Advertisement

அருணாச்சலம், கேசவன் வெளியே சென்றிருக்க, பெண்கள் ஹாலில் கண் அசந்திருந்தனர். தாரணி டிவியில் இருக்க, “நீ சாப்பிட்டியா..?” என்றான் கணவன்

இல்லை.. நீங்க சாப்பிடுங்க..” என்று ஜமுனா அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற, யுவராஜ் மனைவி கையால் விரும்பியே சாப்பிட்டவன்,போதும்..” என்று பிளேட்டுடன் கிட்சன் சென்றான்

ஜமுனா ஸ்வீட் எடுக்க வர, யுவராஜ் மனைவி கை பிடித்திழுத்தான். ஜமுனா பதறி அவன் மேல் மோதியவள், “தாரணி..” என்றாள் கிசுகிசுப்பாக

தெரிய மாட்டோம்..” என்றவன், அவள் சொருகியிருந்த முந்தானைய எடுத்து, வெற்றிடையில் கையை அழுந்த பற்றிகொண்டான். “மாமா..” ஜமுனா சங்கடத்துடன் சிணுங்க

திரும்ப ஏலகிரி மலைக்கு போகணும் போல இருக்கு..” என்றான் அவள் தோளில் முகம் புதைத்து

காலையில தான் வந்தோம் மாமா..” என்றாள் மனைவி. யுவராஜ் பதில் சொல்லவில்லை. கைகள் அவளை இன்னும் தன்னோடு நெருக்கியது

ஜமுனா பதட்டத்தில் கணவனை அணைக்காமல் நிற்க, யுவராஜ் விலகி மனைவி முகத்தை கோபத்துடன் பார்த்தவன், “ஏங்கி போய் தாண்டி உன்கிட்ட வந்திருக்கேன், கட்டிப்பிடிக்க கூட மாட்டியா..?” என்றான் அதட்டலாக

அது கிட்சன், தாரணி..” ஜமுனா தடுமாற

இது ஞாபகம் இருக்கு, நான் உன் புருஷங்கிறது ஞாபகம் இல்லை..” என்றவன் வெளியே வந்துவிட்டான்

ஜமுனா அவனின் கோவத்தில் மூச்சை இழுத்து விட்டு, ஸ்வீட்டுடன் ஹாலுக்கு வந்தாள். யுவராஜ் போனில் தவறவிட்ட அழைப்புகளுக்கு பேசி கொண்டிருக்க, அவன் முன் ஸ்வீட்டை நீட்டினாள். “வேணா போடி..” என்றான் உதட்டசைத்து

மாமா..ப்ளீஸ்..” ஜமுனாவும் உதட்டசைத்து அவன் முன் வைத்து சாப்பிட அமர்ந்தாள். அருணாச்சலம் தோப்பில் இருந்து வீட்டுக்கு வந்துவிட, யுவராஜ் தாத்தாவிடம், “வண்டி பாக்கி இருக்கிறவங்ககிட்ட எல்லாம் இந்த வாரதுக்குள்ள கண்டிப்பா குடுத்துடணும்ன்னு  சொல்லிட்டு வந்திருக்கேன் தாத்தா, நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க..” என்றான்

சரி யுவராஜ்.. கொடுக்கலைன்னா அடுத்த முறை வண்டி அனுப்பிறதில்லை, அந்த இராமசாமி நம்மகிட்ட தான் இவ்வளவு கஞ்சம் பண்றது, வெளியூர் வண்டி வந்தா டைம் முடியுறதுக்கு முன்னாடியே காசை நீட்டிடுறான்..” என்று பேச, அவர் சத்தத்தில் வீட்டு பெண்கள் முழித்துவிட்டனர்

யுவராஜ் பேசி முடித்து தூங்க சென்றான். அவ்வளவு சோர்வு. மனைவி கிட்சனில் இருக்க, அத்தனை பேர் முன் கூப்பிட முடியாமல் மேலேறிவிட்டான். நல்ல தூக்கம். மாலை போல அவனே எழுந்து வர, ஊர்க்காரர்கள்  சிலர் கோயில் விஷயமாக பேச அருணாச்சலத்தை பார்க்க வந்திருந்தனர்

தயாநிதியும் வந்திருக்க, காமாட்சி பேரனுக்கு காபி கொடுத்தார். அவன் கண்கள் மனைவியை தேட, அவள் குரல் வெளியே தாரணியுடன். “என்னப்பா யுவராஜ் விருந்து ஒன்னும் போடாம தப்பிச்சுட்ட..? இது தப்பில்லையா..?” பெரியவர் ஒருவர் தலையை சொறிய, அவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்று அறியாதவனா..? 

