Advertisement

அத்தியாயம் 25
வீட்டுக்கு வந்த உடனே ஷாலினி குளிக்கத்தான் சென்றாள். உடம்பு முழுவதும் இரத்த வாடை வீசுவது போல் அவளுக்கு தோன்ற காலில் போட்டிருந்த வெல்வட் ஷூவை கூட கீழ் படியிலையே கழட்டியவள் வெற்றியை பார்த்த பார்வையில் அவனும் புரிந்து கொண்டான்.
விஸ்வநாதனை பின்னாலிருந்து அவர் தலையிலையே சுட்டதில் இரத்தம் தெரித்தாலும் அவள் மேல் ஒரு துளி கூட பட்டிருக்க வில்லை. வெற்றியின் மீதும் இல்லை. என்னதான் துப்பாக்கி சுட தான் பயிற்சி எடுத்திருந்தாலும், அக்காவை கொன்ற கோபத்தில் துப்பாக்கியை பார்த்ததும் விஸ்வநாதனை சுட்டுவிட்டாள். தவறி வெற்றியின் மீது கூட பட்டிருக்கலாம். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்” என்றெண்ணியவாறே குளித்து விட்டு வர வெற்றியும் குளித்து விட்டு அவர்களுக்காக இரவு உணவுக்காக இன்ஸ்டன் நூட்லஸ் தயாரித்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு பசிக்கல வெற்றி. வேணாம்” என்றவளை பார்த்தவன் “சாப்பிட்டு போய் இருந்தா வாமிட் பண்ணி இருப்ப. நீ வாமிட் பண்ணா அத பார்த்து நானும் பண்ணுவேன். என்ன பத்திதான் உனக்கு தெரியுமே. பொண்ணுங்க வாந்தி எடுத்தா சந்தோச படுற உலகம். பசங்க வாந்தி எடுத்தா குடிகாரன்னு சொல்லுவாங்க. அதனால நானும் சாப்பிடாம போனேன். சாப்பிடாம படுத்தா எனக்கு நடு ஜாமத்துல பசிக்கும். என் தூக்கம் கெட்டுடும். உன்னைத்தான் திட்டுவேன். சோ ஒழுங்கு மரியாதையா வந்து சாப்பிடு” என்றவனை ஆயாசமாக பார்த்தாள்.
அவளுக்குத்தான் சாப்பிடாமல் படுத்தால் நடு ஜாமத்தில் பசிக்கும். அவள் சாப்பிடா விட்டால் இவன் சாப்பிட மாட்டான். அதை கூறாமல் என்னவெல்லாம் சொல்கின்றான். அவனை கொஞ்ச வேண்டும் போல் இருந்தாலும் முறிக்கிக் கொண்டாள். சாப்பிட்டால் வாந்தி வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் பசிக்க வில்லையென்றாள். கணவன் விட மாட்டான் என்று தெரியும். “சரி கொடு” என்றவள் சாப்பாட்டு மேசையில் அமர.
அவனுக்கும், அவளுக்கும் உணவை எடுத்துக் கொண்டு அவள் எதிரே அமர்ந்தவன் “பேசாம சாப்பிடணும்” என்று கூறியவாறே ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த டீயையும் கப்பில் ஊற்றினான்.
இன்ஸ்டன் நூட்லஸ் காரம் அதிகமாக இருக்க ஷாலினி வேக வேகமாக சாப்பிட்டாள். வெற்றி பொறுமையாக சாப்பிட்டான். காரம் தாங்காமல் ஷாலினி டீயை பருக தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் வெற்றி.
முதல் தடவை இரத்தத்தை பார்த்தது, இரத்தவாடை என்று, வெற்றி நான்கு நாட்கள் சாப்பிடவே இல்லை. தந்தையாக பூபதியும், தாத்தாவான செல்வபாண்டியனும் பயந்து போய் மருத்துவரை நாட அவனுக்கு ஒன்றுமில்லை என்றுதான் மருத்துவர் சொன்னார். இவனுக்கு ஏதாவது பெரும் வியாதி வந்து விட்டதோ என்று அவர்கள் அச்சப்பட்டு இவனை படுத்த, அவர்கள் மீது இவன் எரிந்து விழுந்தான்.
