Advertisement

தூறல் 15:

கதிர் கண்மணியிடம் “என்ன தேனு! எத்தனை நேரமா அழைக்க ?உன்னை வீட்டில் விட்டு  நான் சீக்கிரம் கிளம்பனும். “

அவள் பேசாததை கண்டு “ நீ பேச மட்ட தெரியும் .சீக்கிரம் ஏறு ! அழுதையா? முகம் எல்லாம் சிவந்து இருக்கு . அலுவலகத்தில் யாராவது  பிரச்சினை ..” இவன் உடனே அடிக்க  கிளம்பிடுவானே பயந்து “இல்லை ! அப்படி எல்லாம் இல்லை”

“அப்ப, அந்த அயோக்கியனை நினைத்து அழுதியா?”

பல நாள் கழித்து அவளாக கதிரிடம் “ எங்க போறீங்க நான் தெரிஞ்சுக்கணும் !”

“உனக்கு அது அவசியம் இல்லை தேனு”.

“எது அவசியம் இல்லை. என் வாழ்க்கையை பற்றி நான் முடிவு எடுக்காமல் யாரு எடுக்க போறா?”

கண்மணி குரலில் கடுமையாக “இப்ப நீ போகும் இடத்துக்கு  என்னை அழைத்து போக போறீயா இல்லையா?”

கண்மணி இப்படி பேசி கதிர் கேட்டதே இல்லை. “நீ வந்தாலும் நாங்க சொல்வதை தான் கேட்கணும் . புரிந்துதா?”

கதிர் சொன்னதை கேட்டு கோபமாக, இந்த சித்தார்த் பெண்டாட்டியையே மிரட்டறாரா? இப்படி எண்ணியவுடன் எப்போதில் இருந்து சித்து  மீது இந்த உரிமை எண்ணம் என்று யோசனை செய்தாள். அவர்கள் நேராக சித்தார்த் வீட்டுக்கு சென்றனர் .

அவள் இதை எதிர் பார்த்தது தான?

“வா கதிர்! ஏன் இத்தனை நேரம்” என்று சிவம் அழைத்த போது அவன் பின்னால் கண்மணியை பார்த்தார்.”நீ எதுக்கு இங்க வந்த தேனு ! நாங்க எல்லாம் உன் விஷயம் பேச தான கூடி இருக்கோம்.”

கதிரிடம் கோபமாக “ஒரு முடிவு எடுத்த பிறகு இவளை அழைத்து வந்து இருக்கலாம் . சரியான அறிவு  கெட்டவன் டா! அவ சொன்னா உனக்கு எங்க புத்தி போச்சு” என்று  திட்டினார் .

“என் வாழ்கையை பற்றி நீங்க என்ன முடிவு செய்ய போறீங்க என்று எனக்கு தெரிய வேண்டாம். வாங்க போகலாம்” .

வாசலிலே கதிரை பார்த்த சித்து “எங்க வந்த! வெளியே போடா” என்று பாயிந்து வந்து சட்டையை பிடித்தான். “அன்று, உங்க வீட்டில் நாயை அடிப்பது போல அடித்து விரட்டின. இன்று எதற்கு வந்த. மரியாதையா வெளியே போகல காளி அண்ணனை கூப்பிட்டு துரத்தி அடிப்பேன்” என்று பெரிய சண்டை ஆனது .

கதிரையும் சித்துவையும் பிரிக்க அரும்பாடுபட்டனர்.

வீட்டில் பஞ்சாயத்து செய்ய பத்து  பேர் மேல் வந்து இருந்தனர் .

“அட எதுக்கு இப்படி அடிச்சுக்கிறீங்க! உங்களுக்கு பஞ்சாயத்து செய்ய தான வந்து இருக்கோம் . அமைதியா இருங்க.”

சித்து கடுப்பாக “இது உங்க ஊர் ஆலமரம் கிடையாது . இது என் வாழ்க்கை பிரச்சினை. நீங்க எல்லாம் யாரு.”

