Advertisement

தூறல் 17:

இரவு 12 மணிக்கு அவன் வாழ்த்து தான் முதலாவதாக இருக்கனும் என்று 11.50 இருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.12 அடிக்க இன்னும் ரெண்டு நிமிடமே உள்ளது . இப்போது கூட என்னிடம் சண்டை போடணுமா என்று கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. நான் அத்தனை தடவை சொல்லியும் இப்படி செய்தா.மணி 12 ஆச்சு . மனம்  தாளாமல், கண்மணிக்கே கேட்காத குரலில் இரு முறை அழைத்து பார்த்தாள்.

சித்து அசைந்த பாடு இல்லை. ஒரு வாழ்த்தும் இல்லை ஒன்றும் இல்லை என்று அழுது கொண்டே படுத்து விட்டாள்.

கண்மணி தவிப்பை எல்லாம் சித்து பார்த்துக் கொண்டு தான் படுத்து இருந்தான் . என்னை என்ன பாடு படுத்தற?

கொஞ்ச நேரம் கழித்து அறையில் ஏதோ அரவம் கேட்டு கண்விழித்தாள். சித்து, சிரித்த  முகம் காண்டில் விளக்கில் அழகா மின்னியது. காண்பது கனவு  தான், அது தொடரட்டும் என்று கண்ணை மூடிக் கொண்டாள்.

அவள் செய்கையை கண்டு சிரித்து, ஹாப்பி பர்த்டே பாட்டு செல் போனில் இசைக்க விட்டான்.

நிஜமாவா என்று கண்ணை திறந்தாள்.சித்து அழகிய சாக்லேட் கேக்குடன்  நின்று கொண்டு இருந்தான்.

கேக்கை  ஆசையாக பார்த்த படி “என் பிறந்தநாள் தொடங்கி ஒரு மணி நேரம் ஆச்சு .இப்ப தான் வாழ்த்து சொல்லும் நேரமா?”

“பேசாத! இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கு. சீக்கிரம் வெட்டு .மணியை காட்டி 12 ஆச்சு சீக்கிரம்”.

கண்ணீரினால் பார்வை மங்கியது. அவனுக்கு ஆசையாக ஊட்டிவிட்டாள். அவள் கண்ணீரை துடைத்த போது  “எங்க   நீங்க மறந்துடீன்களோ நினைத்து” என்று பேசமுடியாமல்  திக்கினாள்.

இவள் பிறந்த நாளை மறந்திட முடியுமா? அப்படி மறந்திட தான் விடுவாளா? காலேண்டர், கண்ணாடி , டேபிள், கணினி  கதவு ,எல்லாம் மீது  குறிப்பு. அவன் மறந்து விடுவான் என்று செல்லில்  ரிமைன்டர்  வேற. வீட்டில் உள்ள எல்லாரிடமும் இதே புராணம் தான! அவன் வீட்டு டிரைவர் கூட நாளை சின்னமா பிறந்த நாள், நியாபக படுத்தினதை நினைத்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது . 

சித்து தான் எல்லாம் கடிகாரத்திலும் மணியை மாற்றி வைத்து இருப்பது தெரிந்தது .

அவள் அதிர்ந்து நின்ற போது, அவள் முகத்தில் கேக் பூசி விட்டவுடன், கண்மணி அவனை அருகில் இழுத்து அனைத்து அவள் முகத்தில் இருந்ததை அவன் முகத்திலும் பூசி  விட்டாள். சித்து அவளை அணைத்த படி அவள் முகத்தில் இருக்கும் கேக்கை துளித்துளியாக சுவைக்க ஆரம்பித்தான் .

இருவர்  உடலிலும்  பல மாற்றம் நிகழ தொடங்கியது .

எத்தனை நேரம் அப்படியே  நீண்டதோ, அவனை தள்ளி விட்டு குளியல் அறைக்குள் புகுந்துவிட்டாள். சித்து வெளியே இருந்து “மோசம் டீ! இப்படி தான் பரிசு தராம ஏமாற்றுவையா? எத்தனை ஆசையாக இருந்தேன்”

கண்மணி  வெளியே வந்து  “யாருக்கு பிறந்த நாள். யாரு பரிசு தரனும் . உங்க பிறந்த நாள் போது கேளுங்க. தட்டாமல் கொடுக்கிறேன்.”

“அடிப்பாவி! அதற்கு இன்னும் நாள் இருக்கே! உன் தாரள மனசு தெரிந்து இருந்தால் அப்போதே பிளைட் பிடித்து வந்து வாங்கி இருப்பேனே! அதுவரை காத்து இருக்கனுமா?” என்று ஏக்கமாக கேட்டான் .

