Advertisement

தியாகேஷ்வர் தனது அடையாள அட்டையை அந்த இளைஞர்களிடம் காட்டி அவர்களை இரண்டு தட்டு தட்டி அனுப்பிவிட்டு மகிழுந்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

பின் பக்கம் திரும்பி அவளை பார்த்து உணர்ச்சியற்ற குரலில், தெரியாத பொறுக்கியை விட தெரிந்த பொறுக்கி பெட்டர்னு என் காரில் ஏறுனதுக்கு நன்றி” என்றான்.

அவள் முறைப்புடன், உங்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது” என்று கூற,

அவளது கோபமான முகத்தை பார்த்து சந்துரு, இறங்குக்கா.. ஆட்டோல வீட்டுக்கே போய்டலாம்” என்றான்.

என்னை பற்றி தெரியாது ஓகே.. பட் உங்க பக்கத்து வீட்டு மகேந்திரன் தெரியும் தானே.. நான் அவன் நண்பன்.. நான்…………”

உங்களை பற்றிய விவரங்கள் எனக்கு தேவை இல்லை.. எனக்கு உதவி செய்ததிற்கு நன்றி” என்று கூறியபடி அவள் கதவை திறக்க,

அவன், ஒரு நிமிஷம் கீர்தன்யா.. அந்த பசங்க இங்க தான் சுத்திட்டு இருப்பாங்க.. ஸோ இப்போ நீங்க தனியா போறது சேஃப் இல்லை” என்றான்.

அவன் அவர்களை மிரட்டியது அறியாதவள் அவன் சொல்வது உண்மை என்று  நினைத்து  சிறிது திறந்த கதவை பிடித்தபடி செய்வதறியாது உதட்டை கடித்தபடி அமைதியாக இருக்க, அவன், இஃப் யூ டோன்ட் மைண்ட்,  நீங்க எங்க போகணும்னு சொன்னா, நான் ட்ராப் பண்றேன்” என்றான்.

அவள் தயக்கத்துடன், “10 மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமா?” என்று கேட்டாள். 

பண்றேன்.. எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?” 

பிரெண்ட் வரேன்னு சொல்லியிருக்கா” 

ஓ!” என்றதற்கு மேல் வேறேதும் பேசாமல் முன்பக்கம் திரும்பிக் கொண்டான்.

இருவரும் பேசாமல் அமைதியாக இருக்க, சந்துரு மட்டும் செய்கையில் கிளம்பலாம்என்பது போல் கூறிக் கொண்டிருந்தான். இவ்வளவு அருகில் இருந்தும் அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் இருப்பது கஷ்டமாக இருக்கவும் அவன் கீழே இறங்கி கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்றான்.

பதினைந்து நிமிடங்கள் கழிந்தும் அவளது தோழி வரவில்லை என்றதும், தோழியை கைபேசியில் அழைத்தாள்.

தோழி தன்னால் வர முடியவில்லை என்று கூறவும், பிசாசு.. வரலைன்னு சொன்னவளை நச்சரிச்சு கிளம்ப வச்சுட்டு, இப்ப கூலா நீ வரலைனா சொல்ற.. நீ மட்டும் என் கைல கிடைச்ச..” என்று கத்தியவள் அப்பொழுது தான் சூழ்நிலையை உணர்ந்தது குரலை வெகுவாக குறைத்து பல்லை கடித்துக்கொண்டு, இனி எங்கேயாவது கூப்பிடு..” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

சந்துரு அவள் கையை வருடியபடி, விடுக்கா.. நாம வீட்டுக்கு போகலாம்” என்று ஆறுதல் கூற,

தம்பியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு  கீழே இறங்கியவள் தியாகேஷ்வரிடம், தேங்க்ஸ் சார்.. நாங்க கிளம்புறோம்” என்றாள்.

