காதலின் தீபம் ஒன்று..!! – 5
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

காவியா யாழினி மகிழன் மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்கள் ஒரு வழியாக.. அவர்கள் முன்னரே வழியில் அவர்களுக்கு நேர்ந்த தாமதத்தை பற்றி அந்த கல்லூரியின் முதல்வரிடம் கைபேசி மூலம் விளக்கி இருக்க அவரும் அவர்கள் வருகைக்காக காத்திருந்தார்..

மாலை 6 மணிக்கு மூவரும் அந்த கல்லூரி வளாகத்திற்குள் வந்து சேர்ந்திருந்தனர்.. அவர்களை நேராக அந்த கல்லூரியின் விடுதியில் (ஹாஸ்டல்) போய் அங்கிருந்த மேலாளரை சந்திக்க சொல்லி ஏற்கனவே சொல்லி இருந்தார் முதல்வர்..

பெண்கள் இருவரும் பெண்கள் விடுதிக்கு போக ஆரியன் ஆண்கள் விடுதிக்கு அவர்களிடம் மறுநாள் சந்திப்பதாக கூறிவிட்டு சென்றான்..

யாழினியின் தந்தை ஏற்பாடு செய்த விதம் யாழினி.. காவியா.. இருவருக்கும் ஒரே அறை தான் வழங்கப்பட்டிருந்தது அந்த விடுதியில்..

மறுநாள் காலை மூவரும் கல்லூரி முதல்வரின் அலுவலகத்தின் முன் வந்து சேர்ந்தனர்.. அங்கு இரண்டு பெண்களையும் சந்தித்த மகிழன் “ஹலோ பிரெட்டி லேடிஸ்.. எப்படி இருக்கீங்க? உங்க ரூம்லாம் எப்படி இருந்துச்சு..?”

அவன் அக்கறையோடு கேட்க இரண்டு பெண்களுக்குமே அவன் அப்படி அவர்களை கேட்டது உள்ளுக்குள் இனித்தது..

யாழினிக்கோ அவள் தந்தையை தவிர வேற எந்த ஆணும் அவளிடம் இதுவரை இப்படி ஒரு அக்கறையை காட்டியதில்லை என்பதால் அவளுக்கு அந்தக் கேள்வி இனித்ததோடு ஒரு புது வித உணர்வையும் தந்திருந்தது.. அந்த உணர்வுக்குள்ளையே சிக்கி இருந்தவள் பதில் எதுவும் சொல்லாது அவன் முகத்தையே பார்த்திருந்தாள்..

காவியா “ரூம் எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா கொஞ்சம் கொசுத்தொல்லை அதிகமா இருந்தது.. நைட் எல்லாம் தூங்கவே முடியல.. இவ்வளவு கொசு இருக்கும்னு எங்களுக்கு தெரியாது.. தெரிஞ்சிருந்தா ஏதாவது மேட் மெஷின் கொண்டு வந்து இருக்கலாம்..” என்றாள்..

“அது ஒன்னும் பிரச்சனை இல்ல.. இன்னைக்கு நைட் நீங்க ரெண்டு பேரும் நல்லா தூங்கலாம்.. அதுக்கு நான் கேரண்டி..”

ஆரியன் சொல்லி முடித்த நேரம் காவியா கிண்டலாய்.. “ஏன்.. நீங்க நைட்டு எல்லாம் எங்க ரூமுக்கு வந்து கொசு அடிச்சிட்டு இருக்க போறீங்களா?”

குறும்பாய் ஏளனகுரலில் அவள் கேட்க “உங்க ஹாஸ்டலுக்கு நான் வர்றதில உங்க ஹாஸ்டல் வார்டனுக்கு எதுவும் பிராப்ளம் இல்லைன்னா இந்த அழகான தேவதைங்க நிம்மதியா தூங்குறதுக்காக கொசு அடிக்கிறதுக்கு கூட நான் ரெடி தான்..”

“ஓ ஓ.. நல்ல எக்ஸ்பீரியன்ஸ் தான் போல.. நிறைய அழகான தேவதைங்களை இப்படி தூங்க வச்சிருக்கீங்க போல..”

“ம்ம்.. ஆமா நிறைய அழகான தேவதைங்களை தூங்க வச்சிருக்கேன்.. எங்க அக்கா பொண்ணுங்க ரெண்டு பேர்.. எங்க அக்கா.. எங்க அம்மா.. இவங்க எல்லாரையும் தூங்க வச்சிருக்கேன்..”

“ஓ.. அ..ப்பு..டி..  உங்க மாமா பொண்ணு யாரையாவது தூங்க வச்சிருக்கீங்களா?”

