Advertisement

தூறல் 13 :

செல்லமா “கதிர், நீ நல்லா விசாரிச்சியா.. எப்படி கதிர் இப்படி ஏமாந்தோம் .பார்த்தா அப்படி தெரியலையே!”

“நம்ம இப்படி வெளுத்து எல்லாம் பால் நினைப்பதனால் தான் அழகா ஏமாத்தி இருக்காங்க”

 “… அச்சோ , நான் என்ன செய்வேன் .உங்க சித்தப்பா இதை கேட்டால் தாங்குவாரா? என் பெண் வாழ்க்கை இப்படியா ஆகணும் .படிச்சிட்டு இருந்த பெண்ணை ஜாதகம், அது, இது என்று சொல்லி  இதற்காகவா சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தோம . என் மக தேனுக்கு இந்த விஷயம் தெரியுமா? இதை கேட்டா தாங்குவாளா ?தேனு” என்று திரும்பும் போது கண்மணி தலையில் அடிபட்டு மயங்கி இருந்தாள்.

ரத்தத்தை  கண்டு  பதறிய செல்லமா “கதிர் இங்க வா .தேனு மயங்கிட்டா. அம்மாடி தேனு” என்று என்ன செய்தும்  கண்மணி விழிக்கவில்லை . உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்தனர் .

நடந்ததை கேள்வி பட்ட  சிவம்,  சித்து மீது பயங்கர கோபத்தில் இருந்தார் . மகள் மீது இருந்த பாசம் அவர் கண்ணை மறைத்தது. “கதிர் உன் முரட்டு தனத்தால் என் தேனுக்கு  எப்படி அடிபட்டு இருக்கு பாரு . எத்தனை தடவை சொல்வது . மாப்பிளையை விட்டு இருக்க கூடாது. நான் வரும் வரை பிடித்து வைத்து இருக்கணும் .அப்புறம் தெரிந்து இருக்கும்.”

“இன்னும் என்ன சித்தப்பா மாப்பிள்ளை. போதும் அவனுடன் கண்மணி வாழ்ந்தது.”

செல்லமா பதறி  “அப்படி சொல்லாத கதிர். என்ன இருந்தாலும் நம்ம கண்மணி வாழ வேண்டிய பெண்  ..”

“அந்த அயோக்கியனுக்கு ரெண்டாம் தாரமா வாழ்வதற்கு இப்படியே இருக்கட்டும் “.

ஆத்திரப்படாத கதிர் என்று சிவம் அடக்கினார் .

“இவன் செய்த திருட்டு தனம் தெரிந்து விட்டது ஓடிவிட்டனா ? என் பெண்ணை இந்த நிலையில் விட்டு எப்படி போகலாம் . மனசாட்சி இல்லாத மிருகம் .எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கணும் .இவனை நம்பியா என் பெண்ணை கொடுத்தேன். அன்று நாங்க சென்னை  போய் இருந்த போது என்ன சொல்லியும் தேனு , உங்களுடனே வரேன் பா கெஞ்சினாலே! எனக்கு, அப்ப இப்படி என்று தெரியாம போச்சே . அப்பவே இவங்களை உண்டு இல்லை செய்து இருப்பேன்” . அவர் பெண்ணிற்காக வருந்தினார் .எத்தனை செல்லமா வளர்த்தேன் . இப்படி பார்க்கவா? என்று அவருக்கு உள்ளம் கொதித்தது.

சித்து, நந்துவுடன் இருக்கும் போடோக்களை எல்லாம் கதிர்  காண்பித்தான் .”சரியான  ஏமாற்றுக்கறான் சித்தப்பா. கொஞ்சம் கூட சந்தேகம் வராத மாதிரி நடித்து ஏமாத்தி  இருக்காங்க. இப்ப கூட உண்மையை சொல்லாம ஓடிட்டான் . என் கண் முன்னாலே என் தங்கையை மிரட்டறான். தேனு , அப்பவே  அவனுடன் கிளம்பவில்லை என்றால் அடித்து  இழுத்து கூட்டிகிட்டு போவானாம் . அவன் அம்மா உடல் நிலையை  சொல்லி மிரட்டறான் .

