Advertisement

கேளாய் பூ மனமே 6

புது மணமக்கள் ஏலகிரி மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்தனர். ஒரு வாரம் முடிந்திருக்க, ஜமுனா தூக்கத்தில். கார் ஓட்டி கொண்டிருந்த யுவராஜ் வலது கை எடுத்து மனைவி தலையை வருடிவிட்டான். ஏழு நாட்கள் ஏழு நொடிகளாக முடிந்தது  போல உணர்ந்தான் புது மாப்பிள்ளை

இனி அவன் இன்றிரவே சென்னை கிளம்ப வேண்டும். ஜமுனா காலை ஹாஸ்டல் செல்ல வேண்டும். மனைவி ஹவுஸ் சர்ஜன் முடியும் வரை இப்படி தான் ஆளுக்கொரு இடத்தில். இதற்கு படிப்பு முடிந்தே திருமணம் செய்திருக்கலாமோ..? நினைத்ததை விடவும் ஜமுனாவை பிரிந்து இருப்பது கடினமாக இருக்கும் போல

கணவனின் விரல்கள் மனைவி தலையிலே தங்கிவிடஅழுத்தமாக வருடியது. ஜமுனா தூக்கத்தில் தலையை அசைக்க, கையை எடுத்துவிட்டான். அரை மணி நேரத்துல ஒரு தூக்கம். மூக்கை பிடித்து ஆட்ட கை கொண்டு சென்றவனுக்கு, அவளின் அசதி தெரியுமே..? நைட் எல்லாம் அவளை தூங்க விட்டியா..? சிவந்துவிட்ட முகத்துடன் தலையை கோதி கொண்டான்

ஜமுனா தூக்கத்திலே வீடு வந்து சேர்ந்தாள். தாரணி வாசலுக்கே வந்துவிட, வீட்டிற்குள் சென்றனர். ஜெயலஷ்மி குடும்பம் வந்திருக்க,  “வாங்க மாமா..” என்றான் மாமனாரிடம். தயாநிதி தலையசைக்க, யுவராஜ், ஜமுனாவிற்கு காலை உணவு பரிமாறப்பட்டது

வைஜெயந்தி புது மணமக்களுக்கு அசைவ விருந்து தயார் செய்திருக்க, காமாட்சி பேரன், பேத்திக்கு நின்று பரிமாறினார். “நீங்க எல்லாம் சாப்பிட்டிங்களா..?” யுவராஜ் பாட்டியிடம் கேட்டு சாப்பிட ஆரம்பிக்க, ஜமுனாவிற்கு நல்ல பசி. தலை நிமிர்த்தாமல் பாட்டி வைத்த உணவை சாப்பிடயுவராஜ் அவளை ஒரு பார்வை பார்த்து உணவை முடித்து எழுந்து சென்றான்

க்கா.. கொலை பசி போல..” தாரணி மாமா கிளம்பியதும் அக்கா பக்கத்தில் அமர்ந்து வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டாள்

நீ சாப்பிடலையா..?” ஜமுனா நிமிர்ந்து தங்கையை பார்க்க, கணவன் இல்லாதது தெரிந்தது. ‘அதுக்குள்ள சாப்பிட்டு போயிட்டாரா..?’ தேடி கண்கள் சுழல

மாமா வெளியே இருக்கார்.. கட்டின புருஷனை கூட கண்டுக்காம இந்த கட்டு கட்டினா..?” தாரணி கிண்டலாக சொன்னாள்

நல்ல பசிடி..” என்ற ஜமுனாவை பார்த்த தாரணி நமுட்டு சிரிப்பு சிரிக்க

உன்னை அம்மாகிட்ட போட்டு கொடுக்கிறேன் இரு..” என்றாள் அக்கா கண்டிப்பான மிரட்டலுடன்

சொல்லிக்கோ.. நான் என்ன தப்பா கேட்டேன், நல்ல பசியான்னு தானே கேட்டேன்..” என்றாள் தங்கை தோள் குலுக்கி

