Advertisement

அத்தியாயம் 6
அந்த க்ளினிக்கின் வாசலில் தனது ரங்களேர் ஜீபை நிறுத்திய மாறன் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்.
“நாலு மாடி கட்டிடம் கட்டி வச்சிருக்கான். அப்படி என்ன இருக்கு. உள்ள போகலாமா? வேணாமா?” யோசனையாகவே உள்ளே நுழைந்தான் மாறன்.
அவன் உள்ளே நுழைந்த மறு நொடி அவனின் அலைபேசி அடித்தது. மருத்துவரின் அலைபேசி மட்டுமா? இருபத்தி நான்கு மணித்தியாலமும் அனைக்கப்படாமல் இருக்கும். போலீஸ்காரனின் அலைபேசியும் அலறிய உடன் எடுக்கப்பட வேண்டுமல்லவா.
யாராக இருக்கும் என்ற சிந்தனையிலையே அலைபேசியை பார்க்க “அப்பா” என்று இருக்கவும் இவர் எதற்கு அழைக்கிறார் என்ற எண்ணத்திலையே இயக்கி காதில் வைத்திருந்தான் மாறன்.
“என்ன டாக்டர் வேணுகோபால் க்ளினிக் போய் இருக்கியா? உனக்கு என்ன தெரிஞ்சிக்கணுமோ என் கிட்ட கேளு. இப்போ உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வா”
“என்ன இவரு என்ன வேவு பாக்குறாரா?” மாறனின் போலீஸ் மூளை விழித்துக் கொண்டு கண்கள் நாலா புறமும் சுழன்று சந்தேகப்படும்படி யாராவது இருக்கிறார்களா என்று அலசினான்.
“அங்க என்ன பார்வ? சீக்கிரம் வா” என்ற பூபதி அலைபேசியை துண்டிக்க,
“என்ன இவரு இந்த போடு போடுறாரு? என் போன்ல ட்ரெக்கிங் டிவைஸ் ஏதாச்சும் வச்சிருக்குறாரா?. என்னன்னுதான் போய்  பார்க்கலாமே” மாறன் வண்டியை தந்தையின் மருத்துவமனைக்கு செலுத்தி இருந்தான்.
மாறன் வந்து சேரும்வரை பூபதி ஒரு நிலையில்லாது இருந்தார். சில உண்மைகளை யாரிடமும் சொல்ல முடியாது. அது போல்தான் மாறனின் அறுவை சிகிச்சையும். தந்தையும், மாமனாரும் படிப்பறிவில்லாதவர்கள் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். லதா பிள்ளை பாசத்தில் அவன் உயிரோடு இருப்பதே மேல் என்று எண்ணிக்கொண்டிருப்பதால் மேற்கொண்டு எதையும் சிந்திக்காமல் இருக்கின்றாள்.
ஆனால் மாறன் அவ்வாறல்ல. போலீஸ்காரன் வேறு. தன்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுப்பான். அதனாலயே மாறனின் உயிரை காப்பாற்ற அவர் செய்த அறுவை சிகிச்சையை பற்றி மகனிடம் அவர் சொல்லவே இல்லை. மனைவியிடமும், தந்தையிடம், மாமனாரிடமும் கூட “இதையெல்லாம் அவன் அறிந்துகொண்டால், யோசனையில் விழுந்து விபரீதம் ஆகிவிடக் கூடும். அதனால் மறைத்து விடலாம்” என்று சம்மதம் வாங்கி இருந்தார்.
ஏதாவது பிரச்சினை என்றால் தன்னிடம்தானே வருவான். பார்த்துக்கொள்ளலாம் என்று பூபதி நினைத்திருக்க, மகன் அந்த வேணுகோபாலின் க்ளினிக்குக்கு போவான் என்று அவர் சற்றும் எதிர் பார்க்க வில்லை.
எந்த நொடியிலும் அவன் தலைவலியில் துடிக்கலாம். மயங்கி விழலாம் என்று அஞ்சிய பூபதி அவனை கண்காணிக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்.
