Advertisement

அத்தியாயம்…7…1

ஷ்யாம் திட்ட மிட்ட படி அந்த ராஜரங்கம் அவனை அன்று  மாலையே அவன் இடத்திற்க்கு சென்றான். வந்தவரை உபசரிப்பத்தில் ஷ்யாம் எந்த பேதமையும் காட்டவில்லை. நல்ல முறையாகவே கவனித்தான் தான்.

ஆனால் பார்த்திபன் விசயம் பேசும் போது பார்த்திபன் கொடுத்த பணத்தை விட  மிக மிக குறைவாகவே வாங்கியதாக அவன் சொல்ல. ஷ்யாம் பொங்கி விட்டான்.

“ என்ன என்னை  பார்த்திபன் மாதிரி நினச்சியா.? ஏமாத்த. ஒழுங்கா அவர் கிட்ட வாங்கிய தொகை நீயே சொன்னா தப்பிச்ச. இல்லேன்னா நான் சொல்ல மாட்டேன்.” என்று விரல் நீட்டி எச்சரித்தவனிடம் ராஜரங்கத்தின் அல்ல கை ஒன்று.

“ ஏய் யார் கிட்ட   பேசுற. பார்த்து பேசு?” என்று சொல்லி அவன் வாயை மூடவில்லை.

சூர்யா குத்திய பஞ்சில் அவன்  வாய் பிளந்து ரத்தம் வந்து கொட்டியது. அந்த ரத்த கொட்டல், பல்  விழுந்ததாலா.? இல்லை உதடு பிளந்து விட்டதாலா..?  என்று கண்டு பிடிக்க முடியாது,  வாய் முழுவதும் ரத்த கோலமாக தான் காட்சி அளித்தது.

அவனின் ரத்தத்தை பார்த்த மற்ற கைகள் கையை கட்டிக் கொண்டு ராஜரங்கத்துக்கு பின் நின்றுக் கொண்டு விட்டனர்.

ராஜரங்கமும். “ ஏன் என் ஆளை அடித்தாய்…? “ என்று கேட்கவில்லை.

“கொஞ்சம் பொறுமை தம்பி. ஏன் இந்த கோபம்.  உங்க பிரண்ட் கிட்ட சொல்லுங்க. பேசி தீர்த்து கொள்ளலாம்.” என்று ராஜரங்கம் மிக தன்மையாக தான் பேசினார்.

“ நானும் பேசி தீர்த்துக்கலாம் என்று  தான் உங்களை அழைத்து பேசிட்டு இருக்கேன். ஆனால் பாருங்க இந்த மேடையில் பொய் புரட்டு பேசுவது போல் என் கிட்ட பேசிட்டு இருக்கிங்க. 

நீங்க அங்கு பேசுற பொய்க்கு வாக்கு வேணா கிடைக்கலாம். ஆனால்  என் கிட்ட.”  சூர்யாவிடம் அடிவாங்கிய அல்ல கையை காட்டி.

“ இது தான் கிடைக்கும். இப்போவாவது சொல்லுங்க. கெட்டதிலும் ஒரு நல்லது.  பார்த்திபன் பொய் கணக்கு காமிக்கவில்லை.  அதனால் ஒயிட் மணியா தான் உங்க கிட்ட நிறைய கொடுத்து இருக்கார்.

அவர் இதை சட்ட ரீதியாக அணுகி இருந்தாலுமே, அவருக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்து இருக்கும். ஏன் அப்படி செய்யல.?  என்று எல்லாம் நான் யோசிக்கவே தேவையில்லை.

காரணம் நீ. எனக்கு தெரியும். உங்க ப்ளானே பெரிய இடமா இருக்கனும். ஆண் வாரிசு இல்லாது பெண்கள் மட்டும் இருக்கும் வீடு. அதுவும் அந்த பெண்கள் வெளி அனுபவம் இல்லாது இருந்தால், அந்த இடத்தில் தான் நீங்க ஸ்கெச் போடுவீங்க.

