Advertisement

அத்தியாயம் 21.1:

கண்மணியை உடனே அழைத்தான் . தொடர்பில் இல்லை வந்தது .வருந்திக் கொண்டு இருக்க எல்லாம் நேரம் இல்லை ! நந்தனை அழைத்து வரும் முடிவில் உடனே மும்பை கிளம்பினான் .

கோர்ட் ஆர்டர் படி டெஸ்ட் எடுக்க மருத்துவமனை சென்றான். அங்கு வாசலிலே ராம்கியை பார்த்து “நான் டெஸ்ட் எடுக்கல ! நந்து ,என் குழந்தை உறுதியா தெரியும் போது எதற்கு டெஸ்ட்! என்னை தண்டிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு !எனக்கு என் நந்துவை கொடுத்திடு ! நான் அப்பாக்கு அப்பாவா, அம்மாக்கு அம்மாவா பார்த்துக்கிறேன்! உங்க வீட்டு சூழலில் நந்து வளர்ந்தால் மேலும் அவனுக்கு கஷ்டம். இத்தனை நாள் நான் கொடுத்த கஷ்டத்துக்கு எல்லாம் என்னை மன்னித்து விடு ”.

ராம்கி  தோளில் தட்டி, அவனை ஆதரவா அனைத்து  உள்ளே அனுப்பினான். எப்போதும் முறைத்து வீரப்பா சண்டை போடும் ராம்கி தான? அவன் கோபம் எல்லாம் எங்கே மறைந்தது!

டெஸ்ட் எடுத்து முடித்து நந்துவை பார்க்க அவர்கள் வீட்டுக்கு கிளம்பினான்! அங்கு எப்போதும் போல வர்மா வரவேற்றார் ! மதியம் ஒரு மணி போல கோர்ட்டுக்கு கிளம்பினார்கள் .

வண்டியில் பயணம் செய்யும் போது, என் கண்மணிக்கு என்னிடம் சொல்லிக் கொண்டு  கிளம்பனும் தோன்றவில்லையா? நேற்று இவள் தான சித்து மனைவியா இல்லாமல் போனாலும் தோழியா இருக்கிறேன் கெஞ்சினாள். எனக்கு தெம்பூட்டும் விதமாக ஆறுதல் வார்த்தைகளை  தான எதிர்பார்த்தேன்! இன்று அதற்கு கூட எனக்கு தகுதி இல்லையா?

அங்கு கோர்டில் முதலில் ஷ்ரவனை தான் பார்த்தான் . இவன் எங்க இங்க? அவனை அடித்து துவைக்கணும் என்று வேகமாக அவன் அருகில் முன்னேறினான். அவன் அருகில் அவன் அன்னை மேகலாவை  பார்த்து “எங்க இங்க ஆன்ட்டி!”

மேகலா யார் என்று தெரியாமல்  குழம்பி “நீ ….”

“நான்! இங்க நிற்கிறானே துரோகி, அவனுடைய நண்பன் சித்தார்த் !நண்பன் சொல்லவே அசிங்கமா இருக்கு!”

கண்களில் ரௌதிரமாக விரல் நீட்டி ஷ்ரவனிடம் “வாழ்க்கையில் உன்னை சந்திப்பது இதுவே கடைசி முறையா இருக்கணும் வேண்டிக்கோ! அப்படி என் கண்ணில் மறுபடியும் பட்டால் உன் உயிர் உனக்கு சொந்தம் இல்லை ! நான் சொன்னதை செய்வேன் உனக்கு நல்லாவே தெரியும்! ஜாக்கிரதை! தீர்ப்பு வரட்டும் அப்புறம் உனக்கு இருக்கு !” என்று மிரட்டினான்.

சித்து எத்தனைக்கு  எத்தனை பொறுமையானவனோ  அத்தனை கோபமானவன் கூட ! அவன் கோபத்தை கண்டு ஷ்ரவன் கொஞ்சம் அரண்டு விட்டான். நண்பன் என்ற முறையில் சித்து கோபத்தை நன்கு  அறிந்தவன் .

மேகலா கண்கள் கலங்க “எங்களை மன்னித்துவிடு தம்பி !” என்று அவன் கைகளை பற்றிக் கொண்டாள். சித்து கோபம், ஆத்திரம் அடங்க மறுத்தது .ஷ்ரவனை பார்க்க மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. ஷ்ரவன் சட்டையை உலுக்கி , “உனக்கு என்ன டா கெடுதல்   செய்தேன் . இப்ப சொன்ன உண்மையை என்னிடம் அப்பவே சொல்லி இருந்தாய் என்றால் தீப்தியையே கல்யாணம் செய்து இருப்பேனே !அவளுக்கு இந்த நிலை வர விட்டு இருக்க மாட்டேனே ! ஏன் டா சொல்லவில்லை! என்னால் தீப்தி வாழ்க்கை கெட்டுது தெரிந்தும் எதற்கு அவளை ஏமாற்றினாய்! நாயை விட கேவலமாக நடந்து கொண்டாயே!

