Advertisement

தூறல் 16:

சிவம் “இத்தனை  நடந்த பிறகு, நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம். பேப்பரில் , இப்பவே இத்தோட ……..” எல்லாம் முடிந்தது எழுதி தா , சொல்வதற்குள்

கண்மணி ஏதோ சொல்ல வந்ததை செல்லமா தடுத்து

“உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்ல ஆசை படறேன்” .

“நான் பேசும் போது புதுசா என்ன பழக்கம் செல்லமா” என்று சிவம்  கடிந்து கொண்டார்.

கண்மணி மனதில், என்னை பேச விட்டால் தான? சித்துக்கு திருப்பி கொடுக்கலாம்  பார்த்தா விட மாடீங்கிரான்களே!அவன் முழிப்பதை பார்க்கணும் ஆசைபட்டால் இப்படி தடங்களா? எப்படியும் யார் என்ன சொன்னாலும் நான் சொல்ல போவதை சொல்லாமல் நகர போவது இல்லை .

செல்லமா உறுதியாக “நீங்க பேசும் போது குறுக்கே பேச மன்னிக்கணும். என் பெண் வாழ்க்கை பற்றி மட்டு தான் பேச வந்து இருக்கோம் நினைத்தால் அது இல்லை.அப்படி சட்டு புட்டுனு முடிவு எடுத்திட முடியாது”

சிவம் கோபமாக “என்ன செல்லமா சொல்லற! எதுக்கு இப்ப  குழப்பற ? உன் மாப்பிளையை பற்றி நாம எதுக்கு கவலை படனும். அது நமக்கு தேவை இல்லாத விஷயம். இன்னும் எத்தனை கல்யாணம் வேண்டும் என்றாலும் கட்டிக்கட்டும். இவனை கம்பி என்ன வைக்காம விட போறது இல்லை. நம்ம பெண்ணை நாம அழைத்து போகலாம் .நம்ம பெண்ணுக்கு  என்ன குறைச்சல்?”

செல்லமா பார்வையில், கொஞ்சம் அடங்கு என்ற செய்தியை கண்டு அமைதியானார்.

“கொஞ்சம் பேச விடுங்க. நான்  சொல்ல வந்ததை சொல்லிடறேன். வெற்றி அண்ணா, என் மக எந்த தப்பும் செய்யவில்லை. படித்து கொண்டு இருந்த பெண்ணுக்கு அவசரமாக கல்யாணம் செய்து வைத்தோம் . படிக்கணும்  சொல்லியும், நாங்க தான் கட்டாயபடுத்தினோம். இப்ப  அவ உங்க வீடு மருமகள் . எதா இருந்தாலும், நாங்க தலையிடுவது சரி பட்டு வராது. அவ இனி உங்க பொறுப்பு . அவ மட்டும் இல்லை நான் சந்தேகப்படுவது………

 , சந்தேகம் படும்படி ( சந்தேகம் படும்படி என்று கொஞ்சம் அழுந்த கூறினாள்)  உங்க பேரனோ, பேத்தியோ என் பெண் வயிற்றில் வளர்ந்தால் அதற்கும் நீங்க தான் பொறுப்பு.”

அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

சிவம் அதிர்ந்து “செல்லம்மா, என்ன சொல்லற? நீ சொல்வது எல்லாம் நிஜமா? என் பெண்? கண்மணி உண்மையா?”

கண்மணியை உண்மை சொல்லவிடாமல் செல்லமா அவள் கைகளை அழுந்த பற்றிக் கொண்டு இருந்தாள்.

அவளும் சித்துக்கு பதிலடி கொடுக்கணும் என்று இதையே தான சொல்லணும் இருந்தாள். எப்படி, இப்படி ஒரே போல நினைக்க முடியும் வியந்து, அவள்  அம்மாவிடம்  நன்றி பார்வை செலுத்தினாள்.

கண்மணி மனதில் சிரித்து, எந்த பக்கம் தலை உருட்டுவது என்று தெரியாமல் எல்லாம் பக்கமும் தலையை உருட்டினாள்.