அதை கேட்டு, என் நெஞ்சம் எப்படி பதறுச்சு தெரியுமா சித்தப்பா ! இவனை  எல்லாம் அடித்து துவைத்து தென்னை மரத்தில் காய போட்டு இருக்கணும் .அந்த பையனுக்காக தான் நம்ம தேனுவுடன் கல்யாணம். மகனுடன் இருந்தால் கல்யாணம் நடக்காது, என்று  முன்பே பிளான் செய்து அந்த பையன் தாத்தா வீட்டில் வளருது.

அந்த  அம்மா உடல்நிலையை காட்டி மிரட்டி சித்தார்த்தை சம்மதிக்க வைத்து இருக்காங்க, நல்லாவே ஏமாந்துட்டோம் . இல்லை   என்றால் அவர்களுக்கு இருக்கும் சொத்துக்கும், அந்தஸ்துக்கும் எதற்கு இந்த பட்டிகாட்டில் பெண் எடுக்க போறாங்க . நாம  அதை யோசிக்கவே இல்லை .ஊருக்கு பயந்தாவது பேசாமல் இருப்போம் தைரியம் தான்” என்று  கதிர் அவன் அறிந்த உண்மைகளை ஏற்றி இறக்கி சொன்னான். அவனுக்கும் வாழ்க்கையில் இப்படி ஏமாந்துடோமே! செல்ல தங்கை வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே கோபம் தான் .

ஏற்கனவே கண்மணி தலையில் அடிபட்ட இடத்திலே அடிபட்டதால் நிறையா ரத்தம் போய் இருந்தது . மேலும் மூன்று தையல்கள் போட்டனர் . அரை நாள் மயக்கத்தின்  பின் தான் கண் விழித்தாள் .உடம்பு பலவீனத்தால் அவளால் பேச கூட முடியவில்லை . கண்விழித்தவுடன் முதலில் சித்துவை எதிர் பார்த்து அவனை காணாமல் ஏமாந்தாள்.

அவள் அப்பா, கதிர் கோப முகத்தை காண பிடிக்காமல் அசதியில் கண் மூடினாள். கதிர், சித்துவை அடித்தது , கண்மணியை தள்ளி விட்டது எல்லாம் அவள் கண்ணில் படம் போல ஓடியது. விளையாட்டு போல தான பேசிக் கொண்டு இருந்தோம் .எதற்கு அண்ணனுக்கு அப்படி கோபம் .

உனக்கே அவன் கல்யாண விஷயம் ,மகனை பற்றி  அறிந்ததும் கோபம் வரலையா என்ற கேள்விக்கு அவளால் பதில் சொல்ல இயலவில்லை . என்ன இருந்தாலும் கதிர் அண்ணன் அவர அடித்தது தப்பு தான் . எப்படி அடிக்கலாம் என்று மனம் வருந்தினாள். நானே இன்னும் ஒரு வருடத்தில் இந்த விஷயத்தை பற்றி அப்பாவிடம்  பக்குவமா பேசி இருப்பேனே!

இந்த அண்ணன் எதற்கு இப்படி குட்டையை போட்டு குழப்பனும் .

ரெண்டு நாள் கழித்து, ஸ்கேன் எடுத்து ,எல்லாம் நார்மல் அறிந்த பின் தான் அவளை வீட்டுக்கு அனுப்பினர் .

வீட்டில் அனைவரும் கண்மணியிடம் பிரியமா நடந்து கொண்டனர் .

அவளை விட்டு அனைவரும்  கூடி கூடி பேசினார் . அவள் சொல்வதை ஒருத்தரும் காது கொடுத்து கேட்பது போல இல்லை .

சித்து, ஜானகி , அதிதி ஒருவரும் அவளை அழைக்கவில்லை . தலையில் அடிபட்டதால் பாதி நேரம் மாத்திரை உபயத்தில், தூக்கத்திலே பொழுது கழிந்தது .எஞ்சி இருக்கும் நேரம் யோசனை செய்து தலை வலியை வரவழைத்துக் கொண்டாள்.

அமுச்சி வீட்டில் இவனுடன் பொழுது எத்தனை சந்தோஷமாக கழிந்தது என்று அதையே மறுபடி மறுபடி அசைபோட்டாள். விட்டில் பூச்சி  போல ஒரு நாள் தான் சந்தோஷமான வாழ்க்கையா?

அவளுக்கு அப்போதே சித்துவை பார்க்கணும் போல இருந்தது . ஏனோ சொல்ல முடியாத பாரம் நெஞ்சை அழுத்தியது. அவளை அறியாமல் அவள் கண்ணில் கண்ணீர். எதனால்? எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் அவனை விட்டு  பிரியனும் தான முடிவு செய்து வைத்து இருந்தேன் .

