Advertisement

தூறல் 1.2:

கண்மணி கல்லூரி முடித்து வீட்டிற்கு திரும்பிய  போது அவர்கள் வீட்டின் முன்னால் நான்கு பெரிய கார்கள் அணிவகுத்து  நின்றது.

இது யாரு வீட்டு கார். நமக்கு தெரிந்தவர்கள் யாரிடமும் இது போல இல்லையே என்று யோசித்துக் கொண்டே நுழையும் போதே கண்மணியை  வீட்டிற்குள் நுழைய விடாமல் அவள் அன்னை பின் வாசல் வழியாக கடத்திக் கொண்டு சென்றாள்.

“யாரு அம்மா வந்து இருக்காங்க! ஊரில் இருந்து நமக்கு தெரிந்தவங்க வந்து இருக்காங்களா? பலகாரம் வாசனை மூக்கை துளைக்குது. பலமான விருந்து தான் போல! அமுச்சி குரல் கேட்குது. அப்புச்சியும் வந்து இருக்காங்களா? இரு போய் பார்த்திட்டு வரேன்.”

“தேனு, போய் முகம் கழுவிக் கொண்டு வா. இந்த புடவையை கட்டிக்கோ!” என்று செல்லமா அடுப்பில் கவனம் வைத்த படி கண்மணிக்கு கட்டளை பிறப்பித்தாள்.

“எதுக்கு அம்மா? இன்றைக்கு எந்த விசேஷமும் இல்லையே!”

மகளிடம் நீ புடவை கட்டினால் தான் கொஞ்சம் பெரிய பெண்ணா தெரிவ என்று எப்படி சொல்வது யோசித்துக்  கொண்டு இருந்தாள்.

“இது புதுசு டா. உனக்காக வாங்கிட்டு வந்து இருக்காங்க. சொல்வதை செய் ராஜாத்தி. இதை கட்டினால் அவங்க மனசு கோணாம இருக்கும். என் கண்ணுல! போய் சட்டுன்னு கிளம்பி வா. ஏற்கனவே அவங்க வந்து நேரம் ஆச்சு. அப்பா கோபப்பட போறாரு” என்று செல்லமா அவள் செல்ல  மகளை கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

“யாரு, அமுச்சியா இப்படி புடவை எடுத்தது. அவங்களுக்கு பெரிய பார்டர் போட்டு  புடவை எடுத்தா தான பிடிக்கும். ரொம்ப அழகா இருக்கு அம்மா! உங்க அம்மாக்கு கூட லேட்டஸ்ட் டிசைன் எல்லாம் தெரிந்த இருக்கு. கண்டிப்பா பாராட்டனும்” என்று பேசிக் கொண்டே இருந்தாள்.

செல்லமா, சிவம்  இன்று வரை கண்மணியை எதற்கும் அதட்டியது கூட இல்லை .

“அம்மா நிறையா பேர் வந்து இருக்காங்களா? ஒரே சத்தமா இருக்கு . சின்ன மாமா,பெரிய மாமா, சின்ன அத்தை ,பெரிய அத்தை எல்லாரும் வந்து இருக்கங்களா? கார் எல்லாம் புதுசா இருக்கு. எதோ கோவிலுக்கு போறோமா?”

“அப்புறமா விவரமா பேசலாம் கண்ணு. உங்க அம்மா எத்தனை நேரமா கெஞ்சுவா, மணி ஆச்சு தங்கம்!” என்று  அவள் பெரிமா ராஜாத்தி குரல் கேட்டது.

பெரிமாவை பார்த்த சந்தோஷத்தில் “ஆத்தி! ராஜாத்தி! நீயுமா வந்து இருக்க” என்று  கட்டிக் கொண்டாள்.

“நீங்க வரேன் சொல்லவே இல்லையே! எப்ப வந்தீங்க பெரிமா !”

“எ வாலு,பெரிமாவை பேர் சொல்லாத எத்தனை தடவை சொல்வது. நாளைக்கு போற இடத்தில் உங்க மாமியார் உன்  வாய் மேல் போட்டா தான் தெரியும்” என்று அவள் பெரிய அத்தை மல்லி வந்தாள்.

