காதலின் தீபம் ஒன்று..!! – 6
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
யாழினி குளிரில் நடுக்குவதை பார்த்து மகிழன் தன் ஓவர் கோட்டை கழட்டி அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்குவதற்கு சிறிது தயங்கவும் அவன் முகம் மொத்தமாக வாடி போனது..
அதைக் கண்ட காவியா அவனிடம் “இல்ல.. அவ ஜெனரலா ரொம்ப பாய்ஸ் கூட பழக மாட்டா.. ஸ்கூல்ல இருந்தே அவ அப்படித்தான்.. ரொம்ப கூச்சப்படுவா.. நீங்க அதை போட்டுக்கோங்க.. நம்ம இங்க இந்த கடையில் இருந்து ஒரு ஸ்வெட்டர் வாங்கிடலாம் அவளுக்கு..”
அவள் சொன்னதை கேட்ட மகிழன் “மத்த பையன்க கூட பேச மாட்டாங்கன்னா அது வேற.. நான் தான் இப்ப உங்களோட ஃப்ரென்ட் ஆயிட்டேன் இல்ல..? என்கிட்ட என்ன தயக்கம்? இப்ப நீங்க இதை வாங்கி போட்டுக்கலைன்னா என்னை ஃப்ரெண்டா நினைக்கல.. ஏதோ ஒரு ரோட் சைடு ரோமியோ மாதிரி நெனக்குறீங்கன்னு தான் எனக்கு தோணும்.. அப்படித்தான் நீங்க நினைக்கிறீங்கனா நம்ம இப்படியே திரும்பி காலேஜ்க்கு போயிடலாம்.. நான் அப்புறமா உங்களுக்கு அந்த மஸ்கிட்டோ மிஷின் வாங்கிட்டு வரேன்.. செக்யூரிட்டி மூலமா உங்க ஹாஸ்டலுக்கு அதை கொடுத்து அனுப்பிக்கிறேன்..”
அவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அடுத்த நொடியே அவன் கையில் இருந்து அந்த ஜாக்கெட்டை வாங்கியவள் படபடவென அதை போட்டுக் கொண்டாள் வேகமாக..
அவனும் புன்னகைத்தபடி புருவத்தை உயர்த்தி இறக்கி காவியாவிடம் “இப்ப என்ன சொல்றீங்க? நான் யாழினியோட ஃப்ரெண்ட்.. நீங்க எப்படி யாழினிக்கு ஃப்ரெண்டோ அதே மாதிரி தான் இனிமே நானும்.. இனிமே உங்க கிட்ட எப்படி இருக்காங்களோ அப்படித்தான் என்கிட்டேயும் இருப்பாங்க.. என்ன யாழினி..? நான் சொல்றது கரெக்ட் தானே?”
காவியாவை கிண்டலாய் பார்த்தபடி அவன் வம்பாய் கேட்க யாழினி அவன் சொன்னது சரிதான் என்பது போல் மேலும் கீழுமாய் தலையாட்டினாள்…
காவியாவுக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது.. “உனக்கு உன்னோட சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்டா இருக்கேன் நான்.. நேத்து வந்த இவரு உனக்கு என் அளவுக்கு குளோஸ் ஃப்ரெண்டா? என்னடி.. அவர் வந்த உடனே என்னை மறந்துட்டியா?”
அவள் பேச்சில் யாழினி தனக்கு மட்டுமே நெருங்கிய தோழி என்ற தொனி கலந்திருக்க “ஏய்.. நான் அப்படி சொல்லலடி.. அவர் பாவம் இங்க ஃப்ரெண்ட்ஸே இல்லன்னு சொன்னதுனால தான்..”
“ஃப்ரெண்ட்ஸ் இல்லன்னு சொன்னா உன் ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ணிக்கோ.. அது எப்படி எனக்கு ஈக்குவலா அவரும் உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு நீ ஒத்துப்ப.. அவர் அப்படி சொல்லும்போது இல்ல.. காவியா தான் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் நீங்க வெறும் ஃப்ரெண்ட் தான்.. அப்படின்னு சொல்ல வேண்டாமா? பூம்பூம் மாடு மாதிரி அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுற.. என்னோட பேசாதடி நீ..” என்று வேக வேகமாக முன்னே நடந்தாள் காவியா..
யாழினி அவளின் பேச்சில் சிறிது கலங்கி போக அவளிடம் கண்ணை மூடி ஜாடையிலேயே அமைதியாக இருக்க சொல்லிவிட்டு வேக நடை எட்டுக்கள் போட் இரண்டே நொடியில் காவியாவின் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தான்..