“எல்லாம் உங்க கையில் தான் இருக்கு சித்து” என்று அழுத்தினாள்.

“பரவாயில்லை . இப்போதைக்கு நானே கொடுக்கிறேன்” என்றவுடன் கண்மணி பின்னால் நகர்ந்து “என்னது !”

அவளை அருகில் இழுத்து கண்ணாடி முன் நிற்க வைத்து அவள் பின்னல் இருந்து அணைத்த படி “ஹாப்பி பர்த்டே தேனு குட்டி” .

கழுத்தில் அவன் மூச்சு காற்று பட்டதும் குறுகுறுப்பாக இருந்தது .சத்தம் இல்லாமல் “எனக்கு உங்க விஷ்  மட்டும் போதும்”.

“இது என்னோட விஷ்காக” அவளுக்காக அவன் ஆசையாக தேர்வு செய்த ரூபி நகையை அணிவித்தான் .

அதனுடன் பிங்க் ,கிரீம், கருப்பு வண்ண, மிக நுணுக்கமான வேளை கொண்ட  புது டிசைன்  நெட்டெட் சாரி பரிசளித்தான் .

கண்மணி பேச்சற்று போனாள். அவனை ஆசையாக கட்டிக் கொண்டாள். “என் தேனு குட்டி  இப்படி கட்டி பிடித்தால் தினமும் பரிசு தரலாம் போல”  அவ எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக்கி அனைத்து அவன் நேசத்தை வெளிபடுத்தினான் . கண்மணியும் மயக்கத்தில் இருந்தாள்..

அவர்கள் கூடலுக்கு அந்த தருனத்தை பயன் படுத்தி இருந்தாலும் கண்மணி ஒன்றும் சொல்ல போவாது இல்லை .இருந்தாலும் அவள் முழு சம்மதம்  வேண்டும் என்று அவளை அணைத்த படியே தூக்கத்தை தொடர்ந்தான் . இருவருக்கும் அதே பிடித்து இருந்தது .

அவள் அப்பா போனை எதிர் பார்த்து ஏமாந்தாள். விடியற் காலையில் செல்லமா அழைத்து “அந்த கூறு கெட்ட மனிதன் மூளையை கொஞ்சம் சான பிடித்தால் சரியாய் போய்டும் . நீ கவலை படாத . மாப்பிளையுடன் சந்தோஷமா இரு . அடுத்த வருடம் நான் சொன்னது உண்மை ஆகணும் .என் பேரனோ ,பேத்தியோ வந்து உங்க அப்பாவை கேள்வி கேட்கணும்” என்று மிரட்டி வாழ்த்து கூறி வைத்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டுக் கொண்டு இருந்த சித்து “என்ன தேனு குட்டி! ஏற்பாடு செய்திடலாமா?” என்றவுடன் முழித்தாள். வயிற்ரை தொட்டு காட்டி அணைத்தவுடன்  வெட்கத்தில் அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள்.

 அவளுக்கு  சித்துவிடம்  இருந்து, நாள் முழுதும் சின்ன சின்ன  பரிசுகள் தொடர்ந்து வந்தது. அவளுக்காக அவனே சமையல் செய்து அசத்தினான். அவளை சந்தோஷமாக பார்த்துக் கொண்டான் . ஜானகி பிளாட்டினம் நெக்லஸ் ஒன்றை மருமகளுக்கு பரிசளித்தாள். அதிதி ஜூட் சில்க் சல்வார் கொடுத்தாள்.

இரவு டின்னருக்கு  பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.

”நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் சித்து” .

“அப்ப எனக்கு என்ன பரிசு  தரபோறீங்க மேடம்” அவன் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் தந்தாள். “இது யாருக்கு வேண்டும்” என்று பலிப்பு காட்டினான்.

அவளுக்காக ஸ்பெஷல் கேக்  ஆர்டர் செய்து இருந்தான் . அதை பார்த்து அவன்  தோளில் மேலும் வாகாக சாயிந்து கொண்டாள். கிண்டலாக “ஹே! தூங்கிடாத! நிறையா வேலை இருக்கு !”

“அது எல்லாம் ஒன்றும் இல்லை . சாப்பிடும் வேலை மட்டும் தான் . சாப்பிடலாம்” என்று பேச்சை மாற்றினாள்.