நீ பயங்கர கேடிடி.. எந்த அர்த்தத்துல கேட்டேன்னு எனக்கு தெரியாது நினைச்சியா..?” அக்கா முறைப்புடன் கேட்க

நான் உன் மேல இருக்கிற பியூர் பாசத்துல தான் கேட்டேன்க்கா.. நீ என்ன நினைச்ச..?” தாரணி கண் இமைகளை சிமிட்டி, சிமிட்டி அப்பாவியாய் பேசினாள்

உன்னை அப்பறம் பேசிக்கிறேன் இரு..” ஜமுனா உணவை முடித்து கணவனை தேடி சென்றாள். யுவராஜ் வீட்டின் முன் இருந்த பெரிய களத்தில் கேசவனிடம் ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருந்தான். அருணாச்சலமும் பக்கத்தில் நிற்க, ஜமுனா  தயாநிதியிடம் சென்றாள்

உட்காரும்மா..” அப்பா சொல்ல, ஜமுனா அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். ஜெயலக்ஷ்மி கையில் கேசரியுடன் வந்தவர், கணவனுக்கும், மகளுக்கும் கொடுத்தார். தாரணி கிச்சனில் அத்தை, பாட்டியுடன் வாயடித்து கொண்டிருக்க, “எப்போம்மா கேம்பஸ் கிளம்பணும்..?” என்றார் தயாநிதி

காலையில கிளம்பணும்ப்பா..” ஜமுனா சொன்னவள், யார் கூட்டி சென்று விடுவா என்று யோசித்தாள். ‘மாமா இதை பத்தி எதுவும் பேசலையே..? க்கும்.. அவர் முதல்ல என்ன பேசினார்..?’ நினைத்தவுடன் ஜமுனா உடலில் ஒரு உஷ்ண வெப்பம் பரவ, அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் தலை குனிந்து கொண்டாள்

தயாநிதிக்கும் நாம கூட்டிட்டு போகணுமா..? யுவராஜ் விடுவானா..?’ என்ற கேள்வி பிறந்தது. ‘ஏதா இருந்தாலும் அவங்களே சொல்லட்டும், நாம கேட்டா மாமியாரும், மருமகனும் வரிஞ்சு கட்டிட்டு வந்திடுவாங்க..’ உஷாராக வாய் மூடி கொண்டவர், யுவராஜை எதிர்பார்த்தார். அவனிடம் பேச தான் காத்திருக்கார்

யுவராஜ் வெளியே அப்பாவிடம், “யார் யார்ன்னு லிஸ்ட் கொடுங்க..” என்று வாங்கி கொண்டிருந்தான். கேசவனிடம் வண்டிகளின் பொறுப்பை ஒப்படைத்திருக்க, அவரும் சரியாகவே செய்தார். ஆனால் முக்கியமான விஷயத்தில் சொதப்பினார். வண்டிகள் வாடகைக்கு சென்று வெறும் கையுடன் திரும்பி வந்தது

எல்லாம் பங்காளிகள், உறவுகள், அக்கம் பக்கம் ஊர் மக்களாக இருக்க கறாராக பணம் வசூல் செய்ய தயங்கினார். “நாளைக்கு தரேன், அடுத்த வாரம் தரேன்..” இது தான் அதிகமானோர் சொல்லி அனுப்பினர். டிரைவர்களும்  கேட்டுவந்து அப்படியே கேசவனிடம் சொல்ல, அவரும் சரி கொடுப்பாங்க என்றுவிட்டார். கட்ட கடைசியில இவர்களே டீசல் போட்டு தானத்திற்கு செய்யும் நிலை. முழு நஷ்டமே

அருணாச்சலம் மகன் கையில் பொறுப்பை ஒப்படைத்து, விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கிவிட்டார். தேங்காய், மாங்காய், சப்போட்டா, கொய்யா என்று செடிகள் புதிதாக வைத்து, மூன்று ஏக்கரில் தேக்கு மரங்களையும் வைத்தார். பின்னால் பேர பிள்ளைகளுக்காக யோசித்து யோசித்து செய்ய, இங்கு மகன் இப்படி

