Advertisement

18.2

அங்குள்ள அனைவரும் கண்மணி நிலையை எண்ணி கலங்கினர் .சித்து கூட பிழைத்த வந்திடுவான்  நம்பிக்கை இருந்தது. அவன் இன்னும் ஒரு நாளில் விழிக்கவில்லை என்றால் கண்மணி நிலை என்ன, என்று அனைவரும் பயந்தனர் .

எங்கேயும் நகராமல் ,மருத்துவமனையில் இருக்கும் அந்த விநாயகர் முன்பு அமர்ந்து கொண்டாள். கண்மணி என்ன கதறியும் சித்து ரெண்டு நாள் கழித்து தான் கண் விழித்தான். அவன் கண்விழித்தான் என்ற செய்தியை கேட்டவுடன் தான் அவள் போன உயிர் திரும்பியது .

அவள், அவனிடம் சொல்லாமல் சென்ற முட்டாள் தனத்தால் தான் இந்த ஆசிதேன்ட் என்று வருந்தினாள்.

சித்து கண்விழித்தும் ,கண்மணி  அவனிடம் செல்வதற்குள் மீண்டும் மயக்கதிற்கே சென்றான். அவனை காண வேண்டும் என்று  ஐ சி  யு  அறை வாயிலிலே தவம் இருந்தாள்.

அவன் விழித்தவுடன் நர்ஸ் அவளை அழைத்த போது வேகமாக உள்ளே சென்றாள். சித்து அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் . அவன் பார்வையில் என்ன செய்தி இருந்தது என்று அறிய முயன்று தோற்றாள்.

கண்மணி, கண்ணில் நீருடன், உதடு துடிக்க  அவன் அருகே சென்று அமைதியாக  அவன்  தலை, கை கால் மெதுவாக தடவினாள் . சித்து எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டான் .

சித்து  காலில், எலும்பு முறிவை  சரி செய்ய  அறுவை சிகிச்சை  செய்திருந்தனர். ஸ்டீரிங் வீல் மீது தலை மோதியதால் தலையில் அடி. கட்டு . கையிலும் கட்டு. வேற எந்த பெரிய ஆபத்தும்  இல்லை என்று ஸ்கேன் மூலம் உறுதி செய்தனர்.

சித்து நார்மல் ஆன பிறகு, அறைக்கு மாற்றியவுடன் எல்லாருடனும் பேசினான் தவிர கண்மணியிடம் மட்டும் பேசவில்லை. கண்மணி, சித்துவின் கோபம் உணர்ந்து இருந்தாலும் அமைதியாக அவனுக்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் பொறுமையாக செய்தாள்.

அவனின் அழைப்புக்காக ஏங்கினாள்.

வீட்டுக்கு கிளம்பு, உனக்கும் ஒய்வு தேவை என்று வெற்றி , தேவ், கிருஷ்ணன் சொல்லியும்  எந்நேரமும்  அவனுடனே கழித்தாள். சித்தார்த் செல்லமாவிடம் மட்டும்  ஏதோ  பேசினான் . சிவம் இருக்கும் பக்கம் கூட திரும்பவில்லை .

கண்மணி சின்ன குழந்தை போல் அப்பப்ப சித்து அருகில் சென்று அவன் முகம் அறிந்தே அவன் தேவைகளை கவனித்தாள். சித்து பாராமுகத்தால் அவள் முகம் வாடினாலும் அதை பிறர் அறியாமல் சரி செய்து மீண்டும் பழைய படி  வளம் வந்தாள்.

சித்துவின் நிராகரிப்பு, கண்மணியின் சோர்ந்த முகம் எல்லாத்தையும் கண்டு கிருஷ்ணன் “உங்களுக்குள் என்ன நடக்குது !பாவம் சிஸ்டர். உன் அருகில் வரும் போது எத்தனை சந்தோஷமா வரா, நீ உன்  செயலாலே விரட்டி அடிக்கிற ?அதையும் மறைத்து சந்தோஷமாக மறுபடியும் தாயை கண்ட கன்று குட்டி போல ஓடி வரா! உனக்கு வலி இருந்தாலும் கண்மணியிடம் காட்டாத ? சின்ன பெண் .அவளை பார்க்கவே கஷ்டமா இருக்கு டா! எங்களுக்கு எல்லாம் ,நீ கண் விழிப்பதற்குள் அவளுக்கு எதாவது ஆகிவிடுமோ பயமா இருந்தது. நல்ல வேலை !”