அவன் கூம்பிய முகத்தை கண்டு “திருடா! என்ன வேண்டும் சொல்லுங்க” என்று அவள் குரல் குழையும் போது போனில் “சொல்லு நந்து செல்லம் “என்று கொஞ்சியவுடன் அவள்  மனநிலை அப்படியே மாறியது. சித்துவும் அதற்கு பிறகு எதையும் பேசாமல் அமைதியானான். நல்ல நேரத்தில் போன் என்று இருவரும் சபிக்க தொடங்கினர்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது சித்து வண்டி பாதியிலே நின்றுவிட்டது. வெளியே சென்று திரும்பிய கண்மணி இவர் எதற்கு நிற்கிறார் . “என்ன லிப்ட் வேண்டுமா?” என்று  அவன் அருகிலே சென்றாள்.

“கடுப்பேத்தாம போய்டு! உன் வண்டியில் எனக்கு லிப்ட் ! நடு  ரோட்டில் காமடி செய்யாத”

“ஓகே! விடுங்க . மழை வரும் போல இருக்கு . உங்களுக்கு சளி பிடித்தால் லேசில் சரி ஆகாது. எனக்கு என்ன”  என்று கிளம்பினாள்.

அவசரமாக  “நில்லு ! ஒரு நிமிஷம்” .யாருக்கோ  போனில் அழைத்து வண்டியை எடுத்து செல்லும் படி கூறி கண்மணியுடன் கிளம்பினான் .

கண்மணி பிடிவாதமாக “உங்களை நம்பி என் வண்டியை தர மாட்டேன் நான் தான் ஓட்டுவேன். என்னதான் ஆடி கார் வைத்து இருந்தாலும் இப்படி சந்து பொந்து எல்லாம் போக முடியுமா? என் செல்ல குட்டி எங்க நின்றாலும் தள்ளிக் கொண்டு போகலாம் . உங்க ஆடி காரை இப்படி தள்ளிக் கொண்டு போக முடியுமா ?தக்க சமயத்தில் உதவினது என் செல்ல குட்டி தான !”

“கொஞ்சம் மெதுவா போ !”

“நடந்து போறவன் நம்மளை ஓவர் டேக் செய்துட்டான் . இனியும் எப்படி மெதுவா போக !” அவன் உயரத்திற்கு அவனை அந்த வண்டியில் பார்க்க கண்மணிக்கு சிரிப்பு பொங்கியது .

மேடு, பள்ளம் பார்த்து ஓட்டினாலும் சித்து அவள் இடையில் கை போட்டு, விடாமல் பற்றிக் கொண்டு இருந்தான் . அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

“என்னை கீழே தள்ள  எத்தனை நாளா பிளான் போட்டுக் கொண்டு இருக்க !நேரா பார்த்து ஒட்டு !”

கண்மணி சத்தம் இல்லாமல்  ” என்  தோள் மீது கை வெச்சுக்கோங்க!”

“இது தான் வசதியா இருக்கு”

கண்மணி வண்டியை நிறுத்தி “நீங்களே ஓட்டுங்க!”

“உன் செல்ல குட்டியை நான் தொட மாட்டேன்.”

“ப்ளீஸ் சித்து” என்று கெஞ்சி அவன் ஒட்டினவுடன் தான் நிம்மதியாக உணர்ந்தாள் .

சித்து கள்ள சிரிப்பை  கண்டு ” உங்களை”……என்று அவன் இடையை கட்டிக் கொண்டு ஆசையாக அவன் மீது  சாயிந்து கொண்டாள்.

அதிதி கல்யாண வேலை மிக மும்மரமாக  தொடங்கியது . பேசிய ரெண்டு மாதத்திலே கல்யாணத்தை முடித்தனர் . கண்மணி, ஜானகியை ஒரு வேலை செய்ய விடாமல் எல்லா  வேலையும் இழுத்து போட்டு சந்தோஷமாக செய்தாள்.

எல்லா வேலையும் பொறுப்ப செய்யறா, என்னை மட்டும் கண்டு கொள்ள மாட்டேன்கிற என்று சித்துக்கு மனதில் கோபம் துளிர்த்தது.

கண்மணி ,காலையில் எழுந்தவுடன் சித்து குளியல் அறைக்குள் நுழைவதற்குள் புகுந்து கொண்டாள். சித்து கோபமாக “கண்மணி , எதுக்கு இந்த அவசரம், ராட்ஷசி எனக்கு மீட்டிங் இருக்கு”  என்று பொறுமை இல்லாமல் கத்தினான் .

கண்மணி எங்கயோ அரக்க பறக்க கிளம்பிக்கொண்டு இருந்தாள்.

