Advertisement

19:

” பெண்டாட்டியா வா சொன்னால் கூட பொறுத்து இருப்பேன் ! என்னை இத்தனை கேவலமாக உங்களால் எப்படி நினைக்க தோணுது….நீங்க . நீங்க  எல்லாம் மனித ஜென்மமே இல்லை” என்று அவன் கைகளை உதறி ,கண்மணி அழுது கொண்டே பக்கத்துக்கு அறைக்கு சென்றுவிட்டாள்.

அவன் கேட்டதை எண்ணி அவனே வெட்கினான்.

அவள் பின்னால் ஓட துடித்த கால்களை  கட்டுபடுத்தினான். எத்தனை திட்டினாலும் என் பின்னாலே சுற்றி வராளே! அவளை சமாதனம் செய்ய ஆள் இல்லாமல் விடிய விடிய அழுதே கரைந்தாள்.

சித்துவும் தூங்காமல் நடந்து கொண்டு இருந்ததால் கால் வலிக்க தொடங்கியது .“அதற்குள்  எதற்கு ஸ்ட்ரைன்  செய்து கொண்டீங்க” என்று மருத்துவர் கடிந்து கொண்டார்.

சித்து உடல் நிலையை கூறி மேலும் வழக்கு ரெண்டு மாதத்துக்கு  தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து வந்த நாட்களில் கண்மணி சித்து இருக்கும் அறை பக்கமே செல்லவில்லை . வீட்டை விட்டே போயிட்டாளா என்று எண்ணும் அளவு அவள் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டாள்.

சித்து தான் அவளை காணமால் தவித்து போய்ட்டான். சண்டை போடும் சாக்கிலாவது அவளுடன் பேசலாம் பார்த்தால் ஆளை காணோமே! எந்நேரமும் அறைக்குளே எதாவது வேலையை செய்து முடங்கினாள். கடைசி பரிட்சையும் வெற்றிகரமா எழுதி முடித்தாள். காம்பசில் நல்ல வேலை தேடி வந்தது.

மூன்று மாதம் சென்னையில் பயிற்சி எடுத்து பின்னர் அமெரிக்கா செல்வதற்கு சம்மதமா என்று கேட்டு ஒப்பந்தம் போட்டனர் .

கண்மணி என்ன சொல்லியும், சித்து சமாதனம் ஆகாமல் இருக்கவே கண்மணி மனதை கல்லாக்கிக்   கொண்டு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்டாள். அதை போடுவதற்குள் அவள் எத்தனை கஷ்டபட்டால் என்று அவளுக்கு தான் தெரியும். உயிர் பிரியும் வேதனையை அனுபவித்தாள். இந்த கையெழுத்து எங்க உறவை இல்லாமல் செய்துவிடுமா ? இது என்ன தீர்மானிக்க?

 அத்தனை வேதம் முழங்க, அத்தனை பேர் ஆசியும் பொய்யா ? தீர்ப்பு வருவதற்குள் இவனை ஒரு வழி செய்யறேன் .. கண்மணி யாரு காட்டறேன்.

கண்மணி மெலிவை கண்ட ஜானகியும், வெற்றியும் கவலை கொண்டனர் . “உங்க அப்பாவை வேண்டும் என்றால் போய் பார்த்துவிட்டு வா! அவன் ஒன்றும் சொல்ல மாட்டான் . உன் தம்பியை வர சொல்லு.உனக்கு அங்க போக இஷ்டம் இல்லை என்றால் உங்க அப்பா, அம்மாவை இங்க வர சொல்லு” .

அவள் வேண்டாம் சொன்னதை கேட்டு , “என்ன பிடிவாதம் கண்மணி .அவனுக்கு தான் உடம்பு சரி ஆகிடுச்சே! மீண்டும் பழைய படி அலுவலகம் செல்ல ஆரம்பித்தாச்சு. உனக்கு இன்னும் என்ன கவலை? உனக்கும் சித்துக்கும் சண்டையா ! அவன் மகிழ்ச்சியா இருப்பது போல தான இருக்கு”. ஜானகி கேட்ட போது ஒன்றும் இல்லை என்று மழுப்பினாள்.

“அவனுக்கு இங்க இருக்க பிரியம் இல்லை என்றால் அடையார் பங்களாவிற்கு  தனி குடித்தனம் போறீங்களா ? ஏற்பாடு செய்யட்டுமா ?”