கண்மணி என்னை விட்டு அப்படி போய்ட முடியுமா ? இல்லை நான் தான் என் கண்மணியை தனியா விட்டு அத்தனை சீக்கிரம் போய்டுவேனா! அப்படி தான் இந்த ராங்கி ரங்கமா விட்டிடுவாளா என்று எண்ணி சிரித்துக் கொண்டான் .

கிருஷ்ணன் விடாமல் “உங்களுக்குள்  என்ன பிரச்சனை சொல்லு டா !”

 “உடல் வலி டா !விடு ! வேற ஒன்றும் இல்லை டா” என்று மழுப்பினான் .

“நல்லாவே பொய் சொல்லற! உன்   உடல் வலியை எல்லாம் இப்படி உன் முகத்தில் அப்பட்டமா காட்டமாட்ட !இத்தனை நாள் உன் கூட இருந்து இது கூட தெரியாத முட்டாளா?”

சித்து இந்த ரெண்டு நாளாக, மருத்துவமனையில் யோசனை செய்து ஒரு முடிவை எடுத்து இருந்தான்.

நண்பர்கள் விடாமல் கேட்டவுடன் ஷ்ரவன் கூறிய அணைத்து ரகசியத்தையும் கூறினான்.

“அவளுக்கு கணவனா  இருக்க எனக்கு  தகுதி இல்லை டா ! சத்தியமா இந்த விஷயம் முன்பே எனக்கு தெரிந்து இருந்தால் கல்யாணத்திற்கு ஒத்து இருக்கவே மாட்டேன். ஏற்கனவே அவள் படும் வேதனையை என்னால் காண முடியவில்லை . உண்மை தெரியாமல் இருந்தால் கூட என் வாழ்க்கையை தொடங்கி இருப்பேன் .என் மீது தப்பு  இருக்கு தெரிந்து, என்னால் என் கண்மணிக்கு துரோகம்  செய்யமுடியவில்லை டா ! அவளை விட்டு பிரியனும் முடிவு செய்து இருக்கேன் .நான் செய்ய போகும் வேளையில் அவளா கிளம்பிடுவா !நல்ல வாழ்க்கை அவளுக்கு அமையட்டும்” .

கிருஷ்ணன், “என்னது! நீ நந்துக்கு அப்பாவா? முட்டாள் மாதிரி பேசாத !இத்தனை நாள் இல்லாமல் இந்த ஷ்ரவன் திடீர் என்று இப்படி பேசுவதற்கு என்ன காரணம் ?அவன் நல்லவன் அவன் வீட்டில் நிரூபிக்க  பார்க்கிறானா? தப்பு செய்த அவன், கல்யாணம் செய்து சந்தோஷமா இருக்க போறானா? அவன் பிரச்சினையை நீ தோளில் சுமந்ததே தப்பு !நட்புக்கு என்று எல்லை உண்டு டா !

என்னிடம் நட்பா? என் வாழ்க்கையா? என்று கேட்டால், முதலில் வாழ்க்கை தான் உடனே தெளிவா  சொல்லுவேன்! உன்னை மாதிரி ஏமாளிகள் இருப்பதால் நாட்டில் இந்த மாதிரி அயோக்கியனுங்க பெருகிட்டாங்க!

அன்றே கொஞ்சம் யோசித்து இருந்தால் இவன் கள்ள புத்தி தெரிந்து இருக்கும். அவனுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? எங்க இருந்தாலும் அவனை உடனே வரவழைக்கலாம்.அவன் குட்டு வெளிப்பட்டு தான ஆகணும் .அவனை நீ விட்டாலும் நாங்க விட போறது இல்லை. அவன் மாட்டிக்க கூடாது  அப்படியே உன் மீது பழி போட்டுட்டான் !இது தெரியாம நீயும்!

கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாயா? உன்னை நல்லா ஏமாத்தி இருக்கான் . இப்படிபட்டவனுக்காக உன் வாழ்க்கையே பாழ் செய்துக் கொண்டாய் !படித்தவன் தான டா நீ !உன்னை  எல்லாம் என்ன செய்தால் தகும் …..

