Advertisement

16.2:

கண்மணி விலகி  போனாலும் அவளை சீண்டி சிவக்க வைத்தான். எல்லார் முன்னால் கண்மணியால் அவனை  ஒன்றும் செய்ய முடியவில்லை . சமையல் அறை  எந்த பக்கம் என்று அறியாத சித்து அங்கேயும் அவளை தேடி சென்று ரொமான்ஸ் செய்தான். எந்நேரம் அவளை ஒட்டிக் கொண்டே திரிந்தான். எப்படி இருந்த நான் இப்படி என்று அவனுக்கே ஆச்சரியம்.

தனிமையில் “பாவம் டீ , உன் புருஷன் இப்படி பட்டினி போட்டே சாகடிக்கிற ?” சபதம் போல

 “வட்டியும் முதலுமா வாங்காம விட போறது இல்லை . கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி இது தான் போல! அவனவன் நாலு பெண்டாட்டி கட்டினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் .நான் ஒன்றை கட்டிக் கொண்டு படும் பாடு !

இன்னும் நாலு மாதத்தில்,  உங்க அப்பா வந்து எங்க என் பேரன் ,சட்டையை பிடிக்க போறார் ! அப்ப, என்ன தேனு செய்ய?” என்று பாவமாக உதட்டை பிதுக்கினான். அவன் அடிக்கும் லூட்டி ,செல்ல சீண்டல்கள் எல்லாம் பிடித்து இருந்தாலும் அவள் பிடியில் இருந்து கொஞ்சம் கூட தளரவில்லை .

“ராட்ஷசி! இப்படியே படுத்து! ஒரு நாள் ரேப் செய்ய கூட தயங்க மாட்டேன்” என்று அவன் சொன்ன தோனியை கேட்டு . மனதில் காமடி செய்வதை பாரு லூசு திட்டி கண்மணி கண்ணில் நீர் வழிய சிரித்தாள்.

சித்து  முதல் திருமணம், மனைவி பற்றி ஒரு தடவை கூட சொல்ல  மாடீங்கிறார். அப்ப திருமணமே நடக்கலையா ?நந்து… அவளுக்கு சந்தேகம் வலுவானது…

அதிதி கல்யாண பேச்சை ஆரம்பித்தவுடன் சித்துவிடம் கண்மணி , ஆனந்த் பற்றி கூறினாள். மற்ற விஷயத்தில் எப்படியோ, இதில் அவள் சொல்வதை கொஞ்சம் காது  கொடுத்து கேட்டான். அவன் நண்பனை பற்றி அவனுக்கு நல்லா  தெரியுமே! இதை தடுக்க என்ன இருக்கு!

அவன் அம்மா, அப்பாவிடம் சொல்லி, கண்மணிக்கு தெரியாமல்  அனைத்து ஏற்பாட்டையும் செய்தான். அவளிடம் மட்டும் சரி சொல்லாமல் அலகடித்துக் கொண்டு இருந்தான்.

அதிதி மனம் வருந்துவது பொறுக்காமல் கண்மணி சித்துவிடம் ” ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க மட்டும் சந்தோஷமா கல்யாணம் செய்து கொண்டு வாழலாம். பாவம் அதிதி.. ஹாப்பி அண்ணாக்கு என்ன குறைச்சல், அதிதிக்கும் பிடித்து இருக்கு”

“நம்ம கல்யாண வாழ்க்கை? சந்தோஷமா?” என்று நக்கலாக கேட்டான்.

“நீ செய்யும் அலம்பலில் வீட்டை விட்டு போகாமல் உன்னுடனே இருக்கேன் என்று சந்தோஷப்படு. இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்காத !”

நான் சொல்ல வேண்டியதை, இவர் சொல்லுவதை பாரு! அவனை எப்படியும் சரி சொல்ல வைத்திடனும் என்று குட்டி போட்ட பூனை போல அங்கேயே சுத்தினாள். சித்து உள்ளுக்குள் அவள் செயல்களை எல்லாம் ரசித்தான் .

கண்மணி பேசி, சண்டை போட்டாலும் பதில் சொல்லாமல்  அவன் வேளையில்  மூழ்கினான் . “இங்க ஒருத்தி தொண்டை தண்ணீர் வற்ற  கத்திக்கிட்டு இருக்கேன். என் சக்கலத்தியோட என்ன வேளை. இவ, இனி என் படுக்கை அறைக்குள் வர கூடாது. அப்படி வந்தா?” என்று அவன் மடி மீது இருக்கும் மடி கணினியை அனைத்து  வெளியே கொண்டு போய் வைத்து விட்டு வந்தாள்.

சித்து மனதில் சரியான பொறாமை பிடித்தவ. தானும் படுக்க மாட்டா. தள்ளியும் படுக்க மாட்டா !ராட்ஷசி!

