Advertisement

20.2:

ஒரு வேலை நாளை எடுக்கும் டெஸ்டில் அவனுக்கு சாதகமா தீர்ப்பு வந்துச்சு என்றால் ….அவன் கண்மணி அவனை விட்டு பிரியவே தேவை இல்லையே! கண்டிப்பா இப்பவே அவனுக்கு அவன் மீது தொண்ணூற்று ஒன்பது  சதவீதம் நம்பிக்கை உண்டு !இருந்தாலும் டெஸ்ட் எடுத்து விட்டால் அந்த ஒரு சதவீத நம்பிக்கையும்  கிட்டுமே  !அப்ப என் கண்மணியுடன் வாழ எந்த தடையும் இல்லையே.

சித்து யோசனையுடன் இருக்க கண்மணி அழகிய பெட்டியை நீட்டி “இந்தாங்க! எனக்கு நீங்க தந்த பணம், நகை. எல்லாம் இதில் இருக்கு . என்னுடைய பை மட்டும் எடுத்திட்டு போறேன்! தனியா ஹாஸ்டலில் தங்கும் போது எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்” .

“இது எல்லாம் உன்னுடையது !”

விரக்தியாக “எதுவுமே என்னுடையது இல்லை சித்து! எல்லாம் உங்களுக்கு சொந்தமானது! என்னை எப்பவாது  நினைத்து பார்பீங்களா சித்து! உங்க வாழ்க்கை என்னும் புத்தகத்தில் நானும் சில பக்கத்தை நிரப்பி  இருக்கேன். என்னை மறக்க மாடீங்கள!

எங்க அப்பா, அம்மாவிற்கு நான் வேலைக்கு கிளம்புவது தெரியாது . அவங்களிடம் நான் ஏதோ சொல்லி சமாளித்துக் கொள்வேன் ! நீங்க தான் அத்தை , மாமாவை சமாளிக்கணும். முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி நம்ம வாழ்கையில் எல்லாமே தப்பவே நடந்து இருக்கு! இப்ப கூட அதை சரி செய்து கொள்ளனும்  உங்களுக்கு  தோணவில்லை. அப்படி தான  ..”

அவன் சொல்ல வருவதை தடுத்து “என்றாவது எனக்கு உங்களை பார்க்கணும் தோனுச்சு என்றால் உங்களை வந்து பார்க்கலாமா? மனைவியா இல்லை! தோழியா ?”

“ஏன் டீ இப்படி பேசியே கொல்லற? என்னை விட்டு நீ எங்கயும் போக முடியாது. நீ என்னுடையவள். எனக்கு மட்டும் தான் சொந்தம் . வேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்வாயா? நான் உன்னுடன் நூறு ஜென்மம் சந்தோஷமா வாழ வேண்டும் கண்மணி. ப்ளீஸ்! நான் உன் மடியில் படுத்துக் கொள்ளட்டா? நான் தூங்கி பல மாதங்கள் ஆச்சு! என்னை விட்டு எங்கயும் போகாத! எனக்கு நீ வேண்டும். என் குற்ற உணர்ச்சியே என்னை கொல்லுது டீ! என்னால உனக்கு மனதளவில் கூட துரோகம் செய்ய முடியாது! உன்னை என் உயிரா நினைக்கிறேன் கண்ணம்மா! வாழ்க்கையில் நல்ல கணவனா என்னால் இருக்க முடியல !ஒரு நண்பனா இருக்க  முயற்சி செய்யறேன்” .

“ நீங்க எப்போதும் எனக்கு கணவர் தான். நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க! என்னை விவாகரத்து செய்துவிட்டு வேற கல்யாணம் செய்து கொள்ள போறீங்களா!”

சித்து மனம் விட்டு உண்மையாக “கண்டிப்பா என்னால் அப்படி நினைத்து கூட பார்க்க முடியாது கண்மணி !”

“எனக்கும் அப்படி ஒரு எண்ணமே இல்லை. இந்த கல்யாணம் செய்தே ரொம்ப , ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டேன் !அதனால் இன்னொரு கல்யாணத்திற்கு அவசியமே இல்லை …..”