அது ஒரு வருடம் கழித்து. ஒரு  வருடமாவது ஒன்றாக  இருக்கலாம் நினைத்தேனே !

அவள் எண்ணத்தை கண்டு  அவளுக்கே ஆச்சரியம். எதனால் ,இப்படி  என்று விடை கண்டு பிடிக்க முடியாமல்  குழம்பினாள் .

கல்லூரி  திறக்க இருக்கும் ரெண்டு நாள் முன்னர்  சிவம் அவளிடம் “தேனு, அப்பாவை மன்னிச்சிடு.உனக்கு பெரிய தவறை செய்துவிட்டேன். அண்ணன் சொல்லவில்லை என்றால் எங்களுக்கு இப்பவும் , எதுவும் தெரிந்து இருக்காது. அப்பா  உனக்கு நல்லதை மட்டும் தான் செய்யணும் நினைத்தேன், உன் மனம் என்ன பாடு பட்டு இருக்கும் எனக்கு தெரியும்” என்றவுடன் கண்மணி மனதில் அங்க என்னமோ என்னை எந்நேரமும் அடித்து கொடுமை படுத்தினதை போல பேசறாங்களே என்று அவளுக்கு சிரிப்பு தான் வந்தது .

அவள் சந்தோசம் நிலைக்குமா பார்க்கலாம்.

“சென்னைக்கு கிளம்பு” என்றவுடன் சந்தோஷமாக கிளம்பினாள்.

ஒரு வருஷம் கூட இவனால் என்னை பார்த்துக்க முடியாதா என்று சித்துவிடம் கேள்வி கேட்டு சண்டை பிடிக்கணும். ஒரு போன் கூட செய்ய முடியாத அளவிற்கு ஐயா பிசியா? டுபாகூர் ,பிராட்.

அவனை பார்க்க போகும் ஆவலில் தலை வலி, காயம் எல்லாம் மறந்து  ஆசையாக சென்னை நோக்கி பயணப் பட்டாள்.

கூடவே கதிர், அவள் அப்பா , தம்பி ,செல்லமா கிளம்பினர் . இந்த ஒரு வார காலமாக கண்மணி கதிருடன் பேசவே இல்லை.

இப்ப  தான் என்னமோ என்னை புது வீட்டுக்கு அழைத்து போவது போல எல்லாரும் கிளம்புவதை பாரு , அப்ப கூட சித்து செய்த அலம்பலில் ஒருத்தரும் வரல என்று எண்ணி சிரித்துக் கொண்டாள்.

சென்னைக்கு சென்றவுடன் ரயில் நிலையத்தில் சித்துவை எதிர் பார்த்தாள். அவன் வரவில்லை என்று அவன் மீது கோபமானாள் .

 வீட்டுக்கு போனவுடன் கல்லூரி  கிளம்ப சரியா இருக்கும் . அப்பா , அம்மாவை வைத்துக் கொண்டு  சண்டை வேண்டாம் . மாலை வந்து இவனை கவனித்துக் கொள்கிறேன் . என்ன தான் அவளை சமாதானம் செய்து கொண்டாலும், ஏனோ அவளுக்கு நெருடலாகவே இருந்தது.

ஒரு வேலை எங்கயாவது ஊருக்கு போய் இருக்காரா? டிரைவர் காளி அண்ணனை கூட காணோமே! அவரையாவது அனுப்பி இருக்கலாம். இவங்க முதலில் நான் கிளம்பி வரதை பற்றி வீட்டில்  சொன்னாங்களா ?

குனிந்து நிமிர்ந்தால், தலையில் இருக்கும் காயம் வேற அப்பப்ப  வின்,வின் என்று வலித்தது. எப்படி என்னை பார்க்க வராமல்  இருக்கலாம். எத்தனை ஆசையாக வந்தேன். தலை வலியா,இல்லை மனதின் பரமா என்று அவளுக்கு புரியவில்லை. கண்ணில் துளிர்த்த  நீரை  யாரும் அறியாமல்  துடைத்துக் கொண்டாள்.

கதிர் யாருடனோ பேசி வண்டியை வரவழைத்தான் .

“அப்பா, மாமா கார் அனுப்பலையா? நாம வருவதை அவர்களுக்கு சொல்லவில்லையா?”

