Advertisement

தூறல் 10.1:

இருக்கும் கோபத்தில் சித்து யாருக்கோ அழைத்து கோபமாக பேசினான். அந்த பக்கம் என்ன சொன்னாலும் முடியவே முடியாது .என் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு . என்னால் இதற்கு  மேல் பொறுமையா இருக்க முடியாது என்று சித்து  இத்தனை நாள் கட்டி காத்த பொறுமை காற்றில்  பறந்தது. அந்த பக்கம் ஏதோ சொன்னதுக்கு போனை அணைத்து தலையை தாங்கிய படி அமர்ந்து கொண்டான் .

ஊருக்கு சென்ற கண்மணி எப்போதும் சித்துவை நினைத்துக் கொண்டு இருந்தாள்.

பிரியத்தினால் இல்லை. கோபத்தினால் மனதில் எந்நேரமும்  திட்டிக் கொண்டு  இருந்தாள். நான் கிளம்பி வந்து ஒரு வாரம் ஆச்சு. போன் செய்தானா பாரு . நிம்மதி என்று தான இருக்காரு. அவனே ஒரு ஏமாற்றுக்காரன், அவனை பற்றி எதுக்கு யோசிக்கணும் . திட்டனும். எப்படியோ போகட்டும் என்று மனதிடம் சண்டை போட்டாள்.

கண்மணி கிளம்பின மறுநாளே சித்து பத்து நாள் பிசினஸ் விஷயமாக நெதர்லாந்த் கிளம்பினான். அவன் பிறந்த நாள் முன்தினம் இரவு பன்னிரண்டு மணிக்கு  தான் சென்னை திரும்பினான். வீட்டுக்குள் நுழையும் போதே ஒருவன்  பார்சலுடன் காத்துக் கொண்டு இருந்தான். இந்த நேரத்தில் ..என்ன,ஏது என்று குழம்பினான்.

அதில் பிறந்த நாள் வாழ்த்து அட்டையுடன், அவனுக்கு பிடித்த  அழகிய சோகோ டர்பில் கேக் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது . அவனுக்கு அதை பார்த்து ஆச்சரியம்.

கேக் கொடுத்த நபரே திரும்பி வந்து அழகிய சிகப்பு ரோஜா பொக்கே கொடுத்து விட்டு போனான் .

12 மணிக்கு இப்படி யாரு என்னை நினைத்து வாழ்த்து பரிசு அளிப்பது. ஒரு வேலை என் தேனு . அப்படி எங்கையாவது கொடுத்திட போறா …

யாரா இருக்கும் . இதில் பெயர் இல்லையே! ஒரு வேலை நண்பர்களில் யாராவது … காலையில் தெரிந்து விட போகுது .  பயண சலிப்பில், அசதியில்  அப்படியே யோசித்த படியே  தூங்கிவிட்டான் .

அடுத்த நாள் காலையில் முதலாவதாக  கண்மணி வாழ்த்தை தான் எதிர் பார்த்தான். போனில் பல வாழ்த்து மெசேஜ் வந்து இருந்தது. ஊரே வாழ்த்து சொன்னாலும் இவ சொல்வது போல வருமா ?

கல்யாணமானவுடன் வரும்  முதல் பிறந்தநாள். அருகில் இருந்து வாழ்த்து சொல்லணும் தோணுச்சா பாரு. ராட்ஷசி என்று திட்டி அவன் துணியை எடுக்கும் போது புது சட்டை  பெட்டியை பார்த்தான். கூடவே ஒரு புது காலணி பெட்டி . 

பெட்டியில், லேட்டஸ்ட் டிசைன் ஷர்ட். அவனுக்கு  பிடித்த கலர் வேறு . பார்த்து வாவ் என்று வாயை பிளந்தான். இது எப்படி .ஒரு வேலை அதிதி வாங்கி வைத்து இருப்பாளோ என்று உற்சாகமாக கிளம்பினான் .

அவன் கப்போர்டில் வாட்ச் எடுக்கும் போது, புது ரொலெக்ஸ் வாட்ச், சின்ன குறிப்புடன் அழகா மின்னியது. இது அடுத்ததா? நேரில் கொடுப்பதிற்கு பதிலா இப்படியும் சர்பிரைசா? பிரவீன் வைத்து இருப்பானோ ?

அதற்கு பக்கத்திலே புது  பெர்பியும் பாட்டில், விலைவுயர்ந்த   அழகிய   கூலேர்ஸ் கண்ணாடி .அதை பார்த்து சித்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை .

அவன் பிறந்த நாள் போது நண்பர்கள் பரிசு தருவார்கள் . வீட்டில் அதிதி, பிரவீன், அவன் அம்மா ,அப்பா  மாலை ஹோட்டலுக்கு போகும் போது ஆளுக்கு ஒரு  பரிசை தருவார்கள். ஆனா முதல் தடவையாக இந்த மாதிரி தொடர்ந்து யாரும் சர்பிரைஸ் கொடுத்ததில்லை.

அவன் அன்னை வாழ்த்து தெரிவித்து “இந்தா கண்ணா, விநாயகர்  கோயிலில் உனக்காக அர்ச்சனை செய்து அனுப்பி இருக்காங்க . இப்ப தான் கொடுத்திட்டு போனாரு” .

“ஏன் அம்மா , எப்போதும் அம்மன் கோவிலில் தான அர்ச்சனை கொடுப்பீங்க” .

“நான், அங்க தான் கொடுத்து இருக்கேன் சித்து. அப்ப இது எப்படி?ஒரு வேலை அப்பா அர்ச்சனைக்கு  கொடுத்து இருப்பாராக்கும்.”

உணவு மேஜையில் அவனுக்கு பிடித்த அத்தனை மெனுவும் இருந்தது .  சமையல் செய்பவர் அவனுக்காக ஸ்பெஷலா செய்த பாசுந்தி ச்வீட் கொண்டு வந்து கொடுத்தார்.

ஜானகி, “அவனுக்கு பாசுந்தி பிடிக்காதே! சாப்பிட மாட்டானே ! என்றவுடன் அவர் “இல்லை அம்மா, பிடிக்கும் என்று தான்…….”

எனக்கு  பிடிக்கும் என்று இவருக்கு எப்படி தெரியும் .

அவன் இப்போது தான் சமீபமாக பாசந்தி ச்வீட் விரும்பி சாப்பிட  ஆரம்பித்து இருக்கானே!

“அம்மா, எனக்கு பிடிக்கும்” என்று ஆசையாக சாப்பிட்டான்.

அலுவலகம் கிளம்பும் போது ஒருவர் சின்ன அட்டை பெட்டியை கொண்டு வந்து கொடுத்து சென்றார். ஜானகி யார் அனுப்பி இருக்காங்க?? அதில் என்ன ? என்று ஆர்வமானாள்.

 சித்துக்கும் அதே ஆர்வம் தொத்திக்கொண்டது.

அவன் பிரித்தவுடன் உள்ளே இருந்து பிறந்து சில நாட்களே ஆனா சின்ன நாய்க்குட்டி சத்தம் செய்த படி  தலையை வெளியே அழகா நீட்டியது .

அவன் ரொம்ப நாளா நண்பனிடம் சொல்லி வைத்த நாய்க்குட்டி . “அம்மா! நான் கேட்ட ப்ரீட்.யாரு அனுப்பினார்கள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.”

ஏனோ காலையில் இருந்து சந்தோஷமாக உணர்ந்தான் .

கண்மணியை அழைத்து பார்த்தான் .வழக்கம் போல யாரும் எடுக்கவில்லை. இவளுக்கு எல்லாம் எதுக்கு போனோ? என் பிறந்தநாளை இவ எதுக்கு நியாபகம் வைத்துக் கொள்ள போறா?

அலுவலக வாசலில் மறுபடியும் வாழ்த்து சொல்லி பூங்கொத்து .

அவன் அறைக்குள் நுழைந்த போது அவன் டேபிள் மீது விலைவுயர்ந்த பேனா, டிஜிட்டல் போடோ பிரேம் பார்த்து ஆச்சிரியபட்டான்.

சித்து நண்பர்களுடன் எடுத்த புகை படம், வீட்டில் அவன் தங்கை அதிதி, ப்ரவீனுடன் லூட்டி அடித்த போது எடுத்த படம், கணினியை மடியில் வைத்துக் கொண்டு கண்மணியை கள்ளத்தனமாக சைட் அடிக்கும் படம் கூட இருந்தது. அதை பார்த்து இது எப்படி என்று வியந்தான் .கண்மணி புகை படத்தை மட்டும் மறுபடி  மறுபடி பார்த்துக் கொண்டு இருந்தான். வீட்டில் இருந்து தான் யாரோ சர்பிரைஸ்  பரிசு அளித்து இருக்கணும். கண்டு பிடிக்கிறேன் .

தேவிடம் கேட்ட போது ‘எனக்கு தெரியாது டா. இப்போது தான் நுழைகிறேன்’ .

சித்து நேற்று இரவு 12 மணியில் இருந்து தொடர்ந்து வரும் பரிசுகளை பற்றி கூறினான் .

