்! கண் முன்னால் வந்தாலே குதறி எடுக்க வேண்டியது. இவருடன் சண்டை வேற போடணுமா?

இப்ப நான் மூளை இல்லாத Mr சித்தார்த் சம்சாரம்! Mr. சிவம் மகளா இருந்த வரைக்கும் வேலை செய்து கொண்டு இருந்த மூளை, Mr. சித்தார்த்தை கல்யாணம் உடனே வேலை நிறுத்தம் செய்து விட்டது.”

“யாருக்கு மூளை இல்லை !”

“என் புருஷனுக்கு தான் .கொஞ்சம் என் மூளையாவது கடனா கொடுக்கலாம் பார்க்கிறேன் ! என்ன சொல்லறீங்க”

அவளுடன் அப்படியே பேசிக் கொண்டு இருக்க மாட்டோமா என்று தவித்தான் .

“நான் கேட்டதை சொல்லுங்க! வேலை இருக்கு .மணி ஆச்சு !தூக்கம் வருது” .

“ஹே தூங்கிடாத! பேசிகிட்டே  இரு !”

அவன் அறைக்குள் நுழையும் போது இதமான மல்லி, ரோஜா நறுமணத்துடன் சில் என்ற காற்று  முகத்தில் மோதியது .

அதை ஆழ்ந்து சுவாசித்தான். அறை முழுதும் அங்கங்கே  ரோஸ் மற்றும் மல்லி பூக்களை கொண்டு அழகாக டெக்கரேட் செய்து இருந்தது . அறையின் அலங்காரத்தை கண்டு  வியந்தான் .இது எப்படி ?

கண்மணி கப்போர்ட் மீது கைகளை கட்டி, சாயிந்து கொண்டு, அவனை பார்த்து அழகாக சிரித்துக் கொண்டு இருந்தாள்.அவன் காண்பது கனவா ,நினைவா என்று கண்ணை கசக்கி பார்த்தான் !

முதலில் கனவு என்று அப்படியே நின்றுவிட்டான்.

அவள் இவன் அருகில் முன்னேறுவதை கண்டு  “ஹே தேனு, ஜில்லு  !”  சந்தோஷத்தில் அவளை தூக்கி சுற்றினான் .”நீ இங்க” என்று பேச்சு வராமல் திக்கினான் !

“உங்களுக்கு கை வலிக்கும் சித்து ! கீழே விடுங்க முதலில்”

அவனால் இன்னும் நம்ப முடியவில்லை.

“அது எல்லாம் வலிக்காது. விடிய விடிய தூக்க நான் ரெடி” .அவளை தூக்கி மெத்தையில் விட்டு இரு பக்கமும் கைகளை ஊன்றி “எப்படி  டா! ஊருக்கு போறேன் சொன்ன? நான் கிளம்பும் போது கூட நீ இல்லையே ? என்னை விட்டு கிளம்பிட்டயோ என்று நான் தவித்த தவிப்பு !……. அது தான் உன் அறையில் நான்  இருக்கேன் சரியா  சொன்னீங்களா” என்று அவள் மூக்கு மீது இவன் மூக்கை உரசினான் “அப்ப ! ராட்ஷசி! ஒரு நாளில் படுத்தி எடுத்துட்ட !”

“நானாவது ஒரு நாள். கடந்த ஒன்றரை வருடங்களா என்னை  படுத்தியது யாரு ?”

“என் தேனு குட்டிமாவை யாரு படுத்தினது செல்லம்! உன்னை படுத்தியவனை காலம் முழுதும் உனக்கு அடிமையாக்கி விடலாம்.”

“வெண்ணை பேச்சுக்கு குறைச்சல் இல்லை. தூக்க ரெடி சொல்லி  கீழே விட்டால் என்ன அர்த்தம் ! நான் கிளம்புவது உங்களுக்கு அத்தனை சந்தோசம்  என்றால்………” என்று சொல்வதற்குள் அவள் இதழ்களை சிறை செய்து  இருந்தான் .

மூச்சுக் காற்றுக்காக ஏங்கி தவித்த போது கூட  சித்து விட வில்லை.

