Advertisement

தூறல் 2.1:

இவன் இன்னும் என்னை திரும்பி  பார்க்கவே இல்லை. நானும் இவனை இன்னும் பார்க்கல. இவன் கருப்ப சிகப்பா தெரியாது. என்னை இதற்கு முன்பு கண்டிப்பா பார்த்து இருக்க கூட மாட்டான். என்னை பார்த்து பேசினா தான புரியும் .முதுகை காட்டி பேசினால்? இவன் எல்லாம் சிடியில் இருக்கான் சொல்ல வந்துட்டான்.

இவன் இப்படி சொன்ன பிறகு உறுதியா இவனை தான் கல்யாணம் செய்து கொள்ள போறேன். நீயே வாய் கொடுத்து மாட்டிகிடீங்க சார். இந்த பட்டிகாட்டு பைங்கிளி தான் உங்களுக்கு பெண்டாட்டி. எத்தனை தன்மையா இவங்க அம்மா பேசினாங்க . வாழ்க்கையில் எப்படியும் ஏதோ பேய்க்கு வாக்கப்பட்டு தான் ஆகணும்.தெரியாத பேயை விட தெரிந்த சாத்தானே மேல் .

எதா இருந்தாலும் இவனை விடுவதா இல்லை.  இவன் எப்படி இருந்தாலும் இவன் தான் எனக்கு கணவன். இதே முடிவு கடைசி வரைக்கும் இருக்குமா பார்க்கலாம் கண்மணி.

 என்ன, படிப்பு முடிந்த பிறகு தான் கல்யாணம் முடிவா இருக்கணும். அப்பாவிடமும் அப்படி தான் சொல்லணும். கஷ்டப்பட்டு படிச்சாச்சு. இன்னும் ஒரு வருடம் என்று மனதில் அவள் ஒரு திட்டம் தீட்டினாள்.

நல்லா தான் ப்ளான் போடறீங்க கண்மணி. உனக்கு மேல ஒருத்தன் பிளான் போட்டுக் கொண்டு இருக்கானே!

அங்கு இருந்த கல் மேடையில் காபி  கோப்பையை லொட்டு என்று வைத்து வேகமாக திரும்பி நடந்தாள்.

‘டொக்’ என்று சத்தம் கேட்டு திரும்பின போது கண்மணி பாதி தூரத்தை கடந்து இருந்தாள். “ஹே! ஹே !ஹே, நில்லு  நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன் நீ போய்டே இருக்க.”

அவன் குரல் கேட்டும் கண்மணி திரும்பவில்லை. இவ பாட்டுக்கு போனா எப்படி. பதில் சொல்லிட்டு போகலாம்ல. பட்டிக்காடு, பட்டிக்காடு என்று திட்டிக் கொண்டான்.

சிவமிற்கு, அவர் குடும்பத்தில் முதல் முதலில் ஒரு நல்ல விசேஷம் செய்யும் போது எந்த பிரச்சினையும் இல்லாம சுமூகமா முடியனும் டென்ஷன். வந்த இடம், பெரிய இடம். அவர்களுக்கு பெண்ணை பிடிக்கணும்.  பரிசம் போட்ட பிறகு தான் அவர்களிடம் பெண்ணை காட்டனும் உறிதியா இருந்தார். சித்து பிடிவாதமாக கேட்டவுடன் அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

அவர்கள் தோட்டத்தில் இருந்து  உள்ளே வரும் வரை  படபடப்பாக உணர்ந்தார்.

சித்துக்கு, கண்மணி, அவன் அம்மா மீது கோபம் இருந்தாலும் அவன் உணர்வுகளை  முகத்தில் வெளிபடையா காட்டவில்லை. அவன் வருத்தப்பட்டால் அவன் அன்னை தாங்க மாட்டாள் என்று இரண்டு வருடமாக அப்படியே பழகிக் கொண்டான்.

