Advertisement

தூறல் 14:

உற்சாகமாக அன்னை, அதிதியுடன் பேசி மாடியில் இருக்கும் அவன் அறைக்குள் நுழைந்தான்.

அங்கு கண்மணியை காணாமல் ஏமாற்றமடைந்தான் .ஒரு வேலை பழைய நியாபகத்தில், அவள் மீது கோபமாக இருப்பேன் எண்ணி பக்கத்துக்கு அறையில் தங்கிவிட்டாலோ என்று தேடிய போது அங்கேயும் காணோம் . எப்போதும் கண்மணிக்கு ஒளிந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அவனை தேட விட்டு வேடிக்கை பார்ப்பாள் . அதில் எப்போதும் அவளுக்கு தனி குஷி. அது போல இருக்குமோ  என்று மாடி முழுதும் தேடினான் . சத்தமில்லாமல் “கண்மணி! எங்கே இருக்க? நீயா வெளியே வந்திடு, நானா கண்டுபிடித்தால் தொலைந்த??”

உடலில் உள்ள  ஒவ்வொரு அணுவும் அவளை காண ஏங்கியது.

ஒரு வேலை வரவே இல்லையா?

இல்லையே! பார்த்தேனே? அம்மா ஏதோ சொல்லி கோபித்துக் கொண்டு அனுப்பிவிட்டார்களா …….உடனே அன்னையிடம் விரைந்தான் .

“என்ன அம்மா, யாராவது வந்தாங்களா ?”

“இல்லையே! ஏன் கண்ணா!”

ஏமாற்றமாக “யாரும் இல்லையா?”

“உங்க அப்பா நாளை காலை தான் வருவதாக சொன்னார். நீ யாரை கேட்கிற ? பிரவீன் நண்பன் கௌதம் தான் வந்தான். இவன் அவனுடன் சினிமா போய் இருக்கான்”

“கண்மணி இங்க வந்தாளா?”

ஜானகி முறைத்து “அவ எப்படி வருவா! நீ தேவை என்றால் உன்னுடனே கிளம்பி வந்து இருப்பா? அவளுக்கு அவங்க அப்பா ,அண்ணன் போதும் போல! அப்படி இல்லை என்றால் உன்னை அடிக்கும் வரை   வேடிக்கை  பார்த்து இருந்து இருப்பாளா? ரெண்டு வாரமா  வராம இன்றைக்கு  எதுக்கு வரா? கல்லூரிக்கு போகணும் அக்கறை இருந்தா கண்டிப்பா வந்து இருப்பாளே!”

காட்டமாக “உனக்கு வரேன் போன் செய்தாளா? எதுக்கு? மறுபடியும் அவள்  அண்ணனை விட்டு உன்னை அடிக்கவா?”

ஜானகி சொன்னது எதுவும் அவன் காதில் விழவில்லை.

சித்துக்கு, இங்க வரமா எங்க போன  என்ற குழப்பமே மிஞ்சியது .

உடனே தேவிற்கு அழைத்தான் .

வினி மூலம் கண்மணி சென்னை வந்து ஒரு வாரம் ஆச்சு  என்றதும்  சித்துக்கு அதிர்ச்சி. ஒரு வாரமா இவளுக்கு என்னை வந்து  பார்க்கணும் கூட தோணவில்லை. எங்க இருக்கா,என்ன விவரம் என்று  அத்தனையும் அறிந்து கொண்டான். ஏன் வாழ்க்கையில் மட்டும் இப்படி எல்லாம் நடக்குது என்று வருந்தினான் .

“ஏன் டீ இப்படி செய்யற” என்று கேட்க எண்ணி கண்மணிக்கு அழைத்த  போது தொடர்பில் இல்லை என்று வந்தது . என் மீது பிரியம் இருந்தால் அவளா வரட்டும்.

வீட்டில் சித்துவை பற்றி பேசியே அவளை கஷ்டபடுத்தினர். அதில் இருந்து தப்பிக்க கல்லூரி,ப்ராஜக்ட் வேலை  என்று அவள் பாதி நேரம் அதிலே மூழ்கினாள். அவள் அப்பா பேச்சை மீறி சித்துவை பார்க்க துணிவில்லை .

எல்லாத்துக்கும் காரணம் அவன் முதல் கல்யாணம். அவன்   சொல்லாட்டி என்ன ?அவளே சித்து வாழ்க்கையை பற்றி அறிய முயன்றாள். வெற்றி கிடைக்குமா பார்க்கலாம்?

சித்து வீட்டில் இருப்பவர்களை பல வழியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாள். ஏன் யாருமே எனக்கு அழைக்கவில்லை .

