காதலின் தீபம் ஒன்று..!! – 7
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
யாழினியை அவன் இசையில் இணைந்து பாடுவதற்காக தெரிவு செய்திருக்கிறோம் என்று பேராசிரியர் ஆரியனிடம் சொல்ல அவனோ “வேண்டாம் சார்.. என் மியூசிக்ல பாடுறதுக்கு காவியா அசைன் பண்ணிடுங்க.. அவங்க தான் சரியா இருப்பாங்க..” என்றான்..
“ஏன் மிஸ்டர் ஆர்யன்? ஆக்சுவலா யாழினிக்கு நல்ல மெலோடியஸ் வாய்ஸ்.. அவங்க பிச்சும் ரொம்ப ஹை பிச்சு.. இந்த மாதிரி லவ்வரை நினைச்சு ஒரு பொண்ணு பாடுற காதல் பாட்டை அவங்க வாய்ஸ்ல பாடுனா ரொம்ப எஃபெக்ட்டிவ்வா இருக்கும்னு உங்களுக்கு தோணலையா?”
“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார்.. சினிமால எப்பவுமே இப்படித்தான் நம்ம பாடல்களை கேட்டு இருக்கோம்.. ஒரு மெலோடி சாங்கை ஒரு மென்மையான அதே சமயம் ஷார்ப்பான அப்படியே உருக வைக்கிற குரல்ல ஹை பிச்ல தன்னோட காதலை நினைச்சு ஒரு பொண்ணு ஏக்க உணர்வை கொட்டி பாடும்போது அந்த பாட்டு நம்ம மனசை புழிஞ்சு எடுக்கும்.. அந்த இசை உயிரை தொடும்.. இல்லன்னு சொல்லல.. நானும் அதை அனுபவிச்சிருக்கேன்.. ஆனா நான் இந்த முறை அந்த கன்வென்ஷனல் ம்யூசிக் மாதிரி போடாம புதுசா ஒரு கிளாசிக்கல் டச்சோட இந்த பாட்டை ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.. அதனால தான் நான் காவியாவை என் மியூசிக்ல பாடுறதுக்கு அசைன் பண்ணனும்னு கேட்கிறேன்..”
“ஓகே தென்.. இது உங்களோட ப்ராஜெக்ட்.. உங்களோட டெசிஷன்.. உங்களுக்கு காவியா அசைன் பண்ணிட்டோம்..’ சொல்லிவிட்டு அவர் வேறு ப்ரணவ் என்ற மாணவனின் இசையில் யாழினியை பாட வைப்பதாக அவனிடம் சொல்ல அவனோ மகிழ்ச்சியில் வானத்தில் பறக்காத குறையாக துள்ளிக் குதித்தான்..
“சார்.. நெஜமாத்தான் சொல்றீங்களா சார்..? யாழினி என் மியூசிக்ல பாட வெக்கறதுக்கு அசைன் பண்றீங்களா சார்? நான் வேணா சொல்றேன் சார்.. எழுதி வச்சுக்கோங்க.. இந்த முறை ப்ராஜெக்ட்ல நான்தான் சார் டாப்ல வருவேன்.. யாழினி பாடுனா நிச்சயமா என் பாட்டு இந்த காலேஜ்ல சூப்பர் ஹிட் ஆயிடும் சார்.. ஆனா எனக்கு ஏதாவது ஒரு லவ் டூயட் சாங் வந்து இருக்கலாம்.. சார்.. யாழினியோட நானே டூயட் பாடி இருப்பேன்.. யாழினியும் பிச்சு உதறி இருப்பாங்க.. ஆனா இதுவும் லவ் சாங்க் தானே..? லவ்வரை நெனைச்சு உருகி உருகி பாடற சாங் தான்.. இதையும் யாழினி செம்மையா பாடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சார்.. எப்படி இருந்தாலும் எனக்கு தான் சார் இந்த வாட்டி ஃபர்ஸ்ட் ப்ளேஸ்..”