“என்ன வெற்றி! உன் மகன் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் பேசினா எப்படி?” என்று ஒருவர் பேசினவுடன் “கொஞ்சம் சும்மா இரு சித்து . நம்ம  பேச்சுக்கு  மரியாதை கொடுத்து தான வந்து இருக்காங்க” என்று வெற்றி அடக்கினார் .

கதிர் “இவனுக்கு கல்யாணம் ஆனதை மறைத்து என் தங்கையை கல்யாணம் செய்து இருக்கான். இவனை எல்லாம் பேச வைத்து வேடிக்கை பார்க்கிறீங்க. என் தங்கை இவனுடன் வாழ்ந்தது போதும் . முதலில் பிரிச்சு விடுங்க .நாங்களே எங்க பெண்ணை பார்த்துக்கிறோம்.”

சமாதனம் செய்ய வந்து இருந்தவர்,  ஆத்திரப்பட்டா எப்படி கதிர்? நம்ம பெண் வாழ்கையும் இதில் அடங்கி இருக்கு .

சித்து கோபமாக “நீயே உன் தங்கையை வெச்சுக்கோ! இத்தனை நாள் உன் பேச்சை கேட்டு தான இங்க வரல. இப்ப மட்டும் வந்திடவா போறா!”

கண்மணி வீட்டுக்குள் செல்லாமல் வாசலிலே இருந்தாள். அவள் காதில் சித்து சொன்னது  தெளிவாக விழுந்தது.

கதிர் கோபமாக “இப்பவும் என்ன நடந்தது சொல்லறியா ?அழுத்தக்காரன் . இவனிடம் இன்னும் என்ன பேச்சு . முதலில் இவங்களை பிரித்து விடுங்க” என்று எகிறினான். “நீ என்ன டா சொல்ல …நானே அவளுக்கு விவாகரத்து கொடுக்க தயார். உடனே வக்கீலுக்கு ஏற்பாடு செய்யறேன்” என்று சித்து பயங்கர கோபத்தில் கத்தினான்.

“விவாகரத்து கொடுத்திடுவானா? என்ன காரணம் சொல்லுவான்” என்று கண்மணி சித்துவையே  பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“என் முதல் கல்யாணம் பற்றி உனக்கு சொல்லணும் அவசியம் இல்லை”.

பொறுமையாக கேட்டால் கூட சித்து சொல்லி  இருப்பானோ என்னமோ! இப்படி ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து மிரட்டினால் ……

“அது எப்படி. நாளைக்கு என் தங்கைக்கு குழந்தை பிறந்தா  இரெண்டாம் தாரத்து குழந்தை தான சொல்லுவாங்க. உரிமை எல்லாம் உன் மூத்த சம்சாரம் மகனுக்கு தான போகும். இதை நான் அனுமதிக்கவே மாட்டேன்.”

“நீ யாரு அனுமதிக்க! நானே வேண்டாம் சொல்லறேன். உன் தங்கை இனிமேல் எங்களுக்கு வேண்டாம்” அதை சொல்லும் போதே சித்துக்கு மனதில் ஊசி குத்தியது போல் வலி.

அடிச்சுகாதீங்க தம்பி . என்ன செய்யலாம் பேசி பார்க்கலாம். கதிர் சொல்வதிலேயும் நியாயம் இருக்கே  என்று  அமைதிபடுத்தினார் .

“வெற்றி, நீங்க சொல்லுங்க? என்ன விஷயம் என்று. அது தெரிந்தால் தான ஒரு முடிவிற்கு வர முடியும். முதல் தாரத்து மகன் இங்க உங்க மகனுடன் இருப்பானா?”

அது வந்து …

சித்து இடை புகுந்து “என் விஷயம். நீங்க எதையும் சொல்ல தேவை இல்லை” என்று அவன் தந்தையை அடக்கினான்.

“அது எப்படி தம்பி , உங்களுக்காக தான வந்து இருக்கோம் . பெண்ணை பெத்தவங்களுக்கு ஒரு முடிவு தெரியனும் ல. யோசித்து சொல்லுங்க” .