உங்க திட்டபடி இந்த முறை உங்க வலையில் விழுந்தது பார்த்திபன். முதலில் கடனா வாங்க பின் பார்ட்னர் ஷிப் போட்டு  அந்த கன்செக்ஷனும் ஆரம்பிக்காது அவரை ஏமாத்த பார்த்திங்க.

அவர் கொஞ்சம் குரல் உயர்த்தி பணம் கேட்டால், வீட்டு பெண்களை சொல்லி மிரட்டி. சீ இந்த பொழப்புக்கு வேறு ஏதாவது கூட நீ  செய்யலாம்.” என்று ஷ்யாம் பேசிய இந்த பேச்சை வேறு யாராவது பேசி இருந்தால், கண்டிப்பாக ராஜரங்கம் அவனை சும்மா விட்டு இருக்க மாட்டான் தான். 

ஆனால் பேசுவது ஷ்யாம். ஆளுங்கட்சியின் உதவியோடு இருப்பவன் என்று சொல்வதை விட, ஆளுங்கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெற இவன் பக்க பலமாக இருப்பவன் என்று  சொன்னால் சரியாக இருக்கும்.

இதோ இவனை சந்திக்க வரும் முன் தன் கட்சி ஆட்களிடம் . “ ஷ்யாம் என் கிட்ட ரொம்ப துள்ளுகிறான்.” என்று சொன்னது தான்.

“ பார்த்து ராஜரங்கம் அவன் கிட்ட தன்மையா போ. ஏற்கனவே உன் பெயர் கட்சியில்  அந்த அளவுக்கு சொல்வது போல் இல்ல. சீட்டு கொடுத்த இரண்டு முறையும் நீ ஜெயிக்க வில்லை.

 அதனால இந்த முறை உனக்கு சீட்டு  கொடுக்கலாமா..? வேண்டாமா..? என்று மேல் இடம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது, நீயே போய் ஏழரையை கூட்டிக் கொள்ளாதே, நான் அவ்வளவு தான் சொல்லுவேன்.” என்று சொன்னதில் ராஜரங்கம் ஷ்யாமிடம்  இன்னும் அடங்கி போகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்.

அதனால் பணிந்தே பார்த்திபனிடம் வாங்கிய தொகையை கொஞ்சம் கிட்ட வருவது போல் தான் உண்மையை சொன்னான்.

“ஓகே. உண்மையான தொகை எனக்கும் தெரியும். சரி  விடுகிறேன். சொல் இந்த தொகையை பார்த்திபன்  குடும்பத்திற்க்கு  எப்போது கொடுக்க போற…?” என்று  ஷ்யாம் கேட்டதற்க்கு, 

ராஜரங்கம். “ ஒரு மாதம்.” என்று சொல்ல. “  ஒரு வாரம். சரியா இன்னையில் இருந்து ஏழாவது நாள்  நீங்க  எல்லா தொகையையும்,  பார்த்திபன் குடும்ப உறுப்பினர்  வங்கி கணக்கில்  அனுப்பி இருக்கனும்.” என்று சொன்னவன்.

கூடவே.. “ யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும்.” என்றும் சொன்னான்.

பார்த்திபன் அனைத்தையும், வங்கி பரிவர்த்தனை தான் செய்து இருக்கிறார். வரி ஏய்ப்பு என்று அவர் செய்யவில்லை. என்ன ஒன்று தன் சம்பாதியத்தை  தன் மனைவி மகள்கள் என்று வரியை  குறைக்க என்று  ஒரு சிலது செய்து இருக்கிறார். இது அனைவரும் செய்வது தான்.