நீங்க பேசினதை வச்சு உங்க பிரெண்ட் வரலைனு நினைக்கிறேன்..” என்றவன் அவளது முறைப்பில், “நானா ஒட்டு  கேட்கலைங்க.. நீங்க சத்தமா பேசினது அதுவா என் காதில் விழுந்தது.. நான் கொஞ்சம் நல்லவன் தாங்க.. நம்பலாம்” என்றான் மென்னகையுடன். 

அவள் தீவிரமான முக பாவனையுடன்,கொஞ்சம் தான் நல்லவரா?”

அவன் சிறு புன்னகையுடன்,நானே என்னைப் பற்றி பெருமையா பேசினா நல்லா இருக்காதே” 

நல்லா இருந்தாலும் நான் நம்பணுமே!”

அவன் உதட்டை பிதுக்கி, கைகளை விரித்தபடி,கஷ்டம் தான்” என்றான். 

என்ன கஷ்டம்?”

ஒன்றுமில்லை”

அவள் ஏதோ கேட்க வர, சந்துரு,அக்கா கிளம்பலாமா?” என்றான்.

அவள் சிறு புன்னகையுடன்,தேங்க்ஸ் சார்.. இனி நாங்களே பார்த்துக்கிறோம்” என்றாள். 

வீட்டுக்கு தானே.. நான்………. 

பரவா இல்லை.. நாங்க ஆட்டோல போய்க்கிறோம்”  

உங்க இஷ்டம்.. அட்லீஸ்ட் ஆட்டோ பிடிச்சி தரலாம் தானே”

அவள் மறுக்கும் முன்,  அவன், மணி 8.15, இந்த ஏரியா அவ்வளவா சரி கிடையாது.. நீங்க தனியா ஆட்டோ ஸ்டான்ட் வரை போறதோ.. ஆட்டோக்கு வெயிட் பண்றதோ உங்களுக்கு நல்லதில்லை” என்றான்.

அவள் தயங்கவும், அவன், தயங்காதீங்க.. இது ஒரு சின்ன ஹெல்ப் தான்.. இதை வச்சு உங்க பின்னாடி சுத்துவேனோனு பயப்பட வேண்டாம்.. உங்க இடத்தில் வேற பொண்ணு இருந்தாலும் இதையே தான் செய்வேன்” என்றான்.

அவள் ஒருமாதிரி பார்க்கவும், அவன், வீட்டுல ட்ராப் பண்றேன்னு சொல்லியிருக்க  மாட்டேன்  பட் ஆட்டோ ஏத்தி விட்டிருப்பேன்” 

என்னை மாதிரி பொண்ணா இல்லாம வயசான பாட்டியா இருந்தாலும் இதை தான் செய்வீங்களா?”

அவன் உறுதியுடன், சுயர்(sure) என்றான்.

அந்த நேரத்தில் அவர்களை நோக்கி ஒரு தானி(auto) வரவும் அதை நிறுத்தி அவளை அனுப்பி வைத்தவன், நண்பனை அழைத்து விஷயத்தை கூறி அவள் வீடு வந்ததும் தன்னை அழைத்து கூறுமாறு சொன்னான்.

தானி கிளம்பியதும், தானியின் பின்புற சிறு சன்னல் வழியாக அவனை திரும்பி பார்த்தவள் அவளது கண்பார்வையிலிருந்து அவன் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீர்தன்யா வீடு வந்து சேர்ந்த தகவலை நண்பன் மூலம் அறிந்த பிறகே நிம்மதியாக உணர்ந்த தியாகேஷ்வர் இனிய கனவுகளுடன் உறங்கினான்.

 

 

டுத்து வந்த இரண்டு வாரங்களிலும் வேலை பளு  காரணமாக தியாகேஷ்வரால் கீர்தன்யாவை பார்க்க செல்ல முடியவில்லை. ஆனால் இந்த இரண்டு வாரங்களில் கீர்தன்யாவின் மனதினுள் அவனை பற்றிய நினைவுகள் வந்து போனது.