இந்த வயதிலும் அவர் தேங்காய் தோப்பு, வாழையில் வரும் வருமானத்தை வைத்து வட்டியும் கட்டி கொண்டு, முதலீடும் செய்ய, மகன் கேசவன் சொதப்புவது அதிகமான மனவுளைச்சலை கொடுத்தது. ஒரு மகன் என்ற செருகல் இத்தனை வருட அவரின் வாழ்க்கையை மட்டுமில்லாமல், வரும் சந்ததியையும் பாதித்தால்..? 

மகனை திட்டினால் மனைவி சப்போர்டுக்கு வந்து நிற்பாள். மருமகள் அழுது கரைவாள். மகன் வாடிய முகத்துடனே அலைவான். முடியவில்லை. சமாளிக்க முடியவில்லை. சண்டை கூட போட்டுடலாம், இப்படி இருப்பது தான் ஆக பெரும் மனவுளைச்சல். இறுதியில் வேறு வழி இல்லாமல் எப்போதும் போல பேரனிடம் தான் வந்து நின்றார்

யுவராஜ் தான் அவரின் தூண் இப்போது. அவனையும் இன்னொரு கேசவன் ஆக்க காமாட்சி, வைஜெயந்தி நிற்க, அருணாச்சலம் சுதாரித்துவிட்டார். ஒரு கேசவனால் நான் படும் பாடு போதும். இன்னொரு கேசவன் என் வீட்டுக்கு வேண்டாம் என்று மிக உறுதியாக இருந்தவர், பேரன்களின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்து கொண்டார்.  

மருமகள், மனைவி மூக்கு சிந்துவதை சட்டை செய்யவில்லை. பள்ளி படிப்பு நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் நிலத்துக்கு கூட்டி கொண்டு அலைவார். யுவராஜ் தலை மகனுக்கே உரிய பொறுப்புடன், பொறுமையும் என்றால், ஆகாஷ் இரண்டாவது பிள்ளைக்கே உரிய சேட்டை. ஆனாலும் தாத்தா, அண்ணன் சொன்னால் கேட்டுக்க கூடியவனே

மகன் வளர்ப்பில் கோட்டை விட்டாலும், பேரன்களை பிடித்துவிட்டார் அருணாச்சலம். அதன் பலன் இப்போது அவர் பிடித்து கொள்ள கூடிய தூணாக! வருத்தம், மகிழ்ச்சி கலந்த கலவையில் யுவராஜை பார்த்து நிற்க, “நான் சொல்றது சரி வரும் தானே தாத்தா..?” என்றான் யுவராஜ் அவரிடம் கேள்வியாக

தாத்தா கவனிக்காமல் விட்டதில், “அதான் தாத்தா.. டிராக்ட்ர் மட்டும் இருக்கட்டும், JCB, லாரி இரண்டையும் ரோட் காண்ட்ரேக்ட்டுக்கு கொடுத்துடலாம்என் ப்ரண்ட் அப்பா தான் காண்ட்ரேக்ட் எடுத்திருக்கார், அவர்கிட்ட பேசுறேன், தினப்படி வாடகை, நமக்கு இருக்கிற டென்க்ஷனுக்கு நம்மால ஊர்காரனுங்ககிட்ட  மல்லு கட்ட முடியாது, வர வேண்டிய பணத்தை மட்டும் வசூல் பண்ணிடலாம், இன்னைக்கு வண்டிங்களோட நான் போறேன், கொஞ்சம் கண்டிப்பா பேசினா தான் பணம் கைக்கு வரும், நைட் நான் சென்னை கிளம்பிட்டா இதை என்னால பார்க்க முடியாது..” என்றான் தெளிவாக

