Advertisement

அப்புறம் என்ன மகள் வாழ்க்கையா..? பேரனா ..? எனும் பாக்கும் போது மகள் தான் தெரிஞ்சது போல.. அந்த குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் போது தான் கெளசல்யாவுக்கும், பார்த்திபனுக்கு கல்யாணம் நடந்தது. அந்த பைய்யன அவன்  தாத்தா பாட்டி கிட்ட விட்டு விட்டு.. “ என்று முழுகதையும் அந்த  பெரியவர் சொன்னதை கேட்டதும்..

இவ்வளவு நேரமும் பெரிய வீட்டு விவகாரம் நமக்கு எதுக்கு..?  என்று பயந்து போய் கேட்டுக் கொண்டு இருந்தவர்..  அந்த பெரியவர்  முழு விவரமும் சொன்னதை கேட்டதும்..

“ என்ன இது அநியாயமா இருக்கு பெரியப்பா…?  பார்த்திபன் மகளை  கெளசல்யா அவங்க   தன் மகள் போல் வளர்க்கனுமா… அப்படி தான் வளர்த்து இருக்காங்க..

இப்போ நீங்க சொல்லி தான் எனக்கு முழு விவரமே தெரியுது.. நான் இது வரை அந்த இரண்டு பொண்ணுங்களும் அவங்களோடது தான்னு  நினச்சிட்டு இருந்தேன்.. 

ஆனா அவங்க மகனை பார்த்தா கூட நாள பின்ன பிரச்சனை ஆகும் என்று கண்ணுக்கு எட்டாத தூரத்தில் விலக்கி வெச்சி இருக்காங்க.. இது என்ன நியாயம் பெரியப்பா…?” என்று அவருக்கு மனது கேட்காது திரும்ப திரும்ப கேட்டார்..

அதுவும் அந்த பெரியவர் சொன்ன.. “  இந்த பைய்யனுக்கு இருக்கும் சொத்தே  எக்க  சக்கம். இவனோட அப்பாவும்  அந்த குடும்பத்துக்கு ஒரே மகன் தான்..  பாசம் காட்டி வளர்க்கனும்.. அவ்வளவு தான்.. அதுக்கு மனது இல்லை..”

பார்த்தவர்களுக்கு, கேட்டவர்களுக்கே மனது ஆறவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்களின் மனது… ஷ்யாம் திரும்பியும் பார்க்கவில்லை.. கெளசல்யாவையும் சரி.. அவர் அப்பா சொக்கலிங்கத்தையும் சரி..  அந்த சூழ்நிலையிலும் தன் மகளை விட்டு  ஷ்யாம் அருகில் ஓடி வந்த அந்த மூதாட்டி கெளசல்யாவின் அம்மா சரஸ்வதியையும் யாரோ போல் தான் பார்த்து வைத்தான்..

அனைத்து சடங்கும் முறைப்படி நடந்து முடிக்க.. பார்த்திபனின் பங்காளியின் மகன் கொல்லி வைக்க என்று பார்த்திபனை அந்த வேனில் ஏற்றியதும்..

கிருஷ்ணமூர்த்தியும் தனபாக்கியமும் தன் பேரன் அருகில் போய் நின்றுக் கொண்டனர்.. அவர்களை பார்த்த ஷ்யாம்..

“ என்ன போகலாமா..?” என்று இருவரையும் பார்த்து ஷ்யாம் கேட்டான்..

அதற்க்கு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை பார்த்த ஷ்யாம்.. அந்த வேனை  சுட்டிக் காட்டி…

“ நானும் அது பின் போகனுமா..?” என்று கேட்டான்..

தாங்கள்.. “ போகனும்..” என்று சொன்னால், கண்டிப்பாக ஷ்யாம் போவான் தான்..  அதில் எந்த வித சந்தேகமும்  அவர்களுக்கு கிடையாது.. ஆனால் ஏனோ அந்த பெரியவர்களுக்கு பேரனை இன்னும் மனது வாட செய்ய மனது இல்லாது ..