மொட்டை மாடியில் சந்தித்தன்று பார்த்த அவனது கம்பீரமான விரிந்த புன்னகை, இறுதியாக பேருந்து நிறுத்தத்தில் சந்தித்த போது  அவனது  கோபப்பேச்சு, அக்கறை, மென்னகை என்று அனைத்தும் அவள் சிந்தனையில் நீங்கா இடம் பிடித்தது. தியாகேஷ்வர் பற்றிய சிந்தனையை பொருட்படுத்தாமல் தன் வேலைகளில் கவனம் செலுத்த  முயற்சித்தாலும்  அவனை பற்றிய நினைவுகள் அவளை அலைக்களித்தது.

ஒரு நாள் மகேந்திரன் தியாகேஷ்வரை அழைத்த போது அவன் ஒரு முக்கியமான வேலையில் இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை. அன்று இரவு வீட்டிற்கு வந்த பிறகு தியாகேஷ்வர் நண்பனை அழைத்தான்.

ஹாய் தியாகேஷ்.. என்ன ரொம்ப பிஸியா?” 

முக்கியமான டிஸ்கஷனில் இருந்தேன்” 

வாய்க்காபாலம் வெட்டு குத்து கேஸா?”

ஹ்ம்ம்..”

ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு கொலை பண்ணது MLA சக்கரபாணி தானே?” 

விஷாரிச்சுட்டு இருக்கோம்” 

ஒரு வார்த்தை சொல்ல மாட்டியே!”

தியாகேஷ்வர் புன்னகைத்துவிட்டு, அதை விடு.. நீ எதுக்கு போன் பண்ண?” என்று கேட்டான். 

வர  ஃப்ரைடே  அண்ணன் பொண்ணு தர்ட் பர்த்டே, உன்னை இன்வைட் பண்ணலாம்னு……..….” 

இந்த மாதிரி  ஃபங்க்ஷன்-க்குலாம் நான் போறதில்லைடா” 

ஃபங்க்ஷன் வீட்டுல வச்சிருக்கிறதால் கூப்பிட்டேன்”

தியாகேஷ்வர் உற்சாகத்துடன், ” ஃபங்க்ஷன் எத்தனை மணிக்கு?” என்று கேட்டான். 

அதான் நீ வரபோறதில்லையே அப்புறம் இதை தெரிந்து என்ன செய்யப் போற?” 

டேய்!”

மகேந்திரன் புன்னகையுடன், “7.30க்கு” என்றான். 

ஓகே டா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

 

 

வெள்ளி அன்று இரவு 8 மணிக்கு நண்பன் வீட்டிற்கு சென்றவன் நண்பனிடம் கேட்ட முதல் கேள்வி, கீர்தன்யா வந்திருக்காளாடா?” என்பது தான். 

கேக் வேட்டியாட்ச்சானு கேட்காம… ஹ்ம்ம்.. உனக்கு உன் காரியம்” என்று சிரித்தவன் ,முதல் ஆளா வந்துட்டா.. இங்க தான் எங்கேயாவது இருப்பா.. பாரு” என்று கூறி நகர்ந்தான்.

வீட்டு தோட்டத்தில்  விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். கீர்தன்யாவை கூட்டத்தினுள் தேடியவனுக்கு தோல்வியே கிடைத்தது. எரிச்சலுடன் கூட்டத்தை விட்டு நகர்ந்தவனின் கண்ணில் இருட்டில்  யாரோ சுவரேறி குதிப்பது தெரியவும், அவசரமாக அங்கே நகர்ந்து, அந்த நபரின் கையை பிடித்து பின்புறமாக இழுத்து மடக்கினான்.

ஆ!” என்று அந்த நபர் வலியில் கத்த, யாரோ தியாகேஷ்வர் தொடையை ஒரு கம்பால் அடித்து,ஏய்! என் அக்காவை விடுடா” என்றனர்.