அவள்  கேலி, கிண்டல் அவனை தாக்கியது ..

“நீங்களும் உறுதியா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள மாட்டீங்க தெரியும். அப்புறம் உங்களுக்கு எதுக்கு இப்படி பிடிவாதம் . உங்களை மீறி என்னிடம் கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொள்வீங்க என்று பயமா?”

அது அது என்று திணறினான் .

“மனைவியிடம்  உரிமையை எதிர் பார்ப்பது தப்பு இல்லையே! அது இயல்பு தானே! உங்க முதல் சம்சாரத்தை மறக்க முடியாமல்?”

சித்து  வேகமாக “சத்தியமா எனக்கு தெரிந்து என் மனதளவில் நீ மட்டும் தான் பெண்டாட்டி!”

அப்படி வாங்க சார் வழிக்கு! இதை தான எதர் பார்த்தேன்.

“அப்ப  உடல் அளவில்!”

சித்து மௌனமானான் ….

“அப்ப நம்ம கல்யாணம் போது உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு சொன்ன காரணம்..”

“அது, அப்போது  நம்ம கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தனும் எண்ணத்தில் தான் அப்படி சொன்னேன் ! ஷ்ரவன்  பிரச்சினை முடியாமல் கல்யாணம் வேண்டாம், ராம்கியால் உனக்கு எதாவது ஆபத்து வரும் நினைத்து தான் வேண்டாம் சொன்னேன்.

பெண் பார்க்கும் படலம் போது  நான் உன்னை பார்க்க கூட இல்லை . நீ வேகமாக திரும்பி சென்றதை பார்த்து, முகத்தை பார்க்க முடியலையே வருத்தம் அடைந்தேன் கண்ணம்மா. நீ எப்படி இருப்ப என்று நானே மனதில் கேள்வி கேட்டுக் கொண்டேன்! இருந்தாலும் அப்போது இருந்த நிலையில் அதை எல்லாம் யோசிக்க கூட முடியவில்லை. இவள் வேண்டாம் என்று பிடிவாதமே அதிகமாக இருந்தது.

எங்க அம்மா மருமக எப்படி,  கேட்டவுடன் உன் பின்னழகு தான் மின்னி மறைந்தது. அன்று ,கல்யாணம் வேண்டாம், நிறுத்து என்று உன்னிடம் சொல்ல வந்த போது, உன் தோழியை கண்டு கண்டிப்பா இவ கண்மணியா இருக்க  கூடாது என்று வேண்டிக் கொண்டேன் .

எப்படியும் நிற்கும் கல்யாணம் தான், நீ எப்படி இருந்தால் என்ன ? என்று அப்போது மனதின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. உன் தோழிகள் மத்தியில் உன்னை கண்டவுடன் என் மனதில் நீ மட்டும், உன் முகம் மட்டும்  அழுத்தமாக பதிந்து விட்டது!”

கண்மணி நம்பாமல் பார்ப்பதை கண்டு “சத்தியமா சொல்லறேன் கண்மணி ! அன்று உன் தோழிகள்  மத்தியில் என் மனதில் பதிந்தது உன் உருவம் மட்டுமே!

உன்னை பார்த்து அப்பவே கொஞ்சம் சலனம். இருந்தாலும் தன்மானம் இடம் கொடுக்கவில்லை .உங்க அப்பா வீட்டுக்கு அழைத்து வந்த போது கூட உன்னை பார்க்க இன்னொரு சான்ஸா .. கண்ணா ரெண்டாவது லட்டா சொல்லிக் கொண்டேன்.

கோபத்தால் சிவக்கும் உன் முகத்தை பார்க்கணும் மனதின் ஓரத்தில் சின்ன  ஆசை. ஆனா நான் இருந்த வரை நீ அறையை விட்டே வெளியே வரவில்லை” என்று பாவமாக கூறினான் .

கண்மணி சந்தோஷத்தில் அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தாள். “கன்னம் இப்படி சொரசொரப்ப இருக்குது .குத்துது டா ! ”

சித்து அவன் கவலை அனைத்தும் மறந்தான் ..