லேசாக சிரித்து முடித்துவிட, அவர் அவனை உர்ரென்று பார்த்தவர், “என்னப்பபா தயாநிதி அவ்வளவு பெரிய ஊருக்கு கவுண்டன், உனக்கு கூட முறை தெரியல பாரு..” என்று பேசிவிட்டு சென்றார்

உடனே தயாநிதிக்கு முகம் சுருங்கி போனது. மூக்கில் புசுபுசு காற்று. அவர் வந்ததும் இதை பற்றி பேச தானே, “எப்போ விருந்து, காசை மிச்சம் பிடிக்கலாம் பார்க்கிறியா..? ஊர் கவுண்டன் செய்ற வேலையா இது..?” கிட்டதட்ட அனைவரும் கேட்டிருக்க, எப்படி விட..?  

விருந்து வேண்டாம் என்று மறுக்கும் மருமகனிடமே வந்துவிட்டவர், “விருந்து ஒன்னு வச்சிடலாம்..” என்றார் பொதுவாக

விருந்து வேண்டாம் மாமா..” என்றான் மாப்பிள்ளை

எல்லாம் கேட்கிறாங்க யுவராஜ், கல்யாணம் பண்ணதோட சரி, அதுக்கப்பறம் எந்த சடங்கும் நடக்கலையே, விருந்தாவது கொடுத்தா தானே நல்லா இருக்கும்..” என்றார் விடாமல்

அதான் கோயிலுக்கு போய்ட்டு  வந்தோமே மாமா..” என்றான் மாப்பிள்ளை

அது உங்க குலதெய்வ கோயில் யுவராஜ், இன்னும் எங்க கோயிலுக்கு போகலையே, கிடா வெட்டு இருக்கே..” என்றார்

“இப்போ கஷ்டம் மாமா.. கொஞ்ச நாள் போகட்டும்..” என்றான் ஜமுனாவின் விடுமுறையை யோசித்து

தயாநிதி அது புரியாமல், “விருந்து நான் தானே கொடுக்கிறேன் மாப்பிள்ளை, உங்களுக்கு கஷ்டம் இருக்காது, இருக்கிற பிரச்சனையில இந்த செலவையும் நான் இழுத்துவிட மாட்டேன்..” என்றுவிட்டார். யுவராஜ் முகம் சட்டென்று இறுகி போய்விட, அருணாச்சலம், கேசவனுக்கு அவ்வளவு சங்கடம். வருத்தம்

என்ன பேசுறீங்க..?” ஜெயலக்ஷ்மி சீறிவிட்டார்.

“ஜெயா நான் மாப்பிள்ளைக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்ன்னு  தான் சொல்றேன்..” என்றார் தயாநிதி

பேசாதீங்க.. ஊர் கூடி விருந்து கொடுக்க முடியாம இங்க யாரும் இல்லை, கொஞ்சம் யோசிச்சு பேசுங்க..” ஜெயா சொல்ல

நான் அப்படி நினைச்சு சொல்லலை ஜெயா.. அவங்களுக்கு பண தேவை இருக்கும் போது, இது சிரமம்ன்னு தான் சொன்னேன், நம்ம ஊருக்கு  நான் ஊர் கவுண்டன் வேற, எல்லோருக்கும் விருந்து கொடுக்காம போனா தப்பாயிடும்..” என்றார் தயாநிதி அவர் பிடியில். இதை சொன்னால் இவர்கள் சங்கடப்படுவார்கள் என்று தெரியாமல் இதென்ன..? ஜெயலக்ஷ்மிக்கு அப்படியொரு கோவம்