சித்து முகத்தை பார்த்தவுடன், சிவம் சந்தோஷமாக “நான் அப்பவே சொன்னேன்ல தம்பி, என் பெண்ணை பார்த்தவுடன் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று, உங்க முகமே சொல்லுது தம்பி  உங்களுக்கும் சம்மதம் என்று. உங்க அம்மா, அப்பாக்கும் பிடிச்சிடுச்சு” என்று அவரே பேசிக் கொண்டே சென்றார்.

“என்ன வேலுசாமி அண்ணன் . பரிசம் போட்டிடலாமா? தங்கச்சி ஜானகி  வேற சோர்ந்து தெரியுது. பரிசம் போட்ட பிறகு தான் சாப்பிடுவேன் ஒத்தை காலில் நிக்குது.”

சித்துக்கு மற்ற நினைவுகள் எல்லாம் பின் நோக்கி சென்றது. அவன் அன்னையிடம் விரைந்து “அம்மா கொஞ்சம் சாப்பிடுங்க. என்னை டென்ஷன் செய்யாதீங்க. இந்த பயணமே வேண்டாம் என்று சொன்னேன் .கேட்டீங்களா? முதலில் இங்க இருந்து  கிளம்பலாம்”

“சும்மா என்னை அதட்டாத டா. என் மருமகளிடம் சொல்லிடுவேன் .ஜாக்கிரதை” என்னும் போது  கண்மணி மெதுவாக “அத்தை முதலில் ச்வீட்  எடுத்துகோங்க” என்று உள்ளே நுழைந்தாள்.

திமிர் பிடித்தவ! அத்தையாம் அத்தை, சொத்தை. சித்து கோபத்தில் அவள் புறம் திரும்பவே இல்லை. மனதில் நான் அத்தனை தடவை சொல்லியும் இவளுக்கு என்ன பிடிவாதம்.

அவனுக்கு தெரியவில்லை பட்டணத்தில், சிடியில் பிறந்து வளர்ந்த  அவனுக்கே இப்படி என்றால் கிராமத்தில் இன்று வரை அவள் அப்பாவை எதற்காகவும் எதிர்த்து பேசாதவள் எப்படி தைரியமாக  கல்யாணமே வேண்டாம் சொல்ல முடியும் என்று? அதுவும் அவளிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எல்லா ஏற்பாட்டையும் செய்து இருக்கிறார்கள்.

அவள் அப்பா கேட்டாலும் பேருக்கு தான் கேட்டு இருப்பார். கிராமத்தில் இருந்தாலும் அவரை பொருத்தவரை மகளுக்கு எப்போதும் பெஸ்ட் சாயிஸ் தான் கொடுக்க விரும்புவார். அந்த நிலையில் அவரை பொருத்தவரை சித்தார்த், அவன் குடும்பம் தான் பெஸ்ட். கண்மணி எதாவது சொல்லி இருந்தாலும் அவளை அவர் விருப்ப படி ஒத்துக் கொள்ள வைத்து இருப்பார் .

அன்றே  நல்ல  நாள் என்பதால் பரிசம் போட்டுக் கொண்டார்கள் .”அச்சோ! இதை தடுக்க ஆளே இல்லையா? எத்தனை படத்தில் பரிசம் போடும் போது மாமா, முறைப்பையன் என்று வில்லன்  வருவான். வில்லனோட அரிவாள்,  தட்டு முன்பே விழுகும். இங்க ஒருத்தனையும் காணோமே. டேய்,தடி மாடுகளா எனக்கு எதாவது ஐடியா கொடுங்க டா” என்று தேவ் மற்றும் கிருஷ்ணனிடம்  கெஞ்சினான் .

“டேய், சிஸ்டர் அழகா இருக்காங்க என்ற ஒரே காரணத்திற்காக பேசாம இருக்கோம். அம்மா சொல்லும் படியே செய்திடு” என்று இருவரும்  ஜானகி கட்சிக்கு தாவினார்கள் .

“அட துரோகிகளா! நானே பார்த்துக்கிறேன். உங்களுக்கு கண்டிப்பா கச்சேரி உண்டு” என்று மிரட்டினான். இயலாமையால் மனம் வாடினான்.

கண்மணியும் அதற்கு பிறகு சித்தார்த்தை பார்க்கவில்லை .