“பிரணவ்.. நீ சொல்ற மாதிரி யாழினி சூப்பரா பாடுவாங்கன்ற மாதிரி ஆரியனும் இதுவரைக்கும் போட்ட மியூசிக் எல்லாமே எக்ஸலன்ட்டா இருந்திருக்கு.. அதனால சொல்ல முடியாது.. ஆரியன் போடுற மியூசிக் யாழினியோட பாட்டை விடவும் எஃபெக்டிவ்வா இருக்கலாம்.. ஒரு பாட்டு மனசை தொடறதுக்கு வெறும் அதுல இருக்கிற குரல்கள் மட்டும் காரணம் இல்லை.. அதுல இருக்கிற இசை அதுல பெரும் பங்கு வகிக்கிறது.. அந்த விதத்தில பார்த்தா பிரணவ் நீ கூட ஆரியன் கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.. அவன் ம்யூசிக்ல சின்ன சின்ன ந்யூயன்ஸஸ் எல்லாம் அவ்வளவு நுணுக்கமா இருக்கும்.. சோ பாக்கலாம்.. இங்கே இருக்கிற எல்லாரோட ஹார்ட்சையும் யாழினியோட வாய்ஸ் வின் பண்ணுதா.. இல்ல ஆர்யனோட மியூசிக் வின் பண்ணுதான்னு..”
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க..? அப்போ நான் நல்லா மியூசிக் பண்ணலையா?”
பிரணவ் கேட்க “இல்ல பிரணவ்.. நான் அப்படி சொல்ல வரல.. ம்ம்.. நீ இப்படி கேள்வி கேட்டா நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்.. யாழினி நல்லா பாடுவாங்க இல்லன்னு சொல்லல.. அப்படின்னா காவியா நல்லா பாட மாட்டாங்கன்னு அர்த்தமா?”
“அய்யய்யோ.. இல்ல சார்.. என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.. காவியாவும் ரொம்ப நல்லா பாடுவாங்க.. அவங்களுக்கு கொஞ்சம் பேஸ் வாய்ஸ்.. அவங்க கர்நாடிக் மியூசிக் பாடும்போது அதை யாருமே பீட் பண்ண முடியாத அளவுக்கு செமையா பாடுவாங்க.. அந்த அழுத்தம்.. அந்த ராகங்களோட ஆலாபனை எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கும்.. ஆனாலும் மனசை தொடற வாய்ஸ்னா அது யாழினியோட வாய்ஸ் தான்னு சொல்ல வந்தேன்.. அவ்வளவுதான்..”
“ம்ம்.. ரொம்ப கரெக்ட்.. அதேபோல தான் உன்னோட மியூசிக் நல்லா இருக்கு.. ஆனா மனசை தொடற மியூசிக்னு பாத்தா அது ஆரியனோடது தான்.. பார்க்கலாம்.. யாரோட இசை.. யாரோட குரல்.. மனசோட ஆழத்தில போய் எல்லாருடைய உணர்வுகளையும் தொட்டு உயிரையும் தீண்டுதுன்னு..”
பிரணவின் சந்தோஷத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் “கனவு கூட காணாத பிரணவ்.. நிச்சயமா நீ போட்ட மியூசிக்கை விட என் மியூசிக் தான் நல்லா இருக்கும்.. பார்க்கலாம்..” மனதிற்குள் எண்ணிக்கொண்டவன் அந்த இசை பயிற்சி அறையில் இருந்த ஒரு வயலினை எடுத்து மெதுவாக ஏதோ பாடலை வாசிக்க தொடங்கினான்..
அங்கே இருந்த அனைவரும் அந்த இசையில் மெய் மறந்து தான் போனார்கள்.. அவன் கையில் அந்த வயலின் அன்னைக்கு கட்டுப்பட்ட குழந்தையாய் அடங்கி கிடக்க அவனும் உயிர் உருக்கும் இசையை அதிலிருந்து வெளிக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.. மனம் உருகிப் போனது அங்கிருந்த அனைவருக்கும் அந்த இசையை கேட்டு..