என்ன ஒன்று பார்த்திபன் மனைவியின் பெயருக்கும், பெண்களின் பெயருக்கும் பணம் போட்டவர். அது எப்படி வந்தது என்றும் சொல்லவில்லை. காசோலையில் கைய்யெழுத்து வாங்கும் போது,  இது எதற்க்கும் என்றும் சொல்லவில்லை. மொத்தத்தில் பார்த்திபன் வீட்டு பெண்களை ஒரு முத்திரை தாளாக மட்டும் தான் பயன் படுத்திக் கொண்டு இருந்து இருக்கிறார்.

ஷ்யாம் சொன்னதை அனைத்தும் செய்து முடிக்கிறேன் என்று சொல்லி தான் ராஜரங்கம் சென்றார்.

ஒரு வாரம் சென்ற பின் பார்த்திபன் வீட்டு பெண்களின் வங்கி கணக்கில் பணம் வந்ததிற்க்கான  மெசஞ்சர்  பார்த்திபன் கை பேசிக்கு வந்தது.

ஆனால் அது பார்க்க தான் அந்த கை பேசி உயிர்ப்போடு இல்லை.   கடன்காரனுக்கு பயந்து பார்த்திபன் பேசியை அணைத்து விட்டு இருந்தனர்.

கடன்காரன்கள் சொன்ன காலகேடு இரு வாரத்தில் ஒரு வாரம் முடிந்து விட்டது. ஆனால் கடனை அடைக்க வேண்டிய வழி என்ன என்று கூட தெரியாது வீட்டு பெண்கள் இருந்தனர்.

சொக்கலிங்கம் ஷ்யாம் வீட்டில் இருந்து ஏதாவது நல்ல செய்தி வராதா.? என்று ஒவ்வொரு நாளும் காத்து  கொண்டு இருந்தது தான் மிச்சம். இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று   நினைத்த சொக்கலிங்கம்  தன் மகள் கெளசல்யாவிடம்.

“ வங்கியில் உங்க எல்லாருடைய  பெயரிலும்   டெப்பாசிட் போட்டு இருக்கார் என்று சொன்னிங்களே.  மொத்தம் எவ்வளவு  இருக்கும்.” என்று கேட்டார்.

அதற்க்கு கெளசல்யா. “ தெரியலையேப்பா. அவர் போட்டார். பின் செக்கில் சைனும் வாங்கினார் பா. “ என்று சொன்ன மகளை சொக்கலிங்கம் ஒரு பெண் இப்படி இருக்குமா என்று தான் நினைத்தார்.

அவர் அப்படி இருக்க தானே காரணம் என்று அந்த  பெரியவருக்கு தெரியாது போனது. பின் சொக்கலிங்கம் தன் பேத்திகளை பார்க்க, அவர்களிடம் இருந்தும் அவருக்கு அதே பதில் தான் கிடைத்தது.

பார்த்திபன் அனைத்து வங்கி கணக்கிலும் தன் பேசியின் எண்ணை மட்டுமே கொடுத்து இருந்தார். அதனால்  அவர் எவ்வளவு போடுகிறார் எவ்வளவு எடுக்கிறார் என்பது வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது போயிற்று.

  பின் சொக்கலிங்கம்  போனது போகட்டும் என்று நினைத்து . “ சரி உங்க பேங் பாஸ் புக் எல்லாம் எடுத்துட்டு வாங்க. நாம் பாங்கில் சென்றே பார்த்து கொள்ளலாம்.” என்று சொன்னார்.

அதற்க்கும்  தனுஜா.. “  பாஸ் புக் எங்களிடம் இல்லை தாத்தா.” என்று சொன்னாள்.

சொக்கலிங்கத்திற்க்கு தலையில் அடித்து கொள்ளலாம் என்று ஆகி விட்டது. படித்த பெண்கள் கூட இப்படி இருப்பார்களா.? என்று தான் நினைத்தார்.

ஷைலஜா தான் “ அப்பா பீரோவில் பார்க்கிறேன் தாத்தா.” என்று சொல்லி பெற்றோர் அறைக்கு ஓடியவள் வரும் போது கையில் எண்ணிலடங்கா    பாஸ் புக்கை கொண்டு வந்தாள்.