டிடெக்டிவ்வாக பணிபுரியும் சோமசுந்தரனுக்கு வயது நாப்பத்தை தாண்டி இருந்தது. ஒரு காவல்துறை அதிகாரியை பின்தொடர்வது ஒன்றும் அவருக்கு இலேசான காரியம் இல்லை. ரொம்பவே சவாலான காரியம். ஒரு தடவை மாறன் அவரை பார்த்து விட்டால் போதும் மருதடவை பார்த்தால் பட்டென்று கண்டு பிடித்து விசாரிக்க செய்வான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாறு வேஷத்தில் அவனை பின் தொடர்பவர் இன்று அவன் க்ளினிக்கு வந்ததும் உடம்புக்கு ஏதாவதாகத்தான் இருக்கும் என்று பூபதிக்கு தகவல் கூற, மருத்துவர் யார் என்று அறிந்துக் கொண்ட நொடி பூபதி மகனை கிளம்பி வர சொல்லி இருந்தார்.
தந்தையை காண சென்றவன் பதட்டமான பூபதியை கண்டு நிதானித்தான். “நான் அந்த வேணுகோபாலின் க்ளினிக்கு சென்று எந்த உண்மையை கண்டு பிடிப்பார் என்று இவர் இவ்வளவு பதட்டமாக இருக்கிறார்?”
“எதற்காக கிளிக்கு போன?” மகனுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கு என்று அவன் சொன்னால் தானே இவர் மருத்துவம் பார்க்க முடியும்.
“நான் எதற்கோ போறேன். அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே” என்றான் மாறன்.
அதில் சுதாரித்த பூபதி “கேஸ் விஷயமா போனியா?” தன்மையாக வினவினார்.
தந்தையின் கனிவான பேச்சில் மாறனின் இதயமும் கனியாத்தான் செய்தது. இருந்தாலும் தான் வந்த வேலை நிறைவேறாதே.
“இல்ல. என்ன செக்கப் பண்ணிக்கத்தான் போனேன்” என்றவன் தந்தையின் முகபாவனையை படிக்க முயன்றான்.
மாறனின் அந்த பேச்சில் கலவரமாக பூபதி “எதுக்கு அவன் கிட்ட எல்லாம் போகணும். நேரா என் கிட்ட வர வேண்டியது தானே” பூபதியின் பதட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.
“எனக்கு அடிக்கடி தலைவலி வருது. வேலைய ஒழுங்கா பார்க்க முடியல. டேப்ளட் போடலைனா அதிகமாகுது. நீங்க கொடுத்த பெயின் கிளற போட்டா  வலி குறையிறது மட்டுமில்லாம கொஞ்சம் நேரம் நான் தூங்கிடுறேன். வலி வந்த நேரம் நான் என்ன பேசினேன் என்று கூட மறந்துடுறேன். உங்க கிட்ட கேட்டா எக்சிடண்டால ஆனா சைட் எபெக்ட்ன்னு சொல்லுறீங்க. நான் டாக்டர் இல்லதான். அதுக்காக நான் முட்டாளும் இல்ல. அம்னீசியா வரலாம். இது புது வித நோயா இருக்கு. மூளையை பத்தி படிச்சதுல எந்த புத்தகத்துலையும் இத பத்தி இல்ல. நீங்களும் சொல்ல மாட்டேங்குறீங்க. சோ நான் வேற டாக்டர்தான் பார்க்கணும்” நீளமாக பேசி தன்னிலை விளக்கம் கொடுத்தான் மகன்.
வேணுகோபாலிடம் சென்றால் அவர் ஒன்றும் மூளையை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதை கண்டு பிடித்து சொல்லப்போவதில்லை என்று பூபதிக்கும் தெரியும். ஆனால் மாறன் கண்டு பிடிக்காமல் ஓய மாட்டான்.
அவனுக்குள் நடக்கும் மாற்றங்களை அறியாமல் பூபதியாலும் அவனுக்கு மருத்துவம் பார்க்க இயலாது. அவரேதான் மகனுக்கு மருத்துவம் பார்க்க வேண்டி உள்ளது. அதற்க்கு அவர் அவனிடம் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.