அவனை சுற்றி இரத்தவாடை வீசிக் கொண்டே இருக்க, வாந்தி வேறு எடுத்து சோர்ந்து போய் இருந்தான். அவனால் கார உணவுகளை மட்டும்தான் உட்கொள்ள முடிந்தது. பசி ருசி அறியாது. இதே நிலைமை தொடர்ந்தால் அவனால் அவன் நினைத்ததை செய்ய முடியாது என்று இந்த மாதிரி வேலைகளுக்கு பின் காரமாக எதையாவது சாப்பிடுவான்.
ஷாலினிக்கு இதே நிலை ஏற்படக் கூடாது என்றுதான் தன் அனுபவத்திலிருந்து கற்ற படத்தினால் கார உணவை கொடுத்தான்.
கார நூட்லஸ்ம், சூடான டீயும் உள்ளே சென்ற பின் இரத்த வாடைக்கான உணர்வு குறைந்து வாந்தி வருவது போல் இருந்த உணர்வும் குறைய வெற்றி எதை செய்தாலும் காரணத்தோடுதான் செய்வான் என்பதை அறிந்தவள் அவனை முறைத்துப் பார்த்தாளே ஒழிய எதுவும் பேசவில்லை.
“ஆர் யு பெட்டர் நவ்?” சிரித்தவனுக்கு “இயஹ்” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் வெற்றியின் மனையாள். 
வெற்றி ஷாலினியோடு பேசினாலும் எதையோ சிந்தித்துக் கொண்டுதான் இருந்தான். அது ஷாலினியின் கண்ணில் பட்டாலும், கருத்தை கவரவில்லை. அவளுக்கு அவனிடத்தில் கேட்க நிறைய கேள்விகள் இருக்கவே “வெற்றி சீக்கிரம் சாப்பிடு உன் கூட பேசணும்” என்றாள்.
“ஓகே” என்றவன் சாப்பிட்ட தட்டுகளை சிங்கில் போட்டு விட்டு அவளோடு சோபாவில் அமர்ந்து “என்ன பேசணும் சொல்லு” என்று அவள் தலை கோத,
“இப்போதான் உன் ஐடண்டடி கிடைச்சிருச்சே நீ மணிமாறனா இருக்கணுமா? நீதான் வெற்றின்னு எல்லாருக்கும் சொல்லிடலாமே”
“நோ ஷாலினி. மணிமாறன் ஒரு ஏ.சி.பி. ப்ரோமோஷன் வேற கிடைக்க போகுது டி.சி.பி. ஆனா எத்தனை கேஸ பார்க்கலாம். என் பார்வைக்கு வராத எத்தனையோ கேஸ் டிபார்மண்ட்டுல இருக்கும். அத எல்லாம் தூசி தட்டி எடுத்து பசங்க கிட்ட கொடுத்து முடிக்க சொல்லணும். புதுசா வர்ர கேஸுல. அரசியல், ஆள்பலம், அதிகாரம், பணபலம் என்று தலையிடுறவங்கள தூக்கலாம். நான் வெளி உலகத்துக்கு மணிமாறனா இருக்குறது சான்ஸ். இத கடவுள் கொடுத்த வரமா எடுத்துக்கலாம்”
“எதுவும் நடப்பது நன்மைக்கே. ஆமா அக்காவ கொன்னவன கண்டு பிடிச்சத மாமா கிட்ட சொன்னியா? அவனை கொன்னதா சொன்னா அவர் கோபப்படுவாரு. அவர் கையாள கொல்லணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு” ராகவேந்திரன் மாலினியின் மேல் உயிரையே வைத்திருந்தான். அவன் நிச்சயமாக இதை ஒத்துக்கொள்ள மாட்டான் என்றெண்ணியே கூறினாள் ஷாலினி.