அவளை பார்த்து ,ஒவ்வொரு அடியாக  முன்னேறியபடி    “அதை  தொட கூடாது என்றால் உன்னை தொடவா? நான் ரெடி ! இதையே தான் பத்து மாதமா  சொல்லிக்கிட்டு இருக்கேன் !உன் மண்டையில் இப்பவாது ஏறுச்சா? உங்க அப்பாவிற்கும் ,உங்க அண்ணனுக்கும்  என்ன பதில் சொல்ல கவலை பட தேவை இல்லை”

 கண்மணிக்கு நா வரண்டது. என்ன செய்ய யோசித்து உடனே “அங்கேயே நில்லுங்க! இந்த மாதம் 30 தேதி  என்ன நாள் சொல்லுங்க !”

அவளை ஒரு மார்கமா பார்த்து “சொன்னால் கிட்ட வரணும் சரியா?”

முதலில் சொல்லுங்க பார்க்கலாம் .

“என்ன புதிர்! என்ன விசேஷம் . நம்ம கல்யாண நாளைக்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கே ! உன்னை பெண் பார்த்த நாளா ? இல்லையே? ஒரு மாதம் முன்பே அந்த நாள் அன்றே பெரிய கேக் வாங்கி கொண்டாடினே! நான் வாழ்க்கையில் தப்பு செய்த நாளை மறக்க முடியுமா? வேற என்ன? எனக்கு தெரியாது! நீயே சொல்லு !”

என்னை பெண் பார்க்க  வந்த  நாளையா இப்படி சொல்லறான் ..இவனுக்கு உண்டு கச்சேரி.

“ என் பிறந்த நாள் தான். கல்யாணம் முடிந்து வரும் முதல் பிறந்த நாள், நியாபகம் வெச்சுக்கோங்க” .

“தேனு, சான்சே இல்லை டீ!  இன்னும் ஒரு மாதம் இருக்கு .அதற்கு இப்பவே தம்பட்டமா?”

“வயசான உங்களுக்கே, 27 பிறந்த நாள் கிப்டுடன்  ரெண்டு கேக் வெட்டி கொண்டாட்டம். சின்ன பெண்ணான எனக்கு இருக்காதா?”

“அடிங்க ! யாருக்கு  வயசாச்சு ! இப்ப பார்திடலாமா ?இனி பொறுமையாக இருப்பதா சித்து” என்று அவனுக்குள் சொல்லி “இன்று உன்னை விடுவதா இல்லை” 

இது தான் தவளை தன் வாயால் கெடும் போல என்று கண்மணி தலையில் அடித்துக் கொண்டாள்.

வேகமாக “மறந்துடாதீங்க” என்று அவனுக்கு நினைவு படுத்தி  கண்ணை மூடி படுத்து விட்டாள்.

சித்து “கிட்ட வர சொன்னதா நியாபகம்!”

நான் தான் விடை சொன்னேன் என்று தலை வரை போர்வையை இழுத்து படுத்தவுடன் உறங்கியும் விட்டாள். சித்து நிலைமை தான் பாவமானது.

கண்மணி எந்த முடிவிற்கும் வர முடியாமல் தவித்தாள்.

சித்துவை பற்றி அவன் நண்பர்களிடம் விசாரித்ததை அறிந்து “கண்மணி, நீ என்ன எல்லாம் முயற்சி செய்யற எனக்கு தெரியும் . நான்  சொல்வதை கேட்கவில்லை என்றால் நம்ம வாழ்க்கை எப்போதும் சரி ஆகாது . தேவை இல்லாத  வேலையை விடு . இதனால்  உனக்கு எதாவது ஆபத்து வந்து விட போகுது, நீ என்ன செய்யற என்று எந்நேரமும் பார்த்துக் கொண்டு இருக்க முடியல.”

“அது எப்படி முடியும். அப்படி  என்ன வரும். அதையும் பார்த்திடலாம் . உயிர் தான போகும். அதற்கு மேல் என்னிடம் என்ன இருக்கு” என்றவுடன் கண்மணி கன்னம் எறிந்தவுடன் தான சித்து கோபத்தில் அடித்து இருப்பது உரைத்தது.

அவளிடம் கோபமாக  “அப்ப,  இனி என்னுடன் பேசாத! நான் சொல்வதை கொஞ்சமாவது கேட்கும் தோணுதா? எதையும்  உன்  இஷ்டப்படி  செய்வதாக இருந்தால்  இன்னும் ஒரு வருடம் கழித்து  என்ன, இப்பவே கிளம்பு !போய்டு ! எனக்கு  நீ வேண்டாம். என் கண் முன் நிற்காதே.”

கண்மணி அதிர்ந்தாள். இவன் சும்மா விளையாட்டுக்கு தான் சொல்லறான் என்று அப்போதைக்கு பேசாமல் விட்டாள் . முடிந்த அளவு கண்மணியை பார்ப்பதை தவிர்த்தான் . எத்தனை நாளைக்கு பார்க்கிறேன் என்று கிண்டலாக நினைத்த கண்மணி அவன் தீவிரத்தை பார்த்து கொஞ்சம் பயந்தாள். இவள் பேசியும் அவன் இவள் பக்கம் கூட திரும்பாமல் நகர்ந்துவிடுவான் .