பகல் பன்னிரண்டு மணி அளவில் தேவ் “உனக்காக மதியம் ஒரு மணிக்கு  பை ஸ்டார் ஹோட்டலில் டேபிள் புக் செய்து இருப்பதாக போன் வந்தது. நீ செய்தாயா?” என்ற போது அவன் இல்லை என்று உதட்டை பிதுக்கினான் .

“ஒரு வேலை உனக்கு பிடித்தவர்கள் ஏற்பாடு செய்து இருப்பர்களோ ! போய் பார்த்திடலாம் வா” என்று கிளம்பினார்கள் .

யாரையும் காணவில்லை .உணவு முடித்த பிறகு அவனுக்கு அதே ஹோட்டலில் ஸ்பா, பாடி மசாஜ் செய்ய கூப்பன் கொடுத்து சென்றனர்.

தேவ் “இப்படி அல்லவா கொண்டாட வேண்டும்” .நேற்றில் இருந்து வந்த பரிசு மழையை  வரிசையாக கணக்கு செய்தான் . முதல்  என்ன, அடுத்து, அதற்கு அடுத்து, இதற்கு முன் ,பின் ? என்று கேட்டு தொலைத்து எடுத்தான் . 

“பதினைந்து பரிசு பொருட்கள். கோவில் எல்லாம்  கூட அடக்கம் தான் .பார்க்கலாம். இன்னும் என்ன எல்லாம் காத்துக் கொண்டு இருக்கு என்று.”

அதற்கு பிறகு, சித்து அடுத்து  என்ன என்று  ஆர்வமாக யோசிக்கக் தொடங்கினான்.

நான்கு மணி அளவில் மீட்டிங் முடிந்தவுடன், எல்லாரும் கலைவதற்குள் மீட்டிங் அறைக்கு  பெரிய கேக் வந்தது .அதை பார்த்து தேவிடம் “எதுக்கு டா இப்படி எல்லாம்” என்று கடிந்து கொண்ட போது  தேவ் ,சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக நான் செய்யவில்லை என்றான்.

இத்தனை சர்பரைஸ் இருந்தும் கண்மணி வாழ்த்துக்காக மனம் ஏங்கியது. இதை எல்லாம் செய்தது யார் என்று கண்டுபிடிக்க    எப்படியாவது கிளு கிடைக்குமா தேடினான் .

அதிதி இல்லை சொலிட்டா? பிரவீன் இல்லை. அப்பா இல்லை . அம்மாவும் சேர்ந்து மண்டையை பிய்த்துக் கொண்டார்கள் அவர்களும் இல்லை. கிருஷ்ணன், ஆனந்தும்  இல்லை.

ஒரு வேலை பட்டிக்காடு செய்து இருக்கோமோ!

 அவளா இப்படியா? இப்படி  எல்லாம் யோசிப்பாளா? சான்ஸே இல்லை. காலேஜ் பீஸ்  பணம் கட்டும் சலானையே,சரியா பாரு நச்சினவ….கண்டிப்பா இருக்கவே இருக்காது கூறிக் கொண்டான்.

வீட்டிற்கு சென்றவுடன் அவன் அறையில்  கட்டில் மீது  இரண்டு  பார்சல். அச்சோ மறுபடியுமா ?

என்ன இருக்கும் என்று ஆவலாக பிரிக்க தொடங்கினான் .அதில் casual டி ஷர்ட், அழகிய வாலட் ,கோட், அதற்கு பொருத்தமா அழகிய  ஸ்கார்ப், ஜீன்ஸ்,பெல்ட்,ஷூ. அதை எல்லாம் பார்க்க பார்க்க அவனுக்கு பேச்சே எழவில்லை .

பனியன், ஜெட்டி பரிசு அளிக்காதது தான் பாக்கி என்று சிரித்துக் கொண்டான்.

அடுத்த பெட்டிய பார்த்தவுடன் என்ன என்று யூகித்துவிட்டான்.

அழகிய கிபிட் பேப்பர் சுற்றிய ரம் பாட்டில்.வெளிநாட்டு சரக்கு . ஒரு சட்டார்ன் ரிப்பனில் “waiting for ur lips to taste me! but ஒன்லி ஒன் சிப் அட் நைட்” என்ற அட்டை தொங்கியது.

பாட்டிலை காட்டி ஒரே ஒரு சிப் என்றால் எப்படி?

கூடவே அவனுக்கு பிடித்த பௌலிங் விளையாட கூப்பன்  ஸ்லாட் . மை குட்நெஸ். இத்தனையுமா?

என்னை சந்தோஷபடுத்த இப்படி யோசித்து, இத்தனை பரிசுகள் தருவதற்கு பதிலா,   என் கண்மணியை என் கண்ணில் காட்டி இருக்கலாம் . அதற்கு ஈடு, இணை ஏது என்று வருந்தினான் .

Advertisement