ரெண்டு நாள் முன்பு சித்து செல்லமாக்கு அழைத்து , “எனக்காக இன்னும் கொஞ்ச நாள்  பொறுமையாக இருங்க அத்தை. அதற்குள் எல்லாம் சரி ஆகிவிடும் .உங்க கேள்விக்கு எல்லாம் விடை  அளிக்க நான் கடமை  பட்டு இருக்கேன். கண்மணிக்கும் என் மீது கோபம் . கண்மணி என் அருகில் இருந்தால் எதையும் தைரியமா எதிர் கொள்வேன். எனக்கு  நீங்க சபோர்டா இருந்தால் போதும்.”

சும்மாவே மருமகன்  பற்றி பெருமையாக பேசுபவள், இப்போது ,  ஒரேடியா அவன் பக்கம் எந்த தப்பும் இல்லை என்ற முடிவிற்கு வந்தாள்.

செல்லமா சொல்வதை கதிரும், சிவமும் கொஞ்சம் கூட கேட்பதா இல்லை .ஆண்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற திமிர். அதிலே ஊறிய அவர்களை மாற்றமுடியவில்லை.

இந்த ஒரு மாத காலமாக கண்மணியும், சித்து இல்லாமல் வாடுவதை அவள் கண் முன்னே கண்டாள். அதனால் தான்  மகள் வாழ்கையை சீர் செய்ய எண்ணி, வீட்டிலே சிவமிடம் எதையும்  சொல்லாமல் அமைதியாக  அவருடன் கிளம்பினாள். இனியும் பேசாமல் இருந்தால் சரி வராது என்று 

“அவளை கேட்டால், சின்ன பெண்ணுக்கு என்ன தெரியும். பாவம் . எனக்கு தான் சந்தேகம் சொன்னேன்ல! எதையும் உறுதியா சொல்ல முடியாது. ஒரு வேலை இவங்க பேரனோ, பேத்தியோ என் மக வயிற்றில் வளர்ந்து கொண்டு இருந்தால் அதன் நிலைமை. அப்பவும் இதே முடிவில் தான் இருப்பீர்களா? இன்றைக்கு  பேசிட்டு நாளைக்கு வந்து அழைத்தால் நான் என் மகளை விட மாட்டேன்” என்று தெளிவாக பேசினாள்.

சித்தார்த் அது எப்படி, என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போது கண்மணி வாயிலாக, “அம்மா  சொல்வது போல அப்படியும் இருக்கலாம்.”

சித்துக்கு மயக்கம் வருவது போல ஆனது .

ராட்ஷசி! குட்டி பிசாசு ,பெண்டாட்டியா நடந்து கொண்டாலா கேட்டதுக்கு,  சரியான பதிலடி கொடுத்திட்டா! இனி என் முகத்தை எங்க கொண்டு போய் வெச்சுக்க! கடன்காரி! இவனுங்க வெத்தலையை மென்று துப்புவது போல என்னை துப்ப போறாங்க  என்று திட்டி தீர்த்தான் ..

இவங்க இஷ்டப்படி வளைந்து கொடுக்கவே கூடாது,

முதலில் டாக்டரிடம் போகலாம் என்று அழைக்க  எண்ணினான் . கண்மணி, சித்து ரியஷனையை பார்த்து கொண்டு இருந்ததால் சிரிப்பை  அடக்க பெரும்பாடுபட்டாள் .

எதேர்ச்சியாக கண்மணியை பார்த்த சித்து அவள் சிரிப்பதை கண்டு ஆத்திரமடைந்தான். எங்களுக்குள்  எதுவுமே நடக்கவில்லை என்று ஒரு டெஸ்டில் கண்டு கொள்ளலாமே! இவர்களிடம் விளக்கவா முடியும் .சின்ன பெண் என்பது சரியா தான் இருக்கு.

அப்படி  மட்டும் தெரிந்தது, இதற்கு  வேற தனியா  பஞ்சயத் கூட்டிடுவானுங்க. சிவம் என்னை பிளந்து  கட்டிடுவார். அந்த கதிரிடம் தப்பவே முடியாது. இது தான் சாக்கு என்று இப்பவே எங்களை பிரித்து வெச்சிட்டு, கண்மணியை கூட்டிக்  கொண்டு போய்டே இருப்பார் .

கண்மணி, கண்களால் சித்துவிடம்  உண்மையை சொல்லிடாத என்று வேண்டினாள்.