இன்னொரு பெண் வாழ்க்கையும் சேர்த்து அழித்து  விட்டேனே! என் கண்மணி எத்தனை சந்தோஷமாக இருந்தாள். இப்ப அவளையும் சேர்த்து அல்லவா கஷ்டபடுத்தறேன்! இந்த பாவம் எல்லாம்  என்னை சும்மா விடுமா? உன்னால் என் வாழ்க்கையே நரகமாக மாறிவிட்டது! உன்னை போல ஒரு துரோகி உலகில் ஒருத்தரும் இருக்க மாட்டாங்க ! இப்ப யாரை ஏமாற்றி இங்க நிற்கிற ? உன்னை வாழ்கையில் சந்தித்ததே இல்லை நினைத்துக் கொள்கிறேன்!

தீப்தியை உன்னுடன் சேர்த்து சொல்லி அவளை கேவல படுத்த விரும்பவில்லை. அவளுக்கு நானே கணவரா இருந்துவிட்டு போறேன் ! உன்னை பார்ப்பது கூட பாவம் நினைக்கிறேன்” என்று வேகமா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் .

ஷ்ரவன் பெண் பார்க்க, கல்யாணம்  என்று ஆசையாக வந்து இவர்கள் பொறியில் மாட்டிக் கொண்டான். தேவ் ,கிருஷ்ணன் ,மற்றும் செக்யூரிட்டி ஆட்கள் ஷ்ரவனை அந்த  இடத்தில் இருந்து நகராமல் பார்த்துக் கொண்டனர் .

காலையில் அவனுக்கும் டெஸ்ட் எடுத்தனர்.

ஷ்ரவன் உள்ளுக்குள் பயந்து கொண்டு தான் இருந்தான் . சித்துவிடம் பொய் சொல்லி  தப்பிக்கலாம். ஆனால், டெஸ்டில் உண்மை தெரிந்து விடுமே! தப்பிக்கவே  முடியாது ! இப்படி வந்து மாட்டிக் கொண்டேனே! ஒன்று சித்து கையால் அடிபடுவது உறுதி ,இல்லை தீப்தி அண்ணன் ராம்கி காலால் மிதி படுவது உறுதி ! இவர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு ஒழுங்கா உயிருடன்  ஊர் போய் சேருவானா என்ற பயம் பிடிக்க தொடங்கியது .

சித்து மாதிரி நண்பன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ! நான் கல்லூரியில்  படிக்கும் போது, எனக்கு பணம் கட்ட சித்து ஒரு தடவை கூட  கணக்கு பார்த்தது இல்லையே! திருப்பி கொடு என்று கூட கேட்டது கிடையாது. அப்படி பட்ட நண்பனை ஏமாற்றினால்? நம்பிக்கை துரோகம் செய்தால் ?

தீப்தி தான் எத்தனை நல்ல பெண்! அவள் நினைத்து இருந்தால் அப்பவே அவள் அப்பா, அண்ணனிடம்  சொல்லி,மிரட்டி  அவளுடனே தங்க வைத்து இருக்கலாமே! என்னால் இவர்களை மீறி ஒன்றும் செய்து இருக்க முடியாது .

அப்போதும் என் நலனை தான பார்த்து இருக்கிறாள். அவள்  சாவிற்கு  காரணமான என்னை சும்மா விடுவாங்களா? அவளை ஏமாற்றியதுக்கு எனக்கு கண்டிப்பா தண்டனை வேண்டும் .

அவன் செய்த தப்பு அத்தனையும் பூதமாக நின்று மிரட்டியது ! அந்த வயதில் செய்த குற்றம் இப்ப விடாமல் துரத்துதே! விட்டால்  அப்பவே சித்து காலிலும் ,ராம்கி காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு இருப்பான் .

அவன் அன்னை  மனதில் கோபுரம் போல உயர்ந்து இருந்து ஷ்ரவன் இப்போது எச்சிலை போல இருப்பது நினைத்து வருந்தினான் .முற்பகல் செய்யினும் பிற்பகல் விளையும் என்ற பழமொழி சரி தான் .கோர்ட்டுக்கு தேவும் , கிருஷ்ணனும் வந்து இருந்தார்கள் .பல ஆதாரங்களை காட்டினார்கள் .

அவர்களை கண்டவுடன் சித்துக்கு தெம்பா இருந்தது .பல வேலைகளை செய்து இருக்கிறார்கள் என்று நண்பர்களை எண்ணி பெருமை கொண்டான் .