ஜானகி,  இருக்கும் கோபத்தில் கண்மணி மனம் நோகும் படி எதாவது சொல்லி விடுவாள் பயந்து கண்மணி அழைத்தும் அதிதி, வேலை இருக்கு என்றும், அம்மாவை அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் .இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா குணம் ஆகுது . ப்ளீஸ் பாபி, நானே கூப்பிடறேன். இப்ப வெச்சிடறேன் என்றவுடன் கண்மணி உடைந்தாள்.

ப்ரஜச்ட் செய்ய கண்மணி  VS சொலுஷன்ஸ் சென்றாள். இவ்வளவு பெரிய கம்பனியில் வேளைக்கு எடுத்து  இருக்காங்க என்றால் எனக்கும் கொஞ்சம் மூளை இருக்கும் போல !

என்ன மூளை இருந்து என்ன செய்ய. என் சித்துவை பார்க்கக் கூட முடியலையே! எப்ப போன் செய்தாலும் பிசி  என்றே வருது .என் நம்பரை கண்டு அழைக்கணும் கூடவா தோணவில்லை .

கண்மணி  பழைய எண்ணை மாற்றி இருக்க, புது எண்ணில் இருந்து அழைத்தால் அவனுக்கு எப்படி தெரியும்.

அவர்கள் செய்ய சொன்ன வேலை எல்லாம் எளிதாக செய்து முடித்தாள். காலை பொழுது இனிமையாக சென்றது .மதியம் ஆனவுடன் அவளுடைய  ப்ராஜக்ட் மனேஜர்  அவளுக்கு வரிசையாக பல வேலைகளை  தொடர்ந்து செய்ய சொல்லி கொடுத்தார் . சிறிது நேரத்திலே அவளுக்கு தலை வலி ஆதிகம் ஆகியது .

அந்த வலியையும் தாங்கி  வேலையை முடித்துக் கொடுத்த போது கண்மணி எதோ தவறுதலாக கோட் அடித்து இருப்பதை  பார்த்து ,

“நீங்க எல்லாம் எதுக்கு இங்க வந்து என் உயிரை வாங்கறீங்க .பேசாமல் வீட்டில் உட்கார்ந்து இருந்த படியே  காசு கொடுத்து, எதாவது ப்ராஜக்ட் வாங்கி  நீங்க செய்தது கொடுத்திட வேண்டியது தான” என்று திட்டினார். பெரிய தவறு எல்லாம் இல்லை . கண்மணி மாதிரி அனுபவம் இல்லாதவர்கள்  நான்கு நாட்கள் ஆனாலும் இதை முடிக்க முடியாது என்று மூர்த்திக்கும் தெரியும் . இருந்தாலும் அவளிடம் கோபமாக பேசினார்.

தூரத்திலே  சித்து வரும் போது  கண்மணியை பார்த்து உறைந்து நின்றான் . இவ எங்க ?

மூர்த்தியை அவள் அருகில் பார்த்து, புதுசா இன்டர்ன் வேளைக்கு என்று முர்த்தி சொன்னது அவனுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது. இன்று தான சொன்னார் .தெரிந்து இருந்தால் காலையிலே வந்து இருப்பேனே? நெருங்கி செல்ல முர்த்தி அவளை திட்டுவது இவன் காதில் தெளிவா விழுந்தது. இவன் யார் என் கண்மணியை பேச? கைகளை மடக்கி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான் . இவளுக்கு இது எல்லாம் தேவையா? என்னிடம் சொல்ல கூட இல்லை.

கண்மணியை இதுவரை யாருமே திட்டினது கிடையாது . அழுகையை அடக்க நினைத்தாலும்  அவளால் முடியவில்லை . அதற்கும் சேர்ந்து திட்டு கிடைக்கும் என்று பெரும்பாடுபட்டு  கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.

கண்மணியையும், முர்த்தியையும் உயர் அதிகாரி அழைப்பதாக கூறினவுடன் இருவரும் சென்றனர் .

கண்மணி குனிந்த தலை நிமிரவில்லை. ஏற்கனவே மூர்த்தி திட்டியதால் மனம் உடைந்த கண்மணி, இனி இவர் வேற என்ன சொல்லுவாரோ என்று பயந்து நடுங்கிக்  கொண்டு இருந்தாள்.

சித்து காரியதரசி அவளை வெளியே நிற்க வைத்து மூர்த்தியை மட்டும் உள்ளே அனுப்பினாள்.

போன வேகத்திலே அவர் வேகமாக வெளியே  வந்தார் .அடுத்து கண்மணியை உள்ளே அனுப்பினாள்.