ஆஹா! ஒரு வேளை  இவளை இங்க தங்க வைக்க தான் அத்தை இப்படி சொன்னதோ! அப்படி  தான் இருக்கும் . இவள் தான் ஏதோ சொல்லி  இருப்பா ராட்ஷசி. சில சமயம் பொய் கூட நன்மையில் முடியுதே என்று சந்தோஷபட்டான் .

சித்து, கதிரை  பார்த்து  இப்ப  என்ன செய்வீங்க?  என்பது போல லுக் விட்டான் . வந்த பெரியவர்களில் ஒருவர் “செல்லமா சொல்வதையும் யோசித்து பாரு. அவசரபடாம பொறுமையா முடிவு பண்ணு சிவம் .ரெண்டு பேர் வாழ்க்கை.”

“இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று ரெண்டு பேரும் யோசிக்கவே இல்லையே?கதிர் என்ன சொல்லற?அவ இங்கயே இருக்கட்டும்” .

இப்ப இருக்கும் நிலைமைக்கு இந்த குழந்தை தான் குறைச்சல் என்று கதிர் முனங்கினான்.

“அவன் என்ன சொல்ல? என் பெண்டாட்டியும், அவள் வயிற்றில் குழந்தை இருந்தால்…. அவங்க இனி என் பொறுப்பு” என்று சித்து வெற்றிச்  சிரிப்புச் சிரித்தான் .

சந்தோஷத்தில் அப்பவே அவன் அத்தை செல்லமாவை  தூக்கி சுற்றனும் தோணியது .

விட்டால் சிவமும், கதிரும், சித்துவை பார்வையாலே குதறி எடுத்து இருப்பார்கள் .

துண்டை தோளில் போட்ட படி  சித்துவிடம் “இனி நான் என்ன சொல்ல? என் பெண், கண்ணை கசக்கினா உங்களை சும்மா  விட மாட்டேன். உங்க மகன் அங்கேயே இருப்பது நல்லது .எதாவது என்றால் என்னை கூப்பிடு கண்மணி. அப்புறம் நான் பார்த்துக்கிறேன்”

இப்படி ஆகிடுச்சே! முதலிலே இதை விசாரித்து இருக்கணுமோ! நான் எதோ பேசினாலே இந்த செல்லமா வேற மிரட்டிறாலே ! அதை காட்டிக் கொள்ளாமல் மிரட்டும் தோணியில் “மாப்பிள்ளை ஜாக்கிரதை .உங்க முதல்  பெண்டாட்டி உயிரோட இல்லை என்பதனால் இப்ப  விட்டு போறேன் . எதாவது எக்கு தப்ப நடந்துச்சு, அப்புறம் நான் பொறுப்பு இல்லை” 

“ இப்ப கூட நீ வரணும் என்றால் வரலாம் தேனு .குழந்தை இருந்தால்…. அப்புறம் பார்த்துக்கலாம் .என்ன முடிவு சொல்லு” என்று கதிர் கேட்டபோது “அதை நாங்க முடிவு செய்து கொள்வோம். வந்த வேலை முடிந்தால் கிளம்பலாம்” என்று சித்து அழுத்தமாக கூறினான் . 

வெற்றி, அவர் பார்த்துக் கொள்வதாகவும், கூடிய சீக்கிரம் இந்த பிரச்சினைக்கு எல்லாம் முடிவு  கட்டுவதாகவும்  வாக்கு அளித்தார் . இத்தனை பெரிய மனிதரே சொல்லியாச்சு, இனி நம்பி கிளம்பலாம் .

கண்மணிக்கு மட்டும் கேட்கும் படி “உங்க அப்பா ஏன் டீ  அடிக்கடி காமடி செய்யறாரு ! உங்க அம்மாக்கு இப்படி பயப்பட தேவை  இல்லை . மிரட்டினவுடனே சோறு  தண்ணீர்  கிடைக்காது  என்று  இப்படி  ஆப் ஆகிட்டாரு. ஆளும், மீசையும்  தான் வளர்ந்து இருக்கு .மூளை சுத்தம்” என்று உதட்டை பிதுக்கினான் .

“அதே சோறு தண்ணீரும், உங்களுக்கு கிடைக்கணும் என்றால்  என்னை கடுப்பேத்தாம  இருங்க.”