ஊருக்கு சென்று அவனுக்கு வேலை சரியா இருந்தது . ஜானகி  இந்த கல்யாண விஷயத்தை கொஞ்சம் ஆற போட்டாலும் மகன் மனம் மாறிடுவான் என்று பயந்து வேலுச்சாமியிடம்  தை மாதம்  என்றால் அவர்களுக்கு அறுவடை இருக்கும், ஐப்பசி மாதத்திலே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம், என்று அவசரபடுத்தினாள்.

கண்மணி வீட்டில், கண்ணன் ஓயாமல் ‘அத்தான் எத்தனை அழகு தெரியுமா? இதுவரை அவரை மாதிரி நான் யாரையுமே பார்த்தது  இல்லை . அவர் இங்கிலீஷ் பேசும் அழகே தனி அக்கா. எந்நேரம் போனிலே தான் பேசிக் கொண்டு இருந்தார். ரொம்ப பிஸி .அவங்களுக்கு எத்தனை பெரிய ,பெரிய கார் எல்லாம் இருக்கு தெரியுமா ? பெரிய தொழில் அதிபர். நீ ரொம்ப லக்கி. நீ உன் கல்யாணம் பிறகு கூட  உன் படிப்பை தொடரலாம் ,பெருந்தன்மையா சொல்லிட்டாங்க அக்கா.

எனக்கு சென்னையிலே சீட் கிடைத்தால்  உன் கூடவே இருந்திடுவேன். அத்தான் அப்பா, அவங்க  கூடவே  இருக்கலாம் சொல்லீட்டாரு”

கண்மணி  மனதில் எனக்கே கல்யாணம் நடக்குமா தெரியல? இவன் வேற இம்சை படுத்தறானே என்று இருந்தது.

எப்படியாவது சித்தார்த் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்வான், கண்டிப்பா கல்யாணம் நின்றுவிடும்  என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.

கண்மணி  ஒன்றும் வெளிபடையா பேசாததால் அவளுக்கு வெட்கம். இந்த கல்யாணத்தில் முழு விருப்பம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டனர்.

அவன் அன்னை செல்லம்மா “டேய் கண்ணா! அக்கா கூட எல்லாம் இருக்க முடியாது. உனக்கு சீட்  கிடைத்தால் ஹாஸ்டலில் தங்கிக்கோ. அது தான் மரியாதை. அவங்க அப்படி தான் சொல்லுவாங்க” என்றவுடன் கண்மணி எழுந்து தோட்ட பக்கம் சென்றாள்.

மகள் ஏனோ கலகலப்பா இல்லை  என்று  தாய் மனம் வருத்தம் அடைந்தது.

“நீ ஏன் டீ  உன் முகத்தை தொங்க போட்டு  இருக்க! மாப்பிள்ளை  என்ன சொன்னாரு. அந்த  தம்பியும் நல்ல மாதிரியா தான் தெரிந்தது.  கலையா தான் இருக்காரு .நாமாளா தேடி போனாலும் இப்படி பட்ட இடம் கிடைக்காது. நம்ம சுற்று வட்டாரத்தில்  இது போல ஒருத்தரும் பையன் எடுத்தது இல்லை என்று சொன்னதை கேட்டு உங்க அப்பா  பூரித்து போய் இருக்கார்.

உங்க அப்பாக்கு உறுதி செய்யும் வரை அத்தனை பயம். எதாவது சரியா நடக்கவில்லை என்றால் பெரிய இடம் என்று பல்லை காட்டிக் கொண்டு போனான். இப்ப பாரு அனுபவிக்கிறான்  என்று நம்ம முதுகு பின்னாலே பேசுவாங்க கலங்கினார். ஏதோ அந்த மாரியாத்தா தயவில் எல்லாம் நல்ல படியா முடிந்தது. அந்த அம்மா ரொம்ப தன்மையானவங்க. எத்தனை பிரியமா பேசினாங்க தெரியுமா”

அந்த மாப்பிளை தம்பி பேசினதை கேட்டு இருந்தால் உனக்கு உச்சி குளிர்ந்து இருக்கும் என்று கண்மணி  சொல்ல வந்ததை வாய்க்குள்ளே தள்ளினாள்.