அதன் பிறகு அந்த பேராசிரியர் யாழினி காவியா வகுப்புக்கு செல்ல அங்கே பெண்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து ஆளுக்கு ஒரு பாடல் பாடி அதிலிருந்த ஸ்வரங்களையும் ராகங்களையும் கண்டுபிடித்து அதையும் இசைத்துக்கொண்டிருந்தார்கள்..
அங்கு வந்த பேராசிரியர் “இன்ட்ரஸ்டிங்.. பரவாயில்லையே.. கிளாஸ் எடுக்காதப்ப கூட இந்த மாதிரி ட்ரைனிங் எல்லாம் உங்களுக்குள்ள பண்ணிக்கிறிங்களே.. நல்ல விஷயம் தான்.. இன்னொரு டென் மினிட்ஸ்ல என்ன விஷயம் உங்க கிட்ட சொல்ல வந்தேனோ அதை சொல்லிடறேன்.. அப்பறம் நீங்க உங்க பாட்டு கச்சேரியை கண்டினியூ பண்ணலாம்..”
“ஆக்சுவலி இது ஒரு மியூசிக் டைரக்ஷன் பண்றதுக்கான கான்டஸ்ட் தான்.. இதுல பேச்சிலர் ஆஃப் மியூசிக் பண்ற டீம் மியூசிக் டைரக்ட் பண்ண போறாங்க.. ஆனா அவங்க போடுற மியூசிக்கு வோகல் சப்போர்ட் இன்ஸ்ட்ருமென்ட் சப்போர்ட் எல்லாம் அந்தந்த டிபார்ட்மெண்ட்ல இருக்கற ஸ்டூடன்ட்ஸை தான் பண்ண சொல்ல போறோம்.. ஸோ.. அவங்க ம்யூசிக்குக்கான ஸிங்கர்ஸை இந்த டிபார்ட்மெண்ட்ல இருந்துதான் அந்த மியூசிக் டைரக்டர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒருத்தர்னு அசைன் பண்ண போறோம்.. எந்த மியூசிக் டைரக்டருக்கு யாரு வாய்ஸா இருக்க போறீங்கன்ற லிஸ்ட் எங்க கிட்ட இருக்கு.. அந்த ஸ்டுடன்ட்ஸ் அவங்க சாய்ஸை கொடுத்துட்டாங்க.. சோ நாங்க எந்த மியூசிக் டைரக்டர்க்கு உங்களை அசைன் பண்ணி இருக்கோமா அவங்க பாட்டுக்கு அவங்களே உங்களை ட்ரெயின் பண்ணுவாங்க.. அடுத்தவன் வீக் என்ட்ல பாப்புலர் மியூசிக் டைரக்டர் ஜட்ஜா கூப்பிட்டு ஒரு கான்டஸ்ட் நடத்துவோம்.. அதுல வின்னர்ஸ்க்கு அவார்ட்ஸ் உண்டு.. அதே சமயம் இங்க இருக்குற ஸிங்கர்ஸா அப்புறம் இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட்ஸ் எல்லாருக்குமே சினிமால பெர்ஃபார்ம் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்கலாம்.. சோ.. பிளே பேக் சிங்கிங் வாய்ப்பு கிடைக்கிற மாதிரி ஒரு நல்ல சான்ஸ்.. உங்களோட மேக்ஸிமம் எஃபர்ட்டு போட்டு நல்லா பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.. உங்க எல்லாரையும் எந்தெந்த ஃப்யூச்சர் மியூசிக் டைரக்டர்ஸோட அசைன் பண்ணி இருக்காங்கன்னு இன்னைக்கு ஈவினிங் ஆடிட்டோரியம்ல அனௌன்ஸ் பண்ணுவோம்.. நீங்க எல்லாருமே ஈவினிங் ஷார்ப்பா த்ரீ ஓ க்ளாக் அங்க அசம்பில் ஆகணும்.. இப்போ நீங்க உங்க சிங்கிங் பிராக்டிஸை கண்டினியூ பண்ணலாம்..”
அறிவிப்பை கொடுத்துவிட்டு அவர் கிளம்பி விட்டார்..