ஜானகி சித்துவிடம் “ நீ செய்வதும் சரி இல்லை டா! அவங்க  கோபப்படுவதில்  நியாயம் இருக்கு. உன் வாழ்கையை  ஏன் இப்படி  வீண் செய்யற? எத்தனை தடவை சொல்வது. கொஞ்சமாவது புரிந்து நடந்துக்கோ!”

“என்ன அம்மா, அந்நியன் மாதிரி மாற்றி,மாற்றி பேசறீங்க !”

“இப்பவும் சொல்லறேன், அந்த கதிர் உன்னை அடித்ததுக்கு தான் கோபமே தவிர அவர்கள்  கேள்வி கேட்டதில் இல்லை. இப்படி உன் குணத்துக்கு, கண்மணி போல பெண் அமைந்ததே அதிர்ஷ்டம்   . இந்த லட்சணத்தில் விவாகரத்து  வேற செய்ய ரெடியாம்?

 நீயாவது உன் கண்மணியை விவாகரத்து செய்வதாவது . காமடி செய்யாம அவளை மலை இறக்கும் வழியை பாரு. செல்லமா நல்லா பிளான் செய்து தான் உன் பெண்டாட்டியை விட்டு போய் இருக்காங்க என்று எனக்கு தெரியும் . ஒழுங்கா மூளை என்று இருந்தால் பிழைதுக்கோ? எங்களையும்  எதையும் சொல்ல கூடாது  சொல்லற? உன் நண்பன் என்று நீ  கொண்டாடிக் கொண்டு இருப்பவன் பட்டை நாமத்தை சாத்த  போறான் பாரு ”  என்று நகர்ந்தாள் .

கண்மணி  ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கும் போது சித்து சத்தம் இல்லாமல் பின்னால் வந்து, அவள் வயிற்ருடன் சேர்ந்து அனைத்ததும் பயந்து அலறினாள் .

“ஹே! நான் தான். தொட்டதுக்கே  இப்படி  அலறினா? உன் வயிற்றில் இருக்கும் என் செல்லம் பயந்துக்க போகுது ! அது எப்படி டீ  தொடவே இல்லை அதற்குள்?”

ஊஞ்சலில், அவள் அருகில் அமர்ந்தவுடன் நகர்ந்து அமர்ந்தாள்.

“விழுந்திட போற தேனு!”

“இதுக்கு குறைச்சலே இல்லை”

“நல்ல  வேலை! உங்க அப்பா, அண்ணனிடம் இங்க குறை இருக்கு சொல்லவில்லை . நான் பிழைத்தேன் . நீ  இப்படி சொன்ன பிறகு என் மனசு என்னமா தவிக்குது தெரியுமா? என் செல்ல தேனுக்கு இங்க வேறே என்ன குறைச்சல்? எதுவும் இல்லை ப்ரூவ் செய்திடலாமா? நான் ரெடி! அங்க எப்படி வசதி” .

அவனை முறைத்து “அது எப்படி எல்லார் முன்னிலையில் நீங்க அப்படி சொல்லலாம். மதிபிற்குரிய  சித்தார்த் அவர்களுக்கு, அவர் பெண்டாட்டியாகிய கண்மணி, பெண்டாட்டியா நடந்துக்கலையாம். மானமே போச்சு ! ஊர் முழுதும் போஸ்டர் அடித்து ஓட்ட வேண்டியது தான? பிளாஷ் நியூஸ் ஒளிபரப்ப  வேண்டியது தான?” என்று கோபத்தில் அவனை உண்டு இல்லை செய்துட்டா!

“என்  செல்ல தேனு கோபம்  கூட ரொம்ப அழகா இருக்கு!  ஓகே .ஓகே கூல். முறைக்காத கண்மணி., அதுக்கு தான், எல்லாம் நடந்து முடிந்து , நீ ,நான் ,நம்ம குழந்தை இருக்கு பொய் சொல்லியாச்சே! உங்க அண்ணன் என்னை எப்படி மோசமா லுக் விட்டான் தெரியுமா ?  முதலில் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை …..”

“இதில் வேற என்ன அர்த்தம் இருக்கும்” என்று மீண்டும் மலையேறினாள்.

“ஹே! என் தேனு குட்டி, என் சொல் படி கேட்கவில்லை என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். இந்த  காரணத்தை  யோசித்து இருந்தால் இன்னும் மசாலா சேர்த்து சொல்லி இருக்க மாட்டேனா!”