காவியா வேண்டும் என்றே விஷமமாய் கேட்க வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த யாழினி சட்டென தன்னுணர்வுக்கு வந்து அந்தக் கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று கொஞ்சம் பதைப்போடு பார்த்து கொண்டு இருந்தாள்..

“ஆமாமா.. அதுவும் தான்.. எனக்கு ஒரு மாமா பொண்ணு.. ஒரு அத்தை பொண்ணு.. ரெண்டு பேர் இருக்காங்க.. அவங்களுக்காகவும் கொசு அடிக்கிறது மட்டும் இல்லை, கொசுவலை போடறது.. ஏன் தாலாட்டு பாடுற வரைக்கும் பண்ணி இருக்கேன்..”

அவன் சொன்னதை கேட்டு சற்றே கலக்கமுற அவனை பார்த்தாள் யாழினி.. காவியாக்கும் அந்த முகம் தெரியாத அத்தை பெண்ணின் மீதும் மாமா பெண்ணின் மீதும் எரிச்சலாக வந்தது..

“தாலாட்டு பாடினீங்களா? அதெல்லாம் வேற பாடுவீங்களா நீங்க?”

காவியா நக்கலாக அவனை முறைத்தபடி கேட்க அவனோ அவளுக்கு இருந்து எரிச்சலை புரிந்து கொள்ளாமல் “ஹலோ மேடம்.. மியூசிக் காலேஜ்ல பேச்சலர் ஆஃப் மியூசிக் படிக்க வந்து இருக்கேன்.. பாட தெரியாம இருக்குமா..? அதெல்லாம் நல்லாவே பாடுவேன்.. என்ன இருந்தாலும் யாழினி அளவுக்கு எனக்கு பாட தெரியாது..”

அவன் சொன்னதைக் கேட்டு வெட்கத்தில் தலை தாழ்த்திய யாழினி “நான் ஒன்னும் அவ்வளவு நல்லா எல்லாம் பாடலை..” என்று அமைதியாக சொல்ல அவளை பார்த்து புன்னகைத்தவன் “இதை அந்த கம்பார்ட்மெண்ட்ல இருந்தாங்களே அவங்க கிட்ட போய் சொல்லுங்க.. ஒருத்தராவது நீங்க சொன்னது சரிதான்னு சொன்னா நானும் ஒத்துக்கிறேன்..”

காவியாவின் பக்கம் திரும்பியவன் “என்னங்க இது…? உங்க ஃபிரண்டு இவ்வளவு தன்னடக்கத்தோட இருக்காங்க.. இவ்வளவு அட்டகாசமான வாய்ஸை வச்சுக்கிட்டு இப்படி சொல்றாங்க.. கொஞ்சம் தன்னடக்கம் ஓவர்லோடடா தான் இருக்கு அவங்களுக்கு.. சரி.. விடுங்க.. சில பெரிய ஆளுங்க எல்லாம் அப்படித்தான்.. நான் தாலாட்டு பாடி இருக்கேனான்னு கேட்டீங்க இல்ல..? நல்லாவே..நிறையவே.. பாடி இருக்கேன்.. இந்த மாதிரி மாமாவுக்கு ஒரு பொண்ணு அத்தைக்கு ஒரு பொண்ணுன்னு அழகழகா பொண்ணுங்க இருந்தா தாலாட்டு பாடாம இருக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்க..”

அவன் அப்படி சொல்ல சொல்ல யாழினிக்கு மட்டும் இல்லாமல் இப்போது காவியாக்கும் கொஞ்சம் கலக்கமாய் தான் இருந்தது..

“அதானே இவனோட மாமா பொண்ணு அத்தை பொண்ணுனா இவனை மாதிரியே நல்லா அழகா தானே இருப்பாங்க.. ஏற்கனவே பையனை ரிசர்வ் பண்ணி வச்சிருப்பாங்க போல.. ஏய் காவி..  உனக்கு எதுக்குடி இந்த ஆசை?”

மனதிற்குள் தன்னை தானே நொந்து கொண்டால் காவியா.. யாழினி விட்டால் அழுது விடுபவள் போல ஆகிவிட்டாள்..

“ஏற்கனவே அவனுக்கே மாமா பொண்ணு அத்தை பொண்ணுன்னு இருக்காங்க.. அவங்களை எல்லாம் விட்டுட்டு உன்னை லவ் பண்ணுவான்னு இன்னுமா நம்புற?” மனசாட்சி அவளை கேள்வி கேட்டுக் குடைய “இருக்கட்டும் அவன் யாரை லவ் பண்ணா என்ன? என்ன ஆனாலும் சரி என் மனசு அவனுக்கு மட்டும் தான்..” என்று சொல்லி தன் மனசாட்சியின் வாயை மூடினாள் யாழினி..