“அச்சோ! என்ன அத்தை. அப்படி ஒரு போதும் நாங்க நினைத்ததே  கிடையாது. எனக்கும் இப்படி உங்களுடன் இருக்க தான் பிடித்து இருக்கு” .

மெதுவாக குரலே எழும்பாமல் “ஏன் அத்தை அவர் எதாவது சொன்னாரா?”

“இல்லை! இங்க நிம்மதியே இல்லை சொல்லிக்கிட்டு  இருந்ததா மாமா சொன்னார்.”

கண்மணி திணறி “நான்  அவரை எந்நேரமும்  சாப்பிட சொல்லி   வற்புறுத்துவதால் அப்படி சொல்லி இருப்பாரு . நம்ம கவனிப்பில் ரொம்ப வெயிட் போட்டாராம். அது தான் . நீங்க தப்ப நினைக்காதீங்க !” இதை எல்லாம் சித்து கேட்டுக் கொண்டு  இருந்தான் .

ஒரு வீட்டில் இருந்தே அவளை பார்க்க ஒரு யுகம் ஆகுது . இதில் தனியா போயிட்டால்… நல்ல வேலை சரி என்று ஒத்துக் கொள்ளவில்லை. அவளுடன் ஒன்றாக குடும்பம் நடத்தாவிட்டாலும் பார்த்துக் கொண்டாவது இருக்கலாமே என்று அவன் மனம் கண்மணி அருகாமைக்கு  ஏங்கியது.

இதற்கிடையில் அதிதி தாயாக போகும் செய்தியை கேட்ட ஜானகியும் ,வெற்றியும் மிகவும் சந்தோசம் அடைந்தனர் .

ஜானகி “உங்களுக்கு அப்புறம்  திருமணம் நடந்தது! உன் படிப்பும் முடிந்தது . வாழ்க்கையில் எதுவும் ,கிடைக்கும் போது கிடைத்தால் தான் மதிப்பு இருக்கும். இப்போதைக்கு குழந்தை வேண்டாம்  எதாவது முடிவு இருந்தால் கொஞ்சம் யோசனை செய்யுங்க! நீ சரி இல்லை கண்மணி” .

அவள் அதிர்ந்த பார்வையை கண்டு ஜானகி சிரித்து  “உன் புருஷன் ,காதை திருகி கேள்வி  கேட்கவேண்டாம் . இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா  உடம்பு தேறிகிட்டு வருது .  மணி பத்து ஆச்சு .ஒழுங்கா நேரத்துக்கு வீட்டுக்கு வரானா? சித்துவை அடக்க அவன் பையன் தான் வரணும் போல ”

உடனே  சித்து உருவில் ஒரு சின்ன மாய கண்ணன் கண் முன்  தோன்றியது . அந்த பாக்கியம் எனக்கு ஏது? கண்ணில் துளிர்த்த நீரை உள்ளுக்குள் அடக்கி “கொஞ்ச வேலை ! இப்ப கிளம்பிட்டேன் சொன்னாரு அத்தை” என்று கண்மணி மழுப்பினாள்.

சரியாக சித்து அந்நேரம் உள்ளே வருவதை கண்டு கண்மணி அவள் அறைக்கு விரைந்தாள் . “வெட்கத்தை பாரு !” ஜானகி வெட்கம் என்று நினைத்துக் கொண்டாள்.

அதிதி விஷயம் கேள்விப்பட்டு சித்தார்த்  சந்தோசம் அடைந்தான்.

 என் சித்து மூலம் எனக்கு குழந்தையே கிடையாதா? எனக்கு அந்த பாக்கியம்  இல்லையா என்று மெத்தையில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

“புருஷனோட சொல் படி கேட்டு சந்தோஷமா நடப்பவர்களுக்கு தான் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று அம்மாக்கு தெரியாது போல! இப்ப எதுக்கு அழுகை . என் தங்கைக்கு குழந்தை பிறக்க போகுது அழுகையா? இல்லை உனக்கு என் மூலம் குழந்தையே பிறக்காது என்று அழுகையா? நாம வாழ்க்கையில் வாங்கி வந்த வரம் என்று இருக்கு தெரியுமா?

