Advertisement

அத்தியாயம் 1.1:

“பரித்ராணாய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்!

தர்ம ஸம் ஸ்த்தா பநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே”                                                            

‘அம்மா தேனு! தேனு! பிரசாதம் ரெடியா!’ என்று பூஜை அறையில் இருந்து குரல் கொடுத்தார் சதாசிவம் .

“அம்மா சீக்கிரம்! அப்பா குரல் கொடுத்தாச்சு ! பாரு மணி ஆச்சு !நீங்க எப்ப பூஜை  முடித்து நான் எப்ப காலேஜ் போறது” என்று அவசரபட்டால் தேனு  என்கிற கண்மணி ..

அடுக்களையில் அறக்க பறக்க வேளை  செய்த படி “எல்லாரும் காலையில் இப்படி அவசர படுத்தினால் நான் என்ன டீ செய்ய! சீதம்மாவ வர சொன்னா இன்னும் ஆளை காணோம் !”

“நீ இன்னைக்கு வர சொன்னத நாளைக்கு நினைத்து இருக்கும்”

“சீத்தம்மாவ விடு! நீ பேசாத கண்மணி. உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. எழுந்தவுடன் தோட்டம், கன்னுகுட்டி சுத்தாம எனக்கு உதவி செய்திருந்தா இந்நேரம் வேலை ஆகி இருக்கும். எத்தனை தடவை சொல்வது”  என்று  அவள் அன்னை செல்லமா அலுத்துக் கொண்டாள்.

“என் தேன பேச மட்டும் உனக்கு நேரம் ஆகாதா?” என்று  மகளுக்காக பரிந்து கொண்டு வந்தார் அந்த வீட்டின் தலைவர் சதாசிவம்.

“வயலில் எல்லாம் காத்துக் கொண்டு இருப்பாங்க செல்லமா! எத்தனை நேரமா குரல் கொடுக்க! வெயில் ஏறுவதற்குள் பாதி வேலையாவது ஆக வேண்டாமா?”

அவள் அன்னையை காப்பாற்ற “இதோ வந்தாச்சு பா.வாங்க சாமி கும்பிடலாம்” என்று கண்மணி உடனே சக்கர பொங்கலை எடுத்துக் கொண்டு விரைந்தாள்.

“கண்ணு, இன்று நம்ம வயலில்  கதிர் அறுக்கறாங்க! காலேஜுக்கு போவதற்கு முன்பு வயலுக்கு வந்திட்டு கிளம்பு! இல்லை நாளைக்கு போய்கோ கண்ணு. நீ வந்தா தான் எனக்கு திருப்தி”

‘இல்லை அப்பா, காலேஜுக்கு போகணும்’ சொல்ல  நினைத்தாலும் ‘சரி அப்பா’  என்று  அவள் வாயில் இருந்து வார்த்தை தானா வந்தது . அவள் அப்பா மீது மிகுந்த பிரியம், அன்புடையவள். அவருக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வாள்.

மகள் பேச்சைக் கேட்ட செல்லமா “ஏன் டீ, இப்படி அவசர படுதலேன நான் மெதுவாகவே சமையல் செய்து இருப்பேனே! இதையே நான் சொல்லும் போது காலில்  சுடு  தண்ணீர் ஊற்றிக் கொண்டு குதிச்ச. உங்க அப்பாரு சொன்னவுடனே சரி சொல்லற !இது தான் நல்லதுக்கு காலம் இல்லை” என்று  நொடித்துக் கொண்டார் .

“என் செல்ல அம்மால. உனக்கு என்ன கோபம். அப்பா பாவம் மா!” என்று அவள் அன்னையை கொஞ்சி சமாதானபடுத்தினாள்.

“செல்லமா! கண்ணன் எங்க? பள்ளிக்கு கிளம்பிட்டானா? சாப்பிட்டானா?” என்று அவர் கடைக்குட்டி, மகனை பற்றி கேட்டவுடன்  “அவன் நேரத்திலே எதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று கிளம்பிட்டான். சாப்பாடு காட்டி கொடுத்துட்டேனுங்க”.

