Advertisement

10.2:

அன்று இரவு அவன் குடும்பத்துடன்  ஹோட்டல்  சென்ற   போது ஜானகி “இந்த பெண் உன் பிறந்த நாளைக்கு வந்திடுவா பார்த்தேன்  . இப்ப வரல சொலிட்டா.”

அப்போது அவன் நண்பர்கள் அவனுக்கு கொடுத்த பார்ட்டியில் கண்மணிக்காக அவன்   பாடி  இசைத்த  பாட்டு  அங்கு  ஒலித்தது. அதை கேட்டு  உள்ளம்  துள்ளியது. கண்டிப்பா  இத்தனையும்  கண்மணி தான் செய்து இருப்ப  என்று முடிவிற்கு  வந்தான். ஆனா எப்படி ?

கை  கழுவ  சென்ற  இடத்தில  ஒரு நாலு  வயது  பெண் குழந்தை அவனை தூக்க சொல்லியது . “என்ன கண்ணா வேண்டும்” என்று ஆசையாக தூக்கியவுடன் “27 சொல்லி”   சப் என்று கோபமாக அடித்து, வேகமாக நழுவி ஓடியது .

என்ன செய்தேன் . எதுக்கு அடிச்சிட்டு போச்சு என்று குழம்பினான் .

யாராவது பார்த்து இருந்தால் …….

அவன் அறைக்கு வந்தவுடன் அவனுக்கு வந்த பரிசு பொருட்களை கொஞ்ச நேரம் உத்து  பார்த்தான் .அவன் வயது 27 .

27 பரிசுகளா? என்ன யோசித்தும் 26 தான் வந்தது .

ஆஹா !அந்த குழந்தை 27  என்று கோபமாக கொடுத்தது கண்மணி கொடுத்ததா? நான் கண்டுபிடிக்கவில்லை  என்று கோபத்தில் கொடுத்ததா?

 அதுவும் பரிசில் சேர்த்தியா. அடிபாவி. அடிப்பதற்கு  மட்டுமா கன்னம். ஆசையா  முத்தம் கூட கொடுக்க சொல்லி இருக்கலாமே ! ஆனா அவள் எப்படி என்று குழப்பிக் கொண்டான்.

ராட்ஷசி .எதிலும் வன்முறை தான். பிறந்த நாள் முடியும் தருவாயில் கண்மணியிடம் இருந்து வாழ்த்து வந்தது. அதை படித்து சிரித்துக்கொண்டான் .

அவளை சீண்ட எண்ணி  உடனே அவளுக்கு அழைத்தான். அவள் எடுத்து ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு  தேங்க்ஸ் என்று கூறி வைத்துவிட்டான் . போனில் அவள் புகை படத்திற்கு ஆசையாக முத்தம் கொடுத்து “I love you so much kanmani. thanks for everything!” சொல்லிக் கொண்டான்.

சித்து மனதில் ஏக்கமாக, அடுத்த பிறந்த நாளைக்குள் என் கையில் வந்து சேர்வாயா

இன்னும் ஒரு வருடாமா? முடியவே  முடியாது !எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் வரவைக்கனும். எப்படி ?

சித்து ‘தேங்க்ஸ்’ சொல்லி வைத்தவுடன் கண்மணி, கோபமாக ‘அவ்வளவு தானா?’

இவனுக்கு போய் பார்த்து பார்த்து சர்பரைஸ் செய்தா, ஒரு வார்த்தையில் தேங்க்ஸ் சொல்லி வைத்து விட்டான். இவனுக்காக மென  கெட்டேனே, என்னை சொல்லணும். எப்படியோ போகட்டும் .இவன் திருந்த மாட்டான் .

வீட்டில் இருந்தால் செல்லமா கண்டு பிடித்து விடுவாள் என்று  அவள் ஆத்தா, தாத்தாவிடம் தோட்டத்தில் தங்கிவிட்டாள். கண்மணி பிரிந்து  சென்ற இந்த ரெண்டு வார காலத்தில்  கண்மணியா சித்துவை ஒரு தடவை கூட அழைக்கவில்லை .