“முரட்டு பையன் டா !” சித்து ஆசையாக இதழில் கவி எழுதி “கண்மணி! நந்துக்கு நான் அப்பா இல்லை . இன்று கோர்ட் தீர்ப்பு சொல்லிடுச்சு ! பெரிய மனபாரம் குறைந்தது போல் இருக்கு”

“அது தான் எனக்கு எப்போதே தெரியுமே ?”

“என்னது உனக்கு தெரியுமா?”

“ஊருக்கே தெரியும் !உங்களை மாதிரி முட்டாள் இருக்கும் வரை ஷ்ரவன் மாதிரி திமிர் பிடித்தவங்க இந்த மாதிரி அநியாயம் செய்ய தான் செய்வாங்க . நல்லவனா இருப்பதில் தப்பு இல்லை ,அதற்கு ரொம்ப நல்லவனா இருக்க தேவை இல்லை . நீங்களும் வருந்தி என்னையும் கஷ்டபடுத்தி! இதுக்கே உங்களை துவைத்து காய போடணும்” .

“உனக்கு எப்படி தேனு  தெரியும் !”

“நான் இங்க ஷ்யாம் மூலம் நீங்க  தீப்திக்கு உதவி  செய்த விஷயத்தை  அறிந்தவுடன் முதலில் கோபம் கொண்டேன். முதலில் இருந்தே எனக்கு உங்க மேல் துளி கூட சந்தேகம் இல்லை .நீங்களா எதாவது கற்பனை செய்து கொண்டு கஷ்டபட்டீங்க !

சிக்கலை எப்படி சரி செய்ய தான் யோசித்து கொண்டு இருந்தேன் . நீங்க உங்க நண்பனை  நம்பி, நம்ம வாழ்க்கையும் சேர்த்து  கேள்வி குறி ஆக்கிடுவீங்களோ பயந்தேன் !கடைசியில் அப்படியே தான் நடந்தது .

நான் தங்கி இருந்த அறை கப்போர்ட் மேல்  ஒரு பழைய பையை பார்த்தேன்! எனக்கு என் அறை எப்போதும் சுத்தமாக இருக்க தான் பிடிக்கும் . அந்த  பை என் கண்ணை உருதிகிட்டே இருந்தது .சரி முனியன் அண்ணனை கூப்பிட்டு ஸ்டோர் ரூமில் போடலாம் நினைத்தேன். அன்று பார்த்து அவர் வரவில்லை. சரி நானே செய்யலாம் எடுத்தேன் .எதாவது முக்கியமான பொருள் இருக்கிறதா பார்த்த போது, பல புகை படங்கள் ,ரெண்டு டைரி கண்ணில் பட்டது!”.

“ஹே !அது தீப்தி பையா ? நான் வீடு காலி செய்யும் போது அதை  எடுத்து வந்தது எனக்கு இப்ப தான் நியாபகம் வருது .அவள் பொருட்களை எல்லாம் பார்த்தால் எனக்கு மீண்டும் அவள் நியாபகம் வரும் ,அவள் போடோ  கூட வேண்டாம் என்று அங்கேயே எல்லாம் விட்டு வந்ததா தான நினைத்தேன். கடைசி நிமிடத்தில் பை மாறியது இப்ப தான் தெரியுது .எத்தனை வேதனை பட்டால் தெரியுமா கண்மணி ?”

“ஆமாம்! தீப்தியுடையது தான் . அதை படித்தவுடன் தீப்தி அக்கா எத்தனை கஷ்ட பட்டாங்க தெரிந்து கொண்டேன் .டைரி படித்து ஒரு வாரம் தூக்கம் வராமல் தவித்தேன்! நான் கேட்டு நீங்க எதையும்  சொல்வதாகவும் இல்லை . நான் சொல்வதை கேட்கவும் தயாரா இல்லை . அதனால் முதலில் வர்மா அங்கிள்  வீட்டில் இருந்து சிக்கலை சரி செய்யலாம் நினைத்தேன் .

ஷ்யாம் மூலம் ராம்கி கோபத்தை அறிந்து கொண்ட நான் உடனே தேவ்  அண்ணாவுடன்  மும்பை கிளம்பினேன் .  மும்பையில் முதல் முதலில் நந்துவை பார்த்த போது என்ன தேடியும் அவன் முகத்தில் உங்கள் சாயலை காணவே முடியவில்லை . எத்தனை சந்தோசம் கொண்டேன் தெரியுமா?