உங்க ஊர்காரனுங்க குடிச்சு கூத்தடிச்சு கோமணத்தோட நடு தெருவுல உருண்டு கிடக்கிறதுக்கு பேர் விருந்தா..? அதை கொடுக்க ஊர் கவுண்டன் நான்னு வேற நிக்கிறீங்க, இங்க கல்யாணம் நடந்தது உங்களுக்கா, இல்லை என் அண்ணன் மகனுக்கா, அவன் கல்யாணத்துல என்ன வேணும், வேணா அவன் முடிவெடுக்கட்டும், அப்படி உங்களுக்கு உங்க ஊர்காரனுங்களுக்கு விருந்து கொடுத்தே ஆகணும்ன்னா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு ஜெகஜோதியா கொடுங்க, யாரு வேணா சொல்றா..?” என்று வாங்கிவிட்டார்

ஏய் என்னடி பேசுற..?” தயாநிதி சங்கடத்துடன் கூடிய கோவத்தில் மனைவியை அதட்டினார்

ஏன் உங்களுக்கு மட்டும் தான் இங்க கௌரவம் மண்ணு மண்ணாங்கட்டி எல்லாமா, மத்தவங்களுக்கு இல்லையா..? நான் ஊர் கவுண்டன்னு மணிக்கொரு முறை சொன்னா மட்டும் போதாது, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கவும் செய்யணும்..” ஜெயா பேச

போதும் விடுங்க..” என்றான் யுவராஜ்

எப்போவும் போல பேசவிட்டு நிறுத்துறான் பாரு..’ மாமனார் மருமகனை முறைக்கவே செய்தவர், “நான் உனக்காக யோசிச்சு தான் சொன்னேன், உன்னோட கஷ்டம் எனக்கும் கஷ்டம் தான்..” என்றார்

நல்லது.. என்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி மாமா, விருந்துன்னு ஒன்னு கிடையவே கிடையாது..” என்றுவிட்டான் மருமகன்

என்ன ஒரேடியா வேணாம் சொல்லிட்டான் தயாநிதி பார்க்க, பேச்சு முடிந்தது போல அவன் வெளியே சென்றுவிட்டான். ஜமுனா நடப்பது புரியாமல் விழித்திருக்க, செல்பவன் அவள் கையும் பிடித்து இழுத்து சென்றான். ஜமுனா எல்லோரையும் பார்த்து தடுமாறி கணவனுடன் சென்றவள், அவன் பைக் எடுக்கவும் பின்னால் ஏறிக்கொண்டாள்.

பைக் நேரே அவர்களின் நிலத்துக்கு சென்றது. இருள் சூழ்ந்திருக்க, பைக்கை நிறுத்திவிட்டு, ஷெட்டிற்குள் சென்றான். கொஞ்சம் பெரிய அளவிலான ஷெட். ஷீட் வைத்து, ஸ்டாக் அறையாக, ஓய்வெடுக்க பயன்படுத்துவர். யுவராஜ் அங்கிருந்த கயிற்று கட்டிலில் படுத்தவன், நின்ற மனைவி கை பிடித்திழுத்து தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டான். 

ஜமுனாவிற்கு அவன் கோவம் புரிந்தாலும், மனதில் பல கேள்விகள். பணக்கஷ்டமா..? அதான் மாமா வண்டி ஓட்டினாரா..? ரிசப்ஷன் கூட இதனால தான் வைக்கலையா..?  யோசித்து அமர்ந்திருந்தாள். 

அமைதியில் சில நிமிடங்கள் செல்ல, “நைட் கிளம்பணும் நினைச்சேன், இனி முடியாது, நாளை தான் போகணும்..” என்றான். 

முகத்தில் இறுக்கம் தளர்ந்திருக்க, “மாமா.. அப்பா உங்களுக்காக தான் பேசினார், ஆனா அவருக்கு அதை சரியா சொல்ல தெரியல..” என்றாள் மனைவி. 

யுவராஜ் லேசான சிரிப்புடன் புருவம் சுருக்கியவன், “எனக்கு  மாமாவை தெரியும்டி என் அத்தை மகளே..” என்றான். 

“அப்புறம்.. அப்புறம் ஏன் கோவம்..?” ஜமுனா கேட்க, 

“எல்லா நேரமும் நம்ம மைண்ட் ஒரே மாதிரி இருக்காது இல்லை, அவர் எனக்காகவே சொல்லியிருந்தாலும் என்னால அதை ஏத்துக்க முடியல..” என்றான். 

“அப்பா.. அப்பா உங்களுக்கு கஷ்டம்ன்னு சொன்னது, அதான் இன்னைக்கு நீங்களே  வண்டி ஓட்டினீங்களா மாமா..?” என்று கேட்டுவிட்டாள். 