விவாகரத்து வாங்கி, நல்ல புருஷன் கையால் தாலி வாங்கி அவன் மூலம் குழந்தை பெத்துகிட்டு என்னிடம் காட்டனும்  தோணுதா” என்ற போது சித்து குரல் அவனையும் அறியாமல் பிசிறு தட்டியதோ! கண்மணி அறியாமல் உடனே சரி செய்தான் .

கண்மணி கண்ணில் ரௌதிரமாக  “உங்க லிமிட் இது தான்! இதற்கு மேல பேசுனீங்க நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது ! நான் உங்களுக்கு வேண்டாம். அப்புறம் நான் எப்படி போனால் உங்களுக்கு என்ன? எதற்கு இப்படி வார்த்தையால் கொதறி எடுக்கறீங்க?”

அவன் அசையாமல் நிற்பதை பார்த்து அவன் சட்டையை பிடித்து “உனக்கு என்ன கெடுதல் டா செய்தேன் ! எதற்கு என்னை இப்படி பழி வாங்கிற! கத்தியால் படும் காயம் தான் காயமா? ஈட்டி போன்ற    சொல்லால் ஏன் இப்படி என்னை வதைக்கிறீங்க ! என்னால் முடியல! எனக்கும் மனசு இருக்கு என்று ஏன் புரிந்து கொள்ள மாடீங்கிறீங்க!” என்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

அவளை அணைத்த படியே அவள் உடல் கனத்தை முழுதும் சரி ஆகாத காலில் தாங்கி,  ஒன்றும் சொல்லாமல்  பிடித்துக் கொண்டான் . அந்த அணைப்பு அப்போது அவனுக்கும்  தேவையாக இருந்ததோ !

சிறிது நேரத்தில் இயல்புக்கு திரும்பிய கண்மணி  “அச்சோ! இத்தனை நேரம் நிற்கறீங்க! கொஞ்சம் உட்காருங்க .மறுபடியும் கால் வலி வர போகுது” என்று பதறினாள்.

“கண்டிப்பா கால் வலிக்க தான் செய்யும் . ஒரு மூட்டை என் மீது விழுந்தால் ?”

அவள் ஏதோ சொல்ல வருவதை கண்டு “ நீ பூ போல இருக்க என்று சொல்லாத தாயே ! உன்னுடைய வெயிட் தாங்கின எனக்கு தான் தெரியும்”

அங்கே இருந்த கண்ணாடியில் அவள் உடம்பை பார்த்து  அப்படியே தான இருக்கேன் ! எப்படி குண்டு சொல்லலாம் .இவனை சும்மா விட கூடாது . அவன் சோர்ந்த முகத்தை கண்டு ஒரு விரல்  நீட்டி ஜாக்கிரதை மிரட்டி,

அவனுக்கு முறைப்பை  பரிசா தந்து வேகமாக அவனுக்கு ஜூஸ் கலக்கி எடுத்து வந்தாள். அவள் அறையில் காணாமல் ஏமாற்றம் அடைந்தாள் .

அவன் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தான் . சத்தம் இல்லாமல் அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டு ஜூஸ் கொடுத்தாள்.

“நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க! ப்ளீஸ்! எதையோ சொல்லி என் மூடை கெடுத்திடாதீங்க!”

மேலே சொல்லு என்ற பாவனையில் அவன் அமைதியா இருப்பதைக் கண்டு “ஏற்கனவே நான் சொன்னது போல , எனக்கு நீங்க கொடுக்கும் காசு, பணம் சொத்து எதுவும் வேண்டாம்”

“வேண்டாம் என்று சொல்லி பிச்சை எடுப்பதா உத்தேசமா” என்று சீறினான்.

“பேசகூடாது சொன்னதா நியாபகம் . எனக்கு பெரிய கம்பனியில் வேலை கிடைத்து இருக்கு . உங்களை மாதிரி கோடி கணக்கில் சம்பாதிக்க முடியாது  என்றாலும், ஏதோ எனக்கு தேவையான அளவு வரும் நம்பறேன் . எங்க அப்பா ,அம்மாவுடன்  போய் வாழ எனக்கு இஷ்டம் இல்லை . அவங்க எல்லாரும் உங்களை குறை சொல்வதை என்னால் பொறுத்துக்க முடியாது . அதனால் தனியா தான் இருக்க போறேன்! நிச்சயம் உங்க கண்  முன்னால் வளம் வர மாட்டேன் . கண் காணாத தூரத்துக்கு போய்டுவேன் !