நேற்று   சித்து பிறந்த நாள்  போது அவன் அழைத்தது  தான். அதற்கு பிறகு அழைத்தாலும் கண்மணி எடுக்கவில்லை.  சித்து பல தடவை முயன்று பின்னர் கோபத்தில் அவளை அழைக்காமல் விட்டான் . எத்தனை தடவை தான் தன்மானத்தை விட்டு அழைப்பது.

ஜானகி கேட்டால் பேசினேன். அங்க போனா இங்க  போனா  என்று சும்மா அவனுக்கு தோணின இடத்தைக் கூறினான். அப்படி சொல்லி ஒரு  தடவை மாட்டிக் கொண்டான் .

கண்மணி அவள் ஆத்தா, தாத்தா வீட்டிலே இருக்கா என்று அவனுக்கு தெரியாது .

சித்து பிறந்த நாள் அன்று அவள் பழனி சென்ற போது  விரதம் இருக்கேன் என்று, ஒன்றும் சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழுந்து, நெற்றியில் அடிபட்டுவிட்டது. நான்கு தையல் போட்டு இருந்தார்கள் . அதிதி அழைத்த போது கண்மணி அவளிடம் சொல்லிவிட்டால் போல . 

இதை அறிந்த ஜானகி மகனிடம் “ ஏன் டா, அவளுக்கு தான் முடியல. போய் ஒரு தடவை பார்த்திட்டு வரலாம் ல . இந்த வயதில் எதுக்கு இந்த வேண்டாத வேலையோ தெரியல. ரெண்டு பேரும் சொல்பேச்சு கேட்கக் கூடாது முடிவு  செய்து இருக்கீங்களா? இன்னும் பத்து நாளில்  கல்லூரி  திறக்க போகுது . கண்மணி தம்பி  கண்ணன்  மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்று இருக்கிறான். வாழ்த்து சொன்னையா?”

“கண்ணன் சொன்னான் அம்மா !கண்டிப்பா அவன் ஆசைப்பட்ட மாதிரி சென்னையிலே மெடிக்கல் கிடைத்து விடும்.”

“எப்ப ஊருக்கு போற ? இந்த  தடவை செக் அப் செய்ய கண்மணி என்னுடன்  கண்டிப்பா வரேன் சொன்னா”.

ஆச்சிரியமாக “அவளா வரேன் சொன்னா? எப்ப சொன்னா?”

“எதற்கு இந்த ஆச்சரியம். உன்னிடம் எதாவது சொன்னாளா! போன தடவை சொன்னது தான். எப்ப வருவதா சொன்னா?”

அதிதி குறுக்கே புகுந்து “எப்ப சொன்னா, எப்ப  சொன்னா? ரெண்டும் பேரும் உங்களுக்குள்  மாற்றி மாற்றி கேட்பதை விட பாபியிடமே கேட்டிடலாமே?”

அது தான பார்த்தேன் என்று சித்து மனதில் எண்ணி “சின்ன  குழந்தை போல அவ வந்தா தான் போகணும் என்ன அவசியம் . இங்கயே தான அதிதி இருக்கா. அதிதி கூட போங்க. இல்லை நான் வரேன்.” 

“அது எனக்கு தெரியும். ஏன் டா உன் பெண்டாட்டியை அழைத்துக் கொண்டு போனா தேய்ந்து போய்டுவாளா?”

“இப்படி பேசினா என்ன என்று சொல்ல அம்மா”

சித்து பதில்  சொல்லாமல் மழுப்புவதை அறிந்து “அவளுடன் எப்ப பேசின? எங்க இருக்கா?”

“இப்ப தான் கொஞ்ச நேரம் முன்பு அம்மா? எதுக்கு இத்தனை கேள்வி ! அவ அவங்க அம்மா வீட்டில் தான இருப்பா?”

ஜானகிக்கு ஒரு வேலை இவனை டென்ஷன் செய்ய வேண்டாம்  சொல்லவில்லையோ?