“சொல்லணும் என்ன அவசியம்! இவங்களை எல்லாம் நிற்க வைத்து கேள்வி கேட்டால் தான் புத்தி வரும். பட்டிகாட்டு மனிதன் ஏமாற்றவா பார்க்கிறாங்க ! வரேன் இரு, இவங்களை எல்லாம் சும்மா விட போறது இல்லை. நான் சொல்லும் படி கேட்டு நட தேனு .கேள்வி கேட்காத?” 

“எதற்கு கோபம் அப்பா !என்ன அம்மா? இப்படி பேசினா என்ன அர்த்தம்?”

“இப்ப எதுக்கு அவளிடம் இப்படி பேசறீங்க! எதா இருந்தாலும் பொறுமையா சொல்ல வேண்டியது தான” என்று செல்லம்மா கடிந்து கொண்டாள் ..

இத்தனை நாளில் அவள் அம்மா , அப்பா எந்த ஒரு விஷயத்துக்கும் சண்டை போட்டது இல்லை . இப்ப இந்த ஒரு வரமாக அப்பப்ப இப்படி தான் கோபமாக முறைத்து கொள்கிறார்கள் . அவளால் தான் இப்படி என்று  நினைத்து, வருந்தாமல் இருக்க முடியவில்லை .

அவள் வீட்டுக்கு தான் வண்டி போகும் என்று எதிர்பார்த்தாள். அதற்கு நேர் எதிர் திசையில்  வண்டி சென்றது .

“எங்க அம்மா போறோம்” .

செல்லமா ஒன்றும் சொல்லவில்லை.

புத்தம் புதிய வீடு முன் வண்டி நின்றது . சிவம் மகளிடம்  “தேனு, குளித்து கல்லூரிக்கு கிளம்பு . இங்க இருந்து போக  உனக்கு இருவது  நிமிடம் தான் ஆகும் . வீடு எல்லாம் சௌரியமா இருக்கா பாரு” .

என் வீடு அங்க இருக்க இதை எதற்கு பார்க்க? இவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று அறிந்து கொண்டாள். என்ன என்றே அவர்களே சொல்லட்டும் . எப்படியும் இன்னும் இரண்டு நாளில் கண்ணன் கவுன்சிலிங் முடித்தவுடன், அவள் வீட்டில் கொண்டு போய் விட்டிடுவார்கள் என்று எண்ணி  கல்லூரிக்கு கிளம்பினாள். கண்ணனுக்கு சென்னையிலே கவுன்சிலிங் மூலம் மருத்துவ கல்லூரி  சீட் கிடைத்தது.

மேலும் ரெண்டு  நாள் பொறுத்து பார்த்த கண்மணி கல்லூரியில் இருந்து திரும்பியவுடன் செல்லம்மாவிடம் “அம்மா! நாம ஏன் அங்கு போகல . அங்க அத்தை, மாமா, நான் இன்னும் வரல கவலைபடுவாங்க”.

செல்லமா மனதில் ஏன் புருஷன் தேடுவான் சொல்ல மாட்டேங்கிறா? இவர்களுக்குள் எல்லாம் சரியா இருக்கா? இல்லை, நான் தான் அப்படி நினைத்துக் கொள்கிறேனா ? கல்யாணம் ஆகி ஆறு  மாதமே முடிந்துவிட்டது. மாப்பிள்ளை இவள் மீது பிரியமா இருக்கார் என்று நினைத்தது தப்போ? கணவன், மனைவிக்குள் இருக்கும் அன்னியோனியத்தை இவர்களிடம்  பார்க்கவே இல்லையே! அன்றும், எங்களுடனே  ஊருக்கு கிளம்பனும்  பிடிவாதமாக கிளம்பிவிட்டாள். ஊரிலும் , இவ ஆத்தா வீட்டிலே தான இருந்தாள். ஊருக்கு போகணும் சொல்லவே இல்லையே? .மாப்பிளையா தான்  வந்தார்.

“என்ன அம்மா, ஒன்றும் சொல்ல மாடீன்கிற ! அண்ணா அன்று செய்தது தப்பு தான அம்மா . அவர், இங்க சிங்கம் போல எத்தனை மரியாதையுடன் வளம் வருபவர் தெரியுமா? எத்தனை தொழில்களை திறம்பட செய்பவர். அவரை போய் அண்ணா…… ? அப்பாவும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு இப்படி செய்தால் எப்படி?” என்று அவள் ஆதங்கத்தை  கொட்டி தீர்த்தாள்.