மாறன் ஒன்றும் குழந்தை இல்லையே. எதையோ ஒன்றை கூறி. அவனை ஏமாற்றவும் முடியாது. உண்மையைத்தான் சொல்ல வேண்டும். சொன்னால் எந்த மாதிரியான பிரச்சசினைகளை சந்திக்க நேரிடும் என்று பூபதிக்கும் தெரியும். அதனால்தான் மாறனிடம் இருந்து உண்மையை மறைக்க நினைத்தார். ஆனால் இன்று அவனிடமே அவர் கூற வேண்டிய நிலை உருவானதை எண்ணி தன்னையே நொந்துகொண்டார்.
“சரி நான் எல்லா உண்மையையும் சொல்லி விடுறேன். ஆனா நீ எந்த எமோஷலான முடிவையும் எடுக்கக் கூடாது” புதிரோடு ஆரம்பித்தார் பூபதி.
“அது நீங்க சொல்லுற விசயத்த பொறுத்துதான் இருக்கு” என்றான் மாறன்.
“நீ இப்படி பேசினா நான் எப்படி உண்மையை கூறுவேன்” என்ற பூபதி மகனையே பார்த்திருக்க மாறன்தான் இறங்கி வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.
“சரி சொல்லுங்க” என்ற மாறன் அமைதியானான். ஆனால் அவன் மனம் அமைதியடையவில்லை. ஆயிரம் அலைகள் மோதிக்கொண்டே இருப்பது போல் தவிப்பிளையே இருந்தான்.
நெற்றியை தடவி கண்களில் இருந்த மூக்கு கண்ணாடியை கழற்றிய பூபதி மேசையின் மீது வைத்தவாறே தனது ஆராய்ச்சியை பற்றி சுருக்கமாக சொல்லி விட்டு மாறனின் உயிரை காப்பாற்ற வெற்றியின் மூளையின் ஒரு பகுதியை மாறனுக்கு பொருத்தியதாக கூறினார்.
“என்ன சொல்லுறீங்க? இது எப்படி சாத்தியமாகும்?” மாறன் அதிர்ச்சியாக கேட்க, பூபதி தனது ஆராய்ச்சி வெற்றி பெற்றதாக மட்டும் கூறினார்.
“இல்ல. ஒரு மனிசன் இறந்த பிறகு இதயத்தை கூட கரண்ட் ஷாக் கொடுத்து உயிர்பிக்கலாம். ஆனா மூளையை ஒருநாளும் உயிர்ப்பிக்க முடியாது. மூளை இறந்தா இறந்ததுதான். நீங்க சொல்லுறத பார்த்தா வெற்றி உயிரோட இருக்கும் பொழுதே அவன் மூளையை அறுத்து எனக்கு பொருத்தி இருக்கிறீங்க”
அதை சொல்லும் பொழுதே அவன் நெஞ்சம் கனத்து கண்கள் கலங்கி தந்தையை பார்த்தான்.
இந்த உண்மையைத்தான் மாறன் கண்டு பிடிக்கக் கூடாது என்று மாறனிடம் பூபதி அறுவை சிகிச்சையை பற்றி வாய் திறக்கவில்லை.
மகனை பார்க்க சக்தியில்லாமல் தலையை மட்டும் ஆட்டுவித்தார் பூபதி.
“யோவ் நீயெல்லாம் ஒரு அப்பனாய்யா பெத்த மகனையே உசுரோட கொன்னுட்டியே” பூபதியின் சட்டையை பிடித்து தூக்கி இருந்தான்.
“மாறா உன்ன காப்பாத்த தான்யா…”
“பேசாத… அவன் என்ன பாவம் பண்ணான்? அவனை காப்பாத்த வேண்டியது தானே. உன் ஆராய்ச்சி முக்கியம்னு உசுரோட இருக்கும் பொழுது மூளையை அறுத்து எடுத்திருக்க?” பூபதியை உலுக்கி இருக்கையில் அமர்த்தினான்.