அவன் ரெடி ஆகிக் கொண்டு இருக்கும் போது, அவனை தள்ளி விட்டு கண்ணாடி முன்  நின்று , இப்படி அப்படி திருப்பி சரி செய்து கொண்டாள் “ஏய்  குட்டி பிசாசே! எங்க இத்தனை அவசரமா கிளம்பற ? உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்க!”

இப்போதெல்லாம் அவனை சீண்டியே பேச வைத்து விடுவாள்.

“போகும் போது எங்க கிளம்பற கேட்க கூடாது.”

கண்ணாடியில் இருவரின் பிம்பத்தையும் ரசித்து “அப்ப எங்க இருந்து வருவ” என்று சித்து கேட்டவுடன், ஒரு முறைப்பை பரிசா தந்து சிட்டாக பறந்தாள். இவளை பார்த்தால் கல்லூரிக்கு கிளம்புவது  போல இல்லையே! நேற்றோடு பரீட்சை முடிந்து விட்டதே!


எதையாவது என்னிடம் சொல்லணும், கேட்கணும் தோணுதா !ரொம்ப அழகா குடும்பம் நடத்தற சித்து என்று கண்ணாடியில் அவன் உருவத்தை பார்த்து புலம்பிக் கொண்டு  இருந்தான் . வேதாளம் கூட குடும்பம் நடத்தினா அது கூட தொங்கி தான ஆகணும் என்ற போது உள்ளே நுழைந்த கண்மணி ,பத்திரம் என்று மிரட்டி  அவ பையை எடுத்து கிளம்பினாள்.

எனக்கு நானே ஸெல்ப் ஆப் வெச்சுக் கொள்வது இது தான் போல !

‘கண்மணி ,கண்மணி’ என்பதற்குள் அவளுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக சிட்டாக  பறந்தாள்.

எத்தனை தடவை இவளிடம் சொல்லியாச்சு . காரில் போக சொன்னால் என் வசதிக்கு இது தான் சரி . நாளைக்கு உங்களை விட்டு பிரிந்தவுடன் இதற்கு எல்லாம் மனம் ஏங்க கூடாது பாரு என்று அவன் வாயை  அடைத்துவிடுவாள். அவள் இஷ்டத்துக்கு சுத்த ஒரு சாக்கு.

அவள் அவசரமாக கிளம்பியது அமெரிக்கா செல்ல இருக்கும் ஷ்யாமை பார்க்க !

ஷ்யாமிற்கு கண்டிப்பா ஏதோ தெரியும் யூகித்து அவனை  மிரட்டி கடைசியில்  உண்மையை  வாங்கிவிட்டாள். கேட்க கேட்க அதிர்ச்சியே ! நண்பனுக்காக வாழ்க்கையே இழக்கத் துணிவார்களா ? முட்டாள் தனம் என்று சினம் கொண்டாள்.

சித்தார்த்தை நூறு சதவீதம் நம்பினாள்.

ராம்கி, அவன் அப்பா சொல்லி கொஞ்சம் அடங்கி இருந்தான் . அவருக்கு தெரியாமல் சித்துக்கு தொழில் டார்ச்சர்  கொடுக்க ஆரம்பித்தான்.

ராம்கி மூலம் சித்துக்கு, வக்கீல் நோட்டிஸ் வந்தது . அவன் மும்பை கோர்ட்டில் ஆஜர் ஆகும் படி செய்தி .

அவங்க தரப்பில் ரொம்ப பிடிவாதமாக இருப்பதால் கண்டிப்பா நீங்க டெஸ்ட் எடுக்க ஒத்துக்கொண்டு தான் ஆகணும். வேற வழி இல்லை. இனி இதற்கு மேல் வாயிதா வாங்க முடியாது என்று சித்து வக்கீல் தெரிவித்து இருந்தார் .

சித்து, ஷ்ரவனை அழைத்த போது பேசாமல்  நழுவினான்.

அவன் அலுவலகத்துக்கே அழைத்தான் .

“ஷ்ரவன் , இத்தனை நாள் எதோ நீ சொன்னதால பொறுமையா  இருந்தேன் . இனி அது போல இருக்க முடியாது . கண்டிப்பா கோர்ட்டில் ஆஜர் அகனும் நோட்டிஸ்  வந்து இருக்கு .

உனக்காக தான் அந்த ராம்கியை இது வரை சும்மா விட்டு வைத்து இருக்கேன்! இனி முடியாது . என் கண்மணியை தூக்க ஏற்பாடு செய்து இருக்கான் கேள்வி பட்டதில் இருந்து கொலை வெறியில் இருக்கேன் .அவனை விடுவதாக இல்லை . நந்தனை நீ  அழைத்து சென்று விட்டால் எந்த நாயும் வால் ஆட்ட முடியாது.