“சண்டை வந்திடுச்சு தேனு. அதற்கு அப்புறமும் உன் புகுந்த வீட்டில் என்ன? ஏது? என்று இதை பற்றி   பேசாமல் இருந்தால் எப்படி . எதாவது சொன்னால் தான ஆகும் . ஒரு வாரமா  உனக்கு என்ன ஆச்சு ,ஏது என்றாவது கேட்டாங்களா? நாளைக்கு உனக்கே எதாவது ஆனா? எதையும் கண்டுகொள்ளாமல்  இப்படி இருந்தா, எப்படி உன்னை அங்க விட்டு வைக்க முடியும்.”

கண்மணி மெளனமாக இருப்பதை பார்த்து

அப்படி எல்லாம் இல்லை.உன் மாப்பிள்ளை அப்படி விட்டிடுவாரா? என்னை நல்லா பார்த்துப்பார் என்று ஏன் சொல்ல மாட்டேன்கிறா ? கண்டிப்பா ஏதோ இருக்கு என்று தான அர்த்தம் . ஏற்கனவே இவங்களை பிரித்து விடனும் முடிவில் இருக்கும் இவன் அண்ணனுக்கு இது தெரிந்தால்? வேற வினையே வேண்டாம் .சரி செய்யறேன். ஒரு முடிவு எடுக்கிறேன் .

கண்மணி முகம் தெளியாததை கண்டு “அவர்கள் நம்மளிடம் மறைத்து தப்பு தான? இன்னும் அவர் மூத்த தாரம் உயிரோட இருக்கா ?எதனால் இறந்தாங்க ?என்ன ஆச்சு? ஒன்றும் தெரியாம உன்னை அங்க எப்படி அனுப்ப. மகன் இருப்பதை மறைத்தது சட்டப்படி குற்றம் தான ?

அப்பா, ஊரில் இருப்பவர்களை எல்லாம் பஞ்சாயத்துக்கு அழைத்து இருக்காங்க . அவங்க வந்து பேசின பிறகு, என்ன செய்வது என்று பார்க்கலாம். உன் மாமனார் ஊரில் இல்லை . எங்கயோ வெளிநாடு போய் இருக்கிறார். வந்தவுடன் தான் எதையும் சொல்ல முடியும் . இவர்கள் ஏனோ விரிசலை பெரிது செய்யறாங்க தோணுது . நீயும் கொஞ்சம் யோசி டா. எல்லாம் சீக்கிரம்  சரி ஆகணும் என்று பன்னாரி அம்மனை தான் வேண்டி இருக்கிறேன்”

என்னை கேட்காமல், என்னிடம் எதையும் சொல்லாமல் இவர்களா எப்படி முடிவு செய்யலாம் . இப்படி பஞ்சாயத் கூட்டவா கூடி, கூடி பேசினாங்க. கல்யாணம் முன்பே தீர விசாரித்து இருக்க வேண்டியது தான . பஞ்சாயத் என்ற  பெயரில்  யாரும் சித்துவை கேள்வி கேட்க அவளுக்கு துளி கூட  விருப்பம் இல்லை . இதை எப்படி தடுக்க? ஏற்கனவே அண்ணன் அவரை கோபபடுத்தி, அடித்து  தூண்டி விட்டு இருக்கான். அதனால் தான் என்னிடம்  பேச கூட இல்லை .

சித்து உண்மையை சொல்லாமல் இருக்க ஏதோ ஒரு காரணம் இருக்கு கண்மணி  நம்பினாள் . இல்லை என்றால் இவர் இதற்கு எல்லாம்  தயங்க கூடிய ஆள் இல்லையே!

கோபம் இருந்தாலும் அவள் அப்பவை நோகடிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தாள்.

ஊரில் இருந்து வந்தவுடன்  கண்மணி வண்டி வந்து இறங்கியது .டூ  வீலர் ஓட்டினாலே அவருக்கு பிடிக்காதே! ஒரு முறை அவனிடம் வண்டி வாங்கி கொடுங்க கேட்டபோது  இத்தனை கார் இருக்கு . பிடிக்கவில்லை என்றால் உனக்கு பிடித்த கார் வாங்கி ஒட்டு . டூ வீலர் மட்டும் வேண்டாம் என்று ஸ்ட்ரிக்டா சொல்லிவிட்டான் . அவர் பேச்சை மீறி எப்படி ஓட்ட என்று கண்மணி தயங்கினாள்.