கோபம், கோபம், கோபம் கண்மண் தெரியாத கோபம் மட்டும் மாறனிடம்.
“அம்மா… அம்மா.. வளர்த்த பிள்ளை என்னய காப்பாத்தி அவங்க கிட்ட கொடுத்தா… அவங்க உன்ன ஏத்துப்பாங்க இல்ல. இதுதான் உன் அல்ட்டிமேட் கோல். இது தெரியாம நான் வேற அவங்க கிட்ட பேசி உன்ன அவங்க கூட சேர்த்து வச்சிட்டேன் பாரு என்ன சொல்லணும்” கண்கள் சிவக்க கத்தினான்.
“அப்படி இல்ல மாறா.. வெற்றியோட ஹார்ட் திடிரென்று பங்க்சன் ஆகல”
“யோவ் வாயில நல்லா வருது. ஏன் தலைல அடி பட்டு பிழைக்க மாட்டேன் என்ற என்னோட ஹார்ட்ட கொடுத்து அவனை காப்பாத்தி இருக்க வேண்டியது தானே ஏன் செய்யல. சொல்லு ஏன் செய்யல. ஏன்னா நான் சொன்னதுதான் உண்மையான காரணம். ஒரு புள்ள போதும்னு நீ டிசைட் பண்ணிட்ட. பொண்டாட்டியும் திரும்ப கிடைச்சிடுவா. வயசான காலத்துல குஜாலா இருக்கலாம்னு நினைச்சிட்டாலே நீ”
“நீ நினைக்கிற மாதிரி வெற்றி ஒன்னும் நல்லவன் இல்ல” எந்த உண்மையை சொல்லக் கூடாது என்று இருந்தாரோ அந்த உண்மையையும் கூறி மாறனை சமாதானப்படுத்த முயன்றார்.
“யோவ் நீ செய்ததை நியாயப்படுத்த அவனை கெட்டவனா சித்தரிக்காத”
“நான் பொய் சொல்லல. வீட்டுக்கு லேட் நைட்டுலதான் வாரான். சில நேரம் நைட்டுலதான் வெளியவே போறான். ஒருநாள் கைல ரெத்தத்தோட வந்தான். சட்டைலயும் ரத்தம். என்னனு கேட்டதுக்கு எந்த பதிலையும் சொல்லல. எதோ தப்பு பண்ணுறான்னு மட்டும் அவன் கண்ண பார்த்து தெரிஞ்சிகிட்டேன்” என்றார் பூபதி.
“பதில் சொல்லலைனா தப்பானவனா? யாராவது ரோட்டுல எக்சிடன் ஆகி இருப்பாங்க, அவங்கள ஆஸ்பிடல் கொண்டு போய் இருக்கலாம். ஏன் இவன் வண்டியிலையே மோதி கூட இருக்கலாமே, அதுக்குன்னு தப்பானவன்னு நீங்களே தீர்மானிக்கிறீங்களா?”
“நான் அதுக்காக மட்டும் சொல்லல. அவன் ரூம்ல ட்ரக்ஸ் இருந்தது. லப்டோப்ல கண்ட கண்ட வீடியோ பாக்குறான். பகல்ல கூட சத்தம் கேக்கும்” ஒரு தந்தையாக மகனிடம் சொல்லவே கூசினார் பூபதி.
ஆனால் ஒரு போலீஸான மாறனுக்கு தனது சகோதனரன் தப்பானவன் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மாறன் வெற்றியை சந்தித்திரா விட்டால் பூபதி சொல்வதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டிருப்பானோ! மாறன் வெற்றியை சந்தித்தான் ஒருநாள் முழுக்க அவனோடு இருந்தான் அவனின் பரிதவிப்பை நன்றாக புரிந்தும் கொண்டான். அவனோடு இருந்த அந்த நீண்ட மணிபொழுதுகளில் வெற்றி புகைக்க கூட இல்லை. இதில் அவனுக்கு ட்ரக்ஸ் பழக்கம் இருக்கிறது என்றால் எப்படி ஏற்றுக்கொள்வான்.