மசாலாவா?????

இவன் சொல்வது போல அப்படியும் இருக்குமோ? என்று கண்மணி யோசிக்கும் போது  அவள் இடையை வளைத்து  “தங்க யு சோ மச் தேனு” என்று அவள் அதரங்களை சிறை செய்தான் . மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல அவன் கைகளில் கட்டுண்டு கிடந்தாள். இது சரி இல்லை எண்ணி, அவளை அடக்கி அவனிடம் இருந்து முடிந்த மட்டும் திமிறி  விடுபட்டு ஊஞ்சலில் இருந்து துள்ளிக் குதித்தாள்.

“முதல் முத்தம் . சூப்பர் குட்டிமா. தேனு குட்டி இதழில் இருந்து இம்புட்டு ருசியான தேனா? இப்படி  இனிக்கும்  தெரியாமல் போச்சே, பிறந்த பலனை அடைந்தேன்” என்று வெடி சிரிப்பு சிரித்தவுடன், கண்மணிக்கு மனதில் ஏதோ பளிச்சென்றது. அன்றும் இப்படி தான சொன்னார் .

அதற்கு பிறகு அவன்  மூலம் எதையும் அறியமுடியவில்லை.

கல்லுளி மங்கன் சரியா இருக்கு . வாயை திறந்து எதாவது சொல்லறானா பாரு?

அவளை  கிண்டல் செய்ய எண்ணி “என்ன? அப்படியே களுண்ட நரி  போல மார்கமா  நிற்கிற, மாமா வரேன் ,ரெடியா?? ”  என்றதை கேட்டு “இது திருந்தாத கேஸ். நாலு கொடுத்தால் தான் சரி வருவீங்க !உங்களை” 

அவன் கைகளில் சிக்காமல் “நீங்க என்னை நம்பி எதையும் சொல்வதா இல்லை . நானா உண்மையை கண்டு பிடிக்கும் வரை என்னை தொடாதீங்க!” என்ற எச்சரிக்கை செய்தாள்.

“கண்மணி, வேண்டாம் . கொஞ்சம் காலம் பொறு .நானே”

“இதை கேட்டு அலுத்து போச்சுங்க! என்னை விட்டுங்க  .உங்களுக்கு சொல்ல, என்னுடன்  வாழ இஷ்டம் இல்லை என்றாலும், இன்னும் ஒரு வருடம்  பொறுத்துக்கோங்க, உங்க வாழ்கையை விட்டே போய்டுவேன், எங்க அப்பாவிடம் , அண்ணிடம் என்னால போராட முடியவில்லை. இங்க வந்தால் நீங்களுமா?”  என்று அழுதபடியே  வெளியேறினாள் .

கல்லூரி வேளைக்கு நடுவே பல வேலைகளை செய்தாள். நாட்கள் உருண்டு ஓட அவளால் எதையும் கண்டு பிடிக்க முடியாதோ? இவனை பிரிவது தான் விதியோ என்று பயம் பிடித்தது .

அவன் நண்பன் தேவை அழைத்து “அண்ணா, உங்க நண்பர் வாழ்க்கை நல்லா  இருக்கணும் நினைத்தால் உண்மையை சொல்லுங்க” என்றபோது சித்துவிடம் கேட்காமல் என்னால் எதையும் சொல்ல முடியாது  என்றுவிட்டான். அதே போல தான் ஆனந்தும் ,கிருஷ்ணனும் .

எந்த பக்கம் திரும்பினாலும் பலன் பூஜ்யமாகவே இருந்தது . சுவரில் அடித்த பந்து போல திரும்பியது.

தனிமையில் சித்து கிண்டலாக “ என்ன கிரண் பேடி,  துப்பு துலக்கியாச்சா”  என்று கிண்டல் செய்வதை கண்டு “ஏன் டா படுதற” என்று சட்டையை பிடித்து மிரட்டினாள்.

அவளை அப்படியே அணைத்துக் கொண்ட போது “ ப்ளீஸ் சித்து .என்னால முடியல” என்று என்று காற்று கூட புக முடியாத படி கட்டிக் கொண்டு அழுதாள்.

இவள் இவளையும் வருத்தி என்னையும் வருத்தறாலே!

Advertisement