வர்மா அங்கிளுக்கு உங்க மீது நம்பிக்கை . ராம்கி அண்ணனிடம் உண்மையை சொல்லிக் கொண்டு தான் கிளம்பனும் இருந்தேன் . ஆனால் முடியவில்லை. உங்களிடம்  உண்மையை சொல்லலாம் இங்க வந்தால் ஐயா அடிபட்டு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.கொஞ்ச நஞ்சமா படுத்தற?

அன்று உங்களை பார்த்து என் உயிரே என்னிடம் இல்லை சித்து! நீங்க இல்லாமல் போய் இருந்தால் கண்மணியும் இன்று இல்லை” என்று அவன் மீது முத்த மழை பொழிந்தாள்.

“தெரியும் ஜில்லு!”  என்று அவள் விட்ட பாடத்தை தொடர்ந்தான்.

“சித்து, நீங்க வேதனையால் மருகுவதை பார்க்க என்னால் முடியவில்லை. உங்கள் பேச்சால் என்னை காய படுத்தும் போது என்னை விட நீங்க தான் அதிகமா வருத்தம் அடைந்தீங்க தெரியுமா ? ஆனாலும் அன்று  உங்க பேச்சு ?”

“விட்டால் கன்னம் பழுத்து இருக்கும்” என்று சித்து கன்னத்தை பிடித்துக் கொண்டான் .

“கண்மணி, உன்னை அருகில் வைத்துக் கொண்டு என்னால் பார்த்துக் கொண்டு சும்மா  இருக்க முடியல! ரம்பா, ஊர்வசி போல எந்நேரமும்  அழகு ஓவியமா நடமாடிக் கொண்டு இருந்தால் நான் என்ன டீ செய்வேன் .என்னை கட்டுபடுத்த எத்தனையோ முயற்சி செய்தேன் .

முதல் எல்லாம் வேலை என்றாவது வெளியே ஓடிடுவேன்! காலில் பிரச்சினை ஆனவுடன் அதற்கும் வழி இல்லை . உன்னை விலக்கவும் முடியாமல் ,நெருங்கவும் முடியாமல் நான் தவித்த தவிப்பு எனக்கு தான் தெரியும் !ராட்ஷசி!”

சின்ன சின்ன சில்மிஷங்களை செய்து கொண்டு அவளை சிவக்க வைத்தான் .

கண்மணி அவன் கைகளை தடுத்து நிறுத்தி “ஒரு பிரச்சினைக்கு நூல் கண்டு பிடித்து சரி செய்ய நினைத்தால் அடுத்த பிரச்சினை இன்னொரு பக்கம் தொடருது.

தேவ் அண்ணன் மூலம் ஷ்ரவன் சொன்ன புது கதை அறிந்து கொண்டேன். அதற்கான ஆதாரங்களை எல்லாம் சேகரித்தோம் .நீங்க மருத்துவமனையில்  இருந்த போது கடைசி நாளில் உங்களுக்கு  அந்த DNA டெஸ்ட் செய்துவிட்டோம்”.

அவன் பார்வையை கண்டு “சத்தியாம உங்களை சந்தேகப்பட்டு செய்யவில்லை. எனக்கு நீங்க வருந்துவது பொறுக்காமல் தான் எடுக்க சொன்னேன். அந்த முடிவு வர கொஞ்சம் தாமதம் ஆச்சு !அதற்குள் என்னை படுத்தி எடுத்தாச்சு!” என்று போலியாக வருத்தப்பட்டாள்.

“அடி பாவி! இன்னும் எதுவுமே ஆரம்பிக்கல ! அதற்குள் படுத்தி எடுத்தாச்சு சொல்லற ? உனக்கே ஓவரா இல்லை” .

“முதலில் என்னை நீங்க  அப்படி, உங்க கூட” என்று திக்கினாள் ..சித்து “சாரி டா” என்று  ஆதரவா அவளை  அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தான்  .

“ என்னிடம் எப்படி  நீங்க அப்படி கேட்கலாம்  கோபம் .உங்க பிடிவாதத்தை கண்டு, பிரியும் போது கண்டிப்பா எனக்கு குட்டி சித்து வேண்டும் என்ற முடிவோட தான் உங்களை நெருங்கினேன் . அப்போதும் கோபம்.”

Advertisement