“நீங்க சொல்லுறத என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. வெற்றி என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்னு நான் கண்டு பிடிக்கிறேன்” என்ற மாறன் வெளியேற
“வெற்றியோட ரூம் சாவி என் ரூம் டிராயல்லதான் இருக்கு” என்றார் பூபதி.
அதை காதில் வாங்கிக் கொண்ட மாறன் தந்தையை திரும்பிக் கூட பார்க்க வில்லை. வெற்றி கோமாவில்தான் இருந்தான். அவன் இறக்கவில்லையே. உயிரோடு இருக்கும் பொழுது மூளையை அறுத்து எடுக்க இவருக்கு எப்படித்தான் மனசு வந்தது? இது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சது செத்தாரு”
வெற்றியின் மூளையில் பதிந்திருக்கும் நியாபகங்கள்தான் தனக்கு கனவாக வருகிறது என்று மாறனுக்கு இப்பொழுது புரிய ஆரம்பித்திருந்தது. தனது இரட்டைக்கு நடந்தது மிகவும் கொடூரம். அதை செய்தது தனது தந்தை என்று எண்ணுகையில் அவரை மன்னிக்க மாறன் தயாராக இல்லை.
காணும் கனவுகளுக்கு விடைக் கிடைக்கும் என்று வந்தால் மனதில் பாரம் ஏறிக்கொள்ள சிந்தனையிலையே வண்டியை காவல் நிலையம் செலுத்தினான் மாறன்.
காவல் நிலையம் சென்றவனுக்கு வேலை எதுவும் ஓடவில்லை. ஷாலினியை பற்றிய எண்ணங்கள் சட்டென்று மனதில் உதிக்க, அன்று அவள் காவல்நிலையம் வந்த பொழுது அவளை வெற்றியின் மூளைதான் அடையாளம் கண்டு அவளோடு உரையாடி அவளுக்கு உதவவும் மாறனை தூண்டி இருக்கிறது.
“வெற்றி ஷாலினியை காதலித்தானா? இல்லையா? இன்னும் தெரியவில்லை. ஒருவேளை வெற்றி ஷாலினியை காதலித்து அவளை பார்த்த நொடி அவன் மூளை விழித்து என் மனம் துடிக்க ஆரம்பித்து விட்டதோ?
நிச்சயமாக வெற்றி ஷாலினியை காதலித்திருப்பான். உலகத்தில் இத்தனை பெண்கள் இருக்க, இல்லையென்றால் வெற்றி காதலித்த பெண் மீது எனக்கு காதல் எப்படி தோன்றும்?”  சகோதரன் காதலித்த பெண்ணை தவறாக பார்த்ததாக எண்ணி தன்னையே அசிங்கமாக எண்ணலானான் மாறன்.
இனி தன் வாழ்வில் ஷாலினியை சந்திக்கவே கூடாது என்ற முடிவுக்கும் வந்தான்.
அதை நினைக்கும் பொழுதே இதயம் கனத்து, வலித்தது. வேலையில் கவனம் செலுத்தினால்தான் தன்னால் இயல்புக்கு வர முடியும் என்று தோன்ற கோப்புக்களை புரட்டலானான்.
“மே ஐ கமிங் சார்” என்றவாறே உள்ளே வந்த  எஸ்.ஐ மஞ்சுளா மாறனுக்கு சாலியூட்டை வைத்தாள்.
தலையசைய்ப்பில் அதை ஏற்றுக்கொண்ட மாறன் அவளை ஏறிட “சார் நீங்க சந்தேகப்பட்டது சரியா தான் இருக்கு. நந்தினியை அவ ரூம்ல வச்சுதான் ரேப் பண்ணி இருக்கான். அதுவும் அவ சுயநினைவில்லாம இருக்குறப்போ. அத அவளுக்கே அனுப்பி மிரட்டி இருக்கான் போல அதனால்தான் அவ தற்கொலை பண்ணி இருக்கா”
“இரும்மா… நந்தினி ஹாஸ்டல்ல இருந்தா… ஹாஸ்டல்  சாப்பாடு நல்ல இல்லனு காரணம் சொல்லி நாலு ப்ரெண்ட்ஸ் கூட வெளிய வீடெடுத்து தங்கி இருந்ததா இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சொன்னாரு. ஆனா உண்மையான காரணம் நைட் எட்டு மணிக்கு ஹாஸ்டல் கேட் மூடிடுவாங்க. வெளிய எங்கயும் போக முடியாது”
“ஆமா சார். ஷாப்பிங், சினிமான்னு நைட் போய் இருக்காங்க”
“நாலு பேரும் ஒன்னாவா?”