“ வேண்டாம் ஷ்யாம்..” என்றதும் ..

“ சரி வாங்க.. “ என்று சொல்லி அழைத்துக் கொண்டு போனவன் தங்கள் வீடு வரும் வரை ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த பெரியவர்களும் பேச முயலவில்லை..

அவர்களுக்கும் பழையது. புதியது என்ற நினைவில் மனது ஒரு நிலையில்  இல்லாது தள்ளாடி தான் போனது.. அதுவும் இந்த வயதில்.. 

அதே தான் ஷ்யாமும் வீட்டுக்கு வந்து தலை குளித்த பின் தன் அறைக்கு வந்த பின் நினைத்தான்..  போனவர் என்ன கொண்டு சென்றார் .. ஒன்றும் கிடையாது.. இதற்க்கா  இவ்வளவும்…

அதுவும் தான் இந்த வீட்டுக்கு வந்த போது ஐந்து வயது.. அது வரை அம்மா மடி மீதே உண்ணுவது முதல் உறங்குவது.. ஏன் பாடம் படிக்கும் போது கூட அவன் இருக்கையில் எல்லாம்   அமர மாட்டான்.. அம்மா மடி தான் அவனுக்கு வேண்டும்..

அப்பா அவன் நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த உறவு பார்த்தது கிடையாது… அவரின் பாசத்தை அனுபவித்ததும்  கிடையாது.. அதனால் அந்த உறவின் முக்கியம் அவன் அறியாதே ஐந்து வயது வரை வளர்ந்தவனை..

ஒரு நாள் எப்போவாவது வந்து செல்லும்   அப்பா வழி பாட்டி தாத்தா வீட்டில்  விட்டு விட்டு..

“ இனி நீ இங்கு தான் இருக்க வேண்டும்..” என்று சொன்னால், அவன் அதை எப்படி ஏற்றுக் கொள்வான்..

இதன் நடுவே இந்த  பாட்டியும், தாத்தாவோடு பட்டு புடவை உடுத்தி, தன்னை வேலையாட்களிடம் ஒப்படைத்து விட்டு எங்கேயோ சென்று வந்த அன்று ஷ்யாம் இன்னும் இன்னும் தான்  பயந்து போனான்..

ஒரு நாள் இரு நாள் கிடையாது.. தொடர்ந்து ஒரு மாதம் சரியான தூக்கம் இல்லாது.. சாப்பாடு இல்லாது அழுது அழுது காய்ச்சல் வந்து ஒரு வாரம் மருத்துவ மனையில்  இருந்து , அதன் பின் தான் வீடு வந்தது

கிருஷ்ண மூர்த்தி தன் அருகில்  அமர்ந்து சொன்ன அந்த  வார்த்தை இன்றும் அவன் நினைவில் நீங்காது இருக்கின்றது…

“ இனி நான் தான் உனக்கு அப்பா.. இதோ இவங்க தான் உன்  அம்மா..” என்று சொல்லி தனம்மாவின்  மடி மீது  தன்னை படுக்க வைத்தவர்..

“ இது தான் நிதர்சனம் ஷ்யாம்… இப்போ நான் சொன்னது உனக்கு புரியுதா தெரியல.. ஆனா புரிஞ்சிக்கனும்…” என்று சொன்னவரின் பேச்சில் ஷ்யாம் என்ன உணர்ந்தானோ.. அதற்க்கு அடுத்து அவன் தன் தாயை தேடவில்லை..

கடைசியாக தேடியது.. அவன் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த போது..  “ அம்மா கண்டிப்பா வந்துடுவாங்க.. நான் கொஞ்சம் படுத்து இருந்தா கூட.. அவங்க தாங்க மாட்டாங்க.. இப்போ கண்டிப்பா வந்துடுவாங்க.. வந்துடுவாங்க..” என்ற அந்த நம்பிக்கையில் தன் தாத்தா பாட்டியிடம் கூட வாய் திறந்து..