அந்த குரல்  பரிட்ஷயமாக  இருக்கவும், அந்த நபரை வெளிச்சத்திற்கு இழுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். அவசரமாக கையை விட்டபடி, சாரி கீர்தன்யா.. யாரோ திருடன்னு நினைச்சு.. அம் ரியலி வெரி சாரி” என்று பதறியவன், அவள் வலியில் முகத்தை சுளிக்கவும், ரொம்ப வலிக்குதா?” என்று கரிசனத்துடன் கேட்டபடி அவள் கையை பிடிக்க  முயற்சித்தான்.

முறைப்புடன் பின்னால் நகர்ந்தவள் கல் தடுக்கி கீழே விழப் போக, அவன் அவசரத்தில் அடி பட்ட கையை பற்றி அவளை நிமிர்த்த, அவள் மீண்டும் வலியில் கத்தினாள்.

அவன், சாரி.. சாரி” என்று கூற,

இவனை  தேடி வந்த மகேந்திரன், இங்க என்ன  பண்ணிட்டு  இருக்கிறீங்க?” என்று கேட்டான்.

தியாகேஷ்வர் சங்கடத்துடன் நடந்ததைக் கூற,

சந்துரு ரோஷத்துடன், நாங்க ஒன்னும் திருடங்க இல்லை.. கிபிட் எடுத்துட்டு வர மறந்துட்டோம்.. லேட் ஆகிருச்சுனு இந்த வழியா எடுத்துட்டு வந்தோம்” என்றான்.

தியாகேஷ்வர் மனதினுள், நல்ல வழியை கண்டுபிடிச்சீங்கடா! என்று நொந்துக்கொள்ள,

மகேந்திரன் சிரிப்பை தன்னுள் மறைத்து, ரொம்ப வலிக்குதா கீர்த்தி?” என்று கேட்டான்.

அவள் கையை தேய்த்தபடி, இல்ல” என்றாள்.

மகேந்திரன் சிறு புன்னகையுடன், எங்க போனாலும் உன் போலீஸ் புத்தியை விடவே மாட்டியா? என்றான்.

அவள் சிறு அதிர்ச்சியுடன், நீங்க போலீஸா?” என்று கேட்டாள்.

தியாகேஷ்வர், ஹ்ம்ம்..”

ஓ!” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறியவள் சந்துருவை அழைத்துக்கொண்டு  விழா  கூடத்திற்கு சென்றாள்.

அதன் பிறகு அவள் தியாகேஷ்வர் பக்கம் சிறிதும் திரும்பவில்லை. ஏதோ ஒரு சிந்தனையில் அமைதியாகவே இருந்தவள் விரைவாகவே கிளம்பி சென்றுவிட்டாள்.

போலீஸான தன்னை பொறுக்கி என்று முதலில் தவறாக நினைத்ததில் இப்பொழுது குற்ற உணர்ச்சியில் தன்னை தவிர்க்கிறாள் என்று நினைத்துக்கொண்டு அவளை தொந்தரவு செய்யாமல் அவள் அருகில் இருந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியவன்,  இனிய கனவுகளுடன் உறங்கினான்.

கீர்தன்யாவோ உறக்கமின்றி தன்னுள் வெகுவாக குழம்பிக் கொண்டிருந்தாள். இறுதியாக அவள் எடுத்த முடிவு, தியாகேஷ்வரிடம் இருந்து விலகி இருப்பது என்றதும், அவனைப் பற்றி இனி சிந்திக்கவே கூடாது என்பதும் தான்.

ஆனால் அடுத்த நாளே இருவரும் சந்தித்தனர்.

 

இந்தியாவில் இருக்கும் 124 அறிவியல் மையங்களில் ஒன்றான திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இருக்கும் அறிவியல் மையத்தில்(சயின்ஸ் சென்டர்) ஒரு வாரம் அறிவியல் கண்காட்சி நடைபெற இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்(MLA) சக்கரபாணி கண்காட்சியை துவக்கி வைக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது. சட்டப்பேரவை உறுப்பினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தியாகேஷ்வர் தான் பார்த்துக் கொண்டான்.

விழா தொடக்கத்தின் போது, சக்கரபாணி சிரித்தபடியே மெல்லிய குரலில்  தியாகேஷ்வரிடம், என்ன தம்பி ஜாதி கலவரம்னு கேஸை முடிக்காம இன்னும் இழுத்தடிச்சுட்டு இருக்கீங்க போல” என்றான். 

தியாகேஷ்வரும் சிரித்தபடி, அந்த கேஸ் விஷயமா கூடிய சீக்கிரம் உங்களை தேடி வரேன்” என்றான்.

சக்கரபாணி முகத்தில் ஒரு நொடி கோபம் தோன்றி மறைய, மீண்டும் புன்னகையுடன் அவன் தோள் மீது கைபோட்டபடி, இளம் ரத்தம்ல! அதான் ரொம்ப தைரியமா பேசுறீங்க.. ஆனா உங்க வீட்டில் இருக்கிற எல்லோரும் இளம் ரத்தமில்லை தம்பி.. பார்த்து நடந்துக்கோங்க” என்றான்.

அவன் மென்னகையுடன் அவர் கையை எடுத்துவிட்டபடி, பார்க்கலாம் சார்” என்று கூறி நகர்ந்தான்.

அந்த விழாவிற்கு செல்ல கீர்தன்யாவின் தோழி கார்த்திகாவின் தந்தைக்கு 6 அனுமதி சீட்டுக்கள் கிடைத்திருக்க, கீர்தன்யாவின் அறிவியல் ஆர்வம் அறிந்த கார்த்திகா தங்கள் குடும்பத்தினருடன் அவளையும் சந்துருவையும் அழைத்துச் சென்றாள்.

சற்று பரபரப்பாக துவங்கிய விழா சக்கரபாணி கிளம்பி சென்ற பிறகு அமைதியாக நடந்தேறியது.

சக்கரபாணி கிளம்பிய சிறிது நேரத்தில் தியாகேஷ்வர் பாதுகாப்பு பொறுப்பை தனக்கு கீழ் இருந்த அதிகாரியான தினேஷிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிய போது தான் கீர்தன்யாவைப்  பார்த்தான். புன்னகையுடன் அவள் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.

அறிவியல் மையத்தின் ஒரு பகுதியான பூங்காவில் சந்துரு முயல் குட்டிகள் பின்னால் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, சற்று தள்ளி கீர்தன்யா தோழியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

கார்த்திகா உற்சாகத்துடன், அப்போ உன் ஆள் போலீஸ்!”

கீர்தன்யா முறைக்கவும் தோழி, உனக்கு பிடிச்சுருக்கு தானே!” 

“..”

கீர்தன்யாவின் முகத்தை தன் முகத்திற்கு நேராக திருப்பிய கார்த்திகா, உண்மையைச் சொல்லு.. நீ அவரை லவ் பண்ற தானே!” என்று கறாராக கேட்டாள்.

வலுகட்டயாமாக வேறுபுறம் திரும்பிய கீர்தன்யா,”எனக்கு போலீஸ் வேண்டாம்” என்றாள். 

லூசாடி நீ!” 

எனக்கு வேண்டாம்”

கார்த்திகா குரலை சற்று உயர்த்தி, சினிமால மட்டும் ரசிக்குற!” என்றாள். 

சினிமாவும் வாழ்க்கையும் ஒன்றல்ல”

கார்த்திகா முறைக்கவும்,  அவள்,”போலீஸ் வாழ்க்கை ரொம்ப ஆபத்தானது” என்றாள்.

போலீஸ்காரங்க யாரும் கல்யாணம் பண்ணிகிறது இல்லையா?” 

ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்தவள் கலங்கிய விழிகளுடன், எனக்கு வேண்டாம்னா வேண்டாம்” என்று கூற,

தோழி அவள் தோளை வருடி, ரிலாக்ஸ்டா.. இனி இதை பற்றி நாம பேச வேண்டாம்” என்றாள்.

கண்களை துடைத்து வரவழைத்த புன்னகை உதிர்த்தவள், ஹாய் கீர்தன்யா” என்ற தியாகேஷ்வர் குரல் அவள் பின்னால் கேட்டதும் இறுக்கமான முகபாவனையுடன் திரும்பினாள்.

என்ன இந்த பக்கம்?”

அவள் வரவழைத்த எரிச்சலுடன், காய் வாங்கிட்டு போக வந்தேன்” 

ஓ! வாங்கிட்டீங்களா?”

அவள் முறைத்துவிட்டு தோழியின் பக்கம் திரும்ப, தோழி அவர் இவர் தானா!’ என்று பார்வையில் கேட்க, இவளும் பார்வையில் ஆம் என்றாள்.

தியாகேஷ்வர் ஏதோ கேட்க வர,  கார்த்திகா, ஹலோ சார்..என்ன நக்கலா?” என்றாள்.

அப்பொழுது தான் கார்த்திகாவை கவனித்த தியாகேஷ்வர் அவளைப் பார்த்து புருவம் உயர்த்த,

கார்த்திகா, பசங்க ஈவ்-டீசிங் பண்ணா, போலீஸ் கிட்ட போகலாம்.. போலீஸே ஈவ்-டீசிங் பண்ணா?” என்று இழுத்தி நிறுத்தினாள்.

தியாகேஷ்வர்,”என்ன இந்த பக்கம்னு கேட்டது ஈவ்-டீசிங் ஆ!” 

காரணம் தெரிஞ்சுட்டே கேட்டா வேற எப்படி சொல்றது?” 

இன்ஜினீயரிங் படிக்குறவங்களுக்கு இங்க என்ன வேலைனு காரணம் தெரியாம தான் கேட்டேன்”

கார்த்திகா ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்க, அவன் மென்னகையுடன் புருவம் உயர்த்தினான்.

சட்டென்று சுதாரித்த கார்த்திகா சிறு பதற்றத்துடன், இந்த கதையெல்லாம் வேண்டாம்.. இவ(ள்) யாரு தெரியுமா?” என்றாள்.

அவன் கண்களை சிறிது சுருக்கி அவளைப் பார்த்துவிட்டு கீர்தன்யாவைப் பார்த்தான். அவளோ இவர்கள் பேச்சிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் சந்துருவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வை தம்பியிடம் இருந்தாலும் கவனம் இவர்கள் பேச்சில் தான் இருக்கிறது என்பதை அறிந்த தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன் கார்த்திகா பக்கம் திரும்பி,”யாருங்க இவங்க?” என்று கேட்டான். 

அது.. அது.. இவ(ள்) ACPயோட லவ்வர்” 

சிறு அதிர்ச்சியுடன்  தலையை சிறிது உலுக்கி அவன் கீர்தன்யாவைப் பார்க்க, அவளோ கோபமாக தோழியை முறைத்துக் கொண்டிருந்தாள். கார்த்திகா அவள் முறைப்பை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

தியாகேஷ்வர் பக்கம் திரும்பிய கார்த்திகா திணறலாக, இவ யாருனு தெரிஞ்சுருச்சுல.. இனி இவ பின்னாடி சுத்தாதீங்க” என்று மிரட்ட முயற்சித்தாள்.

சிறு குழப்பத்துடன் இருவர் முகத்தையும் உன்னிப்பாக கவனித்த தியாகேஷ்வருக்கு அவர்களுக்கு தான் யாரென்பது தெரியவில்லை என்பதை புரிந்துக்கொண்டு, புன்னகையை மறைத்துக் கொண்டு கார்த்திகாவிடம், “ACP.தியாகேஷ்வர் சார் தான் கல்யாணம் ஆகாதவர்.. அவர் லவ்வரா இவங்க?” என்று கேட்டான்.

தோழியின் முறைப்பை பார்த்த கார்த்திகா, ஆ..மா.. அவர்.. தான்” என்றாள்.

அவன் புன்னகைக்கவும், தோழிகள் இருவரும் குழப்பத்துடன் அவனை பார்த்தனர்.

சிறிது இருட்ட துவங்கியிருக்க, அக்கம் பக்கம் சுத்தி பார்த்தவன், அவர்கள் மரத்தின் மறைவில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு காதல் பார்வையுடன் கீர்தன்யாவை நெருங்க, அவன் பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவள் திணறியபடி பின்னால் நகர, கல் பெஞ்சில் கால் தட்டி அமர்ந்தாள்.

கார்த்திகா செய்வதறியாது  நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க, கீர்தன்யா படபடத்த இதயத்துடன் தன் உணர்சிகளுடன் போராடியபடி அவனை மிரட்ட நினைக்க, அவள் இதழ்களோ பசை போட்டது போல் திறக்க மறுத்தன.

அவளது தவிப்பை மென்னகையுடன் ரசித்த தியாகேஷ்வர் அவள் முகத்தருகே குனிந்து, நான் மட்டும் தான் உன்னை காதலிச்சுட்டு இருந்தேன்னு நினைச்சேன்” என்று சிறு இடைவெளிவிட்டு அவள் உணர்வுகளை ஆராய்ந்தான்.

அவள் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும், அவன் விரிந்த புன்னகையுடன், தயா ஐ லவ் யூ” என்று கூறி அவள் கன்னத்தை மெல்லிதாக தட்டுவிட்டு நிமிர்ந்தான்.

அவள் இவன் முகத்தையையே பார்த்தபடி சிலை போல் அமர்ந்திருக்க, முதலில் சுயஉணர்வு பெற்ற கார்த்திகா குரலை சற்று உயர்த்தி, என்ன சார்.. நான் இவ்வளவு சொல்………” 

அவள் பேச்சை கையை உயர்த்தி தடுத்தவன் அவனது காக்கி உடையில் இருந்த பெயரை சுட்டிக் காட்டினான்.

பெயரை வாசித்த கார்த்திகா அதிர்ச்சியுடன் வாயை திறந்தபடி நிற்க, கீர்தன்யா அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.

சந்துரு அவர்கள் அருகே ஓடி வரவும் தியாகேஷ்வர் கீர்தன்யாவை பார்த்து புன்னகையுடன் கண்ணடித்துவிட்டு நகர்ந்தான்.

கீர்தன்யா அவசரமாக, மிஸ்டர் நீங்களா ஏதும் கற்பனை செஞ்சுக்காதீங்க” என்றாள்.

அவன் புன்னகையுடன் திரும்பி, நான் ஏதும் கற்பனை செய்யலை.. உன் பிரெண்ட் இப்போ………………”

அவள் ஏதும் உளறினா அதுக்கு நான் பொறுப்பில்லை”

தியாகேஷ்வர் புன்னகைத்துவிட்டு நகர, அவள் கோபத்துடன் தரையை உதைத்தாள்.

சந்துரு,”என்னாச்சுகா?”என்று வினவ,  அவள் கோபமாக தோழி பக்கம் திரும்பினாள்.

இவளது காளி அவதாரத்தை பார்த்த கார்த்திகா பின்னால் நகர்ந்தபடி, நான் உனக்கு நல்லது செய்ய தான் நினைச்சேன்.. இவரை விட பெரிய அதிகாரியை இழுத்தா இவர் அமைதியா போய்டுவார்னு……………….” 

அவள் கோபமாக இவள் அருகே வரவும், ஹே.. நீயே யோசிச்சு பாரு.. அவர் ACPனு எனக்கெப்படி தெரியும்?” என்றாள்.

அவள் கார்த்திகாவை சரமாரியாக அடிக்க தொடங்கவும், சந்துரு புரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

சிந்தனை தொடரும்…

Advertisement