காவியாவும் விடாமல் “உங்க மாமா பொண்ணும் அத்தை பொண்ணும் அவ்வளவு அழகாவா இருப்பாங்க..?” கேட்கும்போது அவள் குரலில் கொஞ்சம் பொறாமை கூட எட்டிப் பார்த்தது..

“பின்ன அழகா இல்லாம இருப்பாங்களா? உங்க ஊர் அழகா.. எங்க ஊர் அழகா.. அதை எப்படி சொல்லுவேன்.. உங்க ரெண்டு பேரை விட ரொம்ப அழகா இருப்பாங்க..”

அவன் சொன்னதைக் கேட்டு இருவருக்குமே காதில் புகை வந்தது..

“எங்களை விட அழகா இருப்பாங்களா?” யாழினி மறபடியும் தயங்கி தயங்கி கேட்டாள்..

“ஆமா.. எங்க மாமா பொண்ணுக்கு  இப்பதான் அஞ்சு வயசு ஆகுது.. அத்தை பொண்ணுக்கு பத்து வயசு ஆகுது.. அப்ப அவங்க உங்கைள விட அழகா தானே இருப்பாங்க.. பொண்ணுங்களுக்கு தாலாட்டு பாடுவேன்னு சொன்ன உடனே தப்பா நினைச்சுட்டீங்களோ.. இவங்களுக்கு தாலாட்டு பாடுனதுல ஒன்னும் தப்பில்லல்ல..?

அவன் புருவம் உயர்த்தி கேட்க களுக்கென சிரித்தார்கள் யாழினியும் காவ்யாவும்..

“ஐயோ.. இப்படி எல்லாம் சிரிக்காதீங்க அவ்வளவுதான் மகிழன் டோட்டல் ஃபிளாட்..” என்க “அது சரி” என்று தலையாட்டியபடி அவனை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்து சொன்னாள் காவியா..

அவன் சொன்ன விஷயத்தில் தன் கலக்கத்தை விட்டு ஒரு பெருமூச்சோடு சமாதானமானாள் யாழினி..

அதற்குள் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் இருந்து பியூன் வெளியே வந்து “சார் உங்க மூணு பேரையும் உள்ள கூப்பிடுறாங்க..”

உள்ளே சென்றதும் அங்கே கம்பீரமாய் அமர்ந்திருந்தார் இசைவேந்தன் அந்த கல்லூரியின் முதல்வர்.. நடுத்தர வயதினராக இருந்தவர் சிரித்த முகத்தோடு இவர்களை வரவேற்றார்..

“ஆங்.. வாங்க வாங்க.. மூணு பேரும் ஒரே டிரெயின்ல தான் வந்து இருக்கீங்க போல.. அதனால இப்ப எதுவும் அறிமுகம் தேவை இல்லை.. உங்களுக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் எல்லாமே ரெடி பண்ணியாச்சு.. நீங்க ஆஃபீஸ்க்கு போய் அதுல சைன் பண்ணிட்டு உங்க கிளாஸ் எதுன்னு கேட்டு அங்க போயிடலாம்.. நான் சந்திரனை உங்களை கூட்டிட்டு போக சொல்றேன்.. ஆஃபீஸ்ல அந்த சைன் மட்டும் பண்ணிட்டு அவங்க அவங்க கிளாசுக்கு போயிடலாம்.. என்றவர் “சந்திரன்..” என்று சத்தமாக அழைத்தார்..

அவரை அழைத்த அடுத்த நொடி அங்கே வந்து நின்ற சந்திரன் “சொல்லுங்க சார்..” என்றார்.. இவங்களை அவங்க கிளாசுக்கு கொண்டு போய் விடுங்க.. இவங்க ரெண்டு பேரையும் வோக்கல் மியூசிக் கிளாஸ் கொண்டு போய் விடுங்க.. இவரை பேச்சுலர் ஆஃப் மியூசிக் கோர்ஸ் நடக்குது இல்ல..? அங்க கொண்டு போய் விடுங்க..”

அவர் சொன்னதை கேட்டு அவர்கள் மூவரையும் முன்னே போக சொல்லி பின்னால் தொடர்ந்தார் சந்திரன்..

முதலில் பெண்களைக் கொண்டு போய் அவர்கள் வகுப்பில் விட்டவர் பிறகு ஆரியனை அவனுடைய வகுப்புக்கு அழைத்துச் சென்றார்..