அவன் காதலியை ,மனைவியை அவன் பிரச்சினை எல்லாம் முடித்து அழைத்து செல்வானாம், அது வரை இவர் பார்த்துக் கொள்ளனுமாம்.கேட்கவே சிரிப்பா இருக்கு . அவன் குடும்பத்திடம் அவளை ஒப்படைத்து இருக்க வேண்டியது தான? இதை செய்யாத போதே அவன் கோழை, பிராட்  தெரியல !

அப்படி இல்லை என்றால் தீப்தி  அப்பா, அண்ணனிடம் உண்மையை ஒத்துக் கொண்டு அவளை அங்க விட்டு போய் இருக்கனும் . இப்படி எதுவுமே செய்யாமல் கல்யாணம் ஆகாத உன்னை நம்பி விட்டு போய் இருக்கான். நல்லா பிளான் செய்து இருக்கான் .கேட்டால் பண பலம் இல்லை ஆள் பலம் இல்லை உன்னிடம் கதை விட்டு இருக்கான் . அவன் சுயநலத்தையே பார்த்து இருக்கான் .யோசிக்கவே மாட்டாயா?

தாலி கட்டி, அவன் வாரிசை சுமந்து கொண்டு இருக்கும் அவன் மனைவி விபத்துக்குள்ளாகி உயிர் போற நிலையில் இருந்த போது  கூட அவளை   பார்க்க வரணும் அந்த ஷ்ராவனுக்கு தோன்றவில்லை. இவன் எல்லாம் மனிதனா? என்ன தான் பெரிய வேலையில்  இருந்தாலும் அவனுடன் வேலை செய்பவர்கள் மனிதர்கள் தானே !முட்டாளை பார்த்து இருக்கேன் அடி முட்டாளை இப்ப தான் பார்க்கிறேன்.”

சித்து பேச வந்ததை தடுத்து நிறுத்தி “பேசாதா! உனக்கு உறுதியா தெரியும் என்கிற போது எதற்கு டெஸ்ட் எடுக்க மறுக்கிற ?மடியில் கணம் இருந்தால் தான வழியில் பயம் இருக்கும் . முதலில் ப்ரூவ் செய்யலாம் . அப்படி ஒரு வேலை நீ அப்பாவா இருந்தால் கூட கண்மணி சிஸ்டர் உன்னை கண்டிப்பா ஏற்றுக் கொள்வாள். அவ  உன்னை உண்மையா விரும்பறா? எப்பவோ, ஏதோ தப்பு செய்த என்பதற்காக லூசு  தனமா முடிவு செய்யாத ?

ரெண்டு நாளா கண்மணி சிஸ்டரை பார்க்க முடியவில்லை . உன் மீது உயிரையே  வைத்து இருக்காங்க . அவங்க அம்மாவிடம் நீ இந்த உலகில்  இல்லை என்றால் அவளும் இருக்க மாட்டா புலம்பிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன். அவங்களுக்காகவாது  நீ சீக்கிரம் கண் விழிக்கனும் எல்லாரும் வேண்டிக் கொண்டோம் .

அவளிடம் மனம் விட்டு பேசு! நீ ஏமாந்த லட்சணத்தை சொல்லு . அவங்களுக்கும் தெரியட்டும் .நீ மனைவியிடம்  தோற்று போவதை நினைத்து கவலை படாத !அவள் தரும் தண்டனையை சந்தோஷமா ஏற்றுக் கொள். உன் அன்பால் அவ கோபத்தை கூட சரி செய்திடலாம் .நீ இப்படி மூடி மறைக்க தான் பெரிய பிரச்சினை ஆகுது .உன்னிடம் சொல்லாமல் தைரியமா  அங்கேயே போயிடு வந்து இருக்காங்க .

அவங்களா தப்பு அர்த்தம் கண்டு பிடிபதற்குள் உண்மையை சொல்லு .இதை எல்லாம் கண்மணியிடம்  எப்போதோ சொல்லி இருக்கணும்.