நாம தோப்புக்கு போக முன்னால நீ குளிக்க போனியே உன் கையாலதான் டி.ஐ.ஜிக்கு சாவுன்னு உன் மாமாக்கு போன போட்டு சொன்னேன். உன் மாமா ஓகே சொன்னாரு. அவர் பையன் எங்க இருக்கான் லண்டன்ல. உன் மாமா ஏரியாமா. உன் மாமா எப்பயோ பறந்துட்டாரு. அதுவும் சொந்த பிளைட்டுல. அநேகமா அவர் அண்ணன் ராஜேந்திரன் பொடியான அலேக்கா தூக்கி இருப்பாரு”
“அடப்பாவி கேப் கிடைக்கிற இடத்துல எல்லாம் சிக்ஸர் அடிக்கிறியே”
“சிக்ஸர் இல்லமா ஹெக்ட்ரிக். பையன எப்படி முடிக்க சொல்லி இருக்கேன் தெரியுமா. ட்ரக்ஸ் எடிக்ட். சோ சூசைட் பண்ணிகிட்டான் என்று. அவனை எப்படி வேணா போட்டிருக்கலாம். படிக்க போன பையன் ட்ரக் எடிக்ட் சூசைட் பண்ணிகிட்டான்னு என்று தெரிஞ்ச டி.ஐ.ஜி. மானம் போச்சேன்னு தலை மறைவு. போலீஸ் தனிப்படை அமைச்சு தேடினாலும் கிடைக்க மாட்டாரு” என்று வெற்றி சொன்னதும்
நெஞ்சில் கைவைத்து “டேய் எது பண்ணாலும் சொல்லிட்டு செய்டா. அதிர்ச்சி எல்லாம் தாங்க முடியாது” என்றாள் ஷாலினி.
“பிளான் பண்ணா எல்லாம் சரியா பண்ணலாம். உன் மாமாவால அவன் இங்க வந்த பிறகு போட வேண்டிய தேவ இல்லை”
“அவன் எதுக்கு இங்க வர போறான்” புரியாது கேட்டாள் ஷாலினி.
“அப்பா மிஸ்சிங்னா மகன் வருவான் இல்ல. இப்போ மகனால அப்பா மிஸ்ஸிங்”
“போலீஸ் தேடுதல் வேட்டை” சிரித்தாள்.
“அநேகமா அந்த தனிப்படைக்கு டி.சி.பி. மணிமாறன்தான் தலைமைதாங்குவான்” சிரித்தவன் “சரி வா தூங்கலாம்” அவள் கையை பற்றியவாறு அறைக்கு நடந்தான்.
“ஆஹ்…” ஒற்றை வார்த்தையில் அவன் புத்தி சாதூரியத்தையும், திட்டமிடலையும் மெச்சியவள் கூடவே நடந்தாள்.
ஷாலினி அவனை அணைத்துக் கொண்டு தூங்கி இருக்க, வெற்றியால் தூங்க முடியவில்லை. தூங்கி விழித்தால் மணிமாறனாக மாறி விடுவானோ என்ற அச்சம் பரவ கண்களை மூடாது இருந்தான்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் ஏன் மணிமாறனாக கண்வித்தேன் என்று புரியாமல், அந்த மர்மத்துக்கு பதில் தெரியாமல் மீண்டும் மணிமாறனானால் ஷாலினியை மனதளவில் கஷ்டப்படுத்தி விடுவேனோ என்ற அச்சத்தில் விழித்திருந்தான்.
அவன் எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
அலாரம் அடிக்கவே கண்விழித்தவன் அலைபேசியை பார்க்க கொடுத்த வேலையை கனகச்சிதமாக முடித்து விட்டதாக ராபினிடமிருந்து குறுந்செய்தி வந்திருந்தது.
“யார் இவன்? எனக்கு எதற்காக மெஸேஜ் அனுப்பி இருக்கான்? ஒருநொடி யோசித்தவன் ஷாலினியை கண்டு அதிர்ந்தான்.
நான் எப்படி இங்கே வந்தேன் என்று சிந்தித்தவனுக்கு நேற்று நடந்தவைகள் கொஞ்சம் கொஞ்சமாக நியாபகத்துக்கு வந்தது.  .
கண்களை மூடியவாறு “மணி என்ன ஆச்சு வெற்றி. இன்னக்கி ஜோக்கிங் போகாத” என்றவளின் குரல் கேட்டபின் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியாக மாறி அவளை அணைத்துக் கொண்டான்.
அவன் வெற்றியாக மீண்டு வர இவள் ஒருத்திதான் காரணம். ஒரு நொடி மணிமாறனாக இருந்து அவளை பார்த்து அதிர்ந்ததை நினைக்கும் பொழுது தன்னையே வெறுத்தவன் தான் ஏன் மணிமாறனாக மாற வேண்டும்? அதை தந்தையிடம்தான் கேட்க வேண்டும் என்று அவரை சந்திக்க முடிவு செய்தான்.