வேண்டும் என்றே கண்மணி  கன்னத்தோட  கன்னத்தை வைத்து அழுந்த தேய்த்தவுடன் “ஆ வலிக்குது, எரியுதுங்க!”

சித்து மீண்டும் தேய்த்து “எனக்கு நல்ல ஒத்தடம் கொடுக்க தெரியுமாக்கும் .. இப்ப வலி எல்லாம் மாயமா பறந்திட வைக்கட்டா!”

இவனுடன் இப்படியே சிரித்து ,பேசிக் கொண்டு இருந்தால் எத்தனை நல்லா இருக்கு ..ஆனா என்னை படுத்தினதுக்கு கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாம் ..

“எனக்கு தூக்கம் வருது ..தூங்கட்டா?”

சித்துக்கு சப் என்று ஆனது. என்ன எதிர் பார்த்தான் என்று அவனுக்கே புரியவில்லை.

பாவமாக “தூக்கம் வருதா? நான் சொன்னதை எல்லாம் யோசி டா ! எனக்காக ரெண்டு நாள் பொறுத்துக்கோ! பெரிய  மாற்றம்  வரும் ஒரு சின்ன   நம்பிக்கை டா! உன் சித்துக்காக வேண்டிக் கொள்வாயா”

“நீங்க நாளைக்கு எப்படி பேசுவீங்க எனக்கு தெரியாது !அதனால் இப்ப நிம்மதியா தூங்கறேன்! காலையில் என்ன மூடில் இருக்கீங்க பார்த்து சொல்லறேன்!”

ஏற்கனவே இவளிடம் உண்மை சொல்லாதது தவறு !இப்பவும் சொல்லவில்லை என்றால் எப்போதும் சொல்ல முடியாதோ பயம் கொண்டு,   அணைத்து உண்மையும் சொல்ல முடிவு செய்தான் .அப்புறம் என்ன நடக்குமோ அது படி நடக்கட்டும் என்று முடிவு செய்தவுடன் தான் அவன் மனதில் பெரிய பாரம் அகன்றது போல ஆனது .  

கண்மணி, அவனிடம் நகர்ந்து  படுத்த படி “சித்து! என்னால் உங்க நிராகரிப்பை தாங்க முடியல! என் வாழ்க்கையில், எனக்கு என்றும் நீங்க வேண்டும்! நீங்க மட்டும் போதும்! மனைவியா பிடிக்கவில்லை என்றாலும் ஒரு தோழியா இருக்கேனே” என்று கண்ணில் நீர் வழிய அவனை அனைத்துக் கொண்டாள். அவள் காதலில் திணறினான். பதில் பேச முடியாமல் பேச்சற்று  போனான் ..

சித்து பீடிகையுடன்  “கண்மணி நான்  சொல்வது உனக்கு எப்படி தோன்றினாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி வேறு ஒருவர் மூலம் உனக்கு உண்மை தெரிவதை விட நானே உனக்கு சொல்லி விடுகிறேன் !”

ஒரு வழியா வாயை திறக்கிறான்! எல்லாம் நல்லது தான் . அவன் சொல்வதில் எதாவது தேறுமா பார்க்கலாம் .

எத்தனை நேரம் ட்ரைலர் ஓட்ட! மெயின் படத்த ஓட்ட ஆரம்பி சித்து என்று திட்டிக் கொண்டாள்.

 கண்மணி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் .“தீப்தி ,ஷ்ராவனுடன் இருந்த நட்பை பகிர்ந்து கொண்டான் .தீப்தி, ஷ்ரவனை காதலித்தாள், வேலை காரணாமாக ஷ்ரவன் அவளை என் பொறுப்பில் விட்டு சென்றான்” சொல்லும் போது

இப்ப தானே தெரிகிறது, என் பொறுப்பில் எல்லாம் இல்லை , அவன் சுமையை சுமக்க விரும்பாமல், என் தலையில் ஏற்றி   சென்று இருக்கிறான் என்று! தீபத்தில் கருவில் வளரும் குழந்தைக்காக நான் இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தேன்.