யாழினி மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.. நிச்சயம் தன்னை தான் மகிழன் அவன் இசையில் பாடுவதற்கு தேர்வு செய்து இருப்பான் என்று உள்ளுக்குள் நம்பிக்கையோடு எண்ணி கொண்டவள் அந்த நினைப்பிலேயே இன்பமாக திளைத்திருந்தாள்..
அவன் ரயிலில் வந்தபோது அவளின் பாடலைக் கேட்டு பாராட்டி கூறிய வார்த்தைகள் அவளுக்கு இன்னும் செவிகளில் ரீங்கரித்துக் கொண்டே இருந்தன.. அதனாலேயே அவன் நிச்சயம் தன்னை தான் தேர்ந்தெடுத்து இருப்பான் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாள் அவள்..
ரயிலில் மட்டுமின்றி கல்லூரி வந்த பிறகு கூட நிறைய நாட்கள் அவளை பாட சொல்லி கேட்டு இருக்கிறான்.. அவன் அதை கேட்பது என்றால் செவிகளால் மட்டும் இல்லாமல் பாடல் இசைக்கும் போது மெய் மறந்து போய் பேசக்கூட தோன்றாமல் கண்கள் மூடி அவளின் இசை உலகத்திலேயே லயித்து இருந்திருக்கிறான்..
காவியாவின் பாடலையும் அவன் விரும்பி கேட்பான் என்றாலும் யாழினியின் குரல் இசைக்கும் போது அவனிடமிருந்து வரும் எதிர் வினைகளையும் அவன் முகத்தில் தோன்றும் பாவனைகளையும் அவன் உடல் மொழியையும் பார்ப்பவர்களுக்கு அவன் மொத்தமாக வேறு உலகத்தில் சஞ்சரிப்பது போலவே தோன்றும்.. அந்த அளவுக்கு அவளுடைய குரலின் பைத்தியமாகி போனான் அவன்.. கிடைக்கும் நேரம் எல்லாம் அவளை பாட சொல்லி தான் கேட்டுக் கொண்டிருப்பான்..
இதனாலேயே அங்கு அவன் செய்திருக்கும் வேலை அறியாமல் தன்னைத்தான் அவன் தேர்ந்தெடுத்து இருப்பான் என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு அந்த சிந்தனையிலேயே ஒரு மாதிரி பறக்கும் நிலைக்குப் போய் இருந்தாள் பாவை அவள்..
அவன் இசையில் பாடுவது அவளுக்கு மகிழ்வை கொடுத்திருந்தது என்றால் அதை விடவும் அவன் இசையில் பாடும் காரணம் கொண்டு அவனோடு நிறைய நேரம் செலவிடலாமே என்ற எண்ணமும் அவளை உள்ளுக்குள் ஆனந்த கூத்தாட வைத்திருந்தது..
மாலை அனைவரும் அந்த கல்லூரியின் கலையரங்கத்தில் கூடியிருந்தார்கள்..
மூன்று நண்பர்களும் ஒருவரை ஒருவரை பார்த்தவுடன் முகம் மலர்ந்து ஒன்றாகவே அமர்ந்து கொண்டார்கள்..
அன்று வெள்ளை நிறத்திலீ வளைவாய் அலைய அலையாய் வெளிர் நீல கோடுகள் போட்ட ஒரு கேஷுவல் சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து ரொம்பவும் அமர்த்தலாக அமர்ந்திருந்தவனில் இருந்து கண்கள் அகலவே இல்லை யாழினிக்கு..
அவனை கண்ட காவியாவும் அதே நிலையில் தான் இருந்தாள் என்றாலும் அவ்வப்போது அவள் மற்ற ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.. யாழினி அன்று வெளிர் ஊதா நிறத்தில் சுடிதார் அதற்கு மேல் அடர் ஊதா நிறத்தில் துப்பட்டாவும் அதே நேரத்தில் சல்வார் அணிந்து கொண்டு அந்த எளிமையான உடையிலேயே தேவதையாய் மிளிர்ந்தாள்..