“ஹலோ மிஸ்டர்.. நீங்க எதுக்கு என் பின்னாடி வரீங்க..? அதான் உங்க புது குளோஸ் ஃப்ரெண்டு இருக்கா இல்ல? போங்க.. அவ தனியா இருப்பா.. அவளோட நீங்க போய் பேசிக்கிட்டு கம்பெனி குடுங்க.. ” சொல்லிவிட்டு கோபமாய் போனவளை பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு..
இருந்தாலும் அப்போது சிரித்தால் அவள் இன்னும் பயங்கரமாய் கோபப்படுவாள் என்று புரிந்து சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவன் “ஆமாம்.. நீங்க எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க? சரி.. நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு நான் யாழினி அளவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் கிடையாதா? எப்ப மீட் பண்ணி இருக்கோம்கறது ஃப்ரெண்ட்ஷிப்க்கு முக்கியமே இல்ல.. ஆனா நமக்கு பிடிச்சிருந்தா அவங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகலாம்.. ஏன் உங்களுக்கு ரெண்டு பேர் க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்க கூடாதா? இப்ப நீங்க சொல்லுங்க.. நான் உங்களுக்கு கிளோஸ் ஃப்ரெண்டா இல்லையா?”
அவன் கேட்டவுடன் காவியாவால் இல்லை என்று மறுக்கவே முடியவில்லை.. “அது.. நீங்களும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டு தான்.. ஆனாலும்..”
அவள் இழுக்க.. “ம்ம்.. ஓகே.. ஐ அண்டர்ஸ்டாண்ட்.. நானும் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டு தான்.. ஆனா யாழினி அளவுக்கு க்ளோஸ் இல்லை.. அப்படித்தானே? அவங்களும் அப்படித்தான் சொல்ல நினைச்சிருப்பாங்க.. ஆனா அவங்க பேசறதுக்குள்ள நீங்க அவங்க மேல கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க.. பாவம்.. அவங்க முகம் எவ்வளவு வாடி போச்சு பாருங்க..”
அவன் சொன்னதைக் கேட்டு யாழினி பக்கம் திரும்பி பார்த்தவள் ஓடி வந்து அவளை அணைத்து “சாரி டி யாழி.. ஆனா நீ எனக்கு தான் முதல்ல ஃப்ரெண்ட்.. அப்புறம் தான் வேற யாரா இருந்தாலும் உனக்கு.. ஓகேவா..?” என்று கேட்க “அதில உனக்கு என்னடி டவுட்டு.. லூசு பொண்ணே..” என்று அவள் தலையில் அடித்து தானும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் யாழி..
“இது என்ன..? லவ்வர்ஸை விட மோசமா இருக்கீங்க ரெண்டு பேரும்.. சரி இல்லையே.. சரி.. இப்படியே போயிட்டு இருந்தா ஹோட்டல் காரன் கடையை இழுத்து மூடிருவான்.. வரிங்களா போலாம்..?”
அவன் சொல்லவும் இருவரும் விலகி “ஓவரா உங்க கண்ணுல பொறாமை தெரியுது? ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க.. நீங்க எவ்வளவுதான் க்ளோஸ் ஆனாலும் இப்ப நாங்க ரெண்டு பேரும் எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை எக்ஸ்பிரஸ் பண்ணிக்கிட்ட மாதிரி நடக்குறதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. அதனால கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்னு இப்படியே இருந்துருங்க..” அவன் பக்கத்தில் நடந்த படியே காவியா கண்ணை உருட்டி உருட்டி சொன்னாள்..
அவள் அப்படி சொன்னதை ரசித்தவன் “ரெண்டு பேர் கிட்டயும் நிச்சயமா இந்த அளவுக்கு க்ளோசாக முடியாது.. ஆனா ஒருத்தர் கிட்ட நிச்சயமா இப்ப ரெண்டு பேரும் இருந்த அதே அளவுக்கு.. இல்லை இல்லை அதைவிட அதிகமா க்ளோஸ் ஆயிடுவேன்.. அப்படி க்ளோஸ் ஆகறப்போ இதோ இப்ப இருக்கிற உங்க ஃப்ரெண்ட்ஷிப்பை விட அந்த லவ் தான் மேல இருக்கும்.. இது நிச்சயம் நடக்கும்.. எந்த ஃப்ரெண்ட்ஷிப்காகவும் என் லவ்வை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..” தன் மனதோடு பேசிக் கொண்டானவன்..
ஆனால் அவன் யாரை மனதில் நினைத்து சொன்னான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்..