பல நாள் கழித்து எல்லாரையும் பார்க்க கண்மணிக்கு மிகுந்த சந்தோசம் .

அதற்குள் கண்மணி  சின்ன அத்தை செல்வி  வந்து “எத்தனை நேரம் கண்ணு. பேசாம வா மணி ஆச்சு” என்று அவளை விரட்டி, அறைக்குள் தள்ளினாள்.

‘பேச கூடாது’ என்று கண்டிஷன் போட்டு அழகா புடவை காட்டிவிட்டாள்.

“இந்த முகத்திற்கு ஏதோ அலங்காரம் செய்துக்கோ! நீ இப்படியே இருந்தாலும் அழகு தான். இருந்தாலும், வந்து இருக்கிறவங்க எல்லாம்  டுயுடி பார்லர் போயிடு வந்து இருக்காங்க போல.”

“அச்சோ! அது பியுட்டி பார்லர் அத்தை!”

 உடனே “யாரு அத்தை அமுச்சியா! பியுட்டி பார்லரா!” என்று அதிர்ச்சியானாள்.

அவள் அத்தை செல்வி, அவள் மாமியாரை மேக்கப்புடன் கற்பனை செய்து சிரித்துவிட்டாள் .

“கேள்வி கேட்காத சொன்னேனா இல்லையா? பதில் சொல்வது எத்தனை கஷ்டமான விஷயம் தெரியுமா? வாத்தியார் கேள்வி கேட்டான் ஒரே காரணத்துக்காக பள்ளிக்கூடமே போகல சொல்லிட்டேன்” என்றவுடன்

“அத்தை பாடம் படிக்க வரல சொல்லு. காரணம் சொல்லாத” என்று வம்பு வளர்த்தாள்.

“கண்ணு, இதை போட்டுக்கோ, அதை போட்டுக்கோ !” என்று கண்மணி கண்ணாடி மேஜை மீது அடுக்கி இருந்த அத்தனை மேக் அப்  பொருட்களையும் எடுத்து கொடுத்தாள்.

கண்மணி கலகலவென சிரித்து “போதும் அத்தை! அமுச்சி பார்த்து பூதம் என்று  பயந்துக்கும்”

“என்னமோ போ! வந்து இருக்கிறவங்க எல்லாம் நாலு அடிக்கு பவுடர் போட்டு வந்து இருக்காங்க. நாம கொஞ்சமாவது அவங்களுக்கு இணையா  இருக்க வேண்டாம். நமக்கும் இதை பற்றி  எல்லாம் தெரியனும் காண்பிக்கலாம். அதுக்கு தான்”

“அவங்களோட எல்லாம் இங்கிலிஷ்ல பேசு. என்னமா சரளமா பேசறாங்க தெரியுமா?”

கண்மணி பாவமாக “அத்தை, ஒழுங்காவே பேச மாட்டீயா? எனக்கு மண்டை வெடிக்குது. யாரு .எதுக்காக வந்து இருக்காங்க!”

கண்மணிக்கு பதில் சொல்லாமல் “ரொம்ப அழகா இருக்க கண்ணா! என் கண்ணே  பட்டுவிடும். இந்த பூவை  கொஞ்சம் வெச்சுக்கோ!  நம்ம  தோட்ட  மல்லி. உனக்கு பிடிக்குமே’ என்று பேச்சை மாற்றினாள்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது ஜானகி உள்ளே நுழைந்தாள். சாந்தமான கனிவான முகம். நல்ல நிறம். பட்டணதிற்கே உரிய நடை, உடை பாவனை. எதோ உடம்பு சரி இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் அசதியாக இருக்காங்க போல என்று அவரை பார்த்தவுடனே  கண்மணி துல்லியமாக எடை  போட்டாள்.

இவங்க யாரு. இங்க எதற்கு? யோசித்துக் கொண்டே கண்மணி கை கூப்பி இன்முகமாக  ‘வாங்க’ என்றாள்.