தீப்தி கைப்பட எழுதின டயரி! பல புகைப்படங்கள்,ஷ்ரவன் -தீப்தி ரிஜிஸ்தர்   கல்யாணம் செய்த செர்டிபிகாடே, கடைசியாக அந்த DNA டெஸ்ட் ரிப்போர்ட்!

ஷ்ரவன் தான் தீப்தி கணவர் என்றும், நந்துக்கு அவன் தான் அப்பா என்று உறுதியானது . ஷ்ரவன் சொன்னது எல்லாம் பொய் என்று சித்துவிடம் மன்னிப்பு வேண்டினான். எல்லாத்துக்கும் அவனே காரணம்   என்று ஒத்துக் கொண்டான் .

“எனக்கு தண்டனை கொடு டா! எனக்கு மன்னிப்பே கிடையாது .நான் துரோகி” என்று சித்து கைகளை பிடித்து கெஞ்சினான் .

 சித்து, அவன் கைகளை உதறி திரும்பி கூட பார்க்காமல் கிளம்பிவிட்டான் .

தீர்ப்பு அறிந்து ராம்கி கொலைவெறி கொண்டான் . ஏற்கனவே கண்மணி மூலம் அவனுக்கு உண்மை தெரிந்து இருந்தாலும் DNA  டெஸ்ட் முடிவு வரும் வரை பொறுமையாக இருந்தான். என்னையே ஏமாற்றி இருக்கான்.

தீப்தி நிறை மாதமாக இருந்த போது , அவளை சந்தித்த அன்று, வலியால் துடித்த போது, அவன் கையில் அமெரிக்கா நம்பரை தான எழுதி கொடுத்தாள்! அப்போதே விசாரித்து இருக்கணுமோ !அது கூட தோன்றாமல் போச்சே ! எப்படியாவது அவரை  வரவை அண்ணா கெஞ்சினாலே!

அப்பவே தெரிந்து இருந்தால் எப்பாடு பட்டாவது அழைத்து வந்து இருப்பேனே ! சித்தார்த்துக்கு தான் எத்தனை தொல்லை கொடுத்து இருக்கேன். அவனாவது உண்மை சொல்லி இருக்கலாம் !அப்பா இல்லை என்று சொன்னான் தவிர யார் என்று சொல்லவில்லையே ! இந்த ஷ்ரவனை இப்படியே விடுவதா?

“உன்னை மாதிரி கேவலமான மிருகங்கள் எல்லாம் உயிரோட இருப்பதே பாவம் . என் தங்கை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பா ? நீ மட்டும் எப்படி  நிம்மதியா இருக்கலாம். இன்னும் எத்தனை பெண்களின் வாழ்கையை அழிப்பாயோ! இவன் ரௌடியா இருந்து பேச வந்துட்டான் பார்க்கிறியா? வாழ்க்கையில் என்னை நம்பி வந்த  ஒருவருக்கும் உன்னை போல  நம்பிக்கை துரோகம் செய்ததில்லை .

உன் மகனை பார்க்க கூட தோன்றவில்லையா ?

நந்து, அந்த பிஞ்சு, அவன் என்ன டா தப்பு செய்தான்! நீ செய்த பாவம் தான் அவன் இப்படி பிறந்து இருக்கிறான்! உன்னை இப்படியே விடுவதா? தப்பு செய்தவன் கண்டிப்பா தண்டனையை அனுபவிப்பான்! அனுபவிக்கனும்! உன் உயிரை எடுத்துவிட்டால் உனக்கு வாழ்க்கையில் துன்பம் என்றால் என்ன என்று தெரியாமல் போய்டும்! நீ தினம் தினம் அனுபவிக்கும் வேதனை உன் தப்பை நியாபக படுத்தனும்! மறந்து கூட யாருக்கும் துரோகம் செய்ய கூடாது! சித்து மாதிரி என்னால் பொறுமையா போக முடியாது !” என்று ராம்கி நகர்ந்தான்.

ராம்கி ஆட்கள் ராம்கி கண்ணசைவில் ஷ்ரவன், ஒரு கை ,ஒரு கால் என்று கோர்ட் வாசலிலே துண்டாக வெட்டிவிட்டனர் .

சித்து மனதை  அழுத்தி இருந்த பாரம் அகன்றது.

அப்படியே பறந்து அவன் கண்மணியிடம் செல்ல துடித்தான். தீர்ப்பை எண்ணி   சித்துக்கு சந்தோஷத்தில் பேச்சே எழவில்லை .

தேவை இல்லாமல் என்னையும் வருத்தி என் கண்மணியும் வருத்தி இருக்கேனே! என்னை வேண்டாம் என்று விட்டு சென்றவளிடம் இனி என்னுடன்  வாழ  வா என்று எப்படி அழைப்பேன்!