உன்னுடைய வாழ்க்கையில் சரி பாதியான கண்மணி சிச்டரிடம்  முதலில் நம்பிக்கை வைத்து இதை எல்லாம் சொல்லி இருந்தால் அவங்களே தீர்வு சொல்லி  இருப்பாங்க .இப்ப சொன்னா உன்னை   எப்படி நம்புவாங்க .அந்த ஷ்ரவன் நாய்க்காக பார்த்து உன் வாழ்கையை பாழ் செய்தது தான் மிச்சம் .இதில் கண்மணியும் வருத்தி இருக்க ? இப்பவும் வருத்தர?”

யோசனையான சித்து முகத்தைக் கண்டு “நீ, கண்மணி சிஸ்டரிடம் பேசவில்லை தவிர அவள் தொடுகையை  உள்ளுக்குள் அனுபவித்துக் கொண்டு  தான இருந்த! உன் வலியை மீறி உன் முகத்தில் ஒரு சந்தோசம் .

 இல்லை என்று பொய் சொல்லாத !கண்மணி கொஞ்சம் நகர்ந்தாலும் உன் முகத்தில் கோப, ஏக்க சாயலை பார்க்கிறேனே !தூக்கத்தில் கூட அவள்  கையை விடாமல் பிடித்துக் கொள்கிறாய் ! பொய்யான முகமூடி எதற்கு !”

சித்து, இப்படி அப்பட்டமா தெரியும் அளவிற்கா நடந்து கொள்கிறேன் என்று மனதில் குட்டிக் கொண்டான் . இப்படியே இதை வளர விட கூடாது என்று முடிவு செய்தான் .

“ரெண்டு பேருக்குள்  கடலளவு அன்பு இருக்கு டா !அந்த நேசத்தை வெளிபடுத்த மாடீங்கிறீங்க.செய்யாத தப்புக்கு ரெண்டு பேரும் தண்டனை அனுபவிக்கிறீங்க.”

சித்து “எப்படி டா நான் அப்பா இல்லை, அத்தனை உறுதியா சொல்ல முடியும் .எனக்கு என்னை நினைத்தால் அருவருப்பா இருக்கு, புத்தர்  பெயரை வைத்துக் கொண்டு” என்று குற்ற உணர்ச்சியில் தவித்தான் .

“டெஸ்ட் எடுக்க ஒத்துக்கோ !”

“ஒரு வேலை நான் நந்துவிற்கு அப்பாவா இருந்தால் ………”

“உறுதியா நூறு சதவீதம் சொல்லறேன் அப்படி இருக்காது . அப்படி இருந்தால் உன் குழந்தை உன்னிடம் வளரட்டும். நல்ல அன்னையா கண்மணி இருப்பா”

என்னை தேற்ற தான் கிருஷ்ணன் இப்படி   சொல்லறான் . என் கண்மணிக்கு இந்த உண்மை தெரிந்தால் என்னை பெண் பித்தனாக அல்லவா கருதுவாள் . அவள் எண்ணத்தில் அவன் தாழ்ந்து போக விரும்பவில்லை .ஒரு வேலை கிருஷ்ணன் சொல்வதை போல கண்மணி  ஒத்துக் கொண்டாலும் அவளால் என்னிடம்  இயல்பா இருக்க முடியுமா ?

ஷ்ரவன் வந்திடுவான் . உண்மை எல்லாம் சொல்லி, சந்தோஷமாக என் கண்மணியுடன் வாழ்க்கையை தொடங்கலாம் நினைக்கும் போது இப்படியா என்று வருந்தினான் .

ஏழு ஜென்மும் அவளுடன் மட்டுமே  என்ற ஆசையை அடக்கினான். நடக்காத ஆசை? மணல் கோட்டை? இப்பவே அங்க போயிட்டு வந்து என்ன எல்லாம்  நினைத்து இருக்காளோ !அவளிடம் கேட்கவும் பயம் .

நான் செய்த பாவம் தான் என் நந்து இப்படி பிறந்தானோ !குற்ற உணர்ச்சி அவனை கொன்றது.அதிலே உழன்றான் . நல்ல முடிவை எடுக்க முடியாமல் தவித்தான்.

அவனால் அவன் கண்மணியை கண்டிப்பா பிரிந்து இருக்க முடியாது . ஆனால் ……

கிருஷ்ணன்,தேவுடன் வெளிநாட்டில் இருக்கும் ஆனந்தும்  அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டனர் .. மூன்று பேரும் சித்துவை நூறு சதவீதம்  உறுதியாக நம்பினார்கள் . அவர்களுக்கு அவன் மீது எள்ளளவு கூட சந்தேகம் இல்லை.