என்னால் நீங்க யாரையோ கல்யாணம் செய்து சந்தோஷமா வாழ்வதை பார்க்க முடியாது ! அத்தனை நல்லவ கிடையாது .”

நான் ,கல்யாணம் ….

“முட்டாள்” என்று பல்லைக் கடித்தான் .

“என்னை முரடன் சொன்னால் உனக்கு என்ன?”

“விவாகரத்து செய்தாலும் நீங்க தான் எனக்கு கணவர் . உங்களுக்காக தான் கையெழுத்து போட்டேன் ! என்னை நீங்க எதிலும் வற்புறுத்த முடியாது . …. இதமான இந்த  இரவு  நேர காற்றை, அதுவும் பௌர்ணமி இரவில்  உங்களுடன் சேர்ந்து கழிக்கணும் என்று என்னுடைய பல நாள் கனவு இன்று தான் உண்மையாகி இருக்கு .தேங்க்ஸ்..”

“சொல்ல வந்ததை சொன்னாய் என்றால்? நான் போகணும்” என்று சித்தார்த்  அழுத்தமாக கூறினவுடன் “எனக்கு உங்க காசு, பணம் கண்டிப்பா வேண்டாம் . உங்களை விட்டு பிரிந்தால் உங்க வாழ்க்கையில் மறுபடியும் நுழையமாட்டேன் . இது என்னை விட ,நான் உயிரா நேசிக்கும் , பிரியமா இருக்கும் உங்க மீது சத்தியம் . இதை காரணம் காட்டி மறுபடியும் வருவேன் கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம்” .

ஏதோ பீடிகை போடறாலே “சொல்ல வந்ததை  சொல்லி தொலை !”

“நான் உங்க ….”

அவன் கண்களை கண்டு எச்சிலை விழுங்கி, கண்ணீரை மறைத்து, அவன் கைகளை இறுக பற்றி “நீங்க சொன்னதுக்கு சம்மதம். விலை உங்க குழந்தை மட்டும் போதும் . நான் உங்க குழந்தையை சுமக்கனும். என் இந்த ஜென்ம ஒரே ஆசை இது தான் . ப்ளீஸ் முடியாது சொல்லாதீங்க!” அவள் கண்ணில் ஆட்டம் காட்டிய கண்ணீர் முத்துக்கள் அவன் கையில்  விழுந்து சிதறியது.

அவளை அள்ளி அணைத்து அப்படியே அவள் கேட்டதை உடனே  கொடுக்கணும் என்ற எண்ணத்தை கட்டுபடுத்திக் கொண்டு ஒன்றும் பேசாமல் நகர்ந்தான். கண்மணி கேட்டும் அவனால் தர முடியாதை எண்ணி வருத்தம் கொண்டான் .

சித்து நகர்ந்ததை பார்த்து கோபம் கொண்டு, இனி இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை, அதிரடி நடவடிக்கை தான் சரி வரும் . அவன் அறைக்குளே சென்று அவன் வருவதற்குள்  கட்டிலே அவன் இடத்திலே படுத்துக் கொண்டாள்.

அதை பார்த்து, மனிதனை இப்படி படுத்தினால் என்ன செய்ய முடியும் ! என் பொறுமையை இப்படி சோதிக்கிறாலே! என்ன வேண்டும் என்றாலும் நடக்கட்டும் !அவள் கேட்டதை கொடுத்துவிட்டால் தான் என்ன ?

என் பெண்டாட்டி தான என்ற உரிமை பேய் ஆட்டம் காட்டியது . இவளை என்று அப்படியே அள்ளி அணைத்து தூக்கிக் கொண்ட போது அவனிடம் இருந்து திமிறி  “விடு டா ! எங்க தூக்கிட்டு போற ! நான் எங்கயும் வரல “

“நீ கேட்டது கொடுக்க வேண்டாம் ! என்னமோ டயலாக் எல்லாம் பேசின ! என்ன ரெடியா ?” கண்மணி பேச்சிழந்து அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டாள்.

