Advertisement

தூறல் 2.2:

“மாமா, அக்கா வந்தாச்சு” என்ற திசையை பார்த்து இதில் இவன் அக்கா யாரு? குழம்பினான். எப்படியும் அவளே அருகில் வருவா! அப்ப பார்த்துக்கலாம், என்று என்னும் போது ஆவலாக ஒரு பெண் சித்துவையும், அவன் காரையும், பார்த்து வியந்து , “டேய் கண்ணா! ,யாரு டா இது? இவங்களோட என்ன பேச்சு. என்ன விஷயம் கண்ணா. என்னிடம் சொல்லு” சித்துவை பார்த்த படி வழிந்தாள் .

இது தான் இவன் அக்காவா! அட கஷ்ட காலமே! எண்ணியதை உடனே முடித்து ஊருக்கு ஜூட் விட வேண்டியது தான். ஏனோ தள்ளி நின்று  இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் கண்மணி இவனை கவர்ந்தாள். இவளை எங்கயோ பார்த்து இருக்கேனே?

போன வாரத்தில் அவன் அம்மா செல் போனில் கண்மணி அழைத்த போது அவள் படம் மின்னி மறைந்தது. அதை பார்த்தது அவனுக்கு மறந்து விட்டது. பழகிய முகம் போல இருக்கே என்ற யோசனையை ஒதுக்கினான் .

சிந்து அவனிடம் ஆவலாக பேசி வழிவதை  பார்த்து,  முன்ன பின்ன இந்த பெண் காரையும், என்னை போல மனிதர்களையும் பார்த்தது இல்லையா? எதற்கு இப்படி பார்க்கிறா என்று எரிச்சலுற்றான். அம்மாக்கு இத்தனை மோசமான டேஸ்டா! இத்தனை காலம் என்னுடன் இருக்காங்க. நான் எப்படி என்று கூடவா தெரியாது .

இவளை சொல்லி குற்றம் இல்லை. பணக்கார இடம் ,நல்ல வசதியா சிடியில் இருக்கலாம் நினைத்து இருக்கலாம். அதனால் தான் அத்தனை  தடவை நான் சொல்லியும் கல்யாணத்திற்கு சரி என்று இருக்கிறாள். இப்ப எனக்கு ஒன்றும் இல்லை. இவங்களுக்கு தான் நஷ்டம். நல்ல படட்டும் என்று கருவிக் கொண்டான் .

“கண்ணா! நான் உங்க அக்காவோட தனியா பேசணும்”

“கண்டிப்பா மாமா. அதோ, அங்கு இருக்கும் கோவிலில் யாரும் இருக்க மாட்டாங்க. போய் பேசுங்க!”

அவன் அக்காகாக காத்துக் கொண்டு இருக்காமல் வேகமாக முன்னே சென்றான்.

அவன் அக்கா கண்மணி, என்று சித்து எண்ணிய பெண் கொஞ்சம் குண்டாக, கருப்பாக இருந்தாள். வாயில் பல் அங்கங்கே தொத்திக் கொண்டு இருந்தது. கண்ணில் வேற பெரிய சோடா புட்டி . அவளை பார்த்து சித்து நொந்து நூடில்ஸ் ஆனான்.

அவன் நண்பர்கள் தேவ் மற்றும் கிருஷ்ணன், ஆன்ட்டி சாய்ஸ்  சூப்பர். சிஸ்டர் அழகா இருப்பதனால் கல்யாணத்திற்கு  ஓகே சொல்லு என்று  சொன்னார்களே!

ரெண்டு பேருக்கும் எத்தனை நல்ல எண்ணம்! இப்ப மட்டும்  அவர்கள் கையில் கிடைத்தால் தொலைந்தார்கள் என்று கருவிக் கொண்டான் .

கண்ணன் ஸ்மார்டா இருக்கான். அவன் அக்கா, இந்த பெண் எப்படி ? யார் சொல்வதும் ஒத்து போகலையே என்று யோசித்தான்.