கண்மணி அழகை பார்த்து வியந்து அவள் கன்னத்தை ஆசையாக தடவி “நான் தான் உங்க மாமியார் ஜானகி. என் மூத்த மகனுக்கு உன்னை பெண் கேட்டு வந்து இருக்கேன். எனக்காக இந்த கல்யாணத்திற்கு சரி சொல்லணும் கண்ணம்மா” என்ற போது மனதில் என்ன மாமியாரா? இவர் மகனுக்கு பெண் கேட்டு வந்து இருக்காங்களா?

ஒரு வேளை இந்த அம்மா லூசா இருப்பங்களோ! முன்ன பின்ன தெரியாத  என்னிடம் எப்படி இப்படி பேசறாங்க .நான் இன்னமும் படிப்பே முடிக்கவில்லை. இன்னும் ஒரு வருடம் இருக்கு . அதற்குள் கல்யாணம் என்றால்  எப்படி? ஒரு வேளை இவங்க சொல்வது உண்மையா? என்று யோசித்த படி நின்று கொண்டு இருந்தாள்.

கண்மணி யோசனையான முகத்தைக் கண்ட ஜானகி “நீ  என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியும் கண்மணி! உன் மனதில் ஓடுவதை நான் சொல்லட்டா!”

“அது எப்படி?” என்ற முக பாவனையை கண்டு ஜானகி சிரித்து “எனக்கும்  உன் வயதில் ஒரு மக இருக்கா. சொல்ல போனா உன்னை விட ரெண்டு வயது பெரியவ” என்று பேசிக்  கொண்டே கண்மணிக்கு என்று வாங்கிய வைர நகைகளை போட்டு விட்டாள்.

கண்மணிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முன் பின் அறியாதவர்களிடம் கோபத்தை காட்டுவது முறை இல்லை என்று பேசாமல் அமைதியாக இருந்தாள்.

ஏற்கனவே காலையில் இருந்து கல்லூரியில் பயங்கர வேலையினால் ஒன்றும் சாப்பிடவில்லை. அதுவே அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. இவர்களும் இப்படி பேச உண்மையா மயங்கிவிடுவாளோ பயந்து கட்டிலை பிடித்துக் கொண்டாள்.

வெளியே சித்தார்த், “நான் கண்டிப்பா அந்த பெண்ணிடம் பேசணும்” என்று அவன் மாமாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான் .

“இது பட்டணம் இல்லை தம்பி. தனியா பேசுவது  எல்லாம் சரி படாது .பெண்ணிற்கு குரு பலன் வந்திடுச்சு. இப்ப வைத்தா உண்டு. இல்லை என்றால் மேலும் ஐந்து வருடம் தள்ளி போகும் என்ற ஒரே காரணதிற்காக தான் இப்ப உடனே கல்யாணத்திற்கு சரி சொல்லறாங்க. மேலும் பிடிவாதம் பிடித்தால் தப்பா நினைப்பாங்க. சிவம் கொஞ்சம் கோபக்காரர்” என்ற போதும் மருமகன் சித்தார்த்  பிடிவாதத்தை கண்டு “இரு பேசி பார்க்கிறேன்”.

வேலுசாமி மனதில் உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. சிவம் என்ன சொல்லுவானோ?

வேலுசாமி சிவமிடன் சொன்னவுடன், அவர்  சித்தார்த் அருகே வந்து  “உங்க ஊரில் இப்படி கல்யாணம் முன்னால் பெண்ணுடன் பேசுவது சகஜமா இருக்கலாம், ஆனா இது கிராமம் தம்பி. உங்க மாமா வேலுசாமி எனக்கு ரொம்ப நாளா பழக்கம். ஒரே ஊர்  என்பதால்,  பரிசம் போடாமல் உங்களை  வீட்டிற்குள்ளே அனுமதித்தோம். எல்லாம் பேசி முடித்து, உங்களுக்கு சரி என்றால் பெண்ணை காட்டுறோம்” என்று கறாராக பேசினார் .