வெளியே தூறும் மழையில்  அவளை தூக்கி சென்ற போது குளிரில் அவள் தேகம் சிலிர்த்தது. அதை உணர்ந்து சித்து தேகமும் சிலிர்த்தது . கண்மணி செவிதலில்  மழை துளிகள் பட்டவுடன் சிவந்த ரோஜாக்களில் இருக்கும் பனீர் துளிகள் போல போதை ஏற்றி அவனை ருசிக்க தூண்டியது .

உணர்ச்சிகளை கட்டுபடுத்தி மழை என்று பாராமல்  அவளை ஊஞ்சலில் அப்படியே விட்டு வேகமாக அவன் அறைக்கு சென்று கதவை அறைந்து  சாத்திவிட்டான் .

கண்மணிக்கு என்ன நடக்குதே என்று புரியவே நேரம் பிடித்தது .

இவனை …

இவனா வந்து அழைக்கும் வரை நான் நகர போவது இல்லை .இன்று சித்துவா,நானா பார்த்திடறேன் !

என்ன தான் சபதம் போல கூறிக் கொண்டாலும் இடி, மழை ,தனிமை அவளை அச்சுரித்தியது. கோழி குஞ்சு போல சுருண்டு அமர்ந்து கொண்டாள்.

என்ன சொல்லி இவனுக்கு புரிய வைக்க ?

தண்ணீரில் மீன் அழுவது போல வெளியே தெரியாமல்  அவள் அழுகை மழையில் கரைந்தது .

நள்ளிரவு வரை நடுங்கும் குளிரில் , கொட்டும் மழையில் அதே நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தாள்.

அதுவரை  வேளையில்  மூழ்கி இருந்த சித்து இடி இடித்தவுடன் , இவளுக்கு சும்மாவே இடி என்றால் பயம்! குட்டி பிசாசு தூங்கறாளோ? இல்லையோ? நான் வேற அதிகமா கோபப்படுத்திவிட்டேன், என்று அவள் அறைக்குள் சென்று பார்த்த போது கண்மணி அங்கு இல்லை .எங்க போன ?

ஒரு வேலை இடிக்கு பயந்து கட்டில் அடியில் ஒளிந்து கொண்டாளா ? என்று சிரித்த படி அங்கு தேடினான் .

அங்கு காணாமல் பதறி , உடனே பால்கனி ஊஞ்சலில் பார்த்த போது கண்மணி நடுங்கிய படி அப்படியே அமர்ந்து கொண்டு இருந்தாள்.

ஒ மை கோட்.

“முட்டாள்” என்று திட்டி வேகமாக அவள் அருகில் சென்று அவளை தூக்கினான் .

“என்னை விடு டா! இங்க இருந்து இனி கீழே தூக்கி போட போறீங்களா! பெரிய பாறை இருக்கும் இடமா  பார்த்து போடுங்க !அப்படியே போய் சேர்ந்திடறேன்! கொஞ்சம் ,கொஞ்சமா  சாவதர்க்கு   அதுவே மேல் .எல்லாருக்கும் நிம்மதி! முக்கியமா உங்களுக்கு” .

அவள் பேச்சு அவனை ஈட்டி போல தாக்கியது .

“ப்ளீஸ் கண்மணி! உள்ளே வா ! எப்படி இடிக்குது பாரு  !”

“நான் எப்படி போனால் உங்களுக்கு என்ன ?என்னை தொடாதீங்க !”

போராடி பார்த்து  அவளை உள்ளே  தூக்கி சென்றான் .

அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருந்ததை அறிந்து குளியல் அறையில் ஷவர் , சுடு நீர் அடியில் அவளை அணைத்த படி நின்றுகொண்டான் .

குளிர் கொஞ்சம் கொஞ்சமா மட்டுப்பட்டது . அவள் முகத்தில் விழுந்த நீர் துவளைகளை பார்த்து நிலை தடுமாறினான் . “கண்மணி, என்னை நீ மன்னிக்கணும் …நான் அப்படி இறக்கம் இல்லாமல் உன்னை மழையில் விட்டு வந்து இருக்க கூடாது . நீ கேட்டதை எனக்கு கொடுக்கணும் ஆசை தான் !ஆனால் ?………..”

 “பேசாத டா” என்று அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள்.

எத்தனை நேரம் அப்படியே சென்றதோ !