சென்னை வந்து இறங்கிய சித்துக்கு, அவன் வீட்டுக்கு செல்லவே மனம் இல்லை. விமான நிலையத்தில் இருந்து அப்படியே அவள் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு செல்லலாம் கூட யோசித்தான் . டிக்கெட் இல்லாத காரணத்தால் வீடு திரும்பினான் .

கண்மணி இல்லாத வீட்டுக்கு செல்ல அவனுக்கு கஷ்டமா இருந்தது .

அவளுக்கு அழைக்க நினைத்தாலும் ட்ரைனிங் போறேன் என்னை தொடர்பு கொண்டாலும் எடுக்க மாட்டேன் சொன்னாலே !

வீட்டுக்கு சென்றவுடன் ஏனோ சந்தோஷத்துக்கு பதில் வெறுமையாக உணர்ந்தான். சித்துக்கு ஜானகி ச்வீட் செய்து எடுத்து வந்தாள்.

“இப்பவாது ஒழுங்கா புத்தியோட நடந்துக்கோ சித்து ! அவளையும் சேர்த்து என்ன பாடு படுத்தின! அவனவன் பிரச்சினையை அவனவன் பார்த்தால் போதும். நம்ம தலையில் தான் உலகம் சுத்துது  நினைக்காத? உதவி செய்யலாம் தப்பு இல்லை . பார்த்து, அதற்கு தகுதியானவர் தான யோசித்து செய்”.

“அம்மா, இனி ஒரு போதும் என் கண்மணியை வருந்த விட மாட்டேன்! சத்தியம்”

“சாப்பிட்டு போ கண்ணா! நானும், அப்பாவும்  அதிதியை பார்க்க கிளம்பறோம்! இரவு 12 மணிக்கு சிங்கப்பூர் பிளைட்! போயிட்டு ஒரு வாரத்தில் திரும்பிடுவோம்! நீ பார்த்து கிளம்பு! ஜாக்கிரதை”

எங்க என்று யோசித்தும் அவனுக்கு விடை தெரியவில்லை  ! யோசிக்கும் நிலையில் கூட இல்லை.

“பிரவீன் அடையார் வீட்டில் இருந்து அலுவலகம் போயிடு வரதா சொல்ல சொன்னான்! இதை எடுத்துக் கொண்டு போ! கண்மணிக்கு ஏதோ கொரியர் வந்தது !”

அவ எங்க இங்க இருக்கா? ஜானகி பேசினது எதுவும் அவன் மனதில் பதியவில்லை. தேவ் ,கிருஷ்ணனும் அவனுக்கு அழைத்து , ஷ்ரவன் வரவழைத்தது முதல் அணைத்து உண்மையும் கூறினார்கள் . கண்மணி கேட்டுக் கொண்டதன் பெயரில் அவளை பற்றி இவர்கள் சொல்லவில்லை .

நாளை காலை வருவதாக தெரிவித்தனர் . “காலை சரி பட்டு வராது மாலை ஓகே  வா!”

சித்து  மேலே பேசுவதை தடுத்து “நாளை பேசிக்கலாம் !இப்ப போய் என்ஜாய் மச்சி! உடம்பு வீங்காம வெளியே தெரியாம அடி வாங்கு! அடி கொடுக்க சொல்லு!” என்று கிருஷ்ணன் சிரித்து வைத்தான் .

கடுப்பாக என்னத்த என்ஜாய்? தலையும் புரியாமல் , வாலும் புரியாம பேசறானே! லூசு என்று திட்டினான் .

கண்மணி தங்கி இருந்த அறைக்குள் சென்றான் . அவளுக்காக வந்த கொரியர் என்று ஜானகி கொடுத்ததை அப்போது தான் பார்த்தான். இவர்கள் விவாகரத்து சம்மந்தமான டாகுமென்ட்ஸ் ! நாளை கோர்ட்டுக்கு வர சொல்லி இருந்தார்கள். அதை  கிழித்து எறிந்தான் .

அங்கேயே கண்மணி  தங்கி இருந்த அறையிலே  தங்க முடிவு செய்து குளித்து முடித்து படுத்தான். அவனை அறியாமல் அவன் கண்ணில் கண்ணீர்! என் கண்மணியை நான் எத்தனை டார்ச்சர் செய்தேன் . அதை மீறி நாய் குட்டி போல என் காலை சுற்றி சுற்றி வந்தாலே!

தலையணையில் அவள் வாசம் கண்டு முகத்தை புதைத்துக் கொண்டான். ஏனோ அவளிடம் புதைந்து போவது போல உணர்வு .

என்னை மன்னிச்சிடு கண்மணி ! என்னிடம் வருவாயா ?

Advertisement