காதலின் தீபம் ஒன்று..!! – 12
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
சென்னை வந்தடைந்தது அவர்களுடைய ரயில் வண்டி.. வண்டியிலிருந்து ஒவ்வொருவராய் இறங்கவும் யாழினி முன்னே நடக்க ஆரியன் பின்னால் காவியாவுடன் ஏதோ தீவிரமாய் பேசியபடி நடந்து வந்தான்..
இரயில் நிலையத்தின் முகப்புக்கு வந்த நேரம் அங்கே யாழினியின் தந்தை குமார வேலு மகளை தேடி அலைபாயும் விழிகளோடு அவளுக்காக காத்து நின்றிருந்தார்..
யாழினியோ மகிழனை பற்றிய யோசனையிலேயே நடந்து வந்து கொண்டிருந்தவள் எதிரே நின்று கொண்டிருந்த அவரை கவனிக்காமல் தலை குனிந்து இப்போதும் ஆரியன் அவளுடைய பெட்டியை தூக்கி வர அவன் பெட்டியை தள்ளிக்கொண்டே தன் தந்தையை கடந்து நடந்து போய்க் கொண்டிருந்தாள்..
அதைப் பார்த்தவர் புருவம் நெறித்து “அம்மாடி யாழி.. என்னடா அப்பாவை கூட கவனிக்காம போற?” என்று கேட்க தன் தந்தையின் குரலில் மகிழனின் நினைவில் இருந்து விடுபட்டவள் திரும்பி அவரை பார்த்ததும் அடுத்த நொடி அவள் விழிகள் குளமாகின..
பின்னே கண்கள் கலங்காமல் இருக்குமா? அவரைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன? வாரம் ஒரு முறை அவளை தவறாமல் வந்து பார்த்து விடுவேன் என்று சொல்லி இருந்தவர் அவள் அங்கு சென்றதிலிருந்து அவளைப் பார்க்க அங்கு வரவே இல்லை.. யாழினியையும் இங்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..
எப்போது கேட்டாலும் அவள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும் சொன்னாரே தவிர எப்போதும் தன் அன்னையினுடைய நிலைமை என்ன.. எப்படி இருக்கிறார்..? என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து முழுதாய் பதில் வந்தது இல்லை..
இவ்வளவு மாதங்கள் கழித்து தன் தந்தையை கண்டு அங்கேயே பெட்டியை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள் யாழினி..
“அப்பா.. என்னப்பா நீங்க? என்னை பார்க்க வரவே இல்ல.. அம்மாக்கு இப்ப எப்படிப்பா இருக்கு? ஹெல்த் பரவாயில்லையா?”
அவள் படபடவென கேள்விகளை அடுக்க அவரோ “இரும்மா.. கொஞ்சம் மூச்சு விட்டுக்க.. அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.. நீ என்ன.. நான் எதிரயே நின்னுட்டு இருக்கேன்.. என்னை கவனிக்காம நீ பாட்டுக்கு அப்படியே ஏதோ யோசிச்சுக்கிட்டே நடந்து போற.. அப்படி என்ன யோசனை உனக்கு? குனிஞ்ச தலை நிமிராம இருக்குறது சரிதான்… அதுக்காக உன் எதிரயே நின்னுட்டு இருக்கற என்னை கவனிக்காம போற.. ஒரு மணி நேரமா நீ எப்ப வருவன்னு கண்ணு பூத்து போற மாதிரி பாத்துட்டு இங்கேயே நின்னுட்டு இருக்கேன்.. நீ என்னடானா வந்ததும் என்னை கவனிக்காம எதோ யோசனையோட நேரா நடந்து போயிட்டு இருக்கே..”
“சாரிப்பா அது ஏதோ யோசனைலயே வந்தேனா.. உங்களை கவனிக்கல.. சரி சொல்லுங்கப்பா.. அம்மா எப்படி இருக்காங்க இப்போ..?”
அவள் மறுபடியும் அதே கேள்வியில் வந்து நிற்க “அதை பத்தி வீட்டுக்கு போய் பேசலாம் டா.. சரி.. காவியா எங்க..?”
அவர் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் யாழினி.. காவியாவும் மகிழனும் ஒன்றாய் நடந்து வந்து கொண்டே இருந்ததை பார்த்த குமாரவேலு “அது யாரு? காவியா எதுக்கு அந்த பையனோட எல்லாம் பேசிட்டு வர்றா?” புருவம் சுருக்கி கேட்டார்..
“அப்பா.. அவன் எங்களோட காலேஜ்மெட் தான்.. எங்களோட தான் வந்தான்.. காவியா அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காப்பா..”