கண்மணி எதிலையோ சிக்கி தவிப்பது போல உணர்ந்தாள். எல்லா விஷயத்தை போல இந்த விஷயத்தையும் விளையாட்டு தனமா எண்ணியது தப்போ என்று எண்ணி வருந்தினாள்.

சித்து அலுவலக வேலையா இருக்கும் போது திடீர் என்று  ‘அன்று அந்த பட்டிகாட்டுக்கு நான் சொன்னது எதுவும் புரியலையா? தமிழில் தான பேசினேன். வேண்டாம் தான சொல்ல சொன்னேன். எதற்கும் இன்னும்  ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று வேலுசாமியை அழைத்து  “மாமா ,எனக்கு நம்பர் வேண்டும் .கொஞ்சம் பேசணும்” என்றவுடன் அவர் குழம்பி

“தம்பி என்ன சொல்லுது . யாரு நம்பர்?”

“அது தான் அந்த பெண் மாமா”

வேலுசாமிக்கு புரிந்தவுடன் “யாரோ கல்யாணமே வேண்டாம் சொன்னாங்க  தம்பி. அது யாரு?” என்று சிரித்தவுடன் கோபமாக

“நம்பர் தருவீங்களா? இல்லை நேரிலே போய் கேட்டுகொள்ளட்டுமா?” என்று பொறிந்தான்.

“அச்சோ தம்பி, என்ன தான் பரிசம் போட்டாலும் நம்ம ஊரிலே இப்படி பேசுவது, பார்ப்பது முறை இல்லை. அந்த பெண்ணுக்கு செல் போன் எல்லாம் இல்லை நினைக்கிறேன். அவங்க ஊட்டு நம்பர் வேண்டும் என்றால் தரேன். நான் கொடுத்தேன் என்று அந்த சிவமிடன் தப்பி தவறி சொல்லிடாதீங்க. என்னை அவன் வீட்டு பக்கம் தலை வைக்க விடமாட்டான்” என்று பயந்தார்.

அந்த சிவமை எண்ணி தான் சித்துக்கு கவலையே! அந்த ஆளு  என்னை அவர்  பார்வையாலே மிரட்டுவாறே! பெண் பார்க்க சென்ற போது என்னமா படுத்தி எடுத்தார். ஐயனார் சிலை  போல சிவம் கோபமா நிற்பது போல தோன்றினதும் சித்து உள்ளுக்குள் எழுந்த பயத்தை  மறைத்து “அது எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அவரை போல எத்தனை பேரை பார்த்து இருக்கேன்” என்று வீராப்பாக பேசினான் .

‘பட்டிக்காடு’ என்பது சரியா இருக்கு. ஒரு  செல் போன் கூட இல்லை என்று திட்டிவிட்டு  சிவம் எடுக்க கூடாது என்று வேண்டி  கண்மணிக்கு  அழைத்தான்.

அவன் அழைத்த நேரம் கண்மணி வீட்டில் தான் இருந்தாள். கண்ணனும் இருந்தான்.

போன் அடித்தவுடன் “டேய் எடுக்காத, எனக்கு தான். நான் தான் எடுப்பேன்” என்று கண்மணி கண்ணனை துரத்தி கொண்டு ஓடினாள். நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க என்று கண்ணன் போனை எடுத்தான் .

அந்த புறம் சித்து இருப்பதை அறியாமல் “டேய் எருமை மாடு, பன்னி, குரங்கு   சொல்லிட்டே  இருக்கேன் ,உன் காதில் விழுகுதா, உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாது, இரு அப்பாவிடம் சொல்லறேன். இன்று உன்னை உண்டு இல்லை செய்யாம விட போறது இல்லை. இந்த கண்மணியை என்ன நினைத்த?”என்று கண்மணி குரல் கேட்டவுடன் அவனிடம் தான் அவள் பேசுவதா நினைத்து போனை உடனே வைத்துவிட்டான் .