“எஸ் சார்”
“மத்த மூணு பொண்ணுங்க போன் டீடைல்ஸ், ரெக்கோர்ட்ஸ் தரவா செக் பண்ணியாச்சா?” மாறன் எதையோ தேடும் முயற்சியில் இருந்தான்.
“ஆமா சார். பிரபா எங்குற பொண்ணு தன்னை ஒருத்தன் பிளாக்மெயில் பண்ணுறதா போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருக்குறா. அவ குளிக்கிறத ஒருத்தன் வீடியோ எடுத்து மிரட்டி இருக்கான். அந்த வீட்டுக்குள்ள வந்து ஒருத்தன் குளிக்கிறத வீடியோ எடுக்குறான்னா ப்ளம்பராகத்தான் இருக்கணும் என்று சரியா கெஸ் பண்ணி அவனை போலீசிலையும் பிடிச்சி கொடுத்திருக்கா. அதுக்கு பிறகு அவளுக்கு எந்த பிரச்சினையும் வரல.
“அடுத்த பொண்ணு லேகா அவ கிட்ட ஸ்மார்ட் போன் கூட இல்ல”
“பேஸ்புக்கு, டுவிட்டர், இன்ஸ்டாகிராம்னு டைம்ம செலவளிக்கிற இந்த காலத்துல ஸ்மார்ட் போன் இல்லையா? நம்புற மாதிரி இல்லையே” வாய்தான் அப்படி சொன்னது மாறனின் கண்கள் அந்த பெண்ணை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் எட்டிப் பார்த்திருந்தது.
“பெருசா ஒன்னும் இல்ல சார். படிப்பு வரல. வீட்டுல கல்யாணம் பண்ண பாத்திருக்காங்க. ஒரு வருஷம் பணம் கட்டுறேன் ஒழுங்கா மார்க்ஸ் வரல அப்பொறம் கழுதைக்கு கட்டி வைப்பேன்னு அவ அப்பா மிரட்டி காலேஜுல சேர்த்திருக்காரு. பயந்தே போன தூர வச்சிருந்தா சொல்லுறா” என்ற மஞ்சுளாவின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்திருந்து.
“அப்பாக்கு பயப்படுற பொண்ணுங்க இருக்கத்தான் செய்யுறாங்க. கல்யாணத்துல இருந்த தப்பிக்க காலேஜா?”
“காலேஜ் லைப்பை யார் சார் மிஸ் பண்ண விரும்புவா?”
“ஹ்ம்ம்…”
“அடுத்த பொண்ணு சுதா.. அவதான் டொப்பர். ஆனா பெர்ஸ்ட் இயர் மட்டும்தான் நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கா. செகண்ட் இயர்ல இருந்து படிப்புல ஆர்வம் குறைஞ்சி பயத்தோட, ஒரு மாதிரி இருந்திருக்கா. இப்போ மனநல காப்பகத்துல இருக்கா”
“என்ன சொல்லுறீங்க? எப்போ அட்மிட் பண்ணி இருக்காங்க? என்ன? எது? என்று விசாரிச்சீங்களா?”