தோழிகளை அனுப்பிவிட்டு   கண்மணி, கண்ணனிடம் வந்து இருப்பது யாரு? என்ன? என்று கேட்டாள்.

அவளுக்கு ஏற்கனவே ஓர் யூகம் இருந்தது. அவள் தான் தினமும் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தாலே! மனதில் ஒ, இவர் தான் சித்தார்த்தா! வந்தாச்சா! நானே இவரிடம் பேசணும் இருந்தேன். இவருக்கு விருப்பம் இல்லாம நடக்கும் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த முடியுமா பார்க்கணும். அவரிடமே ஒரு வழி கேட்போம் என்று கோவிலுக்கு சென்றாள்.

கண்மணியிடம் என்ன பேச? என்று சித்து  மனதில் ஒத்திகை செய்து கொண்டு இருந்தான். இதமான மாலை நேர காற்றை பல நாள் கழித்து, ஆழ்ந்து சுவாசித்து அனுபவித்தான். மனம் லேசானது போல இருந்தது.

கண்மணி மனதில் இவன் கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்த சொல்லி தான் கேட்க வந்து இருக்கான் என்று முடிவு செய்தாள்.

இப்போது கல்யாணம் நின்றால் ஊரில் பல பேர் பல விதமாக பேசுவார்களே! அப்பா இதை தாங்குவாரா? எத்தனை சந்தோஷமா இருக்கார். இனி அவளை யார் கல்யாணம் செய்ய  முன் வருவார்கள் என்று வருந்தினாள். தைரியம் இருந்தால் இவன் என் அப்பாவிடமே சொல்ல வேண்டியது தான? நானா என்னை கல்யாணம் செய்ய வாங்க கூப்பிட்டேன்.

இந்த ஒரு மாதம்  நான் பட்டது எல்லாம் போதும். என் வாழ்க்கையில் கல்யாணமே வேண்டாம். மேலும் படித்து அப்பா, அம்மாவுடன்  நிம்மதியாக காலத்தை கழிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

கோவிலில் என்ன காத்துக் கொண்டு இருக்கிறது ??

 இனி கண்மணி வாழ்வில் தூறல் மழையா? இல்லை ஆலங்கட்டி மழையா பார்க்கலாம் .

கண்மணி கோவிலுக்கு செல்லும் வழியில் சித்தார்த்திடம் என்ன பேசணும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டாள். அவள் எண்ணப்படி எல்லாம் நடக்கணும் என்று அம்மனை  வேண்டி, நிதானமாக சித்தார்த் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.

மரத்தடியில் அமர்ந்து இருந்த சித்தார்த்தை பார்வையால் அளந்து , எடை  போட்டபடி  அவன் அருகில் சென்றாள்.

கண்மணியை  பார்த்தவுடன், இவ, இவ எதுக்கு வரா? எங்க வரா ? கண்ணன் அக்காவிடம்  தான பேசணும் சொன்னேன். அவள் பின்னால்  கண்மணி என்று நினைத்த அவள் தோழியை தேடினான்.  நல்ல வேலை அவ வரவில்லை.  மனதில் அவ வராதது ஒரு விதத்தில் நல்லது தான். அவளும், அவ பேச்சும் என்று நிம்மதி மூச்சு விட்டான்.

அவளுக்காக இந்த மேடம்  தூது செய்தி கொண்டு வந்து இருக்காளா? பார்த்தா  சின்ன  பெண் போல இருக்கா? இவ எல்லாம் தூது என்று எண்ணி சிரித்துக் கொண்டான். எப்படியோ நான் நினைத்த காரியம் முடிந்தால் சரி .

கண்மணி அவனை கண்டுக்காமல் அவன் பார்வை படும் தூரத்தில் அமர்ந்து கொண்டாள். எதா இருந்தாலும் முதலில் அவனே சொல்லட்டும் என்று கோபுரத்தை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

மாலை நேரம் ஆதலால் பறவைகள் ஒலி எழுப்பி, கூட்டை நோக்கி அங்கும் இங்கும்  பறந்து கொண்டு இருந்தது. அதை எல்லாம் கண்மணி  ஒரு வித சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாள். எனக்கும் பறவை போல பறக்கும் சக்தி இருந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்  என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.