ஷ்ரவன் முகத்திரையை கிழிக்க காத்துக் கொண்டு இருந்தனர் .

துப்பறியும் நிறுவனம் மூலம் வெற்றி அணைத்து ரகசியத்தையும் கண்டு கொண்டார் …மேற்கொண்டு செய்ய  வேண்டியதை கிருஷ்ணன் , ஆனந்த் ,தேவ் உதவியுடன் செய்தார்.

சித்து, அவன் மீது இருக்கும் கோபத்தில், அவன் கண்மணி மீது எரிந்து விழுந்தான் .

இதுவே வீட்டிலும் தொடர் கதை ஆனது. கண்மணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் துளிர்த்தது . அவள் கோபத்தை தூண்டும் விதமாகவே அவன் செயல் ஒவ்வொன்றும் இருந்தது. அவள் அவனுக்கு உதவுவதற்காக  தொட்டு தூக்கினால் முகத்தை அருவருப்பாக மாற்றிக் கொண்டான். அவள் ஊட்டி  விட வரும்    போது உணவை வேண்டும் என்றே தட்டிவிட்டான்.

இப்படி எல்லாம் செய்ய அவனுக்கே  ஐயோ என்று இருந்தது .

அவளை பார்க்க பார்க்க வருத்தம் அடைந்தான். எப்பவோ செய்த தப்பு துரத்துதே ! என் கையாலே என் கண் முன் இருக்கும்  சொர்கத்தை தட்டி விடறேனே! மனதில்   கண்மணியிடம் மன்னிப்பு  வேண்டினான்.

இன்னும் சரியா நடக்க முடியாததால் நடக்க முடியாமல் சிரமபட்டான் .

அவள் அருகாமையில், அவள் தொட்டு  தூக்கும் போது, அவனுக்கு உதவி செய்யும் போது அவனை தொலைத்தான். கிறங்கினான் . அவளை அவன்  கைவளைவிலே வைத்துக் கொள்ள  வேண்டும் என்ற ஆசையை அடக்கினான் . என்ன தான் மனதுக்கு கடிவாளம் இட்டாலும் அவன் சொல் படி கேட்க மறுத்தது .

அவளை அவன் அருகில் நெருங்க விடாமல் கத்தினான்.

டாக்டரிடம் சொல்லி அவனுக்கு உதவுவதற்காக நர்ஸ் ஏற்பாடு செய்ய சொன்னான் .

இதை கேட்ட கண்மணிக்கு  அவள் பொறுமை எல்லை மீறியது .”நான் இங்க இருக்க, எதற்கு நர்ஸ் . உங்க தேவையை கவனிக்க தான நான் இருக்கேன் .அப்படி நான் தொட்டா உங்களுக்கு என்ன? எதற்கு என் மீது கோபம் .ப்ளீஸ் நர்ஸ் வேண்டாம் …”

என்னால் உன்னை அருகில் வைத்து பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லையடி என்று மனதில் மருகினான்.

அவள் சொல்வதை காது கொடுத்தே கேட்கவில்லை . கண்மணி கலங்கி தான் போனாள்.

அடுத்த நாள் டாக்டர் சொன்னது போல நர்ஸ் மோனி  வந்தாள். கேரளா பெண்ணிற்கு உரிய தந்த நிறம் ,கருகரு கூஞ்சல் , என்று பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.

அவளை பார்த்த கண்மணிக்கு பொறாமை உணர்வு அதிகமாகியது .இந்த டாக்டர் வயதான  நர்ஸ்  யாரையாவது அனுப்பி இருக்கலாமே ?இவளை  யாரு அனுப்ப சொன்னா? மருத்துவமனையிலே எல்லாரும் இவள் பின்னால் பித்தாக அலைவதை கண் கூட பார்த்தவள் தானே !

அந்த ரம்பா, ஊர்வசியே உன் கணவர் சித்து  முன்னால் வந்தாலும் கூட அவர்களில் உன் முகத்தை தான்  தேடுவான் என்று உனக்கு தெரியாது.