அவள் சொன்னதும் குமாரவேலுவின் முகம் போன போக்கே சரியில்லை..
“இது என்ன பழக்கம்? ஆம்பள பசங்கள கூட கூட்டிட்டு வர்றது.. இதெல்லாம் நல்லாவே இல்ல.. முதல்ல ரத்தினசாமி கிட்ட இந்த பொண்ணை கவனிக்க சொல்லணும்.. இந்த காலத்துல யாரு எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.. இப்படி பொண்ணை கவனிக்காம விட்டு வச்சிருக்கான்.. சரி.. அதை விடு.. ஆமா இது யாரோட பெட்டி? உன் பேக் எங்க?” என்று கேட்டவர் ஆரியனின் கையில் அவளுடைய பையை பார்த்துவிட்டு யாழினியை எரிப்பது போல் முறைத்தார்..
“யாழிமா.. இது என்ன பழக்கம்? அந்த பையன் எதுக்கு உன் பேக்கை தூக்கிட்டு வரான்.. இது அவனோட பெட்டியா?” அவள் கையில் இருந்து பெட்டியை விழியால் சுட்டி காட்டி கேட்க “பா.. பைய தூக்க நாங்க கஷ்டப்பட்டதுனால அவன் எங்க பைய தூக்கிட்டு வரேன்னு சொல்லி அவனோட பெட்டியை எங்களை தள்ளிட்டு வரே சொன்னானாப்பா.. இது ஒரு சின்ன ஹெல்ப் தான் பா.. தப்பா ஒன்னும் இல்லப்பா..” தயங்கி தயங்கி சொன்னாள் அவள்..
அதற்குள் காவியாவும் மகிழனும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.. காவியா சட்டென மகிழன் பக்கம் திரும்பி “ஆரி.. இதுதான் யாழினியோட அப்பா குமார வேலு அங்கிள்.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கார்.. அங்கிள் இது மகிழன் ஆரியன்.. எங்க காலேஜ்ல மியூசிக் படிக்கிறான்..”
அவனும் “ஹலோ அங்கிள்.. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டு கையை நீட்ட இறுக்கமான முகத்துடனேயே அவன் கையை குலுக்கியவர் “நல்லா இருக்கேன்.. சரி மா யாழி.. உன் பையை வாங்கிட்டு வா.. கிளம்பலாம்..” என்றார்..
அவரின் இறுக்கமான குரலை கேட்டு மகிழனோ கண்ணை உருட்டி புருவம் உயர்த்தியவன் அவருக்கு எதிர் புறமாக எங்கேயோ பார்ப்பது போல் திரும்பி காவியாவுக்கும் மட்டும் கேட்கும் விதமாக “அய்யய்யோ.. டெரர் பீசா இருப்பாரு போலையே..” என்க “ஆமாமா.. ரொம்ப டெரர் தான்.. நானே அவர்கிட்ட ஜாக்கிரதையா தான் பேசுவேன்.. கொஞ்சம் கேர்ஃபுல்லா பேசு..” என்றாள் ஆரியன் பக்கம் குனிந்து தன் கன்னத்தை தடவுவது போல் தடவிக் கொண்டே தன் வாயை அவரிடமிருந்து மறைத்துக் கொண்டு..
இருவரும் கிசுகிசுவென ரகசியமாய் பேசுவதை பார்த்தவர் இன்னும் தீவிரமாய் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தார்..
“மகிழ்.. இந்தா.. உன்னோட பேக்கேஜ்.. என் பேக்கை..” அவள் கேட்டு முடிக்கும் முன் அவளிடம் இருந்து தன் பெட்டியை வாங்கி கொண்டு அவளின் பையை அவளிடம் அவன் நீட்ட யாழினிக்கு முன்னால் வந்து அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டார் குமாரவேலு..
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. ஆனா ஒரு சின்ன அட்வைஸ்.. இந்த மாதிரி பொம்பள பசங்களோட கூட வர்றதெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணிக்கோங்க.. எனக்கு என் பொண்ணை பத்தி நம்பிக்கை இருந்தாலும் சுற்றி பார்க்கிறவங்க அப்படி எல்லாம் யோசிக்க மாட்டாங்க.. ரொம்ப தப்பா பேசுவாங்க.. இந்த ஊர்ல எங்களுக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருப்பாங்க.. நான் போலீஸ்காரன் இல்லையா..?”
அவர் சொன்னதும் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு “ஓகே அங்கிள்.. நான் இவங்களோட வந்ததனால உங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா ஐ அம் சாரி..” என்று மட்டும் சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விட்டான்..