ராட்ஷசி, என்னை  யாரு நினைத்தா? இரு நேரில் வந்து உன்னை கவனிக்கிறேன். நான் மிரட்டும் மிரட்டலில் கல்யாணமே வேண்டாம் சொல்லணும். அதுவும் என்னை கட்டிக்கவே மாட்டேன்  சொல்ல வைக்கிறேன். ஒரு சின்ன பெண் எல்லாம் என்னை மிரட்டுதே!

அதிதி அவள் அண்ணனிடம் “பெண் எப்படி அண்ணா! அண்ணி நம்மளை மாதிரியா ?கலகலப்பா பேசுவாங்களா? என்னால தான் வர முடியல .  அம்மாக்கு ரொம்ப பிடித்து விட்டது. போட்டோவை பார்த்து அசந்துட்டேன்”

‘அந்த பிசாசை நான் எங்க பார்த்தேன்’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

“உங்களுக்கு ஏத்த மாதிரி நிறம், உயரம் எல்லாம். அவங்க  எத்தனை அழகா இருக்காங்க தெரியுமா? என்ன! என்னை விட ரெண்டு வயது சின்னவ. அண்ணி தான் கூப்பிடனும் கண்டிஷன். எனக்கு வெளிய போக  சுற்ற ஆள் கிடைச்சாச்சு.

சித்துக்கு அது புதிய செய்தி. இவளை விட  சின்னவ என்றால் 20 அல்லது 21 தான் இருக்கும் போல. இந்த அம்மா ஏன் இப்படி செய்யறாங்க ..

“ஜானகி, என்ன டா ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிக்கிற. அமைதியா நடமாடுற. என் மருமக என்ன சொன்னா !”

சித்து பல்லை கடித்து  “சொன்னா! சுரைகாய்க்கு உப்பு இல்லை என்று.”

“வாவ் ! சூப்பர்.பெரிய பிசினஸ் மக்னேட்டுகு இது எல்லாம் தெரிந்து இருக்கு, அடிப்படை பேச்சு சமையலில் இருந்து தொடங்கி இருக்கா. நல்ல விஷயம் டா ” என்று ஜானகி போலியாக வியந்தாள் .

 “அம்மா, அது தான் உன் ஆசை படி பரிசம் போட்டாச்சே ! ஆபரேஷன் செய்திடலாம். இன்னும் என்ன? “என்று கேட்டவுடன்

 “நல்ல நேரம் பார்த்து ஆபேரஷன் செய்ய சொல்லற? இப்ப கல்யாண வேலை இருக்கும் போது மருத்துவமனையில் இருந்தா நல்லா வா இருக்கும்”

“அதுக்காக இல்லை அம்மா, நான் என்ன சொல்ல வரேனா  ….”

இவன் எதுக்கோ அடி போடுவது போல இருக்கே! பேசியே என் மனதை மாற்றி விடுவான்.

“ஒன்னும் சொல்ல வேண்டாம் சித்து. இன்னும் ரெண்டு மாதம் தான் டா. அதற்குள் ஒன்னும் ஆகாது. டாக்டரை கேட்டுவிட்டேன். இப்ப நானும் அதிதியும் கல்யாண ஷாபிங் செய்ய போறோம்” என்று கிளம்பினாள்.

சித்து  எத்தனை  தான் அவனை  வேளையில் மூழ்கடித்தாலும் அவன் கல்யாண விஷயம் மனதை வண்டாக குடைந்து கொண்டு இருந்தது.

முதல் முறையாக என்னை செய்வது என்று யோசிக்க முடியாமல் திணறினான்  மூன்று வருடம் முன்பு, அன்று அந்த சூழ்நிலையில் கூட தைரியமா இருந்தேனே! இன்று எங்கே போச்சு அந்த தைரியம் .

 ஊரில் என்னை பற்றி தெரிந்தவர்கள் என்ன பேசுவார்கள் . நான் அப்படி இல்லை என்று போய் விளக்க முடியுமா? அந்த நாளை நினைத்து உடல் நடுங்கியது .