“பைனல் இயர் படிக்கும் போதே அட்மிட் பண்ணிட்டாங்க”
“அப்போ நந்தினி இறந்து ஒரு வருஷத்துக்கு அப்பொறம். அப்படித்தானே”
“ஆமா. சார் இன்னொரு விஷயம். மினிஸ்டர் லக்ஷ்மிகாந்த் பொண்ணும் இவங்க கூடத்தான் படிச்சிருக்கா. பஸ்ட் இயர்ல செகண்ட் ரேங்க் வாங்கி இருக்கா. செகண்ட் இயர்ல இருந்து அவதான் பேஸ்ட் ரேங்க். அவதான் சுதாவ ஏதோ பண்ணிட்டதா அரசல் புரசலா பேச்சு அடிபடுது”
“சுதாவோட போன்ல ஏதாவது கிடைச்சதா?”
“ட்ரக்ஸ் எடுக்குற மாதிரி வீடியோஸ் இருந்தது. கூடவே பசங்க கூட…” என்ற மஞ்சுளாவுக்கு சுதாவை வேண்டுமென்றே போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி இருக்கக் கூடும் என்ற எண்ணமே.
“ஒரு பொண்ணு படிக்கக் கூடாது. தான்தான் பேஸ்ட் ரேங்க் வரணும் என்று மினிஸ்டர் பொண்ணு சுதாவ இப்படி பண்ணினதா நினைக்கிறீங்க. பொண்ணுங்களுக்கு பொண்ணுங்கதான் எதிரி. நந்தினி கேஸ் முட்டிகிட்டு நிக்குது இதுல சுதா வேறயா?” மாறனுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது.
டேப்லட்டை கையில் எடுக்க, மஞ்சுளா சட்டென்று தண்ணீர் கிளாஸை அவன் புறம் நகர்த்தி இருந்தான்.
டேப்லட்டை முழுங்கியவன் “அந்த வீட்டுல மாடில ரெண்டு ரூம். கீழ ரெண்டு ரூம். சுதாவும் நந்தினியும் மேல ரூம்ல இருந்திருக்காங்க. கீழ பிரபாவும், லேகாவும். நந்தினியை ரேப் பண்ண வந்தவன் மாடி வழியா உள்ள வந்த சத்தம் சுதாக்கு கேட்டாலும் பயத்துல ரூமை விட்டு வந்திருக்க மாட்ட. பிகோரஸ் அவதான் மேண்டலி எபெக்ட் ஆகி இருக்காளே.
வந்தவன் மயக்க ஸ்பிரேய அடிச்சி நந்தினியை நாசம் பண்ணி அத வீடியோவும் எடுத்துட்டு போய் இருக்கான். எனக்கு இப்போ இருக்குற சந்தேகம் என்ன என்றா? சுதாவ ரேப் பண்ண வந்தவன் ஆள் மாறி நந்தனிய ரேப் பண்ணி இருப்பானோ? வந்தவரைக்கும் லாபம்னு சுதாவையும் ரேப் பண்ணி வீடியோ எடுத்துட்டு போய் இருப்பானோ. அதனால்தான் சுதா இப்போ மனநல காப்பகத்துல இருக்காளா?”
“பாயிண்ட் சார்” விடை கிடைத்ததாக மஞ்சுளாவின் முகம் மிளிர்ந்தது.
“சுதாவோட வீடியோவை மினிஸ்டருக்கோ, மினிஸ்டர் பொண்ணுக்கோ கொடுத்தவன் நந்தனிய மிரட்டி காசு கேட்டிருக்கலாம். இல்ல தப்பா நடந்துக்க சொல்லி போர்ஸ் பண்ணி இருக்கலாம் அதனால நந்தினி சூசைட் பண்ணி இருக்கலாம்” மாறன் இப்படித்தான் நடந்திருக்கும் என்று தனது ஊகத்தை சொன்னான்.
“எஸ் சார். கண்டிப்பா இப்படித்தான் நடந்திருக்கும். அந்த மினிஸ்டர் பொண்ணு. இல்ல மினிஸ்டர் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று எப்படி சார் நிரூபிக்கிறது?” கோட்டுக்கு தேவை சாட்ச்சியும், ஆதாரங்களும். வெறும் ஊகங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது முகம் வாடினாள் மஞ்சுளா.
“அதுக்கு நந்தினிய ரேப் பண்ணவனை கண்டு பிடிக்கணும்” தீவிர முகபாவனியில் சொன்னான் மாறன்.