“அம்மா வேண்டும்..” என்று கேட்கவில்லை..

மருத்துவமனையில் அனுமதித்த ஐந்தாம் நாள் தான் தூங்குவதாக நினைத்து பாட்டி தாத்தாவிடம்.. சொன்ன…

“ ஏனுங்க கெளசல்யாவை   பார்த்திங்களா..? பேசுனிங்களா..?”  என்ற கேள்வியில் ஷ்யாமின் மனம் துள்ளி  குதித்தது..

அம்மா அம்மா என்று அவன் மனது அடித்து கொள்ளும் வேளயில் தாத்தா சொன்ன.. “ நான் நேரா அங்கேயே போனேன்  பாக்கியா…  கல்யாணம்  முடிந்து எங்கேயோ  போனவங்க இன்னைக்கு தான் வீடு வந்தாங்க போல..

நம்ம மருமகள்.. இனி அந்த வார்த்தை கூட சொல்ல கூடாது போல.. ஏன்னா அந்த பைய்யன் பேச்சு அப்படி தான் இருந்தது..

குழந்தை அம்மா அம்மா என்று ஏங்கிட்டு  அழுதுட்டே இருக்கான்.. இப்போ காய்ச்சல் வந்து ஆஸ்பிட்டல்ல படுத்து இருக்கான்..

கொஞ்சம் கெளசல்யாவை அனுபி வெச்சா நல்லா இருக்கும் என்று சொன்னேன்.. அதுக்கு அந்த  பைய்யன் நான் உங்கள பார்த்து இவள கட்டல.. நான் என்ன சொல்லனுமோ அத  எல்லாம் என் மாமனார் கிட்ட சொல்லிட்டேன்.. இனி இது போல் பேச்சு இங்கு எடுத்துட்டு வர வேண்டாம்..” என்று சொன்னதோடு..

“ என்னை பொருத்த வரை  அந்த உறவு இனி அவளோடு தொடர்பு இல்லாது இருப்பது தான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்..” என்று   அவர்  பக்கத்தில்    கெளசல்யா அந்த குழந்தையை மடி மீது உட்கார்ந்துட்டு இருப்பவளை பார்த்துட்டே என் கிட்ட சொன்னார்…

இன்னும் கூட ஒன்னு சொன்னாரே.. ஆ இப்போ வந்து பார்த்தா  ஆச்சா..  காய்ச்சல் தானே.. இப்போ  இவள் வந்து பார்த்துட்டு போனா..

 பின் நாம் அழுதா நமக்கு காய்ச்சல் வந்தா அம்மா வருவாங்க.. அந்த எண்ணம் தான் அவனுக்கு வரும்..  இப்படியே விடுவது தான் நல்லது.. அவன் மனதுக்கும் இது தான் நம் வீடு என்று அங்க உணர்வான்..” என்று சொல்லிட்டார்..

தன் கணவன் பேச பேச தனப்பாக்கியத்துக்கு அப்படி ஒரு கோபம்.. என்ன ஆள் அவன் என்று..

“ கெளசல்யா ஒன்னும் சொல்லலே..” என்று  தனபாக்கியம் ஆதங்கத்துடன் கேட்டார்..

“தன் மடி மீது உட்கார்ந்து இருந்த குழந்தையின் தலையை தடவி விட்டு குனிந்தது, குனிந்த படி தான் இருந்தா…” என்ற கிருஷ்ண மூர்த்தியின் பேச்சில்.. தனபாக்கியத்தின் கோபம் இப்போது  கணவன் மீது திரும்பியது..

“ நான் அப்பவே சொன்னேன்.. நம்ம மகன்  இறந்த ஒரு மாதத்திலேயே  நம்ம மருமகளையும். பேரனையும் அழச்சிக்கலாம் என்று..  நியாயவான் நீங்க  என்ன சொன்னிங்க…?