அவள் வீட்டில் இருந்து கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு வண்டியில் செல்லவே  பத்து நிமிடம் மேல் ஆகும் . நடந்து போனால் காலையில் கஷ்டம். அப்படியும் இரண்டு நாள் அறக்க பறக்க சென்று வண்டியை தவறவிட்டாள் . இது வேளைக்கு ஆகாது. சித்துக்கு வண்டி ஓட்ட பிடிக்கவில்லை என்றால் வந்து  பெண்டாட்டியை காரில் கூட்டிகிட்டு போகட்டும் .

அன்று மாலை பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வண்டியில் சென்றாள். டிராபிக் சிக்னலில், சித்து கண்மணியை பார்த்தான் .

இவ எப்ப வந்தா? கண்மணி தான?அதுவும் டூ வீலர் வண்டியில் !  காலை, நேரத்திலே மீட்டிங் கிளம்பியதால் இவ வந்தது எனக்கு   தெரியலையா? சர்பிரைசா வந்து இருக்காளா ?அவனுடன் வண்டியில் கிளைன்ட்  இருந்ததால் அவளுடன் பேச ,தொடர முடியவில்லை. இவ தலையில் இன்னும் காயம் அப்படியே இருக்கு . இவளை பார்த்து இரண்டு வாரம் ஆச்சே.. ரெண்டு வாரமா காயம் ஆறாமல் இருக்கா? முதலில் டாக்டரிடம் காட்டணும் . ரெண்டு வாரமா இருந்த கோபம் கண்மணியை கண்டவுடன் காணாமல் போனது . ஏனோ சந்தோஷமாக உணர்ந்தான்.

அன்று கதிர் அடித்த அவமானத்தில் கிளம்பி வந்தவுடன் ,அவன் முக காயத்தை பார்த்து ஜானகி என்ன  என்று விசாரித்தாள்.பொய் சொல்ல முயன்று தோற்றான் . கதிர் அடித்ததை கேட்டு, நானே  என் மகனை அடித்தது இல்லை, அவன் எப்படி அடிக்கலாம் என்று    மிகவும் கோபம் அடைந்தாள்.

ஜானகி அவள் அண்ணா வேலுச்சாமியை அழைத்து சண்டை போட்டாள். ‘நீங்க சொன்னீங்க நல்ல குடும்பம் தான பெண் எடுத்தோம். இப்படி என் மகனை அடித்தால் என்ன அர்த்தம் .பெண்ணை கூட்டிகிட்டு வந்து விட சொல்லுங்க இல்லை என்றால் அவங்களுடனே இருக்கட்டும்’ என்று கோபமாக பேசினாள்.

‘நான் பேசி பார்க்கிறேன் தங்கச்சி’ என்று சிவமை தொடர்பு கொண்டார்.

‘வாயா  பெரிய மனுஷா! உன்னை தான் தேடிக்கிட்டு இருந்தேன் . கல்யாணம் ஆனவனை இரெண்டாம் தாரமா என் பெண்ணுக்கு கட்டி வெச்ச மகராசா ! உன்னை நம்பி தான, தீர விசாரிக்காம பெண் கொடுத்தோம் .இப்படி மொத்தமா  ஏமாத்திடீன்களே!’ என்று அவர் ஒரு பக்கம் சண்டை போட்டார் .

சித்து காயத்தை பார்த்து ஜானகி கோபம் அடங்க மறுத்தது . அதற்கு ஏற்றது போல கண்மணி வீட்டில் இருந்து ஒருத்தரும் வரவும் இல்லை , கூப்பிடவும் இல்லை. அடிச்சதும் இல்லாமல் இவங்க காலில் நாம போய் விழனும்  பார்க்கிறாங்களா ? பட்டிகாட்டானுங்க சரியா தான் இருக்கு.

உன்னை அடிக்கும் வரை உன் பெண்டாட்டி என்ன செய்து கொண்டு இருந்தாள். தடுத்து இருக்க வேண்டாம் .கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆச்சு. இன்னும் உன்னை பற்றி அவளுக்கு தெரியவில்லை என்றால் எப்படி? நீ என்ன சமாதானம் செய்தாலும் உன் பெண்டாட்டி  இங்க வரட்டும். கேள்வி கேட்காமல் உள்ளே விட போறது இல்லை .