தலையை  தொங்கபோட்டு  இருந்து சித்துவை கண்டு தேவ்  அதிர்ச்சியுற்றான். “சித்து என்ன ஆச்சு. என்ன பிரச்சினை டா? தலை  வலிக்குதா.. வெளியே கொஞ்சம் போகலாமா?”

“இல்லை டா. எனக்கு பயமா  இருக்கு. என் கை  மீறி  எல்லாம் போவது  போல பயமா இருக்கு. என்னால உண்மையா நடந்துக்க முடியுமா? நீயே சொல்லு. ஒரு பிரச்சினையே தீராம இருக்கு! அதற்குள் அடுத்த பிரச்சினை. அம்மா  சொல்வதையும் என்னால்  தட்ட  முடியல. அவங்க உடல் நிலை என்னை பயம் கொள்ள செய்யுது.

அம்மாவையே எண்ணி இருக்கும் அப்பாக்கும் எதாவது ஆகிவிடுமோ பயமா இருக்கு. இவங்க உடல் நிலையை வைத்து என்னை கார்னர் செய்வது எந்த விதத்தில் நியாயம் டா! என்னால் இன்னொரு இழப்பை ஏற்றுக் கொள்ளவே முடியாது டா. எனக்கு  மனதில் அந்த சக்தி இல்லை”

நண்பன் நிலையை உணர்ந்த தேவ் “அது எல்லாம் ஒன்னும் இல்லை டா .நீ ரிலாக்ஸ் செய். இந்த வாரம் பெங்களூர் கிளையில் மீட்டிங் முடித்து நாம நாலு பேரும் கோவா போறோம்”.

நண்பனை கொஞ்சம் இயல்பு நிலைக்கு திருப்பி தேவ்  ஆனந்தை அழைத்து விவரம் கூறினான் .

“அவன் கண்டிப்பா இதில் இருந்து வெளி வந்து ஆகணும் டா! இதை விட்டா வேற வழி இல்லை. ஆன்ட்டி செய்வது தான் சரி. என்ன தான் நாம பக்கத்தில் இருந்தாலும் அவன் சந்தோசம், துக்கத்தை பகிர கண்டிப்பா அவனுக்கு துணை அவசியம். எல்லாம் நல்ல படியா முடியனும் வேண்டிக்கோ .இந்த வாரம் பார்க்கலாம் அவன் பக்கத்தில் இருந்தா கொடு”

உடனே “இல்லை,இல்லை வேண்டாம் தேவ்! அவனுக்கு நானா கூப்பிடறேன் . இல்லை என்றால் உன்னை கொதருவான்.”ஆனந்த் சித்துவை அழைத்து தொழில் விஷயத்தில் அவன் கவனத்தை திருப்பினான் .

சித்தார்த், பலமுறை கண்மணிக்கு அழைத்து தோற்றான். அவனால் அவளிடம் பேசவே  முடியல. இது எல்லாம் சரி பட்டு வராது என்று அவள் ஊருக்கு கிளம்பினான். போகும் வழி எல்லாம் அவளை எங்க? எப்படி சந்திக்க. என்ன சொல்லி பேச? யாரிடம் கேட்க?

சே, அன்று அந்த சின்ன பையன் எத்தனை ஆசையா பேச வந்தான். அப்போது அவனுடன்  நல்லுறவு வைத்து இருந்தால் இப்ப உதவி இருப்பான். அவன் என்ன செய்யறான் கூட தெரியல. அந்த ஊர் ஆலமரம் அருகே வண்டியை நிறுத்தி கண் மூடி சாயிந்து கொண்டான் .

இப்ப அவளை எப்படி பார்க்க ?அவ பேரு ஆ, ஆ தேனு. அவ எப்படி இருப்பா கூட தெரியாதே! அவ வீட்டுக்கு போனா தவிர அவளை கண்டு பிடிக்க முடியாது .