நர்ஸ் வந்த பிறகு கண்மணியை அவன் அறைக்குள் வராமல் தடுத்தான் . எதற்கு எடுத்தாலும் மோனி உதவியே நாடினான் .மாலை நேரம் சற்று நேரம் தோட்டத்தில் இருவரும் பேசி சிரித்து உலவுவதை அவள் அறையில் இருந்த படியே ஏக்க பெருமூச்சு விட்டு பார்ப்பதை சித்து கண்டு  கொண்டான் .

சித்து அவளிடத்தில் தனிமையில் “எங்களை மாடியில் இருந்து வேவு பார்க்கிறியா? என்ன கண்டுபிடித்த !”

“என்னை கடுபேத்த தான் இப்படி எல்லாம் செய்யறீங்க நல்லாவே தெரியுது ! உங்களுக்கு நடிக்கவே வரல . எத்தனை நாளைக்கு பார்க்கிறேன்” என்று நகர்ந்தாள்.

சரியா கண்டு கொண்டாலே ராட்ஷசி ! இவளை…… என்று பல்லைக் கடித்தான்.

கண்மணி அவன் அறையில் இருந்த போது டிவியில் எதோ சுவாரசிய நிகழ்ச்சி ஓடினாலும் ,செல் போனில் நல்ல தகவல் படித்தாலும்  உடனே மோனியை அழைத்து பகிர்ந்து  கொண்டான் .

எங்கள் அறையில், எங்களுக்கு நடுவில் இவள் யார் என்று கண்மணிக்கு பொறாமை தீ கொழுந்து விட்டு எரிந்தது .

“மோனி, நீ சிரிக்கும் அழகே தனி தான் . உன்னை போல பொறுமை ஒருத்தருக்கும் வராது .நீ ஒத்தடம் கொடுத்தால் எத்தனை இதமா இருக்கு .கொஞ்சம் காலை பிடித்து விடு” .

கண்மணி, கண்ணில் நீருடன் வெளியேறுவதை பார்க்க சித்துக்கு பாவமானது .அவன் மனம் பாரமானது .

மோனி விஷயத்தை கொண்டு மேலும் அவளை வருந்த வைக்க வேண்டாம் என்று எண்ணினான் .

கண்மணி ,தேவிடம் நடபவற்றை எல்லாம் சொல்லி அழுது  புலம்பினாள். கண்மணி தனியாகி விட்டதை போல உணர்ந்தாள்.

அன்று இரவு சித்துவிடம் “ஏன் இப்படி செய்யறீங்க ! நான் செய்தது பெரும் தப்பு தான் . உங்களிடம் சொல்லாமல் கிளம்பி இருக்க கூடாது .என்னை தண்டிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு .ப்ளீஸ்! என்னுடன் பேசுங்க . சண்டை போடவாது செய்யுங்க. உங்க மௌனம் என்னை கொல்லுது. என்னால் தாங்கிக்க முடியல” என்று அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

இளகாத சித்து என்று அவனை அடக்கி,

அவளை தள்ளி நிறுத்தி “இப்ப தான் குளித்து முடித்து வந்தேன் .அதற்குள் உன் கண்ணீரால் ச்சே ! எதற்கு இப்படி அழுகை .எனக்கு உன்னுடன் பேச ,ஏன் உன் முகத்தை பார்க்க கூட  இஷ்டம் இல்லை .நாளை விவாகரத்து பத்திரம் உன்னை தேடி வரும். அதில் கையெழுத்து போடு . நீ உன் வழியில் போய்கோ !உனக்கு மாதம் எத்தனை தொகை வேண்டுமோ சொல்லு !”

அவள் அதிர்ந்த தோற்றத்தை கண்டு  “ ஏற்கனவே நாம பேசினது தான .இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கு ! சும்மா, கூச்சபடாம வெட்கபடாம, எத்தனை வேண்டுமோ கேளு .பரஸ்பர ஒப்பந்தத்தில் பிரிவதால் ஒரு மாதத்தில் கிடைத்து விடும் சொல்லறாங்க . எனக்கு நிம்மதி .நான் எதிர் பார்த்ததும் இது தான். உன்னை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை . நீயும் ,உன் முகமும் . கொஞ்ச நேரம் நிம்மதியா ,தனியா இருக்க விடு” .அவன் இத்தனை சொல்லியும்  ஒன்றும் பேசாமல் அப்படியே நின்று இருப்பதை கண்டு  “ அவுட்” என்று சத்தம் போட்டான் .