கண்மணி அவள் தந்தையிடம் “அப்பா, நான் கவிதாவிடம் இன்று வர முடியாது சொல்லிடறேன் பா! எனக்காக காத்துக் கொண்டு இருப்பா! கல்லூரியில் தகவல் சொல்லிட சொல்லறேன்”.

சதாசிவம் ஈரோடு அருகே சின்னாளபட்டி என்ற கிராமத்தில் பல ஏக்கர் நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார். காவேரி பாசனத்தால் முப்போகமும் விளையும் விவசாய பூமி. தென்னந்தோப்பு, பழ பண்ணை, பால் பண்ணை,கோழி பண்ணை என்று அந்த ஊரிலே பெரிய மனிதன். அவர் மனைவி செல்லமா, வீடு குழந்தைகள்  தவிர எதையும் அறியாதவர். இவர்கள் உலகமே அந்த ஊரை சுற்றி தான் .

மகள் ஆசைபடுகிறாள் என்ற ஒரே காரணத்திற்காக சிவம் அவளை பி .இ பட்ட படிப்பில் சேர்த்துள்ளார். கண்மணி படிப்பில் மிகவும்  கெட்டிக்காரி . ஈரோட்டில் இருக்கும் சிறந்த கான்வென்ட் பள்ளியில் தான் படித்தாள். அதிக மதிப்பெண்  எடுத்து சென்னையில் உள்ள பெரிய பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தாலும்  அவள் குடும்பத்தை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்கள் ஊர்  அருகே சிறந்த கல்லூரியில் B.E சேர்ந்து  மூன்றாம் வருடம் படிக்கிறாள் . கள்ளம், கபடம் இல்லாத வெள்ளை மனம் கொண்டவள். பார்ப்பவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் பேரழகி!

பிரம்மன் தானே நேரம் எடுத்து செய்து இருக்கானோ என்று வியக்க வைக்கும் அழகு! பன்னீர் ரோஜா நிறம். இடுப்பு வரை நீண்டு இருக்கும்  கருகருகூந்தால், இயற்கையிலே  வில் போன்ற வளைந்த புருவம் .மீன் போன்ற அழகிய துறுதுறு கண்கள், எப்போதும் சிரித்த முகம், சிவந்த  அதரம் ,நாசி மீது சின்ன சிகப்புக்கல் மூக்குத்தி, முத்து பல் வரிசை ,குழி விழும் கன்னம், அதில் அழகிய மச்சம் ,நடு நெற்றியில் சின்ன தழும்பு என்று அவள் அழகுக்கு அழக சேர்த்தது .

அவள் தம்பி கண்ணன், பன்னிரெண்டாம்  வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவம்  படிக்க வேண்டும் என்ற நெடுநாளைய கனவு.

தோட்ட வீட்டிலே அவள் தாத்தா நாச்சியப்பனும், பாட்டி வள்ளியும் தங்கி இருந்தார்கள். பேத்தியை கண்டவுடன் வள்ளி பிரியமாக “என்ன கண்ணு காலேஜுக்கு போகாம தோட்டம்,  வயல்  பக்கம்”

“உன்னை   பார்க்கணும் தான் அப்பத்தா வந்தேன் சொன்னா நம்பவா போற?”

“அப்படியா! நிசமாவா! உங்க அப்பன்  கதிர் அறுக்க ஆள்  குறையுதுன்னு உன்னை கூட்டிகிட்டு  வந்துட்டான் ல நினைத்தேன்?”

“இந்த லொள்ளு தான வேண்டாங்கிறது. பத்து ஆள் வேலையை நீ ஒத்தையா செய்திட மாட்ட! இன்னும் வேற உனக்கு கூலி குறையணுமா?” என்று முறைத்தவுடன் “அட, என் பேத்திக்கு கோபத்தை பாரு! நீ போட்டு இருக்கும் சிகப்பு கல் மூக்குத்தி விட உன் முகம் சிவந்து போச்சு கண்ணு”

 “ஏன் அம்மா, மணி ஆச்சு பாரு! உன் பேத்தியை அப்புறம் கொஞ்சிக்கோ! எல்லாரையும்  எத்தனை நேரம் காக்க வைக்கிறது! நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது !” என்று சிவம் அவன் அன்னையையும், கண்மணியையும் விரட்டினார்.