அப்புறம் அவன் தொலைந்தான். எப்ப இந்தியா வர ! நந்தனை  உன்னுடன் அழைத்துக் கொண்டு போறயா? அதற்கான ஏற்பாடு செய்யணும்” என்று சித்து பேசிக் கொண்டே போகும் போது பலமாக சிரித்து

” நிறுத்து !நிறுத்து! எதற்கு நான் அழைத்து போகணும். அவன் உன் குழந்தை தான ? அந்த ராம்கியிடம் ஒத்துக்கோ ! தீப்திக்கு  நீயும் ஒரு விதத்தில் புருஷன் தான? ஊருக்கே தெரியும் ….”

“ஷ்ரவன் விளையாடாத ?”

“தீப்தி, என்னுடன் பழகினதை விட உன்னுடன் பழகினது தான் அனைவரும் அறிவர் . உங்க பெயரே love birds  தான? அவ  அண்ணனுக்கு பயந்தே நான் இந்தியா பக்கம் தலை வைத்து படுக்கல! உன்னால் நானும் மாட்டிக்  கொள்வேன் என்ற பயம் .

எப்ப பார்த்தாலும் ஏன் டார்ச்சர் செய்யற? அவங்க எப்படியும் நந்தனை   கொடுக்க போறது இல்லை. அப்புறம் என்ன? உன் பெண்டாட்டியோட சந்தோஷமா இருப்பதை விட்டு , படுத்தி எடுக்கற ? உண்மையா, நான் நந்தனுக்கு அப்பாவா இருந்தால் கூட, இந்த நிலையில் நான் எதையும் ஒத்துக்க முடியாது. அந்த ராம்கியால் என் குடும்பம் மொத்தம் அவதி படனுமா?”

சித்து மனம்  எரிமலையாக குமுறிக் கொண்டு இருந்தாலும் வெளியே  “அப்ப இத்தனை நாளா உனக்காக  நான் படும் வேதனை!”

“அதை பற்றி எனக்கு என்ன?”.

எப்படி இவனால் இப்படி சுயநாலாமா யோசிக்க முடியுது. நண்பன் என்று பாராமல் நானும் அப்படியே இருந்து இருக்கணுமோ? என்று சித்து முதல் முறையாக சரியான பாதையில் யோசித்தான்.

ஷ்ரவன் “எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு” .

“என்னது நிச்சயமா ?அப்ப cathy” .

“அது சும்மா லிவிங் டுகெதர் டா. அவளுக்கும் இந்த மாதம் மைக்குடன் கல்யாணம் . எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் இப்படி தான் பிடித்து இருக்கு சொன்னால் அம்மா பிடிவாதம் பிடிக்கிறாங்க! சரி அதையும் பார்த்திடுவோம் . என்ன டா சத்தத்தையே காணோம் !”

சித்து நா வறண்டு “டேய்! என்ன சொல்லற ? நீ சொல்வது எல்லாம்? நந்து”

“எஸ்! நந்தன்  உன் குழந்தை தான். உன்னால நம்ப முடியலையா ?முதல் முதலா அன்று சரக்கு அடித்தாயே நியாபகம் இருக்கா ?”

அதுதான் கடைசி நாளும் ..

ஒரே முறை வாழ்கையில் தப்பு செய்ய இருந்தானே!அந்த வயதிற்குரிய ஆவலில் அன்று செய்த தவறை  எண்ணி சித்து வெட்கினான்.

படித்துக் கொண்டு  இருந்த காலத்தில் கல்லூரி டூருக்காக குலுமனாலி சென்று இருந்தார்கள் .எப்போதும் அமைதியா இருக்கும் ஷ்ரவனை தீப்திக்கு ரொம்ப பிடிக்கும் .சித்துவுடன் பேசும் போது எந்நேரமும் ஷ்ரவனை பற்றியே பேச்சு இருக்கும் . முதலில்  எல்லாத்தயும் விளையாட்டாக எடுத்துக் கொண்ட சித்து பின்னர் தீப்தி நிலைமையை சொல்லி எச்சரித்தான். உங்க அப்பாவும் , அண்ணனும் கண்டிப்பா ஒத்துக் கொள்ள மாட்டார்கள் . இவனை நம்பி நீ இந்த விஷயத்தில் இறங்குவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல தான்.இதை இப்படியே  விட்டிடு.  உனக்கு அது தான் நல்லது என்று அவன் சொல்லியும் தீவிரமாக இருந்தாள். அதற்கே மேல் சித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அமைதியாகிவிட்டான் .