“என்ன முடிவு! நான் அப்பவே சொல்லிட்டேன் ல . நான் அவளை போக சொல்லவே இல்லை . அவளா போனா. நான் தேவை என்றால் அவளா வரட்டும். என் மகனை நான் கூட்டிகிட்டு  வர போறேன் . என்னுடன் தான் வைத்துக் கொள்ள போறேன். யாரும் எதையும்  சொல்ல முடியாது. கேட்க முடியாது.”

வெற்றி, இவன் ஏன் பிரச்சினையை மேலும் சிக்கல்  ஆக்கி கொள்கிறான் என்று கவலை கொண்டார் .

வெற்றி அவசரமாக “என் மருமகள் எங்களுடனே இருக்கட்டும் . அவன் ஏதோ கோபத்தில் பேசறான்.”

சிவம் வெற்றியிடம் “என்னையா விளையாடறீங்களா? இத்தனை பேசின பிறகு அவளை இங்க எப்படி விட்டு போக! சோறு போட வக்கு இல்லாமலா கல்யாணம் செய்து கொடுத்தோம். நல்ல வாழ்க்கை அமைத்து தரனும்  தான் கல்யாணம் செய்து கொடுத்தோம். இவர் பேசுவதை பார்த்தால் அப்படி எல்லாம் நடக்குமா சந்தேகமா இருக்கு . இப்படி வேலைக்காரியா, அந்த குழந்தைக்கு ஆயாவா இருந்து கஷ்டபடுவதை விட  என் பெண், என் மகளாகவே ராணி மாதிரி என் வீட்டில் வளம் வரலாம்.”

இவளை எப்படி எல்லாம் இங்க பார்த்துக் கொண்டோம். இவர் எப்படி அப்படி சொல்லலாம் என்று கோபத்தில் சித்து “அளவா பேசுங்க சிவம். அப்படி என்ன வேலை செய்தாளாம் உங்க பெண். முதலில் நல்ல பெண்டாட்டியா நடந்து கொண்டாளா கேளுங்க.”

கண்மணிக்கு வந்ததே கோபம். இவன் எந்த அர்த்தத்தில் சொல்லறான். எப்படி இருந்தாலும் அதை இப்ப சொல்லணும் அவசியம் இல்லை . இரு டா உனக்கு நான் யாரு காட்டறேன் .

“இப்படியே பேசினால் முடிவே வராது. ஏதோ எங்க பெண் தெரியாமல் கோபமா கிளம்பிடுச்சு.”

கதிர், சித்துவை அடித்த கோபத்தில் ஜானகி  “என் மருமக இங்க, எங்க வீட்டில் வாழனும் என்றால் அவள் அப்பா, அம்மா கூட பேச கூடாது .பிறந்த வீட்டு  சொந்தமே வேண்டாம் வரணும் .அப்படி வந்தால் இருக்கட்டும். இல்லை என் மகன் சொல்படி ..”

இது வரைக்கும் வாயை திறக்காத செல்லமா “நீங்க பேசுவது சரியே  இல்லை. அன்று  உங்களுக்கு பெண் கிடைத்த சந்தோஷத்தில் பரிசம் போட்ட  போது பேசியது என்ன? இப்ப பேசுவது என்ன? என் மகளை, உங்க மகளா  நினைக்கிறேன் சொன்னது எல்லாம் பொய்யா?”

செல்லமா மனதில் சிவமை, இந்த ஆளு சரியான கூறு கெட்ட மனிதனா இருப்பார் போல . சேர்ந்து வாழ்ந்தால் தான் மரியாதை ,எத்தனை தடவை படித்து படித்து சொன்னேன். புத்தியில் ஏறுச்சா?

 இங்க இருப்பதும் அங்க இருப்பதும் ஒன்றா என்று நொந்து கொண்டாள். இவர்களிடம் பேச என் தம்பிகளை வரவைத்து இருக்கணும். இப்படி  இரு பக்கமும் பிடிவாதமா இருந்தால் என் பெண் நிலைமை, வாழ்க்கை ?        