“தூங்கி விட்டாயா? எனக்கு குளிருது ! தொட்டியில் இருக்கும்  தண்ணீர் எல்லாம் காலி .உங்க தோட்டம் நினைத்துக் கொண்டாயா ?வா முதலில் துணி மாற்று ! நான் உதவறேன் !”

அதுவரை மோன நிலையில் இருந்தவள்

“என்னது ?”

“அப்படி தான் வா டி !”என்று  ஹேர் டரையர் போட்டு காயவைத்தான் .”நிஜ முடியா தேனு !”

இடுப்பு வரை நீண்டு  இருக்கும் கருங்கூந்தலை கண்டு “இத்தனை நீளமா? நான் கூட சவுரி என்று தான நினைத்துக் கொண்டு இருந்தேன் !”

“நினைப்பீங்க? எங்க ஆத்தா தான் ஏதோ எண்ணெய் காய்ச்சி தருவாங்க ! எப்படி டா ஒன்றுமே தெரியாத மாதிரி ,நடக்காது போல சீன் போடற !”

கண்மணி பாவமாக “நான் கேட்க கூடாததை கேட்டேனா சித்து !எனக்கு உரிமை இல்லையா ?”

சித்து அதற்கு பதில் சொல்லாமல் அமைதியானான் . அவன் உனக்கு இல்லாத உரிமை  யாருக்கு டீ என்று  உள்ளுக்குள் மறுகிக் கொண்டு இருந்தான் .

இப்படி செய்தும்  இவன் மீது கோபம் இல்லையே ! ஏனோ சித்து மீது கண்மணிக்கு கோபம் வர மறுத்தது .இதுவே  அவ தம்பி எதாவது செய்து இருந்தால் பெரிய பஞ்சாயத்தே கூட்டி இருப்பாள் .

அவள் தும்மல் போடுவதை பார்த்து “இது தேவையா ? கொஞ்சம் சூடா பால் குடி தேனு” .

“உங்களுக்கு” என்று அவனுக்கு ஊற்றி கொடுத்தாள். “மழை நேரத்தில்  ஏதோ சரக்கு ஊற்றி கொடுத்தால் தேவல ..”

“இருந்தா எடுங்க !நானும் கொஞ்சம் குடிக்கறேன்” என்ற போது சித்து குடித்துக்  கொண்டு இருந்த  பால் புரை ஏறியது .

 “உங்களுக்கு கெடுதல் என்றால் எனக்கும் அப்படியே இருந்திட்டு போகட்டுமே !உங்க ஷேர் கம்மியாகிவிடும் பார்க்கறீங்களா?அட்ஜஸ்ட் செய்துக்கலாம் ” என்று கண்ணடித்தாள்.

“சரியான குடிகாரி போல ! நான் சும்மா சொன்னா ஒரு கோட்டையே கட்டிவிட்டாய்”.

கண்மணி சித்துவிடம்  ” நான், என்ன தான் சண்டை போட்டாலும் நீ சரியான ராட்ஷசன்  ! கல்நெஞ்சக்காரன், எமகாதகன்   டா ! நான் கேட்டதை மட்டும் கொடுக்க உனக்கு இஷ்டமே இல்லை ! என்னை இப்படி இம்சை செய்வதினால் அடுத்த ஜென்மத்திலும் நானே உனக்கு பெண்டாட்டியா வர போறேன் !”

சித்து சிரித்து “பேசாம படு டீ” என்று அணைத்து படுத்துக் கொண்டான் .

இவனை எப்படி வழிக்கு கொண்டு வர என்று கண்மணி வழி தெரியாமல் தடுமாறினாள்.

கண்மணி தேவ், கிருஷ்ணனுடன் சேர்ந்து பல வேலைகளை செய்தாள். எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டு இருக்கும் சித்துவை தொந்தரவு செய்யாமல் அவள் வேளையில் மூழ்கினாள். அந்த மாதத்தில் அவள் அப்பாக்கு உடம்பு முடியவில்லை என்று ஊருக்கு கிளம்பினாள்.

எப்படியும் பிரிய போறோம் ! அதற்குள் இவ எதுக்கு ஊருக்கு போறா என்று கோபம் கொண்டான். அவளை தடுக்க இயலாமல் சண்டையும் போட்டான். அதை எல்லாம் கண்மணி கண்டு கொள்வதாகவே இல்லை.

இனி ………

Advertisement