ஒரு  வேளை என்னை அறியாமல் ……. இல்லை ,இருக்கவே இருக்காது ..

ஷ்ரவன் “அன்று ஹோட்டலில் என்ஜாய் செய்ய  நாம பலான  ஏற்பாடு செய்து இருந்தோமே ! மறக்குமா அந்த அனுபவம் ! ஆளாளுக்கு அவங்க ஜோடியுடன்  ஜோதியில் ஐக்கிய மாகிட்டாங்க . நீயும் உன்னோட  அறைக்கு ஆவலா போன”.

“ஆனா ….”

சித்து ,குடி போதையில் அறைக்குள் குஷியாக நுழைந்து விட்டான் தான் . அதற்கு பிறகு அவனுக்கு நியாபகமே இல்லையே!

அடுத்த நாள் நண்பர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது  உண்மையை சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பினான் .

நடந்தது அனைத்தும் ஷ்ரவனுக்கு மட்டும் தான் தெரியும் . அதனால் இப்ப அவனுக்கு தகுந்தது போல மாற்றிக் கொண்டான் .

சித்து   அன்று குஷியாக   அறைக்குள்  சென்றவுடன் போதையில் வாந்தி  செய்து மயக்கமாகிட்டான் . காய்ச்சல் வேற அதிகம் ஆகிவிட்டது. வந்த பெண்ணோ ஷ்ரவனிடம்  கறாராக  காசை வாங்கி கொண்டு, அடுத்த முறை குடிக்காமல் வர சொல்லு, என்று திட்டி விட்டு சென்றாள்.

விளையாட்டுக்காக ஆரம்பித்தது எத்தனை பிழை .தீப்தியும் சேர்ந்து அல்லவா குடித்தாள்.

“நீ அந்த பெண் நினைத்து, தீப்தியிடம் தான் ..இது எனக்கு மட்டும் தான் தெரியும் . தீப்தி கூட குடி போதையில் இருந்ததால் உன்னை நான் என்று நினைத்து விட்டாள். அதற்கு அப்புறம், என்னை தேடி வருபவளை  எப்படி ஏமாற்ற முடியும் சொல்லு. அது தான் தாலி கட்டாமலே குடும்பம் நடத்தினேன் .

இதை சொல்லி உன் மனதை வறுத்த வேண்டாம் என்று தான் நான் இத்தனை நாளில் சொல்லவில்லை” என்றவுடன் சித்து கோபமாக

“அப்ப உனக்கும் தீப்திகும் நடுவில் ஒன்றுமே இல்லை என்று சொல்லு பார்போம்”.

ஷ்ரவன்  தீப்தியுடன்  கழித்த  நாட்களை  மறக்க முடியாம இருப்பவன் . அவனை உயிராக காதலித்தவள். அவனுக்காக அவளையே தியாகம் செய்தவள் .அதை எப்படி இல்லை என்று மறுப்பான் .

”இருந்தாலும் இல்லை என்று ஒரேடியா சொல்லிட முடியாது” என்று ஒத்துக் கொண்டான் . ஆனால் எல்லாத்துக்கும் நீ தான் கரணம் என்று சுற்றி சுற்றி அவன் மீது பழி போட்டான் .

சித்துவால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை .

“நான் சொல்வது தான் உண்மை. நீ டெஸ்ட் எடுத்தா தெரிந்துவிடும். நான் வரவே அவசியம் இல்லை” என்ற ஷரவனிடம்

சித்து “பொய் சொல்லாத? அங்க இருக்க என்று திமிரில் பேசாத! நேரில் இருந்தால் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன்”   என்று மிரட்டினான். ஷ்ரவன் மீது கொலைவெறியில் இருந்தான் .

பல தடவை  அதை பற்றி சொன்னவுடன் ஒரு வேலை அப்படியும் இருக்குமோ என்று சித்து  பயந்தான் .

சித்து கோபமாக “இப்பவே நான் ராம்கியிடம் உன்னை பற்றி சொல்லிவிடுகிறேன் . நட்புக்காக பார்த்த என்னையே ஏமாற்ற துணிந்த உன்னை சும்மா விடபோறது இல்லை” .

ஜானகி சொன்னது அவனுக்கு நியாபகம் வந்தது .நண்பன் உனக்கு பட்டை நாமத்தை சாற்றாமல் இருந்தால் சரி என்று . இவனை நம்பி எத்தனை முட்டாளா இருந்து இருக்கேன். ஏமாந்து இருக்கேன்.