இவர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் போது  கண்மணி   வாழ்க்கையை பந்து போல ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமும் பந்தாடுவதை  அவளால்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை . எப்படியும் ஒரு வருடம் கழித்து பிரியனும் முடிவு எடுத்தது தான ? அப்ப பிரிந்தால் என்ன? இப்ப பிரிந்தால் என்ன? ஒன்று தான? எப்போதும் எனக்கு தான வேதனை! முடிவு எடுத்த படி  சொல்லிட்டு  கிளம்பனும் எண்ணினாள்.

கண்மணியை அங்கு கண்ட செல்லம்மாக்கு இவ எங்க வந்தா? நான் சொல்வதற்கு மாற்றி எதையும் சொல்ல கூடாதே என்று கடவுளிடம் அவசரமாக மனு  ஒன்றை வைத்தாள்.

“என்ன முடிவு செய்தீங்க சிவம். சித்தார்த் தம்பி சொல்வது போல உங்க மகளை அழைத்துக் கொண்டு போறீங்களா? இல்லை அவங்க அம்மா சொன்ன படி விட்டு கிளம்பரீங்களா! ரெண்டு பேரும் இப்படி பிடிவாதம் பிடித்தால் என்ன என்று முடிவு சொல்ல ?”

சித்து மனதில், இதுக்கு தான் வெள்ளை  வேட்டி சட்டையுடன் ,மீசையை முறுக்கிட்டு, மஞ்ச  பையை தூக்கிட்டு கிளம்பி  வந்தானுங்களா என்று மோசமாக லுக் விட்டான் .

“நாங்க எதுக்குயா விட்டு கிளம்பனும் . இத்தனை தூரம் ஆன பிறகு விட்டு போவதா இல்லை. வேண்டும் என்றே எல்லாத்தையும் மறைத்து செய்து இருக்கங்க. இத்தனை கேட்டும்  சொல்லாமல், இவனுக்கு இத்தனை அழுத்தம் ஆகாது. இவன் மறைக்க மறைக்க தான் விஷயம் பெரிதாக இருக்குமோ தோணுது .யோவ் வேலு சாமி, உன்னை நம்பினதுக்கு எங்களுக்கு நல்லா வேண்டும்” என்று வேலுசாமியிடம் பாயிந்தார் .

கண்மணி அவசரமாக  “அப்பா! எனக்காக கொஞ்சம் பொறுமை !”

சித்து “மரியாதையாக பேசுங்க சிவம் சார். இப்ப நீங்களும் ,உங்க மகனும் இந்த குதி குதிக்கிறவங்க கல்யாணம் முன்பே இவன் நல்லவனா, எத்தனை தாரம், எத்தனை குழந்தை விசாரித்து பெண்  கொடுத்து இருக்க வேண்டியது தான?” நக்கலாக “ என்ன தொழில்? எத்தனை வருமானம் மட்டும் தான கேட்டீங்க! நாங்க உங்களை எதிலும் தடுக்கலையே !”என்று அழுத்தமாக பேசினவுடன்

” அப்படி தான் டா . உனக்கு  என்ன மரியாதை வேண்டி இருக்கு, விட்டா பேசிட்டே போற? உன் வண்டவாளம் மட்டும் எங்களுக்கு தெரிந்து இருந்தால் எதுக்கு இப்படி வந்து விழுகபோறோம் .ஆளை பார்த்து  எடை போட்டது தப்பு என்று இப்ப தான புரியுது, இனியும் முட்டாளா இருக்கப் போவது  இல்லை ” என்று கதிர் குதித்தான்.

வெளி இடத்தில் இது போல யாராவது நடந்து கொண்டால் நடப்பதே வேற!  கதிரை அடித்து துவைக்கணும் என்று தோன்றிய எண்ணத்தை சித்து   அடக்க பெரும்பாடுபட்டான் .

சித்து கண்கள் கோவைப்பழம் போல சிவந்தது.

கண்மணி “அண்ணா! ப்ளீஸ்! நீயும் இப்படி பேசாத” கெஞ்சினாள்.