சந்தேகமாக “அம்மா வீட்டிலையா?”

“ஆமாம்” .

அவ பாட்டி தாத்தா கூட தான இருக்க ..மகன் பொய் சொல்லறான் , இருவருக்குள் ஏதோ சரி இல்லை என்று யூகம் செய்தாள். இவனை கேள்வி கேட்டா கோபம் வேற வருது . ரெண்டு பேரும் என்னமா நடிக்கிறாங்க? நடக்கட்டும். எத்தனை நாளைக்கு என்று  பார்ப்போம். இவங்க போக்கிலே விட்டு பிடிக்கிறேன்.

“சரி, நீ நாளைக்கு போயிட்டு  அவளை பார்த்துவிட்டு வா! முடிந்தால் அழைத்துக் கொண்டு வா” என்றதுக்கு

“நானா? நான் போகல. அவளே வரட்டும். நிம்மதியா இருக்கட்டுமே ?”

ஜானகி கவலையாக “என்ன பேச்சு சித்து. நீ நிம்மதியா இருக்கேன் சொல்லு. பாவம் அவ. எதுக்கும் இங்க வந்தா ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கலாம். எடுத்தா என்ன என்று தெரிந்துவிடுமே?”

சித்து  யோசித்த படி யாருக்கு என்ன ஆச்சு. எதுக்கு ஸ்கேன்  . அம்மாக்கு எடுக்கணுமோ? 

“யாருக்கு  ஸ்கேன் அம்மா? appointment வாங்கட்டா …”

ஜானகி விஷமமாக “உன் பெண்டாட்டிக்கு தான். அவ வந்தவுடன் வாங்கிக்கலாம்.”

என்னது கண்மணிக்கா? அவளுக்கு என்ன? அம்மா ஏதோ மாற்றி புரிந்து  கொண்டார்களா? எங்களுக்குள் தான் இன்னும் ஒன்னும் நடக்கலையே? ஒரு வேலை என்னை அறியாமல் …ச்சே ச்சே .. அப்படி எல்லாம் இல்லை . அப்புறம் எப்படி . எதையாவது கண்டதையும் சாப்பிட்டு  வாந்தி எடுத்து இருப்பா. இந்த அம்மாவும் ,அவங்க வீட்டிலும் மாற்றி புரிந்து கொண்டார்கள் போல. இவளாவது ஒன்றும் இல்லை  சொல்ல வேண்டாம் . இவளை… என்று அவளுக்கு தேவை இல்லாமல் அர்ச்சனை செய்தான் .

அவன் யோசனையான முகத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்து “நீ போய் பேசிட்டு சொல்லு சித்து . இங்க நம்ம டாக்டரிடமே பார்த்துக்கலாம். உன்னிடம் சொன்னா என்ன சொல்லுவையோ யோசிக்கிறா ? நீ ஒன்றும் சொல்லாதா பாவம்” என்று ஜானகி மேலும் குழப்பினாள்.

நான் சொல்ல என்ன இருக்கு. அப்படி ஏதாவது இருந்தா முதல் ஆளா நான் தான சந்தோஷப்படுவேன் என்று வாய்க்குள் முனங்கிய படி அவன் அறைக்குள் நுழைந்து அவளுக்கு அழைத்தான். அதை எடுக்க ஆள் இல்லாமல் இருந்தது .எல்லாம் திமிர். என் எண்ணை பார்த்து வேண்டும்  என்றே எடுக்கவில்லை. போய் ரெண்டு வாரம் ஆச்சு  . அழைக்கணும் தோணுச்சா ? நானே எத்தனை தடவை அழைக்க ! அம்மா இப்படி உளரும் அளவிற்கு என்ன சொன்னா கேட்கலாம் பார்த்தால் கொழுப்பு செய்யறா? எப்படியோ போகட்டும் .அவளே எல்லாருக்கும் விளக்கட்டும் . பதில் சொல்லட்டும் .நான் எதுவும்  சொல்ல போறது இல்லை.

******

Advertisement