‘உடம்புக்கு ஆகாது. கோபம் வேண்டாம்’ என்று சொல்லி சித்து, அப்போதைக்கு ஜானகியை  சமாதானம் படுத்தி இருந்தான்.

அச்சோ , அம்மா வேற அப்படி கோபமா இருந்தாங்களே !கண்மணியை கண்டிப்பா திட்டி, பேசி இருப்பாங்க .பாவம் .என்னிடம் சொல்லிக் கொண்டு வந்து இருக்கலாம் .நான் எதாவது சொல்லி சமாதானம் படுத்தி இருப்பேனே !எப்படியோ  என் தேனு வந்தாச்சு. அவளிடம் அனைத்தையும் சொல்லி விட  வேண்டியது தான் .

“சித்து ,சித்து ஆர் யு  ஓகே! you seems to be tensed” என்று ஜெர்மன் நாட்டு கிளைன்ட் கேட்ட போது “யா!பைன் .I am ok ரூத்”

இரவு டின்னர் முடித்து, கிளைன்ட்  ஹோட்டலிலே விட்டு , ஆசையாக, உற்சாகமாக  வீட்டுக்கு கிளம்பினான்.

வீட்டிற்குள்  நுழையும் போதே எங்க இவளை  ஆளை காணோம் .    வண்டி சத்தம் கேட்டாலே ஓடி வந்திடுவாலே என்று கண்களை சுழல விட்ட படியே நுழைந்தான் .

என்ன தான் இருவரும்  எதிரும் புதிருமா, பேருக்காக கணவன் மனைவி என்று இருந்தாலும் கண்மணி, சித்துக்காக ஒவ்வொரு விஷயத்தையும்  அவளை அறியாமல் பார்த்து பார்த்து செய்வதை கண்டு சந்தோஷப்படுவான்.

கண்மணி வீட்டில் அவள் அம்மா, அப்பாக்கு செய்வது ,பாட்டி, தாத்தாக்கு செய்வதை கூட இருந்தே  பார்த்து வளர்ந்ததால் சித்து எப்படியோ போகட்டும் என்று அவளால்  மேம்போக்காக இருக்க முடியவில்லை. கடமை என்று செய்வதை விட ,செய்யணும் என்று சந்தோஷமாக செய்வாள்.

அவன் சாப்பிடும் வரை ஜானகி என்ன சொல்லியும் சாப்பிடமாட்டாள் . அவன் அறைக்குள் வந்தவுடன் தான் படுக்க போவாள். அவன் வண்டி ஓசை  கேட்டவுடன்  இன்முகமாக வாசல் வரைக்கும் வந்து அவன் பெட்டியை வாங்கி செல்வாள்.

சித்து கூட பல சமயம்   ” இதில் எல்லாம் குறைச்சல் இல்லை. இதை எல்லாம் செய்ய சொல்லி கொடுத்த உங்க ஆத்தா, அம்மா ,மற்றதை ஒன்றுமே கற்றுக் கொடுக்கலையா” என்று சீண்டுவான் .

ஹாலில் அவன் அன்னையும் அதிதியும் மட்டும் இருந்தனர் .ஒரு வேலை வந்த களைப்பில் தூங்கறாளா?

உற்சாகமாக அன்னை, அதிதியுடன் பேசி மாடியில் இருக்கும் அவன் அறைக்குள் நுழைந்தான்.

அங்கு கண்மணியை காணாமல் ஏமாற்றமடைந்தான் . ஒரு வேலை பழைய நியாபகத்தில், அவள் மீது கோபமாக இருப்பேன் எண்ணி பக்கத்துக்கு அறையில் தங்கிவிட்டாலோ என்று தேடிய போது அங்கேயும் காணோம் . எப்போதும் கண்மணிக்கு ஒளிந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அவனை தேட விட்டு வேடிக்கை பார்ப்பாள் . அதில் எப்போதும் அவளுக்கு தனி குஷி. அது போல இருக்குமோ  என்று மாடி முழுதும் தேடினான் . சத்தமில்லாமல் “கண்மணி! எங்கே இருக்க? நீயா வெளியே வந்திடு, நானா கண்டுபிடித்தால் தொலைந்த??”

உடலில் உள்ள  ஒவ்வொரு அணுவும் அவளை காண ஏங்கியது.

*********

Advertisement