உடம்பு முடியாததால் தான் இப்படி எல்லாம் பேசறான் பொறுமையாக “இப்ப நம்ம விவாகரத்துக்கு என்ன அவசரம் . நான் விவாகரத்து தரமாட்டேன் ! எனக்கு நீங்க வேண்டும் .ப்ளீஸ் சித்து .நான் உங்க பெண்டாட்டி” .

சித்து நக்கலாக “பெண்டாட்டி என்று எந்த உரிமையில்  பேசற !” கட்டிலை காட்டி  “ஒரு நாளும் நீ எனக்கு பெண்டாட்டியா நடந்து கொண்டது போல நியாபகம் இல்லையே! இதை வைத்தே என் பக்கம் சாதகமா தீர்ப்பு வரும் தெரியுமா ?ஒரு சின்ன டெஸ்ட் போதும்” .

அவன் சொன்னதை கேட்டு வாயடைத்து நின்றாள்.

விடாமல் கண்மணி “என்ன வேண்டும் என்றாலும் சொல்லிகோங்க, இன்னும் கொஞ்ச  நாள்  பொறுத்து முடிவு செய்யலாம்….”

அவள் முடிப்பதற்குள்  “இன்னும் கொஞ்ச நாள் இந்த சுகத்தை எல்லாம் அனுபவிச்சிட்டு கிளம்பறேன் சொல்லறியா ? இல்லை என்னை மாதிரி எவனோ  மாட்டுவான் காத்துக் கொண்டு இருக்க போறியா? உனக்கு சொல்லியா கொடுக்கணும் . உன் அழகாலே,மை விழியாலே  விழ வெச்சுடுவையே!”

கண்ணில் அடிபட்ட வலியுடன் ,விழிகள் நீர் திரையிட ” ப்ளீஸ் !  என்னை இப்படி பேசியே கொள்ளாதீங்க! என்னால்

முடியல ! உங்கள் பழைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை எப்போதும் நீங்க மட்டும் தான் என் கணவர். உங்களுக்கு எதற்கு இப்படி கோபம் !நான் தான் மன்னிப்பு கேட்டேனே!”

உன் மீது கோபம் இல்லை பெண்ணே ,என் மீது தான் எனக்கு கோபம்.

நான் தீப்தியுடன்  நடந்து கொண்டவிதத்தை சொன்னாலும் இப்படி கூறுவாளா ?என்று ஏளனமாக எண்ணினான் .

அவன் ஏளன சிரிப்பை கண்டு ,கண்மணி கோபமாக “கட்டில் ,மெத்தை , கார் பங்களா இது எல்லாம் உங்க சுக லிஸ்டா. அது எங்க வீட்டிலே தேவையான அளவு இருக்கு” .

சித்து அலுத்த படி , இவ ஏன் என்னை புரிந்து கொள்ள மாடீன்கிரா? என்ன சொன்னாலும் என்ன விதண்டாவாதம் என்று கோபமாக “அப்ப உன் சுக லிஸ்ட் என்ன சொல்லறியா?”

கட்டிலை காட்டி “இது தான? நான் ரெடி. எனக்கும் நீ வேண்டும் !பெண்டாட்டியா இல்லை. இன்று ஒரு நாள் …… இதற்கும்  சேர்த்தி ஒரு தொகை”  என்று சொல்லும் முன் அவனை அறைய,  கைகளை அவன் கன்னம் அருகே வேகமாக  எடுத்து சென்றவுடன் அப்படியே பற்றிக் கொண்டான் .

” பெண்டாட்டியா வா சொன்னால் கூட பொறுத்து இருப்பேன் ! என்னை இத்தனை கேவலமாக உங்களால் எப்படி நினைக்க தோணுது….நீங்க . நீங்க  எல்லாம் மனித ஜென்மமே இல்லை” என்று அவன் கைகளை உதறி ,கண்மணி அழுது கொண்டே பக்கத்துக்கு அறைக்கு சென்றுவிட்டாள்.

இனி ……….

Advertisement