நானும், தீப்தியும்  என்ன  சொல்லியும், ஷ்ரவன் அவன் குடும்ப நிலையை உயர்த்த  அமெரிக்கா கிளம்பிவிட்டான். அதற்கு பிறகு தொடர்பு கொண்டாலும் எங்களை  எதாவது காரணம் சொல்லி தவிர்த்தான்.

குழந்தை நன்கு வளர ஆரம்பித்தவுடன் ஸ்கேன் செய்த போது மனவளர்ச்சி குன்றிய குழந்தை போல தெரியுது என்றவுடன் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா ? தீப்தியோ சின்ன பெண்.  அந்த நேரத்தில் மனபாரத்தை பகிர்ந்து கொள்ள கூட ஆள் இல்லாமல் தவித்தேன்”.

கண்மணி மனம் அவனுக்காக இளகியது .

“ஏற்கனவே தீப்தி, ஷ்ரவனை எண்ணி எந்நேரமும் புலம்பிக் கொண்டு இருந்தாள். இதுவும் சேர்த்தியா என்று அவளுக்கு உண்மையை சொல்லவில்லை. தீப்தி ஒழுங்கா சாப்பிடாமல் உடல் பலவீனமானது . நான் கேட்டும் அவள் அப்பா, அண்ணனிடமும் போக மாட்டேன் சொல்லிட்டா? எனக்கு அந்த வயதில் அடுத்த என்ன செய்ய என்று கூட தோன்றவில்லை. அன்னம்மா  என்ற ஆயாவை  வேளைக்கு வைத்தேன் !அவர்கள் தான் தீப்தியை பார்த்துக் கொண்டார்கள் .

தீப்தி கருவுற்று, நிறை மாதமாக இருப்பதை கேள்விப்பட்டு  அவன் அண்ணன் ராம்கி எங்களை தேடி வந்தான். தங்கை கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறாள், அவனுக்கும் அவன் அப்பாக்கும் பயந்து தான் திருமணம் ஆனதை சொல்லவில்லை என்று ராம்கி எண்ணி இருந்தான் .

அவன் தீப்தியை பார்க்க  சென்ற நேரத்தில் நான் வேலை விஷயமாக டெல்லி வரை சென்று இருந்தேன்! எங்கள் வீட்டில் வேலை செய்யும் அன்னமா மூலம் விஷயத்தை கேள்விப்பட்டு நான் உடனே திரும்பினேன்.

தீப்தி, ராம்கிக்கு ஷ்ரவன் பற்றிய உண்மை சொல்லவே இல்லை. ஒரே தங்கை ! அந்த நிலையில் தீப்தி  தனியா இருந்து கஷ்டபடுவதை பார்த்து, “ராணி மாதிரி வாழ வேண்டியவள் , எப்படி  எங்களிடம் உண்மையை மறைக்கலாம்! என்ன வேலையா இருந்தாலும் உன் கணவர் இந்த நிலையில் உன்னை விட்டு போய் இருக்க கூடாது. நீ எதுக்கு விட்ட ! இன்று வருவானா? இல்லை குழந்தை பிறந்த பிறகு தான்  வருவானா? நீ தனியா இருக்க வேண்டாம் கிளம்பு” என்றவுடன் தீப்தி “முடியாது” மறுத்தாள். அவன் கோபம் எல்லாம் தீப்தி கணவர் மீது திரும்பியது.

தீப்திக்கு திடீர் என்று பிரசவவலி வந்தவுடன் அவள் அண்ணா ராம்கியிடம், இந்த நம்பருக்கு உடனே  தகவல் கொடு. அவரை வர சொல்லு. எனக்கு இப்பவே அவரை பார்க்கணும் போல இருக்கு !எப்படியாவது வர சொல்லு !நீ உதவி செய் !அப்புறம் மருத்துவமனைக்கு கிளம்பலாம்! நான் பொறுத்துக் கொள்வேன் ! எனக்காக ப்ளீஸ்” என்று ஷ்ரவன் எண்னை தந்து இருந்தாள்.