“அந்த வீடியோல அவன் முகம் தெரியலையே சார். எப்படி கண்டு பிடிக்கப் போறோம்”
“நந்தனியோட முகம் தெளிவா தெரியணும் என்று அவன் லைட் ஆன் பண்ணது அவன் பண்ண முதல் தப்பு. அதுல அவன் ஸ்கின் கலர் தெரியுது” என்றவாறே மாறன் அந்த வீடியோவை ஓட விட்டான். “அவன் பேண்ட்டை போடுறப்போ அவன் உருவம் கண்ணாடில தெரியுது. ஹைட் ஆறடி இருக்கும். தாடி வச்சிருக்கான். லெப்ட் ஷோல்டர்ல ஒரு டாட்டூ இருக்கு. நந்தகோபால் கிட்ட இத பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன். அதுபோக, அந்த வீட்டுல, அந்த பொண்ணுங்க தவிர வேற பின்கேர் ப்ரிண்ட்ஸ் இருக்கானு தரவா செக் பண்ண சொல்லி போரான்சிஸ் டிபார்ட்மெண்ட்கிட்ட சொல்லி இருக்கேன். ஒரு முடி கிடைச்சாலும் டீ.என்.ஏ கிடைச்சுடும். என்ன சம்பவம் நடந்து ரெண்டு வருஷமாகுது. வீடு பூட்டி இருந்ததால தூசியா இருக்கு. நமக்கு தடயம் கிடைக்குமா? கிடைக்காதா? தெரியல. அவனை பிடிக்கவும் மினிஸ்டரையும், அவர் பொண்ணையும் விசாரிக்கணும்” ஆட்ச்சியில் இருக்கும் அவர்களை நெருங்குவது எவ்வளவு சிரமம் என்று மாறனுக்கு தெரியாதா? 
“விசாரிச்சாலும் உண்மையை சொல்ல மாட்டாங்க சார். இவன பிடிச்சாதான் அவங்க மாட்டுவாங்க”
“வீட்டுல எந்த தடயமும் கிடைக்கலைனா. இவங்கள பின் தொடர்ந்துதான் இவனையே பிடிக்க வேண்டி இருக்கும். சுத்தி சுத்தி ஒரே இடத்துல நிக்க வேண்டி இருக்கு”
ஓகே மினிஸ்டரையும், அவர் பொண்ணையும் பாலோ பண்ணுங்க. பார்க்காலம்” மஞ்சுளா சென்றதும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் மாறன் இருக்க அவனது அலைபேசி அடித்தது.
அழைப்பது ஷாலினி என்றதும் எடுக்கவா? வேண்டாமா? என்று சிந்தித்தவன் எடுத்துதான் பார்க்கலாம் என்று உள்மனம் தூண்ட அழைப்பு துண்டிக்கப் படப்போகும் நொடியில் இயக்கி காதில் வைத்திருந்தான்.
“ஹலோ மாறன்… எங்க இருக்க? சீக்கிரம் வீட்டுக்கு வா…” ஷாலினியின் பதட்டமான குரலில் மாறனுக்கு பதட்டம் தொற்றிக்க கொண்டது.
“என்ன ஆச்சு ஷாலினி? என்ன பிரச்சினை?” மாறன் கேட்ட பொழுதே அழைப்பு துண்டிக்கப்பட, மாறன் மீண்டும் ஷாலினிக்கு அழைத்தான்.
அவள் அலைபேசி அடித்தது ஆனால் எடுக்கப்படவில்லை என்றதும் மாறனுக்கு பதட்டம் அதிகரித்தது.
“ஹலோ நான் சொல்லுற நம்பரை குறிச்சிக்கோங்க இந்த ஏரியால இருந்து வேற ஏரியாக்கு போன் சிக்னல் மாறினா உடனே எனக்கு தகவல் சொல்லுங்க” என்ற மாறன் ஷாலினியின் வீட்டுக்கு வண்டியை வேகமாக கிளப்பி இருந்தான்.

 

 

Advertisement