யாழினியின் முகமோ இருண்டு போயிருந்தது.. ஏற்கனவே மகிழன் அவள் பக்கம் திரும்பாதிருக்க ஒரு வேளை தன் விருப்பம் அறிந்து அவனும் தன்னை விரும்பினாலும் அந்த காதல் ஈடேற 150 சதவீதம் வாய்ப்பே இல்லையோ என்று கவலை பிறந்தது அவளுக்கு..
என் நிலைமை இதுதான்னு தெரிஞ்சும் என் மனசு ஏன் என் பேச்சை கேக்கவே மாட்டேங்குது..? மனசு முழுக்க என் மகிழந்தான் நிறைஞ்சிருக்கான்.. நான் இதை எப்படி அப்பாகிட்ட சொல்லுவேன்.. இந்த ஜென்மத்துல அப்பா என் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்.. நான் என்ன செய்வேன்..? உள்ளுக்குள்ளே அழுது கரைந்து கொண்டிருக்கும் தன் மனதை சமாதானப்படுத்தும் வழி தெரியாது திண்டாடினாள் பாவை அவள்..
அவள் நினைவை மறுபடியும் குமாரவேலின் குரல் கலைத்தது..
“யாழிமா பசிக்குதாடா? அங்க ஊர்ல சாப்பிட்டு வந்திருப்பே.. நான் உங்க காலேஜ் கேண்டின்ல இருந்து ஏதாவது பேக் பண்ணி வாங்கிட்டு வர சொன்னேனே.. வாங்கிட்டு வந்தியா? இல்ல எதுவும் சாப்பிடல.. பசிக்குதுனா நான் உனக்கு வாங்கி தரேன்..” எனவும் எதோ நினைவில் இருந்தவள் “நான் ட்ரெயின்ல சுண்டல் வாங்கி சாப்பிட்டேன்பா..” அவள் சட்டென சொல்லிவிடுவும் அவளை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினார் குமாரவேலு..
அந்தப் பக்கம் மகிழனும் அவளை முறைத்துக் கொண்டுதான் இருந்தான்.. “எவ்ளோ தூரம் சொன்னேன்.. ட்ரெயின்ல வாங்கி சாப்பிட்டது பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லாதன்னு.. அப்படியும் உளறி வாங்கி கட்டிக்கறா பாரு..” உள்ளுக்குள்ளேயே அவளை திட்டி தீர்த்து பார்வையாலேயே அவளை எரித்துக் கொண்டிருந்தான்..
அவளும் இருவரின் முறைப்பையும் சந்திக்க முடியாமல் நாக்கை கடித்து கண்ணை இருக்க மூடி அடுத்து சுத்தம் தந்தை சரமாரியாக தன்னை என்ன எல்லாம் திட்டப் போகிறாரோ என்று திரியை கொளுத்திவிட்டு பட்டாசு வெடிப்பதற்காக கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு காத்திருக்கும் குழந்தை போல நின்று இருந்தாள்..
அவள் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் குமாரவேலு தன் வார்த்தை வதைப்பை தொடங்கினார்..
“உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. வெளில வாங்கி சாப்பிட கூடாதுன்னு.. எவ்வளவு சொன்னாலும் உனக்கு அறிவே வராதா? ஏற்கனவே அங்க உங்க அம்மா உடம்பு சரி இல்லாம படுத்த படுக்கையா படுத்துகிட்டு இருக்கா.. இதுல நீ வேற..”
அவசரப்பட்டு அவர் சொல்லி விடவும் “என்னப்பா.. அம்மாக்கு என்ன ஆச்சு? என்னப்பா சொல்றீங்க..?”
அவள் அதிர்ந்து கேட்கவும் “தன் கண்ணை இரறுக்க மூடி திறந்தவர் “ப்ச்.. அதை பத்தி அப்பறம் சொல்றேன்.. அதெல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. ஆனா இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. இனிமே இப்படி கண்ட இடத்துல வாங்கி சாப்பிடறதெல்லாம் இருக்கவே கூடாது.. என்னை யாழிமா.. காலேஜுக்கு போயிட்ட உடனே ரொம்ப பெரிய பொண்ணு ஆகிட்டம்னு நெனப்பா உனக்கு? இந்த அப்பா சொல்றதை எதுவுமே கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? உன் நடவடிக்கை எல்லாம் உன் இஷ்டம் போல தாறுமாறா இருக்கு.. ?”