கண்களில் கண்ணீர் இருந்ததால் அவளால் சரியாக பார்க்க முடியவில்லை .

அவளிடம் ஒரு கை தண்ணீர் கிளாசை கொடுத்தது. அதை வாங்கி வேகமாக மூச்சு விடாமல் பருகி முடித்தாள் .

சித்துக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது .

அவளை ஆசுவாசபடுத்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்த போது அதிர்ந்தாள். நின்று இருந்த கண்ணீர் மறுபடியும் சுரக்க ஆரம்பித்தது . ஓடி சென்று அவனை காற்று  கூட புக முடியாத படி கட்டிக் கொண்டு முத்த மழை பொழிய ஆரம்பித்தாள்.


“ஹே தேனு !என்ன ஆச்சு” என்று சிரித்து அவளை ஆசையாக கட்டிக் கொண்டான்   .

அவள் அழுவதை நிறுத்த முடியாமல் திணறினான் . “குட்டிமா ,கண்ணம்மா, ப்ளீஸ் அழுவதை  நிறுத்து” . இண்டர்காம் வழியாக அவன் சொல்லும் வரை அவனை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை கூறினான்.

“எங்க டா போன! நான் எப்படி இருக்க என்று கூட வந்து பார்க்கவில்லை. என்னுடன் பேசாதீங்க. இந்த ஒரு  வாரமா எப்படி தவித்து போயிட்டேன் தெரியுமா. நம்ம அக்ரீமெண்ட் படி உன்னால் என்னை ஒரு வருடம்  கூட பார்த்துக் கொள்ள முடியாதா. நான் தான் ஒரு வருடம் சொல்லி இருந்தேனே! இப்பவே நிம்மதி என்று சந்தோஷமாக இருந்துவிட்டயா ! ஒரு போன் செய்தாயா! என்னை உங்களுக்கு பிடிக்கலையா?” என்று நின்று அழுகை ஆரம்பமானது.

“ரொம்ப பலமான மரியாதை தேனு குட்டி . என்ன, அப்பப்ப காணாமல் போய்டுது” என்று வாரினான் .

கண்மணி மனம் சித்துவை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க, அவளுக்கு தெரியாமல் அவனை காதலிக்க  தொடங்கி இருக்கிறாள். அது தான் அன்று பேசும் போது கூட  ஒரு  வருடம் அவனுடன் இருக்க ஒத்துக் கொண்டாள்.

“இப்ப அழுவதை நிறுத்தவில்லை, ஆபிஸ் என்று கூட பார்க்கமாட்டேன் ஜாக்கிரதை” என்று மிரட்டியவுடன் அவனை முறைத்த படி விலகினாள். “அச்சோ! ஆத்தா! பயமா இருக்கே” என்றவுடன் லேசாக சிரிப்பு எட்டி பார்த்தது.

அவளுக்கு அவனே சூடான காபி தயாரித்து கொடுத்தான் .கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள். ரொம்ப நேரம் அழுததினால் மறுபடியும் தலை வலிக்க ஆரம்பித்தது. அவள் முகத்தை கண்டு கனிவாக “ என்ன டா! எப்படி? இன்னுமா குணம் ஆகல. மேலும் மோசமா இருக்கு . அப்பவே கொஞ்சம் சரி ஆகி இருந்ததே” என்றவுடன் அன்று நடந்ததை எல்லாம் விளக்கினாள்.

அவள் கட்டை நீவிய படி , முத்தம் பதித்து, நடந்தது அவனுக்கு எதுவும் தெரியாது என்று பல முறை மன்னிப்பு கேட்டான் . “ நான் அன்றே உன்னை என்னுடன் அழைத்து வந்து இருக்கணும் கண்மணி, நீ என்னுடன் வரவில்லை என்று கோபப்பட்டேன் தவிர,  உனக்கு என்ன ஆச்சு என்று திரும்பி கூட பார்க்கவில்லை ” என்று அவளை அனைத்துக் கொண்டான்.

“நீங்க எப்படி இங்க !”  என்று அதி முக்கியமான கேள்வியை கேட்டாள்.

“நீ இங்க இருக்க தெரிந்து  உன்னுடன் ரொமான்ஸ் செய்ய தான் வந்தேன்” . அவள் சித்துக்கு, முத்தம் கொடுத்த இடம் இன்னும் காயவில்லை. அதை ஆசையாக வருடி  ” ரொமான்ஸ் டரைலர் சூப்பர். மெயின் படம் எப்படி இருக்கும் பார்க்க அசையா இருக்கு .. என்ன ரெடியா?” என்று கண்ணடித்துக் கேட்டவுடன் “ஆசை தான் . சொல்லுங்க எப்படி” .