Country fellows ! இவர் பெண்ணை என்னமோ டேடிங் கூப்பிட்ட மாதிரி    பேசறாரு . இவர் மக பெரிய உலக அழகி. கண்டிப்பா அவளை பார்க்க பிரிய படனும் தான், அவளை பார்த்தவுடனே தலை குப்பற விழுக போறேன், வந்து என்னை பிடிங்க  என்று எண்ணியதை சொல்ல முடியாமல் அப்படியே விழுங்கினான்.

எல்லாம் இந்த அம்மாவை சொல்லணும். போயும் போயும் இவர்களுக்கு  இந்த பட்டிகாட்டில்  தானா பெண் அமையனும். உடல் நிலை சரி இல்லை என்பதற்காக இவங்க சொல்வதை  எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பாங்களா? அப்படியே எழுந்து கிளம்பி போய்டலாமா நினைத்தான். அவன் அம்மா உடல் நிலை, வேலுசாமி மாமாக்காக  பல்லைக் கடித்து  சிவம் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான் .

இரண்டு பேருடன் பேசிவிட்டு சிவம்  மறுபடியும் “தம்பி  அது தான் என் மக போட்டோவை அனுப்பினேனே! அதை பார்க்கலையா? என்ன வேலுசாமி அண்ணன், போட்டோவை காண்பிக்கலையா? கண்ணு அதில் ரொம்ப அழகா இருக்குமே”

வேலுசாமி மருமகனை  பாவமாக பார்த்தார் .

நான்  இவர்  பெண்ணை பார்க்கணும் ஒத்தை காலில் நிற்பது போல பேசிக் கொண்டு இருக்கிறார். உலக அழகியே வந்தாலும் வேண்டாம் என்று தான் சொல்ல போறேன்! அவளுடன் பேசி எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை,நிறுத்த  வைக்கலாம், இல்லை  என் கண்டிஷன் எல்லாம் சொல்லலாம் பார்த்தால்  முடியாது போல என்று நொந்து கொண்டான்.

சிவம் மாப்பிள்ளை வீட்டாருக்கு கண்மணியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தான் அனுப்பி இருந்தார். அதுவும் கருப்பு வெள்ளை.

 வேலுசாமி சித்துவிடம் போட்டோ காண்பித்தவுடன்  ‘என்ன மாமா !யாரு. எதோ சின்ன பெண் போல இருக்கே! உங்க ஊரா? எதாவது உதவி வேண்டுமா?”

அவனுக்கு பார்த்து இருக்கும் பெண் என்றவுடன் “whattttttt இது child marriage. சட்ட விரோதம்.பத்தாவது தான் படிக்கும் போல. முடியாது சொல்லிடுங்க .நான் ஜெயில் போக ரெடி இல்லை மாமா”

“மருமகனே, பாப்பா பத்தாவது படிக்கும் போது எடுத்த போடோ நினைக்கிறன். இது தான் இருக்கு கொடுத்தாங்க.நேரில் பார்த்தால் நீங்களே மயங்கீடுவீங்க”

சித்தார்த் என்ன சொல்லியும் கேட்காமல் தங்கை ஜானகியுடன் பேசி, பெண் பார்க்கும் படலத்திற்கு வேலுசாமி  ஏற்பாடு செய்தார்.

சித்து நண்பன் தேவும், கிருஷ்ணனும் அவனுடன் வந்து இருந்தார்கள் . சித்து கோபம் முழுதும் அவர்கள் மீது திரும்பியது. கோபமாக அவர்களுக்கு whatsapp  மெசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்தான். அலுவலக வேலையாக பல போன் கால்கள் தொடர்ந்து வந்தது.

அந்த ஊர் பெரியவர் ‘தம்பி ரொம்ப சிசி. எந்நேரமும் பேசிகிட்டே இருக்கு! அதுவும் என்சிபிஸ்(இங்கிலீஷ் ) பேசற அழகே தனி” என்ற போது

 அவன் நண்பன்  தேவ் “அச்சோ! சித்துக்கு  இப்படி பட்ட இடத்தில் பெண்ணா! பாவம் தான்” என்று கிருஷ்ணன் காதை கடித்தான் .