அவள் பார்வையை தொடர்ந்து, பட்டிக்காடு என்பது சரியா தான் இருக்கு.பட்டிகாட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி  பார்வையை பாரு . வந்த வேலை விட்டு வேடிக்கை பார்ப்பதை பாரு! இவ எல்லாம் என்னத்த படிக்கிறாளோ ? பாடம் நடத்தும் போது இப்படி வேடிக்கை  பார்த்தால் இவள் வாத்தி உண்டு இல்லை செய்திட மாட்டான். ஏனோ அவள் வாத்தியாரிடம் திட்டு வாங்குவது போல நினைத்தவுடன்  சந்தோஷபட்டான் .

சில நேர மௌனத்திற்கு பிறகு, இது வேளைக்கு ஆகாது, எனக்கு பொறுமை இல்லை என்று தொண்டையை செருமி  “என்னால் கண்மணியை கல்யாணம் செய்ய முடியாது” என்றவுடன் இவன் யாரிடம் பேசறான் என்று கண்மணி முழித்தாள் .

அவள் பார்வையை கண்டுக்காமல் “அவளுக்கும், எனக்கும் ஒத்து வராது சொல்லிடுங்க! இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி இருந்தேன். அவங்க ஒன்றும் செய்தது போல தெரியல? நீங்க அவங்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லணும். அவள் நான் சொன்னதை புரிந்து கொள்ளவே இல்லை. அதுக்காக தான் இருக்கும் வேலை எல்லாம் விட்டு இத்தனை தூரம் வந்தேன். எத்தனை வேலை! அவளால் எல்லாம் கெட்டுது.

உங்க மட்டி, மடச்சி தோழிக்கு ஒரு தடவை சொன்னால் உறைக்கவே இல்லை. கொஞ்சம் புத்தியில் உரைக்கும் படி எடுத்து சொல்லுங்க . என்ன? சொன்னது மறக்காது தான? சொல்லிடுவேல” என்று கண்மணியை மிரட்டினான்.

கண்மணி இயற்கையிலே ரொம்ப தன்மையான, அமைதியான  பெண். எதையும்  பொறுத்து போகும் ராகம் . இருந்தாலும் ‘இவன்  பேசுவது கொஞ்சம் அதிகமே! கொஞ்சம் இல்லை ரொம்பவே’ என்று மனதில்  திட்டிக் கொண்டாள் .

அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது கண்மணி செல் போன்  அலறியது .நல்ல விலை உயர்ந்த செல் போன். போனை பார்த்து சித்தார்த்  இந்த பட்டிகாட்டிற்கு  இத்தனை விலை உயர்ந்த போனா ? டூ மச். அதை எப்படி உபயோகபடுத்தனும் என்றாவது தெரியுமா ?சும்மா, நம்ம  முன்னால்  சீன போடுறா? என்ன செய்வா பார்க்கலாம் என்று அவள் கையில் உள்ள போனையும் அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான்.

அதை எடுத்து காதில் வைத்தவுடன் ‘எஸ் கண்மணி ஸ்பீகிங்’ என்று ஆங்கிலத்தில்  ஆரம்பித்தாள் . தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசியது எல்லாம் அவன் காதில் விழவில்லை

அதிர்ச்சியில், சித்து வாய் தானாக திறந்தது. “what ? இவளா? நீ , நீ , தான் கண்மணியா?”

“I will call you later! bye” பேசி முடித்து, அவன் அதிர்ந்த தோற்றத்தை கண்டு  “ஏன், நான் தான் கண்மணி தெரிந்தவுடன்  உடனே கல்யாணத்திற்கு  சரி சொல்லிடுவீங்களா” என்று எகத்தாளமாக கேட்டாள்.