ராம்கி சந்தேகம் கொண்டு , “இது யார் எண் தீபி! உன் புருஷன் இங்கு  இல்லையா?அமெரிக்கா நம்பர் போல இருக்கே ! உண்மையை சொல்லு !தனியாவா இருக்க?” என்று மிரட்டிக் கொண்டு இருந்த போது

பதறி அடித்து  சென்ற என்னை கண்டு, நான் தான் தீப்தி கணவர் என்று எண்ணி “இந்த நிலையில் எங்க டா விட்டு போன! உன்னை பார்க்கணும் எப்படி துடியா துடிச்சிட்டு இருக்கா தெரியுமா?” என்று ராம்கி என் மீது பாய்ந்தான்.

அப்போது எனக்கு பேச ,விளக்க நேரம் இல்லாததால் நான் இவள் கணவர் இல்லை என்றதை கேட்காமல் “என்னை ஏமாற்ற பார்க்கிறியா? ஒரே வீட்டில் தங்கி கொள்வீங்க!ஆனா கணவர் இல்லை! எவனாவது காதில்  பூ சுத்திக் கொண்டு வருவான் அவனிடம் சொல்லு ! குழந்தை முதலில் பிறக்கட்டும் அப்புறம் உன்னை பார்த்துக் கொள்கிறேன் !”

தீப்தி கருவில் வளரும் குழந்தையை எண்ணி மருத்துவர்  வலி வந்தவுடனே வர சொல்லி இருந்தார் . தீப்தி இருந்த நிலையில் அவளால் ராம்கிக்கு  விளக்கம் கொடுக்க முடியவில்லை .

எனக்கு ,ஷ்ரவன் வேலையை எண்ணி ஒரு பக்கம் சொல்வதா வேண்டாமா தயக்கம். முதலில் தீப்தியும், அவள் குழந்தையும் தான் என் கண் முன்னால் தோன்றினார்கள் .இதனால் அப்போது  என் வாழ்க்கையே கேள்வி குறி ஆகும் நினைக்கவில்லை .

ராம்கி உண்மையை சொல்லிட்டு நகரு என்று  பிடிவாதம் பிடிப்பதை கண்டு “என்னை நம்புங்க! இவ குழந்தைக்கு நான் அப்பா இல்லை !அது ஒரு பெரிய கதை !கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றதை கேட்காமல் சண்டை போட்டான் .

தீப்தி இருந்த நிலையைக் கண்டு  நான் கோபமாக ,என்ன மனுஷன் டா ! உன் தங்கை வலியால் துடிப்பது உனக்கு தெரியலையா? சண்டை போடும் நேரமா? என்று ராம்கியை அங்கேயே விட்டு,  வலியால்  துடிக்கும் தீப்தியை  என்  காரிலே  மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு விரைந்தேன்.

அன்று பயங்கர மழை. அந்த இரவு நேரத்தில், மருத்துவமனை செல்லும் வழியிலே எதிரே வந்த லாரி நிலை தடுமாறி எங்கள் வண்டி  மீது மோதியது” .

அப்போது நடந்தது போல சித்து உடல் ஒரு முறை நடுங்கியது. கண்மணி ஆதரவா அவன் கைகளை தடவி விட்டாள்.

எனக்கு பயங்கர அடி. தீப்தி வலியில் துடித்துக் கொண்டு இருந்ததை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தேன். அம்புலன்ஸ் வரும் வரை அவளுக்கு ஆறுதல் சொல்லிய நான், அதன் பின் மயங்கினேன் . ராம்கி அவன் தந்தை வர்மா என்று அனைவரும் அதற்குள் வந்து விட்டனர் .

அச்சிதேன்ட் ஆனதில் அடிபட்டதால் உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றினர் .தீப்திக்கு நினைவு திரும்பியதும் என்னிடம் மட்டும் அவள் குழந்தையை எப்படியாவது  ஷ்ரவனிடம் சேர்த்து விடும் படி கூறினாள். அப்போதும் அவனை நம்பினாள் கண்மணி. பொருக்கி இப்படி ஏமாற்றுவான் நான் நினைக்கவே இல்லை .தெரிந்து இருந்தால் அவனை நகர கூட விட்டு இருக்க மாட்டேன். கை, காலை உடைத்தாவது அவனை அங்கேயே அவளுடனே நிறுத்தி இருப்பேன். என்னாலே அவன் வக்கிர புத்தியை கண்டு கொள்ள முடியவில்லை. பாவம் தீப்தி என்ன செய்வாள் .