காலை பத்து மணியளவில் ஷாலினியையும் அழைத்துக் கொண்டு தந்தையின் முன் அமர்ந்திருந்தான் வெற்றிமாறன்.
“என்னப்பா ஏதாவது பிரச்சினையா? உடம்புக்கு ஒண்ணுமில்லையே, தலைவலிக்குதா?” ஒரு தந்தையாக பதறினார் பூபதி.
“ஏம்பா உண்மையாலும் வெற்றிக்கு தலைல அடிபட்டு அவனுக்கு பிரைன் ட்ரான்ஸ்பர் பண்ண வேண்டி இருந்தா பண்ணி இருப்பியா? இல்ல அவன் ஹார்ட்ட எடுத்து எனக்கு கொடுத்திருப்பியா?” தன்னை கெட்டவன் என்று வெறுத்த தாதையல்லவா இவரிடம் இந்த உண்மையை சொல்லலாமா? வேண்டாமா? ஒருகணம் யோசித்தான்.
ஷாலினியோ எதற்கு இவன் இப்படி பேசுகின்றான் என்று பார்த்திருந்தாள்.
“ஏன்டா இப்படி பேசுற? அவனும் என் பையன்தான்டா. டாக்டர் வஜ்ரவேல் அவனை காப்பாத்த ஒன்லி ஒன் பெர்சன்ட்டேஜ்  தான் சான்ஸ் இருக்குனு சொன்னாரு. ஆனா உன்ன காப்பாத்த  எனக்கு முழு காண்பிடண்ட் இருந்தது. அதான் யோசிக்காம வெற்றியோட மூளையை அறுத்தேன். அந்த இடத்துல நீ இருந்திருந்தாலும் அதைத்தான் செஞ்சிருப்பேன். இதுவே வேற ஒரு கோமா பேஷண்ட் இருந்திருந்தா அந்த பெர்ஷண்ட்ட கொன்னுடதா ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைனு உங்க ரெண்டு பேர் உசுரையும் காப்பாத்தி இருப்பேன்” கண்கள் கலங்கினார் பூபதி.
இதற்கு மேலும் அவரை சோதிப்பது நல்லதல்ல என்று எண்ணிய வெற்றி தான் மணிமாறன் அல்ல, வெற்றிமாறன் என்றும். எடுத்துக் கொண்ட முறையான சிகிச்சையால் தனக்கு எல்லாம் நியாபகத்தில் வந்து விட்டதாகவும் கூறியவன் தங்களுக்கு நடந்த விபத்துக்கு காரணம் டி.ஐ.ஜி என்பதை தந்தையிடம் கூறவில்லை.
“உண்மையாடா சொல்லுற? ஆனா இது எப்படிடா சாத்தியம்?” ஒரு நொடி அவருமே குழம்பினார்.
“எனக்கு பதில் வேணும்னுதான் உங்கள தேடி வந்தேன். நீங்க என்னடான்னா…” என்றவனை ஷாலினி முறைக்க அமைதியானான்.
சற்று நேரம் யோசித்தவர் “ஓஹ்… மை கார்ட் இத நான் எப்படி யோசிக்காம விட்டேன்” என்று கத்த
“மாமா ரிலேக்ஸ்” ஷாலினி பூபதிக்கு தண்ணீர் கொடுக்க,
“கொஞ்சம் அமைதியா என்னனு சொல்லுப்பா…” என்றான் வெற்றி.
தண்ணீரை குடித்து முடித்த பூபதி “ஒரு மனுஷனோட செயல்பாடு அவன் மூளையை கொண்டுதான் நடக்கும். வலதுகை பழக்கமுள்ளவங்களோட இடது பக்க மூளையும், இடதுகை பழக்கமுள்ளவங்களோட வலதுபக்க மூளைதான் செயல்படும்”
“இப்போ நீ என்னதான் சொல்லவர” விஞ்ஞானம் பேசியதும் கடுப்பானான் வெற்றி. 
“நீ இடதுகை பழக்கமுள்ளவன், மாறன் வலதுகை பழக்கமுள்ளவன்”
“அதுக்கு?”