“பெரியவரே அது ‘ சிசி’  இல்லை, பிஸி! வெள்ளைகாரனுடன் தொழில் விஷயமாக   இங்கிலிஷில் பேசறான்.”

பெரியவர் ரொம்ப சீரியசாக “அவங்களை  தான் அப்பவே துரத்தி  விட்டோமே ! அவங்களோட இன்னமும் என்ன பேச்சு”

கிருஷ்ணன் “அச்சோ! இவங்களிடம் இப்படி மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே! எனக்கே இப்படி கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு என்றால் சித்து நிலைமை  டா.”

கிருஷ்ணனும்,தேவும்  பேசி சிரிப்பதை பார்த்து சித்து முறைத்தான் .

“இவன் நம்மளை ஏன் டா முறைக்கிறான்” என்று கிருஷ்ணன் கிசுகிசுத்தான்.

“இவனை கட்டிக் கொள்ளும் பெண் இனி எப்படி பேசி வைக்க போகுதோ! அவங்க மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்கி இருப்பங்களோ என்னமோ!” என்ற தேவிடம் ‘‘டேய் அடங்கு! அவனுக்கு இருக்கும் கோபத்தில் சபை என்று பார்க்காமல்  நம்மளை தூக்கி போட்டு மிதிச்சிட போறான். சித்துக்கு இருக்கும் அழகுக்கும் ,அறிவிற்கும் இவங்க எந்த விதத்தில் பொருத்தமானவங்கன்னு  ஆன்ட்டி  தேர்வு செய்தாங்க தெரியலையே?

ஒரு வேலை பெண் அழகா இருப்பங்களோ!” என்ற கிருஷ்ணனிடம் “சான்சே இல்லை. இங்கு இருக்கும் அழகிகளை பார்த்தால் தெரியல ! ம்ம்ம்ம் ஒன்றும் செய்ய முடியாது. நடக்கிறதை வேடிக்கை தான் பார்க்க முடியும். இன்னும் கொஞ்ச நேரத்தில் சித்து துண்டை காணோம் துணியை காணோம்  ஒடமா இருக்கணும்” என்று சித்தார்த்தை காமடி பீஸ் ஆக்கி பேசிக் கொண்டு இருந்தார்கள் அவன் நண்பர்கள்.

சித்து  பல்லை  கடித்த படி “என்ன டா தனி டிராக் ஓட்டறீங்க! என்னை வைத்து காமடி செய்யறீங்களா?”

சித்து மனதில் இங்க இருந்து எத்தனை சீக்கரம் முடியுமோ அத்தனை  சீக்கிரம் ஓடிபோகலாம் பார்த்தா இவர் பெண்ணை கண்ணிலே காட்டமாட்டேன்கிறார்.

உடனே  அவன் மனம்  ‘அந்த பெண்ணிற்கு  ஒரு பத்து கோட் பவுடர் அடித்து வர வேண்டாம்! கொஞ்சம் பொருங்க பாஸ்’ என்று  கேலி செய்தது.

சித்துவை சுற்றி அந்த ஊர் மனிதர்கள் அமர்ந்து கொண்டு அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். ஊர் கிழவி முதல் கொண்டு கேள்வி கேட்டு துளைத்தது. ரோஜா படம் பார்த்த எபெக்ட் வருதே என்று நொந்து நூடில்ஸ் ஆனான் .

கிருஷ்ணனும்,தேவும் முடிந்த அளவு அவனுக்காக பதில் சொல்லினார்கள் .

அந்த கும்பலில் ஒரு  கிழவி ” நாங்க மாப்பிளையை நம்பி தான் பெண்ணை கொடுக்கறோம். அவர் மட்டும் பேசினா போதும்” என்று அவன் நண்பர்கள் வாய்க்கு பெரிய திண்டுக்கல்  பூட்டு போட்டனர் .