பிரணவ் அவளையே விழிகளில் பெருமிதத்தோடு பார்த்து கொண்டு இருந்தான்.. காவியா எப்போதும் போல ஒரு பிளாக் ஜீன்ஸ் வெள்ளை டீ சர்ட் அணிந்து ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரோடும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்..
மூவரும் பககம் பக்கமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் காவியா மட்டும் அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரோடும் தன்னிடத்தில் இருந்தே பேசிக் கொண்டிருந்தாள்.. ஆரியனும் யாழினியும் அவளின் அரட்டைக் கச்சேரியையும் அந்த அரங்கமே அதிரும் வண்ணம் அவள் கத்தி கத்தி பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்து தலையை ஆட்டி அவளை திருத்தவே முடியாது என்ற பாவனையில் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
அவள் துருதுருவென எல்லோரிடமும் கண்களை உருட்டி பேசுவதை பார்த்து இதழுக்குள் ஒரு சிரிப்புடனே ரசித்துக் கொண்டிருந்தான் ஆரியன்..
அப்போது உள்ளே வந்த பேராசிரியர் சற்று கண்டிப்பான குரலில் “காவியா.. உங்க பர்மிஷன் இருந்ததுனா ப்ரோக்ராம் ஆரம்பிக்கலாமா? பேசி முடிச்சிட்டிங்களா மேடம்?” என்று கேட்ட பிறகுதான் வாயை மூடினாள் அவள்..
அவள் தலையை சொரிந்து கொண்டு “சாரி சார்.. நீங்க கண்டினியூ பண்ணுங்க..” என்று சொல்லவும் களுக்கென வாயை மூடி சிரித்தாள் யாழினி.. காவியா அவளை முறைக்க பேராசிரியரோ “ரொம்ப தேங்க்ஸ் மா.. உங்க தாராள மனசுக்கு..” என்று சொல்லி மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்…
அவள் அசடு வழிவதை கண்ட அவளுடைய மற்ற இரு நண்பர்களும் வாயை மூடி அமைதியாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்..
அதையெல்லாம் கண்டு கொள்பவளா காவியா?
அதன் பிறகு ஒவ்வொரு இசையமைக்கும் மாணவனுக்கும் அவரவர் பாடலை பாடப் போகும் பாடகர்களும் வாத்தியங்களை வாசிக்க போகும் மாணவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது..
அப்போது ஆரியனின் பெயரை சொன்ன மறுநொடி அவனோடு பாடுவதற்கு தன் பெயரைத்தான் அறிவிப்பார்கள் என்று ஆவலோடு பார்த்து இருந்த யாழினி அவர்கள் காவியாவின் பெயரை சொன்னதும் நம்பமுடியாமல் உடைந்து போனாள் அவள்..
ஆரியன் பக்கம் அவள் திரும்பிப் பார்க்க அவனோ எழுந்து சென்று மேடையில் நின்று பேராசிரியரிடம் “தேங்க்யூ சார்.. நான் கேட்ட மாதிரி காவியாவை சிங்கரா அசைன் பண்ணதுக்கு..” எனவும் அது இன்னுமே யாழினியின் மனதின் ரணத்தை குத்தி கிளறியது..
அவள் கண்ணில் நீர் தளும்பி விட அதை அடுத்தவர்க்கு தெரியாமல் மறைத்து உள்ளே இழுத்து கொள்ள படாத பாடுபட்டாள் பெண் அவள்..
காவியா எழுந்து சென்று ஆரியன் பக்கத்தில் நின்று “தேங்க்யூ எனக்கு ஆர்யன் மியூசிக்ல பாடறதுக்கு சான்ஸ் கொடுத்ததுக்கு.. நிச்சயமா என்னோட மேக்ஸிமம் கொடுக்கிறேன்..” என்றவளின் தோளில் கை வைத்து “நானும் கான்ஃபிடன்ட்டா தான் இருக்கேன்.. நீ நிச்சயமா நல்லா பாடுவே..” என்ற கட்டை விரலை உயர்த்தி காட்டி அவளை உற்சாகப்படுத்தினான் ஆரியன்..