சித்துக்கு பேச்சே எழவில்லை. இவனுக்காகவா இத்தனை நாள் பார்த்தேன் . தேவை இல்லாத  கஷ்டம் எல்லாம் அனுபவித்தேன் . என் கண்மணியிடம் உண்மையை சொல்லவும்  முடியாமல் , அவளை  விளக்கவும் முடியாமல் நரக வேதனை அல்லவா அனுபவித்தேன். அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த ராம்கி எத்தனை விதத்தில் டார்ச்சர்  செய்தான் .

இவன் குடும்பத்துக்கு, இந்த வேலை அவசியம். அதை கெடுக்கக் கூடாது என்று எத்தனை பொறுமையாக இருந்தேன். எல்லாத்துக்கும் சேர்த்து துரோகம் செய்து விட்டானே! இவனால் தீப்தியும் அல்லவா இறந்தாள். சந்தோஷமான மன  நிலையில் இருந்தால் தீப்தியை பிழைக்க வைத்து இருக்கலாமே என்று மருத்துவர் சொன்னது இப்பவும் அவன் காதில் ரீங்காரமிட்டது.

சித்து, ஷ்ரவன் ஒன்றாக தங்கி  இருக்க  சித்து இல்லாத நேரத்தில், தீப்தி அடிக்கடி வந்து சென்றாள். நண்பனா சித்து  அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. படிப்பு ,ப்ரஜச்ட் விஷயம் என்று இருவரும் மழுப்பினார் . இதுவே வழக்கமாகியது .முதலில் இயல்பாக எடுத்துக் கொண்ட சித்து நண்பன் போக்கில் மாறுதலை கண்டான் .

அப்போது, சரியா காம்பஸ் தேர்வில் அமெரிக்காவில் இருக்கும் நாசா நிறுவனம்  அவனுக்கு அங்கேயே படிக்க, பயிற்சி அளிக்க ஒத்துக் கொண்டது. ஷ்ரவன் அவன் குடும்பத்தை கரை சேர்த்த வேண்டிய பொறுப்பில் இருந்ததால் உடனே சரி என்றான் .

தீப்தி மூலம் ஷ்ரவன்- தீப்தி உறவை கேட்டு சித்து கொதித்து எழுந்தான் .எப்படி உன்னால இப்படி நம்பிக்கை துரோகம் செய்ய முடியுது என்று அடித்து விட்டான் .

அப்போதைக்கு ஷ்ரவன் தப்பிக்க எண்ணி  “எனக்கு குடும்பம் ,கல்யாணம் இல்லை என்றால் தான் எனக்கு இந்த வேலை உறுதியாகும் . இந்த நிலையில் என்னால் வேலையை விட முடியாது . இது நான் கண்ட கனவு . எனக்கும் பணக்காரன் ஆகணும் என்ற வெறி .இதன் மூலம் நிறைவேற்றிக்க போறேன். என்னை யாராலும் தடுக்க முடியாது.

இந்த வயதில் இது எல்லாம் சகஜம் .பெரிது செய்ய வேண்டாம் .யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அவளும் சந்தோஷமா , நானும் சந்தோஷமா இருந்தேன். அத்துடன் முடிந்தது . அவளுக்கு நல்ல துணை அமைந்தால் திருமணம் செய்து கொள்ளட்டும். நான் தடையா இருக்க மாட்டேன் ! அவள் அழகுக்கு அவள் காலடியில் எத்தனை பேர் மயங்கி  கிடக்கிறார்கள் ! ஏன் நீயும் தான் சித்து !”

“யு ராஸ்கல்! எங்க நட்பை கொச்சை படுத்தாதா” என்று முகத்தின்  மீது ஓங்கி குத்தினான்.

அப்பவே அவனை பிளந்து கட்டி இருக்கணும் என்று சித்துக்கு ஆத்திரம் வந்தது  .

“சரி , அடிக்காத! உனக்காக வேண்டும் என்றால் கோவிலிலே தாலி கட்டறேன் . ஆனா என் பொறுப்பு எல்லாம் முடிந்து தான் இவளை அழைத்து செல்வேன். அதுவரை உன் பொறுப்பிலே இருக்கட்டும்.” . அவன் பொறுப்பு எல்லாம் முடியும் வரை அவன் குழந்தை பொறுக்குமா? தீப்தி மணிவயிற்றில் அழகா வளர ஆரம்பித்தது.