உனக்கு இத்தனை கர்வம் ஆகாது பெண்ணே! நீ உலக அழகியா இருந்தாலும் உன்னை கட்டிக்க முடியாது. கண்ணனுடன்  பார்த்த அந்த பெண் கண்மணி  இல்லை என்று நினைக்கவே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

கண்மணி முன்னால் அவன் அசடு வழிந்ததை  எண்ணி கடுப்பில்  ” நீ தான் கண்மணி என்று முன்பே சொல்வதற்கு என்ன? வாயில் என்ன கொழுக்கட்டையா  வைத்து இருந்தாய்” என்று காட்டமாக கேள்வி வந்தவுடன்

“ம்ம்ஹ்ஹ்ம்ம். நல்லா பாருங்க! வெறுமனே ஆரஞ்ச் மிட்டாய் தான்” என்று மிட்டாயினால் சிவந்த  ஆரஞ்ச் நிற வாயை திறந்து காண்பித்தாள்.

“ரொம்ப முக்கியம்”  என்று எரிச்சல் பட்டு

 “நான் வந்த வேலை முடிந்தது. நான் சொல்வது எல்லாம் சொல்லியாச்சு. இனி கல்யாணத்தை நிறுத்துவது உன் பொறுப்பு. கூடிய சீக்கிரம் நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன்! நீ லேட்  செய்யும் ஒவ்வொரு நாளும் எனக்கு தான் கஷ்டம். டென்ஷன். என்ன நான் சொல்வது  புரியுதா ?” என்று அழுந்த கேட்டான்.

கண்மணி நிதானமாக  ,”மிஸ்டர்  சித்தார்த்! என்னை நீங்க பேச விட்டா தான நான் யாரு என்று சொல்ல முடியும். அன்றும் இப்படி தான் நீங்க பாட்டுக்கு வந்தீங்க, பேசுனீங்க, கிளம்பி போய்டீங்க . இப்பவும் அப்படியே !அப்புறம் என்ன பேச.

நீங்க இன்னும் மன்னர் காலத்தில் இருக்கீங்களா? நீங்க ஆர்டர் போட்டவுடனே நான் உத்தரவு மகாராஜா! சரிங்க எசமான், அப்படியே ஆகட்டும்  சொல்லணும் எதிர் பார்க்கிறீங்களா? அது எப்படி?”

அவன் ஏதோ சொல்ல வருவதை நிறுத்தி “நானா  உங்களை பெண் பார்க்க அழைத்தேன். பட்டணத்தில், அதாவது சிடியில் இருந்து பத்து பேருடன் பெருமைக்காக  வந்து பெண் பார்த்தது நானா?

நானா எங்க வீட்டு  பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் நல்லா இருக்கு   சாப்பிட வாங்க கூப்பிட்டேன். நானா உங்களை கல்யாணம் கட்டிக்கிறேன் சொன்னேன். நானா உங்க அம்மாவிடம் எனக்கு நகை போடுங்க கேட்டேன். நானா பரிசம் போட சொன்னேன்! நானா சீக்கிரமே திருமணம் செய்ய வேண்டும் சொன்னேன். ஹ்ம்ம்ம்ம். இது எதையும் நான் செய்யாத போது  கல்யாணத்தை மட்டும் என்னை நிறுத்த சொன்னால் எப்படி சார். கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்” .

அவன் சொன்னதை கேட்காமல், சின்ன பெண்  எதிர்த்து கேள்வி கேட்கிறா என்று சித்தார்த்துக்கு  ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

கண்மணி மனதில், இவனை இன்று ஒரு வழி  செய்யாம விட கூடாது என்று எண்ணி “அது எல்லாம் போதாது என்று என்னை பற்றி எதுவும் தெரியாமல், நீங்களா கற்பனை செய்து  எனக்கு படிக்க தெரியாது , பட்டிக்காடு சொல்ல சொன்னேன். அது எப்படி, மழைக்கு கூட பள்ளிக் கூடம் ஒதுங்கி இருக்க மாட்டோமா? உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் நினைப்பா ? தமிழ் நாட்டில் தான இருக்கீங்க . அதில் ஆங்கிலம் பேச தெரியவில்லை என்றால் என்ன தப்பு இருக்கு .