சிவம் கண்மணியை அவர் வீட்டு மகாலட்சுமியா நினைப்பவர். கண்மணி பூஜை செய்தவுடன்  வேலையை மட மட என்று தொடங்கினார்கள்.

*********

காலை நேர அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. வெற்றி  எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட்ஸ்  முக்கியமான போர்ட் மீட்டிங் அறையில் சித்தார்த் அந்த ஆண்டுக்கான டர்ன் ஓவர் பற்றி பேசிக் கொண்டு இருந்தான். கடந்த ஆண்டை விட  லாபம்  நூறு கோடி அதிகம், மேலும்  தொழிலை விரிவு படுத்துவதற்கான திட்டத்தை விளக்கிக் கொண்டு இருந்தான். அவன் பேச்சு திறமையாலே அங்கு இருக்கும் அனைவரிடமும் அடுத்த தொழிலுக்கான ஒப்புதலை வாங்கினான்.

சித்து அறையில் அவன்  நண்பன், மற்றும் அந்த கம்பனி மேனேஜருமான தேவ், அவனின் திறமையை எண்ணி வியந்து பாராட்டினான். அந்த ஷ்யாம் சாரை பேச விடாம செய்துட்டீங்க சித்து சார்.

சித்தார்த் முறைத்த படி “டேய்! எப்ப பார்த்தாலும் என்ன டா சார் !ஒழுங்கா பேர் மட்டும்  சொல்லு எத்தனை தடவை சொல்லறது.”

தேவ் ஏதோ சொல்ல வருவதை பார்த்து  “ நான் எப்போதும் உன் நண்பன், வெல் விஷர் தான். தொழில் வேற, நட்பு வேற! நீ என்ன சொன்னாலும் அலுவலகத்தில் நான் உன்னை அப்படி தான் கூப்பிடுவேன். எனக்காக ப்ளீஸ்  சொல்ல போற! டியலாக் மாற்றுடா!போர்  அடிக்குது”   என்று தேவ்வை கிண்டல் செய்தான் . 

“கொஞ்சம் டைம் கொடு! ட்ரை செய்யறேன்!”

தோள்களை குளுக்கி “எப்படியோ போ! நான் எப்போதும் உன்னிடம் நண்பனா தான் பழகறேன். கோவை பிராஞ்சில் இருந்து கிருஷ்ணன் கூபிட்டானா?அந்த டெண்டர் கொடேஷன் சொன்னானா? பெங்களூர் கிளையில் இருந்து ஆனந்தை பாக்ஸ் அனுப்ப சொன்னேனே ?”

தேவ், ஆனந்த், கிருஷ்ணன், சித்தார்த் நால்வரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் எல்லாரும் சித்தார்த்துடன் சேர்ந்து தொழிலை பார்த்து கொள்கிறார்கள். அவனுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர்கள்.

“அந்த ஷ்யாம்  என்னடா  எப்ப எதை ஆரம்பித்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்யறான். எருமை மாடு. விளக்கினாலும் புரியறது இல்லை. இவனை எல்லாம் கூட்டு சேர்த்த என்னை சொல்லணும்”  என்று பேசிக் கொண்டு இருந்த போது சித்து வீட்டில் இருந்து அழைப்பு வந்தது .

“உடனே  கிளம்பி வரேன்.ரெடியா இருங்க. ஹாஸ்பிடல் போகலாம்” என்று பதற்றமானான்.

சித்து முகத்தை  பார்த்து ஏதோ சரி இல்லை என்று உணர்ந்த தேவ் “நானும் வரட்டுமா !”

“வேண்டாம் ! நீ அந்த யாத்ரா டைல்ஸ் ஆளுங்க ஏதோ கொடேஷன் கேட்டாங்க. அதை முதலில் அனுப்பிடு. வி .கே இம்போர்ட்ஸ் இருந்து ரெண்டு பேர் வருவாங்க. நாம ஏற்கனவே  டிஸ்கஸ் செய்து வைத்ததை சொல்லிடு. அங்க நான் பார்த்துக்கிறேன்” என்று அவசரமாக கிளம்பிய படி உத்தரவை பிறப்பித்து விரைந்தான்.