ஷ்ரவன் தெளிவாக “என்னால் அவள் அண்ணா, அப்பாவிடம் மோத முடியாது .பணபலமும் இல்லை, உடல் பலமும் இல்லை . நீ தான் சமாளிக்கணும். கண்டிப்பா தீப்தியை கை விடமாட்டேன். வேண்டும் என்றால் குழந்தையை அழித்து விடலாம்” என்றதுக்கு தீப்தி ஒத்துக் கொள்ளவில்லை .

என்னை, இந்த விஷயத்தை கொண்டு தொந்தரவு செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஷ்ரவன் மிரட்டி அமெரிக்கா கிளம்பினான்.

என்னை விட இவனுக்கு பணம், புகழ் , இவன் குடும்பம் தான் முக்கியமா? தீப்திக்கு ஆத்திரம் பொங்கியது. இவனை போய் நம்பி என் வாழ்கையை பரிகொடுத்தேனே என்று அவள் வருந்தாத நாள் இல்லை .

ஷ்ரவன் சென்ற  பிறகு ஹாஸ்டலை காலி செய்து சித்துவுடைய சமையல்காரம்மா  துணையுடன் அவன் வீட்டிலே தங்கிவிட்டாள். அங்கு வந்தது தான் வினையே !உதவி செய்ய போய் கடைசியில் அவனுக்கு பாதகமாக முடிந்தது. இன்று வரை அவன் வாழ்வில் பிரச்சினை.

தீப்தி அவள்  அப்பாவிடம் இன்னும் ஒரு வருட கோர்ஸ் படிக்க சேர்ந்து இருக்கேன் என்று மட்டும்  கூறிவிட்டாள். அம்மா இருந்திருந்தால் கேள்வி கேட்டு இருப்பார்களோ என்னமோ ,அவள் அண்ணனும் ,அப்பாவும் அதற்கு மேல் தோண்டி துருவவில்லை.

குழந்தை பிறந்தால் அதன்  முகத்துக்காகவாது ஷ்ரவன் , தீப்தியை ஏற்றுக் கொள்வான் என்று சித்து மிகவும்  நம்பிக்கையா  இருந்தான் . அவன் அமெரிக்க சென்றதோடு சரி . அதற்கு பிறகு இவர்களுக்கு அழைக்கவே இல்லை. தீப்தி வாடும் போது சித்து அவனை அழைத்து பேச சொல்லி மிரட்டுவான் . நீ தீப்தியுடன் திருமணம் போது எடுத்த புகைப்படம் மேலும் பல படங்களை உன் அலுவலக மெயிலுக்கு அனுப்புவேன் என்று மிரட்டினவுடன் இஷ்டம் இல்லாமல் ரெண்டு நிமிடம் அழைத்து பேசுவான் .

அவள் செய்த தப்பே அவளை அரித்துக் கொன்றது . சரியான ஊட்டசத்து இல்லாமல், குழந்தை முழு வளர்ச்சி அடையாமல் அவள் கருவில் வளர்ந்தது. ஏழு மாத ஸ்கானில் குழந்தை மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக வளர்ந்து இருப்பது தெரிந்தது. அப்போதைக்கு தீப்தியிடம் கூறினால் மேலும் மன அழுத்தம் கூடும்  என்று தடுத்தனர் . எந்த பிடிப்பும் இல்லாமல் , தீப்தி எதையும் கண்டு கொள்ளாமல்  அவள் நிலையிலே உழன்றாள்.

அன்று நடந்தவைகளை எல்லாம் நினைத்தால், இப்போது கூட அவன் உடல் ஒரு முறை தூக்கி போட்டது .எத்தனை எளிதா என் மீது பழி சுமத்தி விட்டான் .

என்ன தான் வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் சித்து எந்நேரமும் யோசனையிலே இருந்தான் . அதை கண்மணியும் கண்டு கொண்டாள்.

ஒரு வேளை என் வாழ்க்கையில் அப்படி எதாவது நடந்து இருந்தால் என் கண்மணி எனக்கு இல்லையா? இதை என்னிடம் முன்பே தெளிவாக சொல்லிவிட்டாலே! நான் என்ன செய்ய? என்ன யோசித்தும் அன்று நடந்தது என்ன? என்று யோசிக்கவே முடியலையே ?

கண்டிப்பா அவன் அறையில் தீப்தி இல்லையே! வேற ஒரு பெண்ணை தான பார்த்த நியாபகம். பேய் போல இருந்தாலே !அன்று பேரழகி என்று வர்ணித்த  உதடு இப்ப  உனக்கு பேயா என்று மனசாட்சி  குட்டியது. அவளிடமும் ஒன்றும்! யோசிக்க, யோசிக்க மண்டை வெடித்து விடும் போல ஆனது.

Advertisement