“இது நம்ம கம்பனி தான்” .

“என்னது உங்களுதா ?”

“நம்மளுடையது” என்று மறுபடியும் திருத்தினான்.”வி வெற்றி, எஸ்  சித்தார்த்” .

“ஓஓஓஓஓ எனக்கு தெரியாம போச்சே!”

“ஏன் தெரிந்து இருந்தால் வந்து இருக்க மாட்டல. உங்க அண்ணன் அந்த கதிர் தடியன் தான் விட்டு இருப்பானா?”

“சாரி” அவன் முகத்தை நீவியபடி “அன்று அண்ணன் உங்களை” என்று முடிக்க முடியால் திணறினாள் .

அதை நினைத்து சித்து முகம்  கோவைப்பழம்  போல சிவந்தது .

அவளை தள்ளி நிறுத்தி “வந்து ஒரு வாரம்  ஆச்சு . ஏன் வீட்டுக்கு வரல” என்று அழுத்தமாக கேட்டவுடன் கண்மணி உடல் நடுங்கியது .

“நான் நான்…….” என்று முடிக்க முடியாமல் திக்கினாள்.

கண்மணி இன்று வராவிட்டால், அவன் ஏற்கனவே முடிவு செய்து இருந்த படி  அவளை அழைத்து வரும் முடிவில் தான் இருந்தான் .

“ஏன் நம்ம வீட்டுக்கு வரல …”

அப்போது வெற்றியிடம் இருந்து சித்துக்கு வீட்டுக்கு உடனே கிளம்பி வரும் படி போன் வந்தது .

“கண்மணி!”

அவள் கண்களை பார்த்து  “நீ என்னை நம்பறையா? நான் எதை செய்தாலும் நம்ம நல்லதுக்கு தான் நினைத்தால் எனக்காக, இன்னும் கொஞ்ச நாள் என்னை விட்டு பிரியாமல் பொறுமையா இருப்பையா” !

“நீங்க ஏன் எதையும் முழுதா சொல்ல மாடீங்கிறீங்க! எல்லாம் உங்களால் தான் . சொல்லிட்டா அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும்”

அவன் பார்வையை கண்டு “எனக்கும் தான்” என்று முனங்கினாள்.

“உங்க அப்பாவும் , அண்ணனும் இப்ப பேசறாங்களே! நம்ம கல்யாணம் முன்பே விசாரித்து இருக்க வேண்டியது தான! அப்ப பணக்கார இடம் தான எதையும் கண்டுக்காமல் சரி சொன்னீங்க!”

“அது எப்படி நீங்க அப்படி சொல்லலாம் .உங்க அளவு வசதி பணம் எங்களுக்கும் இருக்கு” என்று கொதித்து எழுந்தாள்.

கதிர் அவளை அழைத்து  போக வந்து இருந்தான் .

சித்து ஆசையாக “என்னுடன் நம்ம வீட்டுக்கு வரையா ? ப்ளீஸ் டா. வெட்கத்தை விட்டு சொல்லறேன். I miss u so much”

அதை கேட்க கண்மணிக்கு சந்தோஷமாக இருந்தாலும் “இல்லைங்க அப்பாவுடன் ……..”

“இத்தனை சொல்லியும் என்னை புரிந்து கொள்ளவில்லை . உனக்கு ஒரு சான்ஸ் தரேன் . நீ சொன்ன ஒரு வருடம் என்னுடன் இருக்கணும் என்றால் இப்பவே கிளம்பு. இல்லை என்றால் அப்படியே உங்க அப்பா வீட்டுடன் தங்கிவிடு” .

கண்ணில் நீர் முத்துக்களுடன் “இப்படி சொன்னால் எப்படி?”அவள் கண்ணீரை கண்டு இளகாமல் “என் முடிவில் மாற்றம் இல்லை”.

அவள் அப்பாக்கு என்று பேசுவாள? இல்லை சித்துக்காக பார்ப்பாளா ? ரெண்டு பக்கமும் என்னை இப்படி பந்தாடினால் நான் என்ன செய்ய? ரெண்டு பேரும் முக்கியம் தான் .

இவனுடைய பிடிவாதத்தால் தான இத்தனை பிரச்சினையும் . அவள் முகத்தை கொஞ்சம் நேரம் பார்த்து கோபமாக வெளியேறினான் .

கதிர் பொறுமை இல்லாமல் மறுபடியும் கண்மணியை அழைத்தான் . அப்போது தான் சுயநினைவை அடைந்தாள். இப்பவும் என்னை  விட்டு போயாச்சா?

Advertisement