அதன் பிறகு அன்று முழுவதும் அவர்கள் மூவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.. உணவு இடைவேளை கூட ஆர்யனுக்கு வேறு நேரத்தில்  இருந்தது..

அன்று மாலை வகுப்புகள் முடிந்து தங்கள் விடுதிக்கு சென்று கொண்டிருந்த பெண்கள் இருவரும் பின்னால் இருந்து ஆரியன் அவர்களை அழைக்கும் குரல் கேட்கவும் திரும்பி பார்த்தனர்..

“ஹலோ யாழி.. காவி.. எப்படி போச்சு உங்க கிளாஸ் எல்லாம்..?” கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு கேட்டான் அவன்.. வேகமாய் அவர்களை அவர்களுடைய விடுதிக்குள் நுழைவதற்குள் பிடிக்க வேகமாய் நடந்து வந்திருந்தது அவனுக்கு மூச்சு வாங்கியது..

“நல்லா தான் போச்சு.. ஆமா.. உங்களுக்கு ஏன் இப்படி மூச்சு வாங்குது? எதுக்கு இவ்வளவு வேகமா வரீங்க..?”

“இல்லன்னா இவ்ளோ நேரம் நீங்க ரெண்டு பேரும் உங்க ஹாஸ்டலுக்குள்ள போயிருப்பீங்களே.. அப்புறம் உங்களோட நான் எப்படி பேசுறது?”

“எங்களோட என்ன பேசணும்?” மெதுவாய் கேட்டாள் யாழினி..

“அது என்னடி அப்படி கேட்டுட்ட? ஆர்யா நம்மளோட ஃப்ரென்ட் தானே..? அதனால அவர் நம்மளோட பேசணும்னு நினைச்சிருப்பாரு..”

அவள் சொன்னதை கேட்டு அவசரமாய் யாழினியோ “இல்ல இல்ல.. நான் தப்பா எதுவும் கேக்கல.. வேற ஏதாவது முக்கியமான விஷயம் இருக்குமோனு தான் கேட்டேன்..”

அவள் சொன்னதைக் கேட்டு அழகாய் பளீரென சிரித்தான் மகிழன்.. அந்த சிரிப்பழகில் மயங்கி தான் போனாள் மாதவள்..

“முக்கியமான விஷயம் தான்.. நீங்க தப்பா நினைக்கலனா நம்ம மூணு பேரும் கொஞ்சம் கடை வரைக்கும் போயிட்டு வரலாமா..  ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் கா,/ஃபி குடிச்சிட்டு வரலாமா?”

ஒரு சந்தேக பார்வையோடு “என்ன ஆரியன்.. எங்கள்ல யாராவது ஒருத்தருக்கு ரூட் விடறீங்களா?” என்று கேட்டாள்..

“அது என்ன..? கேட்கிறது தான் கேக்குறீங்க.. கஞ்சத்தனமா ஒருத்தருக்குன்னு ஏன் கேக்கறீங்க? ரெண்டு பேருக்குமே ரூட் விடுறனான்னு கேட்க வேண்டியதுதானே?”

அவன் சொன்ன பதிலில் இருவரும் சேர்ந்து அவனை மறுபடியும் முறைக்க “ஓகே.. ஓகே.. ஜஸ்ட் ஃபன் பண்ணேன்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்களுக்கு நைட் ஆனா ரொம்ப கொசு கடிக்குதுன்னு சொன்னீங்க இல்ல.. அதான் பக்கத்துல இருக்குற கடைக்கு போயி அதுக்கு ஏதாவது வாங்கிட்டு அப்படியே ஒரு காஃபி குடிச்சிட்டு வர போலாம்னு நினைச்சேன்.. எப்படியும் நீங்க ஹாஸ்டல் கேண்டின்ல தான் இப்ப எதுவா இருந்தாலும் ஈவினிங் ஸ்னாக்கா சாப்பிடணும்.. அதுக்கு நம்ம மூணு பேரும் கொஞ்சம் வெளியில் போய் ஜாலியா சாப்பிட்டு வரலாம் இல்ல? இங்க கேன்டின்ல வேற சாப்பாடு அவ்ளோ நல்லா இருக்காதுன்னு என் கிளாஸ்ல இருந்த பசங்க பொண்ணுங்க எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க..”

அவன் சொன்னதைக் கேட்ட பெண்கள் இருவருமே உடனே அவனோடு செல்ல ஆயத்தமாயினர்..