“அப்படியா தெரியுது..?” யுவராஜ் கேட்டு எழுந்து நிற்க, 

“மாமா எனக்கு புரியுது, அதனால தான் நீங்க நம்ம மேரேஜுக்கு ரிசப்ஷன் கூட வைக்கலயா..?” என்றாள் மனைவி தானும் எழுந்து நின்று. 

“ஓஹ்.. அப்புறம், இன்னும் வேறென்ன இருக்குன்னு நீயும் உன் அப்பாவும் சொல்லிடுங்க..” என்றான். 

“மாமா..”

“இல்லை எனக்கு விருந்து கொடுக்க கூட முடியாதுங்கிற மாதிரி உங்க அப்பா சொல்றார், அவர் மகள் நீயும் என்னால ரிசப்ஷன் வைக்க முடியலையான்னு கேட்கிற..? என்னை பார்த்தா உனக்கும், உன் அப்பனுக்கும் எப்படிடி  இருக்கு..?” என்றான். 

ஜமுனா தானும் சொதப்பிவிட்டோம் என்று தவிப்புடன் பார்க்க, “அப்படியே உன் அப்பா மாதிரி இருக்கியேடி, நான் கூட நீ என் அத்தை வாரிசுன்னு தப்பா நினைச்சுட்டேன்..” என்றுவிட்டான்.  

ஜமுனாவிற்கு அவன் வார்த்தைகள் கோவத்தை கொடுத்தது. “உங்க அத்தை வாரிசா நான் இல்லைன்னா என்ன இப்போ..? அப்படி நினைச்சு தான் என்னை கட்டிக்கிட்டீங்களா..?” என்று கேட்டாள். 

“ஆமான்னு சொன்னா..?” யுவராஜ் புருவம் தூக்கினான். 

ஜமுனாவிற்கு கோவத்தில் மூச்சு தாறுமாறாக வந்தது. கை கட்டி வெளியே பார்த்தவள் அடக்க முடியாமல், “இப்போ தான் இல்லன்னு ஆகி போச்சே, என்ன பண்ணலாம் இருக்கீங்க..?” என்று கேட்டாள். 

“என்ன பண்ணட்டும் நீயே சொல்லு..” என்றான் யுவராஜ் சாதாரணமாக. 

“நான் கோவத்துல இருக்கேன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணாதீங்க மாமா..” ஜமுனா சொல்ல, 

“கோவப்பட வேண்டிய நானே அமைதியா இருக்கும் போது நீயேண்டி குதிக்கிற..?” என்றான். 

“என் அப்பா உங்களை பேசினது தப்புன்னா, என்கிட்டேயும் நீங்க இப்படி சொல்லியிருக்க கூடாது தானே..?” என்றாள். 

“இப்போ என்ன இரண்டுக்கும் கணக்கு சரியா போச்சு, முடிச்சுக்கலாம் சொல்றியா..?” என்றான் அவன். 

“மாமா அவர் உங்களை பேசினது உங்களுக்குள்ள, என்னை பேசினத்துக்கு பதில் சொல்லுங்க..” என்றாள் மனைவி விடாமல். 

“இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் அப்பா பேச தெரியாம பேசிட்டார்னு சப்போர்ட்டுக்கு வந்த, இப்போ என்ன பொசுக்குன்னு உங்க பிரச்சனை உங்களுக்குள்ள சொல்ற ..?” என்றான் கணவன். 

“ஓஹ் காட்..” ஜமுனா கை குவித்து நெற்றி இடித்து கொண்டாள். 

யுவராஜ் குறும்பு சிரிப்புடன் மனைவியை பார்த்தவன், “இனி நமக்குள்ள யாரையும் கொண்டு வருவியா..?” என்று கேட்டான். ஆஹ்ன்.. ஜமுனா முழிக்க, 

“அதே தான்.. நமக்குள்ள யாரும் வர கூடாது, நீயும், நானும் மட்டும் தான். புரிஞ்சுதா,  மீறி வந்தா என்கிட்ட தயவு தாட்சணை  எதிர்பார்க்காத..” என்றான் அவள் மூக்கை பிடித்து ஆட்டி கண்டிப்பான செல்ல மிரட்டலுடன். ஜமுனா தன் முன்னால் நிற்பவனை புதிதாக பார்த்து நின்றாள்.

Advertisement