தீப்திக்கு ,ஏற்கனவே உடல் பலவீனம் , ஆசிதேன்ட் ஆனதினால் நிறையா ரத்த இழப்பு என்று அவள் உயிர் அங்கேயே பிரிந்தது .

ஏற்கனவே நான் குழந்தைக்கு அப்பா இல்லை என்று சொன்னதினால் ராம்கி பயங்கர கோபத்தில் இருந்தான். என் கோபத்தை வண்டியில் காட்டி, வேண்டும் என்றே விபத்து செய்துவிட்டேன் என்று தீராத வன்மத்தை வளர்த்தான். போலீசிலும் அதையே சொன்னான் .

என் தங்கை குழந்தைக்கு, அப்பா நீ இல்லை என்றால் யார் சொல்லு .உனக்கு தெரியாமல் இருக்காது . நீ தான் அவளுடன் தங்கி இருக்கிறாய்! உன்னுடைய ஆசை நாயகியா வைத்துக் கொள்ளலாம் பார்த்தாயா?குழந்தையை கொடுத்து அப்பா  இல்லை என்றால் ?

அங்கு நடந்த எல்லாத்தயும் ஷ்ரவனிடம் விளக்கினேன்! முக்கியமான ப்ராஜெக்ட் போய்க் கொண்டு இருப்பாதால் வர முடியாது சொல்லி விட்டான் .

அப்போதும் என் நிலையை மறந்து, ஷ்ராவனுக்கு  ஆறுதல் சொல்ல கூட அருகில் ஒருவரும்  இல்லை என்று  வருந்தினேன். தீப்திக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வா என்று எப்படி கெஞ்சினேன் தெரியுமா ?

ராம்கிக்கு தெரிந்தால் உடனே  உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவனை  இழுத்து வந்து விட்டு தான் மறுவேலை பார்ப்பான். அதற்கு பயந்தே ஷ்ரவன் சொல்ல வேண்டாம் கெஞ்சினான். ராம்கியிடம் உண்மையை சொல்லவும் முடியாமல் ,மறைக்கவும் முடியாமல் கஷ்டப்பட்டேன்! நட்புக்கு மரியாதை கொடுத்தேன் . அதற்கு அவன் தகுதியானவனா யோசிக்க தவறினேன்.

ராம்கி, இந்த குழந்தை என்னிடமே வளரட்டும் .என் தங்கையை என்னிடம் இருந்து நிரந்தரமா பிரித்து விட்டாயே துடித்தான் .வருந்தினான் . நந்துவை அப்பவே பிரித்து கூட்டி சென்றுவிட்டார்கள். அப்போதில் இருந்து என்னை பழி வாங்கணும் துடித்துக் கொண்டு இருக்கிறான் . இன்று வரை பல வழியில் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான்

அங்கிள் கொஞ்சம் சபோர்ட் ! முதலில் கோபமாக இருந்த அவர் உண்மை  அறிந்து எனக்கு சப்போர்ட் செய்தார்.

இதை அப்பா ,அம்மாவிடம் சொன்ன போது அவர்களுக்கு என் மீது தான் கோபம் திரும்பியது .ஷ்ரவன் இந்தியா திரும்பி, நந்துவை அழைத்து செல்லும் வரை எனக்கு திருமணம்  வேண்டாம்  என்று உறுதியா இருந்தேன் .

கண்மணி கோபமாக “உங்க நண்பருக்கு அப்படி என்ன வேலை சித்து! அவர் காதலித்த, கட்டின மனைவி இறந்த போது கூட பார்க்க வரவில்லை. அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது .அப்பாவும் இல்லாமல் , அம்மாவும் இல்லாமல் வளர்வது எத்தனை கொடுமையான விஷயம். இப்படி பட்ட ஆளுக்கு உதவி செய்த உங்களுக்கு தான் நாலு கொடுக்கணும்! கொஞ்சம் கூட அவன் உங்களை ஏமாற்றி இருக்கான் தோன்றவே இல்லையா? என்னிடம் மட்டும் தான் உங்க வீராப்பை காட்டுவீங்க போல ! தொழிலில் சாதித்து என்ன பிரயோஜனம்”.