எதற்கும் அவங்க வீட்டு பக்கம் போய் பார்க்கலாம் என்று வண்டி எடுத்த போது தூரத்தில் கண்ணன் சைக்கிளில் வருவதை பார்த்தான் . அட சூப்பர். இவனை தான பாக்கணும் யோசித்துக் கொண்டு இருந்தேன் .

கண்ணன், காரை கண்டவுடன்  வந்து இருப்பது சித்தார்த் தான் கண்டு கொண்டான். சைக்கிளை வேகமாக அழுத்திய படி அவன் அருகே சென்று சந்தோஷமாக ‘நீங்க அத், இங்க அத்,எப்ப வந்தீங்க’ .வார்த்தைக்கு வார்த்தை அத் என்று தொடங்கி நிறுத்துவதை சித்தார்த் கண்டு கொண்டு

“அத்தான் வேண்டாம். வேண்டும் என்றால் மாமா சொல்லு” என்றவுடன்  கண்ணன் சந்தோஷமாக தலை ஆட்டி “மாமா, அக்காவை பார்க்க வந்தீங்களா? சரியா அவ கல்லூரி வாசலிலே நிற்கிறீங்க.”

“‘என்னது? உங்க அக்கா,கல்லூரியா?” என்று அதிர்ச்சியானான்.

“ஆமாம் மாமா. அக்கா மூன்றாவது வருடம்(IT Engineering) இங்க தான் படிக்கிறா ..”

“என்ஜினியரா?”

“என்ன மாமா அதிர்ச்சி .+2 தேர்வில் இந்த district  முதல் மாணவி. சென்னையில் மெடிசன், இன்ஜினியரிங் படிக்க சீட்  கிடைத்தது . அப்பா தான் மருத்துவம் படித்தா மாப்பிள்ளை அமைவது கஷ்டம் சொல்லீட்டாரு. சென்னை ஹாஸ்டலில் தங்க விருப்பம் இல்லாம இங்க சேர்த்துட்டா . பிரைட் ஸ்டுடென்ட் மாமா”

அட அவளிடம் போய், மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கினது இல்லை ,ஒருத்தருக்கும் இங்கிலீஷ்  தெரியாதா கேட்டு வைத்து இருக்கேனே! என்னை பற்றி என்ன நினைத்து இருப்பா? அவளை பார்த்தா முகத்தை எங்க கொண்டு போய் வைத்துக் கொள்ள !

“அக்கா, இப்ப வர நேரம் தான். நான் இப்ப தான் டியுஷன் முடித்து வரேன். போகும் போது ரெண்டு பேரும் சேர்ந்து போய்டுவோம்” என்று பேசும் போது கண்மணி அவள் தோழி கவிதா,சித்ரா ,ராஜி ,பவித்ரா,சிந்து என்று படை சூழ சிரித்து கதை பேசியபடி வந்தாள்.

“கண்மணி, உன் ஆளு போடோ  கூட இல்லை சொல்வதை எங்களை நம்ப சொல்லறியா? பொய் சொல்லாத. நாங்க சும்மா பார்த்துக்கிறோம்” என்ற ராஜியிடம் “நீ பார்த்தே கரைத்திடுவ என்று அவளுக்கு பயம்” என்று சிந்து வாரினாள்.

பவித்ரா அவள் தோழி அழகில் எப்போதும் போல மெய் மறந்து  “உன்னோட அழகு பத்தி உனக்கே தெரியல கண்மணி. மாப்பிளையோட அம்மா கட்டினா உன்னை தான் கட்டனும், நீ தான் அவங்க வீட்டு  மருமக என்று  தெளிவா சொல்லீடாங்கலாம்.”

உனக்கு யாரு சொன்னது என்ற சிந்துவிடம் “எல்லாம் எங்க அமுச்சி தான். கண்மணி வீட்டில் என்ன நடந்தது என்று புட்டு புட்டு  வெச்சிடுச்சு! கண்மணிக்கு தெரியாத மேட்டர் கூட எங்க எனக்கு தெரியுமே!”