உங்களுக்கு மட்டும் தான் பேச தெரியும் பேசினால் எப்படி .. நான் உங்களிடம் பணி புரியும் ஆள் கிடையாது. முதலில் அதை மனதில்  நிறுத்தி வையுங்கள்.

என் தம்பியிடம், எப்படி அப்படி கடுமையாக நடந்து கொள்ளலாம் . உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது. நீங்க படித்து இருந்தால், பெரிய தொழில் அதிபரா இருந்தால் அது எல்லாம் உங்க எல்லைக்குள். என்னிடம் வேண்டாம்! என்ன நான் சொன்னது புரிந்ததா?” என்று அதே குரலில் அவன் சொன்னதை அவனிடமே  திருப்பி போட்டாள்.

 கண்மணி கேள்வியில் சித்தார்த் அரண்டு விட்டான். பட்டிக்காடு ,சொன்னால் எதையும் கேட்பாள். அப்படி கேட்கவில்லை என்றால் கொஞ்சம் மிரட்டலாம் என்று எண்ணிக் கொண்டு வந்ததிற்கு நேர் மாறாக கண்மணி அவனை மிரட்டிக் கொண்டு இருந்தாள் .

“ஒய் ,என்ன பேசிகிட்டே போற! எனக்கு கல்யாணம் செய்ய  இஷ்டம் இல்லை. முக்கியமா, அதுவும் உன்னை.”

“அதை பற்றி எனக்கு கவலை இல்லை” என்று உடனே பட்டென்று வார்த்தைகள் வந்து விழுந்தது .

சித்தார்த் பொறுமை பறந்தது. “கடைசியா என்ன தான் சொல்லற ?”

“எங்க அப்பா, இந்த ஊரை பொறுத்த வரை எனக்கு பரிசம் போட்ட நீங்க தான் மாப்பிள்ளை, என் கணவர். அவங்க சொன்ன தேதியில் கல்யாணம் நடக்கும். என்னால் இந்த கல்யாணத்தை நிறத்த முடியாது. உங்களால் ஆனதை செய்துக்கோங்க. ஐ  டோன்ட் கேர்.”

“வேண்டாம், என்னிடம் வெச்சுக்காத?” என்று விரல் நீட்டி மிரட்டினான் . அதற்கு எல்லாம் அசரும் ஆளா நம்ம கண்மணி

அவன் கையில் இருக்கும் செல் போனை பிடுங்கி  ‘கண்மணி’ என்று அவள் நம்பரை பதிவு  செய்து அவனிடம் கொடுத்தாள் .

“சும்மா வீட்டு எண்ணிற்கு கூப்பிட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் . எதா இருந்தாலும் என்னை நேரா தொடர்பு கொள்ளலாம்! என்ன புரிந்ததா?”  என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல்  மட மட என்று வெளியேறினாள் .

அடிப்பாவி! நான் தான் இவளை அழைத்தேன் என்று தெரிந்தும் என்னிடம் பேசாம விட்டு இருக்கா? இவளை கொஞ்சம் குறைவா மதிப்பீடு செய்துட்டேனோ? என்னையே தூக்கி கணம் பார்க்கிறா?

சித்தார்த் கோபத்தில், இயலாமையில் காற்றில் கைகளை வீசினான் .

அலுவகத்தில், அவன் கண்ணசைவிலே எப்படி வேலை நடக்கும். அவனிடம் பேச, அவனை பார்க்க  appointment   கிடைக்கவே ஒரு வாரம் காத்துக் கொண்டு இருப்பார்கள். எதிர்த்து நின்று பேசவே  பயப்படுவார்கள் .

அப்படி பட்ட ஆளை, தாய கட்டை போல எளிதா உருட்டி விளையாடி விட்டு  போயிட்டாளே! இவளுக்கே இப்படி திமிரு என்றால் எனக்கு எத்தனை இருக்கும் . போனா போகுது சின்ன பெண் பார்த்தால் என்னிடமே இவ வேலையை காட்டறா? கல்யாணத்தை   எப்படி நிறுத்தறேன் என்று மட்டும் பாரு . அப்ப பேசிக்கிறேன் உன்னிடம் . உன்னை அழ வைக்காமல் விட போறது இல்லை.