ஒரு வழியாக பேசிக்கொண்டே அந்த உணவு விடுதிக்கு வந்து சேர்ந்து இருந்தார்கள் மூவரும்..
அவர்கள் இருவரையும் ஒரு மேஜைக்கருகில் அமர வைத்து விட்டு அவன் போய் மூவருக்கும் காஃபியாம் சமோசாவும் வாங்கி மறக்காமல் இரண்டு பேக்கட் குட் டே பிஸ்கட்டையும் வாங்கிக் கொண்டான்..
அவன் கேட்ட உணவுகளை தயார் செய்ய அவர்கள் சிறிது நேரம் எடுத்துக் கொண்ட வேளையில் அந்த பிஸ்கட்டை பாக்கெட்டுகளை கொண்டு வந்து ஒரு பேக்கட்டை காவியாவிடமும் இன்னொரு பேக்கட்டை யாழினியிடமும் கொடுத்தான்..
“எனக்காக ஞாபகமா குட் டே பிஸ்கட் வாங்கிட்டு வந்தீங்களா?”
காவியா கேட்க “ஆமா ..ஒருத்தர் பத்தி ஒரு தடவை சொல்லிட்டா அது எனக்கு மறக்கவே மறக்காது.. இனிமே எப்ப என்னோட நீங்க காஃபி டீ குடிக்க வந்தாலும் உங்களுக்கு ஒரு குட் டே பிஸ்கட் கிடைச்சுடும்..”
“சரி.. வாங்கினது தான் வாங்கினீங்க.. இப்பயாவது மூணு பிஸ்கட் பாக்கெட் வாங்க வேண்டியது தானே..? எதுக்கு ரெண்டு பாக்கெட் வாங்கினீங்க..?”
யாழினி யௌசனையோடு கேட்க “எதுக்கு மூணு பாக்கெட்? காவியாக்கு குட் டே பிஸ்கட் ரொம்ப பிடிக்கும்.. அவங்க ஃபுல்லா சாப்பிடட்டும்.. என்னோட பிஸ்கெட் ஷேர் பண்றதுக்கு தான் நீங்க இருக்கீங்களே.. உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிறேன்..” என்றான் அவன் சாதாரணமாய்..
அதைக் கேட்ட யாழினிக்கு மனதில் ஏதோ ஒரு சொல்ல முடியாத இனிப்பு நிரம்பியது..
இப்படி சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென “அப்புறம் ஒரு விஷயம்.. நம்ம தான் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம் இல்ல..? இன்னும் கூட இந்த வாங்க போங்கன்ற மரியாதை எதுக்கு? எனக்கு சரிப்பட்டு வரல.. உங்களுக்கு வேணும்னா நீங்க என்னை மரியாதை கொடுத்து வாங்க போங்கன்னு கூப்பிடுங்க.. நான் இனிமே உங்களுக்கு மரியாதை எல்லாம் கொடுக்க மாட்டேன்.. என்ன..? உங்க ரெண்டு பேருக்கும் ஓகே தானே..? நீ என்ன சொல்ற யாழினி..? உனக்கு எதுவும் பிராப்ளம் இருக்கா இதுல?”
கேட்டவுடன் “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. நீங்க அப்படியே கூப்பிடுங்க..” என்றாள் யாழினி..
“நீயும் என்னை அப்படியே கூப்பிட்டு பழகு.. எதுக்கு இந்த வாங்க போங்க எல்லாம்.. அது நல்லா இல்ல..”
“இல்ல.. எனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.. அவ்வளவு சீக்கிரம் அப்படி எல்லாம் பேச முடியாது..”
அவள் சொன்னதும் பெருமூச்சு விட்டவன் காவியா பக்கம் திரும்பி “நீங்க என்ன மேடம்..? உங்களுக்கு எப்படி வசதி..?” என்று கேட்க அவளோ பட்டென “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல டா.. நீ சொல்ற மாதிரி ஃப்ரெண்ட்ஸூங்களுக்குள்ள மரியாதை எல்லாம் கொடுக்க கூடாது.. எனக்கு ஓகே டா..” எனவும் “என்னது டாவா..? அடிப்பாவி.. ஒரே நிமிஷத்துல மொத்தமா எல்லா மரியாதையும் கவுத்துட்டியேடி..” அவன் அவளை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டே சொன்னான்..