இங்கே யாழினியோ எதிலுமே மனம் போகாமல் அப்படியே ஏதோ கடமையே என்று அமர்ந்திருந்தாள் அந்த அரங்கில்.. அடுத்ததாய் பிரணவின் இசையில் யாழினி பாடுவாள் என்று அறிவிப்பாளர் அறிவிக்க மேடையிலேயே துள்ளி குதித்துக் கொண்டிருந்தான் அவன்..
“தேங்க்யூ சோ மச் சார்.. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை..” என்றவன் “யாழினி.. ப்ளீஸ் கம் ஆன் டு தி ஸ்டேஜ்..” என்று அவளையும் மேடைக்கு அழைத்தான்.. யாழினி மெதுவாக எழுந்து மேடைக்கு சென்று நின்று கொண்டாள்.. அவள் நடையில் பார்வையில் உற்சாகமோ உயிரோ இல்லை..
“யாழினி நீங்க பாடுனா நிச்சயமா என் பாட்டு தான் ஹிட்டாகும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. “
ப்ரணவ் சொல்ல உயிரே இல்லாமல் ஒரு சிரிப்பை உதிர்த்தவள் “நிச்சயமா பிரணவ்.. நல்லா பண்ணிடலாம்..” என்றாள் சுருதி குறைந்த குரலில் அவள்..
எல்லாம் முடிந்து விட அவரவர் வகுப்புக்கு பேராசிரியர் அவர்களை செல்ல சொல்லவும் அதே நேரம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து “ஆர்யன்.. யாழினி.. ஆரியன்.. யாழினி..” என்று கத்திக் கொண்டிருந்தார்கள்..
பேராசிரியர் மெல்ல சிரித்து “ஓகே.. எனக்கு புரியுது.. நீங்க எல்லாரும் ஆரியன் மியூசிக்ல யாழினி பாடணும்னு நினைக்கிறீங்க.. ஆனா ஆரியன் அவர் மியூசிக் போட்ட பாட்டு பாட காவியா தான் வேணும்னு எங்க கிட்ட கேட்டார்.. அவங்க குரல் தான் அதுக்கு மேட்ச் ஆகும்னு சொன்னாரு.. அதனாலதான் காவியாவை அவர் இசையில் பாட அசைன் பண்ணினோம்.. ஆனா இப்போ உங்க காதுகளுக்கு விருந்தா ஆரியன் கீபோர்டு வாசிக்கட்டும்.. யாழினி ஏதாவது ஒரு சினிமா பாடலை பாடட்டும்.. ஏன்னா எனக்கும் இந்த காம்பினேஷன்ல பாட்டு கேட்கணும்னு ஆசையா இருக்கு.. சோ.. யாழினி.. ஆரியன்.. குட் யூ ப்ளீஸ் கம் டு தி ஸ்டேஜ்?” என்று அழைத்தார்..
மேடைக்கு வந்தவுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு அதன் பிறகு என்ன பாடலை பாட வேண்டும் என்று ஆரியன் அவள் காதில் சொல்ல அந்த பாடலுக்கான இசையை அவன் கீ போர்டில் இசைக்க ஆரம்பிக்க அவளும் பாடலானாள்..
என்னை என்ன செய்தாய் வேங்குழலே..
என்னை என்ன செய்தாய் வேங்குழலே..
என்னை என்ன செய்தாய் வேங்குழலே..
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே..
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…..
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இளகிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏ…ஏ…..
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
ஏ……ஏ……ஏ… ஏ… ஏ… ஏ…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்……
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்..
என்னுள் எனைக் கண்டு
நல் இன்பம் படைத்து நின்றேன்..
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்..
என்னுள் எனைக் கண்டு
நல் இன்பம் படைத்து நின்றேன்..
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்..
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்..
யாரோ… அவன் யாரோ…
யாரோ… அவன் யாரோ…
யமு
னா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்..
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
தொடரும்..