சித்தார்த் 27 வயது நிரம்பிய  துடிப்பான இளைஞன். MBA படிப்பை முடித்து அவன் தந்தை செய்து வந்த கிரானைட்,மார்பில்  எக்ஸ்போர்ட் தொழிலை இவன், கார், டெக்ஸ்டைல், நகைக்கடை, கம்ப்யூட்டர், கட்டுமான தொழில்  என்று மேலும் விரிவுபடுத்தி உள்ளான்.  இன்று அவன் கால் பதிக்காத தொழில் இல்லை. அவனின் அசுர வேகம், திறமையை  கண்டு அவன் தந்தை வெற்றி அவனிடமே கம்பனி பொறுப்பு முழுவதையும்  ஒப்படைத்தார்.

சித்து,  பெண்களின் கனவு நாயகன். திரும்பி பார்க்க மட்டனா, ஒரு சிரிப்பு சிரிக்க மாட்டானா என்று அவன் கடை பார்வைக்காக  ஏங்கும் பெண்கள் ஏராளம். எப்போதாவது  சிரிக்கும் போது தெரியும் அழகிய பல் வரிசை, நெற்றியில் புரண்டு விழும் கேசம், அடர் மீசை,எதிராளியை எளிதாக எடை போடும்  கூரிய கண்கள், ஆண்களுக்கே உரிய உயரம், நல்ல கலையான முகம்  என்று வர்ணித்துக் கொண்டே  போகலாம்.

அவனுக்கு அடுத்து பிறந்த இரட்டையர்கள், பிரவீன், அதிதி. பிரவீன் லண்டனில் MBA முதுகலை படிப்பு படிக்கிறான். அதிதி படிப்பு முடித்து ஒரு வருடமாக  தோழியுடன் விளம்பரங்களுக்கு  டிசைன் செய்து கொடுக்கிறாள் .

பிரம்மாண்டமான கட்டிடத்திற்குள்  கார் விரைந்து சென்றது. வண்டி நிற்பதற்குள் அதில் இருந்து தாவி இறங்கினான் சித்தார்த்.

வாசலிலே அவர்கள் வீட்டு வேலையாள் மணி  “ஐயா, அம்மாக்கு ரொம்ப முடியல! பெரிய ஐயா மாடியில் தான் இருக்காரு! உங்கள உடனே வர சொன்னாரு!’

அவர் சொல்வதை முழுதா கூட கேட்காமல் அவன் அன்னை இருக்கும் இடம் நோக்கி விரைந்தான் .

“அம்மா! என்ன அம்மா! என்ன ஆச்சு! வாங்க முதலில் டாக்டர் வீட்டுக்கு போகலாம். அப்பா கிளம்புங்க” என்று அவசரபடுத்தினான்.

 ஜானகி மூச்சு திணறிய படி “என்னை இப்படியே விட்டிடு. நான் எங்கேயும் வருவதா இல்லை. நான் சொன்னதை யாரும் கேட்காத போது நான் மட்டும் எதற்கு கேட்கணும்” என்று பேச முடியாமல் திணறி  பேசினாள்.

“அம்மா! என்ன சின்ன பிள்ளை தனமா பேசறீங்க!” மூச்சு இழுத்து விட்டுக் கொண்டு அமைதியாக  கண்மூடி படுத்துக்  கொண்டாள்.

“அம்மா ப்ளீஸ்! உங்களுக்கு ரொம்ப முடியவில்லை என்று தெரியுது . கஷ்டப்படறீங்க! உடம்பு முடியாத  இந்த நிலையில்  என்ன பிடிவாதம். அப்பா! நீங்களாவது சொல்லுங்க! இல்லை, நான் டாக்டரை வீட்டிற்கு வர சொல்றேன் பா.”

“கூடாது! யாரும்  வர கூடாது. நான் அனுமதிக்க மாட்டேன். முதலில் வெளியே போ” என்று கோபமாக கத்தினாள்.