பார்த்திபன்  தன் வீட்டு பெண்கள் மூவருக்குமே மூன்று வங்கியில் கணக்கை ஆரம்பித்து இருக்கிறார் என்று அந்த  பாஸ் புக்கை பார்த்து சொக்கலிங்கம் தெரிந்து கொண்டார்.

ஆனால் அதில் பரிவர்த்தனை என்ன.. எவ்வளவு..? எதுவும் அதில் இல்லாது இருந்தது. பாஸ் புக் ஆரம்பித்த்தோடு அதை பீரோவில் போட்டு விட்டார் பார்த்திபன்.

காசோலையோ, பணமோ வங்கி கணக்கை எழுதி போட்டு விடுவார். வருமான வரி செலுத்தும் போது வங்கியில் ஆண்டு பரிவர்த்தனை எவ்வளவு என்று அறிய  ஒரு பிரண்ட் அவுட் கேட்டால் கொடுத்து விடுவார்கள்.

பார்த்திபன் அதை தான் செய்தார். ஒவ்வொரு முறையும் பாஸ்புக் எடுத்து  கொண்டு அதை என்ட்ரி போடும் அளவுக்கு பொறுமையும் இல்லை. அவருக்கு நேரமும் இல்லை.

அதனால் வங்கி கணக்கு ஆரம்பித்த போது  பதிவு செய்த தொகை மட்டுமே அதில் இவ்வளவு என்று காட்டியது. மற்றது எதுவும் இல்லை.

பார்த்திபன்  தனக்கு  நேரம் இல்லாததிற்க்கு, இதை எல்லாம் படித்த தன் பெண்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கலாம். ஆனால் ஒரு சில  வீட்டு ஆண்கள். வீட்டு பெண்களுக்கு எதுவும் தெரியாது.

தான் செய்வது தான் சரி. பெண்களுக்கு என்ன தெரியும் என்று அவர்களாகவே நினைத்து கொண்டு  முக்கியமான விசயம் என்றால் வீட்டு பெண்களிடம் கேட்பது இல்லை.

கேட்பது என்ன குறைந்த பட்சம்  தான் செய்வதை. செய்ததை கூட சொல்லாது விட்டு விடுகின்றனர். பின் பிரச்சனை என்று வரும் போது அது வீட்டு  பெண்கள் வரை எதிரொலிக்கிறது. அது தான் இப்போது பார்த்திபன் வீட்டிலும் நடந்தது எனலாம்.

சொக்கலிங்கம் வெறுத்து போய் விட்டார். மாப்பிள்ளை மாப்பிள்ளை என்ற அழைத்தவர் வாயில். “ இந்த மனுஷன் என்ன எல்லாம் செய்து வைத்து இருக்கிறார்.” என்று சொன்னவர்.

மகள் பேத்திகளை அழைத்து கொண்டு வங்கிக்கு சென்றவர் மூன்று பாஸ் புக்கிலும்  என்ட்ரி போட்டு பார்த்தவர் அதில்  கடைசியாக போட்ட தொகையை பார்த்து சொக்கலிங்கத்திற்க்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது.

அதுவும் போட்ட தேதியை பார்த்தவர் எப்படி என்று யோசித்தவருக்கு ஏதோ புரிவது போல். மகிழ்ந்து போய் விட்டார். அந்த மகிழ்ச்சியில் இருக்கும் இடமும் , தன் வயதையும் மறந்து  போனவராக தன் பேத்திகளை கட்டி அணைத்தவர்.

“ உங்க அண்ணன் எப்போவும் உங்களை கை விட மாட்டான் மா. எனக்கு  நம்பிக்கை இருக்கு. “ என்று சந்தோஷ மிகுதியில் இருந்தவரின் கையில் இருந்த பாஸ்புக்கை வாங்கி பார்த்த ஷைலஜா யார் போட்டு இருக்கிறார்கள் என்று பார்த்ததில்.