சொத்து என்ன? என்ன வேலை? எத்தனை வீடு? தோப்பு துறவு, எங்க வேலை? எப்படி செய்வீங்க என்று சுற்றியும்  கேள்வி கேட்டு ரவுண்டு கட்டினர். 

அச்சோ! இதில் ஒருத்தன் கூடவா படித்தவன் இல்லை என்று சித்து  நொந்து கொண்டான். வாயை திறந்தாலே பாதி இங்க்லீஷ் தான் வருது! தமிழில் விளக்கம் சொல்லியே சோர்ந்து போனான் .

சிவம் எல்லாரிடமும்  பேசி முடித்து  கடைசியா “தம்பி ,தோட்ட பக்கம் தேன வர சொல்லறேன். நீங்க அங்க போங்க. போய் பாருங்க”

சித்து மனதில் தேன், பாட்டில தான இருக்கும். ஒரு வேலை மரத்தில் கூடு கட்டி இருக்கோ! அதை பார்க்க தான் கூப்பிடறாரோ? வர சொல்லறேன் சொன்னாரு!

“டேய் கண்ணா! தம்பிக்கு அக்கா வரும் வரை தோட்டத்தை சுத்தி  காட்டு” என்று பொறுப்பான வேலையை கண்ணனுக்கு கொடுத்தார்.

ஆமாம் இது பெரிய ஜெய்பூர் பாலஸ். இது சுத்தி காட்ட கைட் வேற!

நண்பர்களை அழைத்த போது கிருஷ்ணன் அவசரமாக  “உனக்கு ஏன் டா கொலைவெறி. அங்கிருந்து என்னை அந்த  கிழவி முறைத்துக் கொண்டு இருக்கு பாரு. நீ செய்யும் அலம்பலில்  உலக்கையால் என் மண்டையை பிளந்திட போகுது . கிளம்பு டா! ஆல் தி பெஸ்ட் ” என்று நண்பனை வாழ்த்தி  அனுப்பினான்.

“கண்மணி, மாப்பிளை தம்பி  தோட்டம் பக்கமா போய் இருக்காரு. இன்று உன்னை பார்த்தே ஆகணும் என்று உங்க அப்பாவிடம் ஒத்தை காலில்  நின்று  கேட்டுக் கொண்டு இருந்தார். மாப்பிளை அட்டகாசமா ஹீரோ கணக்கா இருக்காரு. இந்தா  காபி தண்ணீ. எடுத்திட்டு போய் கொடு. இத்தனை தூரம் வந்தது களைப்பா இருக்கும். நீயும் வெறும் வயிற்றில் இருக்க. உனக்கும் வைத்து இருக்கேன் .கொஞ்சம் குடி” என்று அவள் அத்தை செல்வி, கண்மணி கையில் கோப்பைகளை திணித்தாள்.

சினிமா ஹீரோ கணக்கா இருக்கும் சித்தார்த்தை கண்ணனுக்கு மிகவும்  பிடித்து போனது. அவன் அறிந்த வரையில் சித்து போல ஒருவனிடம் பேசி பழகுனதே இல்லை. 

அக்காக்கு இவர் கணவரா வந்தா நல்லா இருக்கும். சென்னை சிடியிலே நானும் படிப்பை தொடரலாம் .நண்பர்கள் மத்தியில் அத்தானை காட்டி பெருமை படலாம். அக்காவும் அவங்க வீட்டு மனிதர்கள் போல நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசும். ஏற்கனவே  அழகா இருக்கும் அக்கா, இனி  சினிமா நட்சத்திரம் போல மின்னுவா என்று அவன் மனம் மூன்று முறை இந்த உலகத்தை சுற்றி வந்தது .

சித்தார்த்தை கவர  வேண்டும், எப்படியாவது அக்காவை கல்யாணம் செய்ய சித்து சம்மதம் சொல்லணும் என்பதற்காக வார்த்தைக்கு வார்த்தை அத்தான், அத்தான் என்று சொல்லி சித்துவை வெருபேற்றினான்.