“அப்படி என்ன இருக்கு பவி” என்ற சிந்துவிடம் “மாப்பிளை இவளிடம் பேசணும் துடியா துடிச்சாராம். இவ அப்பா  லேசில விட்டு கொடுக்கல போல! பேசினா தான் நகருவேன் ஒத்தை காலில் நின்றாராம். பேசி முடித்த பிறகு கண்மணி தான் மனைவி உறுதி செய்துட்டாறாம்.

 விட்டா கண்மணியை கையோட அவர்களுடனே அப்பவே  கூட்டிகிட்டு போய் இருப்பாறாம். நம்ம சிவம் அப்பாவை பார்த்து பயந்து, பரிசமாவது போட்டுக்கலாம் கெஞ்சி கேட்டங்கலாம்.”

மண்ணாங்கட்டி! அங்க நடந்த கூத்து எனக்கு தான தெரியும்  என்று கண்மணி பல்லை கடித்துக் கொண்டாள்.

கவிதா “தனியா என்ன பேசின தேனு. எங்க கிட்ட கூட சொல்ல மாடீன்கிற. ஆளு எப்படி. சும்மா ஹீரோ கணக்கா இருந்தாரு கேள்விபட்டேன். பேச்சு மட்டும் தான, இல்லை வேற எதுவுமா? நான் வேண்டும் என்றால் என்ன நடந்து இருக்கும் என்று என்  யூகத்தை சொல்லட்டுமா?” என்று கிண்டலில் இறங்கின போது கண்மணி கோபமாக சுள்ளென்று  “உன் கற்பனையை தூக்கி மூட்டை கட்டி வை. தொனதொனக்காம கொஞ்சம் சும்மா இருங்க டீ!தலை வலிக்குது!’.

எப்போதும், எல்லா விஷயத்தையும் சிரித்து  விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் கண்மணி இப்படி கோபமாக பேசினவுடன் அனைவரும் ஆச்சிரியபட்டனர். .

ஏற்கனவே அவள் குழப்பத்தில் இருந்தாள். அந்த சித்தார்த் அத்தனை தடவை கல்யாணத்தை நிறுத்து என்று  சொல்லியும் நான் விளையாட்டு தனமா சரி சொன்னது தப்போ என்று நூறாவது முறையாக எண்ணி வருந்திக் கொண்டு இருந்தாள். அப்பவே படித்த பிறகு கல்யாணம் சொல்லி இருந்தா, அப்பா கல்யாண பேச்சை ஒரு வருடத்துக்கு தள்ளி போட்டு இருப்பாரோ!

அவள் சொன்னாலும் அவ அப்பா கண்டிப்பா கேட்டு இருக்க மாட்டார் என்று நூறு சதவீதம் உறுதியாக நம்பினாள். அப்ப இதில் நான் என்ன செய்ய ?

சித்தார்த் கல்யாணம் வேண்டாம் என்று எதற்கு  அப்படி பிடிவாதம் பிடித்தார். அவங்க அம்மாக்கு உடம்பு சரி இல்லாத காரணத்தால் தான் வந்ததா கேள்வி பட்டேனே!

பிரியமே இல்லாம கல்யாணம் செய்தால் அந்த உறவு நிலைக்குமா? வெறுப்பு மேலும் அதிகமாகுமே! விளையாட்டா செய்ய போய் இப்படி மாட்டிக் கொண்டேனே! இதை யாரிடம் சொல்ல? இப்போது பார்த்து பெரிய மாமா பையன் ஷ்யாம்  வெளியூருக்கு போய் இருக்கானே! அவன் இருந்தாவலாவது எதாவது ஐடியா கொடுத்து இருப்பான் என்று வருந்தினாள்.

முதலில்  சொந்தத்திற்குள்ளே திருமணம் செய்ய எண்ணி  தான், அவள்  மாமா மகன் ஷ்யாமை  கண்மணிக்கு   கேட்டார்கள். இருவரும் நாங்க அப்படி  பழகவில்லை  என்றவுடன்  சிவம், சித்துவிற்கு பேசி முடித்தார்.

“மாமா, அக்கா வந்தாச்சு” என்ற திசையை பார்த்து இதில் இவன் அக்கா யாரு? குழம்பினான்

Advertisement