அந்த பெண் இந்த வயசுல.. காலம் முழுவதும் விதவையா நம்ம மருமகளாவே இருந்துடனுமா..? நம்ம மகளா இருந்தா இப்படி தான் நீ நினைப்பியான்னு..?

சரி  நானும் உங்க வழிக்கே வந்து.. நம்ம பேரனையாவது அழச்சிக்கலாம் என்று சொன்னதற்க்கும், என் பேரன் கிட்ட இருந்து கடவுள்   தான் அவன் அப்பாவை பரிச்சிக்கிட்டார்.. அம்மா கிட்ட இருந்து நாம  பிரிக்க வேண்டாம்.. என்று..  

நீங்க சொன்ன அந்த நியாயத்திற்க்காக, இருக்கும் ஒரே மகனையும்  பரி கொடுத்துட்டு , பேரனையும் அவங்க கிட்ட கொடுத்துட்டு என்னை நானே தேத்திக்கிட்டு இருந்தேன்..

ஆனா இப்போ பாருங்க.. இவங்க யாரும் என் பேரனுக்கு நியாயம் செய்யல. இப்போ என்ன சொல்றிங்க…?  இப்போ என்ன சொல்றிங்க…?” என்று மனைவி  கேட்கும் அனைத்தும் நியாயமானதாக இருந்ததால். கிருஷ்ண மூர்த்தியால் பதில் அளிக்க முடியவில்லை..

“ இதோ அப்போவே என் கிட்ட இருந்து இருந்தா, இவன்  இப்போ இப்படி கஷ்டப்பட தேவையில்ல தானே…?” என்று கேட்ட மனைவியை ஆறுதல்  படுத்தவே கிருஷ்ண மூர்த்திக்கு போதும் போதும் என்றாகி விட்டது..

அதிகமான கஷ்டம் தான் ஒரு மனிதனை பக்குவம் ஆக்கும் என்றால், ஷ்யாம் அந்த வயதிலேயே பக்குவப்பட்டு யோசித்து, இனி நான் இவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்ற முடிவோடு தான் ஷ்யாம் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தது..

கெட்ட்தில் ஒரு நல்லது என்பது போல்.. தனபாக்கியத்திற்க்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் சின்ன வயதிலேயே திருமணம் முடிந்து, அடுத்த வருடமே மகன்  மகேந்திரனை பெற்றெடுத்து விட்டார்கள்..

அதே போல் அவர்கள் ஒரே மகன்  மகேந்திரனுக்கும் சரியாக இருபத்தி ஐந்து வயதில் திருமணத்தை முடித்து விட, இதோ தனபாக்கியத்திற்க்கு, வயதி ஐம்பதும், கிருஷ்ணமூர்த்திக்கு ஐம்பத்தி மூன்றுமாக இருந்த்தால், ஒரளவுக்கு அவர்களால் சமாளித்துக் கொள்ள முடிந்தது..

கிருஷ்ணமூர்த்தி தொழிலிலும் அனைத்து பொறுப்பையும்  மொத்தமாக மகனிடம் கொடுத்து விடவில்லை.. அதனால் தொழிலும் அவர் வசம் இருந்தது..என்ன ஒன்று மகன் இறந்து  விட்டான்.. இனி இவர் கவனம் இதில் இருக்காது என்று பணத்தை வாங்கியவர்கள் மெத்தனமாக இருக்க, அவர் தன் பேரனுக்காக மீண்டு வந்து இன்னும் இன்னும் இது அனைத்தும் தன் பேரன் தலை எடுத்து வரும் வரை பாதுகாக்க வேண்டும் என்று..

அக்காடா என்று உட்காரும் வயதில், திரும்ப முதலில் இருந்து தன் பயணத்தை  தொடர்ந்தார்.. அதே  நிலை தான் தனபாக்கியத்திற்க்கும்…

Advertisement