மழையில் விட்டு சென்றதை தான சொல்கிறாள் கண்டு கொண்டான்.

சித்து பல தடவை எதோ சொல்ல வந்ததை ஆரம்பித்து  நிறுத்தினான் .

அந்த  AC அறையிலும் அவனுக்கு  வியர்த்துக்  கொட்டியது. கண்மணி அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தாள்..அவன் வருந்துவது பொறுக்காமல் அவன் கைகளை ஆதரவா பற்றிக் கொண்டாள்.

“இதுக்கு எதுக்கு சித்து விவாகரத்து! உங்க நண்பன் வந்து குழந்தையை அழைத்துக் கொண்டு போனா அப்புறம் நம்ம வாழ்கையை தொடர்வது உங்களுக்கு என்ன சிக்கல்! என்னை விட சூப்பர்  பிகரை செட் செய்து விட்டீர்களா? அப்படி எதாவது இருக்கட்டும்” என்று போலியாக மிரட்டிய போது கூட சித்து முகம் தெளியவில்லை .

அவள் கைகளை இறுக்கி , அவன் நெஞ்சில் அழுத்தி வைத்துக் கொண்டு “கண்மணி , உண்மையில் நந்துக்கு  ஷ்ரவன் அப்பா இல்லை”

“அப்புறம் யார்!”

“நான் தான் நந்து அப்பா என்று  ஷ்ரவன் சொல்லறான்! எனக்கே என்னை நினைத்தால் அசிங்கமா இருக்கு! இவ்வளவு மோசமான பிறவியா என்று நினைக்கவே அருவருப்ப இருக்கு! ப்ளீஸ்! என்னை நீ பெண் பித்தனாக எண்ணாதே! ” அன்று அவர்கள் டூர் சென்ற போது நடந்த அனைத்தையும் கூறினான் .

“என்ன யோசித்தும் எனக்கு புரியவில்லை. கண்டிப்பா அப்படி இருக்காது உறுதியா சொல்ல முடியும் ! இருந்தாலும், அவன் சொல்வதை பார்த்தால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. என் அறையில் வேற பெண்ணை தான் பார்த்த நியாபகம்”.

அவன் சொன்னதைக் கேட்டு கண்மணி மோசமான பார்வை பார்த்தாள். ப்ளீஸ் புரிந்துக் கொள் என்று எதிர் பார்வை பார்த்தான் .

“இந்த உண்மை எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் நான் உன்னை திருமணமே செய்து இருக்க மாட்டேன் .என் நிழல் கூட உன் மீது பட்டு இருக்காது. என் மனசாட்சியே என்னை கொல்லுது தேனு! என்னால் கண்டிப்பா நீ கேட்டதை ஒரு போதும் கொடுக்க முடியாது! என் கண் முன்னால்  நீ படும் வேதனையை என்னால் காண சகிக்கவில்லை . அதுனால தான் இந்த விவாகரத்து முடிவு .உன்னாலும் என்னை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கு நன்றாகவே தெரியும் .எனக்கு வேற வழி தெரியவில்லை கண்மணி” .

“மண்ணாங்கட்டி!”

கண்மணி கண்களையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தான் .அவள்  ஒன்றும் சொல்லாமல் அமைதியாக படுத்து விட்டாள்.

அவன் எதிர் பார்த்தது தான்! இருந்தாலும்!

அடுத்த நாள் சித்து கிளம்புவதற்குள் கண்மணி கிளம்பிவிட்டாள் !அவள் சொன்னது போல அவள் பெட்டியை மட்டும் எடுத்து சென்று இருந்தாள். என்னை விட்டு கிளம்பிவிட்டாலா? என் கண்மணி எனக்கு இல்லையா ? அவன் வாழ்க்கையே இருண்டு போனது போல ஆனது.

எப்படியாவது கண்மணியை அழைத்து வந்து விடலாம் நம்பினான்! பார்க்கலாம் அவன் கண்மணி அவனிடம் வருவாளா என்று?

Advertisement