ஏற்கனவே அந்த கிராமம், மனிதர்களை கண்டு கொதிப்பில் இருந்து சித்து, கண்ணன் பேச்சை கேட்டு உச்ச கட்ட கொதிப்பிற்கே சென்றான்.

அத்தனை நேரம் இழுத்து பிடித்த பொறுமை காற்றில் பறந்தது. “Will you please shut up and get out of my sight. country people, please leave me alone! damn  it “என்று எரிந்து விழுந்தான் .

சித்தார்த் கோபத்தை கண்டு கண்ணன் பயந்துவிட்டான் .

கண்ணனுக்கு அவன் தான் ஏதோ தப்பு செய்துவிட்டான் அதனால் தான் இந்த கோபம். இதனால் அவன் அக்காவை கல்யாணம் செய்யாமல் கிளம்பிடுவானோ பயந்தான் .’அத்’ என்று ஆரம்பித்து சித்தார்த் பார்வையை கண்டு நிறுத்தினான் .

மேலே என்ன பேசுவது என்று யோசிக்கும் முன் அவன் அக்கா கண்ணில் பயத்துடன் இவர்களை நோக்கி மெதுவாக முன்னேறினாள்.

சித்தார்த் வேறுபக்கம் திரும்பி இருந்ததால் கண்மணியை பார்க்கவில்லை. அவனுக்கு அங்க இருந்து எப்போது வெளியே செல்வோம் என்று ஆனது. 

கண்மணி மனதில் இப்ப யாரு கல்யாணம் கட்டி வைங்க அழுதா? எதாவது சொன்னா உனக்கு எதுவும் தெரியாது தேனு என் வாயை மட்டும் அடைக்க சொல்லு. இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்த? அப்பாக்கு என்று இந்த ஊரில் நல்ல பெயர் இருக்கு. முதல் முதலா பார்க்க வந்த மாப்பிளைக்கு என்னை பிடிக்கவில்லை  என்றால் ராசி  இல்லாதவ சொல்லுவாங்களோ!

வந்தவங்களை  எல்லாம் பார்க்கவே எதோ ஜூல இருப்பது போல இருக்கு. அவர்கள் மேக்கப்பும், பேச்சும், தோரணையும். இவங்க கூட என் வாழ்கையை  ஓட்ட முடியுமா?

இந்த அப்பாக்கு, இப்ப  என்னை கட்டிக் கொடுக்க என்ன அவசரம். இன்னும் ஒரு வருடம் படிப்பு, அப்புறம் ஒரு வருடம் வேலைக்கு போயிட்டு  தான கல்யாணம் செய்துகொள்வேன் சொல்லி இருந்தேன்!

எல்லாம் போன வாரம் வந்த  அந்த  ஜோசியர் வேலையா இருக்கும் .அவன் மட்டும்  கையில் மாட்டினா தொலைந்தான். எதற்கும் வந்து இருப்பவர்களிடம் கல்யாணத்தில் இஷ்டம் இல்லை சொல்லி பார்க்கலாம்,   என்று ஏதோ யோசித்துக் கொண்டே வந்தாள்.

கண்ணன், இந்த அத்தான் என் மீது பாயிந்த மாதிரி அக்கா மீது கோபத்தை காட்டினா தாங்க மாட்டாளே! அக்காக்கு கண் ஜாடையா எதோ தகவலை கொடுக்க எண்ணினான். கண்மணி தான் அவ உலகில் இருக்காளே! கண்ணனை பார்க்க கூட இல்லை .

“மாமா அக்கா! நீங்க பேசுங்க!நான் கிளம்பறேன்” என்று ஓடிவிட்டான் .

திடீர் என்ற சத்தம் கேட்டு கண்மணி  பார்த்த போது “இவன் எதுக்கு பேயை பார்த்த மாதிரி பயந்து ஓடறான். எல்லாருக்கும் இருக்கு” என்று கருவிக் கொண்டாள்.