“அப்படினா உன்னோட வலது பக்க மூளைதான் செயல்படும். அவனோட இடதுபக்க மூளை. உனக்கு பொருத்தியது அவனோட இடதுபக்க மூளையோட பகுதிய”
“ஐயோ அப்பா தெளிவா சொல்லு?” வெற்றி கத்திக் கொண்டிருந்தாலும், ஷாலினி கத்த முடியாமல் குழப்பத்தில் பார்த்திருந்தாள்.
“இங்க பாரு உலகத்துல அதிகமா இருக்குறது வலதுகை பழக்கமுள்ளவங்க. இடதுகை பழக்கமுள்ளவங்க சொற்பம்தான். அப்படினா? என்ன அர்த்தம் மனிஷங்களோட இடது பக்க மூளைதான் அதிகமா வேலை செய்யும்னு அர்த்தம் புரியுதா?”
“சரி.. அதுக்கு…” என்றவனை தடுத்த பூபதி தொடர்ந்தார்.
“மாறனோட இடது மூளையை பொறுத்தினதும். அது ஏக்டிவ் ஆகிருச்சு. காரணம் இடது மூளைதான் பவர்புல். உன் வலது மூளை ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஆனாலும் உனக்கு பிடிச்ச, பிடிக்காதது நடக்கும் போது ஏக்டிவ் ஆகி இருக்கு” என்றவர் அவன் வெற்றியாக மாறிய தருணங்களை எடுத்துக் கூற, வெற்றிக்கும், ஷாலினிக்கும் புரிந்து போக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“அண்ட் நீ எடுத்துக் கொண்ட அந்த வர்மக்கலை ட்ரீட்மென்டனால ரெண்டு ப்ரைனும் பாலன்ஸ் ஆகி இருக்கு. அதனாலதான் நீ வெற்றியாக மாறியது மாறனாக இருக்கும் பொழுது நியாபகத்துல இருந்திருக்கு. நீ வெற்றியாக மாற உனக்கு ஒரு ட்ரிக்கர் வேணும்” என்றவர் ஷாலினியை பார்க்க வெற்றிமாறனுக்கு இன்று காலை நடந்த ஒன்றே போதுமாக இருந்தது.
அவன் எப்பொழுதெல்லாம் மணிமாறனாக கண்விழிக்கின்றானோ ஷாலினி அவனை வெற்றி என்று அழைத்தால் அவன் வெற்றியாக மாறி விடுவான். மாறா விட்டாலும், மணிமாறனுக்கு வெற்றியாக என்னவெல்லாம் செய்தான் என்று நியாபகத்தில் இருக்கும்.
தான் இந்த உலகத்துக்காக மணிமாறனாகவே வாழப் போவதாக கூறியவன் தந்தையிடம் விடைபெற்று ஷாலினியோடு வீடு திரும்பினான்.
“என்ன பொண்டாட்டி இன்னைக்கும் ஸ்கூலுக்கு கட்டா?”
“பேசாம வேலைய விட்டுட்டு என் புருஷன பார்த்துக்கலாம்னு நினைக்கிறன்” என்றவளை அணைத்துக் கொண்டவன்
“இது நல்ல ஐடியாவா இருக்கே. ஆனாலும் என் பொண்டாட்டி பேஸ் இன்னக்கி ஓவரா ஜொலிக்குது. அப்படி என்ன சந்தோசம் மின்னுது”
“உலகத்துல இப்படியெல்லாம் அதிசயம் நடக்குமா? என்று யோசிப்போம் ஆனா நடந்துக்கிட்டுதான் இருக்கு. உன் அண்ணன் மூளையை பொருத்தி நீ அவனா வாழ்ந்தத யார்கிட்டயும் சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க”
“ஐடன்டிகள் ட்வினா இருந்ததனால் நானே என்ன சந்தேகப்படல. நீ இல்லனா நானே மணிமாறனா வாழ்ந்துட்டு போய் இருப்பேன். தேங்க்ஸ் ஷாலு” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் வைக்க,
“லவ் யூ வெற்றி” ஷாலினி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
ஷாலினி வெற்றியின் மீது வைத்த காதலும் புரிதலும் அவனையே மீட்டுக் கொண்டு வந்திருந்தாள். வெற்றி அவளை எவ்வளவு நேசித்திருந்தால் அவளால் உரித்தெழுந்திருப்பான்.
காதலும் புரிதலும் இருந்தாலே போதும், எந்த மாதிரியான பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்
நன்றி
வணக்கம்
BY MILA

Advertisement