மூன்று பேரின்  பெயரில் ஒவ்வொருவர் ஒரு தொகை மூன்று பேருக்கும் போட்டு இருப்பதை பார்த்து.

“ இது அண்ணன் தான் போட்டு இருக்கிறார் என்று உங்களுக்கு என்ன நிச்சயம்.?” என்று  கேட்டாள்.

அதற்க்கு சொக்கலிங்கம். “ அவன் இல்லாது வேறு  யார் போடுவாங்கலாம்…?” என்று தாத்தா சொன்னதும் வாஸ்த்தவம்  தான். ஏன் என்றால் அவர்கள் அடுத்து அடுத்து வங்கிக்கு சென்று பார்த்ததில் அவ்வளவு தொகை மூன்று பேரின் பேரில் அறிமுகம் இல்லாத  பெயரில் இருந்து வந்து இருக்கிறது. 

அதை பார்த்த கெளசல்யா வங்கி என்று கூட பாராது அமர்ந்து விட்டவர். தன் வயிற்றில் அடித்து கொண்டு.

“ நான் பாவீ. நான் பாவீ. ஒரு அம்மாவா நான் அவனுக்கு ஒன்னுமே இது வரை செய்த்து கிடையாது. ஆனால் அவன் சொல்லாது அனைத்தும் செய்து முடித்து விட்டான்.” என்று சொல்லி கதறி கொண்டு அழுதாள்.

அவரை தேற்றி வீட்டுக்கு அழைத்து   வந்து சேர்த்த பெண்களுக்கு அப்போது தான் மன பாரம் முழுவதும் அகன்று மனது லேசாக உணர்ந்தனர்.

இது வரை மூச்சு  காற்றுக்கு கூட பஞ்சம் என்பது போல் தான் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. மனது பாராம் கூடி உண்ணவும்  முடியாது.  உறங்கவும் முடியாது அல்லல் பட்டு போய் இருந்தனர்.

இனி கவலை இல்லை என்ற மகிழ்ச்சியில் அறைக்கு வந்த ஷைலஜா சென்னை மகேந்திரேன் மைனான்ஸ் கூகுலில் போட்டு பார்த்து அதன்  தொலை பேசி எண்ணை கண்டறிந்து அழைப்பு விடுத்தவள் ஆவளோடு அன்ணனின் குரலை கேட்க காத்துக் கொண்டு இருந்தாள்.

அந்த பக்கம் அழைப்பை ஏற்றதும் .. “  ஹலோ.” என்று  கேட்ட ஆண் குரலில்.   ஷைலஜா.. “ அண்ணா.” என்று பாசத்துடன் அழைத்தாள்.

அழைப்பை ஏற்ற சூர்யாவோ. “ நமக்கு ஏற்கனவே  இரண்டு தங்கை ஊரில் இருக்காங்க. இது யாரு மூன்றாவதாக.?” என்ற  கோபத்தில்.

“ தோ பாரும்மா யாரா இருந்தாலும் என்னை  வாடா போடா என்று கூட கூப்பிடுங்க.  அதை பற்றி கவலை பட மாட்டான் இந்த சூர்யா. ஆனால் அண்ணன் என்று கூப்பிட்டா அவ்வளவு தான் பார்த்துக்கோ,” என்ற அதட்டலில் ஷைலஜா..

“ நானும் உங்களை  அண்ணன் என்று கூப்பிடும் தலை எழுத்து எல்லாம் எனக்கு இல்லை.  ஷ்யாம் அண்ணா எனக்கு இருக்கும் போது கண்டவங்களை நான் ஏன் அண்ணன் என்று கூப்பிட போறேன்.” என்று இவளும் கெத்தாக பேசினாள்.

அவள் சொன்ன ஷ்யாம் அண்ணனின் ஒரு விசில் சத்தம் சூர்யாவின் வாயில் இருந்து தன்னால் எழுந்தது.

Advertisement