கண்மணியை பார்த்தவுடன் , இது அத்தனையும் இவளால் தான் .இந்த கல்யாணத்தால் தான். ஒரு வார்த்தை எனக்கு சபோர்டா பேசறாளா பாரு . அழுத்தக்காரி . என்னை நம்பு, கொஞ்சம் பொறுமையாக இரு என்று அத்தனை  தடவை சொல்லிவிட்டு தான வந்தேன் .

என் வாழ்க்கை நீங்க தலையிட வேண்டாம் சொல்லராளா பாரு. என் சொல்லுக்கு மதிப்பு இருக்கா. அப்ப, நான் மாட்டும் எதற்காக  இவளுக்கு உருகணும். எப்படியோ கூட்டிகிட்டு போகட்டும். வேண்டும் என்றால் வேற கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியா இருக்கட்டும் .

சிவம் “இத்தனை  நடந்த பிறகு, நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம். பேப்பரில் , இப்பவே இத்தோட ……..” எல்லாம் முடிந்தது எழுதி தா , சொல்வதற்குள்

கண்மணி ஏதோ சொல்ல வந்ததை செல்லமா தடுத்து “உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்ல ஆசை படறேன்” .

“நான் பேசும் போது புதுசா என்ன பழக்கம் செல்லமா” என்று சிவம்  கடிந்து கொண்டார்.

கண்மணி மனதில், என்னை பேச விட்டால் தான? சித்துக்கு திருப்பி கொடுக்கலாம்  பார்த்தா விட மாடீங்கிரான்களே!அவன் முழிப்பதை பார்க்கணும் ஆசைபட்டால் இப்படி தடங்களா? எப்படியும் யார் என்ன சொன்னாலும் நான் சொல்ல போவதை சொல்லாமல் நகர போவது இல்லை .

செல்லமா உறுதியாக “நீங்க பேசும் போது குறுக்கே பேச மன்னிக்கணும். என் பெண் வாழ்க்கை பற்றி மட்டு தான் பேச வந்து இருக்கோம் நினைத்தால் அது இல்லை. அப்படி சட்டு புட்டுனு முடிவு எடுத்திட முடியாது”

சிவம் கோபமாக “என்ன செல்லமா சொல்லற! எதுக்கு இப்ப  குழப்பற ?உன் மாப்பிளையை பற்றி நாம எதுக்கு கவலை படனும். அது நமக்கு தேவை இல்லாத விஷயம். இன்னும் எத்தனை கல்யாணம் வேண்டும் என்றாலும் கட்டிக்கட்டும். இவனை கம்பி என்ன வைக்காம விட போறது இல்லை. நம்ம பெண்ணை நாம அழைத்து போகலாம் .நம்ம பெண்ணுக்கு  என்ன குறைச்சல்?”

செல்லமா பார்வையில், கொஞ்சம் அடங்கு என்ற செய்தியை கண்டு அமைதியானார்.

“கொஞ்சம் பேச விடுங்க. நான்  சொல்ல வந்ததை சொல்லிடறேன். வெற்றி அண்ணா, என் மக எந்த தப்பும் செய்யவில்லை. படித்து கொண்டு இருந்த பெண்ணுக்கு அவசரமாக கல்யாணம் செய்து வைத்தோம் . படிக்கணும்  சொல்லியும், நாங்க தான் கட்டாயபடுத்தினோம். இப்ப  அவ உங்க வீடு மருமகள் . எதா இருந்தாலும், நாங்க தலையிடுவது சரி பட்டு வராது. அவ இனி உங்க பொறுப்பு . அவ மட்டும் இல்லை நான் சந்தேகப்படுவது………

கண்மணி சொல்ல வந்தது என்ன? செல்லம்மா என்ன சொல்ல போகிறார் can u guess? இனி என்ன நடக்கும் . கண்மணியை அங்கு விட்டு போவார்களா? இல்லையா அழைத்துக் கொண்டு செல்வார்களா?

Advertisement