அவர் மிரட்டலாக கேட்கவும் பயந்து நடுங்கிக் கொண்டே “அப்படி எல்லாம் இல்லப்பா.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்..” என்று அவள் தடுமாற அப்போது மகிழன் இடைபுகுந்து “அங்கிள் அவ எதுவும் வாங்கி சாப்பிடல.. இன் ஃபேக்ட் நாங்க கடுத்தப்பவும் வேணாம்னு தான் சொன்னா.. நான் தான் அவை எதிர நாங்க மட்டும் சாப்டா கஷ்டமா இருக்குன்னு சொல்லி ஃபோர்ஸ் பண்ணி அவளுக்கு வாங்கி கொடுத்தேன்.. நீங்க தயவு செஞ்சு அவளை திட்டாதீங்க..” என்றான்..
காவியாவோ தலையை இடவலமாக ஆட்டி.. “சுத்தம்.. மேட்டர் ஓவர்.. இன்னிக்கு அவ்வளவுதான்.. யாழினி செத்தா.. இவன் பேசாம இருந்திருந்தாலே கம்மியா தான் திட்டி விழுந்திருக்கும்.. இவன் வேற இவன் தான் வாங்கி கொடுத்தான்னு சொல்லிட்டான்.. கிழிஞ்சுது.. பாவம் டி யாழி நீ.. உங்க அப்பா இன்னும் ஒரு மணி நேரத்துக்கு பேசிப்பேசியே உன்னை கொன்னுடுவாரே டி.. என்ன பண்ண போற?”
கவலையோடு காவியா யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் எண்ணியபடியே குமாரவேலு தன் அறிவுரைகளை பொழிய ஆரம்பித்தார்..
“தம்பி இவங்களோட நீ வந்ததே தப்புன்னு நான் சொல்றேன்.. இதுல இவங்களுக்கு சாப்பிடறதுக்கு வேற வாங்கி கொடுத்து இருக்கே.. இதெல்லாம் ரொம்ப தப்புப்பா.. பார்க்கிறவங்க ரொம்ப தப்பா நினைப்பாங்க.. எனக்கு யாழினி மட்டும் இல்ல காவியாவும் பொண்ணு மாதிரி தான்.. ரெண்டு பேர்ல யாரு இதை பண்ணி இருந்தாலும் நான் தப்புன்னு தான் சொல்லுவேன்.. இனிமே பொம்பள பிள்ளைங்க கிட்ட கொஞ்சம் ரெண்டு அடி தள்ளியே இருந்து பழகுப்பா.. எப்படி ஃப்ரெண்ட்னு சொல்லிக்கிட்டு பொம்பள பிள்ளைகளோட சேர்ந்து பழகுறது எல்லாம் நல்லதுக்கு இல்லை..”
அவர் சொன்னதும் முனுக்கென மூக்கின் மேல் கோபம் வந்தது மகிழனுக்கு..
“அங்கிள்.. என்ன இப்படி பேசுறீங்க? எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? ஏன் ஒரு பையன் பொண்ணுங்களோட ஃப்ரெண்டா இருக்க கூடாதா? எங்களுக்குள்ள ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..?”
“தம்பி.. இதெல்லாம் பேசறதுக்கு நல்லா இருக்கலாம்.. ஆனா நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டு வராது.. உங்களுக்கு எப்படியோ எங்க குடும்பத்துக்கு இந்த மாதிரி பழக்கம் நிச்சயமா சரிப்பட்டு வராது.. அதனால இனிமே யாழினி கூட பேசறது பழகறதை கொஞ்சம் குறைச்சுக்கோங்க.. அவ அந்த காலேஜுக்கு சங்கீதம் பழக வந்து இருக்கா.. மத்த பசங்களோட பழக வரல.. அந்த பழக்கம் எல்லாம் அவளுக்கு வேண்டவே வேண்டாம்.. அவ சங்கீதம் மட்டும் பழகுனா போதும்..” சொல்லிவிட்டு “யாழி கிளம்பு..” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து தரதரவென்று அவர் இழுத்துக் கொண்டு போக யாழினியோ திரும்பி திரும்பி மகிழனையும் காவியாவையும் பார்த்துக் கொண்டே கலக்கமான விழிகளுடன் அவர் இழுத்துப் போன திசையில் இழுபட்டு சென்று கொண்டிருந்தாள்..
🎵🎶🎼சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது – நீ
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
உனை தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ
உயிரே
சூரிய விளக்கில்
சுடர் விடும் கிழக்கு
கிழக்கு-க்கு நீ தான்
உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும் படி
சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது
சொன்னாலும்
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
—
விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன்
தளிரே
நதி என நான்
நடந்தேன்
அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன்
கடலே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும் படி
சொன்னேன் நூறு முறை
பூ எடுத்து நீரில்
பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே
வஞ்சி கொடியே
சொன்னாலும்
சொன்னாலும் கேட்டிராது கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது🎵🎶🎼
தொடரும்..