“இல்லடா.. உன்னை மாதிரிதான் நானும்.. இதை பாரு இப்ப நீ சரளமா அடிப்பாவின்னு சொன்னே இல்ல..? அதே மாதிரி எனக்கும் சரளமா வாடா போடான்னு வந்துருச்சு.. ஏன்னா நம்ம தான் பட்டீஸ்(buddies) ஆயிட்டோம்ல? இனிமே இந்த வாங்க போங்கன்னு எல்லாம் கூப்பிட்டா அசிங்கமா இருக்கும்.. வாடா போடா வாடி போடி இது தான் பெஸ்ட்..” என்றவள் ஏற்கனவே இரண்டு பிஸ்கட்டுகளை கபளீகரம் செய்திருந்தாள் அந்த பாக்கெட்டில் இருந்து..
அதைப் பார்த்து சிரித்தவன் யாழினி பக்கம் திரும்பி “நீங்க என்ன மேடம்? அட்லீஸ்ட் நீ வா போனாவது கூப்பிடுவீங்களா? இல்ல.. இந்த நீங்க வாங்க போங்க மாறுறதுக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகுமா?”
அவன் கேட்டவுடன் கொஞ்சம் சங்கடமாய் நெளிந்தவள் “எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. எனக்கு தோணும்போது நான் கூப்பிடுறேனே..” என்றாள்..
“சரி.. ஓகே.. அது உன் இஷ்டம்..” என்றவன் அவன் செய்த ஆர்டர் தயாராகி விட அதை போய் வாங்கிக் கொண்டு வந்தான்..
ஒரு கையில் மூன்று தட்டுகள் சமோசா.. அதோடு இன்னொரு கையில் ஒரு தட்டில் மூன்று காபி கோப்பைகளை பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தவனின் முன்னே யாரோ வர அவரை இடித்து விடாமல் வருவதற்காக வளைந்து வரவும் அவன் காபி கோப்பை சுமந்திருந்த தட்டு லேசாக சாய்ந்து ஒரு கோப்பையில் இருந்த காபி முழுவதுமாக அந்த தட்டிலேயே கொட்டிவிட்டு இருந்தது..
அதை பார்த்து ஓடி வந்த யாழினி “அய்யோ.. ஏன் நீங்க தனியா எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தீங்க? எங்களை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல..?” என்று சொல்லி அவனிடமிருந்து அந்த சமோசா தட்டுகளை வாங்கிக் கொண்டாள்..
மீதம் இருந்த இரண்டு கோப்பை காப்பியை கீழே கொட்டாமல் எடுத்து வந்த மேஜையில் வைத்தான் அவன்.. சமோசாவை வைத்துவிட்டு “உங்க கையில எதுவும் காஃபி சடா கொட்டலைல்ல?” என்று அவசரமாக அவன் கையைப் பிடித்து ஆராய்ந்தாள் யாழினி..
“இல்ல இல்ல.. தட்டுக்குள்ள தான் கொட்டிச்சு.. நீ எதுக்கு இவ்வளவு கவலை படுற? முதல்ல சமோசாவை சாப்பிடு..
நீங்க ரெண்டு பேரும் காபி குடிங்க..”
“பரவால்ல.. ஒரு காபி தானே கொட்டிச்சு.. அதனால என்ன? நீ போய் இன்னொரு காபி ஆர்டர் பண்ணி வாங்கிக்கோயேன்டா..”
காவியா சொல்ல “இல்ல காபி தீர்ந்துடுச்சாம்.. டீ தான் இருக்குன்னு சொன்னாரு.. எனக்கு டீ பிடிக்காது..”
இருவருமே அவன் இன்னொரு காபி ஆர்டர் செய்வான் என்று எண்ணி காஃபியை குடிக்க ஆரம்பித்து இருந்தார்கள் அவ்வளவு நேரத்தில்..
“உங்களுக்கு காபி அவ்ளோ பிடிக்கும்னா இந்தாங்க என்னோட காஃபியை நீங்க எடுத்துக்கோங்க..” என்று யாழினி சொல்ல ஒரு நொடி அமைதியாய் இருந்தவன் பிறகு “இல்ல பரவால்ல.. வேண்டாம்.. நாளைக்கு வந்து குடிச்சுக்கிட்டா போச்சு.. இன்னைக்கு சமோசா மட்டும் சாப்பிட்டுக்கிறேன்” என்று சமோசாவை உண்டு கொண்டு இருந்தான் அவன்..
“க்ளோஸ் ஃப்ரெண்டுங்க வேண்டியது.. அப்புறம் ஷேர் பண்ணிக்க இவ்வளவு பிகு பண்ற?” காவியா கேட்க “சரி அவ்வளவு தானே.. உன்னோட காபி ல எனக்கு பாதி காபியை கொடு..” கேட்டு குடித்தான் அவன்..