ஆடி அசைந்து வந்துட்டாளா! கண்மணி அருகில் வந்ததை உணர்ந்து அவள் புறம் திரும்பாமல் “சாரி  மிஸ்!மிஸ் !…ஆன் …”

என்னமோ சொன்னாரே Mr சிவம். தேன் கூடு ..இல்லை, இல்லை, தேனு ! மனதில் ‘அது என்ன தேனு,மானு’ திட்டிக் கொண்டு

எடுத்தவுடன் “To be frank , எனக்கு இந்த கல்யாணத்தில் துளி கூட இஷ்டம் இல்லை . எங்க அம்மாக்காக தான் வந்தேன். அதுவும் இந்த பட்டிகாட்டில் கல்யாணம் செய்ய  எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. நான் வாழும் வாழ்க்கையே வேற! உங்களுக்கு துளி கூட செட் ஆகாது! கல்யாணமே  வேண்டாம்  என்று இருக்கிறவன் நான். I don’t want to spoil my life .  உங்க ஊரில், வீட்டில்  பேசும் இங்கிலீஷ் வைத்து  இங்க யாரும் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கினது போல தெரியல. உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று உங்க வீட்டில் சொல்லிவிடுங்க!”

இவள் வேண்டாம் சொன்னா எப்படியாவது அடுத்த பெண் பார்க்கும் படலதிற்குள்  அவன் அம்மாவை சம்மதிக்க வைத்து ஆபரேஷன் செய்திடலாம் என்று திட்டம் போட்டான்.

சித்தார்த்  பேச,பேச கண்மணிக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. அது எப்படி முன் பின் தெரியாதவர்களிடம் இப்படி பேசலாம். நானும் இவன் அம்மாவிடம் அப்படியே பேசி இருக்கணும்.  ஊரை வைத்து என்னை, என் குடும்பத்தை எப்படி  எடை போடலாம் . இங்கு இருப்பவர்கள் கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவது, பழகுவது  தப்பா. மழைக்கு கூட பள்ளிக்கு போகவில்லை எப்படி சொல்லலாம் . இவனிடம் என்னை பள்ளியில்  சேர்த்து விடு என்று  எங்க அப்பா கேட்டாங்களா, இல்லை நான் தான் கேட்டேனா? அது என்ன பட்டிக்காடு !

இங்க இருப்பவர்களும் மனிதர்கள் தானே! இவர் வெள்கைகார துரை! இவர் பேசியவுடன் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசணுமா? தமிழ்நாட்டில் தான இருக்கான். எனக்கு இங்கிலீஷ் தெரிந்தா போதாதா? இவன் புத்தரா?அது என்ன கல்யாணமே வேண்டாம்  இருக்கிறவன்!

அப்புறம் எதுக்கு வண்டி எடுத்திட்டு இத்தனை தூரம் வரணும். எங்க வீட்டில் பஜ்ஜி சொஜ்ஜி நல்லா இருக்கும் இவனை அழைத்தோமா? இஷ்டம் இல்லை என்றால் வராமல் இருக்கலாமே!

இங்கு எங்களை எல்லாம் பார்த்த பிறகு  இவனுக்கு இந்த எண்ணமா ? இருக்கும், இருக்கும். என்ன லொள்ளு இருந்தா என்னிடமே இப்படி பேசுவான். அது என்ன இவன் வாழும் வாழ்க்கை? நானே இவனை வேண்டாம், ஒத்து வராது  என்று சொல்லலாம் தான இருந்தேன். எல்லாம் பணத்திமிர் .

நல்ல வேலை. உனக்கு எழுத்து கூட்டி  படிக்க கூட வராது, நீ எங்கே? நான் எங்கே? சொல்லலாம் இருந்தான் .பக்கத்தில் எதோ கிளி பறக்க அதை பார்த்து மறந்தான்.

கண்மணி, சித்தார்த்துக்கு தக்க பதிலடி கொடுப்பாளா?

சித்தார்த் வாழ்வில் இனி தூறலா? இல்லை புயல் மழையா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

சித்தார்த் வாழ்வில் இனி தூறலா? இல்லை புயல் மழையா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement