Advertisement

அத்தியாயம் 8
சுதுமெனிகேயும் சாருவும் லஹிருவின் வண்டியில் பின்னாடி உக்காந்துகொள்ள ஹரிதயும், லஹிருவும் முன்னாடி அமர்ந்து லஹிரு வண்டியை கிளப்பி இருந்தான்.
“பாட்டி நான் போய் அங்க என்ன வேலை பார்க்க போறேன்? எனக்கு ஒன்னும் தெரியாது” சாரு புலம்ப
“இதோ இவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது கோட்டு சூட்டு போடாத குறையாக இவன் கிளம்பலையா? காலை பனி அதிகமா இருக்கு” ஹரிதாவை கைகாட்டிய சுதுமெனிகே கிண்டல் செய்தவாறு “இந்தா இந்த ஸ்கார்ப போட்டுக்க” தானே அவள் கழுத்தில் அணிவித்தாள்.
“அப்பத்தா… என் இமேஜை டேமேஜ் பண்ணுறதுலையே குறியா இருக்கியே. இதுக்குதான் நான் இங்க வர்றதில்ல”  அப்பத்தாவின் மனம் கஷ்டப்படும் என்ற கவலை எல்லாம் ஹரிதவுக்கு இல்லை. சொல்ல வேண்டியதை சொல்லி விடுவான்.
“ஆமான்டா நான் என்னமோ இருநூறு வருஷம் வாழப்போற மாதிரியும். நீ என்னவோ நூறு வருஷம் வாழப்போற மாதிரியும் என்ன வந்து பார்க்க போற இல்ல. இந்த கிழவிக்கு இன்னும் எவ்வளவு காலமோ” சுதுமெனிகே தீவிரமாக பேச
“அப்போ மண்டைய போட முன்னாடி ஏதாவது நல்ல காரியம் பண்ணலாம்னு திட்டம் போடுற? அது நம்ம கல்யாணம் தானே” கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் பதில் கூறியவனை வளமை போல் முறைத்தான் லஹிரு.
“ஆமா உங்க கல்யாணத்த பார்த்தா நான் நிம்மதியா போய்டலாம். நீ யாரையாச்சும் விரும்பிரியா? இல்ல உனக்கும் சேர்த்து இந்த கிழவி பொண்ணு பார்க்கணுமா?” லஹிருவுக்கு தான்தான் பெண் பார்க்க வேண்டும் என்பதை கூறாமல் கூறினாள். 
“பொண்ண நான் பார்த்துட்டேன். சம்மதம் வாங்கணும்” என்றவன் சாருவை திரும்பிப் பார்க்க, லஹிருவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
சுதுமெனிகே அவன் யாரையாவது காதலிக்கிறானா என்று கேட்டால் அண்ணனின் காதல் முக்கியம். சாருவிடம் பேச வேண்டும் என்பதை இவனும் சூட்சகமாக கூறி இருக்க இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது போல் அதுவும் லஹிருவின் பார்வையில் தப்பாகத்தான் விழுந்திருந்தது.
வந்த ஒரே நாளில் இந்த யக்ஷணி தம்பியை மயக்கி விட்டாள். இந்த லூசுப்பய இவ பின்னாடி அலையிறான் என்று நினைத்து விட்டான் இந்த சந்தேகபேர்வழி. 
ஒருவாறு பாக்டரியை அடைய “இதுதான் நம்ம பக்டரியா?” ஹரித அண்ணாந்து பார்த்தான். 
“அடப்பாவி இன்னைக்குத்தான் வரியா? உன்ன எல்லாம் மியூசியத்துலதான் வைக்கணும்” சாரு முணுமுணுத்தாள்.
வண்டியில் இருந்து இறங்கிய சுதுமெனிகே அங்கிருந்த ஒருவரை அழைத்து “லலித் இவங்க ரெண்டு பேருக்கும் பக்டரிய சுத்திக் காட்டு. விலாவாரியா விளக்கமா சொல்லி என் கிட்ட கூட்டிட்டு வா” என்று அனுப்பி வைக்க, லஹிருவும் அவர்களின் பின்னால் நடக்க, “நீ எங்கடா போற? நீ உள்ள வா. லலித் பார்த்துக்கொள்வான்” பேரனை கையேடு அழைத்து சென்றாள்.
“இந்த பாட்டி வேற அந்த யக்ஷணியோட திட்டம் தெரியாம அவன இவ கூட அனுப்பி வைக்கிறாங்க. சிரிச்சி பேசியே மயக்கிடுவாளே” புலம்பியவாறே லஹிரு அப்பாத்தாவோடு கூடவே நடந்தான்.
பக்டரியை சுற்றிக் காட்டிய லலித் அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்று சொல்ல ஆரம்பிக்க தேயிலை கொழுந்து பறிப்பதை பற்றி சாருவே சொன்னாள். “புதிய இலைகள் மட்டும்தான் பறிக்கனும்”
“ஆமாம் மேம்”
“அட சாரு மேடம் கலக்குறீங்க போங்க” ஹரித கலாய்க்க, அவனை முறைத்தவள் லலித் கூறுவதை செவிசாய்க்கும்படி செய்கை செய்தாள்.
பறித்த இலைகளை உலர்த்தும் இடத்தை பார்வையிட்டு உருட்டும் இடத்துக்கு வர “எதுக்கு இப்படி பண்ணுறாங்க?” புரியாது கேட்டது ஹரித தான். 
“செல்லுக்குள்ள இருக்குற ஆக்சிஜனை வெளியேற்ற, இன்னும் காயும்”
“ஓஹ்…”
அதன்பின் இயந்திரத்தின் மூலம் உலர விடப்பட்ட தேயிலையை தரம் பிரித்து பாக்கெட் செய்யப்படுவதுவரை பார்வையிட்டவர்கள் காரியாலய அறையை அடைந்தனர். 
“சரியா ஒன் அவர்ல வந்துடீங்க, அதுக்குள்ள எல்லாம் கத்துக்கிட்டீங்களா?”  சுதுமெனிகே கையில் கட்டியிருந்த வாட்ச்சை பார்த்தவாறு கேட்க
“என்னது? கத்துக்கிட்டீங்களாவா? சுத்தி பார்த்துட்டுதானே வர சொன்னீங்க? இப்போ என்ன?” முழித்தான் ஹரித.
“சுற்றுலாவா வந்திருக்க சுத்திப் பார்க்க? தொழிலை கத்துக்க இல்ல வந்த? நீ சொல்லு” சாருவை ஏறிட அவள் என்னவெல்லாம் பார்த்தாளோ வரிசையாக சொன்னவள் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும், அதற்கு லலித் கொடுத்த விளக்கத்தையும் சேர்த்தே கூறினாள்.
“சபாஷ். இதுதான் கத்துகிறது என்கிறது. புரிஞ்சுதா?” பேரனை முறைத்தாள் சுதுமெனிகே.
“ஜாடிக்கேத்த மூடிதான். சரியாதான் ஜோடியைத்தான் செலெக்ட் பண்ணி இருக்காரு” என்றதோடு நிறுத்திக் கொண்டான் ஹரித.
லஹிருவும் சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் சுதுமெனிகே எள் என்றால் எண்ணெயாக வந்து நிற்பான்.
“இன்ஜினியரிங் படிச்சிட்டு எதுக்கு இந்த தேல காட்டுல கஷ்டப்படுற?” என்று கேட்டால்
“எந்த தொழிலும் கேவலமானது இல்ல. ஒண்ண கத்துக்க தேடலும், ஆசையும் இருந்தா கத்துக்கணும். படிப்புக்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என்பான்” குழம்பிப் போனது ஹரிததான்.
“என்னடா?” அப்பத்தா கேட்டதும்
“இந்த புள்ளய உங்களுக்கு எஸிஸ்டனா வச்சிக்கோங்களேன்”
“அத நீ எனக்கு சொல்லுறியா? நீ என்கிட்ட வேல பாக்குற, சாரு நீ போய் லஹிரு கிட்ட இந்த பைலை கொடு” அவளை அனுப்பி வைக்க
“நான் என்ன சொன்னாலும் ரிவர்ஸ்லதான் பண்ணுவீங்க, எப்படி கோர்த்துவிட்டேன். இன்னக்கி மட்டும் அவன் லவ்வ சொல்லல இருக்கு அவனுக்கு” அங்கே சண்டை காட்ச்சி அரங்கேறும் என்று அறியாமல் கற்பனையில் மிதந்தான் ஹரித.
கோப்போடு வந்த சாரு கண்டது தேயிலை கொழுந்து பறித்து வந்த பெண்களின் கோணியை லஹிரு தூக்கி வைத்து பாரம் நிறுத்துக் கொண்டிருப்பதைத்தான்.
காலையில் ஒருதடவை, மாலையில் ஒருதடவை என்று பறிக்கப்படுவதால் இரண்டு  தடவையும் நிறுக்கவேண்டி இருந்தது.
“இவன் இந்த வேலையை கூட செய்வானா?”
அவனுடைய இடம், அவன் முதலாளி யாரை வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். யாரையும் அழைக்காமல் அவன் எதற்காக வேலை செய்கிறான்? கொஞ்சம் கவனித்துப் பார்த்ததில் அவனை சுற்றி பெண்கள் கூட்டம்தான் நின்றிருந்தனர். பெண்கள் தானே தேயிலை கொழுந்து பறிப்பார்கள் என்ற சிந்தனை எல்லாம் சாருவுக்கு வரவில்லை. உரிமை உள்ளவரிடம் உரிமை கொண்டாட முடியாத கோபமும், அவனை சுற்றி பெண்களை பார்த்ததில் கொஞ்சமே கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்த்திருந்தது.  
“ஒஹ்… ஓஹ்… பொண்ணுங்க சுத்தி நின்னதும் ஐயாவுக்கு தன்னினைவில்லை போலும். பொண்ணுங்கள பார்த்ததும் செய்யாத வேலைகளை கூட செய்யிறாரே” உதடு வளைத்தவள் “நம்மள பார்த்தாதான் பொண்ணா தெரியல” சட்டென்று தன் எண்ணம் போன போக்கை கண்டு அதிர்ந்தவள் தலையில் கொட்டிக் கொள்ள, அதே சமயம் லஹிரு அவள் புறம் திரும்பி “என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
கோப்பை காட்டியவளை கண்களாளேயே அழைக்க இவளும் கூட்டத்துக்குள் புக முடியாமல் பின்னாலையே நின்றாள்.
“நம்ம முதலாளியோட மனச எந்த பொண்ணு கொள்ளையடிக்க போகுதோன்னு கவலைப்பட்டோம். பாத்தியா தேவதை மாதிரி பொண்ணு வந்திருக்கு” மெதுவான குரலில் யாரோ பேச அது சாருவின் காதில் நன்றாகவே விழுந்தது.
“ஆமான்டி சினிமா ஹீரோயின் மாதிரி இல்ல இருக்கா”
அங்கிருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழில்தான் பேசினார்கள்.
“யாரை சொல்கிறார்கள்?” சுற்றிலும் பார்த்தவளுக்கு அவர்கள் தன்னை பார்த்து பேசுவதைக் கண்டதும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் ஓர் உணர்வு தோன்ற “என்னடா இது?” என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அவன் மீது எல்லா உரிமையும் இருந்தும் வெளியே சொல்ல முடியாத நிலை. ஆசைப்பட முடியாத சொந்தம் அவன். தலையை உலுக்கிக் கொண்டவள் பார்வை அவன் மீது விழ, சாதாரண ஜீன்சும் டீஷர்ட்டும் அணிந்திருந்தான். கையில் விலையுயர்ந்த கடிகாரம், காலில் விலை உயர்ந்த ஷூ. பார்க்க அழகாகத்தான் இருந்தான். முகத்தில் மெல்லிய புன்னகையோடு வேலை பார்க்கும் அழகு தனிதான். சாரு தன்னை அறியாமளையே அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.  
அவனோ வேலையில் கவனமாக இருந்தானே ஒழிய இந்த பெண்கள் மீது மறந்தும் பார்வையை செலுத்த வில்லை.  ஆனால் யாருடைய கோணிப்பையை நிறுத்தானோ அந்த பெண்ணிடம் பெயரை சொல்லி பேசினான். ஏதோ கேட்டான். அவளும் சிரித்தாள். அவள் ஏதோ சொல்ல அவன் பார்வை இவள் புறம் திரும்பும் பொழுது மட்டும் முறைத்துப் பார்க்கவே தன்னை மீட்டுக் கொண்டவள் அவனை ரசித்து பார்த்ததற்கான வேண்டி தன்னையே நொந்து கொண்டாள்.
“சாரு நீ ஒரு முட்டாள் வந்த வேலையை மட்டும் பாரு. இன்னொரு கவிதாவாக முயற்சிக்காத” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் காத்திருக்காமல் கோப்பை எடுத்துக் கொண்டு அவனது காரியாலய அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே தொங்கவிடப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்திருந்தவளின் பின்னால் வந்து நின்ற லஹிரு “என் ரூம்ல என்ன பண்ணுற நீ?” அதட்டும் குரலில் சீறினான். 
அவள் வந்தது கோப்பைக்கு கொடுக்க, அது அவனுக்கும் தெரியும். அங்கிருந்த பெண்கள் அவங்கதான் நீங்க கட்டிக்க போற பெண்ணா என்று கேட்டதில் கடுப்பானவன் அந்த கோபத்தைத்தான் சாருவின் மீது காட்டினான்.
நெஞ்சை பிடித்துக் கொண்டு திரும்பியவள் “இப்படித்தான் பின்னாடி வந்து பயமுறுத்துவியா?” என்று விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள். 
“கண்டுக்காம இருந்தா ஒருமைல பேசுற, உரிமை எடுத்துகிற?  என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல? எங்க வீட்டு மகாராணி என்றா? இல்ல வீட்டுக்கு மகாராணி ஆக்கலாம்னு என்றா? நீ வீட்டு வேலைக்கு வந்திருக்க. உன் தாராத்திரம் என்னவென்று உனக்கு தெரியாதா? ரொம்ப ஆடவும் கூடாது, ரொம்ப ஆசைப்படவும் கூடாது”
வீட்டு வேலைக்கு வந்தால் கண்டபடி பேசுவானா? தான் ஒன்றும் அடிமை இல்லையே. நான் என்ன இவன் மேல் சென்று விழுந்தேனா? இவன் கூறுவது போல் மயக்கத்தான் பார்த்தேனா? நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தால் இவ்வளவு பேசுவானா? அந்தஸ்து ஏற்றத்தாழ்வு என்று வேறு பேச இவளுக்கு கோபம் வேறு பொத்துக் கொண்டு வந்தது.
மரியாதை எல்லாம் கொடுக்க தோன்றவே இல்லை. “என்ன பேசுற?” நான் உன்ன மயக்க பாத்தேனா? என்ன பண்ணேன் நான் உன்ன? சிரிச்சி சிரிச்சி பேசினேனா? இல்ல உன் கிட்ட வந்து உரசிகிட்டு நின்னேனா?” சொன்னவள் அடியெடுத்து அவன் புறம் நகர்ந்து நெருங்கியும் நின்றிருந்தாள்.
கோபத்தில் சிவந்திருந்த கண்களும், அவனுக்கு மிக அருகில் துடிக்கும் அவள் உதடுகளும். அவளின் சூடான மூச்சுக்கு காற்றும் நாடியில் பட்டு கழுத்தை தழுவி செல்ல உரசாமல் நின்றாலும் அவன் இதயம்வரை மெல்லிய அலையாய் நாளங்கள் வழியாய் பாய்ந்திருந்தாள். 
அவளின் நெருக்கம் அவன் இதயத்தின் வேகத்தை மெல்ல கூட்டி இருக்க, கண்ணை மறைத்த கோபத்துக்கு அந்த சத்தம் கேட்கவில்லை “உன்ன பத்தி எனக்கு தெரியாதா? உன் பிளான் என்ன என்று தெரியாதா? அதைத்தான் உன் பிரெண்டு கிட்ட உளறிக்கிட்டு இருந்தியே. பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகணும் எங்குறதுதானே உன் கனவு. எந்த ஜாதினாலும் பரவால்ல. எந்த மதம் என்றாலும் பாவமல்ல. பணம் மட்டும் கொட்டிக் கிடக்கணும் இல்ல. அதுக்காக ரொம்ப நல்லவ மாதிரி என்னமா நடிக்கிற? வேஷக்காரி”
முதல் கோணல் முற்றிலும் கோணல் முதல் சந்திப்பிலையே பிடிக்காமல் போனவள் எது செய்தாலும் தப்பாகவே தெரிய, விளையாடுகிறாளா? தீவிரமாக பேசுகிறாளா? ஆராயாமல் அவள்மேல் கோபத்தை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னை வளைக்க பார்த்தாள் முடியாது என்று தெரிந்ததும், தம்பியின் புறம் சாய்ந்து விட்டாள். எங்கே அவள் தம்பியின் மனதை கலைத்து விடுவாளோ என்ற அச்சம்தான் இவ்வளவும் பேச வைத்திருந்தது.
பஞ்சவர்ணம் இவளுக்கு திருமண செய்து வைக்க வேண்டும் என்று கூற, தான் திருமணம் செய்துகொள்ள முன் தந்தையை தேடி செல்ல வேண்டும் என்று அத்தையிடம் கூறியவள்,  தரகரிடம் வசதியான வீட்டில் மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி இருக்க, “இதெல்லாம் நடக்குற காரியமா?” வசைபாடாத குறையாக அவர் சென்றிருக்க, இதையறிந்த பஞ்சவர்ணத்துக்கு கோபம் பன்மடங்கானது. “நீ உன் அப்பாவ தேடி போ.. இல்ல வீட்டை விட்டே போ. எங்க போறதாக இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போ..” இந்த பிரச்சினையில்தான் இருவருக்கும் முட்டிக்கொள்ளும்.
தரகரின் மூலம் காலனியில் உள்ளோருக்கு விஷயம் பரவி, சாரு அளவுக்கு மீறி ஆசைப்படுவதாக காலனியில் உள்ளோர் பேச, திருமணத்திலிருந்து தப்பிக்க அப்படி கூறியதாக தோழியிடம் கூறி வைத்தாள் சாரு. வான்மதியும் இதை வைத்து இவளை கிண்டல் செய்வாள். அதைத்தான் அன்றும் தோழிகள் இருவரும் பேசி இருக்க, அது லஹிருவின் காதில் விழுந்து இவளை முற்றாக வெறுக்க  அதுவே காரணமா அமைந்தது.
“அட லூசு” என்பதை போல் அவனை பார்த்தவள் அவனுக்கு விளக்கம் கொடுக்க முனையவில்லை. புரிந்துகொள்பவர்களுக்குத்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். இவன் காது கொடுத்தே கேட்க மாட்டான். இவனுக்கு சொல்லி புரியவைப்பது வீண்.
“வந்த உடனே அப்பத்தா மனச கரைச்சு. என்ன மயக்க பார்த்த”
“என்ன?” என்றவளுக்கு சிரிப்பு கூட வந்தது. “என்னடா இது?” புதுசா புதுசா சொல்லுறான். நான் எப்போ இவன பத்தி யோசிச்சேன். எனக்கு வேற வேலை இருக்குடா…” மனத்துக்குள்தான் புலம்பினாள்.
“இதோ இப்போ கூட நெருங்கித்தானே நிக்கிற? எங்கே சந்தர்ப்பம் கிடைக்கிறன்னுதானே எதிர்பார்த்து காத்துகிட்டு நிக்கிற?” சாதாரணமாக அவள் நெருங்கியதை குற்றம்சாட்டி பேச கோபத்தில் அவனை தள்ளி விட்டாள் சாரு
பின்னாடி சுவரில் மோதி நின்றவன் விழும் போது பற்றிக் கொண்டது அவள் கழுத்தில் மாட்டி இருந்த ஸ்கார்பை. அவன் இழுத்ததில் இவள் அவன் மேலையே சரிய, அவனும் சமநிலைக்காக அவள் இடுப்பை சுற்றி வளைத்து அணைத்திருந்தான். இருவரும் தடுமாறியதில் அவள் கையிலிருந்த கோப்பும் கீழே விழுந்திருந்தது.
முற்றாக அவள் அவன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, “டேய் விடுடா என்ன?” இவள் திமிறி விலக முயற்சிக்க அவன் கால்களை அவள் கால்களோடு பின்னி அவளை அசைய விடாது தடுத்திருந்தான். 
“நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு. என் தம்பிய மயக்க பாக்குறியா?”
திமிரிக் கொண்டிருந்தவள் அவன் கேட்ட கேள்வியில் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவாறே அவனை ஏறிட்டு “அவனையா? இது அவனுக்கு தெரியுமா?” வாய் விட்டே கேட்டிருக்க அவள் கிண்டல் செய்வதாக நினைத்த லஹிரு அவளை நன்றாக முறைத்தான்.
“அவன் விளையாட்டுப்பிள்ளை. எதையும் சீரியஸ்ஸா எடுத்துக்க மாட்டான். நீ பாட்டுக்கு ஆசைய காட்டி அவனை கல்யாணம் பண்ணலாம்னு நினைக்காத. சித்தப்பாவும், சித்தியும் ஒருகாலமும் சம்மதிக்க மாட்டாங்க. அவன் நல்லா இருக்க, நானே உன்ன கொல்ல கூட தயங்க மாட்டேன். ஏன் அவனே இது சரிவராது என்று நினச்சா உன்ன கைவிட்டுடுவான்” இவன் பாட்டுக்கு ஏதேதோ பேசினான். எல்லாம் இவள் மனதை மற்ற எண்ணி பேசினான்.
“நான் ஒன்னு கேக்குறேன் லவ் பண்ணுறது அவ்வளவு பெரிய குத்தமா? என்ன மாதிரி ஏழை பொண்ணுங்க உங்கள மாதிரி பணக்காரங்க மேல ஆசைப்படக் கூடாதா? ஏன் உங்கள மாதிரி பசங்களுக்கு எங்களை பார்த்தா பொண்ணா தெரியாதா? காதல்தான் வராதா? அப்படியே வந்தாலும் மனசார லவ் பண்ண மாட்டீங்களா? பண்ணா குடும்பத்துக்கு பயந்து விட்டுட்டு போய்டுவீங்களா?” தொண்டையடைக்க தனக்காக பேசினாளா? அன்னைக்காக பேசினாளா? அறியாமளையே பேசியவளின் கண்களின் ஓரம் சிந்திய கண்ணீரை அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் டீஷர்ட்டில் துடைத்தாள்.
“என்ன சம்பந்தம், சம்பந்தமில்லாம பேசுற? இந்த ஜாதி, மதம், அதை எல்லாத்தையும் விட மனிசங்களை நான் நம்புறவன். நேசிக்கிறவன். ஆசைப்பட ஒரு அளவு வேணும். கிடைக்காத ஒண்ணுக்கு ஆசைப்படுறது முட்டாள்தனம். என் தம்பிய விட்டுடுறேன்னு சொல்லு நான் உன்ன விட்டுடுறேன்”
அவளை வேலையை விட்டு நிறுத்தினாலும் ஹரித ஊருக்கு சென்றால் இவளை சந்திப்பானே. அவன் இவளை சந்திக்கா விட்டால் என்ன? இவள் அவனை சந்திக்க சந்தர்ப்பம் அமைத்துக்கொள்ள மாட்டாளா? எப்படியாவது இவள் மனதை மாற்ற வேண்டும் என்ற முடிவில் இருந்தான் லஹிரு.
ஆனால் அவன் அப்படிக் கேட்டதும் சாரு அவனை முயன்ற மட்டும் முறைக்க, அவன் கோபம் இன்னும் கூடியது.
“என்ன கேட்ட? நீ பொண்ணா? எனக்கு நீ பொண்ணா தெரியல யக்ஷணியாதான் தெரியிற. அதுவும் மோகினி. மோகினி எவ்வளவு பேரழகியோ அவ்வளவு ஆபத்தானவ” பெண்ணே இல்லை என்றவன் அவள் பேரழகி என்று ஒத்துக் கொண்டான்.
“நான் என்ன கைல குழந்தையோடவா நிக்கிறேன்” அவன் தன்னை அழகி என்று சொன்னது கூட காதில் விழவில்லை.
பிசாசுகளிலையே மோகினி ரொம்பவும் அழகிய பெண். கையியில் குழந்தையோடு நடு இரவில் வெள்ளை புடவையில் காட்ச்சி கொடுப்பவள், தனியாக செல்லும் ஆண்களிடம் புடவை முந்தி சரியிது. வீறிட்டு அழும் குழந்தையை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பாளாம். காற்றில் ஆடும் அவள் கூந்தலும் அழகான அவள் கண்களை பார்த்து மயங்கி ஆண்கள் குழந்தையை வாங்கிக் கொள்வார்களாம். முன்புறம் எவ்வளவு அழகோ பின் புறம் எரிந்து போய் கோரமாக இருக்கும். அவள் குழந்தையை வாங்கிய ஆண்களை வேட்டையாடுவதாகா ஊர்பக்க கதைகள் பரவிக் கிடக்க அதைத்தான் சாரு கேட்டிருந்தாள்.
“ஆமான்டி… நீயெல்லாம் மோர்டென் மோகினி. குழந்தைய எங்க மூலமா வாங்கி எங்களையே மிரட்ட காத்துகிட்டு இருக்கும் மோகினி” என்றவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி அவளை இழுத்து காரியாலய அறைக்கு வெளியே நிறுத்தி “என் தம்பியிடம் விலகியே நில். இல்லையென்றால் நான் உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது” அவள் புறம் குனிந்து மிரட்டினான் 
அங்கிருந்தவர்கள் பார்வை அவர்களின் மீது விழ, அவள் தோளை பற்றி போ… என்பது போல் திருப்பி விட பார்ப்போருக்கு அவள் அவனை வேலை செய்ய விடாது தொந்தரவு செய்வது போலவும் இவன் செல்லமாக முறைப்பது போலவும்தான் தோன்றியது.
கண்ணீர் முட்டிக்கு கொண்டு வர வேக எட்டுக்களை எடுத்து வைத்தவள் கழிவறைக்குள் புகுந்தது ஒருமூச்சு அழுது தீர்த்தாள்.
லஹிருவின் காரியாலய அறையோ கண்ணாடியிலானது உள்ளே நடப்பது வெளியே இருந்து பார்ப்போருக்கு நன்றாகவே தெரியும். நல்லவேளையாக மதிய சாப்பாட்டுக்கு அனைவரும் வெளியே சென்றிருக்க, அனைவரும் வருவதைக் கண்டுதான் அவன் அவளை விலக்கி நிறுத்தி வெளியே அனுப்பினான்.
“யக்ஷணி….” திட்டியவாறே தனது இருக்கையில் வந்தமர்ந்தவனுக்கு இன்னுமே அவள் அவன் கைகளுக்குள் இருப்பது போன்ற பிரம்மை தோன்றிக் கொண்டே இருந்தது.
அறை முழுவதும் அவள் வாசமும், மூச்சுக் காற்றின் சூடு தேகம் முழுவதும் தகிப்பது போலவும் இருக்க, மேசையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென அருந்தலானான்.
முற்றாக அருந்தியும் உள்ளுக்குள் பரவிய தகிப்பு குறையவில்லை. சாருவை அணைத்திருந்த தருணமும் மனதை விட்டு அகலவில்லை.
“யக்ஷணி கொஞ்சம் நேரம் தொட்டதுக்கே மனசுல ஒட்டிகிட்டா…” தலையை அப்படியும், இப்படியும் உலுக்கி அவளை துரத்த முயன்றான்.
“கோபத்தில் எப்படி சிவக்கிறாள். சின்ன கண்களை வச்சிக்கிட்டு எப்படி முறைக்கிறா? அந்த உதடுகள்…” துடித்துக் கொண்டிருந்த அவள் உதடுகளின் நியாபகம் வந்து ஒட்டிக்கொள்ள “அந்த இதழ்களை சுவைத்துப் பார்க்கும் ஆவல் பிறந்தது.
“என்ன இது?”  தான் வெறுக்கும் ஒருத்தியை பற்றி என்னவெல்லாம் நினைக்கின்றோம் “அவள் யக்ஷணி தான். அதுவும் மோகினி. என்னை மயக்க பார்க்கின்றாள்” அவள் நினைவுகளை துரத்த வேலையில் கவனம் செலுத்தினால் மனம் அதில் ஒன்றவில்லை. அவள் நினைவுகளிலிருந்து விடுபட கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.
அவனை அறியாமளையே அவளை அணைத்திருந்த பொழுது அவள் இடையை அவன் கைகள் அளவெடுத்திருந்ததை மூடிய விழிகளுக்குள் காட்சிகளாக பார்த்திருந்தவனுக்கு அவளை இறுக்கி அணைத்ததில் நெஞ்சோடு மோதிய அவளது தனங்கள் கொடுத்த சுகம் பரவசத்தில் ஆழ்த்த கண்களை பட்டென்று திறந்தான்.
அவளின் அருகாமையை உள்ளமும் உடலும் தேடி ஏங்குவதை உணர்ந்தவன் இதயம் திடுக்கிட அதிர்ந்தான்.
தான் வெறுக்கும் ஒருத்தியை. தான் நேசிக்காத ஒருத்தியை மனம் தேடுவதென்றால் அவள் தன்னை ஆட்கொண்டு, ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டாள். அவளை ஜெயிக்க விடக் கூடாது. சபதம் எடுக்கலானான் லஹிரு.
மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு செல்ல சுதுமெனிகே அழைப்பதாக ஹரித வந்து நிற்க தன்னை மீட்டுக் கொண்டவன் வண்டிச் சாவியோடு வெளியேறினான்.
“சாரு எங்க?” நல்ல சந்தர்ப்பம் இந்த அண்ணன் அவளிடம் பேசி விட்டானா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ளவே கேட்டான் தம்பி.
“வந்தா… கோப்பை கொடுத்தா போய்ட்டா… அவளை பற்றி நீ எதற்காக கேட்கின்றாய்? நீ உன் வேலையை பார். அவள் அவள் வேலையை பார்ப்பாள்” பட்டும் படாமலும் பதில் சொல்ல ஆரம்பித்தவன் கொஞ்சம் கோபமாகவே முடித்தான்.
“எதுக்கு இப்போ இவ்வளவு கோபப்படுகிறாரு? ஒருவேளை சாரு மறுத்து விட்டாளா?” தோளை குலுக்கியவன் “சரி சரி எனக்கு பசிக்குது வா போலாம்” என்றான்.
சுதுமெனிகே வண்டியின் அருகே யாருடனோ பேசிக் கொண்டு நிற்பதைக் கண்டு அண்ணனும் தம்பியும் அவளிடம் விரைந்தனர்.
“சாரு எங்க?” கேட்டவாறே வண்டியில் ஏறினாள் அப்பத்தா.
“எங்க போய் தொலஞ்சாளோ” லஹிரு முணுமுணுக்க, அரக்கப்பரக்க ஓடிவந்து வண்டியில் ஏறி இருந்தாள் சாரு. 
என்னதான் அவளை திட்டினாலும் யாரும் அறியாமல் லஹிருவின் பார்வை சாருவை தொட்டு மீண்டது. நன்றாகவே அழுதிருப்பாள் போலும் இமைகள் எல்லாம் ஒட்டி முகம் வீங்கி பார்க்க பரிதாபமாக தெரிந்தாள். 
“என்னடா… முகம் ஒரு மாதிரியா இருக்கு? ரொம்ப வேல வாங்கிட்டேனா?” கையை பற்றி தடவியவாறு சுதுமெனிகே பரிவாக பார்த்தாள்.
“அய்யோ இல்ல பாட்டி கொஞ்சம் தலவலி. வேற ஒன்னும் இல்ல” வரவழைத்த புன்னகையோடு கூறியவளின் பார்வையோ லஹிருவின் மீது தானாக விழ அவன் சொன்னவைகள் அனைத்தும் நியாபகத்தில் வரவே பெருமூச்சு விட்டவள் கதவில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள் சாரு.   
 “இவளுக்கு இது தேவைதான்” என்பது போல் அவளை கண்ணாடிவழியாக பார்த்த லஹிரு வண்டியை ஓட்டலானான்.
இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்த ஹரித “இவன் லவ்வ சொன்னா மாதிரி தெரியலையே, சாரு ஏன் மூட் ஆப்பா இருக்கா? நாமதான் தூது போகணுமா?” சிரித்துக் கொண்டான்.

Advertisement