பார்த்த யாழினிக்கோ மனதில் ஏதோ ஒரு சின்ன அடி வாங்கிய உணர்வு.. தன்னிடம் வேண்டாம் என்றவன் காவியாவிடம் வாங்கி பருகவும் அவன் தன்னை தள்ளி வைப்பது போல் தோன்றியது அவளுக்கு..
ஆனாலும் அது எதேச்சையாக நடந்திருக்கும் என்று நினைத்தவள் “நான் இதுல இருந்து கொஞ்சம் ஷேர் பண்றேன்.. ரெண்டு பேரும் பாதி பாதி தானே குடிச்சீங்க …” என்று யாழினி கேட்க அவனோ அவளை சில நொடிகள் ஏதோ யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவன் “இல்லை யாழி.. வேண்டாம்.. என்னை தப்பா நெனைக்காதே.. எனக்கு காவியா கொடுத்த காபியே போதும்.. நீ குடிச்சுரு உன் காபியை..”
அவன் அப்படி சொன்னதும் அவள் இன்னும் கலங்கி போனாள்.. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்தாள் பாவை..
அடுத்து மூவரும் கடைக்கு சென்று அவர்களுக்கு வாங்க வேண்டிய கொசு மருந்து அடங்கிய இயந்திரத்தை வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு மறுபடியும் வந்துவிட்டார்கள்..
அதன் பிறகு நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மூவர்க்கிடையேயும் இருந்த நட்பு வளர்ந்து கொண்டே போனது.. அவர்கள் இடையில் இருந்த நெருக்கம் அந்த கல்லூரியிலேயே பிரசித்தமாகி போனது..
அப்போதுதான் ஒரு நாள் அவன் வகுப்பில் அவனுடைய பேராசிரியர் ஒரு அறிவிப்பை செய்தார்..
உங்க எல்லாருக்கும் ஒரு மியூசிக் டைரக்ஷன் சான்ஸ் கிடைக்கப் போகுது.. ஒரு பாட்டுக்கு நீங்க மியூசிக் டைரக்ட் பண்ணனும்.. யாராவது ஒரு ஸ்டுடென்ட் உங்களோட சிங்கரா உங்களோட அசைன் பண்ணி விடுவோம்.. அவங்க பாடுறதுக்கு ட்ரெய்னிங் கொடுத்து அந்த பாட்டுக்கு மியூசிக்கும் நீங்க பண்ணனும்.. உங்களுக்கு டூடேஸ் டைம்.. அதுக்குள்ள உங்களுக்கு கொடுக்கிற லிரிக்ஸ்க்கு மியூசிக் போட்டு அதை பாட வேண்டியவங்க மேலா ஃபீமேலா சொல்லிருங்க.. ஓகேவா?”
அவர் கேட்க மாணவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டு நாட்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடல் வரிகளுக்கு ஏற்ப இசையமைக்க முயன்று கொண்டிருந்தார்கள்..
அடுத்த நாளே அந்த வரிகளுக்கு மெட்டமைத்துவிட்டு தன் பேராசிரியரிடம் “சார்.. நாம் மியூசிக் போட்டுட்டேன்.. நீங்க எனக்கு யாரை அசைன் பண்ணி இருக்கீங்கன்னு சொன்னா அடுத்ததா அவங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிடுவேன்..”
அவன் சொன்னதும் “உங்களுக்கு மேல் சிங்கர் வேணுமா இல்லை ஃபீமேல் சிங்கர் வேணுமா?” என்று கேட்டார் அவர்..
“எனக்கு கிடைச்ச பாட்டோட வரிகள் ஒரு பொண்ணு தன்னோட பாய் ஃப்ரெண்ட்டை பத்தி பாட்டு பாடுற மாதிரி.. அதுக்கு ஃபீமேல் சிங்கர் இருந்தா தான் நல்லா இருக்கும் சார்..”
“அப்போ கண்டிப்பா யாழினியை தான் உங்களுக்கு அசைன் பண்ணலாம்னு இருக்கோம்.. அவங்க ஓகேவா..?”
அவர் கேட்க “ப்ளீஸ் சார்.. நீங்க காவியாவை இந்த பாட்டு பாடுறதுக்கு எனக்கு அசைன் பண்ணுங்க.. யாழினி வேண்டாம்..” தெளிவாக கேட்டான் அவன்..
அவளை அவளை
ரசித்து கிடந்து விழிகள்
வேறாறையும் பாா்க்காதே..
அவளை அவளை பழகி
தொலைத்த இதயம்
வேறாறையும்
ஏற்காதே..
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே..
காலிலே விழுந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே..
தொடரும்..