எப்படியோ போகட்டும் என்று கண்மணியால்  விடவும் முடியவில்லை.

பேசாமல் எதுவும் வேண்டாம் என்று இவன் சொல்வதை கேட்டுவிடலாமா என்று கூட கண்மணி யோசித்தாள். ஆனால் அப்புறம் அவளால் நிம்மதியாக இருக்க முடியுமா ? ரெண்டாம் தாரம் என்றே சொல்லே அவளை கொன்று விடுமே? அனுசரணையா  நடந்து கொண்டால் பிரிவது சாத்தியமா? சும்மாவே அவன் பார்வையாலே உருகும் மனதை கடிவாளம் கொண்டு அடக்க வேண்டியதா இருக்கு .. இப்படியே நாட்கள் வேகமாக சென்றது . அவள் கல்லூரி கிளம்பும் முன் கிளம்பிடுவான். இரவு அவள் தூங்கியவுடன் தான் திரும்பிவான் .கண்மணிக்கு அவனை பார்த்தே பல காலம் ஆனது போல தெரிந்தது.

ஒரு கட்டத்தில், அம்மா  சொல்வது  போல, அவன் கடந்த காலத்தை மறந்து  அவனுடன் இணைந்து வாழ்ந்தால் தான் என்ன?

சிவமிற்கு தெரியாமல் செல்லமா அழைத்து, “உங்க அப்பாவும் அண்ணனும் இத்தனை ரகளை செய்தும், உங்க வீட்டில்  உன்னை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றால் எத்தனை தன்மையனவர்கள் தெரிந்துக் கொள். ஏதோ நாம செய்த புண்ணியத்தால் உனக்கு  நல்ல  வாழ்க்கை, கணவன் அமைந்து இருக்கு. ஷ்யாமை கேட்ட போது, மாப்பிளை மாதிரி பையன் எங்கே தேடினாலும் கிடைக்காது சொல்லறான் . ஒழுங்கா பிழைக்கும் வழியை பாரு . இன்னும் உங்களுக்குள்……   எனக்கு இதற்கு மேல் எப்படி சொல்வது என்ற தெரியவில்லை கண்மணி” என்று புத்தி மதி வழங்கினாள்.

அவன் இல்லாத நேரத்தில் அவன் கபோர்ட் , மடிகணினி  என்று எதையாவது ஆராய்ந்து கொண்டே இருப்பாள் .

இதை அறிந்த சித்து அவனுடைய பொருட்களை எல்லாம் பக்கத்து அறைக்கு மாற்றிக் கொண்டு கதவிற்கு பெரிய பூட்டும் போட்டான் .

பிறந்த நாள் அன்று கண்டிப்பா பேசுவான் எதிர் பார்த்தாள். வழக்கத்தை விட அன்று  அறைக்கு  மெதுவாக தான் வந்தான் .வந்ததில் இருந்து கண்மணி அவனையே நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள். ஏதோ பெரிய பிளான் செய்து இருக்கார் என்று சந்தோஷபட்டாள். ஆனால் சித்து அவளை கண்டுக்காமல் டிவியில் பாட்டு கேட்டு, படுத்தவுடன் தூங்கிவிட்டான் . சீரான மூச்சு காற்றை வைத்து உண்மையாக தூங்கிவிட்டானா?  இன்னும் நேரம் இருக்கே !எழுந்து வாழ்த்து சொல்லுவான் என்று அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இவனுக்கு என்ன குறைச்சல்? அலையாக புரளும் கேசத்தில் விளையாட கைகள் துடித்தது . சிரிக்கும் உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டு திகைத்தாள். இவன் என்னை தவிர்ப்பதினால் தான் எனக்கு இப்படி எல்லாம் தோணுதோ ? என்று அவளை திட்டிக் கொண்டாள் .

இரவு 12 மணிக்கு அவன் வாழ்த்து தான் முதலாவதாக இருக்கனும் என்று 11.50 இருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.12 அடிக்க இன்னும் ரெண்டு நிமிடமே உள்ளது . இப்போது கூட என்னிடம் சண்டை போடணுமா என்று கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. நான் அத்தனை தடவை சொல்லியும் இப்படி செய்தா.மணி 12 ஆச்சு . மனம்  தாளாமல் ,கண்மணிக்கே கேட்காத குரலில் இரு முறை அழைத்து பார்த்தாள்.

சித்து அசைந்த பாடு இல்லை. ஒரு வாழ்த்தும் இல்லை ஒன்றும் இல்லை என்று அழுது கொண்டே படுத்து விட்டாள்.

கண்மணி தவிப்பை எல்லாம் சித்து பார்த்துக் கொண்டு தான் படுத்து இருந்தான் . என்னை என்ன பாடு படுத்தற?

Advertisement