“ஓகே.. நாங்க வரோம்.. ஆனா டெய்லி எல்லாம் வரமாட்டோம்.. என்னைக்காவது ஒரு நாள் இப்படி போகலாம்.. ஆனா எங்களுக்கு நீங்க நடத்துக்கிறதுல ஏதாவது தப்பா தெரிஞ்சதுன்னா அப்பவே உங்க ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவோம்..”

“ஓகே..ஓகே.. எனக்கு புரியுது.. ஆனா அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது.. ஆனா அதை வீக்லி ரெண்டு நாளா மாத்த முடியாதா..?”

“ஏன்.. உங்களால ஒரு வாரம் ஃபுல்லா எங்களை பாக்காம இருக்க முடியாதோ?” காவியா கிண்டலாக தான் கேட்டாள்.. ஆனால் அவன் முக பாவமோ அது உண்மைதான் என்று சொல்வது போல் இருந்தது..

“இல்ல.. வீக் டேஸ்ல காலேஜ்ல உங்களை பார்த்திடுவேன்.. வீக் என்ட் காலேஜ் இருக்காது இல்ல.. நீங்க உங்க ஹாஸ்டல்ல இருப்பீங்க.. என்னால அங்க வந்து உங்களை பார்க்கவும் முடியாது.. எனக்கு என்னவோ உங்க ரெண்டு பேரையும் பார்த்த உடனேவே எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்கன்னு தோணிச்சு.. எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.. என் ஃப்ரெண்ட்ஸ் எத்தனை பேர்னு  ஒரு கை விரல் விட்டு எண்ணிடலாம்.. ஆனா அவங்கள்லாம் ரொம்ப பர்ஃபெக்டான ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க.. இப்போ உங்களையும் நான் அந்த லிஸ்டில சேர்த்தாச்சு.. ஊர்ல இருக்கிற என்னோட ஃப்ரெண்ட்ஸ் யாரும் இங்க கிடையாது.. எனக்கு தெரிஞ்ச ரெண்டே ஃப்ரெண்ட்ஸ் நீங்க மட்டும் தான்.. அதனால தான் வீகென்ட்ஸ்ல ஹாஸ்டல்ல கொஞ்சம் போர் அடிக்கும் இல்ல..? அப்படியே உங்களோட வெளியில எங்கயாவது அவுட்டிங் போலாம்னு பார்த்தேன்..”

“அவுட்டிங்குன்னு தானே சொல்றீங்க.. அப்போ ஓகே.. டேட்டிங்னா தான் கொஞ்சம் பயப்படனும்..” என்றாள் காவியா..

“அதுக்கும் நான் ரெடி தான்..” என்று பட்டென்று சொன்னவனை இருவரும் சேர்ந்து மறுபடியும் முறைக்க “அம்மா ருத்ரமாதேவிகளா.. முறைக்காதீங்க. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. இப்ப கடைக்கு போலாம்.. வர்றிங்களா?” என்று அவர்களை அங்கே பக்கத்தில் இருந்த கடை தெருவிற்கு அழைத்து போனான்..

மாலை வேளை ஆகியிருந்ததால் யாழினிக்கு சற்று குளிர் எடுக்க உடல் எசாய் நடுங்க தடங்கியது குளிரில் அவளுக்கு..

அவள் தன் தாவணியை இழுத்து போர்த்தி கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு உடலை குறுக்கி ஒடுக்கமாய் நடந்து வர அவளை பார்த்ததும் அவள் நிலையை புரிந்து கொண்ட மகிழன் தான் போட்டிருந்த ஓவர் ஜாக்கெட்டை கழட்டி “யாழினி.. ரொம்ப குளிருச்சுனா இதை போட்டுக்கோங்க.. கொஞ்சம் குளிருக்கு அடக்கமா இருக்கும்..” என்று நீட்டினான்..

யாழினிக்கோ அதை வாங்கலாமா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.. அவள் தயங்கி நிற்க அவன் முகமோ சட்டென வாடி போனது..

கனவிலும் காணாத…
வகையினில் உன் தோற்றம்…
எனக்குள்ளே கூச்சல் போட…

இதுவரை கேட்காத…
இசை என உன் பேச்சு…
அளவில்லா ஆட்டம் போட…

இறந்து இறந்து பிறக்கும்…
நிலை இதுதானடா…
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்…
வரம் கொடுத்தாயடா…

கள்ள பார்வை…
என்னை கொத்தி தின்ன…
என்ன ஏது என்று…
உள்ளம் எண்ண எண்ண…

சகாயனே சகாயனே…
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்…
சகாயனே சகாயனே…
என்னை நீ ஏன் பறித்தாய்…

தொடரும்..