வெளியே வந்த கண்மணியிடம் கண்ணன் “அக்கா, அத்தான் … தொடங்கி மாமா  என்ன சொன்னாரு? அத்,மாமா உன்னை பார்க்கவா இத்தனை தூரம் வந்தாரு.”

அவன்  சந்தோஷத்தில் “எனக்கு என்னமோ சினிமா படம் பார்ப்பது போல இருக்கு அக்கா!”

ஒ ஹோ!  சாருக்கு அத்தான் கூப்பிட்டால் பிடிக்காதோ! இனி அத்தான் தவிர என் வாயில் எதுவும் வராது மிஸ்டர் சித்தார்த் என்று சிரித்துக் கொண்டாள். 

அவனிடம் உண்மையை கூறாமல் “இந்த வழியா ஏதோ வேலையா வந்தாராம். சரி, என்னையும் பார்த்திட்டு போகலாம் வந்துட்டாரு . போகலாம் வா,மணி ஆச்சு! அம்மா தேடும்” என்று  இருவரும் சலசலத்தபடி வீட்டிற்கு கிளம்பினார்கள்.

சித்தார்த்  கோவிலில் இருந்து வெளியே வரும் போது கண்மணி அப்பாவும், அவள் பெரியப்பா மகனுமான கதிர்வேல் பார்த்து விட்டனர்.

“அட, மாப்பிளை தம்பி. எங்க இத்தனை  தூரம். என்ன சோலியா வந்தீங்க. இத்தனை தொலைவு வந்திட்டு  நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி? வாங்க வீட்டுக்கு போகலாம் . டேய் கதிர்!  செல்லமா கிட்ட விருந்து ஏற்பாடு செய்ய சொல்லு ” என்று ஆசையாக உபசரித்தார்.

அச்சோ! அந்த ராங்கியை மறுபடியும் பார்க்கனுமா? இவ வீடு சாப்பாட்டை சாப்பிட வந்தது போல தான பேசுவா ?அதற்கு  பயந்து  “நான் இங்க பக்கத்தில்  ஒரு பாக்டரி கட்ட இடம் பார்க்கலாம் வந்தேன். இரவிற்குள் வீடு போய்  சேரனும் .அம்மா காத்துக் கொண்டு இருப்பாங்க” என்றதை அவர்கள் காதில் வாங்காமல் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

சித்தார்த் நுழையும் போது  கண்மணி, அவள் வீட்டு திண்ணையில் இருக்கும் ஊஞ்சலில்  வேகமாக ஆடிக் கொண்டு இருந்தாள் . ராட்ஷசி! என்னை அப்படி மிரட்டிவிட்டு இங்க வந்து நிம்மதியா ஊஞ்சல் ஆடுவதை  பாரு ‘அப்படியே விழுந்தா நல்லா  இருக்கும்’ என்று திட்டிக் கொண்டான் .

இவன் எதுக்கு இங்க வரான்! அவ அப்பா பார்வையை கண்டு வேகமாக உள்ளே சென்றாள். அதற்கு பிறகு கண்மணி  அவன் கண் முன் வரவே இல்லை. அதை நினைத்து  ‘வாழ்க சிவம்’ .

கண்ணசைவிலே  அந்த ராங்கியை கட்டி போட்டாரே! பாராட்ட வேண்டிய விஷயம் தான். நல்ல வேலை. புண்ணியவதி கண் முன்னால் வந்து என்னை டென்ஷன் செய்யல என்று எண்ணிக் கொண்டான் .

அவளை பார்த்து அவள் அப்பா முன்பு  நாலு வார்த்தை  கேட்டால் தான் புத்தி வரும் . என்ன தான் திட்டி, சண்டை போட்டாலும் கிளம்பும்  போது மனம் அவளை எதிர் பார்த்ததோ!

சித்தார்த் போன முயற்சி தோல்வியை தழுவியதை எண்ணி கோபம் கொண்டான்.

**********

Advertisement