சரி.. நல்லது யுவராஜ், அப்படித்தான் பண்ணு..” அருணாச்சலம் சொல்ல

“JCB  ட்ரைவர் முருகேசன் இன்னைக்கு வரல..” என்றார் கேசவன்

அவன் வர மாட்டான், வழியில டாஸ்மாக்கிட்ட பார்த்தேன்.. நாளைக்கு வந்தான்னா சேர்க்காதீங்கப்பா. வேற ட்ரைவர் பார்த்துக்கலாம், நினைச்சா வந்து போறதுக்கு நாம சம்பளம் கொடுக்க முடியாது..” என்றவன், அப்பா கண்டிப்புடன் சொல்ல மாட்டார் என்று புரிய, தாத்தாவை பார்த்தான்

நான் சொல்லிக்கிறேன் யுவராஜ்..” என்றார். கேசவனுக்கு வண்டி இன்னும் வரலை என்று போன் வந்துவிடவும்யுவராஜ் தானே JCB  எடுத்துவிட்டான். கேசவன் வீட்டிற்குள் வந்து சாவி எடுத்து செல்ல, எழுந்து நின்ற ஜமுனா கண்கள் அவர் பின் சென்றது

அங்கு கணவன் வேஷ்டி மடித்து கொண்டு JCBயில் ஏறி கொண்டிருந்தான். பார்த்த ஜமுனா கண்கள் விரிந்ததுகணவன் ஓட்டுவான் என்று தெரியும், முதல் முறை பார்க்கிறாளே. அவ்வளவு பெரிய வண்டியில் மிகவும் அனாயசமாக ஏறியவன், லாவகமாக கிளப்பி கொண்டு சென்றான். 

ச்சே.. கிட்ட போய் பார்க்காம போய்ட்டோமே..’ அவன் கிளம்பிவிட முகம் சிணுங்க, ‘விட வரும் போது பார்க்கலாம்..’ என்று மனதை தேற்றி கொண்டாள். இங்கு மருமகனுக்காக காத்திருந்த தயாநிதி, மாலை வந்து பேசிக்கலாம் என்று  கடைக்கு கிளம்பிவிட்டார்.

“நீ போய் ரெஸ்ட் எடு ஜமுனா..” காமாட்சி பேத்தி முகம் பார்த்து சொல்ல, ஜமுனா கணவன் அறைக்கு செல்லாமல், பாட்டி அறைக்கே சென்றுவிட்டாள். என்னமோ யுவராஜுடன் தான் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை. திருமணம் முடிந்த நாள் அன்றே ஏலகிரி மலை கிளம்பிவிட, முதன் முதலாக செல்லும் போது அவன் இருக்க  வேண்டும் என்ற எண்ணத்துடன் படுத்தவள், சில நொடியில் தூங்கியும்விட்டாள்.  

தாரணி, மதிய உணவுக்கு ஜமுனாவை எழுப்ப, கணவன் இன்னும் வீடு வந்து சேரவில்லை. ஐந்து மணி நேரம் வாடகை என்றார் கேசவன். ‘அவ்வளவு நேரமா..?’ மற்றவர்கள் உணவு முடிக்க, ஜமுனா கணவனுக்காக காத்திருந்தாள்

யுவராஜ் வரும் சத்தம் கேட்டது. ஜமுனா, தங்கையுடன் வெளியே அமர்ந்திருந்தவள், வண்டியில் இருந்து இறங்கிய கணவனை பார்த்து எழுந்து நின்றுவிட்டாள். காலையில் அப்படி கிளம்பியவனா இவன்..? வெயிலில் அவ்வளவு நேரம் வண்டி ஓட்டியது, வேர்த்து, சோர்ந்து போயிருந்தான்.  

இருவரிடம் வந்தவன், “குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்று பொதுவாக சொல்லி சென்றான். ஜமுனாவிற்கு அவன் பின்னால் செல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. ஏன் இப்படி..? என்று யோசித்து நின்றுவிட்டவள், யுவராஜ் குளித்து வரவும் வேகமாக அவனுக்கு உணவு எடுத்து வைத்தாள்

Advertisement