“ஜானு! நான் சொல்லறேன். டென்சன் ஆகாத”

வெற்றி, சித்தார்த்தை வெளியே அழைத்து சென்று “நான் சொல்லியாச்சு சித்து! இவ உடல் நிலை தெரிந்தும் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாளே! இவ கஷ்டபடுவதை பார்த்தால் பயமா இருக்கு! இத்தனை சொத்து இருந்தும், வசதி இருந்தும் இவ பிடிவாதத்தால் இவளை காப்பாற்ற முடியாமல் போயிடுமோ பயமா இருக்கு சித்து” என்று அவன் கைகளை வெற்றி இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

“என் ஜானு பிழைப்பது உன் கையில் தான் இருக்கு சித்து. எனக்கு உன் நிலைமை புரியுது டா. எனக்கு வேற வழி தெரியல. எனக்காக, உங்க அம்மாக்காக சரி சொல்லு டா! நம்ம குடும்ப எதிர்காலமே இதில் அடங்கி இருக்கு கண்ணா, ப்ளீஸ்” என்று முதல் முறையாக  மனைவிக்காக மகனிடம் கெஞ்சினார்.

மனதை கல்லாக்கிக் கொண்டு “ சரி அப்பா! அம்மா இஷ்டம்” என்றவுடன் மனைவிக்கு அப்போதே உடம்பு குணமானதாக நினைத்து சந்தோஷத்தில் மகனை ஆரத் தழுவிக் கொண்டார் .

ஒரு வருடம் முன்பு ஜானகிக்கு  இதயத்தில் ஓட்டை இருப்பதாக கண்டு பிடித்தனர். மகன்  கல்யாணம் செய்தால் தான் ஆபரேஷனுக்கு சம்மதிப்பேன் என்று அவரும் ஒரு வருடமாக பிடிவாதமாக இருக்கிறார். நாளுக்கு நாள் உடல் பலவீனமாகி, பிரச்சினை அதிகமானது. அப்போதும் அதே உறுதியுடன் இருந்தார். சித்துவும் பல முறை போராடி தோற்றுவிட்டான். அவன் கல்யாணம் வேண்டாம் சொல்வதற்கும் காரணம் உண்டு. கடைசியில் தாய் மனமே ஜெயித்தது.

சித்து குணம் நன்கு அறிந்ததால் மகன் தாலி கட்டினதை பார்த்தவுடன் தான் ஆபரேஷன் என்று ஜானகி உறுதியாக இருந்தார்.

“உடனே பெண் எப்படி அம்மா கிடைக்கும். அதுவும் எனக்கு. முதலில் உங்க உடம்பு குணம் ஆகட்டும். பிறகு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். நீங்களும் ஓடி ஆடி வேலை செய்யலாம்! அப்படி உடனே கல்யாணம் செய்யணும், நீங்க பார்க்கணும்  என்றால் நம்ம அதிதிக்கு, சீனு மாமா மகன் கல்யாணை பேசி  முடித்திடலாம். அவங்களும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.”

ஜானகி கண்ணில் நீருடன் “உனக்கு ஏன் டா புரியமாடீங்குது. எனக்கு எதாவது ஆனா கூட என் பெண்ணிற்கு நீயும், உன் பெண்டாட்டியும் தாரை வார்த்து கொடுப்பீங்க. எனக்கு அப்புறம் உங்களை பொறுப்பா பார்த்துக்க ஆள் இருக்கு என்றாலே எனக்கும் தெம்பா இருக்கும் . ப்ளீஸ் சித்து! நீ தனி மரமா நிற்க கூடாது டா !” என்று புலம்ப,

“அம்மா, ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க! உங்க இஷ்டம் போல செய்யுங்க.கொஞ்சம் ரிலாக்ஸ் ! எங்களுக்கு நீங்க வேண்டும்” என்று  அமைதிபடுத்தினான் .

சித்து கல்யாணத்திற்கு சரி சொன்னது அனைவருக்கும் ஆச்சரியம் . பிரவீன், அதிதிக்கு மிகுந்த சந்தோசம் . மகன் திருமணதிற்கு சரி சொன்ன சந்தோஷத்தில் ஜானகி  “எனக்கு ஒன்றும் இல்லை  சித்து. எனக்கு இப்பவே தெம்பு வந்தது போல இருக்கு. வேலை என்ன டா வேலை, எதுவும் பெரிய வேலை இல்லை. எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்க . எங்க அண்ணனை வர சொல்லி இருக்கேன். முதலில் உன் கல்யாணம் ..” என்று மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடினார் ..

Advertisement